instruction
stringclasses
1 value
input
stringlengths
2
1.61k
output
stringlengths
3
948
Translate provided English text into colloquial Tamil
Is there a scholarship?
ஸ்காலர்ஷிப் உண்டா?
Translate provided English text into colloquial Tamil
Yes. You will get a scholarship from your father's income. Ask the clerk in the office. They'll tell you all the details.
ஆமா. உங்க அப்பாவோட இன்கம (வருமானம்) வச்சு ஸ்காலர்ஷிப் கிடைக்கும். நீங்க ஆபீஸ்ல கிளார்க்கிட்ட (குமாஸ்தா) கேளுங்க. அவங்க எல்லா டீடெயில்ஸ்ஸும் (விபரம்) சொல்லுவாங்க.
Translate provided English text into colloquial Tamil
What's Clark's name?
கிளார்க் பேரு என்ன?
Translate provided English text into colloquial Tamil
His name is John.
அவர் பேரு ஜான்.
Translate provided English text into colloquial Tamil
Okay, I'll ask him. Thank you so much (thank you).
சரி, நான் அவர்கிட்ட கேக்குறேன். ரொம்ப தேங்க்ஸ்ங்க (நன்றி).
Translate provided English text into colloquial Tamil
Next to me is the period (class) important subject (subject). So I have to leave right away. Mat. All the best (congratulations).
எனக்கு அடுத்து பீரியட் (வகுப்பு) முக்கியமான சப்ஜெக்ட் (பாடம்) இருக்கு. அதனால நான் உடனே கிளம்பணும். பாய். ஆல் த பெஸ்ட் (வாழ்த்துக்கள்).
Translate provided English text into colloquial Tamil
Thank you. Mat.
தேங்க் யு. பாய்.
Translate provided English text into colloquial Tamil
Hi Ravi, how are you?
ஹாய் ரவி, எப்படி இருக்கிற?
Translate provided English text into colloquial Tamil
I'm fine, Ram. How are you?
நான் நல்லா இருக்கேன் ராம். நீ எப்படி இருக்கிற?
Translate provided English text into colloquial Tamil
I'm fine, thank you. Ravi, didn't I see you yesterday during cricket practice?
நான் நல்லா இருக்கேன், நன்றி. ரவி, நேத்து கிரிக்கெட் ப்ராக்டிஸ்போது (பயிற்சியின்போது) உன்னை நான் பார்க்கலயே?
Translate provided English text into colloquial Tamil
Sorry Ram, I forgot to tell you. Yesterday I went to play an inter-school cricket match.
மன்னிச்சிக்கோ ராம், நான் சொல்ல மறந்துட்டேன். நேத்து இண்டெர் ஸ்கூல் கிரிக்கெட் மேட்ச் (பள்ளிகளுக்கிடையிலான கிரிக்கெட் விளையாட்டு) விளையாடப் போயிருந்தேன்.
Translate provided English text into colloquial Tamil
Oh I see, well. How was the match?
ஓ அப்படியா, நல்லது. மேட்ச் (போட்டி) எப்படி இருந்துச்சு?
Translate provided English text into colloquial Tamil
It was very good. We won the preliminary rounds. But the final match (final) was very difficult.
ரொம்ப நல்லா இருந்துச்சு. ப்ரிலிமினரி ரௌண்ட்ஸ்ல (முதல்நிலைப் போட்டிகளில்) நாங்க ஜெயிச்சிட்டோம். ஆனா, ஃபைனல் மேட்ச் (இறுதிப் போட்டி) ரொம்ப கஸ்டமா இருந்துச்சு.
Translate provided English text into colloquial Tamil
Oh, who did you play the final match with?
ஓ, யாரோட நீங்க ஃபைனல் மேட்ச் (இறுதிப் போட்டி) விளையாடினீங்க?
Translate provided English text into colloquial Tamil
We played with St. John's High School.
நாங்க செயிண்ட் ஜான்’ஸ் உயர்நிலைப்பள்ளியோடு விளையாடினோம்.
Translate provided English text into colloquial Tamil
Ravi, I have heard that the St. John's School team is strong.
