text
stringlengths 8
604k
|
---|
சீரடி சாயி பாபாவின் பதினோறு சத்தியங்கள் ஷீரடி மண்ணில் யார் தனது காலடியைப் பதிப்பிக்கின்றாரோ அவரது துன்பங்களுக்கு இங்கே முடிவு காணப்படுகிறது இழிந்த துயரத்தால் பாதிக்கப்பட்டவன் எனது சமாதியின் படிகளில் ஏறிய அடுத்த நொடிப் பொழுதிலேயே சந்தோஷமும் உற்சாகமும் அடைந்தவனாகி விடுகிறான் எனது உடல் இம்மண்ணை விட்டு அகன்றாலும் எனது சுறுசுறுப்பும் உறுதியான ஆற்றலும் எப்போதும் போலவே இயங்கிக் கொண்டிருக்கும் எனது சமாதியை வணங்கும் பக்தர்களின் தேவைகள் நீங்கும் அவர்கள் ஆசிர்வதிக்கப்படுவர் நான் சமாதிக்குள்ளிருந்தாலும் எனது பக்தர்களை எப்போதும் உறுதியுடன் காத்து வருவேன் சமாதிக்குள் இருந்தும் நான் பக்தர்களிடம் பேசுவேன் அவர்களுக்கு நல்வழியைக் காண்பிப்பேன் என்னிடம் வந்து சேர்பவர்கள் என்னைச் சரணடைபவர்கள் என்னைத் தஞ்சம் அடைபவர்கள் ஆகியோருக்கு நான் என்றென்றும் உதவியும் வழிகாட்டுதலும் செய்துவருவேன் நீ என்னைப் பக்திப் பரவசத்துடன் பார்த்தால் நானும் உனக்குக் கருணை காட்டுவேன் உன்னுடைய சுமைகளை நீ என்னை நோக்கி எறிந்தால் அதனைத் தாங்கிக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன் நீ என்னிடம் உதவியும் அறிவுரையும் கேட்டு வணங்கினால் நான் அதனை அள்ளி வழங்குவேன் உனது இல்லத்தில் என்னை வைத்து வணங்கினாலும் உனக்கு வேண்டியதை நான் தருவேன் |
லாரி பேக்கர் மார்ச் ஏப்ரல் ஒரு புகழ் ஈட்டிய இந்தியக் கட்டிடச் சிற்பி கட்டடக் கலைஞர் இந்தியாவில் கட்டிட வடிவமைப்பாளாராக பணியாற்றினார் உள்ளூர் பொருட்களைக் கொண்டு உள்ளூர் சூழல்களுக்கு ஏற்ப செலவு குறைவான வீடுகளைக் கட்டும் முறையை உருவாக்கினார் இவ்வீடுகளின் உள்வெளியையும் இடத்தையும் தனித்தன்மையுடன் திறம்பட வகுத்துப் பயன்படுத்தினார் அது பேக்கர் பாணி வீடு என்று சொல்லபப்டுகிறது கேரளாவில் லாரி பேக்கரை ஏழைகளின் பெருந்தச்சன் என்று பெருமையுடன் அழைக்கின்றார்கள் மேற்கோள்கள் இன்றைய இந்திய மக்களின் தேவைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் அந்த தேவைகளை ஈடு செய்ய வேண்டும் எனில் பிரம்மாண்டமாக சிந்திப்பதை நிறுத்திவிட்டு சிறியதே அழகு எனும் அடிப்படையை நோக்கி நகர வேண்டும் நவீன இந்திய கட்டிடக்கலை என்று தனியாக ஒன்று உண்டா என்றால் இல்லை சீனா ஜெர்மனி பெரு மற்றும் இந்திய நாட்டில் வடிவமைக்கப்பட்ட கட்டிடங்களை ஒரு பாலைவனத்தில் வைத்தால் அவைகளுக்கு இடையே ஏதேனும் வேறுபாடி உணர இயலுமா என்ன இவைகளில் எது இந்தியாவிலிருந்து வந்தது எது பெருவிலிருந்து வந்தது என பிரித்தறிய முடியுமா ஆனால் இடு பொருட்கள் வேறானவை வேறு மாதிரியான வானிலை கொண்டவை வாழ்க்கை முறையும் வேறானவை நான் பனி செய்ய தொடங்குவதற்கு முன் அவர்களுடைய கட்டிடம் எழபோகும் மனையை காண வேண்டும் அது எத்தகைய நிலம் என்பதை அறிய வேண்டும் என்பது மட்டுமல்ல மேட்டு பகுதி சரிவு போன்றவை அங்கு என்ன மரங்கள் இருக்கின்றன என பார்க்க வேண்டும் மேலும் அவர்கள் நல்ல பார்வை கோணங்கள் வேண்டுகிறார்களா தோட்டம் போடும் திட்டமுண்டா பிராணிகள் வளர்ப்பதுண்டா தண்ணீர் வசதி எப்படி காற்றின் திசை மற்றும் மழையின் திசை எது என பலவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும் எல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் தான் இந்த கட்டிடத்தை பயன்படுத்த போகிறார்கள் நான் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எல்லோரையும் மண் வீடு கட்டிகொள்ள வேண்டும் என நான் கோரவில்லை எல்லோரும் வீடு கட்டிகொள்ள வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன் அந்த இலக்கை மண்ணை கொண்டு மட்டுமே அடைய முடியும் கிராமங்களில் நாம் காணும் இல்லங்கள் குறைந்தது எழுபது என்பது வருடங்கள் பழமையானவை மண் எளிதாக கிடைக்க கூடியது அதிக ஆற்றல் தேவைபடாதது இரும்பையும் கான்க்ரீடையும் கொண்டு தான் நாம் அத்தனை வீடுகளையும் கட்ட போகிறோம் என்றால் அது நம்மால் முடியவே முடியாது இருபது முப்பது மில்லியன் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றால் அது மண்ணால் மட்டுமே முடியும் கட்டிடவியல் என்பது எவை நல்லவையோ எவை பயனுள்ளதோ எவை நடைமுறைக்கு உகந்ததோ அவைகளை பற்றிய விதிமுறைகளின் தொகுப்பு தான் இவ்வகையில் இசைக்கு அது மிகவும் நெருக்கமானதும் கூட என கருதினார் அழகு என்பது உண்மையை பொருத்த ஒன்று தான் கல் கல்லை போல் இருக்க வேண்டும் செங்கல் அதைப்போல் இருக்க வேண்டும் நாம் பொருட்களை அதன் இயல்புக்கு ஏற்ப பயன்படுத்தினால் பிரம்பு மூங்கில் செங்கல் கல் என எது பயன்படுத்தினாலும் அதுவே அழகாக இருக்கும் உயர் குடி மத்திய வர்க்கம் ஏழை பழங்குடிகள் மீனவர்கள் என வெவ்வேறு வர்க்கத்தினருக்காக நான் கட்டிடங்கள் கட்டுவதில்லை நான் ஒரு மேத்யுவிற்கும் ஒரு பாஸ்கரனுக்கும் ஒரு முணீருக்கும் ஒரு சங்கரனுக்கும் தான் கட்டிடம் கட்டுகிறேன் இன்னும் எத்தனையோ மக்கள் கட்டிடம் என்று அழைக்கப்படும் ஒன்றுக்கு அருகில் கூட இல்லை என்பதை எண்ணி நாம் வெட்கப்பட வேண்டாமா நாம் கட்டிடகலை நிபுணர்களாக உயர்ந்த தொழில்நுட்ப பயிற்சி பெற்றவர்களாக இந்த பிரம்மாண்ட தேவையை போக்க மிகக் குறைவாகவே செயல்படுகிறோம் கட்டிடத்தை விட்டுவிடுங்கள் சிறிய குடிசை கூட இல்லாமல் இருபது மில்லியன் குடும்பங்கள் தவித்து கொண்டிருக்கிறார்கள் நாமும் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதித்து கொண்டிருக்கிறோம் என்பது வெட்கக் கேடானது சான்றுகள் பகுப்பு நபர்கள் பகுப்பு இந்திய கட்டடவியலாளர்கள் |
பாவ்லோ பிரையர் பிறப்பு செப்டம்பர் இறப்பு மே ஒரு பிரேசிலியக் கல்வியாளர் மெய்யியலாளர் கற்பிக்கும் கலையில் நுண்ணாய்வுத் திறனுடன் பல புத்தகங்கள் எழுதியுள்ளர் ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கானக் கல்வி முறை என்கிற புத்தகம் அவரது சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது இப்புத்தகமே ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை இயக்கத்தின் அடித்தளமாகவும் அமைந்தது மேற்கோள்கள் மிருகங்கள் உலகில் உள்ளன மனிதனோ உலகில் மட்டுமல்லாமல் உலகத்தோடும் உள்ளான் விமர்சனப்பூர்வமானப் பார்வையின் விளைவாக மனிதன் எல்லாவற்றையும் நேற்று இன்று நாளை என்கிற முப்பரிமாணக் காலத்தில் வைத்துப் பார்க்கிறான் செயலாக அமையாத அதாவது உலகை மாற்றியமைக்காத சொற்களைப் பேசுவதும் மௌனம்தான் உலகை மாற்றி அமைப்பது என்பது ஒரு சில மனிதர்களின் தனி உரிமையல்ல ஒட்டுமொத்தச் சமூக உரிமை ஒருவருக்கான சொல்லை இன்னொருவர் தேர்வு செய்வதென்பதோ பேசுவதென்பதோ சாத்தியமல்ல வெளி இணைப்புகள் சான்றுகள் பகுப்பு நபர்கள் பகுப்பு கல்வியாளர்கள் |
முத்துலட்சுமி ரெட்டி சூலை சூலை இந்தியாவில் ஒரு முன்னோடிப் பெண் மருத்துவர் சமூகப் போராளி தமிழார்வலர் மேற்கோள்கள் தேவதாசி முறை புனிதமானது என்றால் தேவ தாசி முறை ஆண்டவனின் திருப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டது என்றால் அந்தத் தொழிலை பிற்படுத்தப்பட்ட எங்கள் குலத்துப் பெண்கள் மட்டும்தான் செய்ய வேண்டுமா உங்கள் உயர்சாதிக்குடும்பத்தில் இருந்து எந்தப் பெண்ணையாவது தேவதாசி ஆக்குங்களேன் சான்றுகள் பகுப்பு நபர்கள் பகுப்பு தமிழர்கள் |
வலது நடக்க முடியாதவற்றை நீக்கிவிட்டுப் பார்த்தால் எஞ்சியிருப்பது எவ்வளவு நம்பமுடியாததாக இருந்தாலும் அதுவே உண்மையில் நடந்திருக்க வேண்டும் ஷெர்லக் ஹோம்ஸ் இசுக்காட்லாந்திய மருத்துவர் மற்றும் எழுத்தாளர் ஆர்தர் கொனன் டாயிலால் உருவாக்கப்பட்ட ஒரு துப்பறிவாளர் கதாபாத்திரம் இலண்டன் நகரில் வாழ்ந்த ஹோம்ஸ் ஒரு தனியார் துப்பறிவாளர் தனது கூர்மையான தருக்க காரணமாய்தல் வேடமணியும் திறமை தடயவியல் திறன் ஆகியவற்றைக் கொண்டு சிக்கலான குற்றங்களைப் புலனாய்வதில் வல்லவர் மேற்கோள்கள் நடக்க முடியாதவற்றை நீக்கிவிட்டுப் பார்த்தால் எஞ்சியிருப்பது எவ்வளவு நம்பமுடியாததாக இருந்தாலும் அதுவே உண்மையில் நடந்திருக்க வேண்டும் ஒரு துளி தண்ணீரிலிருந்து ஒரு தருக்கவியலாளர் அது அட்லாண்டிக்கிலிருந்து வந்ததா நயாகராவிலிருந்து வந்ததா என்று துப்பறிய முடியும் இதற்கு அவர் அவ்விடங்களுக்கு போயிருக்க வேண்டுமென்று அவசியமே இல்லை கடந்த மூன்று நாட்களில் எதுவுமே நடக்கவில்லை அதுதான் இம்மூன்று நாட்களில் நடந்த ஒரே ஒரு முக்கிய நிகழ்வு இவ்வுலகில் எல்லாம் ஒன்றோடொன்று சார்புடையது சான்றுகள் பகுப்பு கதாபாத்திரங்கள் |
நச்சினார்க்கினியர் தமிழ் உரையாசிரியர்களுள் முக்கியமான ஒருவர் தொல்காப்பியத்துக்கு எழுதப்பட்ட உரைகளில் நச்சினார்க்கினியரின் உரை முக்கியமானதாகும் இவர் தொல்காப்பியத்தைத் தவிர்த்துக் கலித்தொகை குறுந்தொகையில் ஒரு பகுதி பத்துப்பாட்டு சீவக சிந்தாமணி என்பவற்றுக்கும் உரைகள் எழுதியுள்ளார் கூறியவை கடவுள் எங்கும் நிறைந்திருப்பதுபோல எல்லா எழுத்துக்களிலும் அகரம் உண்டு தமிழின் முதல் எழுத்தான அகரத்தை பற்றி குறிப்பிடுகையில் கலைக்களஞ்சியம் பகுப்பு நபர்கள் |
யூலியசு சீசர் ஜூலியஸ் சீசர் ஜூலை அல்லது ஜூலை கி மு மார்ச் கி மு ரோமானிய இராணுவ மற்றும் அரசியற் தலைவர் உலக வரலாற்றின் குறிப்பிடத்தக்க தலைவர்களுள் ஒருவராவார் மேற்கோள்கள் நான் வந்தேன் பார்த்தேன் வென்றேன் மனிதர்கள் தாங்கள் விரும்புவதையே நம்புகிறார்கள் பகுப்பு நபர்கள் |
ஜிம் மோரிசன் டிசம்பர் ஜூலை ஒரு அமெரிக்க பாடகர் பாடலாசிரியர் கவிஞர் எழுத்தாளர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளராவார் மேற்கோள்கள் நாம் வாழ்கிறோம் நாம் மரிக்கிறோம் மரணம் அதை முடித்து வைப்பதில்லை வெளியிணைப்புக்கள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு பிறப்புக்கள் பகுப்பு இறப்புக்கள் பகுப்பு எழுத்தாளர்கள் பகுப்பு அமெரிக்கர்கள் பகுப்பு கவிஞர்கள் பகுப்பு பாடலாசிரியர்கள் பகுப்பு பாடகர்கள் பகுப்பு தயாரிப்பாளர்கள் |
எம் பக்தவத்சலம் அக்டோபர் ஜனவரி தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் இந்திய நாட்டின் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார் விடுதலைப் போராட்டக் காலங்களில் அமராவதி சிறையில் அடைக்கப்பட்டு எண்ணற்ற இன்னல்களை அனுபவித்தவர் ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின் தமது நிருவாகத் திறனை திறம்பட வெளிப்படுத்தியவர் மேற்கோள்கள் எனது தமிழாசிரியர் உ வே சாமிநாத ஐயர் ஆங்கில ஆசிரியர் ஹென்றி ஸ்டோன் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் எனது தர்க்கப் பேராசிரியர் ஐரோப்பிய ஐ சி எஸ் அதிகாரிகள் நிறைய பேர் என்னிடம் பணியாற்றியிருக் கிறார்கள் ஆனால் நான் ஒருபோதும் என்ன செய்யலாம் என்கிற முடிவை அவர்களிடம் கேட்டதில்லை கோயிலில் இருக்கும் தங்கக் குடங்களை நாட்டுக்குத் தரக் கூடாதா அரசுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இவ்வாறு கேட்டார் நானேதான் நில உச்சவரம்புச் சட்டத்திலிருந்து கோயில்களுக்கு விலக்களித்தேன் நானேதான் கோயில்களுக்கு நிலச் சொத்து சரிவராது என்றும் சொல்கிறேன் வடக்கத்தியர் எல்லோரும் ஆரியர்களா அல்லது பிராமணர்கள் அல்லாத எல்லோரும் திராவிடர்களா இனங்களும் பண்பாடுகளும் மதங்களும் சாதி களும்கூட கலந்து நெருக்கி நெய்த துணியாக இந்தியா உருவாகியுள்ளது இதன் இழைகளைப் பிரித்துக் குலைக்க வேண்டாம் புஷ்கரம் பிருந்தாவனத்தில் உள்ள கோயில்களும் வழிபாடும் காஞ்சிபுரத்தில் உள்ளதுபோல் இருக்கும் ராஜஸ்தானில் நம்மைப் போன்றே பொங்கல் கொண்டாடுவார்கள் முற்கால வரலாற்றில் இந்தப் பிரிவுகள் இருந்திருக்கலாம் பின்னர் எல்லாம் ஒன்றாகிப்போனதும் வரலாறுதானே பக்தவத்சலம் பற்றி பிறரது மேற்கோள்கள் பொதுவாழ்விலும் இருந்துகொண்டு தூய்மையாகவும் இருக்க முடியும் என்னும் உண்மையை வாழ்ந்து காட்டுபவர் பக்தவத்சலம் முன்னாள் மத்திய அமைச்சர் ஓ வி அளகேசன் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மனிதர் ஆனால் விமர்சனம் அவரை வருத்தாது முன்னாள் கேரள ஆளுநர் பா ராமச்சந்திரன் புற இணைப்புகள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு தமிழர்கள்பகுப்பு தமிழ் நாட்டு முதலமைச்சர்கள் பகுப்பு பிறப்புக்கள் பகுப்பு இறப்புக்கள் |
தீபச்செல்வன் பிறப்பு அக்டோபர் ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளரும் சுயாதீன ஊடகவியலாளருமாவார் ஈழத்தின் வடபகுதியான கிளிநொச்சி இரத்தினபுரத்தைச் சேர்ந்தவர் ஈழத்தின் நான்காம் கட்டத்தில் இடம் பெற்ற போர் பற்றிய முக்கியமான கவிதைகளை எழுதியதுடன் தொடர்ந்தும் ஈழநிலத்தின் வாழ்வை தன் கவிதைகளில் பதிவுசெய்து வருகிறார் மிக இளம் வயதிலேயே பரவலாக அறியப்பட்ட இவர் சமகாலத்தின் மிக வலிமையுடைய குரலாக கருதப்படுபவர் கவிதைகளிலும் கட்டுரைகளிலும் மக்களின் வாழ்வை அழுத்தமாகப் பதிவு செய்வதுடன் நேர்காணல்களின் ஊடாகவும் ஈழத்து மக்களின் அரசியலை ஈழப்போராட்டத்தை வலிமையான தனது குரலில் பதிவு செய்திருக்கின்றார் மேற்கோள்கள் மக்களின் தோல்விகள்தான் போராட்டங்களை உருவாக்குகின்றன கல்லறைகளைத் தடயங்களை அழித்தாலும் எமது மக்களின் நினைவுகளை அழித்துவிட முடியாது வடக்கு கிழக்கிலிருந்து நிலங்களைச் சுருட்டவும் தமிழர்களின் உரிமையைப் பறிக்கவும் அரசு நிகழ்ச்சி நிரல்களை வடிவமைத்திருக்கையில் எமது மக்கள் மீண்டும் போராட வேண்டிய நிலமைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது பகுப்பு நபர்கள் |
பிரெட்ரிக் ஜேம்சன் பிறப்பு ஏப்பிரல் அமெரிக்காவைச் சேர்ந்த இலக்கியத் திறனாய்வாளர் மற்றும் மார்க்சிய அரசியல் கோட்பாட்டாளர் ஆவார் தற்காலக் கலாச்சாரச் சூழல்களைப் பற்றிய ஆய்வுகளுக்காகப் புகழ் பெற்றவர் இவர் மேற்கோள்கள் ஒப்பீட்டளவில் நாம் இப்போது கொண்டிருப்பது அடையாளமற்ற ஆனால் அமைப்புரீதியான கலாச்சாரமாகும் பின்நவீனத்துவம் குறித்துப் பேசும்போது செவ்வியல் நவீனத்துவம் என்றால் என்ன உயர் நவீனத்துவம் என்றால் என்ன என்ற கேள்விகளையும் கேட்டுக்கொள்ள வேண்டியது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும் நவீனத்துவத்துக்கும் பின்நவீனத்துவத்துக்கும் இருக்கும் மிகப் பெரிய வித்தியாசம் என்னவென்றால் செயல்போக்கில் நவீனத்துவத்தை முற்றுப்பெற வைத்த ஒரு நிலைமையாகும் அது அதாவது பழைய மிச்சசொச்சங்கள் எல்லாம் எடுத்தெறியப்பட்ட நிலைமையாகும் நவீனத்துவம் கலையின் சுயாதீனத்தைக் கோரியது மேதமை கோரிய கருத்தியலை முன்வைத்தது அரசியல் பற்றிய எனது உணர்தலானது பழைய மாதிரியைக் கொண்டிருப்பதாகத் தோன்றும் குழுக்களுக்கிடையில் அடிப்படையான ஒன்றுபடலுக்கான மறுஆக்கம் நிகழாமல் இறுதியாக ஒன்றும் நடக்கப் போவதில்லை எனது சொந்த உணர்தல் மிகுந்த அவநம்பிக்கை வாய்ந்ததாக இருக்கலாம் ஆனால் அரசியல் ரீதியில் ஒன்றுபடுதல் எனும் அம்சத்தை வைத்துப் பார்க்கிறபோது கலாச்சாரம் என்பது அரசியலுக்கான மாற்றுவழி அல்ல மாறாக கலாச்சாரம் அரசியலில் குறுக்கீடு செய்ய வேண்டும் பல்வேறு சிறு குழுக்கள் தமது தனிப்பட்ட வித்தியாசங்களுக்காக அதிகாரம் வாய்ந்த கலாச்சார பிம்பங்களை உருவாக்கிக் கொள்வார்களானால் அப்புறம் பின்னால் ஒன்றுபடுதல் என்பதற்கான சாத்தியமே இல்லாது போய்விடும் அதிகமாக கலாச்சார அரசியல் பேசுவதை அவநம்பிக்கையுடன்தான் நான் பார்க்கிறேன் நான் சொல்லும் இந்த ஆளும் வர்க்கம் என்பதை அரசு என்று சொல்லாமல் இருப்பது நல்லது இனி இதை கார்ப்பரேட் என்று சொல்வது பொருத்தமான வார்த்தையாக இருக்கும் ஆனால் இந்த கார்ப்பரேட் என்பது பழைய அர்த்தத்தில் ஆளும் வர்க்கம் என்று சொல்ல முடியாது இதன் காரணம் தனிநபர் பிரதிநிதித்துவத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்தான் இவ்வாறுதான் குழுக்களுக்கு இடையில் ஒற்றுமை என்பதை உருவாக்கத் தொடங்க வேண்டும் பகுப்பு நபர்கள்பகுப்பு மார்க்சியர்கள் |
இதாலோ கால்வினோ இதாலா கால்வினோ அக்டோபர் செப்டம்பர் ஓர் இத்தாலியப் பத்திரிக்கையாளர் சிறுகதை எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியர் மேற்கோள்கள் இலக்கியம் மாற்ற முடியாத இயற்கையின் துணையாகவே பெரிதும் இருந்து வந்திருக்கிறது உலகம் மற்றும் அதனை நாம் நோக்கும் விதத்தின் விமர்சகனாக மாறும்போதே அதன் உண்மையான விழுமியம் எழுகிறது ஒரு நாடு இருந்தது அந்நாட்டில் எல்லோருமே திருடர்கள் அந்த நாட்டின் ஒரே நல்லவனும் விரைவில் இறந்து போனான் பட்டினியால் என்னுடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி உண்மையான ஒரு வார்த்தையைக் கூட எவரும் பெற்றுவிட முடியாது சான்றுகள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு எழுத்தாளர்கள் பகுப்பு இத்தாலியர்கள் பகுப்பு பிறப்புக்கள் பகுப்பு இறப்புக்கள் |
வலது சத்தியேந்திர நாத் போசு சத்தியேந்திர நாத் போசு ஜனவரி பெப்ரவரி மேற்கு வங்காளத்தில் பிறந்த இந்திய இயற்பியலாளர் இவர் குவாண்டம் இயற்பியல் துறையில் மேற்கொண்ட ஆய்வுகளினால் புகழ்பெற்றார் மேற்கோள்கள் உனக்கு ஐயத்திற்கிடமின்றி ஏற்புடையதாக இல்லாத வரையில் எந்த ஒரு கருத்தையும் ஒப்புக்கொள்ளாதே புற இணைப்புகள் பகுப்பு நபர்கள் |
வடிவேலு தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார் மேற்கோள்கள் திரைப்படங்களில் கீழ்க்காண்பவை இவரது புகழ்பெற்ற நகைச்சுவை வசனங்களில் சில சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்பு நபர்கள் பகுப்பு நகைச்சுவை |
ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி தெலுங்கு அல்லது ஜே கிருஷ்ணமூர்த்தி மே பெப்ரவரி இந்திய மெய்யறிவாளர்களுள் முக்கியமானவர் அச்சமில்லாமல் அறிவுறுத்தல் இல்லாமல் மனதில் மரண மறுமலர்ச்சி வேண்டும் அதிகாரம் செலுத்தியே தலைவர்கள் சீடர்களை சீர் குலைக்கிறார் இங்கு நல்லது கெட்டது எல்லாமே மிகைப்படுத்தி சொல்லப்படுகிறது உண்மை என்பது உயிரோட்டமுள்ளது இயக்கமுள்ளது நிற்பதில்லை உள்ளார்ந்த அச்சம் ஒரு முகமூடியில் தன்னை மறைத்துகொள்கிறது எதைக் காதல் என்று கருதிக் கொள்கிறோமோ அது வெறும் கிளர்ச்சிதான் ஒப்பிடுவதால் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டு மனோ சக்திவீனாகிறது காயப்படுவோம் என்ற அச்சத்தில் சுவர் எழும்பிக் கொள்கிறார்கள் துறவிகள் அர்த்தமற்ற பல செயல்களை எளிமை என்பது அபத்தமானது பல நுற்றாண்டுகளாக மனிதனின் மனதில் வன்முறை வளர்கிறது வற்புறுத்தி திணிக்கப்பட்ட ஒழுங்கினால் ஒழுங்கீனமே வளரும் விவாதிப்பதும் எழதுவதும் மனக் கூர்மையையும் தெளிவையும் தருகிறது வேண்டும் என்ற வேண்டுவதில் இருந்து நாம் விடுபட வேண்டும் பகுப்பு பிறப்புக்கள் பகுப்பு இறப்புக்கள் பகுப்பு மெய்யியலாளர்கள் |
நிக்கோலசு மதுரோ மோரோசு எசுப்பானிய ஒலிப்பு பிறப்பு நவம்பர் வெனிசுவேலாவின் அரசியல்வாதியும் தற்போதைய வெனிசுவேலா அரசுத்தலைவரும் ஆவார் மேற்கோள்கள் கச்சா எண்ணெய்யை அமெரிக்கா அரசியல் ஆயுதமாக பயன்படுத்துகிறது |
நெப்போலியன் பொனபார்ட் ஆகஸ்ட் மே அல்லது முதலாம் நெப்போலியன் பிரான்ஸ் நாட்டின் படைத் தலைவனாகவும் அரசியல் தலைவனாகவும் இருந்தவன் தற்கால ஐரோப்பிய வரலாற்றில் இவனுடைய தாக்கம் குறிப்பிடத்தக்கது மேற்கோள்கள் நான் மட்டும் எனக்கு மீண்டும் வெண்கல பேரை அழைத்து சாதாரண ஆண்கள் இரும்பு ஆண்கள் கைது செய்யப்பட்டனர் இறந்தார் அச்சம் தன்னை எதிரி வென்றுவிடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயமாய்த் தோல்வியுறுவான் அவதூறு ஒரு பாவமும் அறியாதவர்களைக் கூடத் தைரியத்தை இழக்கும்படி செய்யும் சில அவதூறுகளும் இருக்கின்றன அற்ப விஷயம் மனிதர்கள் அற்ப விஷயங்களாலேயே இழுத்துச் செல்லப்படுகின்றனர் அன்பு உண்மையான மனிதன் யாரையும் துவேஷிக்க மாட்டான் அன்னை குழந்தையின் எதிர்காலக் கதி எப்பொழுதும் தாயில் வேலையால் அமைகின்றது ஃபிரான்ஸ் நல்ல தாய்மார்களைப் பெற்றிருந்தால் அவள் நல்ல பிள்ளைாளையும் அடைவாள் ஆற்றல் பொதுவாகத் தலைசிறந்த அறிவு என்னவென்றால் உறுதி யாகத் தீர்மானித்தலே போரிலேகூடப் புற ஆற்றலினும் மன ஆற்றல் மூன்று மடங்காகும் இசை கலைகள் யாவற்றிலும் உணர்ச்சிகளை மிக அதிகமாய்ப் பாதிக்கக்கூடியது இசைதான் சட்டம் இயற்றுபவன் அதற்கு முதன்மையான ஆதரவு கொடுக்க வேண்டும் இயலாமை இயலாது இது நல்ல ஃபிரெஞ்சு மொழி அன்று மடயர்களுடைய அகராதியில்தான் இயலாது என்ற சொல்லைக் காண முடியும் எழுதுகோல் உலகத்தில் இரண்டே சக்திகள் இருக்கின்றன அவை வாளும் பேனாவும் இறுதியில் பின்னதே முந்தியதை வென்று விடுகின்றது கல்வி பொதுக் கல்வியே அரசாங்கத்தின் முதல் இலட்சியமாயிருக்க வேண்டும் கற்பனை கற்பனையே உலகை ஆள்கின்றது சூழ்நிலை சூழநிலைகள் நானே சூழ்நிலைகளை அமைத்துக் கொள்கிறேன் தூக்கம் ஓய்வு எவ்வளவு இன்பமான விஷயம் கட்டிலே எனக்குச் சொகுசாக உள்ளது உலகிலுள்ள மகுடங்கள் எல்லாம் கிடைப்பதாயினும் இதை அவைகளுக்கு ஈடாகக் கொடுக்க மாட்டேன் பத்திரிக்கையாளர் ஆயிரம் துப்பாக்கிச் சனியன்களைக்காட்டிலும் மூன்று பத்திரிகைகளைக் கண்டு நான் அஞ்சுகிறேன் பரணி பாடுதல் ஒரு பரணியோ நன்கு அமைக்கப்பெற்ற பாடலோ உள்ளத்தில் பதிந்து உணாச்சிகளை மென்மையாக்கி ஒரு பெரிய ஒழுக்க நூலைவிட அதிகப் பயனை விளைவிக்கின்றது ஒழுக்க நூல் நமது அறிவைத் திருப்தி செய்யுமேயன்றி உணர்ச்சிகளை உண்டாக்காது நம் பழக்கங்களைச் சிறிதும் மாற்றிவிடாது பழிவாங்குதல் பழி வாங்குதலுக்கு முன்யோசனை கிடையாது மனச்சான்று மனச்சான்று ஆட்சி செய்யத் தொடங்கும் பொழுது என் ஆட்சி முடிகின்றது வரலாறு சகலரும் ஏற்றுக்கொள்ளும் கட்டுக்கதை தானே சரித்திரம் என்பது தன் சிறைவாசம் குறித்து மனைவியையும் மைந்தனையும் பிரிந்து ஆயுள் முழுவதும் நான் சிறைவாசம் செய்ய நேரிட்டது அப்படியிருந்தும் அவர்களைக் கண்டு பேசிய ஒருவரிடம் சிறிது நேரம் உரையாடவும் எனக்கு அனுமதியளிக்கப்படவில்லை கொலைத் தொழில் புரிந்து மரணதண்டனை விதிக்கப் பெற்றவர்களும் கழுவேற்றப்படுமுன் தமது மனைவி மக்களுடன் சிறிது நேரம் கொஞ்சிக் குலாவுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர் ஆனால் தாராள நோக்கமுடைய ஆங்கிலேயரது பிரதிநிதியாகிய லோ என்பவனது செய்கையோ அறநெறிக்கு முற்றிலும் மாறுபட்டுள்ளது நான் இங்கிலாந்தின் விருந்தாளியேயன்றி சிறையாளன் அன்று இங்கிலாந்து தேசத்துக்கு நான் அடைக்கலமாக வந்தேன் என் விஷயத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தார் அறநெறியையும் சட்டமுறையையும் சமூகத் தர்மத்தையும் இழந்து அதர்மத்தில் இறங்கினர் அவர்களது நடவடிக்கை பிரிட்டிஷ் பெருமைக்கேற்றதா என்று நான் கேட்கிறேன் சென்ட் ஹெலினவில் என்னை ஆயுள்வரையிலும் கிறை செய்தல் கொடுமையினும் கொடுமையாகும் அ ஃ து கேவலம் அநாகரிகக் காரியமாகும் ஆங்கிலேயர்கள் இவ்வளவு கொடுமையாக என்னை நடத்துவார்கள் என்று நான் கனவிலும் கருதினேனில்லை அத்தீவில் சிறை செய்தலைக் காட்டிலும் என்னைச் சுட்டுக் கொன்று விடுவதே சாலச்சிறந்ததாகும் ஆங்கிலேயர் எனக்கிழைத்த கொடுமையைத் தெய்வமும் சகியாது குறிப்புகள் பகுப்பு நபர்கள் பகுப்பு பிரான்சியர்கள் பகுப்பு பிறப்புகள் பகுப்பு இறப்புக்கள் |
