instruction
stringclasses
1 value
input
stringlengths
2
1.61k
output
stringlengths
3
948
Translate provided English text into colloquial Tamil
If my mom asks me something, I'll do it.
அம்மா ஏதாவது கேட்டாங்கன்னா செஞ்சு குடுப்பேன்.
Translate provided English text into colloquial Tamil
Okay. Take good care of Mom and Dad. You also have to be careful. I'll call you tomorrow.
சரி. அம்மா அப்பாவ நல்லா பாத்துகோ. நீயும் கவனமா இரு. நாளைக்கு ஃபோன் பண்ணுறேன்.
Translate provided English text into colloquial Tamil
You also have to be careful. Sister-in-law, tell me you heard the children.
நீங்களும் கவனமா இருங்க. அண்ணி, பிள்ளைகளையும் கேட்டதா சொல்லுங்க.
Translate provided English text into colloquial Tamil
Okay. Mat.
சரி. பாய்.
Translate provided English text into colloquial Tamil
Wada Sachin, let's go for lunch.
வாடா சச்சின், லஞ்ச் (மதிய உணவு) சாப்புட போகலாம்.
Translate provided English text into colloquial Tamil
What's for dinner in your house today?
இன்னைக்கு உங்க வீட்டுல என்ன சாப்பாடு?
Translate provided English text into colloquial Tamil
Lemon rice and potato fries. What's in your house?
லெமன் (எலுமிச்சை) சாதமும், உருளை கிழங்கு பொரியலும். உங்க வீட்டுல என்ன?
Translate provided English text into colloquial Tamil
Mom is late today. So it's just bread (bread) and jam (jam).
அம்மா இன்னைக்கு லேட்டா (தாமதமா) எந்திருச்சாங்க. அதனால வெறும் பிரட்டும் (ரொட்டி), ஜாமும் (பழப்பாகு) தான்.
Translate provided English text into colloquial Tamil
Okay. Both of you can share and eat. Where is your mother late? Are they sick?
சரி. ரெண்டு பேரும் சேர் (பகிர்ந்து) பண்ணி சாப்புடலாம். ஏண்டா அம்மா லேட்டா எந்திருச்சாங்க? அவங்களுக்கு உடம்பு சரியில்லையா?
Translate provided English text into colloquial Tamil
It's not like that. Grandparents, uncles, aunts and their son Karthik had come from the village. We all went to the zoo together and came back late at night.
அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல. ஊர்ல இருந்து தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, அவங்களோட பையன் கார்த்திக் வந்திருந்தாங்க. எல்லாரும் சேர்ந்து ஜூக்கு (மிருகக்காட்சி சாலை) போயிட்டு, ராத்திரி லேட்டா வந்தோம்.
Translate provided English text into colloquial Tamil
What, did you go to the zoo?
என்ன, ஜூ-க்கு போனீயா?
Translate provided English text into colloquial Tamil
Oh yes! It was very good. I'll tell you everything while eating.
ஆமாண்டா! ரொம்ப நல்லா இருந்துச்சு. சாப்புட்டுட்டே எல்லாத்தையும் சொல்றேன்.
Translate provided English text into colloquial Tamil
How did you get out of the house?
வீட்டுல இருந்து எப்படி போனீங்க?
Translate provided English text into colloquial Tamil
There was not enough space in the car, so they arranged the van. It was a lot of fun for me and Karthik to sit together and talk.
கார்ல (வண்டி) இடம் பத்தாது, அதனால வேன் அரேஞ்ச் (ஏற்பாடு) பண்ணுனாங்க. நானும் கார்த்திக்கும் ஒண்ணா உக்காந்து பேசிக்கிட்டே போனது ரொம்ப ஜாலியா இருந்துச்சு.
Translate provided English text into colloquial Tamil
How long did it take to get from your house to Zoo?
உங்க வீட்டுல இருந்து ஜூக்கு போக எவ்வளவு நேரமாச்சு?
Translate provided English text into colloquial Tamil
We left at nine o'clock and left at ten. Dad brought entrance tickets for everyone. Grandparents bought tickets for a battery car (battery car) to look around.
