instruction
stringclasses 1
value | input
stringlengths 2
1.61k
| output
stringlengths 3
948
|
---|---|---|
Translate provided English text into colloquial Tamil | Where did you come from? | நீங்க எங்க இருந்து வாரீங்க? |
Translate provided English text into colloquial Tamil | I was in Bangalore. Now I have come to Chennai after transfer. | பெங்களூர்ல இருந்தேன். இப்போ ட்ரான்ஸ்பர் (இடம் மாற்றல்) ஆகி சென்னைக்கு வந்திருக்கேன். |
Translate provided English text into colloquial Tamil | Where do you work? | நீங்க எங்க வேல பாக்குறீங்க? |
Translate provided English text into colloquial Tamil | I work in an IT company (IT company) infocomm. | ஒரு ஐடி கம்பெனி (ஐடி நிறுவனம்) இன்ஃபோகாம்ல வேல பாக்குறேன். |
Translate provided English text into colloquial Tamil | How many people are there in your house? | உங்க வீட்ல மொத்தம் எத்தன பேரு? |
Translate provided English text into colloquial Tamil | There are three of us, including my mom and dad. | நாங்க மூணு பேரு, என்னோட அம்மா, அப்பாவ சேத்து மொத்தம் அஞ்சு பேரு. |
Translate provided English text into colloquial Tamil | Will Mom and Dad go up the stairs? | அம்மா, அப்பா மாடி படி ஏறுவாங்களா? |
Translate provided English text into colloquial Tamil | Climb up, sir. | ஏறுவாங்க சார். |
Translate provided English text into colloquial Tamil | Look at the house. We'll talk to you if you like it. | வீட்ட பாருங்க. உங்களுக்கு புடிச்சா மத்தத பேசுவோம். |
Translate provided English text into colloquial Tamil | All right, sir. | சரி சார். |
Translate provided English text into colloquial Tamil | This is the hall. There are two bedrooms – this bedroom has an attached bathroom. Both bedrooms have balconies (terraces). This is the kitchen. The pooja room (pooja room) is separate. There are cupboards in the bedroom and shelves in the kitchen. | இது ஹால் (வரவேற்பறை). இங்க ரெண்டு பெட்ரூம் (படுக்கை அறை) இருக்கு – இந்த பெட்ரூம்ல அட்டேச்டு பாத்ரூம் (இணைக்கப்பட்ட குளியலறை) இருக்கு. ரெண்டு பெட்ரூம்லயும் பால்கனி (மாடி முகப்பு) இருக்கு. இது கிச்சன் (சமயலறை). பூஜ ரூம் (பூஜையறை) தனியா இருக்கு. பெட்ரூம்ல தேவையான கப்போர்டும் (அலமாரி), கிச்சன்ல தேவையான ஷெல்ஃப்களும் (அலமாரிகள்) இருக்கு. |
Translate provided English text into colloquial Tamil | How about water, sir? | தண்ணீ வசதி எப்படி சார்? |
Translate provided English text into colloquial Tamil | There are separate pipes for corporation (municipality) water (water) and bor (borehole) water. | கார்ப்பரேஷன் (நகராட்சி) வாட்டருக்கும் (தண்ணீர்), போர் (ஆழ்துளை) வாட்டருக்கும் தனித்தனி பைப் (குழாய்) இருக்கு. |
Translate provided English text into colloquial Tamil | The house is very nice, sir. Show me where the car is parked. | வீடு ரொம்ப நல்லா இருக்கு சார். கார (வண்டி) நிறுத்துர இடத்த காட்டுங்க. |
Translate provided English text into colloquial Tamil | You can park next to my car. There's a lot of space. | என்னோட கார் பக்கத்துல நீங்களும் நிறுத்திக்கலாம். இடம் ரொம்ப இருக்கு. |
Translate provided English text into colloquial Tamil | How much is rent, advance? | வாடகை, அட்வான்ஸ் (முன்பணம்) எவ்வளவு? |
Translate provided English text into colloquial Tamil | The rent is twenty thousand rupees. Advance is a lakh rua. | வாடகை இருவதாயிரம் ருவா. அட்வான்ஸ் ஒரு லச்சம் ருவா. |
Translate provided English text into colloquial Tamil | I have a home. Tomorrow I will bring my mother, father and wife and see the house and decide. | எனக்கு வீடு புடிச்சிருக்கு. நாளைக்கு என்னோட அம்மா, அப்பா, மனைவிய கூட்டீட்டு வந்து வீட்ட பாத்துட்டு முடிவு சொல்றேன். |