ரவி, செயிண்ட் ஜான்’ஸ் ஸ்கூல் டீம் (பள்ளியின் அணி) ஸ்ட்ராங்கானதுன்னு கேள்விப்பட்டிருக்கேன்.
Translate provided English text into colloquial Tamil
Yes Ram, they played brilliantly. We restricted them to 126 runs. But it was difficult to score those runs.
ஆமா ராம், அவங்க அற்புதமா விளையாடினாங்க. நாங்க அவங்கள 126 ரன்ஸ்க்கு (ஒட்டங்களுக்கு) கட்டுப்படுத்திட்டோம். ஆனா, அந்த ரன்களை எடுப்பதுதான் கஷ்டமா இருந்துச்சு.
Translate provided English text into colloquial Tamil
126 is a small target, Ravi.
126 என்பது சின்ன டார்கெட்தானே (இலக்குதானே), ரவி.
Translate provided English text into colloquial Tamil
Yes, that's a small goal, I agree. But their bowlers bowled well. We scored 116 runs in the 19th over. But 10 runs were needed in the last over.
ஆமாம் அது சின்ன இலக்குதான், நான் ஒத்துக்கிறேன். ஆனா, அவங்க பவுலர்கள் (பந்து வீச்சாளர்கள்) நல்லா பந்து வீசினாங்க. நாங்க 19வது ஓவரில் 116 ரன்ஸ் (ஓட்டங்கள்) எடுத்துட்டோம். ஆனா, கடைசி ஒவரில் 10 ரன்கள் (ஓட்டங்கள்) தேவைப்பட்டன.
Translate provided English text into colloquial Tamil
It will be difficult to score 10 runs in the last over. How did you manage?
கடைசி ஓவர்ல 10 ரன்கள் எடுப்பது கஸ்டமா இருக்குமே. எப்படி சமாளிச்சீங்க?
Translate provided English text into colloquial Tamil
We scored 6 runs in the first five balls. Four runs were needed off the last ball.
முதல் ஐந்து பந்துகளில் நாங்க 6 ரன்கள் எடுத்துட்டோம். கடைசி பந்தில் 4 ரன்கள் தேவையா இருந்துச்சு.
Translate provided English text into colloquial Tamil
It's exciting. What happened in the end?
இது விறுவிறுப்பா இருக்கே. கடைசியில என்ன நடந்துச்சு?
Translate provided English text into colloquial Tamil
It was a tense time. But my friend (friend) Rahim scored the runs needed to win. He comes out of wicket and chases the ball to the boundary.
அது பதட்டமான நேரமா இருந்துச்சு. ஆனா, என் ஃப்ரெண்ட் (நண்பன்) ரஹீம் வெற்றிபெறத் தேவையான ரன்களை (ஓட்டங்களை) அடிச்சான். அவன் விக்கெட்டுக்கு வெளியே வந்து பந்தை பவுண்டரிக்கு (எல்லைக்கோடு) விரட்டினான்.
Translate provided English text into colloquial Tamil
Wow, I missed seeing that exciting game.
வாவ், நான் அந்த உற்சாகமான ஆட்டத்த பார்க்கத் தவறிட்டேன்.
Translate provided English text into colloquial Tamil
It was really exciting and memorable.
உண்மையிலேயே அது உற்சாகமாகவும், மறக்கமுடியாததாகவும் இருந்துச்சு.
Translate provided English text into colloquial Tamil
Congratulations Ravi. Give my best wishes to your team and team.
வாழ்த்துக்கள் ரவி. என் வாழ்த்துக்கள உன் டீமுக்கும் (அணிக்கும்) சொல்லிடு.
Translate provided English text into colloquial Tamil
Of course, Ram, thank you. If you have time, come with us for the next match.
நிச்சயமா ராம், நன்றி. உனக்கு நேரம் இருந்தா அடுத்த போட்டிக்கு எங்களோட வா.
Translate provided English text into colloquial Tamil
I will definitely come.
நிச்சயமா வரேன்.
Translate provided English text into colloquial Tamil
Good morning, Doctor (doctor).