ஒம்பது மணிக்கு கிளம்பி பத்து மணிக்கு போயிட்டோம். அப்பா எல்லாருக்கும் எண்ட்ரன்ஸ் டிக்கெட் (நுழைவு கட்டணம்) எடுத்துட்டு வந்தாங்க. தாத்தா, பாட்டிக்கு சுத்தி பாக்க பேட்டரி காருக்கும் (மின்கலம் வண்டி) டிக்கெட் எடுத்தாங்க.
Translate provided English text into colloquial Tamil
How much is an entrance ticket and how much is a battery car?
எண்ட்ரன்ஸ் டிக்கெட் எவ்வளவு, பேட்டரி காருக்கு எவ்வளவு ருவா?
Translate provided English text into colloquial Tamil
One hundred rupees per person and two hundred rupees per person for a battery car.
ஒரு ஆளுக்கு நூறு ருவா, பேட்டரி காருக்கு ஒரு ஆளுக்கு இறநூறு ருவா.
Translate provided English text into colloquial Tamil
What did you see in July?
ஜூல என்னென்ன பாத்தீங்க?
Translate provided English text into colloquial Tamil
Once inside, there was a mountain with a falls, and below that was a pond. There were ducks, fish, cranes, everything in the pond. We saw a lot of monkeys in the trees next door.
உள்ள போனவுடனே ஒரு மௌண்டைன் (மலை) வச்சி, அதுல ஃபால்சும் (அருவி), அதுக்கு கீழே குளமும் இருந்தது. குளத்துக்குள்ள வாத்து, மீன், கொக்கு, எல்லாம் இருந்தது. அடுத்து உள்ள மரங்கள்ள நெறைய குரங்குகள பாத்தோம்.
Translate provided English text into colloquial Tamil
Did you give the monkeys any fruits and snacks?
குரங்குகளுக்கு பழங்கள், ஸ்நாக்ஸ் (சிற்றுண்டி) எதுவும் குடுத்தியா?
Translate provided English text into colloquial Tamil
Oh no. We don't have to carry anything. You can't touch anything.
இல்லடா. நாம எதுவும் கொண்டு போக கூடாது. எதையும் தொடவும் முடியாது.
Translate provided English text into colloquial Tamil
Is it?
அப்படியா?
Translate provided English text into colloquial Tamil
I saw the peacock. There was a white peacock and a parrot in the cage. It was very nice to see the peacock dancing.
மயில் பாத்தேன். வெள்ள மயிலும், கூண்டுக்குள்ள பஞ்சவர்ண கிளியும் இருந்துச்சு. மயில் தோகைய விருச்சி ஆடிட்டு இருந்தத பாக்க ரொம்ப சந்தோஷமா இருந்தது.
Translate provided English text into colloquial Tamil
Do you see the deer?
மான் பாத்தயாடா?
Translate provided English text into colloquial Tamil
I saw the spotted deer and the kavari deer. There was also a water dog in the pond next to it.
புள்ளி மானும், கவரி மானும் பாத்தேன். அதுக்கு பக்கத்தில இருந்த குளத்துல நீர் நாயும் இருந்துச்சு.
Translate provided English text into colloquial Tamil
Was there a Jul snake?
ஜூல பாம்பு இருந்ததா?
Translate provided English text into colloquial Tamil
The snake has an area. We've seen a lot of different kinds of snakes. Some of the snakes were scary.
பாம்புக்குன்னே ஒரு ஏரியா (பரப்பு) இருக்கு. அதுல நெறைய வகை வகையான பாம்புகள பாத்தோம். சில பாம்புகள பாக்கவே பயம்மா இருந்தது டா.
Translate provided English text into colloquial Tamil
Do you care about wild animals?
காட்டு விலங்குகள பாத்தியா?
Translate provided English text into colloquial Tamil
We have seen elephants, tigers, lions, rhinoceros, bears and many other animals. It was nice to see the tiger lying on the tree.
யானை, புலி, சிங்கம், காண்டா மிருகம், கரடி இன்னும் நெறைய விலங்குகள பாத்தோம். புலி மரத்து மேல படுத்து இருந்தத பாக்க நல்லா இருந்தது.