டங் சியாவுபிங் எளிய சீனம் ஆங்கிலம் ஆகத்து பெப்ரவரி இருந்து வரை சீனப் பொதுவுடமைக் கட்சியின் தலைவராக இருந்து தற்கால சீனாவின் பொருளாதார எழுச்சியை ஏதுவாக்கியவர் இவர் இறுகிய பொதுவுடமைக் கொள்கைகளைத் துறந்து திறந்த சந்தைக் கொள்கைளைச் சீனாவில் நடைமுறைப்படுத்தியவர் மேற்கோள்கள் எலிகளைப் பிடிக்கும் பூனை கறுப்பாயிருந்தாலென்ன வெளுப்பாயிருந்தாலென்ன சீனாவின் அரசியல் நிலையும் பீகிங்கின் அதிகாரப் போராட்டமும் பக்கம் ஆங்கில நூல் சேம்பர்ஸ் மேற்கோள்கள் நிகண்டின்படி இந்த மேற்கோள் யூலை திங்களில் நிகழ்ந்த சீனப் பொதுவுடைமைக் கட்சியின் இளைஞர் கூட்டமைப்பு மாநாட்டில் சுட்டப்பட்டது ஆயிரக்கணக்கான நமது சீன மாணவர்கள் வெளிநாட்டிலிருந்து வீடு திரும்பும்போது சீனா தன்னை எவ்வாறு உருமாற்றிக்கொள்ளும் என்பதைப் பார்ப்பீர்கள் ஃபோர்ப்ஸ் தொகுதி பதிப்பு பக்கம் ஆங்கில இதழில் சுட்டப்பட்டது பகுப்பு நபர்கள் |
விக்ரம் அம்பாலால் சாராபாய் இந்திய இயற்பியலாளர் இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை எனக் கருதப்படுகிறார் மேற்கோள்கள் வளரும் நாட்டில் விண்வெளிச் செயல்பாடுகள் அவசியமா என வினவுபவர்கள் சிலர் இருக்கின்றனர் இதில் நமக்குக் குழப்பம் இல்லை நிலவு அல்லது கோள்கள் அல்லது மனிதன் செல்லும் விண்வெளி ஓடம் போன்ற ஆய்வுகளை நடத்தும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த நாடுகளுடன் போட்டியிடும் எண்ணம் நமக்கு இல்லை மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் நாம் மற்ற எவருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதைக் காட்டும் வகையில் மனித சமுதாயத்தில் சிறப்புத் தொழில் நுட்பங்களின் பயன்களைப் புகுத்த வேண்டும் வெளி இணைப்புகள் பகுப்பு நபர்கள் பகுப்பு விஞ்ஞானிகள் பகுப்பு பிறப்புக்கள் பகுப்பு இறப்புக்கள் |
ஒரு தமிழர் திருமணத்தில் தாலி கட்டப்படுகிறது ஒரு திருமணத்தில் தாலி கட்டப்படுகிறது திருமணம் ஒரு சமூக சட்ட உறவுமுறை அமைப்பு ஆகும் குடும்பம் பாலுறவு இனப்பெருக்கம் பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறது இரு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மனிதர்களுக்கு இடையே திருமணம் நடைபெறுகிறது மணம் என்பது ஓர் ஆணும் ஒரு பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்தபெறும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம் மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதிப் படைத்துக் கொள்ளப்பட்டதோர் ஒழுக்க முறை திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஒரு உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும் வெவ்வேறு பண்பாட்டுக் குழுக்களிடையே திருமணம் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும் நெறிமுறைகளும் காணப்படுகின்றன திருமணம் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண் பெண் உறவு நிலையைக் குறிக்கிறது அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவிதப் பிணைப்பு ஆகும் ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப்பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்துகொள்ளும் செயலே மணம் எனப்படும் திருமணத்திற்கு மகத்துவம் மாங்கல்யம் மாங்கல்யத்தை பாதுகாக்க வேண்டியது அவசியமாக உள்ளது மாங்கல்யதை அக்னியில் இடுவது வம்சத்தை அழிக்கும் இல்லம் அமைதியற்ற நிலை உண்டாகும் மணவாழ்வின் மாட்சி உணர்த்தும் பொன்மொழிகள் சமூகத்தின் முதல் உறவு இணைப்பு திருமணம் சிசரோ உலகியல் வாழ்வில் கல்வி அறிவு புகட்டும் அமைப்புகளில் தலையானது இல்லறம் சேனிங் போல்லாக் திருமணவாழ்வில் ஈடுபடும்வரை ஒருவரின் குணநலன் பக்குவமாகி நிறைவுபெறுவதில்லை சார்லஸ் சிம்மன்ஸ் இருமனங்களின் இணைப்பாகும் திருமணம் ஈருடலின் சேர்க்கையைவிட சிறப்பானது டெசிடேரியல் ஏராஸ்மாஸ் பெண்கள் இன்றி மணவாழ்வு இயலாது பெண்கள் இன்றி உலகம் இயங்கவும் இயலாது புலனடக்கம் இல்லா நெறிகெட்ட வாழ்வுக்கு மருந்து திருமணம் மார்டின் லூதர் திருமணம் சுவர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது ஜான் லைலி திருமணம் சுவர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதென்றால் அவை இன்னமும் என்றும் இன்பமாக இருக்கவேண்டுமே தாமஸ்சதேர்ன் திருமணம் சுவர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதென்றால் மணமுறிவு எங்கே நிச்சயிக்கப்படுகிறது யாரோ தனி மனிதனாய் வாழ்வதைவிட மணவாழ்வில் கவர்ச்சி குறைவு ஆனால் கண்ணியமும் பாதுகாப்பும் அதிலேதான் உள்ளது ஜெரேமி டெய்லர் நமது வயது வளர வளர திருமணம் என்ற அமைப்பின் அருமையை உணர்ந்து உவக்கிறோம் சர் தாமஸ் பீச்சேம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே சுதந்திரம் சமாதானமாகவும் சார்பு தோழமை கொண்டதாகவும் கடமை உணர்வு இருதரப்பினதாகவும் ஒத்த உரிமை ஒத்த சார்பு ஒத்த கடமை அமையும் உறவுதான் திருமணவாழ்வு லூயிஸ் ஆன்ஸ்பேச்சர் மனிதன் வாழ்வில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் திருமணம்தான் அவன் சொந்த உரிமை நடவடிக்கை மற்றவர்கள் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை ஆயினும் மற்றவர்கள் பெரிதும் தலையிடுவது நமது திருமணம் பற்றிதான் ஜான் செல்டென் திருமண வாழ்வில் இன்னல்கள் பல உண்டு ஆனால் தனியாளாக வாழ்வதில் இன்பம் ஏதுமில்லை சேம்யல் ஜான்சன் உலகில் தலையாய இன்பம் திருமணம் இன்பமான மண வாழ்க்கையை நடத்தும் ஒவ்வருவரும் மற்றவை யாவற்றிலும் தோல்வி அடைந்திருந்தாலும் உண்மையில் வாழ்வில் வெற்றி பெற்றவராவாரே ஆவார் வில்லியம் லையான் ஃபல்ப்ஸ் பெண்ணின் மனைவியின் அன்பில் பின்னிப் பிணைந்த ஆணுக்கு உரித்ததாகக் காத்து நிற்கும் ஆறுதல்கள் ஆழ்கடலின் முத்துக்களைக் காட்டிலும் மதிப்பு மிக்கவை இல்லத்தின் அருகே வரும்போதே இனிய அருட்கொடையின் தென்றல் அவனை ஆட்கொள்கிறது தாமஸ் மிடில்ஸ்டன் வெற்றி என்னும் பாதை நெடுக தங்கள் கணவன் மார்களை ஊக்குவித்து உந்தித் தள்ளிக் கொண்டிருக்கும் மனைவியரைக் காணலாம் தாமஸ் ராபர்ட் திவார் சச்ரவுகள் ஊடல்கள் இழையோடும் ஒரு நீண்ட வாழ்நாள் எல்லாம் நீடிக்கும் உரையாடல்தான் திருமண வாழ்வு ராப்ர்ட் லூயி ஸ்டீவன்சன திருமணத்தில் நிறையும் காதல் கண்ணியமிக்க பெருமதிப்பை அடிப்படையாக்க் கொண்டது எலைஜா ஃபெண்டன் திருமணத்தைப் புனிதப்படுத்த வல்லது காதல் ஒன்றுதான் காதலால் புனிதமாகிய மணமே உண்மையான திருமணம் லியோ டால்ஸ்டாய் திருமணத்தை நிலைக்கச் செய்வது உடல் அல்ல உள்ளம் புப்லியஸ் சைரஸ் ஆண்பெண் இரு பாலும் படைக்கப்பட்டது ஒருவருக்கொருவர் என்று இருபாலும் அன்புடனும் விவேகத்துடனும் இணைந்து வாழ்வதன் மூலம்தான் பூரண உடல் தலனும் கடமையில் ஆர்வமும் இன்ப நிறைவும் எதிர்பார்க்க முடியும் வில்லியம் ஹால் ஒரு பேரறிஞர் கூறியதுபோன்று சரியான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது மட்டுமல்ல சரியான வாழ்க்கைத் துணையாய் நடந்து கொள்வதே முக்கியம் டொனால்ட் பீயட்டி இனிய திருமண வாழ்க்கை நடத்த விழைந்தால் இரண்டு கருத்துக்களை உள்ளம் கொள்ளக கொள்கைகளைப் பொருத்தவரை குன்றுபோல் நில் சுவைகள் ரசனைகள் பொருத்வரையில் பிரரது விருப்பங்களைத் தழுவி நில் தாமஸ் ஜெஃபர்சன் திருமணம் வாழ்க்கையின் இயற்கை நியதி அதை எவ்வகையிலும் இழிவானது என்று கருதுவது முற்றிலும் தவறு திருமணத்தைப் புனித உடன்பாடு ஆகக் கருதி இல்லறத்தில் சுயகட்டுப்பாடு காத்து வாழ்வதே உத்தமம் காந்தியடிகள் திருமணம் பெற்றோர்களால் பணத்துக்காக செல்வத்துக்காகச் செய்யும் ஏற்பாடாக இருப்பது ஒழிய வேண்டும் காந்தியடிகள் ஒன்றாக இணைந்து நின்று உலக வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபட்டு இன்பத்துன்பங்களைப் பகிர்ந்துகொண்டு ஒன்றாகவே முதுமை எய்திய தம்பதியருள் பலர் உடல் தோற்றாத்தாலும் குரல் எடுப்பிலும் வியத்தகு அளவில் ஒன்றே போலாகி கடற்கரையில் கிடக்கும் இரண்டு கூழாங் கள்கள் அலைகளின் வீச்சில் உருண்டுருண்டு ஒன்றைப்போல் மற்றொன்றும் ஆவதைப்போலப் போலவே ஒருவரின் மறுபதிப்பாய் மற்றவரும் ஆகிவிடுகின்றனர் தோற்றத்திலும் குரலிலும் இல்லாவிடிலும் ஒருவர் எண்ணத்தை மற்றவர் பிரதிபளிப்பதில் அவ்வாறு ஆகின்றனர் அலெக்சாண்டர் சிமித் ஏழிசையின் இனிமைதனை மானிடர் கேட்டு இன்புற்று மகிழ்ந்து இருக்கின்றனர் இசை கேட்ட நாகமும் தீட்ண்டாதாம் நஞ்சு கொண்டதெனினும் வாழ்க்கையே அது போன்றதுதான் அளவு தெடர்பு அறிந்து வினை செய்து எதற்கும் முறை வகுத்து இன்பம் காண்பது வாழ்வு அதிவும் மூழ்கிச் செயலாற்றுப் போக அல்ல அது மடமை துய்த்திடலாம் வாழ்வின் சுவை துஞ்சிட அல்ல வினை மேற்கொள்ள தொடர்ந்து செயலாற்ற ஏனெனில் இயங்குதல் வாழ்க்கையின் இலக்கணம் இனியன புரிதல் அறநெறியாகும் அறநெறியதனை அடவி ஏற்காமல் மாடும் மனையும் சூழ இருந்திடும் மாண்புமிகு இல்லறந் தன்னிலேயே பெற்றிட இயலும் என்று கூறினர் தமிழர் துறவோரும் இவரில்லை எனில் இல்லை யாங்கண் என்றார் உணர்ந்து அண்ணாதுரை திருமணத்தில் உள்ள மகிழ்ச்சியானது முற்றிலும் வாய்ப்பினை பொறுத்த விஷயம ஜோன் ஆஸ்டின் மேற்கோள் தமிழர் திருமணமும் இனமானமும் பேராசிரியர் க அன்பழகன் பூம்புகார் பதிப்கம் இரண்டாம் பதிப்பு வெளி இணைப்புக்கள் பகுப்பு திருமணம் |
நம்மாழ்வார் இயற்கை முறை வேளாண்மை விஞ்ஞானி ஆவார் மேற்கோள்கள் பூச்சிகள் எல்லாம் நம் நண்பர்கள் உரம் என்னும் பெயரில் பூச்சிக்கொல்லிகளை விற்றார்கள் பூச்சிவிரட்டிகள் என்னும் பெயரில் பூச்சிக்கொல்லிகளை விற்றார்கள் இலட்சம் இளைஞர்கள் இயற்கை வேளாண்மையில் இறங்கினால் தமிழ்நாட்டின் தலைவிதியை மாற்றிடலாம் நூறுநாள் வேலைத்திட்டத்தின் வருவாயை எந்த நூறு நாட்கள் வேளான்தொழிலாளாருக்குத் தருவதென்பதை என்பதை கிராமசபைகளே தீர்மானிக்க வேண்டும் அந்த நூறுநாட்களை தூர்வாரவும் ஏரி குலங்களை தூய்மையாக்குவதிலும் பயன்படுத்த வேண்டும் காலம்காலமாக மாடு மேய்ப்பவர்களையும் நடவு நடுபவர்களையும் திறனற்றவர்கள் என்கிறார்கள் தேர்ச்சியற்றவர் என்கிறார்கள் அப்ப்டிச்சொல்லும் அமைச்சர்கள் யாராவது மூன்றுமணிநேரமாவது இடுப்பை வளைத்து நாத்து நட முடியுமா என பார்த்து விடலாமா எந்த பாராளுமன்ற உறுப்பினராவது மண்வெட்டி பிடித்து அந்த வரப்பை வெட்டிடுவானா கலப்பையைப் பிடித்து மாட்டுக்காலில் இருந்து நழுவாமல் ஒரு வளையம் வந்துவிட முடியுமா இவர்களால் இப்போது இருக்கும் அரசு நமதரசல்ல அமைச்சர்கள் நம் அமைச்சர்கள் அல்ல நம் சட்டமன்ற உறுப்பினர் நம் பாராளுமன்ற உறுப்பினர் நம் ஆட்சியெல்லாம் இனிமேல் தான் வரும் வரும்போது இந்நிலம் விவசாயிகள் கையில் இருக்கும் வேளாண்மை என்பது சூழலுக்கு ஏற்ப செய்வது உலகம் முழுக்க ஒரே பயிர்கள் உரங்கள் பயன்படுத்த முடியாது விவசாயத்தில் வருவாய் இல்லை என்றால் நிலத்தை விட்டு போய் விடு எனச் சொல்ல ஒரு பிரதம மந்திரி தேவையா இருப்பதிலேயே மிகப்பெரிய நகைச்சுவை இதாத்தான் இருக்கனும் |
அஜித் குமார் பி மே இந்திய திரைப்பட நடிகர் ஆவார் இவர் நடித்த திரைப்படங்களில் இடம்பெற்ற சில சொல்லாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன சொல்லாடல்கள் திரைப்படங்களில் நேர்காணல்களில் மேற்கோள்கள் ஒழுங்கா வரி கட்டினாலே அது சமுதாயத்துக்கு நாம செய்யற பெரிய விஷயம்னு நினைக்கறேன் சான்றுகள் வெளியிணைப்புகள் பகுப்பு பிறப்புக்கள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு தமிழ் திரைப்பட நடிகர்கள் |
மைக்கல் ஜெஃப்ரி ஜார்டன் பிறப்பு பெப்ரவரி முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார் ஒவ்வொரு போட்டியிலும் சராசரியாக புள்ளிகள் எடுத்த ஜார்டன் என் பி ஏ வரலாற்றில் அதிக புள்ளிகளை பெறும் வீரர்களில் ஒருவராக இருக்கிறார் இவர் என் பி ஏ இல் முதல் வரை விளையாடினார் முதல் வரை சிகாகோ புல்ஸ் அணியில் விளையாடி என் பி ஏ யிலிருந்து விலகினார் ஒரு ஆண்டாக பேஸ்பால் விளையாடி இல் சிக்காகோ புல்ஸ் அணிக்கு திரும்பினார் மொத்தமாக சிக்காகோ புல்ஸ் அணியில் இருக்கும்பொழுது முறையாக என் பி ஏ இறுதிப்போட்டிகளை வென்றுள்ளார் கூற்றுக்கள் நான் தோல்வியை ஒப்புக்கொள்ளுவேன் ஆனால் மறுதடவை முயற்சி செய்யாமல் இருப்பதை ஒப்புக்கொள்ளமாட்டேன் நான் என்பது குழுவில் இல்லை ஆனால் வெற்றியில் உண்டு நான் பல தடவைகள் தோல்வியை சந்தித்துள்ளேன் ஆதலாலேயே நான் வெற்றி பெற்றுள்ளேன் வெற்றி பெறுவதைக் கற்றுக்கொள்ள முதலில் தோல்வியை கற்க வேண்டும் வெளியிணைப்புக்கள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு பிறப்புக்கள் |
விஜய் பிறப்பு சூன் இயற்பெயர் ஜோசப் விஜய் என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார் தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எசு ஏ சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார் ஏறத்தாழ படங்களுக்குப் பிறகு தமிழ்த் திரைப்படத் துறையில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார் இன்று இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார் விஜயின் ரசிகர்கள் அவரை இளைய தளபதி என்று அழைக்கிறார்கள் கூற்றுக்கள் திரைப்படங்களில் ஜில்லா சக்தியில்லாம எவனுமே இல்ல ஆயிட்ரப்பா ஆனா என்னவா என்னது பொலிசாவா இங்க தொப்பி போட்ட போலிச விட தொப்பை போட்ட போலிஸ் தான் அதிகமா இருக்கிறீங்க புலி பாசத்துக்கு முன்னால தான் நான் பனி பகைக்கு முன்னாடி புலி பாறைய உருட்டு பாதை பிறக்குமா பகுப்பு நபர்கள் பகுப்பு தமிழ் திரைப்பட நடிகர்கள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு பிறப்புக்கள் |
விவேக் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார் இவரது சொந்த ஊர் கோயில்பட்டி இலுப்பை ஊரணி இவர் மதுரையில் பிறந்தவர் தாயர் பெயர் மணியம்மாள் தந்தை சிவ அங்கய்யா பாண்டியன் இவரது தந்தை இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ஆசிரியராக பணியாற்றியவர் இவரது நகைச்சுவை இலஞ்சம் மக்கள்தொகைப் பெருக்கம் அரசியல் ஊழல்கள் மூட நம்பிக்கை போன்றவற்றை இடித்துரைப்பதால் இவரை சிலர் சின்னக் கலைவாணர் என்றும் சனங்களின் கலைஞன் என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர் களின் தொடக்கத்தில் துணைநடிகராகத் தமிழ்த் திரைஉலகில் நடிக்கத் தொடங்கிய இவர் இப்போது புகழ்பெற்ற நடிகராக உள்ளார் மேற்கோள்கள் இந்த மாதிரி டீவில ரசிகர்கள் இருக்கிற வரைக்குக்கும் தமிழ் நாட்டில உன்னை யாரும் அகச்சுக்க முடியாது அகச்சுக்க முடியாது சான்றுகள் பகுப்பு தமிழ் திரைப்பட நடிகர்கள் பகுப்பு நகைச்சுவை நடிகர்கள் |
சந்தானம் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார் இவர் விஜய் தொலைக்காட்சியின் லொள்ளு சபா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார் இல் இவர் மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பின்னர் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் மேற்கோள்கள் திரைப்படங்களில் வீரம் அண்ண என்னையும் உங்கள்ள ஒருத்தனா சேர்த்துக்கங்கன்ன உண்மைய சொல்லுங்கடா பிள்ளைங்கலேல்லாம் எந்த ஸ்கூல்ல படிக்குதுங்க சின்ன வயசுல நாங்க பிட்டடிச்சு மாட்டிக்கிட்டமுன்ன என்ன செய்வோம் டீச்சர் டீச்சர் நான் மட்டும் பிட்டடிக்கல இவனுந்தான் பிட்டடிச்சான் எண்டு பக்கத்தில இருக்கிற பையனையும் மாட்டி விடுவமில்ல அத மாதிரித்தான் இங்க பக்கத்தில இருக்கிற பையன இல்ல அந்த டீச்செரையே மாட்டிவிடப்போரம் பகுப்பு தமிழ் திரைப்பட நடிகர்கள் பகுப்பு நகைச்சுவை நடிகர்கள் |
ஹாரி பாட்டர் அண்டு த பிலாசபர்சு இசுடோன் என்பது ஜே கே ரௌலிங் எழுதிய ஹாரி பாட்டர் தொடரின் முதலாவது புத்தகமாகும் இது இல் வெளியிடப்பட்டது இது ஆரி பாட்டர் அண்டு த சோர்சர்சு இசுடோன் என்றும் அழைக்கப்படுகிறது ஹாரி பாட்டர் அது என்னத்த பாதுகாக்குது ஹெர்மாயினி என்னது அத நீங்க தான் வளர்தீங்களா ஹாக்ரிட் ரோன் வீசுளி அந்த நாய்க்கு மூணு தல இருந்திச்சு அததான் நான் பாத்தன் ஹெர்மாயினி அது எதையோ பாதுகாக்குது டிராகோ மல்பாய் நான் கேள்விப்பட்டது உண்மைதான் ஹாரி பாட்டர் ஹாக்வாட்சிற்கு வந்தாச்சு பகுப்பு புதினங்கள் |
மேற்கோள்கள் மனிதனின் முழுக் கண்ணோட்டமும் இங்கேயே இப்போதே என்றுதான் இருக்க வேண்டும் இது தவிர வேறொரு இடமும் வேறொரு நேரமும் என்றுமே கிடையாது வெளி இணைப்புக்கள் பகுப்பு நபர்கள் பகுப்பு ஆன்மிகவாதிகள் |
புலி என்பது ஆம் ஆண்டில் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ் மிகுபுனைவுத் திரைப்படமாகும் சிம்புதேவன் இயக்கிய இத்திரைப்படத்தில் விஜய் பிரபு ஸ்ரீதேவி சுதீப் ஹன்சிகா மோட்வானி சுருதி ஹாசன் ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர் நடிகர் விஜயின் உறவினரான செல்வகுமார் தயாரித்த இத்திரைப்படத்திற்குத் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார் இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் தொடங்கியது மருதிவீரன் பாசத்துக்கு முன்னாடி தான் நான் பனி பகைக்கு முன்னாடி புலிடா பாறைய உருட்டு பாதை பிறக்குமா புலிவேந்தன் கெட்டவனுக்கு ஆயிரம் ஆயுதம் இருக்கும் நல்லவனுக்கு ஒரே ஆயுதம் மக்கள் சான்றுகள் பகுப்பு தமிழ்த் திரைப்படங்கள் பகுப்பு இந்தியத் திரைப்படங்கள் பகுப்பு திரைப்படங்கள் பகுப்பு சிம்புதேவனின் திரைப்படங்கள் |
புறநானூறு என்னும் தொகைநூல் சங்ககாலத்தைச் சேர்ந்த தமிழின் ஒரு செவ்வியல் நூல் ஆகும் இது நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு நூலாகும் புறம் புறப்பாட்டு என்றும் வழங்கப்படும் இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று இந்நூலைத் தொகுத்தவர் பெயரும் தொகுப்பித்தவர் பெயரும் தெரியவில்லை பாக்களின் அடி வரையறை அடி முதல் அடி வரை உள்ளன புறநானூற்றின் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன இதனை ஜி யு போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் மேற்கோள்கள் எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே பாடல் பாடியவர் ஔவையார் பொருள் அருள் நிறைந்த மக்கள் உள்ள இடமே நல்ல நாடு வையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு ஐயவி யனைத்தும் ஆற்றாது பாடல் பாடியவர் வான்மீகியார் பொருள் நிறுத்துப் பார்த்தால் உலகமும் தவமும் என்ற இரண்டில் தவத்திற்கு உலகம் எள் அளவு கூட ஈடாகாது செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புந பலவே பாடல் பாடியவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பொருள் செல்வத்தின் பயன் ஈகையே அல்லாமல் அனுபவிப்பேன் என்று நினைத்தால் பல நன்மைகள் தப்பிப் போகும் உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே புகழ்எனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர் தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மை யானே பாடல் பாடியவர் கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி பொருள் தன்னலமற்றுப் பிறர்நலம் பேணுபவராலேயே உலகம் நினைத்து உள்ளது நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் பாடல் பாடியவர் மோசிகீரனார் பொருள் அரசே நாட்டின் உயிர் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே உண்டி முதற்றே உணவின் பிண்டம் உணவெனப் படுவது நிலத்தோடு நீரே நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசி னோரே பாடல் பாடியவர் குடபுலவியனார் பொருள் நீரையும் நிலத்தையும் உயிரையும் உடலையும் காப்பது போன்றது உடைப்பெருஞ் செல்வர் ஆயினும் மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே பாடல் பாடியவர் பாண்டியன் அறிவுடை நம்பி பொருள் மக்கள்பேறு இல்லாச் செல்வ வாழ்க்கை பயனுடையது ஆகாது யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணரா பொருள்அறி வாரா ஆயினும் தந்தையர்க்கு அருள்வந் தனவால் புதல்வர்தம் மழலை பாடல் பாடியவர் ஔவையார் பொருள் மழலை யாழ் போல இனியது அன்று பொழுதோடும் சேராது பொருளும் தராது ஆனால் தம் குழந்தை மழலை போருள் செல்வம் யாண்டுபல வாக நரையில ஆகுதல் யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின் மாண்டஎன் மனைவியோடு மக்களும் நிரம்பினர் யான்கண் டனையர்என் இளையரும் வேந்தனும் அல்லவை செய்யான் காக்க அதன்தலை ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே பாடல் பாடியவர் பிசிராந்தையர் பொருள் நல்ல மனைவி இளையர் அரசன் சான்றோர் சூழ இருந்தால் கவலையுமில்லை நரையுமில்லை நூல் குறித்த கருத்துகள் புறநானூறு செல்லும் செய்திகளைப் பயின்றே வாழ்நாள் முழுவதும் கழித்துவிடலாம் அப்போதும் புதிய புதிய செய்திகள் கிடைத்துக் கொண்டே இருக்கும் ஜார்ஜ் எல் ஹார்ட் புறநானூரில் அரசரைப் பற்றி இருக்கும் அப்படி அரசனைப் பாடுகையில் சமூகத்தில் அடிமட்டதில் இருக்கும் பாணர் கினையர் விறலியர் போன்றோரின் வாழ்க்கையைக் கூறும் உண்மையான இந்தியா புறநானூறு காட்டுவது தான் கிராமங்களில் மக்கள் வாழும் முறையை அது காட்டுகிறது பண்டிதர்களோ வடமொழி இலக்கியங்களைப் படித்துவிட்டு மேல்தட்டு வாழ்க்கை முறையை பழங்கால இந்திய வாழ்க்கை முறையாக காட்டிவிடுகிறார்கள் அதற்கு சரியான மாற்று தமிழில்தான் உள்ளது ஜார்ஜ் எல் ஹார்ட் குறிப்புகள் பகுப்பு இலக்கியங்கள் |
விடாமுயற்சி என்பது தளராமல் முயற்சி செய்வதாகும் மேற்கோள்கள் ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை அரிய செயல்கள் அனைத்தும் விடாமுயற்சியாலேயே அடையப் பெற்றிருக்கின்றன வெறும் வலிமையால் மட்டும் அல்ல சமுவெல் ஜோன்சன் பொதுவாக வெற்றி என்பது மற்றவர்கள் கைவிட்டுவிட்ட பின்பும் அயராமல் தொடர்வதாலேயே கிட்டுவதாகும் வில்லியம் பெதர் நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது ப்ரெமர் உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும் தொடர்ந்த உழைப்புமே ஆகும் வலிமையோ புத்திசாலித்தனமோ அல்ல சேர் வின்சுடன் சேர்சில் நான் மெதுவாக நடப்பவன்தான் ஆனால் ஒருபோதும் பின்வாங்குவதில்லை ஆபிரகாம் லிங்கன் பழமொழிகள் அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் அழுத பிள்ளை பால் குடிக்கும் பகுப்பு திறமைகள் |