Translate provided English text into colloquial Tamil | Are you sure you will come? | கண்டிப்பா வருவீங்களா? |
Translate provided English text into colloquial Tamil | They are all in our relatives' house nearby. So we will definitely come in the morning. If they like it, we will give them advance tomorrow and come back on Sunday (Sunday). | அவங்க எல்லாரும் பக்கத்தில எங்க ரிலேடிவ்ஸ் (சொந்தக்காரங்க) வீட்டுல தான் இருக்காங்க. அதனால காலையிலேயே கண்டிப்பா வருவோம். அவங்களுக்கு புடிச்சிருந்தா நாளைக்கே அட்வான்ஸ் குடுத்துட்டு, சன்டே (ஞாயிற்றுக்கிழமை) குடி வந்துருவோம். |
Translate provided English text into colloquial Tamil | Very good. | ரொம்ப நல்லது. |
Translate provided English text into colloquial Tamil | Thank you sir. I'm leaving. | நன்றி சார். போயிட்டு வாறேன். |
Translate provided English text into colloquial Tamil | Ajay! Ajay!!! | அஜய்! அஜய்!!! |
Translate provided English text into colloquial Tamil | What is it, Gavin? | என்னடா கவின்? |
Translate provided English text into colloquial Tamil | I need some help. Can I give my leave letter to the teacher? | ஒரு ஹெல்ப் (உதவி) வேணும். என்னோட லீவ் லெட்டர (விடுமுற கடிதம்) டீச்சர்-கிட்ட (ஆசிரியர்) குடுக்க முடியுமா? |
Translate provided English text into colloquial Tamil | What's the leave? Sick? | ஏண்டா லீவ்? உடம்பு சரியில்லையா? |
Translate provided English text into colloquial Tamil | Not for me, Mom. I've had a fever since last night. It's a pity to see my mother. | எனக்கு இல்லடா, அம்மா–க்கு. நேத்து ராத்திரி-ல இருந்து ஃபீவரா (காய்ச்சல்) இருக்கு. அம்மா-வ பாத்தா பாவமா இருக்கு. |
Translate provided English text into colloquial Tamil | Isn't it your father? | உங்க அப்பா இல்லயாடா? |
Translate provided English text into colloquial Tamil | My dad has gone out of town for office work. It will take a week to come. | அப்பா ஆஃபிஸ் (அலுவலகம்) வேலயா வெளியூர் போயிருக்காங்க. வர ஒரு வாரமாகும். |
Translate provided English text into colloquial Tamil | So you have to take care of your mother... | அப்போ நீ தான் அம்மா-வ கவனிக்கனும்… |
Translate provided English text into colloquial Tamil | Oh yes. Mom has an appointment with the doctor at ten o'clock. When I come to school, they have to go alone. That's why I'm taking leave. | ஆமாடா. அம்மா-க்கு பத்து மணி-க்கு டாக்டர்-கிட்ட (மருத்துவர்) அப்பாய்ண்ட்மென்ட் (சந்திக்க குறித்த நேரம்) இருக்கு. நான் பள்ளி-க்கு வந்துட்டா அவங்க தனியா போகணும். அதனால தான் நான் லீவ் எடுக்கிறேன். |
Translate provided English text into colloquial Tamil | How do you get to the hospital? | ஹாஸ்பிடல்-க்கு (ஆஸ்பத்திரி) எப்படி போவீங்க? |
Translate provided English text into colloquial Tamil | We're going to call a taxi. Okay, I'm leaving. I'll come in the evening and ask what homework is. Otherwise, I will send a message from my mother's WhatsApp. | கால் டாக்ஸி-ய (வாடக வண்டி) வர சொல்லி போக போறோம். சரிடா நான் கிளம்புறேன். சாயந்திரம் வந்து ஹோம்வொர்க் (வீட்டு பாடம்) என்னான்னு கேட்டுக்குறேன். இல்லன்னா அம்மா-ஓட வாட்ஸ்ஆப்-ல இருந்து மெசேஜ் (செய்தி) பண்றேன். |
Translate provided English text into colloquial Tamil | Okay. What are you going to do for food? | சரிடா. சாப்பாட்டுக்கு என்ன செய்ய போறீங்க? |
Translate provided English text into colloquial Tamil | Grandma is with us. They cook. | பாட்டி எங்க-கூட தான் இருக்காங்க. அவங்க சமைப்பாங்க. |
Translate provided English text into colloquial Tamil | Batiya! How helpful it is to have adults with us. | பாத்தீயா! பெரியவங்க நம்ம-கூட இருக்குறது எவ்வளவு உதவியா இருக்கு. |
Translate provided English text into colloquial Tamil | Oh yes! | ஆமாண்டா! |