Translate provided English text into colloquial Tamil
Wont the tiger come near us?
புலி நம்ம பக்கத்துல வராதா?
Translate provided English text into colloquial Tamil
I don't know. They've put a fence around it. We saw the lion with its cub.
வராதுடா. அத சுத்தி வேலி போட்டுருக்காங்க. சிங்கத்த அதனோட குட்டியோட பாத்தோம்.
Translate provided English text into colloquial Tamil
Did you photograph all this?
இதை எல்லாம் போட்டோ (புகைப்படம்) எடுத்தீங்களா?
Translate provided English text into colloquial Tamil
Dad took the mobile phone. I'll show you when you get home.
அப்பா மொபைல்ல (கைபேசி) எடுத்தாங்க. நீ வீட்டுக்கு வரும்போது நான் உனக்கு காட்டுறேன்.
Translate provided English text into colloquial Tamil
Okay. Seeing what you're saying, I'd like to go to Zoo too. I have to ask my dad if I can go next week.
சரிடா. நீ சொல்றத பாக்கும்போது எனக்கும் ஜூக்கு போகணும்முன்னு ஆசையா இருக்கு. அடுத்த வாரம் போலாமான்னு அப்பாகிட்ட கேக்கணும்.
Translate provided English text into colloquial Tamil
It's time. Shall we go to class?
நேரமாகுதுடா. கிளாஸுக்கு (வகுப்பு) போலாமா?
Translate provided English text into colloquial Tamil
Let's go.
போலாம் டா.
Translate provided English text into colloquial Tamil
Come on, sir. What do you want?
வாங்க சார். என்ன வேணும்?
Translate provided English text into colloquial Tamil
I want birthday cake.
பர்த்டே (பிறந்த நாள்) கேக் வேணும்.
Translate provided English text into colloquial Tamil
Do you need something or do you order a new one? If you order now, you will get it within four hours.
இதுல ஏதாவது வேணுமா இல்ல புதுசா ஆர்டர் (பதிவு) பண்றீங்களா? நீங்க இப்ப ஆர்டர் பண்ணுனா நாலு மணி நேரத்துக்குள்ள கிடைக்கும்.
Translate provided English text into colloquial Tamil
I'm ordering a new one now. What flavor is in a cake?
நான் இப்ப புதுசா ஆர்டர் குடுக்குறேன். கேக்ல என்னென்ன ப்ளேவர் (சுவை) இருக்கு?
Translate provided English text into colloquial Tamil
There's vanilla, strawberry, chocolate flavor. What do you want?
வனில்லா, ஸ்டிராபெர்ரி, சாக்லேட் ப்ளேவர் இருக்கு. உங்களுக்கு எது வேணும்?
Translate provided English text into colloquial Tamil
Strawberries.
ஸ்டிராபெர்ரி.
Translate provided English text into colloquial Tamil
Do you want a cake or a cake?
முட்ட சேத்த கேக் வேணுமா, இல்ல சேக்காத கேக் வேணுமா?
Translate provided English text into colloquial Tamil
You just want a cake that doesn't make a cake.
முட்ட சேக்காத கேக் தான் வேணும்.
Translate provided English text into colloquial Tamil
How many kilos?
எத்தன கிலோ?
Translate provided English text into colloquial Tamil
Two kilos. How much does it cost?
ரெண்டு கிலோ. அதுக்கு எவ்வளவு ஆகும்?
Translate provided English text into colloquial Tamil
Two kilos of cake is one thousand eight hundred rupees.
ரெண்டு கிலோ கேக் ஆயிரத்தி எண்ணூறு ருவா.
Translate provided English text into colloquial Tamil
Do you need a photo print on a cake?
கேக்ல போட்டோ பிரிண்ட் (புகைப்பட அச்சு) எதுவும் போடணுமா?
Translate provided English text into colloquial Tamil
Put Mickey Mouse on the cake. The boy will be very happy.
மிக்கி மவுஸ் படத்த கேக்ல போட்டுருங்க. பையன் ரொம்ப சந்தோஷ படுவான்.