அறிவு என்பது மனிதனின் திறமைகளுள் ஒன்றாகும் மேற்கோள்கள் அறிவற்றவர்களை அதிகாரத்துக்குள்ளாக்குவது உண்மையான அறிவின் செயல்பாடல்ல மாறாக மற்றவர்களையும் அறிவாளியாக மாற்றுவதுதான் கவிஞர் கண்ணதாசன் உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம் புத்தர் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றி வரப்படும் பழக்கம் என்பதற்காகவோ நமது முன்னோர்கள் சொல்லிவைத்து விட்டார்கள் என்பதற்காகவோ எந்த ஒரு கருத்தையும் நாம் சிந்தித்துத் தெளிவு பெறாமல் ஏற்றுக்கொள்ளக் கூடாது கார்ல் மார்க்ஸ் உங்களிடம் அறிவொளி இருந்தால் அந்தத் தீபத்திலிருந்து மற்றவர்கள் மெழுகுவத்திகளை ஏற்றிக்கொள்ளட்டும் வில்லியம் ஷேக்ஸ்பியர் அறிவு ஆம் அது நாம் வானுலகு ஏறுதற்குரிய வன் சிறகு அறியாமை ஆண்டவன் சாபம் அறிவு தேவர் உலகத்திற்குக் கொண்டு செல்லும் சிறகு ஜான் ரஸ்கின் ஞானத்தின் முதல் வேலை தன்னை அறிதல் அன்பின் முதல் வேலை தனக்குத் தான் போதுமானதாயிருத்தல் கூடிய மட்டும் துன்பம் விளையாமல் தடுத்துக் கொள்வதும் தடுக்கமுடியாத துன்பத்தைக் கூடிய மட்டும் பயன்படுத்திக் கொள்வதுமே அறிவு ஆகும் அறிவின் முதல் பாடம் ஐஸ்வரியத்தை வெறுப்பது அன்பின் முதல் பாடம் ஐஸ்வரியத்தை அனைவருக்குமாகச் செய்வது தன்னலமின்மையும் நாணமுமே மெய்ஞ்ஞானத்தின் இலட்சணம் அறிவிலி இடத்தையும் காலத்தையும் குறுக்க விரும்புகிறான் அறிஞனோ அவற்றை நீட்டவே விரும்புகிறான் யோசனை செய்யாதிருக்கக்கூடிய இடம் மரண சயனம் ஒன்றே ஆனால் யோசனை செய்வதை அந்த இடத்திற்காக ஒருபொழுதும் விட்டுவைக்கக் கூடாது சாக்கடை நீரில் குப்பையைக் காண்பதா அல்லது வானத்தைக் காண்பதா உன் இஷ்டம் மெய்ஞ்ஞானம் கடவுளிடம் அடக்கத்தையும் ஜீவர்களிடம் அன்பையும் தன்னிடம் அறிவையும் உண்டாக்கும் ஒரு பிராணி வாழ்வதைக் கண்டு நீ ஆனந்திக்கும் அளவே நீ அதை அறிய முடியும் வேறு வழியில் முடியாது பிறர் கடவுள் ஆலோசிப்பவன் ஒருவனை உலகிற்கு அனுப்பினால் ஜாக்கிரதை அப்பொழுது அனைத்தும் அபாய நிலை அடையும் எமர்ஸன் பக்தர் தன் னைத் துறத்தல் போலவே அறிஞரும் தன் னைத் துறத்தல் அவசியமானதே எமர்ஸன் எல்லா உடைமைகளிலும் ஞானமே அழியாததாகும் சாக்கிரட்டீசு சாத்தானுக்குச் சிந்தனை செய்பவனைப் போன்ற கொடிய சத்துரு கிடையான் கார்லைல் பயபக்தியில்லாத அறிவு அறிவாகாது அது மூளை அபிவிருத்தியாயிருக்கலாம் அல்லது கைத்தொழில் அறிவாயிருக்கலாம் ஆனால் ஆன்ம அபிவிருத்தியாக மட்டும் இருக்காது கார்லைல் அறிவு பெற ஆற்றலுடைய ஒருவன் அறிவிலியாயிருப்பதைப் போன்ற துக்ககரமான விஷயம் வேறு எதுவுமில்லை கார்லைல் நூலறிவு பேசும் மெய்யறிவு கேட்கும் ஹோம்ஸ் ஆறாத மரத்தை வேலைக்கு அதிகமாக உபயோகிக்கக் கூடாது அதுபோல்தான் பண்படாத அறிவையும் ஹோம்ஸ் ஜலக் குமிழி தங்கக் கட்டிக்குச் சமானமாகுமானால் உயர்ந்த மூளையும் உண்மையான உள்ளத்திற்குச் சமானமாகும் ஹோம்ஸ் நுண்ணறிவு அன்புடன் சேர்ந்துவிட்டால் அதனால் அடைய முடியாதது எதுவும் அவனியில் கிடையாது கதே அறிய முடியாததையும் அறிய முடியும் என்று நம்புவதை ஒருநாளும் கைவிடற்க இன்றேல் அதைத் தேடப் போவதில்லை கதே எதை நாம் அறியவில்லையோ அது நம்முடைய தன்று கதே அறிவை எதிர்ப்பவர் நெருப்பைக் கிளறுபவர் ஆவார் நெருப்புப் பொறி பறந்து எரிக்க வேண்டாதவற்றையும் எரித்துவிடும் கதே மனோ விகாரங்களே வாழ்வாகிய கப்பலைச் செலுத்தும் காற்று அறிவே அதை நடத்தும் சுக்கான் காற்றின்றேல் கப்பல் நின்றுவிடும் சுக்கானின்றேல் தரை தட்டிவிடும் ஷூல்ஜ் வாழ்வு யோசிப்பவனுக்கு இன்ப நாடகம் உணர்பவனுக்குத் துன்ப நாடகம் வால்ப்போல் நீ எண்ணுவது எல்லோருக்கும் சொந்தம் நீ உணர்வதே உனக்குச் சொந்தம் ஷில்லர் உண்மை ஞானம் கண் முன் இருப்பதைக் காண்பதன்று பின் வருவதை முன் அறிவதாகும் டெரன்ஸ் ஒரு விஷயத்தைப் பல வாயிலாகப் பார்க்க முடியாத புத்தி குறுகியதாகும் ஜார்ஜ் எலியட் தான் தானாகவே இருக்க அறிவதே உலகில் பெரிய விஷயம் மான்டெய்ன் உண்மை அறிவு அன்பில் கொண்டு சேர்க்கும் வோர்ட்ஸ்வொர்த் உண்மையின் பெருங்கடல் நம்மால் அறியப்படாமல் பரந்து கிடக்கின்றது நாமோ கடற்கரையில் விளையாடி அங்குமிங்கும் ஓடி அழகான ஒரு சிப்பியையும் மெல்லிய ஒரு கடற் பாசியையும் கண்டு மகிழ்ந்து நிற்கும் சிறு குழந்தைகளைப் போல் இருக்கிறோம் ஆவ்பரி சாஸ்திரிகளைப் போல் சாமர்த்தியமாய் அஞ்ஞானம் பேசுவதைவிட சான்றோர்களைப்போல் சாமர்த்தியமின்றி ஞானம் பேசுதலே சாலச் சிறந்ததாகும் செஸ்டர்டன் என்னை நகைக்கச் செய்வன நம் அறியாமைகள் அல்ல நம் அறிவுகளேயாகும் மான்டெய்ன் ஜீவனத்துக்கான சாதனமாக மட்டுமன்று ஜீவிதத்துக்கான சாதனமாகவும் மனிதனுக்கு அறிவு தேவை ஆவ்பரி நூலறிவு பெற்றவன் குளத்தை யொப்பான் மெய்யறிவு உடையவன் சனையை யொப்பான் ஆல்ஜெர் பகுத்தறிவு என்பது உண்மையை அறியக் கடவுள் நமக்குத் தந்துள்ள ஒரே புனிதமான சாதனம் நம் அனைவரையும் ஒன்றாய் இயக்கத்தக்கது அதுவே ஆனால் ஐயோ நாம் அதைத்தான் நம்புவதில்லையே லியோ டால்ஸ்டாய் நூலறிவு வந்துவிடும் மெய்ஞ்ஞானம் வரத் தயங்குகின்றது டெனிலன் பிறர் வாசித்திருந்த அளவு நானும் வாசித்திருந்தால் அவர்களைப் போலவே நானும் அறிவில்லாத வனாயிருப்டிேன் ஹாப்ஸ் அறிவாளி தன்னை மட்டும் உடையவனாயிருந்தால் போதும் அவன் ஒருபொழுதும் எதையும் இழப்பதில்லை மான்டெய்ன் தெரியாது என்று உணர்வது அறிவை அடைவதற்குப் பெரிய வழி டிஸ்ரேலி கற்றதை எல்லாம் முழுதும் மறக்க முடிந்த பொழுதே நாம் உண்மையில் அறிய ஆரம்பிக்கிறோம் தோரோ தன்னைப் பூரணமாய் அறியாதவன் ஒரு நாளும் பிறரைச் சரியாக அறிய முடியாது நோவாலிஸ் அறிஞர் பகைவரிடமிருந்தும் பல விஷயங்களைக் கற்றுக்கொள்வர் அரிஸ்டோபீனிஸ் நாம் அறிவதின் அளவு சுருங்குவதே நாம் அறிவில் முன்னேற்றம் அடைவதைக் காட்டும் இப்படிக் கூறுவது முரணாகத் தோன்றலாம் ஆனால் உண்மையே ஆகும் ஹாமில்டன் அறிவிலிகள் அறிவாளிகள் மூலம் பயன்பெறுவதைக் காட்டிலும் அறிவாளிகள் அறிவிலிகள் மூலம் அதிகமாகப் பயன்பெறுவர் கேடோ முடியுமானால் பிறரைவிட அறிவாளியாயிரு ஆனால் அதை அவர்களிடம் கூறாதே செஸ்டர்பீல்டு வித்தையில் விருப்பமுடையவன் தன்னை முழுவதும் அதற்குத் தத்தம் செய்யவும் அதிலேயே தன் வெகுமதியைக் காணவும் திருப்தியுடையவனாயிருக்க வேண்டும் டிக்கன்ஸ் நூலறிவு அதிகம் கற்று விட்டதாக அகத்தில் கர்வம் கொள்ளும் மெய்ஞ்ஞானம் இன்னும் அறிய வேண்டியது அதிகம் என்று தாழ்ச்சி சொல்லும் கெளப்பர் அறிவுள்ள பிராணியாயிருப்பதில் அதிக செளகரியமே அதைக்கொண்டு விரும்பியது எதற்கும் காரணம் சிருஷ்டித்துவிடலாம் அல்லவா பிராங்க்லின் தன் உபயோகத்திற்கும் அவசியத்திற்கும் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை அறிந்து கொள்ளாதவன் வேறு எவற்றை அறிந்திருந்தாலும் அறிவில்லாதவனே ஆவான் டிலட்ஸன் அறிவின் முன்னணியில் போர் புரிவோர்க்குப் பெரும்பான்மையோர் ஆதரவு ஒரு நாளும் கிடைப்பதில்லை இப்ஸன் ஒன்றும் அறியாதவன் தான் கற்றுக்கொண்டதைப் பிறர்க்குக் கற்றுக் கொடுப்பதாய் நம்பிக்கொள்கிறான் அதிகம் அறிந்தவன் தான் கூறுவது பிறர் அறிந்திருக்க முடியாது என்று நினைப்பதில்லை லா புரூயர் குறைந்தபட்சத் தீமையும் கூடிய பட்ச நன்மையும் விளையும்படி வாழ்வதே உலகில் தலை சிறந்த ஞானமாகும் ரொமெய்ன் ரோலண்டு குறுகிய புத்தியுள்ள மனிதர் குறுகிய கழுத்துள்ள பாட்டில்களை ஒப்பர் அகத்தில் அற்பமாயிருந்தால் புறத்தில் ஊற்றும்பொழுது அதிகச் சப்தம் செய்யும் ஸ்விப்ட் தீயவன் ஒருநாளும் மெய்யறிவு பெற்றதில்லை ஆம் ஒருநாளும் மெய்யறிவு பெற்றதில்லை இது முக்காலும் உண்மை போப் அறியாமை யால் நமக்குச் செளகரியங்கள் கிடையாமல்போகும் என்பது மட்டுமன்று நமது கேட்டிற்கு நம்மையே வேலை செய்யத் துண்டுவதும் அதுவே அது அறிவு இன்மை என்பது மட்டும் அன்று சதா காலமும் துன்பம் தந்துகொண்டிருக்கும் தவறுகளின் நிறைவு ம் ஆகும் ஸாமுவேல் பெய்லி பார்க்க மாட்டோம் என்று சாதிக்கும் அளவுக்குக் குருடாயுள்ளவர் உலகில் கிடையார் ஸ்விப்ட் ஒருவனுக்கு அறிவிருந்தும் ஆற்றல் இல்லையாகில் அவன் வாழ்வு பாழே ஷாம்பர்ட் கண் குருடு என்று இரங்குவதுபோலவே அறிவு சூனியம் என்பதற்கும் இரங்க வேண்டும் செஸ்டர்பீஸ்டு மூளையின் முன்புறம் அறிவு பின்புறத்தை உணர்ச்சியை உறிஞ்சி உலர்த்திவிடுமானால் கேடே அறிவினால் மட்டுமே நம்மை பெற்றுவிட முடியாது விசாலமான நெற்றிக்கே எப்பொழுதும் இறுதியில் வெற்றி ஆனால் வெற்றி கிடைப்பது தலையின் பின்புறம் மிகப்பருமனாயுள்ள பொழுதே ஜே ஆர் லவல் அறிஞனுக்கு அனைத்துலகும் தாய்நாடே சாந்தமான மனத்திற்கு எந்த இடமும் அரண்மனையே லில்லி தனக்குத்தானே வழிகாட்டி என்னும் வண்ணம் போதுமான அறிவுடையார் யாருமிலர் அக்கம்பிஸ் வாழ்விடமிருந்தோ மக்களிடமிருந்தோ அதிகமாக எதிர் பாராதிருத்தலே மெய்யறிவின் ஜீவ அம்சமாகும் மார்லி ஏறிக்கொள்ள அசுரனுடைய தோள்கள் கிடைக்குமானால் குள்ளன் அசுரனைவிட அதிகத் துரம் பார்க்க முடியும் கோல்ரிட்ஜ் ஷேக்ஸ்பியர் என்னைவிட அதிக உயரமுள்ளவரே எனினும் நான் அவரைவிட அதிகத் தூரம் பார்க்க முடியும் நான் அவருடைய தோள்களின் மேல் அல்லவோ நிற்கின்றேன் பெர்னார்டு ஷா ஒன்றுமே அறியாதவன் வாழ்பவன் ஆகமாட்டான் கிரேஸியன் ஒருவனுடைய அறிவை அபகரித்துவிட்டால் அவனைச் சிசு நிலைமையில் வைப்பதாகாது விலங்கு நிலைமையில் அதுவும் விலங்குகளில் எல்லாம் அதிகத் துஷ்டத்தனமான விலங்கின் நிலைமையில் வைப்பதேயாகும் அர்னால்டு அற்ப அறிவு அபாயகரம் என்றால் அபாயம் நேராத அளவு அதிக அறிவு அடைந்துள்ளவன் எவன் ஹக்ஸ்லி உலகத்தில் மூன்று விதமான மூளைகள் இருக்கின்றன ஒன்று பிறர் உதவியில்லாமல் தானாகவே எதையும் அறியக் கூடியது இது நல்ல மூளை இரண்டாவது மற்றவர்கள் எடுத்துச் சொல்லிய பிறகு அறியக்கூடியது இதுவும் நல்ல மூளைதான் ஆனால் மூன்றாவதோ தானாகவும் அறிந்து கொள்வதில்லை பிறர் விளக்கியும் அறிந்து கொள்வதில்லை இது பயனற்றது நிக்கோலோ மாக்கியவெல்லி பழமொழிகள் மனிதனுடைய உடைமையா யிருக்கக் கூடியது அறிவு ஒன்றே ஆகையால் அறிவை விருத்தி செய்வதே ஆசைப்பட்டு அடைய முயலத்தக்க ஒரே வெற்றியாகும் பிறர் அறியாததை வைத்து அவர்களை மதித்தல் ஆகாது அறிந்துள்ளதை எவ்வாறு அறிந்திருக்கின்றனர் என்பதை வைத்தே அவர்களை மதிக்கவேண்டும் பிரெஞ்சுப் பழமொழி குறிப்புகள் பகுப்பு நல்லொழுக்கங்கள் பகுப்பு மனம் பகுப்பு அறிவியல் |
வெற்றி தோல்வி பற்றி பல சிறந்த மேற்கோள்கள் உள்ளன மேற்கோள்கள் நீ பிறந்தது வெற்றி மேல் வெற்றி பெறுவதற்கே தோல்வியுற அல்ல அப்படியே உன்னைத் தோல்வி வந்து அணைத்தாலும் அந்தத் தோல்வியும் ஒரு தற்காலிகத் தடையே உனது தன்னம்பிக்கையே அந்தத் தடைகளைத் தகர்த்தெறியும் உன் வாழ்க்கையில் எப்போது தோல்விகள் நிற்கிறதோ அப்போது வெற்றியும் நின்று விடுகிறது ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்லவிழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள் பான்னி ப்ளேயர் எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம் என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம் மைக்கல் ஜோர்டன் நான் பல தடவைகள் தோல்வியை தளுவியுள்ளேன் ஆதலாலேயே நான் வெற்றி பெற்றேன் நான் தோல்வியை ஒப்புக்கொள்வேன் ஆனால் மறுதடவை முயற்சி செய்யாமல் இருப்பதை ஒப்புக்கொள்ள மாட்டேன் டபிள்யு கிளெமென்ட் இசுடோன் எந்தத் துறையையும் சார்ந்த ஒவ்வொரு வெற்றியாளரும் சாதனையாளரும் இந்த வர்த்தைகளில் பொதிந்திருக்கும் மந்திரத்தை அறிந்திருப்பார்கள் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு இடர்பாட்டிலும் மிகப் பெரிய அநுகூலத்திற்கான விதை ஒளிந்திருக்கிறது அடால்ப் இட்லர் நீ வெற்றி பெற்றால் நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது அடால்ஃப் ஹிட்லர் பிரவுனிங் கீழான லட்சியத்தில் வெற்றி காண்பதை விட உயர்ந்த லட்சியத்தில் தோல்வி காண்பது சிறந்தது ஹ்யூம் கீழே விழாமல் இருப்பதில் பெருமையில்லை விழுந்த பொழுதெல்லாம் எழுந்திருப்பதே பெருமை நிக்கோலோ மாக்கியவெல்லி தன் போக்கின்படி ஒருவன் செய்கிற காரியங்கள் காலப்போக்கிற்கும் சூழ் நிலைகளுக்கும் பொருந்தி விடுகிறபோது அந்த மனிதன் தன் காரியத்தில் தான் எதிர்பார்க்கும் பலனை அடைகிறவனாகவும் வெற்றி பெறுகிறவனாகவும் ஆகிவிடுகிறான் காலப்போக்கிற்கும் சூழ்நிலைகளுக்கும் ஒத்து வராத போக்குடைய மனிதன் தோல்வியடைகிறான் எதையும் சிர்தூக்கி ஆராய்ந்து அளவிட்டு ஆற அமர ஆலோசித்து செய்வதால்தான் பலர் தங்கள் திட்டங்களில் வெற்றியடைகிறார்கள் ஒருவன் மாபெரும் வெற்றியுடன் பத்துக் காரியங்களைக் கூடச் செய்து முடித்து விடலாம் ஆனால் முக்கியமானதொரு தோல்வியே முன்னதனைத்தையும் அழித்து விடப்போதுமானது குறிப்புகள் பகுப்பு கருப்பொருட்கள் |
அன்பு என்பது நெருக்கமான உள்ளப் பிணைப்பு தொடர்பான ஓர் உணர்வும் அநுபவமும் ஆகும் மேற்கோள்கள் அலெக்சான்டர் போப் வாழ்க்கையின் வறுமையிலே துன்பப்படுவோர்களுக்காக இரங்குக இன்புறுவோர் துன்புறும் மக்களுக்குக் காட்டும் இரக்கம் மட்டுமல்ல அது கடன் கடமை மனிதநேயம் அன்னை தெரசா நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும் அன்பிற்கு தடை என்றால் அந்த வேலிகளை தாண்டவே விரும்புவேன் காண்டேகர் அன்பில் நம்பிக்கை வை அது துயரில் கொண்டு போய் விட்டாலும் பரவாயில்லை இதயத்தை மூடாதே காந்தி பகைமையை அன்பால் வெல்லுங்கள் சோம்பலை செயல் ஊக்கத்தால் வெல்லுங்கள் எத்தனை துன்பங்கள் பகைவர்களால் வந்தாலும் அதை அன்பாலேயே வென்று விடுங்கள் நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான கருத்துகளைக் கொண்டிருக்கலாம் ஆனால் இதயங்கள் இணைவதற்குத் தடை ஏதுமில்லை அன்பு எப்போதும் பாதிப்படைவது எப்போதும் வன்மம் கொள்ளாது பழி வாங்காது அன்பு எப்போதும் கேட்காது கொடுக்கத்தான் செய்யும் மனித குலத்தை அன்பு என்ற விதி தான் ஆள்கிறது எங்கே அன்பிருக்கிறதோ அங்கே வாழ்க்கை இருக்கிறது செசுடர் பீல்டு மற்றவர்களை அன்பால் மகிழச் செய்வதே ஒருவன் பெற்றிருக்க வேண்டிய பாக்கியங்களில் எல்லாம் மேலான பாக்கியம் மௌரசு அன்பு காட்டுவது எச்சரிக்கை உணர்வை விடவும் சிறந்தது மேலானது ஆனால் தயக்கம் இல்லாமல் மற்றவர்களுக்குக் கொடுக்கத் தெரிந்திருக்க வேண்டும் இங்கர்சால் அன்பில்லாத இடத்தில் தான் கோபம் முட்டாள் தனம் விரோதம் எல்லாம் இருக்கும் அன்பே இல்லாத மாளிகை காட்டு மிருகங்கள் வாழும் இருண்ட குகை அரிசுடோடில் அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நாம் அன்பு செலுத்த முடியாது அரவிந்தர் முழுமையான அன்பு இல்லையேல் முழுமையான அழகு இருக்க முடியாது அழகு முழுமையாக இல்லாத இடத்தில் முழுமையான மகிழ்ச்சி ஏற்பட இயலாது கிருபானந்த வாரியார் அன்பும் மரியாதையும் இருப்பவன் உலகத்தில் எதையும் சாதித்து விடுவான் தீமை செய்பவனும் அவனிடம் பணிவான் இதயத்திலிருந்து பிறக்கும் அன்பே பண்பு மூளையிலிருந்து தோன்றும் கூற்றே அறிவு அறிவை விட பண்பே உலகுக்குத் தேவை ராமகிருட்டிணர் அன்பு அறிவில் இருந்தால் சத்தியம் பிறக்கும் அன்பு மனதில் இருந்தால் கருணை பிறக்கும் அன்பு உணர்வில் இருந்தால் காதல் பிறக்கும் அன்பு செயலில் இருந்தால் அஹிம்சை பிறக்கும் அன்பு கல்வியில் இருந்தால் தர்மம் பிறக்கும் வில்லியம் மனிதர்கள் குறைகள் உள்ளவர்கள் தாம் அந்தப் பக்கத்தை மூடிவிட்டு அனைவரையும் நேசிக்க அன்பு என்ற கதவை மட்டும் திறந்து வையுங்கள் உங்கள் அன்பு உண்மையாக இருக்கும்போது உலகம் பிரகாசமாக இருக்கும் இயேசு கிறித்து அன்பு கொள்ளாதவன் கடவுளை அறியாதவன் ஏனெனில் அன்பே கடவுள் முகமது நபி அறிவு இறைவனின் உறைவிடத்தை நாடுகிறது ஆனால் அன்புதான் இறைவனின் உறைவிடம் கதே நமக்கு நன்மை செய்துகொள்ளச் சிறந்த வழி பிறர்க்கு அதைச் செய்வதாகும் இறைத்தால்தான் சேகரிக்க முடியும் சமூகத்தை ஒன்றாகக் கட்டிச் சேர்த்து வைத்திருப்பது அன்பு என்னும் பொற்சங்கிலி கதே பிறருடைய அன்பில் ஆனந்தம் காணும்பொழுதுதான் ஒருவன் உண்மையாக வாழ்ந்தவனாவான் சமூகத்தை ஒன்றாகக் கட்டிச் சேர்த்து வைத்திருப்பது அன்பு எனும் பொற்சங்கிலி சுவாமி விவேகானந்தர் வேதனையைத் தாங்கும் வல்லமை செயலாற்றும் வல்லமையை விட மிகப் பெரியது அன்பின் வல்லமை வெறுப்பின் வல்லமையை விட மிகப் பெரியது அன்பு செய் உதவி செய் உன்னால் முடிந்ததை செய் ஆனால் நிபந்தனை ஏற்படுத்தாதே எல்லாப் பெருக்கமும் வாழ்வு எல்லாச் சுருக்கமும் சாவு அன்பு என்பது பெருக்கம் சுயநலம் என்பது சுருக்கம் எனவே அன்புடையவனே வாழ்பவன் சுயநலமுடையவன் செத்துக் கொண்டிருக்கிறான் வஞ்சனையால் பெரும்பணி எதையும் சாதித்து விட முடியாது அன்பாலும் உண்மையான ஆற்றலாலும் தான் அரும் பெரும் சாதனைகள் நிறைவேறுகின்றன அன்பிருக்கிறதா உங்களிடம் உங்களால் ஆகாத காரியம் ஒன்றுமே இல்லை மார்க் ட்வைன் செவிடரும் கேட்கக்கூடிய பார்வையற்றோரும் படிக்கக் கூடிய மொழிதான் அன்பு செல்லி சாதாரண செயல்கள் கூட அன்புடன் கலந்தால் அழகு பெறுகின்றன தாகூர் உங்கள் அன்பை இரகசியமாக வைத்திருக்காதீர்கள் சாக்கிரட்டீசு மனிதர்களை எடை போட்டுக்கொண்டே இருந்தால் அவர்களை நேசிக்க நேரம் இருக்காது வில்லியம் சேக்சுபியர் மாறுதல் கண்ட உடன் மாறிடும் அன்பு உண்மையிலேயே அன்பாகாது பெண்களின் அழகிய தோற்றத்தைக்காட்டிலும் அவர்களுடைய அன்பே என் காதலைப் பெறும் ஷேக்ஸ்பியர் நெப்போலியன் பொனபார்ட் உண்மையான மனிதன் யாரையும் துவேஷிக்க மாட்டான் செர்லாக் ஃகோம்ஸ் ஒருவன் பணத்தால் நாயை வாங்கிவிட முடியும் ஆனால் அன்பு ஒன்றினால்தான் அதன் வாலை ஆட்டி வைக்க முடியும் ஹென்ரிக் இப்சன் அன்பு என்பதைப் போல பொய்யும் புலையும் நிறைந்த மொழி வேறு எதுவும் கிடையாது ஜான் ரஸ்கின் பெருந்தன்மையைக் காண்பதிலே மற்றவர்களுக்கு அன்பு காட்டுவதிலே அதற்கேற்ப மன நெகிழ்வூட்டும் செயல்களைச் செய்து காட்டி மகிழ்ச்சி காண்பதே அன்பு என்ற கருணையின் அழகாகும் அன்பும் நம்பிக்கையுமே ஓர் ஆன்மாவுக்குரிய தாய்ப்பால் அன்பு முக்கியமாக வளர்வது ஒருவருக்கு ஒருவர் வழங்கிடும் ஈகை என்ற தத்துவ உணர்விலேதான் சிறிது அன்பு குழந்தையிடம் காட்டினால் அது பன்மடங்கு திரும்பி தன் அன்பைக் கொட்டுகிறது கான்பூசியசு அன்பு என்பது உதவி செய்வதுதான் அனைவரிடத்தும் எல்லோரும் அன்பு காட்ட வேண்டும் இதனால் நல்லவர்களின் நட்பை நாடுங்கள் பிறர் அன்புணர்ச்சி இருந்தால் சாதாரணச் செயல்களும் பெருமையுள்ளவைகளாக விளங்குகின்றன தாக்கரே நன்மை செய்ய வேண்டும் என்ற உணர்ச்சியிருந்தால் அத்துடன் தீயகுணங்கள் அதிகமான அளவில் சேர்ந்திருக்க முடியாது சுயநலத்தோடு சில நற்குணங்கள் கூடச் சேர்ந்திருப்பதில்லை ஹோம்ஸ் இந்த உலகத்தில் நாம் கொடுப்பதுதான் நம்மைச் செல்வராக்குமே தவிர நாம் பெற்றுக்கொள்வதன்று பீச்சர் உலகத்தின் நல்ல பொருள்களைத் தேவையுள்ளவர்களுக்குப் பகிர்ந்து கொடுப்பதில் எனக்குக் கிடைக்கும் இன்பத்தைப் பார்க்கினும் எனக்கு அதிக மகிழ்ச்சியளிப்பது வேறில்லை ஸெனீகா அன்பைப் போல் பெருகி வளர்வது வேறில்லை ஒரு கையால் வாரி இறைப்பவர்கள் இரு கைகளால் அள்ளியெடுக்கிறார்கள் ஆனால் எப்பொழுதும் அது பணமாயிராது வேறு நன்மையாகவும் இருக்கும் ரே நல்ல மனிதனுடைய வாழ்க்கையில் சிறந்த பகுதி எதுவென்றால் அவ்வப்போது அவன் அன்புடன் சிறுசிறு செயல்களைச் செய்வதுதான் அவை அற்பமானவைகளாயும் குறிப்பிட முடியாதவைகளாயும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டாதவைகளாயும் இருக்கும் வோர்ட்ஸ்வொத் அன்புள்ள இதயத்தின் ஊற்று அதைச் சுற்றியுள்ளவர்களின் முகங்களெல்லாம் புன்னகையுடன் விளங்கும் வாஷிங்டன் இர்விங் அன்பு என்ற மொழியை ஊமையர் முடியும் செவிடர் கேட்டுப் புரிந்துகொள்ள முடியும் போவீ ஓர் எதிரியை உண்மையான உயர்ந்த முறையில் கொல்ல வேண்டும் என்றால் அவனை வதைப்பது வழியன்று அன்பினால் நீ அவன் பகைவனாயிருப்பதை மாற்றிவிட முடியும் அதனால் பகைவன் ஒழிந்துவிடுவான் அலேய்ன் அன்புள்ள இதயம் இன்பத்தின் எல்லாவற்றிற்கும் வானுலகம் திறந்தேயிருக்கின்றது பெராங்கர் நம்முள் ஒவ்வொருவரும் நம்மைச் சுற்றியிருக்கும் சிறு கூட்டத்தாரை அதிக மகிழ்ச்சியுடனும் மேலான நிலையிலும் வாழச்செய்வது கடமையாகும் ஏ பி ஸ்டேன்லி பிறரை இன்புறச்செய்தல் நம்மை மேல்நிலைக்கு உயரச் செய்யும் என் எம் சைல்டு நல்ல உதவிகளை விதைத்தால் அவைகளிலிருந்து இனிய நினைவுகள் வளர்ந்து பெருகும் திருமதி டி ஸ்டேயல் உதவி செய்பவன்தான் அதை உடனே மறந்துவிட வேண்டும் ஒருவனுக்குச் செய்த உதவியை அவனுக்கு நினைவுறுத்தலும் அதைப்பற்றிப் பேசுதலும் அவனை அவமானப்படுத்துவது போலாகும் டெமாஸ்தனிஸ் இதயங்களை அன்பால் வசப்படுத்திக்கொள் எல்லோரும் உனக்குப் பணி செய்வார்கள் எல்லாப் பணப்பைகளும் உன்னுடையவையாகும் பர்லே ஒருவருக்கொருவர் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டத்தைக் குறைத்துக்கொள்ள உதவி செய்யாவிட்டால் நாம் எதற்காக வாழ்கிறோம் ஜியார்ஜ் எலியட் அன்புள்ள இதயம் இல்லாவிட்டால் நாம் நீதியாக இருக்க முடியாது வாவினார் கூன் மனிதர்கள் தாங்கள் எல்லாரும் அனுபவித்து வரும் துயரத்தைக் குறைத்துக்கொள்வதற்குத் தமக்குள் அன்பு பரோபகாரம் இரக்கம் ஆகியவைகளைக் கைக்கொண்டாடி மானிட வாழ்க்கையிலுள்ள பாதித் துயரம் குறைந்துவிடும் அடிஸன் மதிப்பை அடிப்படையாகக் கொண்டதே அன்பு பக்கிங்ஹாம் உண்மையாக அன்பு செலுத்துவோனுடைய இதயம் பூவுலகின் ஒரு சுவர்க்கம் அவனிடம் இறைவர் தங்குகிறார் ஏனெனில் இறைவர் அன்பு மயமானவர் லாமென்னெய்ல் வாழ்க்கையில் தலைசிறந்த இன்பம் அன்பு ஸர் வில்லியம் டெம்பின் அன்பு தானாக வருவது அதை விலைக்கு வாங்க முடியாது லாங்ஃபெல்லோ நாம் எவைகளில் அன்பு வைக்கிறோமோ அவைகளாலேயே உருவாக்கப்பெறுகிறோம் கரே இதயத்தில் இடமிருந்தால் வீட்டிலும் இடமிருக்கும் மூர் தெய்வத்தைப்பற்றிய தியானமும் அன்பும் மனிதனுக்கு இருந்தால் போதும் அவன் மலைகளைப் போல் நெடுங்காலம் நிலைத்திருத்தலைப் போன்றது வாட்ஸ் பணிவுள்ள அன்புதான் சுவர்க்க வாயிலைக் காத்து நிற்கின்றது செருக்குள்ள விஞ்ஞான அறிவன்று யங் அன்பு மனிதர்களின் சுயநலத்தின் அடிப்படையில் எழும்புகிறது தாங்கள் ஏதாவது நன்மை பெறுகிற வரையில் அன்பு செலுத்துவார்கள் அது நின்று போனதும் அன்பும் நின்றுபோகும் நிக்கோலோ மாக்கியவெல்லி அன்பின் வழியது உயிர்நிலை திருவள்ளுவர் அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்துஇன்புற்றார் எய்தும் சிறப்பு திருவள்ளுவர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு திருவள்ளுவர் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் திருவள்ளுவர் ஈரம் இல்லாதது கிளை நட்பு அன்று முதுமொழிக்காஞ்சி பழமொழிகள் எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள் ஆனால் அன்போடு பரிமாறுங்கள் இங்கிலாந்து பழமொழி மேற்கோள்கள் வெளியிணைப்புக்கள் பகுப்பு உணர்வுகள் |
பழமொழிகள் அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான் இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம் இறைக்க ஊறும் மணற்கேணி ஈயப் பெருகும் பெருஞ்செல்வம் உழுகிற நாளில் ஊருக்குப் போனால் அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும் ஒரு காசு பேணின் இரு காசு தேறும் கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும் கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான் கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல் கற்கையில் கல்வி கசப்பு கற்றபின் அதுவே இனிப்பு காய்த்த மரம் கல் அடிபடும் காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி காற்று உள்ளபோதே தூற்றிக்கொள் குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும் செய்வன திருந்தச் செய் சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா நடந்தால் நாடெல்லாம் உறவு படுத்தால் பாயும் பகை பதறாத காரியம் சிதறாது பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் வாயுள்ள பிள்ளை பிழைக்கும் வாழ்வும் தாழ்வும் சில காலம் திருக்குறள்கள் உடைய ரெனப்படுவ தூக்கம் அஃதிலார் உடைய துடையரோ மற்று கருத்து ஒருவர் ஒன்றை உடையவர் எனின் அவர் ஊக்கத்தை உடையவரே அவ்வூக்கம் இல்லாதவர் மற்றை எவற்றை உடையவராயினும் உடையவர் ஆவரோ உள்ள முடைமை உடைமை பொருளுடமை நில்லாது நீங்கி விடும் கருத்து ஊக்கம் உடைமையே நிலையான உடைமையாகும் பொருளுடைமையோ நிலைபெறலின்றி நீங்கிப் போகும் ஆக்கம் இழந்தே மென் றல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துதுடை யார் கருத்து ஊக்கத்தை உறுதியான கைப்பொருளாக உடையவர் எம் செல்வத்தை இழந்து விட்டோம் என்று வருந்திக் கூறும் நிலைக்கு ஆட்படார் ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க முடையா னுழை கருத்து தளராத ஊக்கம் உடையவனிடத்து வழிகேட்டுச் செல்வம் தானே வந்து சேரும் |