குட் மார்னிங், டாக்டர் (மருத்துவர்).
Translate provided English text into colloquial Tamil
Good morning. Why is your voice different?
குட் மார்னிங். ஏன் உங்க வாய்ஸ் (சத்தம்) வித்தியாசமா இருக்கு?
Translate provided English text into colloquial Tamil
I have a terrible sore throat and fever, Doctor.
பயங்கரமான தொண்ட வலியும், காச்சலும் இருக்கு, டாக்டர்.
Translate provided English text into colloquial Tamil
How long has it been?
எத்தன நாளா இருக்கு?
Translate provided English text into colloquial Tamil
It's been since last night.
நேத்து ராத்திரில இருந்து இருக்கு.
Translate provided English text into colloquial Tamil
Wait, I'm going to check.
இருங்க, நான் செக் (சோதனை) பண்ணுறேன்.
Translate provided English text into colloquial Tamil
Yes, there are one hundred and one. Open your mouth and show it well.
ஆமா, காச்சல் நூத்தி ஒண்ணு இருக்கு. நல்லா வாய தொறந்து ஆஆன்னு காட்டுங்க.
Translate provided English text into colloquial Tamil
It hurts so much, Doctor. I couldn't open my mouth.
ரொம்ப வலிக்குது, டாக்டர். வாய தொறக்க முடியல.
Translate provided English text into colloquial Tamil
There is a lot of infection in the throat. That's why the throat hurts. Both sides are swollen. Have you eaten anything cold?
தொண்டையில ரொம்ப இன்ஃபெக்சன் (தொற்று) ஆயிருக்கு. அதனால தான் தொண்ட வலி. ரெண்டு சைடும் (பக்கம்) வீங்கியும் இருக்கு. சில்லுன்னு (குளிர்ச்சி) ஏதாவது சாப்புட்டீங்களா?
Translate provided English text into colloquial Tamil
I went to a party two days ago. I ate three cups of ice-cream there.
ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு பார்ட்டிக்கு (விருந்து) போயிருந்தேன். அங்க ஐஸ்-கிரீம் (பனிகூழ்) மூணு கப் (குவளை) சாப்புட்டேன்.
Translate provided English text into colloquial Tamil
That's why it's an infection. Let's fix it, don't worry.
அதனால தான் இன்ஃபெக்சன் ஆயிருக்கு. சரி பண்ணிரலாம், கவலப்படாதீங்க.
Translate provided English text into colloquial Tamil
All right, doctor.
சரி டாக்டர்.
Translate provided English text into colloquial Tamil
Now take an injection and I'll prescribe a pill for three days. You must take the pill and it will be completely fine.
இப்போ ஒரு ஊசி போட்டுக்கோங்க, அதோட மூணு நாளைக்கு மாத்திரையும் எழுதி தாறேன். கண்டிப்பா மாத்திரைய சாப்புடணும், அப்பதான் முழுசா சரியாகும்.
Translate provided English text into colloquial Tamil
All right, doctor. What can I eat?
சரி டாக்டர். சாப்பாடு என்னென்ன சாப்புடலாம்?
Translate provided English text into colloquial Tamil
Eat porridge and dal rice for two days. Kachal will sell. After that, you can eat any food that is not spicy.
ரெண்டு நாளைக்கு கஞ்சியும், பருப்பு சாதமும் சாப்புடுங்க. காச்சல் விற்றும். அதுக்கு அப்புறமா காரமே இல்லாத சாப்பாடு எதுன்னாலும் சாப்புடலாம்.
Translate provided English text into colloquial Tamil
What other care should I take, Doctor?
வேற என்ன கேர் (கவனிப்பு) எடுக்கணும் டாக்டர்?
Translate provided English text into colloquial Tamil
Boil the water and drink it. Gargle with warm water (warm water) with salt four times a day.
தண்ணிய கொதிக்க வச்சு குடிங்க. வார்ம் வாட்டர்ல (வெது வெதுப்பான தண்ணீர்) உப்பு கலந்து ஒரு நாளைக்கு நாலு தடவ கார்கில் (கொப்பளி) பண்ணுங்க.