Translate provided English text into colloquial Tamil
It can be easy (easy). Write the message and photo print name you want on this paper (paper) cake. Write your name and cell number at the bottom.
அது ஈசியா (எளிதாக) போடலாம். நீங்க இந்த பேப்பர்ல (தாள்) கேக்ல வேணுங்கிற மெஸ்ஸேஜும் (செய்தி), போட்டோ பிரிண்ட் நேமும் எழுதுங்க. கீழ உங்க பேரும், செல் நம்பரும் (கைபேசி எண்) எழுதிருங்க.
Translate provided English text into colloquial Tamil
I wrote down what you said. Do you want to write something else?
நீங்க சொன்னத எழுதிட்டேன். வேற ஏதாவது எழுதணுமா?
Translate provided English text into colloquial Tamil
No, sir. This is enough. If you order samosas, mini pizzas, puff we will make it hot.
இல்ல சார். இது போதும். உங்களுக்கு சமோசா, மினி பீட்ஸா, பஃப் ஏதாவது ஆர்டர் பன்னுன்னா நாங்களே சூடா செஞ்சு குடுப்போம்.
Translate provided English text into colloquial Tamil
Don't worry. Snacks are ready at home.
வேண்டாங்க. ஸ்நாக்ஸ் (சிற்றுண்டி) வீட்லயே ரெடி (தயார்) பண்ணிடுவோம்.
Translate provided English text into colloquial Tamil
There's birthday candles, snow spray, party hats, everything. Do you want it?
பர்த்டே கேண்டில்ஸ் (மெழுகுவர்த்தி) ஸ்னோ ஸ்ப்ரே (குழை பனி தெளிப்பான்), பார்ட்டி ஹேட்ஸ் (தொப்பி) எல்லாமே இருக்கு. வேணுமா?
Translate provided English text into colloquial Tamil
Oh yes, give it to me. I also forgot. My wife told me to buy it.
ஆமா, குடுங்க. நானும் மறந்துட்டேன். என்னோட மனைவி வாங்கீட்டு வர சொன்னாங்க.
Translate provided English text into colloquial Tamil
What do you want, sir?
என்னென்ன வேணும் சார்?
Translate provided English text into colloquial Tamil
It's my son's sixth birthday. So one candle with six numbers (number) and three boxes in a small candle are enough to keep the cake around. No snow spray, the little ones will be visible.
என்னோட மகனுக்கு இது ஆறாவது பிறந்த நாள். அதனால ஆறுன்னு நம்பர் (எண்) போட்ட கேண்டில் ஒண்ணு, கேக்க சுத்தி வைக்கிறதுக்கு சின்ன கேண்டில் மூணு பெட்டி போதும். ஸ்னோ ஸ்ப்ரே வேண்டாம், சின்ன பசங்க கண்ணுல பட்டுரும்.
Translate provided English text into colloquial Tamil
Are you going to buy it now or when you come to buy a cake?
இப்பவே வாங்கீட்டு போறீங்களா அல்லது கேக் வாங்க வரும்போது வாங்கிக்குறீங்களா?
Translate provided English text into colloquial Tamil
Give it to me now.
இப்பவே தந்துருங்க.
Translate provided English text into colloquial Tamil
Do you need anything else, sir? In our shop, sweet bread (sweet bread) and wheat rusk (piece of wheat bread) are both famous (famous). Or do you buy cutlets and doughnuts?
வேற ஏதாவது வேணுமா சார்? எங்க கடையில ஸ்வீட் பிரட் (இனிப்பு ரொட்டி), வீட் ரஸ்க் (கோதுமை ரொட்டி துண்டு) ரெண்டும் ஃபேமஸ் (பிரபலம்). இல்ல கட்லெட், டோனட் வாங்குறீங்களா?
Translate provided English text into colloquial Tamil
A packet of sweet bread and three veg cutlets. Put the bill (receipt).
ஒரு ஸ்வீட் பிரட் பாக்கெட்டும், வெஜ் (சைவம்) கட்லெட் மூணும் தாங்க. பில்ல (ரசீது) போட்டுருங்க.