ஜில்லா என்பது ல் திரைக்கு வந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும் மோகன்லால் விஜய் காஜல் அகர்வால் பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடித்து வெளிவந்த இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார் மேலும் இப்படத்தை எழுதி இயக்கியவர் இரா தி நேசன் ஆவார் இப்படம் சனவரி ஆம் திகதி தைப்பொங்கல் வெளியீடாக வெளிவந்தது நடிகர்கள் மோகன்லால் சிவன் விஜய் சக்தி காஜல் அகர்வால் சாந்தி மஹத் ராகவேந்திரா விக்னேஷ் சிவனின் மகன் நிவேதா தாமஸ் மகாலட்சுமி சிவனின் மகள் சூரி கோபால் சக்தியின் நண்பன் சம்பத் ராஜ் ஆதி கேசவன் சிவனின் மற்றொரு வளர்ப்பு மகன் அமைச்சர் பிரதீப் ரவட் உயர் காவல்துறை அதிகாரி பூர்ணிமா பாக்யராஜ் சிவனின் மனைவி தம்பி ராமையா வித்யுலேகா ராமன் ஜீவா சிறப்புத் தோற்றம் ஸ்கார்லெட் வில்சன் சிறப்புத் தோற்றம் மேற்கோள்கள் சிவன் சிவன் இல்லாமல் சக்தி இல்ல சக்தி ஆயிடு போலீசா சக்தி சக்தியில்லாம எவனுமேயில்ல ஆயிட்ரப்பா ஆனா என்னவா என்னது பொலிசாவா இங்க தொப்பி போட்ட போலிச விட தொப்பை போட்ட போலிஸ் தான் அதிகமா இருக்கிறீங்க கோபால் வேணாம் விட்டுடு பின்னாடி பிரச்சினை ஆயிடும் சொல்லிட்டன் பின்னாடி பிரச்சினை ஆயிடும் சொன்னாக் கேளு பின்னாடி பிரச்சினை ஆயிடும் இவர் ஐபிஎஸ் துரைசிங்கம் அச்சி கீழ இறக்கு சான்றுகள் பகுப்பு தமிழ்த் திரைப்படங்கள் பகுப்பு இரா தி நேசனின் திரைப்படங்கள் பகுப்பு இந்தியத் திரைப்படங்கள் பகுப்பு திரைப்படங்கள் |
புலி பசித்தாலும் புல்லை தின்னாது புலி பாந்தெரா தீகிரிஸ் என்னும் பூனையினத்தைச் சேர்ந்ததாகும் பாந்தெரா இனத்தின் நான்கு பெரிய பூனையினங்களில் இதுவே மிகப் பெரியதாகும் இதன் பூர்வீகம் பெரும்பாலும் கிழக்கு மற்றும் தெற்கு ஆசியா ஆகும் புலி உயர்நிலை ஊனுண்ணியும் ஆதிக்கமிக்க ஊனுண்ணியும் ஆகும் மீற்றர்கள் அடிகள் வரை நீளமும் கிலோகிராம் பவுண்டுகள் வரை எடையும் கொண்டுள்ள பெரிய புலி உள்ளினங்களை கூரிய நகங்கள் கொண்டு வேட்டையாடும் தகவமைப்பு கொண்ட அழிந்துவிட்ட பாலூட்டிகளின் அளவோடு ஒப்பிடலாம் பழமொழிகள் புலி பசித்தாலும் புல்லை தின்னாது திரைப்படங்கள் புலி பாசத்துக்கு முன்னாடி தான் நான் பனி பகைக்கு முன்னாடி புலி மருதிவீரன் விஜய் சான்றுகள் பகுப்பு விலங்குகள் |
பிச்சைக்காரன் என்பது ல் வெளியான தமிழ் திரைப்படம் ஆகும் இத்திரைப்படத்தில் அருள் என்ற பெயரில் விஜய் ஆன்டனி நடித்துள்ளார் அனு எனும் பெயரில் சட்னாவும் நடித்துள்ளனர் அருள் பிச்சை சார் பிச்சை ரொம்ப பசிக்கிது நானும் இவங்கள்ல ஒருத்தன் தான் பிச்சைக்காரன் அனு |
ஆத்திசூடி என்பது ஒரு நீதி நூல் ஆகும் இதனை ஔவையார் இயற்றியுள்ளார் கடவுள் வாழ்த்து ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே ஆத்தி திருவாத்தி பூமாலையை சூடி அணிபவராகிய சிவபெருமான் அமர்ந்த விரும்பிய தேவனை விநாயகக் கடவுளை ஏத்தி ஏத்தி வாழ்த்தி வாழ்த்தி தொழுவோம் வணங்குவோம் யாமே நாமே உயிர் வருக்கம் அறம் செய விரும்பு நீ தருமத்தை கடமையை ச் செய்ய ஆவல் கொள் ஆறுவது சினம் கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும் இயல்வது கரவேல் உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு ஈவது விலக்கேல் ஒருவர் மற்றவர்க்கு கொடுப்பதை வேண்டாமென்று தடுக்காதே உடையது விளம்பேல் உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே ஊக்கமது கைவிடேல் எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது எண் எழுத்து இகழேல் எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இன்றியமையாதன ஆகவே அவற்றை வீணென்று இகழ்ந்து கற்காமல் விட்டு விடாதே ஏற்பது இகழ்ச்சி இரந்து வாழ்வது இழிவானது அதனால் யாசிக்கக் கூடாது ஐயம் இட்டு உண் யாசிப்பவர்கட்கு கொடுத்து பிறகு உண்ண வேண்டும் ஒப்புரவு ஒழுகு உலக நடையை அறிந்துகொண்டு அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள் ஓதுவது ஒழியேல் நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு ஔவியம் பேசேல் ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே அஃகஞ் சுருக்கேல் அதிக இலாபத்துக்காக தானியங்களை குறைத்து அளந்து விற்காதே உயிர்மெய் வருக்கம் கண்டொன்று சொல்லேல் கண்ணாற் கண்டதற்கு மாறாகப் பொய் சாட்சி சொல்லாதே ஙப் போல் வளை ங என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும் ங என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால் ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளங்கும் அதைப்போல பணிவாக பெரியவர் முன் வளைய வேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம் சனி நீராடு சனி குளிர்ந்த நீராடு ஞயம்பட உரை கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாகப் பேசு இடம்பட வீடு எடேல் உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாதே இணக்கம் அறிந்து இணங்கு ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன் அவர் நல்ல குணங்களும் நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன் நட்பு கொள்ளவும் தந்தை தாய்ப் பேண் உன் தந்தையையும் தாயையும் அவர்களுடைய முதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று நன்றி மறவேல் ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறவாதே பருவத்தே பயிர் செய் எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும் மண் பறித்து உண்ணேல் பிறர் நிலத்தை திருடி அதன் மூலம் வாழாதே அல்லது நீதி மன்றத்தில் இருந்து கொண்டே லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்காதே என்றும் பொருள் கொள்ளலாம் இயல்பு அலாதன செய்யேல் நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே அரவம் ஆட்டேல் பாம்புகளை பிடித்து விளையாடாதே இலவம் பஞ்சில் துயில் இலவம் பஞ்சு எனும் ஒரு வகை பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு வஞ்சகம் பேசேல் கபடச் உண்மைக்கு புறம்பான கவர்ச்சிகரமான சொற்களை பேசாதே அழகு அலாதன செய்யேல் இழிவான செயல்களை செய்யாதே இளமையில் கல் இளமை பருவத்தில் இருந்தே கற்கவேண்டியவைகளை இலக்கணத்தையும் கணிதத்தையும் தவறாமல் கற்றுக்கொள் அறனை மறவேல் தருமத்தை எப்போதும் மறவாமல் செய் அனந்தல் ஆடேல் மிகுதியாக தூங்காதே ககர வருக்கம் கடிவது மற யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே காப்பது விரதம் தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும் அல்லது பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் அவற்றைக் காப்பாற்றுவதே தவம் ஆகும் கிழமை பட வாழ் உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ் கீழ்மை யகற்று இழிவான குணஞ் செயல்களை நீக்கு குணமது கைவிடேல் நன்மை தரக்கூடிய நல்ல குணங்களை பின்பற்றுவதை நிறுத்திவிடாதே கைவிடேல் கூடிப் பிரியேல் நல்லவரோடு நட்பு செய்து பின் அவரை பிரியாதே கெடுப்ப தொழி பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்யாதே கேள்வி முயல் கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயற்சி செய் கைவினை கரவேல் உங்களுக்கு தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும் கொள்ளை விரும்பேல் பிறர் பொருளை திருடுவதர்க்கு ஆசைப்படாதே கோதாட் டொழி குற்றமான விளையாட்டை விட்டு விடு நீக்கு கௌவை அகற்று வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு சகர வருக்கம் சக்கர நெறி நில் தர்மசக்கர நெறிப்படி வாழ வேண்டும் அரசன் ஆள்பவர் தலைவர் சான்றோ ரினத்திரு அறிவொழுக்கங்ளில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு சித்திரம் பேசேல் பொய்யான வார்தைகளை மெய் போலப் பேசாதே சீர்மை மறவேல் புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே சுளிக்கச் சொல்லேல் கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதீர் சூது விரும்பேல் ஒருபொதும் சூதாட்டத்தை விரும்பாதே செய்வன திருந்தச் செய் செய்யும் செயல்களை தவறோ குறையோ ஏதும் இல்லாமல் செய்யவும் சேரிடமறிந்து சேர் நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடையவர்களா என நன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு சையெனத் திரியேல் பெரியோர் சீ என வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே சொற்சோர்வு படேல் பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே சோம்பித் திரியேல் முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே தகர வருக்கம் தக்கோ னெனத்திரி பெரியோர்கள் உன்னைத் தக்கவன் யோக்கியன் நல்லவன் என்று புகழும்படி நடந்துக்கொள் தானமது விரும்பு யாசிப்பவர்களுக்கு தானம் செய் திருமாலுக்கு அடிமை செய் நாராயணமூர்த்திக்கு தொண்டு செய் தீவினை யகற்று பாவச் செயல்களைச் செய்யாமல் இரு துன்பத்திற் கிடங்கொடேல் முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே தூக்கி வினைசெய் ஒரு வேளையை முடிப்பதற்க்கான் வழிமுறைகளை நன்கு ஆராயிந்து அறிந்து பின்பு அச்செயலை செய்யத தொடங்கவும் தெய்வ மிகழேல் கடவுளை பழிக்காதே தேசத்தோ டொத்துவாழ் உன் நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகை இல்லாமல் வாழ் தையல்சொல் கேளேல் மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே தொன்மை மறவேல் பழமையாகிய நட்பினை மறந்துவிடாதே தோற்பன தொடரேல் ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்தே அதை தொடங்காதே நகர வருக்கம் நன்மை கடைப்பிடி நல்வினை செய்தலை எவ்வளவு இடையுறு வந்தாலும் உறுதியாகத் தொடரவும் நாடொப் பனசெய் நாட்டில் உள்ள பலரும் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை செய் நிலையிற் பிரியேல் உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே நீர்விளை யாடேல் வெள்ளத்தில் நீந்தி விளையாடாதே நுண்மை நுகரேல் நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே நூல்பல கல் அறிவை வளர்க்கும் பல நூல்களைப் படி நெற்பயிர் விளை நெற்பயிரை விளையச் செய்வதை உன் வாழ்க்கை தொழிலாகக் கொண்டு வாழ் நேர்பட வொழுகு ஒழுக்கந் தவறாமல் நேர்வழியில் நட நைவினை நணுகேல் பிறர் வருந்தத் தகுந்த தீ வினைகளைச் செய்யாதே நொய்ய வுரையேல் பயன் இல்லாத அற்ப வார்த்தைகளைப் பேசாதே நோய்க்கிடங் கொடேல் மிகுந்த உணவு உறக்கம் முதலியவற்றால் நோய்க்கு வழிவகை செய்யாதே பகர வருக்கம் பழிப்பன பகரேல் பெரியோர்களால் பழிக்கப்படும் இழிவான சொற்களான பொய் கடுஞ்சொல் ஆகியவற்றைப் பேசாதே பாம்பொடு பழகேல் பாம்புபோல கொடிய குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே பிழைபடச் சொல்லேல் குற்றம் உண்டாகும் படி எதையும் பேசாதே பீடு பெறநில் பெறுமையை அடையும் படியான நல்ல நிலையிலே நில் புகழ்ந்தாரைப் போற்றி வாழ் உன்னையே நம்பியவர்களை காப்பாற்றி வாழ் பூமி திருத்தியுண் விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண் அ விவசாயத்தை வாழ்க்கைத் தொழிலாகக் கொள் பெரியாரைத் துணைக்கொள் அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் பேணிக்கொள் பேதைமை யகற்று அறியாமையைப் போக்கு பையலோ டிணங்கேல் அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே பொருடனைப் போற்றிவாழ் பொருள்களை செல்வம் உட்பட வீண் செலவு செய்யாமற் பாதுகாத்து வாழ் போர்த்தொழில் புரியேல் யாருடனும் தேவையில்லாமல் சண்டை பொடுவதை ஒரு வேலையாகச் செய்யாதே மகர வருக்கம் மனந்தடு மாறேல் எதனாலும் மனக்கலக்கம் அடையாதே மாற்றானுக் கிடங்கொடேல் பகைவன் உன்னை துன்புறுத்தி உன்னை வெல்வதற்க்கு இடம் கொடுக்காதே மிகைபடச் சொல்லேல் சாதாரணமான விஷயத்தை மாயாஜால வார்தைகளால் பெரிதாகக் கூறாதே மீதூண் விரும்பேல் மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே முனைமுகத்து நில்லேல் எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காக போர் முனையிலே நிற்காதே மூர்க்கரோ டிணங்கேல் மூர்க்க குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே மெல்லினல்லாள் தோள்சேர் பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ் மேன்மக்கள் சொற்கேள் நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட மைவிழியார் மனையகல் விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில் மொழிவ தறமொழி சொல்லப் படும் பொருளை சந்தேகம் நீங்கும் படி சொல் மோகத்தை முனி நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்திடு வகர வருக்கம் வல்லமை பேசேல் உன்னுடைய சாமர்த்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே வாதுமுற் கூறேல் பெரியோர்களிடத்தில் முறன் பட்டு வாதிடாதே வித்தை விரும்பு கல்வியாகிய நற்பொருளை விரும்பு வீடு பெறநில் முக்தியை பெறுவதற்கான சன்மார்கத்திலே வாழ்க்கையை நடத்து உத்தமனாய் இரு உயர்ந்த குணங்கள் கொண்டவனாக வாழ் ஊருடன் கூடிவாழ் ஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ் வெட்டெனப் பேசேல் யாருடனும் கத்தி வெட்டுப் போலக் கடினமாக பேசாதே வேண்டி வினைசெயேல் வேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே வைகறை துயிலெழு நாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில் இருந்து எழுந்திரு ஒன்னாரைத் தேறேல் பகைவர்களை நம்பாதே ஓரஞ் சொல்லேல் எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாக பேசாமல் நடுநிலையுடன் பேசு வெளி இணைப்புகள் மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் ஔவையார் நூல்கள் அறம் செய விரும்பு பகுப்பு நீதி நூல்கள் |
பெண் பற்றிய மேற்கோள்கள் சில அழகு என்பது சில காலமே நிற்கும் கொடுங்கோலாட்சி அதற்கு நீ அடிமையாகாதே வால்டேர் பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபீட்சம் அடையாது ஜவகர்லால் நேரு பெண்ணாய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும் தேசிக விநாயகம் பிள்ளை தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு ஔவையார் பெண்ணாக ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள் ஆஸ்கார் ஒயில்ட் எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனரோ அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர் மகாபாரதம் பெண்ணின் ஒழுக்கத்தில் நம்பிக்கை இருத்திலே குடும்ப இன்பத்தின் அடிப்படை லாண்டர் பெண்களின் கண்ணீர் உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி வில்சன் மிசுனர் பெண்களிடம் உள்ள நல்ல பண்பு அவர்களுக்குப் பாராட்டை உண்டு பண்ணுகிறது ஆனால் அவர்களின் நல்ல நடத்தையே அவர்களைத் தெய்வங்களாக்குகிறது வில்லியம் சேக்சுபியர் வாழ்க்கை என்ற ஆற்றையோ கடலையோ கடப்பதற்குப் பெண் என்ற படகோ கப்பலோ அவசியம் தேவை காண்டேகர் அழகான பெண் கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள் குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள் முதலாமவள் ஒரு ஆபரணம் இரண்டாமவள் ஒரு புதையல் நெப்போலியன் ஒரு அழகான பெண்ணுக்கு முத்தம் கொடுத்துக்கொண்டு ஒருவன் வாகனத்தை பாதுகாப்பாக ஓட்டிச் செல்கிறான் என்றால் அவன் முழுமையான முத்தம் தரவில்லை என்று அர்த்தம் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் காதலைப் பொருத்தவரை பெண்கள்தான் நிபுணர்கள் ஆண்களெல்லாம் கற்றுக்குட்டிகள் ஃப்ரான்ஸ்வா த்ருஃபோ பெண்களின் எழுச்சியின்றி மாபெரும் சமூக மாற்றங்கள் சாத்தியமே இல்லை அழகான இனம் என்று குறிப்பிடப்படும் பெண்கள் அவர்களில் அழகற்றவர்களும் உட்பட சமூகத்தில் எந்த நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் கொண்டே சமூக முன்னேற்றத்தை நாம் அளவிடமுடியும் காரல் மார்க்சு பெண்ணுக்கு இயற்கை அளித்திருக்கும் அதிகாரம் அளப்பரியது என்பதனாலோ என்வோ நம் சட்டங்கள் பெண்களுக்குக் குறைவான அதிகாரத்தையே தருகின்றன சாமுவேல் ஜோன்சன் நிச்சயம் இது மிகவும் அநியாயம் வயது இளைஞர்களுக்கு ஜோடியாக வயது நடிகைகளைத் திரைப்படங்களில் நம்மால் காண முடிவதே இல்லை ஜார்ஜ் குளூனி பெண்ணாக இருப்பதென்பது மிகமிக கடினமான விசயம் ஆண்களைச் சமாளிப்பதே முதன்மையான காரியமாக இருப்பதால் ஜோசப் கொன்ராட் ஆண்களின் தர்க்கமெல்லாம் பெண்களின் ஒரு உணர்வுக்கு இணையாகாது வோல்ட்டேர் பெண்கள்தான் திண்மை ஆண்கள் வெறும் பிரதிபளிப்பே கிர்க்கெகார்டு பெண் தாயாகலான் பெண்ணலன் பெரிதும் ஓம்பப்பெறல் வேண்டும் பெண்ணலன் ஓம்பப்படாத இடத்தில் வேறு எவ்வித நலனும் நிலவல் அரிது ஒரு நாட்டுக்கு நலன் அந்நாட்டுப் பெண் மக்கள் நிலையைப் பொறுத்தே நிற்கும் திரு வி கலியாணசுந்தரனார் ஒரு நாட்டின் நாகரிகம் அந்நாட்டின் பெண் மக்கள் நிலையைப் பொறுத்து நிற்கிறதென்பது எவரும் ஏற்கத்தக்க உண்மை பெண்மக்கள் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி இடுக்கணுமின்றிப் பிறப்புரிமை இன்பத்தை எங்கே நுகர்கிறார்களோ அல்கேயுள்ள ஆண்மக்கள் நாகரிக நுட்பம் உணர்ந்தவர்களாகிறார்கள் அந்நாடே நாகரிகம் பெற்றதாகும் திரு வி கலியாணசுந்தரனார் உணர்ச்சி விஷயங்களில் இனிமேல் என்ற பிரச்சினையைப் பெண்களே சீக்கிரத்தில் கவனிக்கக் கூடியவர்கள் தன்னை ஒப்பு க்கொடுப்பது தன்னுடைய வாழ்க்கையை ஓர் ஆண்மகனிடம் பணயமாக வைப்பது எவ்வளவு சீக்கிரத்தில் நடக்கிறதோ அவ்வளவு விரைவிலேயே வருங் காலத்தைப் பற்றித் திட்டம் போடும் திறனும் படைத்து விடுகிறார்கள் அப் பெண்கள் புதுமைப்பித்தன் கடவுளுக்கு அடுத்தபடியாக நாம் பெண்களுக்கு காடமைப் பட்டிருக்கிறோம் முதலில் நமக்கு வாழ்வளித்தவர்கள் அவர்கள் பிறகு அதை வாழத்தக்கதாகவும் அவர்களே செய்கின்றன போவீ பெரிய காரியங்கள் அனைத்திற்கும் தொடக்கத்தில் ஒரு பெண்ணின் தொடர்பு இருக்கும் லமார்ட்டைன் மனிதர்களுக்குள் இருக்கும் கூடுதலான வேற்றுமை வானத்திற்கும் பூமிக்கும் உள்ளது போன்றது ஆனால் பெண்களுக்குள் உள்ள வேற்றுமை வானத்திற்கும் நரகத்திற்கும் உள்ளது போன்றது டென்னிஸன் அழகுள்ள பெண் ஓர் அணியாவாள் நல்ல பெண் ஒரு கருவூலமாவாள் ஸாஆதி பெண்ணின் பெருமை அவள் உலகம் தன்னை அறியாம லிருக்கும்படி வாழ்தல் அவளது புகழ் கணவன் தன்னிடம் காட்டும் மரியாதை அவளுடைய இன்பம் குடும்பம் இன்பமா யிருப்பது ரூஸோ உலகந்தான் பெண்களின் புத்தகம் அவர்கள் என்ன அறிவு பெற்றிருக்கின்றனரோ அது படிப்பிலிருந்து வந்ததன்று பொதுவாக உலக அனுபவத்திலிருந்து வந்ததாகும் ரூஸோ ஒரு பெண்ணின் முதன்மையான பெருமை ஆடவர்கள் தன்னைபற்றி நன்மையாகவோ தீமையாகவோ போசாமலிருக்கும்படி நடந்து கொாள்வது பெரிக்ளிஸ் ஆடவர்கள் மனதின் உள்ளுடணவினால் தெரிந்து கொள்வதைவிட பெண்களின் உணர்வுகள் சிறந்தவை ஆராய்ச்சிக்கு பொருத்தமான காரணங்கள் இல்லாமலே அவர்கள் விரைவில் செய்யும் முடிவுகள் ஆடவர்கள் கவனமாக ஆராய்ந்து செய்யும் முடிவுகளைக் காட்டிலும் மேலானவை டபுள்யு ஐக்மன் பெண் ஆடவனுக்குக் காட்டக்கூடிய ஆழ்ந்த அன்பு அவன் தன் கடமையைச் செய்வதற்கு உதவியாக நிற்றல் முலோக் நயமாகவும் ஆழமாகவும் இருக்கும்படி பேசுவதில் ஒரு பெண்ணைப் போல் வேறு எவருமில்லை விக்டர் ஹியூகோ மனிதர்கள் பார்வையைப் பெற்றிருக்கின்றனர் பெண்கள் உள்ளுணர்வைப் பெற்றிருக்கின்றனர் விக்டர் ஹியூகோ மனிதர்கள் பெண்களின் விளையாட்டுக் கருவிகள் பெண் சைத்தானின் விளையாட்டுக் கருவி விக்டர் ஹியூகோ பெண்கள் பெரும்பாலும் நம்மை விரும்பி நேசிப்பதில்லை அவர்கள் ஒரு மனிதனைத் தேர்ந்தெடுப்பது அவனிடம் காதல் கொண்டன்று அவன் தங்களைக் காதலிப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியாயிருப்பதால்தான் உலகப் பொருளகள அனைததிலும் அவர்கள் அன்பைத்தான் அதிகமாய்க் காதலிக்கின்றனர் ஆண்கள் என்று தனியாக அவர்கள் விரும்பக்கூடியவர்கள் சிலரே இருப்பர் அல்ஃபோன்ஸேகா பெண்கள் எப்பொழுதும் அமிதமான எல்லைகளிலேயே இருப்பர் அவர்கள் மனிதர்களைவிட ஒன்று மேம்பட்டவர்களாயிருப்பார்கள் அல்லது தாழ்ந்தவர்களாயிருப்பார்கள் புரூயெர் பெண் எந்தக் காற்றிலும் அசைந்தாடிக்கொண்டிருக்கும் நாணலைப் போன்றவள் ஆனால் பெரும் புயலிலும் அவள் ஒடிந்து விழமாட்டாள் வேட்லி உலகம் அனைத்தையும் கட்டிக் காப்பாற்றி அமுதூட்டி வரும் நூல்கள் கலைகள் கலை மன்றங்கள் யாவும் பெண்களே ஷேக்ஸ்பியர் பெண்களைப் பெருமிதம் கொள்ளச் செய்வது அழகு அவர்களை மிகவும் பாராட்டும்படி செய்வது பண்பு அவர்களைத் தெய்விகமாகத் தோன்றச் செய்வது அடக்கம் ஷேக்ஸ்பியர் பெண்கள் நம்மை ஆட்சி புரிகின்றனர் அவர்கள் மேலும் நிறைவுடையவர்களாக விளங்கும்படி செய்வோம் அவர்கள் எவ்வளவுக்கு அறிவொளியைப் பெறுகின்றனரோ அவ்வளவுக்கு நாம் அறிவு பெறுவோம் பெண்களின் மனங்களைப் பயிற்சி செய்வதையே ஆடவனின் அறிவு பொறுத்திருக்கின்றது ஷெரிடன் தலைசிறந்த பெண் அநேகமாக மனிதனின் வலிமையைப் பெற்றிருப்பாள் தலைசிறந்த மனிதன் பெண்ணின் நயமான இனிமையைப் பெற்றிருப்பான் திருமதி முலோக் மனிதன் தான் தாழ்வடையாமல் பெண்களைத் தாழ்வடையும்படி செய்ய முடியாது தான் மேலெழாமல் அவர்களை மேல் நிலையடையும்படி செய்ய முடியாது மார்ட்டின் நல்ல உடை நடை பாவனைகளுக்குப் பெண்களுடன் சேர்ந்து வாழ்தல் முக்கியமாகும் கதே பெண்ணின் ஒழுக்கத்தில் நம்பிக்கையிருத்தலே குடும்ப இன்பத்தின் அடிப்படையாகும் லாண்டர் பெண் உலகத்தில் செய்ய வேண்டியனவெல்லாம் ஒரு மகளாகவும் சகோதரியாகவும் மனைவியாகவும் தாயாகவும் தன் கடமைகளை நிறைவேற்ற வேண்டியதேயாகும் ஸ்டீல் மனிதர்களைவிடப் பெண்களுக்கு இதயமும் அதிகம் கற்பனையும் அதிகம் லமார்ட்டைன் ஆடவர்களின் ஆராய்ச்சி அறிவுகள் எல்லாம் பெண்களின் ஓர் உணர்ச்சிக்கு ஈடாக மாட்டா வால்டேர் பெண்களைப்பற்றிய மதிபபீடே நாகரிகத்தின் சோதனையாகும் கார்ட்டிஸ் பெண்கள் மூடர்களாயிருக்கிறார்கள் என்பதை நான் மறுக்கவில்லை மனிதர்களுக்குப் பொருத்தமா யிருப்பதற்காகவே சர்வவல்லமையுள்ள கடவுள் அப்படிப் படைத்திருக்கிறார் ஜார்ஜ் எலியட் பெண்கள் அதிக வளர்ச்சியடைந்த குழந்தைகளைத் தவிர வேறில்லை செஸ்டர்பீல்டு நித்தியமான பெண்மை இயல்பு நம்மை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்கின்றது கதே குறிப்புகள் பகுப்பு நபர்கள் |