Translate provided English text into colloquial Tamil | Grandma and Mom can also go to the hospital. Why are you taking leave? | பாட்டி-ய அம்மா-கூட ஹாஸ்பிடல்-க்கு போக சொல்லலாம்லா. நீ ஏன் லீவ் எடுக்குற? |
Translate provided English text into colloquial Tamil | They're old, they can't move around. Okay, don't forget to give the leave letter to the teacher and tell the reason. I'm leaving now. | அவங்க வயசானவங்க, அவங்களாள அலைய முடியாது. சரி, டீச்சர்-கிட்ட லீவ் லெட்டர மறக்காம குடுத்துட்டு காரணத்தயும் சொல்லிறு. இப்போ கிளம்புறேன். |
Translate provided English text into colloquial Tamil | Okay. Let's go. Mom – look at me | சரிடா. போயிட்டு வா. அம்மா-வ பாத்துக்கோ |
Translate provided English text into colloquial Tamil | What's in the night? Perfect appetite. | நைட் (இரவு) சாப்புட என்ன இருக்கு. சரியான பசி. |
Translate provided English text into colloquial Tamil | I have idli, sambar and chutney. | இட்லி, சாம்பார், சட்னி வச்சுருக்கேன். |
Translate provided English text into colloquial Tamil | Did Rathi eat? | ரதி சாப்புட்டாளா? |
Translate provided English text into colloquial Tamil | She's already eating and doing her homework. | அவள் அப்பவே சாப்புட்டு ஹோம்வொர்க் (வீட்டு பாடம்) பன்னிட்டு இருக்காள். |
Translate provided English text into colloquial Tamil | I asked the electrician (electrician) to make a phone call. Did he come and fix the fan? | எலெக்ட்ரீஷியன (மின் பணியாளர்) ஃபோன் (தொலைபேசி அழைப்பு) பண்ணி வர சொன்னேன். வந்து ஃபேன (மின்விசிறி) சரி செஞ்சானா? |
Translate provided English text into colloquial Tamil | Oh yes. He came in the morning and got it repaired and took one hundred and fifty rupees. | ஆமாங்க. காலையிலேயே வந்து சரி செஞ்சிட்டு நூத்தி அம்பது ரூவா வாங்கீட்டு போயிட்டான். |
Translate provided English text into colloquial Tamil | I haven't slept for four days because of the fan. | நாலு நாளா ஃபேன் சத்தத்துல தூக்கமே வரல. |
Translate provided English text into colloquial Tamil | yes, I haven't slept well either. | ஆமா, நானும் சரியாவே தூங்கல. |
Translate provided English text into colloquial Tamil | Crav! There are two wedding houses this week. | ஏங்க! இந்த வாரத்துல ரெண்டு கல்யாண வீடு இருக்கு. |
Translate provided English text into colloquial Tamil | What's all there? | என்னனைக்கு எல்லாம் இருக்கு? |
Translate provided English text into colloquial Tamil | Friday for Vasu uncle's boy in our apartment (apartment). Sunday for your aunt's son Saravanan. | வெள்ளிக்கிழமை நம்ம அபார்ட்மெண்ட்ல (அடுக்கு மாடி குடியிருப்பு) உள்ள வாசு மாமா பையனுக்கு. ஞாயிற்றுக்கிழமை உங்க பெரியம்மா பையன் சரவணனுக்கு. |
Translate provided English text into colloquial Tamil | I can't take leave on Friday. Go with your friend Nalini in our apartment. We'll go to town on Sunday. | வெள்ளிக்கிழமை எனக்கு லீவ் (விடுமுறை) போட முடியாது. நம்ம அபார்ட்மெண்ட்ல உள்ள உன் ஃப்ரெண்ட் (தோழி) நளினி கூட போ. ஞாயிற்றுக்கிழமை நாம ஊருக்கு போகலாம். |
Translate provided English text into colloquial Tamil | Ok ok. I ask if Nalini is leaving. | சரிங்க. நளினி போறாளான்னு கேக்குறேன். |
Translate provided English text into colloquial Tamil | Okay. Do you know where the hall is? | சரி. மண்டபம் இருக்குற இடம் உனக்கு தெரியுமா? |
Translate provided English text into colloquial Tamil | I don't know. I will call and ask if Nalini knows. | தெரியாதுங்க. நளினிக்கு தெரியுமான்னு ஃபோன் பண்ணி கேக்குறேன். |
Translate provided English text into colloquial Tamil | Hello Nalini. | ஹலோ நளினி. |
Translate provided English text into colloquial Tamil | Hi Malini! Tell me. | ஹாய் மாலினி! சொல்லு. |