Translate provided English text into colloquial Tamil
A cake costs 1800 rupees, a number candle costs 100 rupees, a small candle costs 3 boxes – fifteen rupees, bread is 180 rupees, cutlets are 60 rupees. The total is two thousand five rupees. How to Payment – Kesha (Cash)? Garda (card)?
கேக் ஆயிரத்தி எண்ணூறு ருவா, நம்பர் கேண்டில் நூறு ருவா, சின்ன கேண்டில் மூணு பெட்டி– பதினஞ்சு ருவா, பிரட் நுப்பது ருவா, கட்லெட் அறுவது ருவா. மொத்தம் ரெண்டாயிரத்தி அஞ்சு ருவா ஆச்சு. பேமண்ட் (கட்டணம்) எப்படி – கேஷா (பணமா)? கார்டா (அட்டையா)?
Translate provided English text into colloquial Tamil
Can I pay through Paytm?
பேடிஎம்‌ மூலமா பே பண்ணலாமா?
Translate provided English text into colloquial Tamil
Let's do it, sir. Scan this code (X-ray) on the Paytm app.
பண்ணலாம் சார். பேடிஎம் ஆப்ல (செயலி) இந்த கோட (குறியீடு) ஸ்கேன் (ஊடுகதிர்) பண்ணுங்க.
Translate provided English text into colloquial Tamil
Amount transfer (money transfer) has been done. Check (check) it.
அமெளண்ட் ட்ரான்ஸ்பர் (தொகை பரிமாற்றம்) ஆயிருச்சு. செக் (சரி பாரு) பண்ணுங்க.
Translate provided English text into colloquial Tamil
Yes sir. I got the payment. Here's your receipt. It will be ready at five o'clock this evening. Don't forget to bring the receipt when you arrive.
யெஸ் சார். பேமண்ட் கிடைச்சுருச்சு. இந்தாங்க உங்க ரசீது. இன்னைக்கு சாயந்தரம் அஞ்சு மணிக்கு ரெடி ஆயிரும். நீங்க வரும்போது ரசீத மறக்காம கொண்டு வாங்க.
Translate provided English text into colloquial Tamil
Okay, come on.
சரி, வாரேன்.
Translate provided English text into colloquial Tamil
Hello Sir.
வணக்கம் ஸார்.
Translate provided English text into colloquial Tamil
Hello Sir. Tell me.
வணக்கம் ஸார். சொல்லுங்க.
Translate provided English text into colloquial Tamil
I came to change this book.
நான் இந்த புத்தகத்த மாத்த வந்தேன்.
Translate provided English text into colloquial Tamil
Why, sir? What's wrong?
ஏன் ஸார்? என்ன ஆச்சு?
Translate provided English text into colloquial Tamil
I don't see a page from 10 to 16.
இதுல பத்துல இருந்து பதினாறு வர உள்ள பக்கத்த காணல.
Translate provided English text into colloquial Tamil
Don't you buy when you buy it?
நீங்க வாங்கும் போது பாத்து வாங்கலையா?
Translate provided English text into colloquial Tamil
I didn't notice then, sir.
அப்போ கவனிக்கல ஸார்.
Translate provided English text into colloquial Tamil
When did you buy this book?
இந்த புத்தகத்த எப்போ வாங்குனீங்க?
Translate provided English text into colloquial Tamil
I bought it three days ago.
மூணு நாளை-க்கு முன்னால வாங்குனேன்.
Translate provided English text into colloquial Tamil
Why didn't you bring it the next day?
அடுத்த நாளே ஏன் கொண்டு வரல?
Translate provided English text into colloquial Tamil
I went on a family picnic. I came yesterday morning. I read it at night.
நான் குடும்பத்தோட சுற்றுலா போயிட்டேன். நேத்து காலையில தான் வந்தேன். ராத்திரி படிக்க எடுத்தப்ப தான் பாத்தேன்.
Translate provided English text into colloquial Tamil
Do you have a receipt for the book?
புத்தகம் வாங்குன ரசீது வச்சிருக்கீங்களா?
Translate provided English text into colloquial Tamil
Yes, there is a receipt. Look at this.
ஆமா ரசீது இருக்கு. இத பாருங்க.