வழி சம்பந்தமான கூற்றுக்கள் நேர் வழியில் அடைய முடியாததை ஒரு நாளும் குறுக்கு வழியில்அடைந்து விட முடியாது கதே நாம் செல்லும் மார்க்கம் நல்லதாக இருந்தால் நம்முடைய இலக்கும் தானாகவே நல்லதாகிவிடும் காந்திஜி பிறந்த குழந்தைக்கூட அழுகை எனும் புரட்சி செய்துதான் தன் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்கிறது நேதாஜி சமத்துவம் என்பது சமமாக நடத்தப்படுவது அல்ல சம வாய்ப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஏங்கல்ஸ் எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன ஒன்று காலம் இன்னொன்று மெளனம் மனத் திருப்தி நமக்கு இயற்கையாகக் கிடைத்த செல்வம் ஆடம்பரம் நாம் செயற்கையாக உருவாக்கிக் கொண்ட பஞ்சம் சாக்ரடீஸ் பகுப்பு கருப்பொருட்கள் |
மாயா ல் வெளிவந்த ஒரு தமிழ் திகில் திரைப்படம் இதனை எழுதி இயக்கியவர் அஸ்வின் சரவணன் இப்படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்திலும் ஆரி அம்சத் கான் லட்சுமி பிரியா சந்திரமௌலி ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர் இப்படம் தெலுங்கில் மயூரி என மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது நயன்தாரா மீராக்கு இப்பதான் ஒரு வயசு இதோட இரண்டாவது தடவங்க எப்ப தரப்போறீங்க இன்னுங் கொஞ்ச நேரம் அஜஸ்ட் பண்றீங்களா நான் வந்திடுறன் அவளுக்கு பால் குடுத்தீங்களா சுவாதி மதன் சேர் சான்றுகள் பகுப்பு தமிழ்த் திரைப்படங்கள் |
நீ உயர்ந்து மேலே செல்லச் செல்ல இன்னும் கீழேயே இருப்பவர்களுக்கு நீ சிறியவனாகத் தோன்றுவதில் வியப்பொன்றும் இல்லை அதனால் அவர்கள் உன் முயற்சிகளைப் பற்றி எள்ளி நகையாடினால் கண்டு கொள்ளாதே உன் முயற்சிகளை ஏளனம் செய்வோரிடமிருந்து விலகியே இரு சிறியோரே அவ்வாறு செய்வர் மாறாக உண்மையான பெரியோரோ உன்னாலும் முடியும் என்று உன்னை உணர வைப்பர் மார்க் டுவேய்ன் சராசரி மனிதனின் விமர்சனம் உன் நோக்கத்தைத் திசை திருப்ப அனுமதிக்காதே நீ கனவு கண்டால் அவன் உன்னைப் பைத்தியக்காரன் என்பான் நீ வெற்றி பெற்றால் நீ அதிர்ஷ்டசாலி என்பான் நீ செல்வந்தன் ஆனாலோ உன்னைப் பேராசைக்காரன் என்பான் அவனைக் கண்டுகொள்ளாதே அவனால் உன்னை எப்போதுமே புரிந்துகொள்ள முடியாது ராபர்ட் அல்லேன் நியாயமில்லாத விமர்சனம்கூட ஒரு விதத்தில் பாராட்டேயாகும் நீ ஒருவரின் பொறாமையைத் தூண்டிவிட்டாய் என்பதையே இது காட்டுகிறது டெல் கார்னகி பகுப்பு கருப்பொருட்கள் |
விதைத்துக்கொண்டே இரு முளைத்தால் மரம் இல்லையேல் உரம் முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை நேற்றைய பொழுதும் நிஜமில்லை நாளைய பொழுதும் நிச்சயமில்லை இன்றைக்கு மட்டுமே நம் கையில் ஒவ்வொரு மனிதனும் செத்துப்போவது உண்மைதான் என்றாலும் அவனோடு அவனுடைய முயற்சிகளும் அவன் துவக்கிய காரியங்களும் செத்துப்போய்விடுவதில்லை பெரியார் செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது முயற்சியை எவனொருவன் கைவிடுகிறானோ அப்போதே அவன் திறமை அவனிடமிருந்து போய் விடுகிறது எமர்சன் எல்லோருமே உலகை மாற்றிவிடத் துடிக்கின்றனர் ஆனால் எவரும் முதலில் தங்களை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பதில்லை லியோ டால்ஸ்டாய் எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சுதந்திரம் என்பது கொடுக்கப்படுவதல்ல எடுக்கப்படுவது நேதாஜி உலகில் யாரும் தெய்விகக் குணங்களுடன் பிறப்பது இல்லை ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பொருத்துதான் முன்னேற்றமோ வீழ்ச்சியோ ஏற்படுகிறது அம்பேத்கர் இருட்டை சபித்து கொண்டிருப்பதை விட்டு விட்டு ஒரு மேழ்குவர்த்தியை ஏற்றுங்கள் கான்பூஷியஸ் நீ வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை வறுமைக்குள் தள்ளிவிடும் இங்கர்சால் முயற்சியே உங்களை எழுந்துநின்று பேசச்செய்யும் அதுவே உங்களை உட்கார்ந்து செவிமடுக்கவும் செய்யும் வின்சுடன் சேர்ச்சில் எதுவும் தானாக வருவதில்லை நல்லது எதுவும் நிச்சயமாக வருவதில்லை எல்லாவற்றையும் நாமே கொண்டுவர வேண்டும் ஸி பர்ட்டன் ஒவ்வொரு மனிதனுடைய வேலையும் அவன் உயிரைக் காத்து வருகின்றது எமர்சன் நாம் இடைவிடாமல் நம் புலன்கள் புத்தி ஒழுக்கமுறை உடல் ஆகியவை சம்பந்தமான கருவிகளை உபயோகித்துக்கொண்டே இருந்தால்தான் அவை துருப்பிடியாமல் இருக்கும் பயனற்றுப் போகாமல் இருக்கும் ஸி ஸிம்மன்ஸ் சான்றுகள் பகுப்பு கருப்பொருட்கள் |
தாங்கள் செய்யும் தவறுகளுக்கு அவரவர்கள் சூட்டிக்கொள்ளும் அருமையான பெயர் தான் அனுபவம் கென்னடி உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது தியாகம் தான் வாழ்க்கை இது இயற்கை கற்றுத் தந்த பாடம் காந்திஜி வாழ்க்கை என்பது ஒரு சிறு மெழுகுவத்தி அல்ல அது ஒரு அற்புதமான தீபம் பிரகாசமாக அதை எரிக்கச் செய்து அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் மனிதன் தனக்கு அநியாயம் இழைக்கும் முழு உலகத்தையும் எதிர்த்து நிற்க முடியும் ஆனால் தான் அநியாயமாக நடத்தும் ஒருவனின் எதிரில் நிமிர்ந்து நிற்கவே முடியாது வ ஸ காண்டேகர் இறுதியில் மிஞ்சுவது வருடங்களின் எண்ணிக்கை அல்ல அதில் வாழ்ந்த வாழ்க்கை மட்டுமே ஆபிரகாம் லிங்கன் முதலில் தன்னை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பவன் மட்டுமே உலகை மாற்றத் தகுதி உடையவன் நேதாஜி காலத்தின் மதிப்பு தெரிந்திருப்பவர்களுக்குத்தான் வாழ்க்கையின் மதிப்பும் தெரிந்திருக்கும் கடும் உழைப்பில் செலவழிக்கப்பட்ட ஒரு நாள் நல்ல உறக்கத்தைத் தருகிறது கடும் உழைப்பில் செதுக்கப்பட்ட ஒரு வாழ்க்கை என்றுமே அழியாத புகழைப் பெற்றுத் தருகிறது லியனார்டோ டாவின்சி கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல தன் குற்றங்களை உணராதவனே குருடன் காந்திஜி ஜனநாயகம் ஓர் அரசாங்க வடிவம் மட்டுமல்ல அது ஒரு கூட்டு வாழ்க்கைமுறை சக மனிதர்களுக்கு மதிப்பும் மரியாதையும் செய்யும் மனப்பாங்கு அம்பேத்கர் அரைகுறை பண்பாடு ஆடம்பரத்தை விரும்பும் நிறைந்த பண்பாடு எளிமையை விரும்பும் போவீ அநுபவம் ஒரு நம்பகமான விளக்கு அதைத் துணையாகக் கொண்டு வழி நடக்கலாம் ஒரு மனிதன் வெற்றியடைவதற்குத் தான் முன்னால் கையாண்ட வழிகளையே எதிர் காலத்தில் பயன்படுத்த எண்ணினால் அவனை ஆலோசனையில்லாதவன் என்று சொல்ல முடியாது வெண்டல் ஃபிலிப்ஸ் பழமைகளின் கனி அநுபவம் அதுவே எதிர்காலங்களையெல்லாம் உருவாக்குகின்றது ஆர்னால்டு அநுபவம் மெதுவாகத்தான் கற்பிக்கும் தவறுகள் அதற்குரிய செலவுகள் ஃப்ருடு உனக்குப் பழமை தெரியும் அதிலிருந்து எதிர்காலத்திற் வேண்டிய எச்சரிக்கையைப் பெறமுடியும் மனிதன் தன் தவறுகளிலிருந்து படிக்கிறான் அவைகளிலிருந்தே அவன் பவம் பெறுகிறான் ஷெல்லி வாழ்க்கையில் படித்தலும் படித்ததை மறத்தலும் அடங்கியுள்ளன ஆனால் பெரும்பாலும் படிப்பதைவிட மறந்து வருதலே அறிவுடைமையாகும் புல்வெர் கஷ்டப்பட்டதன் சாரமே அநுபவம் ஏ ஹெல்ப்ஸ் அனுபவத்தைப் பிறருக்குக் கற்றுக் கொடுக்க முடியாத ஒரு மனிதன் மற்றொருவனுடைய கஷ்டத்திலிருந்து பாடம் கற்றுச் கொள்ளமாட்டான் அவன் தானே கஷ்டப்பட வேண்டும் கப்பலின் பின்பகுதியிலுள்ள விளக்குகளால் கப்பல் கடந்து வந்த வழிக்குத்தான் வெளிச்சம் தெரியும் இதைப் போலவே தான் பெரும்பாலான மனிதர்களுக்கு அநுபவமும் காலெரிட்ஜ் அநுபவம் என்ற பள்ளிக்கூடம் செலவு மிகுந்தது ஆனால் மூடர்கள் வேறு எங்கும் படிக்க மாட்டார்கள் அந்தப் பள்ளியில் படிப்பதும் அரிதுதான் ஏனென்றால் நாம் ஆலேசனை சொல்லமுடியுமே அன்றி ஒழுக்கத்தை அள்ளி ஊட்ட முடியாது ஃபிராங்க்லின் வயதையும் அனுபவத்தையும் கொண்டு புதிய அறிவு பெறாமல் எந்த மனிதனும் வாழ்க்கையை நடத்தத் தேலையான திறமை அனைத்தையும் பெற்றிருக்கவில்லை டெரென்ஸ் அநுபவம் தெரிவிக்கும் விதிகள் தத்துவம் பேசுவோர் தங்கள் நூல் நிலையங்களில் இருந்துகொண்டு கூறும் விளக்க உரைகளைவிட மேலானவை ஆர் எஸ் ஸ்டோர்ஸ் நான் சிறுவனாயிருந்த பொழுது ஒவ்வொரு விஷயத்தையும் உறுதியாக நம்பி வந்தேன் சில ஆண்டுகளுக்குப் பின்னால் ஆயிரம் தவறுகளைக் கண்டறிந்தபின் நான் முன்போல் பெரும்பாலான விஷயங்களைப் பாதியளவுகூட நம்ப வில்லை இப்பொழுது கடவுள் அருள் கூர்ந்து தெளிவாக்கியுள்ளதைத் தவிர வேறு எந்த விஷயத்தையும் நான் நம்புவதில்லை ஜான் வெஸ்லி உலகத்தின் சோதனைகளுக்கு உட்படாமலும் அதனிடம் பாடம் படிக்காமலும் ஒருவன் நிறைவுள்ள மனிதனாக விளங்க முடியாது அநுபவம் ஊக்கமாக உழைப்பதிலிருந்து கிடைக்கின்றது காலத்தின் வேகம் அதைச் செம்மைப் படுத்துகின்றது ஷேக்ஸ்பியர் பிடிவாதமுள்ள மனிதர்களுக்கு அவர்கள் அடையும் கஷ்டநஷ்டங்களே ஆசிரியர்கள் ஷேக்ஸ்பியர் அநுபவம் ஓர் உயர்ந்த நகை அது அவ்வளவு அரியதாகத்தான் இருக்கும் ஏனெனில் மிகவும் கூடுதலான விலை கொடுத்தே அது வாங்கப்பட்டிருக்கின்றது ஷேக்ஸ்பியர் ஒவ்வொரு நாளும் அதற்கு முன்னால் கழிந்து சென்ற நாளின் சீடனாகும் பப்ளியஸ்ஸைரஸ் அநுபவத்திற்கு அளவு கடந்த சம்பளம் கொடுக்க வேண்டி யிருக்கின்றது ஆனால் அதற்கு நிகராகச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் வேறில்லை கார்லைல் அறிவிலிகளுக்கும் அயோக்கியர்களுக்கும் அநுபவமே பொதுவான பள்ளிக்கூடம் அறிவும் ஒழுக்கமுமுள்ள மனிதர்கள் வேறு முறையில் பயிற்சி பெறுகின்றனர் எராஸ்மஸ் குறிப்புகள் பகுப்பு கருப்பொருட்கள் |
மதம் என்பது கடவுளை அறிவதற்கான வழியில் மனித ஆன்மா கடந்து செல்லும் வழியாகும் காரல் மார்க்சு மதம் ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்கப் பெருமூச்சாகவும் இதயமற்ற உலகின் இதயமாகவும் ஆன்மா இல்லாத நிலைமைகளின் ஆன்மாகவும் உள்ளது மதம் மக்களுக்கு அபினி மதம் இதயமற்ற உலகின் இதயம் துன்பப்படும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியமான போதை காந்தி எனக்கு மட்டும் அதிகாரம் இருக்குமானால் வகுப்புவாதத்தையும் மதவெறியையும் வெறுப்புணர்வையும் பகையையும் வளர்க்கக் கூடிய எல்லா எழுத்துக்களையும் தீண்டத்தகாதவையாக நான் அறிவிப்பேன் இந்துக்களை அழிப்பதன் மூலம் முஸ்லீம்கள் இஸ்லாத்துக்கு சேவை செய்ய இயலாது மாறாக அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை அழித்தவர்கள் ஆவார்கள் அதேபோல் இஸ்லாமியத்தை அழித்துவிடலாம் என்று இந்துக்கள் நம்புவார்களானால் அவர்கள் இந்து தர்மத்தை அழிப்பவர்களாவார்கள் மதம் பல கிளைகளைக் கொண்ட ஒரு மரமாகும் கிளைகள் என்ற முறையில் பல மதங்கள் இருப்பதாக நீங்கள் சொல்லக்கூடும் மரமாக இருக்கும் மதம் என்னமோ ஒன்று தான் நமது ஒவ்வொரு செயல்பாட்டிலும் மதம் ஊடுருவி இருக்க வேண்டும் ஆனால் இங்கே மதம் என்பது குருகியவாதமாகது முறைபடுத்தப்பட்ட அறவழிப்பட்ட பிரபஞ்ச நிர்வாகம் என்பதில் ஒரு நம்பிக்கை என்பதே இதன் பொருள் இந்த மதம் இந்து இஸ்லாம் கிறித்தவம் முதலியவற்றுக்கு அப்பாற்பட்டது ஒரு இடத்தில் கூடும் பல சாலைகள் போலவே மதங்கள் நாம் ஒரே முடிவை நோக்கி பயணிக்கிறோம் எனில் எந்த சாலையில் செல்கிறோம் என்பது முக்கியம் இல்லை இதற்காகச் சண்டையிட என்ன அவசியம் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அனைத்து மதங்களும் கலையும் அறிவியலும் ஒரே மரத்தின் கிளைகள் ஆழமான மதம் சார்ந்த கடவுள் நம்பிக்கை இல்லாதவன் நான் இது ஒரு வகையான புதிய மதம் இயற்கையிடம் நான் ஓர் அற்புதமான கட்டமைப்பைக் காண்கிறேன் அதை மிகக்குறைந்த அளவிலேயே நம்மால் புரிந்து கொள்ள முடியும் அந்தப் புரிதல் சிந்திக்கக்கூடிய ஒவ்வொரு நபரின் உள்ளத்திலும் ஓர் உணர்வை உண்டாக்குகிறது இது ஓர் உண்மையான மத உணர்வாகும் இதற்கும் மதவாதிகள் கூறும் மர்மமான மதப் புரிதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை அறிவியலோடு கலக்காத மதம் குருட்டுத்தனமானது ஈ வெ இராமசாமி நான் சொல்கிறேன் என்பதற்காக எதையும் நீங்கள் ஒப்புக்கொள்ளாதீர்கள் பிறகு மதவாதிகள் புராணத்தை முன்வைத்து பேசுவதை நீங்கள் ஒப்புக் கொள்வதற்கும் இதற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் நான் பேசியதை வைத்து உங்களுக்குள் நிறைய கேள்விகளை எழுப்புங்கள் அதன் பின்னர் நான் சொன்னது சரியென்கும் பட்சம் ஒப்புக் கொள்ளுங்கள் தேரும் திருவிழாவும் நடத்திப் பொதுமக்கள் பணத்தைப் பாழாக்குவதே மூடத்தனம் மதத்தில் ஒரு குறிப்பிட்ட காரியத்திற்கு இடமிருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன அது மக்கள் வாழ்க்கைக்கு அவசியமா இல்லையா அதனால் மக்கள் கஷ்டம் நீங்குமா நீங்காதா என்பதைத்தான் கவனிக்க வேண்டும் மனிதனை முட்டாளாக்கும் பிரித்து வைக்கும் அமைப்பு மதம் ஆகும் உலகிலுள்ள மதங்கள் எல்லாம் குருட்டு நம்பிக்கை என்கின்ற பூமியின் மீதே கட்டப்பட்டுள்ளன மதம் ஒழிந்த இடத்தில்தான் மனிதனின் பிறப்புப்பேதம் புதைக்கப்படுகிறது மதக்குறி என்பது மாட்டு மந்தைக்காரன் தனது மாடுகளுக்குப் போடும் அடையாளம் போன்றதே பிரார்த்தனை என்பதற்கு வேறு பெயர் பேராசை பேராசை என்றால் தகுதிக்கு மேல் விரும்புவது வேலை செய்யாமல் கூலி பெறுவது என்பதே ஆகும் மதம் மக்களின் அறிவைக் கெடுக்கிறது மதம் மக்களைச் சோம்பேறிகளாய் கோழைகளாய் ஆக்குகிறது உலகிலுள்ள எப்படிப்பட்ட மதக்காரனும் கடவுள் நம்பிக்கைகாரனும் நம்பிக்கைவாதி ஆவானே ஒழிய அறிவுவாதி ஆகவே மாட்டான் கடவுளும் மதமும் நம்பிக்கைக்காரனை வெறியனாகவும் பைத்தியக்காரனாகவும் கூட ஆக்கிவிடும் இந்து மதத்தில் கல்வித் தெய்வமும் செல்வத் தெய்வமும் வீரத்தெய்வமும் பெண் தெய்வங்களாய் இருந்தும் இந்துமதக் கொள்கைப்படி ஜவகர்லால் நேரு மதமானது அநேகமாக எப்போதுமே குருட்டு நம்பிக்கை பிற்போக்கு வறட்டுக் கோட்பாடு வெறியுணர்ச்சி முடநம்பிக்கை சுரண்டல் உடமையாளர்களின் நலன்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றை ஆதரிப்பதாகத் தோன்றுகிறது மதமானது தெளிவான சிந்தனைக்கு எதிரியாக எனக்குத் தோன்றுகிறது ஏனெனில் அது மாற்றப்பட முடியாத சில தத்துவங்களையும் கோட்பாடுகளையும் மறுப்பில்லாமல் ஏற்றுக்கொள்வதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது மதத்திலிருந்துதான் எதேசதிகாரம் பிறக்கிறது மக்கள் அடிமைகளாக்கப்படுகின்றனர் திசம்பர் ஆம் நாள் பூனாவில் நடைபெற்ற பம்பாய் மாகாண இளைஞர் மாநாட்டுத் தலைமை உரையிலிருந்து மதம் மனிதனுடைய சுதந்திர தாகத்தைக் குறைக்கின்ற அபீனாக கடந்த காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது திசம்பர் ஆம் நாள் பூனாவில் நடைபெற்ற பம்பாய் மாகாண இளைஞர் மாநாட்டுத் தலைமை உரையிலிருந்து லியோ டால்ஸ்டாய் சமயத்தைப் பற்றிச் சிந்தியாதவன் தான் பிறந்த சமயமே உண்மைச் சமயம் என்று எண்ணிக் கொள்கிறான் நிக்கோலோ மாக்கியவெல்லி இராணுவம் மட்டும் இருந்து மதம் இல்லாத தேசத்திலே ஒழுங்கு இருப்பது அரிது மத சாம்ராஜ்யத்தின் அதிபதிகள் மட்டுமே பாதுகாக்கப்படாத ராஜ்யங்களையும் ஆளப்படாத பிரஜைகளையும் உடையவர்களாயிருக்கிறார்கள் அவர்களுடைய ராஜ்யங்கள் பாதுகாக்கப்படாதவையாகையால் அவர்களிடமிருந்து பறிக்கப்படுவதில்லை அவர்களுடைய பிரஜைகள் ஆளப் படாதவர்கள் ஆகையால் அவர்கள் ஆதிக்கத்தை மறுப்பதில்லை பிறர் நூறு விதமாய்க் கூறினாலும் மதம் ஒன்று தான் உண்டு ஜோர்ஜ் பெர்னாட் ஷா உலகமே என் தேசம் நன்மை செய்வதே என் சமயம் தாமஸ் பெய்ன் மனிதர் அனைவருக்கும் மதமாகிய கடிவாளம் தேவை மரணத்திற்குப்பின் யாதோ என்னும் பயமே மதம் ஜார்ஜ் எலியட் அவனியிலுள்ள சமயங்களில் அறத்தாறு உய்ப்பது ஒன்றே உண்மைச் சமயம் ஸவனரோலா நம்மிடம் பகைப்பதற்குப் போதுமான சமய உணர்ச்சி உளது ஆனால் அன்பு செய்வதற்குப் போதுமான அளவு இல்லை ஸ்விப்ட் ஞானிகள் அனைவர்க்கும் ஒரே மதமே அவர்கள் தத்தம் மதத்தை வெளியே கூறுவதில்லை லார்ட் ஷாப்ட்ஸ்பரி பண விஷமாய் நம்பத் துணியாத இடத்தில் ஆன்ம விஷயமாய் நம்பத்துணிவது எவ்வளவு விபரீதம் மதாசாரியர் காலணா கொடுத்தால் அது செல்லுமோ செல்லாதோ என்று சந்தேகிப்போம் ஆனால் அவர்கள் கூறும் மதத்தை ஆராயாது சரி என்று அங்கீகரித்து விடுகிறோம் என்னே மனிதர் மடமை பென் சரியாக அறியாத சமயமே நம்மை அழகுக்கு அந்நியமாக்கும் சமயம் அழகைக் கண்டு ஆனந்திக்கும்படி செய்யுமானால் அப்பொழுது சமயம் உண்மை சரியாக அறிந்திருக்கிறோம் என்று தெரிந்துகொள்ளலாம் லெஸ்ஸிங் எல்லாச் சமயங்களுக்கும் ஒரே நோக்கம்தான் விலக்க முடியாததை ஏற்றுக் கொள்ளச் செய்வதே அந்த நோக்கம் கதே எந்தக் காலமும் எனக்குத் துணையாய் நிற்க இறைவனிடம் ஏற்பதாயிருந்தால் முதலில் வேண்டுவது சமய சாந்தி இரண்டாவது கல்வியில் சுவை ஹெர்ஷல் சமய அனுஷ்டானத்துக்கு இன்றியமையாது வேண்டப்படுவது மனித ஜாதியிடம் அன்பும் மரியாதையும் செய்தலே அனடோல் பிரான்ஸ் மனிதர்கள் இம்மைக்காக மறுமையையும் மறுமைக்காக இம்மையையும் ஒருபொழுதும் முழுவதும் வேண்டாம் என்று விட்டுவிட மாட்டார்கள் ஸாமுவேல் பட்லர் சமயம் மாறுபவன் தலை போன பின் இன்ன தெனத்திரும்பிப் பார்க்கும் ஈயை ஒப்பான் பட்லர் அற உணர்ச்சி அளிக்காத சடங்குகள் அனைத்தும் அழிக்கத் தக்கவைகளே ஸவனரோலா கிறிஸ்துவ மதம் அயலானுக்கு அன்பு செய்யப்போதிக்கும் ஆனால் தற்கால சமூகமோ அயலான் ஒருவன் உண்டு என்பதையே ஒப்புக்கொள்வதில்லை டிஸ்ரேலி தன் மதம் அடிமைத்தனம் என்று உணர்பவன் அதை இன்னும் அறிய ஆரம்பியாதவன் ஜே ஈ ஹாலண்டு அறிவில்லாத சமயவாதிகள் சமயக் கொள்கைகளுக்காகச் சண்டையிடட்டும் ஆனால் தர்ம வழியில் நடப்பவன் ஒருநாளும் தவறியவனாகான் போப் புனிதமான விஷயங்களை உணர்ச்சியின்றிக் கையாளும் வேஷதாரிகளே பெரிய நாஸ்திகர் அவர்களுக்கு இறுதியில் சூடு போடுதல் அவசியம் பேக்கன் தொல்லையில்லாமல் இருப்பதற்காகவே ஜனங்கள் நாங்கள் எல்லோரும் ஒரே மதத்தினர் என்று கூறிக் கொள்கின்றனர் ஆனால் விஷயத்தை நன்கு ஆராய்ந்தால் எல்லா விஷயங்களிலும் ஒரே மதத்தையுடைய மூன்று பேரைக்கூட எங்கும் காண முடியாது ஸெல்டன் மதப் பிடிவாதி ஆப்பிரிக்க எருமை போல் இருப்பவன் நேரேதான் பார்ப்பான் பக்கங்களில் திரும்பான் பாஸ்டர் ஜனங்கள் சமயத்திற்காகச் சண்டையிடுவர் வாதம் புரிவர் வசை பகர்வர் அயலாரைத் துன்புறுத்துவர் அனலிலும் இடுவர் உயிரைத் துறக்கவும் செய்வர் சமயத்திற்காக எல்லாம் செய்வர் ஆனால் சமய வாழ்வு வாழ மட்டும் செய்யார் சிலரேனும் வாழ முயலவாவது வேண்டாமோ அதுகூடக் கிடையாது பிரிஸ்வெல் விக்கிரகங்கள் சந்தேகத்திற்கு இடமாயும் வணங்குவோர் இதயத்திற்கு எல்லாவித நல்லுணர்ச்சியும் தரச் சக்தியற்ற சர்வ சூனியமாயும் ஆகும்பொழுது தான் விக்கிரக ஆராதனை தவறாகும் கார்லைல் நட்பு விஷயத்திற் போலவே மத விஷயத்திலும் யார் அதிகப் பற்றுடையவர்களாகக் கூறிக் கொள்கிறார்களோ அவர்களே அந்த அளவிற்கு உண்மை நம்பிக்கை குறைந்தவர்களாவர் ஷெரிடன் மதப்பிடிவாதமுடையவர் அவர்கள் வாழ்நாளில் மட்டுமே மதியுடையவராய் மதிக்கப்படுவர் தாமஸ் வில்ஸன் நாம் உண்மை என்று நம்புவதை ஒப்புக்கொள்ள மறுப்பவரை நாஸ்திகர் என்று கருதுவது பெருந்தவறு இழிவான நோக்கங்கொண்டு உண்மைக்குச் செவிசாய்க்க மறுப்பவரே நாஸ்திகர் சமயக் கோட்பாடுகளை எல்லாம் நம்புவதாய்க் கூறிக்கொண்டு சமய ஒழுக்கம் இல்லாதவன் நாஸ்திகரில் நாஸ்திகன் ஹெச் ஏ மதப் பிடிவாதியின் மனம் கண்ணை ஒக்கும் அதிக ஒளி பட்டால் அதிகமாக இடுக்கும் ஹோம்ஸ் மதப் பிடிவாதம் மதத்தைக் கொன்று அதன் ஆவியைக் காட்டி மூடர்களைப் பயமுறுத்தும் கோல்டன் மதப் பிடிவாதத்துக்கு மூளையில்லை அதனால் யோசிக்க முடியாது இதயமில்லை அதனால் உணர முடியாது ஒகானல் வாழ்க்கையில் ஒரு வெறி ஏற்பட்டால்தான் பிடிப்புடன் முன்னேறி வாழமுடியும் அதைச் சமயம் கொடுக்கிறது அது சொல்லுகிற மோஷத்தைக் கொடுக்காவிட்டாலும் இது போதும் அந்த மோஷத்தை விட மேலானது புதுமைப்பித்தன் சான்றுகள் வெளி இணைப்புக்கள் பகுப்பு சமயம் |