Translate provided English text into colloquial Tamil | Are you going to Vasu uncle's house wedding on Friday? | வெள்ளிக்கிழமை வாசு மாமா வீட்டு கல்யாணத்துக்கு போறியா? |
Translate provided English text into colloquial Tamil | Yes, I will definitely go. | ஆமா, கண்டிப்பா போவேன். |
Translate provided English text into colloquial Tamil | Do you know the wedding hall? | கல்யாணம் நடக்குற மண்டபம் உனக்கு தெரியுமா? |
Translate provided English text into colloquial Tamil | Yes, I know. Why do you ask? | ஆமா, தெரியும். ஏன் கேக்குற? |
Translate provided English text into colloquial Tamil | Suresh cannot take leave from office. So (so) I am the only one from my house who attends the wedding. I don't even know where the hall is. That's why I thought I'd come with you. | சுரேஷ்-க்கு ஆஃபிஸ்ல (அலுவலகம்) லீவ் போட முடியாது. சோ (அதனால) எங்க வீட்டுல இருந்து நான் மட்டும் தான் கல்யாணத்தை அட்டென்ட் (கலந்துக்க) பண்ணுறேன். எனக்கு மண்டபம் இருக்குற இடமும் தெரியாது. அதுனால நான் உங்க கூட வரலாமுன்னு நினைச்சேன். |
Translate provided English text into colloquial Tamil | That's no problem. You can come freely. Well, what time shall we leave? | அது பிரச்சனையே இல்ல. நீ தாராளமா வரலாம். சரி, எத்தன மணிக்கு புறப்படலாம்? |
Translate provided English text into colloquial Tamil | The muhurtham is between 10.30 and 11.30. How long does it take to get to the car hall? | முகூர்த்தம் பத்தரைல இருந்து பதினொன்னரை மணிக்குள்ள. கார்ல மண்டபத்துக்கு போக எவ்வளவு நேரம் ஆகும்? |
Translate provided English text into colloquial Tamil | Forty or fifty minutes. | நாப்பது இல்ல அம்பது நிமிஷம் ஆகும். |
Translate provided English text into colloquial Tamil | So it would be better if we left at half past nine. | அப்போ நாம ஒம்பதரை மணிக்கு புறப்பட்டு போனா சரியா இருக்கும். |
Translate provided English text into colloquial Tamil | Okay. I'll make a phone call before I leave. | சரி. கிளம்புறதுக்கு முன்னாடி நான் கால் (தொலைபேசி அழைப்பு) பண்ணுறேன். |
Translate provided English text into colloquial Tamil | Nalini says yes. | ஏங்க, நளினி சரி-ன்னு சொல்லீட்டா. |
Translate provided English text into colloquial Tamil | It was so good! | ரொம்ப நல்லதா போச்சு! |
Translate provided English text into colloquial Tamil | So you have to buy gifts for both marriages? You have to go shopping tomorrow. | அப்போ ரெண்டு கல்யாணத்துக்கும் கிஃப்ட் (பரிசு) வாங்கணும்ல? அதுக்கு நாளைக்கு கட்டாயமா ஷாப்பிங் (கடை) போகணும். |
Translate provided English text into colloquial Tamil | Okay. First of all, pour some sambar. | சரி. மொதல கொஞ்சம் சாம்பார் ஊத்து. |
Translate provided English text into colloquial Tamil | Is there a sambar? | சாம்பார் காராமா இருக்கா? |
Translate provided English text into colloquial Tamil | No, it's very good. Sambar tastes special when you put drumsticks. | இல்லயே, ரொம்ப நல்லா இருக்கு. முருங்கக்காய் போட்டாலே சாம்பார் தனி ருசி தான். |
Translate provided English text into colloquial Tamil | Do you want one or two idlis? | தோச வேணும்னா ஒண்ணு ஊத்தவா, இல்ல ரெண்டு இட்லி வைக்கவா? |
Translate provided English text into colloquial Tamil | Keep idli. If I eat like this, I feel like I'll be over 100 kilos. | இட்லியே வை. இப்படியே சாப்புட்டா நான் நூறு கிலோ தாண்டிருவேன் போல இருக்கு. |
Translate provided English text into colloquial Tamil | It's okay, eat it. If you go for a walk tomorrow, everything will be fine. | பரவாயில்ல, சாப்புடுங்க. நாளைக்கு வாக்கிங் (நடை பயிற்சி) போனா எல்லாமே சரியாயிரும். |
Translate provided English text into colloquial Tamil | Good morning Grandma. | குட் மார்னிங் (காலை வணக்கம்) பாட்டி. |