Translate provided English text into colloquial Tamil
It's a valid receipt. Wait a minute, I'll give you another book.
இது சரியான ரசீது தான். ஒரு நிமிஷம் இருங்க, நான் வேற புத்தகம் தாரேன்.
Translate provided English text into colloquial Tamil
Ok ok .
சரிங்க….
Translate provided English text into colloquial Tamil
Here, see if it's all right.
இந்தாங்க, இதுல எல்லாமே சரியா இருக்கான்னு பாருங்க.
Translate provided English text into colloquial Tamil
Yes sir. It's all right.
ஆமா ஸார். எல்லாமே சரியா இருக்கு.
Translate provided English text into colloquial Tamil
Do you need anything else? A new book written by the same Arthur (author) has arrived. Do you see?
வேற ஏதாவது வேணுமா? இதே ஆத்தர் (ஆசிரியர்) எழுதுன புது புத்தகம் வந்துருக்கு. பாக்குறீங்களா?
Translate provided English text into colloquial Tamil
Next time, sir. Let me finish reading this first.
அடுத்த தடவ ஸார். இத மொதல படிச்சு முடிச்சுக்கிறேன்.
Translate provided English text into colloquial Tamil
Children have a book on a story, a drawing book, a colour pencil, crayon, and a watercolour. Do you need anything?
பிள்ளைகளுக்கு தேவையான கத புத்தகம், படம் வரையிற புத்தகம், கலர் பென்சில், கிரையான், வாட்டர் கலர் எல்லாம் இருக்கு. ஏதாவது வேணுமா?
Translate provided English text into colloquial Tamil
Not now, sir. I'll bring the boy here and get it.
இப்போ வேண்டாம் ஸார். நான் பையன இங்க கூட்டீட்டு வந்து வாங்கிக்குறேன்.
Translate provided English text into colloquial Tamil
There's a discount sale at the end of this month. If you give me your mobile number, I will inform you.
இந்த மாச கடைசியில தள்ளுபடி விற்பனை இருக்கு. உங்க மொபைல் நம்பர (கைபேசி எண்) குடுத்தீங்கன்னா நான் உங்களுக்கு தகவல் சொல்றேன்.
Translate provided English text into colloquial Tamil
My mobile number 9876543210. My wife also reads a lot of books. I will definitely bring them along.
என்னோட மொபைல் நம்பர் (கைபேசி எண்) 9876543210. என் மனைவியும் நெறைய புத்தகம் படிப்பாங்க. அவங்களையும் கண்டிப்பா கூட்டீட்டு வாறேன்.
Translate provided English text into colloquial Tamil
Okay sir. Thank you.
சரி ஸார். நன்றி.
Translate provided English text into colloquial Tamil
Come on, ma'am. What do you want?
வாங்க மேடம். என்ன வேணும்.
Translate provided English text into colloquial Tamil
Girls need dresses.
பொண்ணுகளுக்கு உள்ள டிரஸ் (உடை) வேணும்..
Translate provided English text into colloquial Tamil
Churidar set, midi, long-skirt and jeans pants are all there. What do you want?
சுடிதார் செட், மிடி, லாங்-ஸ்கர்ட், ஜீன்ஸ் பேன்ட் எல்லாமே இருக்கு. உங்களுக்கு எது வேணும்?
Translate provided English text into colloquial Tamil
I need a top of jeans.
ஜீன்ஸ் டாப் (மேலாடை) வேணும்.
Translate provided English text into colloquial Tamil
What size (size)?
என்ன சைஸ் (அளவு)?
Translate provided English text into colloquial Tamil
Show small (small) and medium (medium).
ஸ்மாலும் (சின்ன), மீடியமும் (நடுத்தரம்) காட்டுங்க.
Translate provided English text into colloquial Tamil
The first row is small and the second row is medium size.
முதல் வரிசை முழுவதும் சின்ன சைஸ், ரெண்டாவது வரிசை எல்லாமே மீடியம் சைஸ்.
Translate provided English text into colloquial Tamil
Ok ok. I will choose myself.
சரிங்க. நானே பாத்து செலக்ட் (தேர்வு) பண்ணுறேன்.