கடவுள் என்பவர் அண்டம் முழுவதையும் படைத்துக் காப்பவர் என்றும் அவர் எல்லாச் சக்திகளும் பொருந்தியவர் என்றும் இறப்பு பிறப்பு இரவு பகல் இன்பம் துன்பம் போன்ற உலக வாழ்வில் தொடர்புடைய அனைத்தையும் கடந்து நிற்கும் ஏகாந்த மறைபொருள் நிலை என்றும் கடவுள் இருப்பதை நம்புபவர்கள் கருதுகின்றனர் மேற்கோள்கள் எல்லாம் அறிந்தவர் எங்கும் பார்க்கக்கூடிய இறைவனுடைய கண்ணிலிருந்து எது தப்பியிருக்க முடியும் எது அவன் உள்ளத்தை ஏமாற்ற முடியும் அவன் எல்லாம் அறிந்தவன் மில்டன் உன் செயல்கள் அனைத்திலும் இறைவன் உன்னைக் காண்பதாக எண்ணிக்கொள் அவன் செயல்கள் அனைத்திலும் அவனைக் காண்பதற்கு முயற்சி செய் குவார்லஸ் எல்லாம் வல்லவர் இறைவனுடைய சர்வ வல்லமையைத் தவிர என் நம்பிக்கைக்கு வேறு ஆதாரமில்லை ரூதர்ஃபோர்ட் இறைவன் தான் மாறாமல் மாட்சிமை என்ற திரைக்குப் பின்னால் இருந்துகொண்டு எல்லாவற்றிற்கும் ஒளியும் உயிரும் அளிக்கிறான் வான் மண்டலத்தில் இயங்கும் கோளங்களையும் மாறி மாறி வரும் பருவ காலங்களையும் இயக்கி வருகிறான் ஸாமர்வில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனி நபராகக் கருதப்படும் ஒரு கடவுளில் எனக்கு நம்பிக்கையில்லை இந்த நம்பிக்கையின்மையை நான் என்றும் மறுத்ததும் கிடையாது அதற்கு மாறாக அதைத் தெளிவாகவே கூறியிருக்கிறேன் கடவுளின் முன் நாமனைவரும் சம அளவில் புத்திசாலிகள் முட்டாள்கள் கடவுள் அண்டத்தைப் படைத்த போது அதை எவ்வாறு படைப்பது என்று விரும்பித் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அவருக்கு இருந்ததா தனி நபராகக் கருதப்படும் ஒரு கடவுளில் எனக்கு நம்பிக்கையில்லை இந்த நம்பிக்கையின்மையை நான் என்றும் மறுத்ததும் கிடையாது அதற்கு மாறாக அதைத் தெளிவாகவே கூறியிருக்கிறேன் ஈ வெ இராமசாமி மனிதன் முன்னேற்றத்தை தடுக்க ஏற்படுத்தியவையே கடவுளும் மதங்களும் கடவுள் என்பது வெறும் கற்பனைப் பூச்சாண்டி சூழ்ச்சிக்காரர் செய்த தந்திரம் சர்வ சக்தியுள்ள கடவுள் ஒருவர் இருந்தால் கடவுள் இல்லை என்பவர்கள் உலகத்தில் எப்படி இருக்க முடியும் கல்லைக் கடவுள் என்று கும்பிடும் மனிதன் பார்ப்பனனைச் சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமொன்றுமில்லை ஆசையும் சுயநலமும் அற்றவனுக்குக் கடவுள் மற்றும் மோட்சம் தேவை இல்லை பகுத்தறிவு சுதந்திரம் உள்ள மனிதனுக்கு கடவுள் அருள் எதற்காகத் தேவை அப்துல் கலாம் கடவுள் உறுதியளித்திருப்பது ஒவ்வொரு நாளுக்குமான சக்தியை உழைப்பிற்கான ஒய்வை பாதைக்கான ஒளியை நீ கடவுளின் குழந்தை என்பதால் உனக்கு என்ன நடந்தாலும் அதையெல்லாம் விட நீ சிறந்தவன் உயர்ந்தவன் என்ற உறுதி வேண்டும் அல்லாவின் ஆணை இல்லாமல் எதுவுமே நமக்குக் கிடைக்காது அவரே நமது பாதுகாவலன் என் மகனே அல்லாவிடம் நம்பிக்கைக் கொள் கடவுள் நம்மைப் படைத்தவர் நம்முடைய மனம் மற்றும் குணங்களில் உறுதி மற்றும் திறன்களை பெருமளவிற்குச் சேர்த்து வைத்துள்ளார் பிரார்த்தனைகளின் மூலம் இந்தச் சக்திகளை நாம் அடையவும் வளர்த்துக் கொள்ளவும் முடியும் ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல உன்னைப் போலச் சாதிக்கத் துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே புதுமைப்பித்தன் கடவுள் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன ஒரு கூட்டத்தின் பாதுகாப்பிற்கு அது அவசியமானால் ஒரு பொய்யைச் சொல்லித்தான் கடவுள் என்ற பிரமையைச் சிருஷ்டித்தால் என்ன இந்தக் கடவுள் விஷயம் ரொம்ப ஸ்வாராஸ்யமானது அது தனிமனிதனுக்கு ஒரு தைரியத்தைக் கொடுக்கிறது சமூகத்திற்கு ஒரு சக்தியைக் கொடுப்பது போல் நாஸ்திகம் தர்க்கத்தில் நிஜமகே இருக்கலாம் அது சுவாரஸ்யமற்றது வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ஏற்படுத்த முடியாதது பிறர் கடவுளைத் தன்னில் காணாதவனுக்குக் கடவுள் இல்லை லியோ டால்ஸ்டாய் அவன் என்னும் மொழி அவனைக் குறைத்து விடுகிறது தேவைகள் குறையும் அளவுக்கே தெய்வத்தன்மை அடைவோம் சாக்கிரட்டீசு ஏதேனும் பழுதிலாத ஒன்றை இயற்ற முயல்வதைப்போல் ஆன்மாவைப் புனிதமாக்குவதும் சமயவாழ்வு வாழச் செய்வதுமானது வேறெதுவும் இல்லை ஏனெனில் பரிபூரணமே கடவுள் அதனால் பூரணத்தை நாட முயல்பவன் கடவுள் தன்மையை நாடுபவனாவான் மைக்கலாஞ்சலோ கடவுளின் நீதி மெதுவாகத்தான் நகரும் ஆனால் ஒருபொழுதும் வழியில் தங்குவதில்லை தவறு செய்தவனைச் சேர்ந்தேவிடும் ராபர்ட் பிரௌனிங் குழந்தை இயல்புடையவர் அதாவது எளிதில் மகிழ்பவர் அன்பு செய்பவர் பிறர்க்கும் மகிழ்வூட்டுபவர் இவர்க்கே கடவுள் ராஜ்யம் ஆர் எல் இசுட்டீவன்சன் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற பிரச்னையைப் பற்றிச் சிந்திப்பது மனிதன் செய்யக்கூடாத ஒன்று நாம் இந்த உலகத்தில் தோன்றியிருப்பதன் இலட்சியம் வாழ வேண்டுமென்பதற்காகவே யொழிய கடவுள் இருக்கிறார் என்று வாதிடவோ இல்லையென்று போராடவோ அன்று சார்லஸ் டார்வின் மக்களிடையே கடவுளை நாடுக நோவாலிஸ் நானில்லையானால் கடவுளும் இருக்க முடியாது எக்கார்ட் கோவிலில் வைத்துக் கும்பிடும் கடவுளை மனிதனே சிருஷ்டித்தான் அதனால் மனிதன் தன்னைப் போலவே கடவுளையும் படைத்திருக்கிறான் ஹெர்மீஸ் கடவுள் கோவில் கட்டும் இடத்தில் எல்லாம் சாத்தானும் ஒரு கோவில் கட்டிவிடுகிறான் அதுமட்டுமா அவன் கோவிலுக்கே அடியார்களும் அதிகம் டீபோ மனிதனுக்கு எத்துணைப் பைத்தியம் ஒரு புழுவைச் சிருஷ்டிக்க முடியாது ஆயினும் கணக்கில்லாத கடவுளரைச் சிருஷ்டித்துக் கொண்டேயிருக்கிறான் மான்டெய்ன் கடவுள் தகுதியுடையவர்க்குத் தாட்சண்யம் காட்டுவார் தகுதியற்றவர்களே நியாயத்தை மட்டும் வழங்குவர் பிளாட்டஸ் தெய்வபக்தி லட்சியமன்று சாதனமே அந்தச் சாதனத்தால் ஆன்ம விருத்தி அடையலாம் வேஷதாரிகளே தெய்வ பக்தியை லட்சியமாகச் செய்து கொள்வர் கதே பரிபூரணமே தேவரை அளக்கும் கோல் பரிபூரணத்தில் பற்றே மனிதரை அளக்கும் கோல் கதே ஆன்ம எளிமை கண்டே ஆண்டவன் மகிழ்கிறான் எளிமைக் குணத்தைக் கண்டுதான் மகிழ்கிறான் இறக்கும் குணத்தைக் கண்டன்று கதே பரிபூரண நிலையில் ஆன்மாவுக்கு ஏற்படும் சொற்ப அவாவை வைத்தே கடவுள் இருப்பதைக் கணித சாஸ்திர முறையைக் காட்டிலும் அதிகமாய் நிரூபித்துக் காட்டலாம் ஹெம்ஸ்டர் ஹூஸ் ஆண்டவன் இலன் எனினும் அறநெறி நிற்போம் என்பவரே அவன் அடியராவர் ராபர்ட் பிரெளனிங் ஒருவன் கடவுள் பக்கம் இருப்பின் அவன் ஒருவனே பெரும்பான்மைக் கட்சி ஆகிவிடுவான் வெண்டெல் பிலிப்ஸ் ஆன்மாவுக்கு வெளியே கடவுளைத் தேடினால் கடவுளின் விக்கிரகங்களை மட்டுமே காண்பாய் ஆன்மாவை ஆராய்ந்தால் அங்குள்ள உணர்ச்சிகளும் எண்ணங்களும் ஆண்டவனை அறிவிக்கும் அயலார்க்கு நன்மை செய்யும்பொழுதுதான் ஆண்டவனைத் துதிப்பதாகக் கூறமுடியும் ஸ்வனரோலா கடவுள் பார்ப்பதைப் போல் எண்ணி மனிதரோடு வாழ்க மனிதர் கேட்பதைப் போல் எண்ணிக் கடவுளோடு பேசுக ஸெனீகா மனிதர் அறிய விரும்பாதது எதையும் கடவுளிடம் கேட்காதே கடவுள் அறிய நீ விரும்பாதது எதையும் மனிதனிடம் கேட்காதே ஸெனீகா வட்டத்தில் எந்தவிடத்திருந்தும் மத்திக்குச் செல்ல வழியுண்டு எவ்வளவு பெருந் தவறானாலும் இறைவனிடம் செல்ல வழியுண்டு ரூக்கர்ட் கடவுளை அறிதல் கடவுளிடம் அன்பு செலுத்துதல் இரண்டிற்கும் இடையிலுள்ள தூரம் எவராலும் இவ்வளவு என்று சொல்ல முடியாது பாஸ்கல் கடவுளை அறிந்துவிடுவோமென்று எதிர்பார்க்க இயலாது ஆனால் கடவுளை அறியாமல் வேறு எதையும் அறியவும் எதிர்பார்க்க இயலாது பூடின் மனிதர்க்குப் பேருணர்ச்சி தந்து போருக்கு நடத்திச் செல்லும் மூன்று மொழிகள் கடவுள் நித்யத்வம் கடமை என்பன முதல் விஷயம் அறிவுக்கு அப்பாற்பட்டது இரண்டாவது நம்ப முடியாதது மூன்றாவது ஒரு காலும் அலட்சியம் செய்ய முடியாதது மையர்ஸ் இறைவனைப்பற்றி நாம் விளக்குவதற்காகச் சிரமப்படாமலிருந்தால் அவரை நாம் எளிதாக அறிந்துகொள்ளலாம் ஜோபெர்ட் பிரபஞ்சத்தில் கடவுள் பெற்றிருக்கும் ஸ்தானத்தையே நாம் நம் இதயங்களில் அவருக்கு அளிக்க வேண்டும் கடவுள் ஒரு சக்கர வளையம் அந்த வளையத்தின் மையப் புள்ளி எல்லா இடங்களிலும் இருக்கும் அதன் பரிதி எங்குமில்லை எம்பி டாக்ளஸ் இறைவனைப்பற்றி அவனுக்குப் பெருமையாயில்லாத ஓர் அபிப்பிராயம் கொள்வதைவிட அவனைப்பற்றி அபிப்பிராயமே கொள்ளாதிருத்தல் மேலாகும் ஏனெனில் பிந்தியது வெறும் நம்பிக்கைக் குறைவை மட்டும் காட்டும் முந்தியது அவதூறாகும் புளுடார்க் இறைவன் இருக்கவில்லையானால் அவனை உண்டாக்கிக் கொள்ள வேண்டியது அவசியம் வால்டேர் ஆண்டவர் உலகை ஆள்கிறார் நாம் நமது கடமையை மட்டும் அறிவோடு செய்ய வேண்டும் பயனை அவருக்கே விட்டுவிட வேண்டும் ஜான்ஜே இருவர் இறைவனுக்கு உகந்தவர்கள் அவனை அறிந்து கொண்டு தன் இதயம் முழுவதையும் அவனிடம் ஈடுபடுத்தித் தொண்டு செய்பவன் ஒருவன் அவனை அறியாமல் தன் இதயம் முழுவதையும் அவனைத் தேடுவதில் ஈடுபடுத்துபவன் மற்றவன் பானின் இறைவனுக்குப் பகைவனானவன் ஒருகாலும் மனிதனுக்கு நண்பனாக இருந்ததில்லை யங் நான் இறைவனுக்கு அஞ்சுகிறேன் இறைவனுக்கு அடுத்தாற் போல் அவனுக்கு அஞ்சாதிருப்பவனைக் கண்டு அஞ்சு கிறேன் ஸாஅதி கடவுளை அண்டி வாழ்வாயாக நித்தியமான உண்மைகளுக்கு முன்னால் மற்றப் பொருள்கள் யாவும் உனககு அறபமானவைகளாகத் தோன்றும் மசீயன் கடவுள் நம் ஆசைகளின் இலட்சியமாகவும் நம் செயல்களின் நோக்கமாகவும் நம் அன்புகளின் தத்துவமாகவும் நம் முழு ஆன்மாக்களையும் ஆட்சி செய்யும் சக்தியாகவும் இருக்க வேண்டும் மாஸில்லன் நாம் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டியவர்களல்லர் அவைகளைப் பின்பற்றிச் செல்ல வேண்டியவர்கள் எபிக்டெடஸ் உரோமம் கத்தரிக்கப்பெற்ற ஆட்டுக்குட்டிக்காக இறைவன் காற்றை மென்மையாக வீசும்படி செய்கிறான் ஸ்டெர்னி ஒருவர் உள்ள இடத்தில் கடவுள் இரண்டாமவராக உள்ளார் இருவர் உள்ள இடத்தில் கடவுள் மூன்றாமவராக உள்ளார் முகம்மது நபி மானிட சமூகத்தை ஒரு குடும்பமாக அமைத்து தாம் தந்தையாயிருந்து உலகை நம் வீடாக்கிய கடவுள் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளார் காலெரிட்ஜ் அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்பிறவாழி நீந்தல் அரிது திருவள்ளுவர் சான்றுகள் பகுப்பு சமயம் |
சிந்தனை என்பது நம் மனதில் தோன்றுவதாகும் சிந்தனைக் குறித்த தேற்கோள்கள் சார்லி சாப்ளின் நமது அறிவு யார் மீதும் நம்மை நம்பிக்கையற்றவர்களாக ஆக்கிவிட்டது நமது புத்திசாலித்தனம் கடின மனம் கொண்டவர்களாகவும் இரக்கமற்றவர்களாகவும் நம்மை மாற்றிவிட்டது நாம் மிக அதிகளவு சிந்திக்கிறோம் ஆனால் மிகமிகக் குறைவான அளவுக்கே அக்கறைகொள்கிறோம் அறிவுக்கூர்மையை விட நமக்கு அதிகம் தேவை இரக்க உணர்வும் கண்ணியமுமே அப்துல் கலாம் சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை பிறர் ஆன்மா தானே தன்னுடன் பேசிக்கொள்வது சிந்தனை பிளேட்டோ இறுதியில் சிந்தனையே உலகை ஆள்கின்றது ஜே மக்கோஷ வெறும் வளர்ச்சி மனிதனாக்குவதில்லை சிந்தனைதான் மனிதனை உருவாக்குகின்றது ஐஸக் டெலர் தங்கத்தைப் போல் சிந்தனையாளர் அரிதாகவே இருப்பர் லவேட்டர் உண்மையில் சிறந்த சிந்தனைகள் யாவும் முன்பே பல்லாயிரம் தடவைகள் சிந்திக்கப்பெற்றவையாகும் ஆனால் அவைகளை நம் சொந்தமாக்கிக்கொள்வதற்கு நாம் மறுபடி அவைகளை நேர்மையாகச் சிந்தனை செய்ய வேண்டும் பிறகு அவை அறுபவத்துடன் வேரூன்றிவிடுகின்றன கதே சிந்தனை இல்லாத படிப்பு பயனில்லாத உழைப்பு படிப்பில்லாத சிந்தனை ஆபத்தானது கன்ஃபூஷியஸ் வெளிப்படையான செயல்களைவிடச் சிந்தனைகள் மனிதருடைய பண்பாட்டைக் காட்டுகின்றன புளுமெர் செயல் திறன் வாய்ந்தவர்கள் தங்களை அறியாமலே சிந்தனையாளர்களின் கருவிகளாகவே விளங்குகின்றனர் ஹீய்ன் குறிப்புகள் பகுப்பு சிந்தனை |
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பி மே ஒரு புகழ்பெற்ற இந்திய குரு ஆவார் அவர் தமிழ்நாட்டில் உள்ள பாபநாசத்தில் ஒரு தமிழ் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார் தனது சீடர்களால் ஸ்ரீ ஸ்ரீ என்று மரியாதையுடன் அழைக்கப் படும் இவர் வாழும் கலை என்ற நிறுவனத்தை தோற்றுவித்தவர் இந்நிறுவனம் பண்டைய இந்திய அறிவுச் செல்வத்தை நிகழ் காலத்திற்கு ஏற்ப மாற்றி அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது மேற்கோள்கள் கடமையை மறந்து கவலையென சொல்லித் திரியாதே அது உன் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலே காக்கிறாரோ இறைவன் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான் ஒரு அறிவாளியின் நாக்கு அவனின் இதயத்திற்கு பின்னாலும் ஒரு முட்டாளின் நாக்கு அவனின் இதயத்திற்கு முன்னாலும் உள்ளது உன்மையான சந்தோசம் நிகழ் காலத்தில் மட்டுமே இருக்கிறது கடந்த கால சம்பவங்களிலும் நிகழ்கால கேள்விக்குறியிலும் நம்மை தொலைக்காவிட்டால் நிகழ்காலத்தை சதவிகிதம் அனுபவிப்போம் சான்றுகள் வெளி இணைப்புகள் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரின் இணையத்தளம் வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரின் படங்கள் சிஎன்என் இல் நேர்காணல் பகுப்பு நபர்கள் பகுப்பு ஆன்மீகவாதிகள் |
சாதி என்பது இந்தியப் பாணியிலான சமூகத்தின் அடிப்படைச் சமூக அலகு என பலகாலமாக பரிந்துரைக்கப்பட்டு வரும் மக்களின் மன பிரிவினைத்தோற்றம் ஆகும் இதன் தனித்தன்மை பிறப்பின் அடிப்படையிலான வேலைப்பிரிவினையேயாகும் இது இந்தியா பாகிஸ்தான் வங்கதேசம் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் நிலவுகிறது ஒருவரின் சாதி அவரின் பிறப்பைக் கொண்டு தீர்மானிக்கப்பட்டு வருகிறது ஆகவே இதனை வெளியேற்ற வழியற்று சமூக அவலங்களை சகித்துக்கொண்டு மக்கள் வாழக்கற்றுக்கொண்டார்கள் அதிலிருந்தும் தோன்றிய அரசுகள் போன்றவற்றால் இது பாதுகாக்கப்டுகிறது மேற்கோள்கள் ஈ வெ இராமசாமி சுதந்திர நாட்டிலே அந்நாட்டு மகன் சூத்திரனாக முடியுமா சுதந்திர நாட்டிலே அந்நாட்டு மக்கள் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்படுவார்களா சுதந்திர நாட்டிலே அந்நாட்டவர்களை அடிமைகள் என்றும் நீசர்களென்றும் இழி மக்களென்றும் கருதும் மதங்களும் புராணங்களும் சட்டங்களும் இருக்க முடியுமா சிந்தித்துப் பார்த்துச் செயலாற்றுங்கள் நோய் வந்தபின் நோய்க்கு மருந்து கொடுத்து வைத்தியர்கள் குணமாக்குகிறார்கள் ஆனால் அந்த நோய் அடுத்தடுத்து வராமலிருக்க அதற்குரிய காரணங்களைக் கண்டறிந்து அவற்றை ஒழிக்கவேண்டாமா நோய் வந்துகொண்டேயிருப்பதும் அவ்வப் போது மருந்து கொடுத்துக் கொண்டேயிருப்பதும் பயனுள்ள செயலாகுமா அதுபோலத்தான் சமுதாயத்தை நாசப்படுத்திவரும் சாதி நோய்க்கான மூல காரணங்களைக் கண்டறிந்து ஒழிக்கவேண்டும் மனிதன் திருடுகிறான் பொய் பேசுகிறான் பாடுபடாமல் வயிறு வளர்க்கப் பார்க்கிறான் இவனை மக்கள் இகழ்வதில்லை சாதியை விட்டுத் தள்ளுவதில்லை ஆனால் சாதியை விட்டுச் சாதியில் சாப்பிட்டால் கல்யாணம் செய்தால் சாதியை விட்டுத் தள்ளிவிடப் படுகிறான் இந்த மக்களின் ஒழுக்கம் நாணயம் எப்படிப்பட்டது என்று பாருங்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஏமாற்றப்பட்டவர்களுக்கும் மே முதல் நாள் ஒன்றே உகந்த தினமாகும் சமூக வாழ்விலும் பொருளாதாரத்திலும் மக்கள் சமத்துவமாய் வாழ வேண்டும் அதற்காகப் பலாத்காரம் துவேசம் இம்சை இல்லாமல் பிரச்சாரம் செய்வது குற்றமாகாது நான் ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன் இந்திய அரசியல் சட்டத்தில் ஜாதிக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது ஆதலால் என் எதிர்ப்பைக் காட்ட இச்சட்டத்தைக் கொளுத்துகிறேன் ஏழை பணக்காரத் தன்மை ஜாதியை பொறுத்தே அநேகமாய் க்கு பங்காக இருந்து வருகிறது மதத்தையாவது ஜாதியையாவது கடவுளையாவது உண்மை என்று நம்பி அவைகளைக் காப்பாற்ற முயற்சிக்கும் எவனாலும் மக்களுக்குச் சமத்துவமும் அறிவும் தொழிலும் செல்வமும் ஒருக்காலும் ஏற்படவே ஏற்படாது இன்றைய போராட்டமே சாதியைக் காப்பாற்றுவது என்பதும் சாதியை ஒழிப்பது என்பதும்தான் சாதி ஒழிப்பு சுதந்திர நாட்டிலே அந்நாட்டு மகன் சூத்திரனாக முடியுமா சுதந்திர நாட்டிலே அந்நாட்டு மக்கள் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்படுவார்களா சுதந்திர நாட்டிலே அந்நாட்டவர்களை அடிமைகள் என்றும் நீசர்களென்றும் இழி மக்களென்றும் கருதும் மதங்களும் புராணங்களும் சட்டங்களும் இருக்க முடியுமா சிந்தித்துப் பார்த்துச் செயலாற்றுங்கள் நோய் வந்தபின் நோய்க்கு மருந்து கொடுத்து வைத்தியர்கள் குணமாக்குகிறார்கள் ஆனால் அந்த நோய் அடுத்தடுத்து வராமலிருக்க அதற்குரிய காரணங்களைக் கண்டறிந்து அவற்றை ஒழிக்கவேண்டாமா நோய் வந்துகொண்டேயிருப்பதும் அவ்வப் போது மருந்து கொடுத்துக் கொண்டேயிருப்பதும் பயனுள்ள செயலாகுமா அதுபோலத்தான் சமுதாயத்தை நாசப்படுத்திவரும் சாதி நோய்க்கான மூல காரணங்களைக் கண்டறிந்து ஒழிக்கவேண்டும் மனிதன் திருடுகிறான் பொய் பேசுகிறான் பாடுபடாமல் வயிறு வளர்க்கப் பார்க்கிறான் இவனை மக்கள் இகழ்வதில்லை சாதியை விட்டுத் தள்ளுவதில்லை ஆனால் சாதியை விட்டுச் சாதியில் சாப்பிட்டால் கல்யாணம் செய்தால் சாதியை விட்டுத் தள்ளிவிடப் படுகிறான் இந்த மக்களின் ஒழுக்கம் நாணயம் எப்படிப்பட்டது என்று பாருங்கள் ஜாதிகளைக் குறிக்கும் நெற்றிக்குறி உடை பூணூல் முதலிய சின்னங்களை சட்டப் பூர்வமாகத் தடுக்க வேண்டும் ஜாதி ஒழிப்பு என்பது நாட்டின் லைசன்ஸ் பெற்ற திருடர்களை அயோக்கியர்களை மடையர்களை ஒழிப்பதாகும் ஜாதியை ஒழிக்க வேண்டுமானால் அதற்கு மூலகாரணமான கடவுள் மதம் சாஸ்திரம் புராணம் சட்டம் இவைகளை ஒழித்தாக வேண்டும் ஜாதிகள் இந்த நாட்டிலிருந்து ஒழிக்கப்படும் வரை ஜாதிவாரி பிரதிநிதித்துவ முறை இட ஒதுக்கீடு அரசாங்க அலுவலகங்களில் நிரந்தரமாக இருந்து வர வேண்டும் பிறர் சத்தென்னும் செம்பொருளை உன்னுதற்கும் போற்றுதற்கும் உரிய இடமாகக் கோயில்கள் கட்டப்பட்டன நாளடைவில் அக்கோயில்களிலும் சாதிப்பேய் நுழைந்துவிட்டது ஒரு கூட்டத்தார் இங்கும் மற்றாெரு கூட்டத்தார் உங்கும் இன்னொரு கூட்டத்தார் அங்கும் நின்று கடவுளை வழிபட வேண்டுமாம் கடவுள் முன்னிலையிலுமா உயர்வு தாழ்வு கடவுளை மரம் செடி கொடி பாம்பு சிலந்தி யானை முதலியன பூசித்ததாகப் புராணங்கள் புகல்கின்றன கடவுளின் உருவங்களின் மீது ஈக்கள் மொய்க்கின்றன பல்லிகள் ஓடுகின்றன இவைகட்கெல்லாம் இறைவனைத் தொடும் உரிமையிருக்கும்போது ஆறறிவுடைய மனிதனுக்கா அவ்வுரிமையில்லை சாதியார் கொடுமை என்னே என்னே திரு வி கலியாணசுந்தரனார் மாயவரம் சமரச சன்மார்க்க மாநாட்டில் சாதியே வாய்ப்புகளை மறுக்கிறது மறுக்கப்பட்ட வாய்ப்புக்கள் திறமையை குறுக்குகின்றன குறுக்கப்பட்ட திறமை மேலும் வாய்ப்புகளை குறுக்குகிறது சாதி வேற்றுமைகள் உள்ளவரை மக்களின் வாய்ப்புகளும் திறமைகளும் குறுக்கப்படும் ராம் மனோகர் லோகியா சான்றுகள் பகுப்பு கருப்பொருட்கள் |
பெண்ணியம் என்பது பெண்களை தாழ்வுபடுத்தும் சமூக அரசியல் பொருளாதார நடைமுறைகள் கட்டமைப்புக்கள் மற்றும் சமத்துவமின்மையைக் எதிர்க்கும் கவனப்படுத்தும் சமூக கலாச்சார அரசியல் இயக்கங்கள் செயற்பாடுகள் கோட்பாடுகளின் தொகுப்பாகும் ஆண் பெண் சமத்துவத்தில் கவனம் செலுத்தும் கோட்பாடாகவும் இது வரையறுக்கப்படுவதுண்டு பெண்ணியத்தை வரையறுப்பதென்பதே கூட சிக்கலானதாக இருப்பதுண்டு மேற்கோள்கள் ஈ வெ இராமசாமி தாலியும் நீண்ட கூந்தலும் பெண் அடிமைச் சின்னங்கள் ஆணைத் தொழுதெழ வேண்டும் என்று பெண்ணுக்கு நிபந்தனையிருந்தால் பெண்ணைத் தொழுதெழ வேன்டும் என்று ஆணுக்கு நிபந்தனை இருக்க வேண்டும் இதுதான் ஆண் பெண் சரிசம உரிமை என்பது கற்பு என்ற சொல் இருந்தால் அது ஆண்களுக்கும் இருக்க வேண்டும் பெண்கள் விடுதலை பெறுவதற்கு இப்போது ஆண்களை விடப் பெண்களே பெரிதும் தடையாய் இருக்கிறார்கள் பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்துகொண்டே வருகின்றது ஒவ்வொரு பெண்ணும் தானும் ஏதாவது சம்பாதிக்கும் தகுதிபெறத் தக்கப்படி ஒரு தொழில் கற்றிருக்க வேண்டும் குறைந்தது தன் வயிற்றுக்குப் போதுமான அளவாவது சம்பாதிக்கத் தகுந்த திறமை இருந்தால் எந்தக் கணவனும் அடிமையாய் நடத்தமாட்டான் ஓர் ஆணுக்கு ஒரு சமையல்காரி ஓர் ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி ஓர் குடும்பப் பெருக்கிற்கு ஒரு பிள்ளை விளைவிக்கும் பண்ணை ஓர் ஆணின் கண் அழகிற்கு ஓர் அழகிய அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல் பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள் திருமணம் செய்வதற்கு முன்பு பொருத்தம் பார்க்கிறார்களே அதில் ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் சம தோற்றம் சம அன்பு ஒத்த அறிவு கல்வி ஒற்றுமை இருக்குமோ என்று கருதுவதில்லை அதற்கு மாறாக நமது பிள்ளைக்கு அந்தப் பெண் தலைவணங்கிக் கட்டுப்பட்டு நல்ல அடிமையாக இருக்குமா என்ற கருத்தில் மாடுகளை விலைக்கு வாங்குவதற்கு என்னென்ன பொருத்தங்கள் பார்க்கிறோமோ அதையேதான் பெண்கள் பிரச்சினையிலும் பார்க்கிறார்கள் பெண்களே வீரத் தாய்மார்களாக ஆக விருப்பப்படுங்கள் நீங்கள் மாறினால் உங்கள் கணவன்மார்களும் மற்ற ஆண்களும் மாற்றம் அடைவது வெகு சுலபம் ஆண்கள் உங்களைத்தான் பிற்போக்காளிகள் என்று உங்கள்மீது பழி சுமத்தி வருகிறார்கள் அப்பழிச் சொல்லுக்கு ஆளாகாதீர்கள் எதிர்காலத்தில் இவள் இன்னொருவடைய மனைவி என்று அழைக்கப்படாமல் இவர் இன்னாருடைய கணவன் என்று அழைக்கப்படவேண்டும் பெண்கள் மதிப்பற்றுப் போவதற்கும் அவர்கள் வெறும் போகப்பொருள்தான் என்று ஆண்கள் கருதி நடப்பதற்கும் முக்கியக் காரணமே பெண்கள் ஆபாசமாய்த் தங்களைச் சிங்காரித்துக் கொள்வதேயாகும் இந்து மதத்தின் கல்வித் தெய்வமும் செல்வத் தெய்வமும் பெண் தெய்வங்களாயிருந்தும் இந்து மதக் கொள்கையின்படி பெண்களுக்குக் கல்வியும் சொத்துகளும் இருக்க இடமில்லையே ஏன் ஆண் எப்படி வேண்டுமானாலும் திரியலாம் எவ்வளவு மனைவிகளை வேண்டுமானாலும் மணக்கலாம் என்கின்ற முறையே விபச்சாரம் என்னும் பிள்ளையைப் பெற்றெடுக்கின்றது சான்றுகள் பகுப்பு கருப்பொருட்கள் |
மேற்கோள்கள் ஈ வெ இராமசாமி பொதுத்தொண்டு செய்பவனுக்கு ஏற்படும் தொல்லை அவன் தனது லட்சியத்துக்குக் கொடுக்கும் விலை பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குச் சற்று அளவுக்கு மீறிய நாணயமும் கட்டுப்பாடும் உறுதியும் தியாக புத்தியும் வேண்டும் மனிதன் மற்ற மிருகங்களைப் போல் அல்லாமல் மக்களோடு கலந்து ஒரு சமுதாயமாக வாழ்கிறான் சமுதாயப் பிராணியாக வாழும்போது மற்றவர்களுக்கு ஏதாவது தொண்டு செய்துதான் வாழவேண்டும் மற்றவனிடமிருந்து தொண்டைப் பெற்றுத்தான் வாழவேண்டும் மனிதன் எந்தவிதத்திலாவது சமுதாயத்துக்குப் பயன்பட்டுத்தான் தீர வேண்டும் அந்த முறையில் என்னால் சமுதாயத்திற்கு ஏதாவது செய்யக்கூடுமானால் வாழவேண்டும் அதல்லாமல் ஏதோ ஓர் ஆள் சோற்றுக்கு கேடாக வாழ்வதென்றால் எதற்காக வாழவேண்டும் பிறப்பதும் சாவதும் இயற்கை ஆனால் மக்கள் பாராட்டுதலுக்கு உகந்தவகையில் வாழ்தல் வேண்டும் மக்கள் ஒருவரைச் சும்மா போற்ற மாட்டார்கள் நாம் மற்ற மக்களும் போற்றும்படியான வகையில் காரிய மாற்ற வேண்டும் சுகபோகத்தினால் இன்பம் காண்பதில் பெருமை இல்லை தொண்டு காரணமாக இன்பம் காண்பதே சிறந்த இன்பமாகும் வாழ்வு என்பது தங்களுக்கு மட்டும் என்று கருதக்கூடாது மக்களுக்காகவும் தொண்டுக்காகவும் நம் வாழ்வு இருக்க வேண்டும் என்று கருத வேண்டும் ஒருவன் தன்னுடைய சொந்தக் காரியத்தைப் பொறுத்தமட்டில்தான் மானத்தையும் கவுரவத்தையும் கவனிக்க வேண்டும் பொது நலம் பொதுத்தொண்டு என்று வந்து விட்டால் அவை இரண்டையும் பார்க்கக் கூடாது ஒரு மனிதன் தனது காலுக்கோ காதுக்கோ நாசிக்கோ நயனத்துக்கோ வயிற்றுக்கோ எலும்புக்கோ வலி இருந்தாலும் அவன் எனக்கு வலிக்கிறது என்று சொல்லுவது போல் உலகில் வேறு எந்த தனிப்பட்ட மனிதனுக்கு ஏற்படும் சங்கடத்தையும் குறை பாடுகளையும் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்பட்டது போல் நினைக்கும்படியும் அனுபவிப்பதுபோல் துடிக்கும் படியும் எந்த அளவு ஈடுபாடு கொள்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு கூட்டு வாழ்க்கையும் ஒற்றுமை உணர்ச்சியும் ஏற்படும் பொதுத்தொண்டு செய்பவனுக்கு ஏற்படும் தொல்லைகள் அவன் தனது இலட்சியத்திற்குக் கொடுக்கும் விலை சேவை என்பது கூலியை உத்தேசித்தோ தனது சுயநலத்தை உத்தேசித்தோ செய்வதல்ல மற்றவர்கள் நன்மை அடைவதைப் பார்த்து மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவதற்கு ஆகவே செய்யப்படும் காரியம்தான் எதற்கும் சலியாது உழைத்துத் துன்பம் வந்தாலும் ஏச்சு வந்தாலும் எவ்வித இழப்புகள் ஏற்பட்டாலும் அதைப் பொருட்படுத்தாது எதிர்த்துழைத்துக் கடைசிவரை கொள்கையை நழுவவிடாது காத்து நிற்பதே உண்மைத் தொண்டின் குணமாகும் பணம் காசு பண்டம் முதலியவற்றில் எனக்குப் பேராசை உண்டு இவைகளைச் சம்பாதிப்பதில் சாமர்த்தியம் காட்டியிருப்பேனே தவிர அவைகளில் நாணயக் குறைவையோ நம்பிக்கை துரோகத்தையோ நான் காட்டியிருக்க மாட்டேன் வியாபாரத்துறையில் பொய்பேசி இருந்தாலும் பொது வாழ்வில் பொய்யையோ மனம் அறிந்து மாற்றுக்கருத்தையோ வெளியிட்டிருக்க மாட்டேன் சான்றுகள் பகுப்பு கருப்பொருட்கள் |
திராவிடர் என்னும் சொல் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியொன்றைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களைக் குறிக்கும் தற்காலத்தில் திராவிடர்கள் செறிந்து வாழும் பகுதி தென்னிந்தியாவில் விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள பகுதியாகும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளும் திராவிடர்களின் தாயகங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது மத்திய இந்தியா வட இந்தியா பாகிஸ்தான் நேபாளம் போன்ற பகுதிகளிலும் சிறிய அளவில் பாரம்பரியமாக வாழும் திராவிடர் காணப்படுகின்றனர் மேற்கோள்கள் ஈ வெ இராமசாமி சில விஷயங்களில் மட்டும் நம்மைத் திராவிடர்கள் என்றும் திராவிடம் வேறு என்று சொல்லிக் கொன்டு வேறு அநேக விஷயங்களில் ஆரியத்திற்கு அடிமையாக நடந்து கொன்டால் இரன்டுங்கெட்ட இழிநிலையைத் தான் அடைகிறோமே ஒழிய வேறில்லை திராவிட நாடு கிடைத்த பிறகு திராவிடர் கழகம் கலைக்கப்படவேண்டிய அவசியம் ஏற்பட்டாலும் ஏற்படலாம் ஆனால் கடைசி மூட நம்பிக்கைக்காரன் இந்த நாட்டில் இருக்கின்ற வரையில் சுயமரியாதைக் காரனுக்கு வேலையிருக்கிறது சிலர் திராவிடன் என்பது வடமொழி என்பார்கள் அதைப்பற்றிய கவலையோ ஆராய்ச்சியோ தேவையில்லை காபி என்பது ஆங்கிலச் சொல் என்று எவனாவது காபி குடிக்காமல் இருக்கிறானா இந்து மதப் பண்டிகைகள் திராவிடர்களை இழிவுபடுத்தி என்றென்றும் அடிமைப்படுத்தவே ஏற்பட்டவை சான்றுகள் வெளியிணைப்புக்கள் இஸ்லாத்துக்கு முற்பட்ட சிந்துவெளியின் மக்களும் மொழிகளும் திராவிடர் வி சிவசாமி இனவியல் ஆரியர் திராவிடர் தமிழர் பகுப்பு இனங்கள் |