Translate provided English text into colloquial Tamil
All right, doctor. How can I go to the office?
சரி டாக்டர். ஆஃபீஸ்க்கு (அலுவலகம்) என்னைக்கு போலாம்?
Translate provided English text into colloquial Tamil
You don't have to talk too much because you have swelling in your throat. If you talk like that, the swelling will not decrease. Come back in three days. I'll tell you whether to go to the office or not.
தொண்டையில வீக்கம் இருக்குறதால நீங்க ரொம்ப பேசவே கூடாது. அப்படி பேசினீங்கனா வீக்கம் குறையாது. மூணு நாள் கழிச்சி திரும்பவும் வாங்க. செக் பண்ணீட்டு ஆஃபீஸ்க்கு போலாமா, வேண்டாமான்னு சொல்றேன்.
Translate provided English text into colloquial Tamil
If leave (leave) is too much, a medical certificate (medical certificate) should be given.
லீவு (விடுமுறை) ரொம்ப எடுத்தா மெடிக்கல் சர்டிபிகேட் (மருத்துவ சான்றிதழ்) குடுக்கணும்.
Translate provided English text into colloquial Tamil
I'll give it to you. Do you want it today, or is it enough for the day you go to the office?
அத நான் தரேன். இன்னைக்கே வேணுமா, இல்லைன்னா நீங்க ஆஃபீஸ்க்கு போற அன்னைக்கு குடுத்தா போதுமா?
Translate provided English text into colloquial Tamil
It's enough to go to work.
வேலைக்கு போறன்னைக்கு குடுத்தா போதும்.
Translate provided English text into colloquial Tamil
Well, don't forget to ask for it when you want. The nurse will be in the next room. Give them this prescription. They'll give you an injection for the flu. After that, buy pills for sore throat and fever at the pharmacy.
சரி, உங்களுக்கு வேணும் போது மறக்காம கேட்டு வாங்கிக்கோங்க. அடுத்த ரூம்ல (அறை) நர்ஸ் (செவிலியர்) இருப்பாங்க. அவங்க கிட்ட இந்த பிரிஸ்கிரிப்சன (மருந்து சீட்டு) குடுங்க. அவங்க காச்சலுக்கு ஒரு ஊசி போடுவாங்க. அதுக்கு அப்புறம், ஃபார்மசில (மருந்தகம்) தொண்ட வலிக்கும், காச்சலுக்கும் மாத்திரை வாங்கிக்கோங்க.
Translate provided English text into colloquial Tamil
All right, doctor. Thank you so much (thank you).
சரி டாக்டர். ரொம்ப தேங்க்ஸ் (நன்றி).
Translate provided English text into colloquial Tamil
Take care (take care).
டேக் கேர் (கவனித்துக் கொள்ளுங்கள்).
Translate provided English text into colloquial Tamil
Brother, are all the fruits fresh?
அண்ணே, பழங்கள் எல்லாம் புதுசா இருக்கா?
Translate provided English text into colloquial Tamil
Yes, it came this morning. What fruit do you want?
ஆமாம்மா, இன்னைக்கு காலையில தான் வந்தது. உங்களுக்கு என்ன பழம் வேணும்.
Translate provided English text into colloquial Tamil
What about Apple?
ஆப்பிள் என்ன வில?
Translate provided English text into colloquial Tamil
Royal apples are three hundred rupees a kilo. Kashmiri apple 250 rua.
ராயல் ஆப்பிள் கிலோ முண்ணூறு ருவா. காஷ்மீர் ஆப்பிள் இரனூத்தி அம்பது ருவா.
Translate provided English text into colloquial Tamil
Eat the little ones, put a kilo in the royal apple.
சின்ன பசங்க சாப்புடுறது, நல்லதா ராயல் ஆப்பிள்ள ஒரு கிலோ போடுங்க.
Translate provided English text into colloquial Tamil
Else?
வேற?
Translate provided English text into colloquial Tamil
How to make a pumpkin – pizza (slice) or whole fruit?