Translate provided English text into colloquial Tamil | Good morning Kavita. | குட் மார்னிங் கவிதா. |
Translate provided English text into colloquial Tamil | Where are you going, Grandma? | எங்க போயிட்டு வரீங்க பாட்டி? |
Translate provided English text into colloquial Tamil | I'm going for a walk. | நான் வாக்கிங் (நடைப் பயிற்சி) போயிட்டு வரேன். |
Translate provided English text into colloquial Tamil | Why do you go for a walk in the morning? | நீங்க ஏன் காலை-ல வாக்கிங் போரீங்க பாட்டி? |
Translate provided English text into colloquial Tamil | Walking in the morning and exercising is good for the body. | காலைல நடப்பதும், எக்சர்சைஸ் (உடற் பயிற்சி) செய்வதும் உடம்புக்கு நல்லது. |
Translate provided English text into colloquial Tamil | What's the good of walking, grandmother? | நடக்கிறதால வேற என்ன நல்லது இருக்கு, பாட்டி? |
Translate provided English text into colloquial Tamil | If sunlight hits the body, we will get the necessary vitamin D for our body. | சன் லைட் (சூரிய ஒளி) உடம்புல பட்டா, நம்ம உடம்புக்குத் தேவையான விட்டமின் டி கிடைக்கும். |
Translate provided English text into colloquial Tamil | After? | அப்புறம்? |
Translate provided English text into colloquial Tamil | Sunlight is good for bone strength, skin and health. | எலும்போட ஸ்ட்ரென்த்துக்கும் (வலிமை), தோலுக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் சூரிய ஒளி நல்லது. |
Translate provided English text into colloquial Tamil | Oh! There's so much in the sunlight! | ஓ! சன் லைட்ல இவ்வளவு விஷயம் இருக்கா! |
Translate provided English text into colloquial Tamil | That's not all. We can be active throughout the day as the blood circulation of the body becomes normal. | அது மட்டுமில்ல. உடம்பின் இரத்த ஓட்டம் நார்மல் ஆகிறதால நாள் முழுவதும் நாம ஆக்டிவ் ஆ இருக்கலாம்.. |
Translate provided English text into colloquial Tamil | Is that why you are always active, Grandma? | அதனாலதான் நீங்க எப்போதும் ஆக்டிவ் ஆ இருக்கீங்களா பாட்டி? |
Translate provided English text into colloquial Tamil | You're right. | நீ சொல்றது சரி. |
Translate provided English text into colloquial Tamil | How do you follow this for so long, Grandma? | நீங்க எப்படி இத ரொம்ப நாளா ஃபாலோ (பின் பற்று ) பண்ணுறீங்க பாட்டி? |
Translate provided English text into colloquial Tamil | Physical health is important, isn't it? That's why I'm following. | உடல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியம், இல்லயா? அதனாலதான் நான் ஃபாலோ பண்ணுறேன். |
Translate provided English text into colloquial Tamil | Can I go with you from tomorrow? | நாளைல இருந்து நானும் உங்ககூட வால்கிங் கு வரட்டுமா? |
Translate provided English text into colloquial Tamil | Of course, you can come freely. | நிச்சயமா, தாராளமா வரலாம். |
Translate provided English text into colloquial Tamil | Very happy (very happy) grandma. | வெரி ஹேப்பி (ரொம்ப சந்தோஷம்) பாட்டி. |
Translate provided English text into colloquial Tamil | Grandfather! Grandfather! Where are you going? | தாத்தா! தாத்தா! எங்க போறீங்க? |
Translate provided English text into colloquial Tamil | I'm going to go for a walk in the park. | பார்க்ல (பூங்கா) போய் நடக்க போறேன். |
Translate provided English text into colloquial Tamil | Can I go with you, Grandpa? | நானும் உங்க கூட வரட்டுமா தாத்தா? |
Translate provided English text into colloquial Tamil | Why? | எதுக்கு? |
Translate provided English text into colloquial Tamil | I'll be playing when you walk in the park. | நீங்க பார்க்ல நடக்கும்போது நான் விளையாடிட்டு இருப்பேன். |
Subsets and Splits