மனிதர் என்பது இருகால் உயர் விலங்கினத்தைச் சேர்ந்த ஹொமினிடீ குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இனமாகும் மரபணுச் சான்றுகளின்படி தற்கால மனித இனம் சுமார் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் தோன்றியதாகக் கருதப்படுகின்றது மனிதர்களுக்கு மிகவும் வளர்ச்சியடைந்த மூளையிருப்பதால் இது பண்பியல் பகுப்பாய்வு மொழி உண்முக ஆய்வு பிரச்சனைகளைத் தீர்த்தல் உணர்வுகள் போன்றவற்றைக் கையாளக்கூடிய வல்லமையைத் தருகின்றது மேற்கோள்கள் ஒரு மனிதனின் உண்மையான தன்மையை அறிய வேண்டுமானால் அவனுக்கு அதிகாரத்தை கொடுத்துப் பாருங்கள் இங்கர்சால் உண்பதற்காக வாழாதே உயிர் வாழ்வதற்காக உண் சாக்ரடிஸ் பறிபோன உரிமைகளை பிச்சையாகப் பெற முடியாது தீர்மானங்கள் மூலமோ மன்றாடுவதன் மூலமோ நியாயங்கள் பிறக்காது ஆடுகளைத்தான் கோயில்கள் முன் வெட்டுகிறார்களே ஒழிய சிங்கங்களை அல்ல அம்பேத்கர் ஆயிரம் ஆண்டு காலம் அடிமையாய் வாழ்வதைவிட அரை நிமிடமேனும் சுதந்திர மனிதனாக வாழ்ந்து இறப்பது சாலச் சிறந்தது அம்பேத்கர் ஒருவன் தான் விரும்பும் நலன்கள் அனைத்தையும் மற்றவர்களுக்கும் உண்டாகச்செய்வதுதான் நாகரிகம் படைப்பில் மனிதனே முதன்மையான அதிசயம் அவனுடைய இயல்பைப்பற்றி ஆராய்தல் உலகில் உன்னத ஆராய்ச்சியாகும் கிளாட்ஸ்டன் பாதி மண் பாதி தெய்வம் மனிதன் மூழ்கவும் முடியாது பறக்கவும் முடியாது பைரன் சமூகத்தால் சீர்திருத்தப்பட்ட மனிதன் எல்லா விலங்குகளிலும் சிறந்தவன் அவன் சட்டமும் நீதியும் இல்லாமல் வாழ்ந்தால் அவனைப்போல் பயங்கரமானது வேறெதுவும் கிடையாது அரிஸ்டாட்டில் உன்னதமான மனிதனுடைய வாழ்க்கைமுறை மூன்று பிரிவாயிருக்கும் அவன் ஒழுக்கத்தோடு இருப்பதால் கவலையற்றிருப்பான் அவன் அறிவாளியாயிருப்பதால் அவனுக்குக் குழப்பங்கள் இருக்கமாட்டா அவன் தைரியமாயிருப்பதால் அச்சம் அண்டாது கன்ஃபூஷியஸ் ஒருவன் எப்பொழுதும் வீரனாயிருக்க முடியாது ஆனால் ஒருவன் எப்பொழுதும் மனிதனாய் இருக்க முடியும் கதே நான் என்னை ஒரு மனிதனாக்கிக்கொள்ளத் தீர்மானிக்கிறேன் நான் அதில் வெற்றி பெற்றால் மற்ற எல்லாவற்றிலும் வெற்றி பெற்றுவிடுவேன் கார்ஃபீல்டு நம்பிக்கை இழந்து கௌரவமும் போய்விட்டால் மனிதன் பிணந்தான் விட்டியர் சமயம் அரசியல் கல்வி முறை ஆகிய ஒவ்வொன்றுக்கும் ஒரு சோதனை உண்டு அது எத்தகைய மனிதனை உருவாக்குகிறது ஏமியல் ஒரே மனிதனைக் கடவுள் மனிதர்களாகப் பிரித்துள்ளார் அவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ள வேண்டும் என்பது அவர் நோக்கம் ஸெனீகா ஒருவன் எப்பொழுதும் வீரனாயிருக்க முடியாது ஆனால் ஒருவன் எப்பொழுதும் மனிதனாய் இருக்க முடியும் கதே மனிதன் தானாக நிமிர்ந்து நிற்கவேண்டும் மற்றவர்கள் அவனை அப்படி நிறுத்தி வைக்கக்கூடாது மார்க்க அரேலியஸ் ஈ வெ இராமசாமி நன்றி விசுவாசம் உடையவன் எவனோ அவன் மாத்திரம் மனிதன் ஆவான் மனிதன் வேட்டி வீடு இவைகள் கொஞ்சம் பழசானாலும் மாற்றிக் கொள்கிறான் ஆனால் பழமைப் பித்தை மட்டும் பிடிவாதமாக மாற்றிக் கொள்ள மறுக்கிறார் மாறுதலுக்கு வளைந்து கொடுக்காத மனிதன் மாள வேண்டியதுதான் மனிதனுக்கு உள்ள பண ஆசையும் பதவி ஆசையும் எப்படிப்பட்டவனையும் கெடுத்து ஒழுக்கமற்ற காரியங்களைச் செய்யத் தூண்டுகின்றன அறிவிற்கும் அனுபவத்திற்கும் ஒத்துவராததை கடவுள் பயத்தால் நம்புகிறவன் பக்குவமடைந்த மனிதனில்லை சிந்திப்பவன் மனிதன் சிந்திக்க மறுப்பவன் மதவாதி சிந்திக்காதவன் மிருகம் சிந்திக்க பயப்படுகிறவன் கோழை மனிதனுடைய நலம் என்பவற்றுள் எல்லாம் தலை சிறந்த நலம் அவன் மனத் திருப்தியே ஆகும் மனிதன் கடவுள் உணர்ச்சி மாற மாறத்தான் அறிவு வளர்ச்சியடைகிறது காரல் மார்க்சு ஒரு மனிதன் தனக்காக மட்டும் உழைத்தால் அவன் ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியாகவோ மாபெரும் ஞானியாகவோ தலைசிறந்த கவிஞனாகவோ ஆகக் கூடும் ஆனால் அவனால் என்றுமே உண்மையிலேயே நிறைவான மகத்தான மனிதனாக ஆக முடியாது மனிதர்களின் வாழ்நிலையை நிர்ணயிப்பது அவர்களின் உணர்வு அல்ல மாறாக அவர்களது சமூக வாழ்நிலையே அவர்களது உணர்வை நிர்ணயிக்கிறது சான்றுகள் பகுப்பு நபர்கள் |
ஒழுக்கம் மனிதன் தினம் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு விடயமாகும் மேற்கோள்கள் ஈ வெ இராமசாமி ஒழுக்கம் என்பது தனக்கும் அந்நியனுக்கும் துன்பம் தராமல் நடப்பதும் நடந்தபடி சொல்வதும் ஆகும் பிறருக்கு ஒழுக்கத்தைப் பற்றிச் சொல்வதைவிட தன்னிடம் அது எந்த அளவு இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும் பக்தி என்பது தனிச்சொத்து ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து பக்தி இல்லாவிட்டால் நட்டம் இல்லை ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ் உங்கள் மனத்தை நீங்கள் பரிசுத்தமாக வைத்துக்கொண்டு தைரியமாய்ப் பேச வேண்டும் பொது வாழ்வில் மானத்தைப் பார்க்காதீர்கள் எவ்வளவு தூரம் உணர்ச்சியோடு உறுதியோடு உங்கள் மனமறிய நீங்கள் குற்றமற்றவர்களாக நல்ல ஒழுக்கமுள்ளவர்களாக இருக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு துணிந்து தொண்டாற்ற முடியும் பிறருக்கு எவ்விதத் தொல்லையும் தராத வாழ்வே ஒழுக்கம் இது எல்லாவித பேத நிலையும் ஒழிந்த நிலையில்தான் வளரமுடியும் ஒழுக்க அடிப்படையே இன்ப வாழ்வு ஜோதிராவ் புலே அறிவில்லாதபோது புத்திசாலித்தனம் இழக்கப்படுகிறது புத்தியில்லாதபோது ஒழுக்கம் இழக்கப்படுகிறது ஒழுக்கம் இல்லாதபோது ஆற்றல் முழுதும் இழக்கப்படுகிறது செயல்படும் ஆற்றல் இல்லாதபோது பணம் இழக்கப்படுகிறது பணம் இல்லாததால் சூத்திரர்கள் வீழ்ந்தனர் கல்வியறிவு இல்லாததால் இவ்வளவு கஷ்டங்களும் ஏற்பட்டன திருக்குறள் ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் ஒழுக்க முடைமை குடிமை யிழுக்க மிழிந்த பிறப்பாய் விடும் ஒழுக்கத்தி னொல்கா ருரவோ ரிழுக்கத்தி னேதம் படுபாக் கறிந்து ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை யிழுக்கத்தி னெய்துவ ரெய்தாப் பழி நன்றிக்கு வித்தாகு நல்லொழுக்கந் தீயொழுக்க மென்று மிடும்பை தரும் ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல் பிறர் ஒழுக்கம் என்பது சமயம் செயற்படுதலாகும் சமயம் என்பது ஒழுக்கத்தின் தத்துவம் வார்ட்லா சிலர் சமயத்திலிருந்து ஒழுக்கத்தைப் பிரிப்பர் ஆனால் சமயமே வேர் அது இல்லாமல் ஒழுக்கம் வாடி அழிந்து விடும் ஸி ஏ பார்ட்டல் சமயக் கட்சிகள் பலதிறப்பட்டவை ஏனெனில் அவை மனிதர்களிடமிருந்து தோன்றியவை ஒழுக்க நெறி எங்கும் ஒரே தன்மையுள்ளது ஏனெனில் அது ஆண்டவனிடமிருந்து வந்தது வால்டேர் ஒழுக்கமில்லாமல் சமயமில்லை சமயமில்லாமல் ஒழுக்கமில்லை ஜி ஸ்பிரிங் தீய கருத்துகள் தீய உணர்ச்சிகளை எழுப்புகின்றன தூய்மையற்ற பேச்சுகளுக்கு இடமுண்டாக்குகின்றன தீய செயல்களுக்குக் காரணமாகின்றன இவை உடலையும் மனத்தையும் நலிவுறச்செய்து ஒழுக்க நடையில் தூய்மையாயும் மேன்மையாயும் உள்ளவை அனைத்தையும் அழிக்கின்றன ஸி ஸிம்மன்ஸ் சான்றுகள் பகுப்பு கருப்பொருட்கள் |
சுய மரியாதை அல்லது தன்மானம் என்பது ஒரு தனிநபரின் தங்களின் சொந்த மதிப்பின் அகநிலை மதிப்பீடு ஆகும் மேற்கோள்கள் உன்னை நீயே மதித்துக்கொள்ளும் அளவுக்கு நீ வந்துவிட்டால் அதற்குமேல் உனக்கு ஆசிரியர் தேவையில்லை ஸெனீகா எல்லாவற்றிற்கும் மேலாக உன்னை நீயே மதித்துக்கொள் பிதாகோரஸ் தன்மானமே ஒழுக்கத்திற்கு அடிப்படை ஸர் ஜே ஹெர்ஷெல் சுயமரியாதையில்லாமல் தன்னையே கைவிட்டுவிடுபவனிடம் வேறு எவன் சேர்ந்திருப்பான் ஸர் பி ஸின்னி தன்மானம் தன்னறிவு தன்னடக்கம் இம்மூன்றுமே வாழ்க்கையில் தலைசிறந்த ஆற்றலை அளிக்கக்கூடியவை டென்னிஸன் ஈ வெ இராமசாமி மனிதனுக்கு எல்லாவற்றையும் விட முக்கியமான உணர்ச்சியாக மான அவமானம் என்னும் தன்மானமாகிய சுயமரியாதையைத் தான் பிறப்புரிமையாகக் கொள்ள வேண்டியிருக்கின்றது மனிதனுக்குப் பிறப்புரிமை சுயமரியாதைதான் விஞ்ஞானம் அறிவு தன்மான உணர்ச்சி இவையின்றேல் பட்டம் பல பெற்றாலும் பணம் பல கோடி சேர்த்தாலும் பலன் இல்லை சுயமரியாதை இயக்க கொள்கைகளை விளக்கிப் பிரச்சாரம் செய்து எவ்வளவு பிடிவாதக்காரர்களையும் மனம் மாற்றி விடுவார் ஜீவா மனிதன் சுயமரியாதையை தன்மானத்தை உயிருக்குச் சமமாகக் கொள்ள வேண்டும் மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம் மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம் மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு தெரியாத புரியாத கடவுளை மனிதன் நம்பித்தான் ஆகவேண்டும் என்பதான கட்டாயம் ஏற்பட்டு மனிதன் நம்ப ஆரம்பித்ததன் பயனே இவ்வளவு பொய்களையும் நம்பவேண்டியவனாகிவிட்டான் ஒரு மனிதனின் சுயமரியாதை உணர்ச்சிக்கு எது எது பாதகமாய்க் காணப்படுகிறதோ அவைகளையெல்லாம் மாற்றுவதுதான் உண்மையான சுயமரியாதை இயக்கத்தின் நோக்கம் மனிதனுக்கு எல்லாவற்றையும்விட முக்கியமான உணர்ச்சியான மான அவமானம் என்னும் தன்மானமாகிய சுயமரியாதையைத் தான் பிறப்புரிமையாகக் கொள்ள வேண்டியிருக்கின்றது ஏனெனில் மனிதன் மானுடன் என்ற பதங்களே மானத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட மொழிகள் ஆதலின் மனிதன் என்பவன் மானமுடையோன் எனவே மனிதனுக்கு மனிதத் தன்மையைக் காட்டும் உரிமையுடையது மானம்தான் அத் தன்மானமாகிய சுயமறியாதையைதான் மனிதன் பிறப்புரிமையாகக் கொண்டிருக்கின்றான் சீர்திருத்தமும் சுயமரியாதையும் சட்டம் கொண்டு வந்து வாக்கு வாங்கி நிறைவேற்றப் பெற்றுவிடலாம் என்று நினைப்பது ஒரு நாளும் முடியாத காரியம் தற்போது நம் மக்களுக்கு வேண்டியது படிப்புமட்டும் அல்ல அறிவும் வேண்டும் சுயமரியாதையும் வேண்டும் தன்மான உணர்ச்சியும் எதையும் பகுத்துணரும் திறனும் ஆராய்ந்து அறியும் அறிவும் தான் மிகவும் தேவை மனிதன் உலகில் தன் சுயமரியாதையை தன்மானத்தை உயிருக்குச் சமமாகக் கொள்ள வேண்டும் சான்றுகள் பகுப்பு உணர்வுகள் |
திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும் உலகபொதுமறை பொய்யாமொழி வாயுறைவாழ்த்து முப்பால் உத்தரவேதம் தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது இதனை இயற்றியவர் கி மு ம் நூற்றாண்டுக்கும் கி பி ம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்களால் கருதப்படும் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர் ஆவார் மேற்கோள்கள் ஈ வெ இராமசாமி அரசியல் ஞானம் சமூகஞானம் பொருளாதார ஞானம் ஆகிய சகலமும் திருக்குறளில் அடங்கியுள்ளன குறள் ஒரு அறிவுக்களஞ்சியம் பகுத்தறிவு மணிகளால் கோர்க்கப்பட்ட நூல் ஆரியப் பித்தலாட்டத்திற்குச் சரியான மருந்து மறுப்பு திருக்குறள் ஒன்றே எனவே குறள் வழிப்பட்டு நீங்கள் பகுத்தறிவு பெற்று புது மனிதராகுங்கள் திருக்குறள் ஒன்று போதும் இந்நாட்டு மக்களுக்கு அறிவை உண்டாக்க திருவள்ளுவரின் குறளை மெச்சுகிறார்களே ஒழிய காரியத்தில் அதோடு அதற்கு நேர்விரோதமாக கீதையைப் போற்றுகிறார்கள் சான்றுகள் பகுப்பு கருப்பொருட்கள் |
அரசியல்சார் புவியியல் மற்றும் சர்வதேச அரசியல் தொடர்பில் நாடு என்பது ஒரு புவியியற் பிரதேசமாகும் சாதாரண வழக்கில் நாடு என்ற சொல் தேசம் பண்பாடு சார்ந்த ஒன்று மற்றும் அரசு அரசியல் சார்ந்த ஒன்று என்னும் இரண்டு கருத்துருக்களையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது மேற்கோள்கள் நாட்டின் நன்மை கருதி வாழ்வதுதான் நாட்டுப்பற்று ஔவையார் எந்த ராஜ்யத்திலே தீயோர் ஆதிக்கம் பெறாமல் நல்லோர் தலைமையில் உளரோ அந்த ராஜ்யம் நன்கு அமைந்ததாகும் பிட்டாகஸ் சுதந்தரமான நாட்டில் கஷ்டம் குறைவு ஆனால் சத்தம் அதிகமாயிருக்கும் எதேச்சாதிகாரமுள்ள ராஜ்யத்தில் கஷ்டம் அதிகமாயிருக்கும் குற்றம் சொல்வது குறைவாயிருக்கும் கருவோட் ஈ வெ இராமசாமி அந்நிய நாட்டினர் நிலவிற்குச் செய்து அனுப்பிக் கொண்டிருக்க இறந்த தந்தைக்குப் பார்ப்பானிடம் அரிசி பருப்பு அனுப்பி அழுது கொண்டிருப்பது அறிவுடைமை ஆகாது ஜாதி ஒழிப்பு என்பது நாட்டின் லைசன்ஸ் பெற்ற திருடர்களை அயோக்கியர்களை மடையர்களை ஒழிப்பதாகும் ஜாதிகள் இந்த நாட்டிலிருந்து ஒழிக்கப்படும் வரை ஜாதிவாரி பிரதிநிதித்துவ முறை இட ஒதுக்கீடு அரசாங்க அலுவலகங்களில் நிரந்தரமாக இருந்து வர வேண்டும் துருக்கியில் கமால்பாட்சாவும் ஆப்கானிஸ்தானில் அமீரும் நாத்திகர்கள் என்று அழைக்கப்பட்டதற்கும் அவர்களது சீர்திருத்தம்தான் காரணம் நம் நாட்டில் புதிதாக ஒருவரைச் சந்தித்தால் அவர் உத்தியோகம் பற்றிக் கேட்போம் ரசியாவிலோ சமுதாய சேவை என்ன என்றுதான் கேட்பார்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்களின் ஒழுக்கமே முக்கியமானது ஆனால் நமது நாட்டில் மதமும் மூட நம்பிக்கையும் ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதமாயிருக்கின்றன நம் நாட்டைப் பாரத தேசம் என்று சொல்வது ஆரிய ஆதிக்கத்தைக் குறிப்பதே தவிர வேறில்லை வாயில் நாக்கில் குற்றம் இருந்தாலொழிய வேம்பு இனிக்காது தேன் கசக்காது பிறவியில் மாறுதல் இருந்தாலொழிய புலி புல்லைத்தின்னது இது போன்றதே பார்ப்பனர் தன்மை இந்த நாட்டில் பாமர மக்களுக்காகவோ ஏழை மக்களுக்காகவோ ஒருவன் வேலை செய்ய வேண்டுமானால் அவனுக்கு முதலில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கிற பிரச்சனைதான் முன் நிற்கும் நம் நாடு ஏழை நாடு கடவுளுக்கு ஏன் செல்வங்களைப் பாழாக்க வேண்டும் திரு வி கலியாணசுந்தரனார் நாடு என்பது ஓர் எல்லைக்கு உட்பட்ட வெறும் நிலப்பரப்பு மட்டுமன்று நிலத்தின் இயற்கைத் தன்மையினினின்றும் முகிழ்ந்த வாழ்க்கை அரசு கலவி தொழில் நாகரிகம் முதலியனவும் சேர்ந்த ஒன்றே நாடு என்பது ஜவகர்லால் நேரு தன்னுடைய சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ளுவதற்கு முழுக்க முழுக்கப் பிறரை நம்பியிருக்கும் ஒரு நாடு உதவாக்கரை நாடாகும் இந்தியா உலகத்துக்கெல்லாம் வழி காட்டியாய் இருக்க வேண்டும் என்று திரு சுபாஷ் சந்திர போஸ் கூறியதில் எனக்கு நம்பிக்கையில்லை நான் பற்பல நாடுகளைப் போய்ச் சுற்றிப் பார்த்திருக்கிறேன் ஒவ்வொரு நாட்டிலும் இம்மாதிரிதான் பேசிக் கொள்கிறார்கள் உலகம் பூராவும் தங்களுடைய நாகரிகத்தைப் பரப்பும் பொருட்டுக் கடவுள் தங்களை அனுப்பியிருக்கிறார் என்று ஆங்கிலேயர் எண்ணிக் கொள்கிறார்கள் பிரான்சு ரஷ்யா ஆகிய நாடுகளும் உலகப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்குத் தாங்களே வழி காட்டியாய் இருக்கவேண்டுமென்று கூறிக் கொள்கின்றன எந்த தேசமும் எந்த ஜாதியாரும் தாங்களே கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்று பெருமை பேசிக்கொள்ள முடியாது ஜவகர்லால் நேரு பம்பாயில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விடுதலை பெற்ற நாடுகளின் நிலை அந்நாட்டு மக்கள் கையில்தான் உள்ளது நாடு பெருமை பெற வேண்டிய கட்டாயம் அதன் புகழ் அந்நாட்டு மக்களிடம் தான் இருக்கின்றது நிக்கோலோ மாக்கியவெல்லி புதிதாகச் சுதந்திரமடைந்த ஒரு நாடு தன் சுதந்திரத்திற்கு எதிரியாய் உள்ளவர்களையெல்லாம் ஒழித்துவிட்டால் தான் அமைதியாக இருக்க முடியும் சுதந்திரமுள்ள ஒவ்வோர் அரசும் குடிமக்கள் தங்கள் விருப்பத்தை வெளிப் படுத்துவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று நான் கூறுவேன் சான்றுகள் வெளி இணைப்புகள் சி ஐ ஏ உலகத் தகவல் நூல் பகுப்பு இடங்கள் பகுப்பு நாடுகள் |
கற்பு என்பது திருமணமாகாத பெண் அல்லது ஆண் உடலுறவு கொள்ளாத கன்னித்தன்மை அல்லது ஒரு திருமணம் ஆன பெண் அல்லது ஆண் அவர்களது கணவன் அல்லது மனைவியைத் தவிர வேறு யாருடனும் உடலுறவு கொள்ளாத நிலை ஆகியவற்றைக் குறிக்கும் மேற்கோள்கள் ஈ வெ இராமசாமி கற்பு என்ற சொல் பெண் ஓர் அடிமை சீவனற்ற ஒரு பொருள் என்று காட்டவே ஆகும் கற்பு என்ற சொல் இருந்தால் அது ஆண்களுக்கும் இருக்க வேண்டும் கற்புக்காகக் கணவனின் மிருகச் செயலையும் பொறுத்துக் கொண்டு இருக்க வேண்டும் என்ற கொடுமையான மதங்கள் சட்டங்கள் ஒழிய வேண்டும் சான்றுகள் வெளியிணைப்புக்கள் பகுப்பு கருப்பொருட்கள் |
இப்பக்கம் தமிழ் விக்கிமேற்கோளில் காணப்படும் திரைப்படங்களின் பட்டியலின் தொகுப்பாகும் இதில் ஆங்கிலம் தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளில் ஆன பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது அ ஆ ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் திரைப்படம் இ ஈ உ ஊ எ எந்திரன் திரைப்படம் ஏ ஏஞ்சல்ஸ் அண்ட் டெமன்ஸ் ஐ ஒ ஓ ஔ க கபாலி காட்பாதர் அறிவுதந்தை காந்தி திரைப்படம் ச ட த தி ஏவியேட்டர் தெறி திரைப்படம் ப பராசக்தி திரைப்படம் பாட்ஷா திரைப்படம் புலி திரைப்படம் பெங்களூர் நாட்கள் ம மனோகரா திரைப்படம் மாயா திரைப்படம் மேட்ரிக்ஸ் திரைப்படம் ய ர ரஜினி முருகன் ந ஞ வ வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் ஜ ஜில்லா திரைப்படம் ஷ ஹ ஸ்ரீ ஸ திங்க்ஸ் ஐ ஹேட் அபௌட் யு திரைப்படம் திரைப்படம் |
பெங்களூர் நாட்கள் என்பது இல் வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும் இது ஒரு இந்தியத் தமிழ் நகைச்சுவை திரைப்படம் ஆகும் இத்திரைப்படம் இல் வெளியான அஞ்சலி மேனோன் எழுதி இயக்கிய பெங்களூர் டேய்ஸ் என்ற மலையாளத் திரைப்படத்தின் மறுதயாரிப்பு ஆகும் இயக்குனர் பாஸ்கர் திரைக்கதை டி ஞானவேல் அர்ஜுன் அஜ்ஜூ எதிர்பார்ப்புக்கள் கண்ணன் குட்டி எக்ச்பெக்டேசன்ஸ் திவ்யா அம்மு அர்ஜுன் குட்டி எப்பிடி வந்தீங்க நீங்க வர்ரத யாராவது பாத்தாங்களா நடிப்பு ஆர்யா அர்ஜுன் அஜ்ஜூ ரானா தக்குபாடி சிவபிரசாத் பிரசாத் போப்பி சிம்கா கண்ணன் குட்டி ஸ்ரீ திவ்யா திவ்யா சிவபிரசாத் அம்மு பார்வதி ஆர் ஜே சாரா எலிசபெத் ராய் லட்சுமி லக்சுமி சான்றுகள் வெளியிணைப்புக்கள் பெங்களூர் நாட்கள் திரைப்பட விமர்சனம் பெங்களூர் நாட்கள் திரைப்பட நடிகர்சந்திப்பு பகுப்பு திரைப்படங்கள் பகுப்பு பாஸ்கரின் திரைப்படங்கள் பகுப்பு இந்தியத் திரைப்படங்கள் பகுப்பு தமிழ்த் திரைப்படங்கள் |
தெறி என்பது ஆம் ஆண்டில் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும் இதில் விஜய் ஏமி ஜாக்சன் சமந்தா ராதிகா சரத்குமார் பிரபு முதலியோர் நடித்துள்ளனர் இயக்குனர் அட்லீ திரைக்கதை அட்லீ ஜோசெப் குருவில்லா விஜய் குமார் எங்க போகணும்னு தெரியாது ஆனா இப்பிடியே வாழ்க்கை பூரா போகணும் போல இருக்கு அனி மித்ரா உரையாடல் அனி பைபிள்ல என்ன சொல்லியிருக்கு ஜோசெப் குருவில்லா பைபிள்ல நிறைய சொல்லியிருக்கு நீங்க எத எதிர்பாக்கிறீங்க அனி லவ் யுவர் எனிமீஸ் இல்லையா மித்ரா நான் உங்களுக்கு எப்பிடிப்பட்ட வைப் விஜய் குமார் நீ எனக்கொரு இன்னொரு அம்மா மாதிரிம்மா நடிப்பு விஜய் விஜய் குமார் மற்றும் ஜோசெப் குருவில்லா ஏமி ஜாக்சன் அனி சமந்தா மித்ரா வெளியிணைப்புக்கள் விஜய் அட்லீ பட டைட்டில் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு விஜய்யின் புதிய படம் தெறி பகுப்பு திரைப்படங்கள் பகுப்பு அட்லீயின் திரைப்படங்கள் பகுப்பு இந்தியத் திரைப்படங்கள் பகுப்பு தமிழ்த் திரைப்படங்கள் |
ரஜினி முருகன் என்பது ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் சூரி ராஜ்கிரண் சமுத்திரக்கனி ஆகியோர் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர் இத்திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார் இயக்குனர் பொன் ராம் திரைக்கதை பொன் ராம் நடிகர்கள் சிவகார்த்திகேயன் ரஜினி முருகன் கீர்த்தி சுரேஷ் கார்த்திகா தேவி சூரி தோத்தாத்திரி சமுத்திரக்கனி ராஜ்கிரண் ரஜினி முருகன் யார பார்த்தாலும் ஏ ஆளப் பார்க்கிற மாதிரியே இருக்குது பங்கு கார்த்திகா தேவி தோத்தாத்திரி கண்ணாடிய கழட்டிட்டு பாரு பங்கு அது உ ஆளே தான் நானும் ஒரு தடவை இங்கிலிஸ் ஆல திட்டுரன் பங்கு பிளீஸ் கெல்ப் மீ பிளீஸ் கெல்ப் மீ உரையாடல் ரஜினி முருகன் வாடி வாடி வாடி தமிழோட திருமகளே எங்க அம்மாவோட மருமகளே என்னாடி நினச்சுக்கிட்டிருக்க உ மனசுல லவ் பண்ற மாதிரி பார்ப்பீங்கலாம் லவ் பண்ற மாதிரி பெசுவீங்கலாம் இப்ப எங்க அப்பாவுக்கு பிடிக்கல ஆட்டுக்குட்டிக்கு பிடிக்கலேன்னு சீனப் போட்டா விட்ருவமா ஏய் எனக்கு நியாயம் கிடச்சாகனுண்டி ஏ கார்த்திகா தேவி என்னடா தண்ணியப் போட்டுட்டு வந்து தகராறு பண்றீங்களா தோத்தாத்திரி அப்ப சர்பத்த குடிச்சுட்டு வந்தா தகராறு பண்ணுவாங்க கார்த்திகா தேவி மரியாதையா போய்டு இல்ல போலிச கூப்பிடுவன் தோத்தாத்திரி போலீசா ஓடிடுங்க ரஜினி முருகன் என்னம்மா இப்பிடி பன்றிங்கலேமா பாடல் வெளியிணைப்புக்கள் பகுப்பு திரைப்படங்கள் பகுப்பு பொன் ராமின் திரைப்படங்கள் பகுப்பு இந்தியத் திரைப்படங்கள் பகுப்பு தமிழ்த் திரைப்படங்கள் |
ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் என்பது ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க நாட்டு கற்பனை திரைப்படம் ஆகும் இத் திரைப்படத்தில் டேனியல் ராட்க்ளிஃப் ரூபர்ட் கிரின்ட் எம்மா வாட்சன் மற்றும் பலர் நடித்துள்ளனர் இந்த திரைப்படம் அமெரிக்கா இலங்கை இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் நவம்பர் ஆம் ஆண்டு வெளியானது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனின் முக்கியமான இடங்களில் படபிடிப்பு நடந்தது இதற்கு அடுத்ததாக ஹாரி பாட்டர் அண்டு த சாம்பர் ஆப் சீக்கிரட்சு என்ற பெயரில் இதன் தொடர் வெளியானது இயக்குனர் சிரிஷ் கொலம்பஸ் திரைக்கதை ஸ்டீவ் க்ளோவ்ஸ் நடிப்பு டேனியல் ராட்க்ளிஃப் ஹாரி பாட்டர் ரூபர்ட் கிரின்ட் ரோன் வீஸ்லி எம்மா வாட்சன் ஹெர்மாயினி கிரேன்ஜெர் ரிச்சார்ட் ஹாரிஸ் அல்பசு டம்பிள்டோர் டோம் பெல்டன் ட்ராக்கோ மல்போய் ரொப்பி கோல்ட்ரேன் ருபியசு ஹாக்ரிட் ஆலன் ரிக்மான் செவெரசு சிநேப் மேகி ஸ்மித் மினேர்வா மகானெகள் ஹாரி பாட்டர் தனது அழைப்புக் கடிதத்தை வாசிக்கின்றான் டியர் மிஸ்டர் பாட்டர் வீ ஆர் பிளீஸ்ட் டு இன்போர்ம் யு தட் யு ஹாவ் பீன் அக்செப்டேட் அட் ஹாக்வாட்சு ஸ்கூல் ஆப் விட்ச்கிராப்ட் அண்ட் விசார்டரி அன்புள்ள திரு பாட்டர் அவர்களுக்கு நீங்கள் ஹாக்வாட்சு பள்ளியில் அனுமதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை தெரிவிக்க கடைமைப்பட்டுள்ளோம் லோர்ட் வோல்டேமோர்ட் தியார் இஸ் நோ குட் அண்ட் ஈவில் தியார் இஸ் ஒன்லி பவர் அண்ட் தோஸ் டூ வீக் டு சீக் இட் நல்லது கெட்டது என்று ஒன்றுமே இல்லை இருப்பது சக்தி மட்டும் தான் அதையும் கண்டுபிடிப்பது மிகவும் கடினம் வெளியிணைப்புக்கள் அதிகாரபூர்வ ஆரி பாட்டர் தளம் பகுப்பு திரைப்படங்கள் பகுப்பு சிரிஷ் கொலம்பசின் திரைப்படங்கள் பகுப்பு அமெரிக்கத் திரைப்படங்கள் பகுப்பு ஆங்கிலத் திரைப்படங்கள் |