தற்பூசணி எப்படி – பீஸ்ஸா (துண்டு) இல்ல முழு பழமா?
Translate provided English text into colloquial Tamil
It's the whole fruit. Kilo twenty rua.
முழு பழம் தான். கிலோ இருவது ருவா.
Translate provided English text into colloquial Tamil
Weigh a good fruit.
நல்லதா ஒரு பழத்த வெயிட் (எடை) போடுங்க.
Translate provided English text into colloquial Tamil
This fruit weighs four and a half kilos, should I stay the same or do you want another fruit?
இந்த பழம் நாலரை கிலோ இருக்கு, இதே இருக்கட்டுமா இல்ல வேற பழம் வேணுமா?
Translate provided English text into colloquial Tamil
Let this be it.
இதுவே இருக்கட்டும்.
Translate provided English text into colloquial Tamil
Kamala want oranges?
கமலா ஆரஞ்சு வேணுமா?
Translate provided English text into colloquial Tamil
I want to. Bear a dozen.
வேணும். ஒரு டஜன் தாங்க.
Translate provided English text into colloquial Tamil
Not a dozen. This is also kilos. A kilo is a hundred rupees. Ten fruits per kilo. Can I put on a kilo?
டஜன் கணக்கு இல்ல. இதுவும் கிலோ கணக்குதான். ஒரு கிலோ நூறு ருவா. ஒரு கிலோவுக்கு பத்து பழம் நிக்கும். ஒரு கிலோ போடட்டுமா?
Translate provided English text into colloquial Tamil
Ok ok. Give me eight bananas.
சரிங்க. வாழைப்பழமும் எட்டு குடுங்க.
Translate provided English text into colloquial Tamil
Do you need anything else, or pay the bill?
வேற எதுவும் வேணுமா, இல்ல பில் போட்டுறவா?
Translate provided English text into colloquial Tamil
Will grapefruit not ferment? What's the matter?
திராட்சை பழம் புளிக்காம இருக்குமா? என்ன வில?
Translate provided English text into colloquial Tamil
Here, eat a fruit and buy it if it is good. Kilo Sixty Rua.
இந்தாங்கம்மா, ஒரு பழத்த சாப்புட்டு பாத்துட்டு நல்லா இருந்தா வாங்குங்க. கிலோ அறுவது ருவா.
Translate provided English text into colloquial Tamil
It's a good fruit. Put half a kilo.
நல்ல பழமா தான் இருக்கு. அரை கிலோ போடுங்க.
Translate provided English text into colloquial Tamil
Australia has grapes. That would be good too. It's just a little bit. Shall I put it on?
ஆஸ்த்திரேலியா கிரேப்ஸ் இருக்கு. அதுவும் நல்லா இருக்கும். வில கொஞ்சம் தான் கூட. அத போடட்டுமா?
Translate provided English text into colloquial Tamil
Don't worry. Juice (Saru). Plain fruit is enough. What are the fresh juices?
வேண்டாங்க. ஜூஸ் (சாரு) போடதான். சாதா பழமே போதும். ஃபிரெஷ் (புதிய) ஜூஸ் என்னென்ன இருக்கு?
Translate provided English text into colloquial Tamil
There's oranges, grapes and pomegranate juice. What do you want?
ஆரஞ்சு, கிரேப்ஸ், மாதுள ஜூஸ் இருக்கு. உங்களுக்கு எது வேணும்?
Translate provided English text into colloquial Tamil
Give me a pomegranate juice. Put the bill (receipt).
மாதுள ஜூஸ் ஒண்ணு குடுங்க. பில்லும் (ரசீது) போட்டுருங்க.
Translate provided English text into colloquial Tamil
An apple costs three hundred rupees, a pumpkin ninety rua, oranges a hundred rupees, bananas forty rupees, grapes thirty rupees, juice fifty rupees. The total is six hundred and ten rupees.
ஆப்பிள் முண்ணூறு ருவா, தற்பூசணி தொண்ணூறு ருவா, ஆரஞ்சு நூறு ருவா, வாழைப்பழம் நாப்பது ருவா, திராட்ச முப்பது ருவா, ஜூஸ் அம்பது ருவா. மொத்தம் அறநூத்தி பத்து ருவா ஆச்சு.
Translate provided English text into colloquial Tamil
Here's six hundred rupees.
இந்தாங்க அறநூறு ருவா.
Translate provided English text into colloquial Tamil
Ok let it be.
சரிங்க இருக்கட்டும்.
Translate provided English text into colloquial Tamil
Hello Dr.
வணக்கம் டாக்டர்.
Translate provided English text into colloquial Tamil
Come on! Come and sit here. Tell me, what's the problem?
வாங்கம்மா! இங்க வந்து உக்காருங்க. சொல்லுங்க, என்ன பிரச்சனை ?
Translate provided English text into colloquial Tamil
Fever doctor for two days, stomach pain is different.
ரெண்டு நாளா காய்ச்சல் டாக்டர், வயிறு வலி வேற.
Translate provided English text into colloquial Tamil
Is there any vomiting or loose motion (diarrhoea)?
வாந்தி, லூஸ் மோஷன் (பேதி) ஏதாவது இருக்கா?
Translate provided English text into colloquial Tamil
No, Doctor.
இல்ல, டாக்டர்.
Translate provided English text into colloquial Tamil
Did you eat anything outside?
வெளிய ஏதாவது சாப்பிட்டீங்களா?
Translate provided English text into colloquial Tamil
Yes, Doctor. We went to Kodaikanal for vacation.
ஆமா, டாக்டர்.விடுமுறைக்கு கொடைக்கானல் போனோம்.அங்க
Translate provided English text into colloquial Tamil
Unhygienic food for a lot of diseases
இப்ப வர்ற நெறையா நோய்களுக்கு சுத்தமில்லாத சாப்பாடு
Translate provided English text into colloquial Tamil
All right, doctor.
சரி, டாக்டர்.
Translate provided English text into colloquial Tamil
The temperature is one hundred and two. I will give you
டெம்பெரெசர் நூத்திரெண்டு இருக்கு. நான் உங்களுக்கு
Translate provided English text into colloquial Tamil
The pressure is fine. Your body weight is a little too much.
பிரஷர் சரியாதான் இருக்கு. உங்க உடல் எட தான் கொஞ்சம் அதிகமா
Translate provided English text into colloquial Tamil
Nothing to do, Doctor. The housework is fine.
ஒண்ணுமே பண்றது இல்ல டாக்டர். வீட்டு வேலையே சரியா இருக்கு.
Translate provided English text into colloquial Tamil
Devote at least an hour to exercise. Not now sick
ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சிக்கு ஒதுக்குங்க மா. இப்ப இல்ல உடம்பு
Translate provided English text into colloquial Tamil
This pill can be taken three times after three meals.
இந்த மாத்திரைய மூணு வேளை சாப்பாட்டுக்கு அப்புறம் மூணு
Translate provided English text into colloquial Tamil
Okay, Doctor! Can you eat bread, porridge and fruits?
சரிங்க டாக்டர் ! பிரட், கஞ்சி, பழங்கள் இதெல்லாம் சாப்பிடலாமா?
Translate provided English text into colloquial Tamil
If you don't want bread, eat porridge and lots of fruits.
பிரட் வேணாம்மா , கஞ்சி அப்புறம் நெறையா பழங்கள் சாப்பிடுங்க.
Translate provided English text into colloquial Tamil
Thank you, Doctor.
நன்றி டாக்டர்.
Translate provided English text into colloquial Tamil
Sir, sir...
சார், சார்….
Translate provided English text into colloquial Tamil
I saw in the advertisement that the terraced house was empty. I came to see it in person.
மாடி வீடு காலியா இருக்குன்னு அட்வெர்டைஸ்மெண்ட்ல (விளம்பரம்) பாத்தேன். அதை நேர்ல பாக்கலாமுன்னு வந்தேன்.
Translate provided English text into colloquial Tamil
Buy in.
உள்ள வாங்க.
Translate provided English text into colloquial Tamil
Thank you sir.
நன்றி சார்.