ஆரி பாட்டர் அண்டு த சேம்பர் ஆப் சீக்கிரட்சு என்பது ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க நாட்டு கற்பனை திரைப்படம் ஆகும் இத் திரைப்படத்தில் டேனியல் ராட்க்ளிஃப் ரூபர்ட் கிரின்ட் எம்மா வாட்சன் மற்றும் பலர் நடித்துள்ளனர் இதற்கு அடுத்ததாக ஹாரி பாட்டர் அண்டு த சாம்பர் ஆப் சீக்கிரட்சு என்ற பெயரில் இதன் தொடர் வெளியானது இயக்குனர் சிரிஷ் கொலம்பஸ் திரைக்கதை ஸ்டீவ் க்ளோவ்ஸ் நடிப்பு டேனியல் ராட்க்ளிஃப் ஹாரி பாட்டர் ரூபர்ட் கிரின்ட் ரோன் வீஸ்லி எம்மா வாட்சன் ஹெர்மாயினி கிரேன்ஜெர் ரிச்சார்ட் ஹாரிஸ் அல்பசு டம்பிள்டோர் டோம் பெல்டன் ட்ராக்கோ மல்போய் ரொப்பி கோல்ட்ரேன் ருபியசு ஹாக்ரிட் ஆலன் ரிக்மான் செவெரசு சிநேப் மேகி ஸ்மித் மினேர்வா மகானெகள் ஹாரி பாட்டர் டோப்பிக்கு நாட் டு பீ ரூட் ஓர் எனிதிங் பட் திஸ் இசின்ட் ரியாலி எ கிரேட் டைம் போர் மீ டு ஹாவ் எ ஹவுஸ் எல்ப் இன் மை பெட்ரூம் நான் சொல்வது அநாகரிகமானது என்று நினைக்க வேண்டாம் ஆனால் அடிமை ஒன்றை எனது படுக்கையறையில் வைத்திருப்பதற்கு இது சரியான நேரம் இல்லை ஹவ் கேன் ஐ ஸ்பீக் எ லாங்குவேஜ் வித்தவுட் நோவிங் ஐ கேன் எனக்குத் தெரியுமா என்பது தெரியாமல் எவ்வாறு என்னால் ஒரு மொழியை பேச முடியும் கடைசி கட்டத்தில் தியார் ஸ் நோ ஹாக்வாட்ஸ் வித்தவுட் யூ ஹாக்ரிட் நீங்க இல்லாம ஹாக்வட்சே இல்லை ஹக்ரிட் ரோன் வீஸ்லி டாட் லவ்ஸ் மகிள்ஸ் ஹீ திங்க்ஸ் தே ஆர் பாசிநேடிங் அப்பாவிற்கு மகிள்களை பிடிக்கும் அவர்கள் அற்புதமானவர்கள் என்று அவர் நினைக்கின்றார் போலோவ் த ஸ்பைடர்ஸ் போலோவ் த ஸ்பைடர்ஸ் இப் ஹாக்ரிட் எவர் கெட்ஸ் அவுட் ஒப் ஆஸ்கபான் ஐ வில் கில் கிம் சிலந்திகளை பின்தொடருங்கள் சிலந்திகளை பின்தொடருங்கள் ஹக்ரிட் மட்டும் ஆஸ்கபானில் இருந்து வெளியே வந்தால் நான் அவரை கொன்று விடுவேன் வை ஸ்பைடர்ஸ் வை குட்ன் ட் இட் பீ போலோவ் த பட்டர்பிளைஸ் ஏன் சிலந்திகள் அது ஏன் பட்டாம்பூச்சிகளை பின்தொடருங்கள் என்று இருந்திருக்கக் கூடாது டிராகோ மல்போய் யூ வில் நெவெர் கட்ச் மீ பாட்டர் உன்னால என்ன பிடிக்கவே முடியாது பாட்டர் அல்பஸ் டம்பில்டோர் கெல்ப் ஷால் அல்வேயிஸ் பீ கிவின் அட் ஹாக்வாட்ஸ் டு தோஸ் ஹூ ஆஸ்க் போர் இட் யார் உதவி கேட்கின்றார்களோ அவர்களுக்கு எப்பொழுதும் ஹாக்வாட்சில் உதவி கிடைக்கும் ஆர்தர் வீஸ்லி நவ் ஹாரி யு மஸ்ட் நோ ஒல் எபௌட் மகிள்ஸ் டேல் மீ வாட் எக்சாக்ட்லி இஸ் த பங்சன் ஆப் எ ரப்பர் டக் இப்ப ஹாரி உனக்கு மகிள்களை பற்றி கட்டாயம் தெரிந்திருக்கும் சொல்லு ரப்பர் வாத்தின் மிகச் சரியான செயல்பாடு என்ன வெளியிணைப்புக்கள் அதிகாரபூர்வ ஆரி பாட்டர் தளம் பகுப்பு திரைப்படங்கள் பகுப்பு சிரிஷ் கொலம்பசின் திரைப்படங்கள் பகுப்பு அமெரிக்கத் திரைப்படங்கள் பகுப்பு ஆங்கிலத் திரைப்படங்கள் |
விக்கிமேற்கோளில் காணப்படும் மேற்கோள்களின் பட்டியல் இங்கு பட்டியலிடப்படுகிறது இதில் ஆங்கிலம் தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளில் ஆன பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது ஆ ஆல்பெர் காம்யு இ இலக்கியம் க கம்பராமாயணம் குள்ளச் சித்தன் சரித்திரம் ச சிலப்பதிகாரம் சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை த திருக்கைலாய ஞானஉலா திருவந்தாதி திருவாரூர் மும்மணிக்கோவை திருவாலங்காட்டுப் பதிகம் ப பின் நவீனத்துவம் புறநானூறு பொன்வண்ணத்தந்தாதி வ வீரபாண்டியம் பகுப்பு இலக்கியங்கள் |
ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் என்பது ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க நாட்டு கற்பனை திரைப்படம் ஆகும் இத் திரைப்படத்தில் டேனியல் ராட்க்ளிஃப் ரூபர்ட் கிரின்ட் எம்மா வாட்சன் மற்றும் பலர் நடித்துள்ளனர் இயக்குனர் அல்போன்சா குயூரான் திரைக்கதை ஸ்டீவ் க்ளோவ்ஸ் மூலம் ஜே கே ரௌலிங்கின் ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் நடிப்பு டேனியல் ராட்க்ளிஃப் ஹாரி பாட்டர் ரூபர்ட் கிரின்ட் ரோன் வீஸ்லி எம்மா வாட்சன் ஹெர்மாயினி கிரேன்ஜெர் ரிச்சார்ட் ஹாரிஸ் அல்பசு டம்பிள்டோர் டோம் பெல்டன் ட்ராக்கோ மல்போய் ரொப்பி கோல்ட்ரேன் ருபியசு ஹாக்ரிட் ஆலன் ரிக்மான் செவெரசு சிநேப் மேகி ஸ்மித் மினேர்வா மகானெகள் ஹாரி பாட்டர் தொடக்கத்தில் தனது படுக்கைவிரிப்பினுள் இருந்து மந்திரத்தை உச்சரிக்கின்றான் லுமொஸ் மக்சிமா மந்திர வார்த்தை தமிழாக்கம் பெரிய வெளிச்சம் கொடு ஆர்த்தர் வீஸ்லிக்கு பதிலளிக்கின்றான் வை வுட் ஐ கோ லுக்கிங் போர் சம்போடி ஹூ வோன்ட்ஸ் டு கில் மீ நான் ஏன் என்னைக் கொல்ல நினைக்கும் ஒருவனை தேடி போகப்போகின்றேன் யூ டேல் தோஸ் ஸ்பைடர்ஸ் ரோன் நீ அந்த சிலந்திகளுக்கு சொல்லு ரோன் ஹெர்மாயினிக்கு இறந்த காலத்தில் டிராகோவை அடிப்பதை பார்த்து குட் பஞ் நல்ல குத்து சிரியசிற்கு யூ பெற்றேத் மை பேரெண்ட்ஸ் யூ ஆர் த ரீசன் தே ஆர் டேட் நீ பெற்றோரை கொண்ருள்ளாய் அவர்களின் மரணத்திற்கு நீ தான் காரணம் கருப்பு நீரேரிக்கு அருகில் இறந்த காலத்தில் உள்ள தன்னையும் சிரியசையும் பிணந்தின்னிகளிடம் இருந்து காக்க மந்திரத்தை உச்சரிக்கின்றான் எக்ஸ்பெக்டோ பெற்றோனம் வெளியிணைப்புக்கள் அதிகாரபூர்வ ஆரி பாட்டர் தளம் பகுப்பு திரைப்படங்கள் பகுப்பு அல்போன்சா குயூரானின் திரைப்படங்கள் பகுப்பு அமெரிக்கத் திரைப்படங்கள் பகுப்பு ஆங்கிலத் திரைப்படங்கள் |
ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் என்பது ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க நாட்டு கற்பனை திரைப்படம் ஆகும் இத் திரைப்படத்தில் டேனியல் ராட்க்ளிஃப் ரூபர்ட் கிரின்ட் எம்மா வாட்சன் மற்றும் பலர் நடித்துள்ளனர் இயக்குனர் மைக் நேவெல் திரைக்கதை ஸ்டீவ் க்ளோவ்ஸ் மூலம் ஜே கே ரௌலிங்கின் ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் நடிப்பு டேனியல் ராட்க்ளிஃப் ஹாரி பாட்டர் ரூபர்ட் கிரின்ட் ரோன் வீஸ்லி எம்மா வாட்சன் ஹெர்மாயினி கிரேன்ஜெர் ரிச்சார்ட் ஹாரிஸ் அல்பசு டம்பிள்டோர் டோம் பெல்டன் ட்ராக்கோ மல்போய் ரொப்பி கோல்ட்ரேன் ருபியசு ஹாக்ரிட் ஆலன் ரிக்மான் செவெரசு சிநேப் மேகி ஸ்மித் மினேர்வா மகானெகள் வெளியிணைப்புக்கள் அதிகாரபூர்வ ஆரி பாட்டர் தளம் பகுப்பு திரைப்படங்கள் பகுப்பு மைக் நேவெலின் திரைப்படங்கள் பகுப்பு அமெரிக்கத் திரைப்படங்கள் பகுப்பு ஆங்கிலத் திரைப்படங்கள் |
கபாலி ஆம் ஆண்டு என்பது வெளிவரவிருக்கும் ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும் இத்திரைப்படத்தில் ரஜனிகாந்த் முதன்மைக் கதாப்பாத்திரமாக நடிக்கின்றார் இவருடன் ராதிகா ஆப்தே கிசோர் குமார் மற்றும் பலர் நடிக்கின்றனர் ஆகத்து இல் சென்னையில் அமைந்துள்ள ஏவிஎம் கலையகத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகியது மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மலேசியா ஹொங் கொங் போன்ற நாடுகளிலும் பாங்கொக் நகரிலும் நடைபெறவுள்ளது இயக்குனர் பா ரஞ்சித் திரைக்கதை பா ரஞ்சித் நடிப்பு ரஜினிகாந்த் கபாலீஸ்வரன் ராதிகா ஆப்தே குமுதவல்லி கிசோர் குமார் கலையரசன் அட்டகத்தி தினேஷ் தன்சிகா யோகி கபாலீஸ்வரன் தமிழ் படங்கள்ல இங்க மடல் வச்சுக்கிட்டி மீசைய முறுக்கிக்கிட்டு லுங்கியை கட்டிக்கிட்டு நம்பியாரு ஏ கபாலி அப்பிடின்னு சொன்ன உடனே குனிஞ்சு சொல்லுங்க எஜமான் அப்பிடின்னு வந்து நிப்பானே அந்த மாதிரி கபாலி நினைச்சியாடா கபாலி டா மகிழ்ச்சி வெளியிணைப்புக்கள் சான்றுகள் பகுப்பு திரைப்படங்கள் பகுப்பு இந்தியத் திரைப்படங்கள் பகுப்பு தமிழ்த் திரைப்படங்கள் பகுப்பு வெளிவரவிருக்கும் திரைப்படங்கள் பகுப்பு ரஞ்சித்தின் திரைப்படங்கள் |
சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை என்னும் இந்த நூல் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று ஆசிரியர் கபிலதேவ நாயனார் பாடல்கள் அந்தி மதிமுகிழான் அந்தியஞ் செந்நிறத்தான் அந்தியே போலும் அவிர்சடையான் அந்தியில் தூங்கிருள் யாமமே போலும் சுடுநீற்றான் வீங்கிருள்சேர் நீலம் மிடறு என்பது இந்நூலின் முதல் வெண்பாப்பாடல் தாமரைக் கோவுநன் மாலும் வணங்கத் தலைப்பிடத்துத் தாமரைக் கோவணத் தோடிரந் துண்ணினும் சார்ந்தவர்க்குத் தாமரைக் கோமளத் தோடுல காளத் தருவர்கண்டீர் தாமரைக் கோமளக் கைத்தவ ளப்பொடி சங்கரரே என்பது இந்நூலில் ஆறாம் பாடலாக அமைந்துள்ள கட்டளைக்கலித்துறைப் பாடல் இந்தப் பாடலில் மடக்கு என்னும் அணிநலம் காணப்படுகிறது அந்த மடக்குகளில் பிரித்துப் பொருள் காணவேண்டிய பொதுமொழித் தொடர்கள் உள்ளன சான்றுகள் பகுப்பு இலக்கியங்கள் பகுப்பு நூல் |
அற்புதத் திருவந்தாதி என்னும் நூல் சைவத்திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுதியில் உள்ள ஒரு நூலாகும் இதனைக் காரைக்கால் அம்மையார் எழுதியுள்ளார் இது வெண்பாப் பாடல்களைக் கொண்டது இதில் காரைக்கால் அம்மையாரின் சிவ அனுபவத்தின் முழுப் பரிணாமமும் தெரிகிறது அம்மையார் இறைவனை நீ எனக்கு உதவி செய்யலாகாதா என்று கெஞ்சுகின்ற இடங்களும் உள்ளன இறைவனை அடைதல் மிக எளிது என்று மற்றவர்க்கு உரைக்கும் பாடல்களும் உள இறைவனை அடைந்துவிட்டேன் இனி எனக்கு ஒரு கவலையுமில்லை என்று பூரிப்படையும் செய்யுள்களும் உள்ளன உரையினால் இம்மாலை அந்தாதி வெண்பாக் கரைவினால் காரைக்கால் பேய்சொற் பருவுவார் ஆராத அன்பினோடு அண்ணலைச்சென் று ஏத்துவார் பேராத காதல் பிறந்து வெளியிணைப்புகள் பகுப்பு இலக்கியங்கள் |
திருவாலங்காட்டுப் பதிகம் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்று திருவாலங்காடு என்னும் ஊர்க் கோயிலில் குடிகொண்டுள்ள சிவபெருமான்மீது பாடப்பட்ட நூல் இது இதனைப் பாடியவர் காரைக்கால் அம்மையார் இவர் காலம் ஆம் நூற்றாண்டின் பிற்பாதி பதிகம் என்பது பாடல்கள் கொண்ட நூல் இந்த நூலில் பாடல்கள் உள்ளன ஆம் பாடலாக அடைவுப்பாடல் ஒன்றும் உள்ளது ஆடும் எங்கள் அப்பன் இடம் திருவாலங்காடே இத்தொடரோடு பாடல்களும் முடிகின்றன செடித்தலைக் காரைக்கால் பேய் செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார் சிவகதி சேர்ந்து இன்பம் எய்துவரே இது திருவாலங்காட்டுப் பதிகத்தின் அடைவுப்பாடல் ஆகும் வெளியிணைப்புகள் பகுப்பு இலக்கியங்கள் |
பொன்வண்ணம் என்று இந்த நூல் தொடங்குவதால் இதற்குப் பொன்வண்ணத்து அந்தாதி என்னும் பெயர் சூட்டப்பட்டுள்ளது பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்றான அந்தாதி வகையினது நூலின் காலம் இது சேரமான் பெருமாள் நாயனாரால் பாடப்பட்ட நூல் இவர் நாயன்மார்களில் ஒருவர் அந்தாதி முறையில் தொடுக்கப்பட்டுள்ள கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் இதில் உள்ளன பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்தியங்கும் மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம் தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக்கொண்ட என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே நூலின் முதல் பாடல் கருத்து பொன்வண்ண மேனி மின்வண்ணச் சடை வெள்ளைநிறக் காளை ஆகியவற்றைக் கொண்டிருப்பவன் ஈசன் இவற்றில் வியப்பு ஒன்றும் இல்லை என் மனத்தின் வண்ணம் எப்போதெல்லாம் எப்படி எப்படி இருக்கிறதோ அப்படியெல்லாம் காட்சி தருகிறானே வெளியிணைப்புக்கள் பகுப்பு இலக்கியங்கள் |
திருவாரூர் மும்மணிக்கோவை பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்றான மும்மணிக்கோவை வகையைச் சேர்ந்தது நூலின் காலம் இது சேரமான் பெருமாள் நாயனார் பாடிய நூல்களில் ஒன்று திருவாரூர் சிவபெருமான்மீது பாடப்பட்டது வெண்பா கட்டளைக்கலித்துறை ஆசிரியம் ஆகிய மூவகைப்பாடல்கள் மாறி மாறி வரும்படி பாடப்பட்டுள்ள பாடல்களைக் கொண்டது பாடல்கள் அகத்திணைச் செய்திகளாக உள்ளன பொழுது கழிந்தாலும் பூம்புனம் காத்தெள்கி எழுதும் கொடியிடையாய் ஏகான் தொழுதமரர் முன்னஞ்சேர் மொய்கழலான் முக்கண்ணான் நான்மறையான் மன்னும்சேய் போலொருவன் வந்து திருவாரூர் மும்மணிக்கோவையில் ஒரு பாடல்ஒரு பாடல் கருத்து எழுதும் கொடி போன்ற இடையையுடைய தோழியே பொழுதோ போய்விட்டது தினைப்புனம் காத்துக் களைத்துப்போயிருக்கிறேன் முக்கண்ணான் நான்மறையான் முருகவேள் போல என் கண்முன் நிற்கிறானே என்செய்வேன் என்கிறாள் ஒரு தலைவி இப்படி எல்லாப் பாடல்களும் அகத்திணைப் பாடல்களாக உள்ளன வெளியிணைப்புக்கள் சான்றுகள் பகுப்பு இலக்கியங்கள் |
திருக்கைலாய ஞானஉலா பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்று உலா வகையினது நூலின் காலம் சேரமான் பெருமாள் நாயனார் பாடிய இந்த உலா நூல் ஆதியுலா எனப் போற்றப்படுகிறது காரணம் உலா இலக்கியத்தில் இது முதல்நூல் ஆதி எனப்படும் கைலாய நாதன் உலாவருவதைப் பாடுவதாலும் இது ஆதியுலா எனப்பட்டது இதில் கண்ணிகள் உள்ளன இறுதியில் ஒரு வெண்பாவும் உள்ளது இந்த வெண்பா சங்ககாலத் தொகுப்புநூல் பத்துப்பாட்டு ஒவ்வொன்றின் இறுதியிலும் சேர்க்கப்பட்டுள்ள வெண்பா போன்றது சிவன் உலா வரும்போது ஏழு பருவத்துப் பெண்களும் அவன்மீது காதல் கொள்கின்றனர் நன்றறி வார்சொல் நலம்தோற்று நாண்தோற்று நின்றறிவு தோற்று நிறைதோற்று நன்றாகக் கைவண்டும் கண்வண்டும் ஓடக் கலைஓட நெய்விண்ட பூங்குழலாள் நின்றொழிந்தாள் திருக்கைலாய ஞானஉலாவிலிருந்து சில கண்ணிகள் பொருள் நலம் தோற்று நாண் தோற்று அறிவு தோற்று நிறை தோற்று கைவண்டு வளையல் ஓட கண்வண்டு விழி ஓட கலை உணிந்துள்ள ஆடை ஓட நின்று உள்ளம் ஒழிந்து ஒப்புக்கு நின்றுகொண்டிருந்தாள் வெளியிணைப்புக்கள் சான்றுகள் பகுப்பு இலக்கியங்கள் |
திறமையின் திருஉருவம் இராஜா தினகர் என்பது டாக்டர் எஸ் எம் கமாலின் நூலாகும் இது இராஜா தினகரரது வாழ்க்கை வரலாற்றை கூறும் நூலாகும் இந்நூலின் முதல் பதிப்பு செப்டம்பர் மாதத்தில் வெளியானது பாண்டிய நாட்டின் கீழக்கடற்கரையை அடுத்து பாலையும் நெய்தலும் முல்லையும் மருதமும் மயங்கிய நால்வகை நிலத்தின் அதிபதியாக விளங்கியவர்கள் சேது மன்னர்கள் அத்தியாயம் இளஞ்சூரியர் பக்கம் வாக்கியம் முதலாவது அத்தியாயத்தின் முதலாவது வரி இன்னும் இந்தியத் திருநாடெங்கும் புகழ்பெற்று விளங்கும் இராமேசுவரம் திருக்கோயில் இந்த மன்னின் கட்டுமானக் கலைக்கு வழங்கிய காணிக்கையாக விளங்குகின்றன அத்தியாயம் இளஞ்சூரியர் பக்கம் வாக்கியம் பாஸ்கரரும் தினகரரும் இராமநாதபுரத்தில் இருந்து சென்னை பட்டணம் பயணமாகார்கள் அத்தியாயம் கல்விப்பயணம் பக்கம் வாக்கியம் இவர்களது இல்லறம் சிறப்புற நடைபெற தினகரது தாயார் துரைராஜா லசுஷ்மி நாச்சியார் துணையாக இருந்தார் அத்தியாயம் கவிதைக் கனவு பக்கம் வாக்கியம் வெளியிணைப்புகள் பகுப்பு வரலாற்று நூல்கள் |
குறிஞ்சி மலர் என்பது நா பார்த்தசாரதி மணிவண்ணன் நூலாகும் இது ஒரு தமிழ் சமூக நாவலாகும் இந்நூலின் முதல் பதிப்பு டிசம்பர் மாதத்தில் வெளியானது மெய்யாய் இருந்தது நாட்செல வெட்ட வெறும் பொய்யாய்ப் பழங்கதையாய்க் கற்பனையாய் மெல்லப் போனதுவே பிரபஞ்சப் பூச்செடியில் மறுபடியும் ஒரு நாள் மலர் பூத்துக் கொண்டிருந்தது அத்தியாயம் பக்கம் வாக்கியம் முதலாவது அத்தியாயத்தின் முதலாவது வரி மலரின் மென்மையில் கலந்து இழையோடும் மணம்போல் அந்தக் குளிரோடு கலந்து வீசும் இதமான மண்காற்று புலர்ந்தும் புலராமலும் இருக்கிற பேரரும்பு போல் விடிந்தும் விடியாத பேதைப்பருவத்து இளம்காலை நேரம் கீழ்வானத்து ஒளிக் குளத்தில் வைகறை நங்கை இன்னும் மஞ்சள் பூசிக் குளிக்கத் தொடங்கவில்லை அத்தியாயம் பக்கம் வாக்கியம் அவைகளை எங்கே பறித்து வைப்பது யார் வைப்பது துக்கத்தைக்கூட வரன் முறையாகவும் ஒழுங்காகவும் கொண்டாடுகிற அளவுக்கு வாழ்க்கையைப் பயன்படுத்திக் கொண்டு பழகிவிட்ட நாடு இது பாஸ்கரரும் தினகரரும் இராமநாதபுரத்தில் இருந்து சென்னை பட்டணம் பயணமாகார்கள் அத்தியாயம் பக்கம் வாக்கியம் எங்கும் எப்பொழுதும் புறப்பட்டுப் போவதற்கு வசதியான வெளி நாட்டுப் பயண அனுமதியை இண்டர்நேஷனல் பாஸ் போர்ட்டாக வாங்கிவிட ஏற்பாடு செய்து கொண்டிருந்தான் அரவிந்தன் பக்கம் வாக்கியம் வெளியிணைப்புகள் பகுப்பு நாவல்கள் |
வீரபாண்டியம் என்பது செகவீர பாண்டியனாரின் நூலாகும் இது மதுரை வாசுகி அச்சகத்தில் பதிப்பிக்கப் பெற்றது இந்நூலின் முதல் பதிப்பு மார்கழி மாதத்தில் வெளியானது கரும சிந்தனை யுடையவர் தழைத்துயர்க் தோங்கிப் பெருமை யெய்துவர் பேருலகெங்கனும் அவரை அருமை யாகவே போற்றுவர் அதனைகன் கறிய உரிமை யாகமுன் னிகழ்ந்தவோர் கதையுள துாைக்கேன் சங்கன் கதை பக்கம் கலிநிலைத் துறை பொருள்முகம் அமைச்சுகண் பொருந்து நட்பினர் மருளறு செவியாண் வண்கை திண்படை உருளுயர் கோள்குடி யுடைய கால்களே அருளறம் மனமுயிர் அறிந்து கொள்கவே பக்கம் வெளியிணைப்புகள் பகுப்பு இலக்கியங்கள் |
சேற்றில் மனிதர்கள் என்பது ராஜம் கிருஷ்ணனின் நாவலாகும் இது ஒரு பாரதிய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நாவல் ஆகும் சொட் சொட்டென்று முற்றத்தில் சான நீர் விழும் ஒசைதான் சம்முகத்தைத் துயிலெழுப்புகிறது அத்தியாயம் வரப்புயர குடியுயர பக்கம் எந்திரிச்சிட்டீங்களா ராவெல்லாம் துரங்கவேயில்ல இன்னிக்கு எப்படி ஐயா உன்னைக் கூட்டிட்டுப் போவாரு நீ வானா அண்ணனைக் கூட்டிட்டுப் போன்னு இப்பதா காந்திகிட்டச் சொன்னேன் அத்தியாயம் வரப்புயர குடியுயர பக்கம் பின் தாழ்வாரத்தில் இருந்த கோழிக் கூண்டைத் துக்கிவைத்து பெட்டையையும் ஆறு நோஞ்சான் குஞ்சுகளையும் விடுதலை செய்கிறாள் அத்தியாயம் வரப்புயர குடியுயர பக்கம் அதிலிருந்து வரும் பாட்டு ஒரே கத்தலாக இருக்கிறது தனது தட்டல் உள்ளே இருக்கும் மருமகளுக்குச் செவியில் விழுமா என்ற ஐயத்துடன் சற்றே ரேடியாவை நிறுத்து என்று சொல்லும் பாவனையில் பார்க்கிறார் பக்கம் அப்படி எல்லாம் இல்ல சாம்பாரே நமக்கு சாட்சி இருக்கு சத்தியம் எப்பவுமே அநாதயாயிராது பக்கம் வெளியிணைப்புகள் பகுப்பு நாவல்கள் |
கமல்ஹாசன் பிறப்பு நவம்பர் இராமநாதபுரம் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார் இவர் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார் இவரின் மாறுபட்ட வேடங்களைக் கொண்ட நடிப்பிற்காக பரவலாக அறியப்படுகிறார் மேற்கோள்கள் சினிமா என்பது ஜனரஞ்சகம் மட்டுமல்ல ஜனநாயகமும்கூட சினிமா ஒரு கூட்டு முயற்சி எல்லோரும் சேர்ந்து செய்தால்தான் சிறப்பாக வரும் கல்பனாவின் நகைச்சுவை உணர்வும் எளிமையான அணுகுமுறையும் வெவ்வேறு வித குணங்கள் இத்தனை திறமையுடனும் அதே நேரத்தில் எளிமையாகவும் இருக்க தன்மையான மனதும் அறிவும் தேவை கல்பனாவுக்கு இரண்டும் இருந்தன நடிகர் கல்பனா அவர்களின் மரணம் குறித்த செய்தியில் கமல்ஹாசன் அவர்கள் குறிப்பிட்டது சுதந்திரத்தையும் அராஜகத்தையும் காலம் பிரிக்கிறது சுதந்திரம் என்பது லஷ்மணன் கோடு போல் வரம்புடன் வர வேண்டும் சுதந்திரம் என்பது மாறாதது நிலையானது சுதந்திரம் என்பது நம் உடல் போன்றது அதனை நாம் ஊட்டிவளர்க்க வேண்டும் காக்க வேண்டும் உண்மையான கருத்து சுதந்திரம் கொண்டதுதான் உண்மையான ஜனநாயகம் தேவர் மகன் படத்தில் விதை நான் போட்டது என்ற வசனத்தை எழுதியிருப்பேன் அதை சிவாஜி கணேசன் பேசியிருப்பார் அந்த விதைகளில் ஒன்றுதான் நான் தேவர் மகன் படத்தில் சிவாஜிக்கு போய் எப்படி வசனம் சொல்லிக் கொடுப் பது என பயந்தது உண்டு வசனம் என்றால் என்ன என்று தெரிந்து கொண்டதே அவரிடம்தான் ஆனால் அவரை விட பணிவான நடிகரை இதுவரை நான் பார்த்ததில்லை பார்க்க கம்பீரமாக இருந்தாலும் பூனைக் குட்டியாக மாறி விடுவார் வசனம் நன்றாக இருந்தால் அதை எப்படி சொல்ல வேண்டும் என்று சொல்லுப்பா எனக் கேட்பார் அந்த ஊக்கம் தேவர் மகன் படம் முழுவதும் வியாபித்தது சிவாஜி கணேசன் பற்றி கமல் ஒரு கனவு நனவாகி விட்ட நிலையில் நாம் காண வேண்டியது இன்னொரு கனவு ஒரு குடிகாரனைப் பற்றி படமெடுத்தால் தான் மதுவிலக்கு பற்றி எடுக்க முடியும் என்ன சொல்ல வருகிறோம் என்று தெரியாமல் ஜாதிப் பெயர் இருக்கிறதே என்றால் முதலில் ஜாதிப் பெயரை தெருவில் இருந்து எடுங்கள் பெயருக்கு முன்னாள் இருந்து ஜாதிப் பெயரை எடுங்கள் நான் எடுத்துவிட்டேன் நட்சத்திரம் என்று சொல்லி அந்நியப்படுத்த வேண்டாம் என்னை எப்போதும் தொழிலாளியாக ஏற்றுக் கொள்ளுங்கள் தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் கூறியது நிதிநிலை அறிக்கையில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் பாதுகாப்புக்கு ஒதுக்கியிருக்கிறது ஆனால் சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறைக்கான நிதி ஒரு சதவிகிதத்தை சுற்றிதான் கடந்த ஆண்டுகளாக இருக்கிறது அமெரிக்கா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறைக்கு பாதுகாப்புக்கு நிதி ஒதுக்குகிறது அமெரிக்கா மட்டுமல்ல வளர்ந்த நாடுகள் அனைத்துமே இந்த முறையில்தான் நிதியை ஒதுக்குகிறார்கள் ஆனால் எனது நாட்டில் இன்னும் பாதுகாப்புத் துறையின்நிதி ஒதுக்கீட்டையே சிறப்பான அரசின் செயல்பாடாக காண்பித்து கொள்வது வேதனையானது கரோனா ஊரடங்கின்போது கமல் வெளியிட்ட அறிக்கை உண்மையான தேசப்பற்று என்பது முதலில் ஒட்டுமொத்த தேசத்தின் ஆரோக்கியத்தை காப்பதில் பெருமை கொள்வதே ஆகும் அதன்பின்தான் பொருளாதாரமும் பாதுகாப்புத் துறையும் இருக்க வேண்டும் உடல்நலத்திலும் சுகாதாரத்திலும் அக்கறை இல்லாத நாடு நமது ராணுவத்தின் வீரத்தையும் ஆற்றலையும் காட்டி போருக்கு தயார் என்று அறை கூவுவது கொலை குற்றத்துக்கு சமம் கரோனா ஊரடங்கின்போது கமல் வெளியிட்ட அறிக்கை நபர் குறித்த மேற்கோள்கள் ஆரம்பத்தில் புதுமை மிக்க கருத்துக்களோடு அறிவு ஜீவிகள் ஏற்றுக்கொள்ளும் படங்களில் நடிப்பதே சிறந்தது என்று கருதினார் பின்னாளில் படம் பார்ப்போரில் அதிகப்படியானவர்கள் உண்மையான அன்பைப் பொழிபவர்கள் பாமர மக்கள் என்பதை உணர்ந்துகொண்டு அவர்களை மகிழ்விக்க மசாலாப் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்தார் கமல்ஹாசனைப் பற்றி சிவகுமார் கூறியது நண்பர் கமலஹாசன் உடற்பயிற்சி நடனபயிற்சி இவ்விரண்டிலும் மிக இளவயதிலேயே அதிகக் கவனம் செலுத்தி அசுரசாதகம் செய்தது பின்னாளில் திரைப்படங்களில் பல்வேறு பரிமாணங்களை அவர் வெளிப்படுத்தப் பெரிதும் உதவியது கமல்ஹாசனைப் பற்றி சிவகுமார் கூறியது சான்றுகள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு பிறப்புக்கள் பகுப்பு நடிகர்கள் பகுப்பு பாடகர்கள் பகுப்பு இயக்குனர்கள் |
சிலம்பரசன் திரைப்பட நடிகர் பாடகர் மேற்கோள்கள் சமைத்துக் கொண்டிருக்கும் உணவை திருடிவிட்டு நன்றாக இல்லை என சொல்வது போல இருக்கிறது சமைத்து முடித்தவுடன் தானே அசல் சுவை தெரியும் தான் பாடி வெளியிடாத படாத பாடல் யாரோ வெளியிட்டு சர்சையானதை தொடர்ந்து கூறியவை அவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காகத் தவறைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தால் என்னுடைய நல்ல விஷயங்கள் காணாமல் போய்விடும் ஹிட் கொடுத்தால் மதிப்பார்கள் ப்ளாப் கொடுத்தால் மிதிப்பார்கள் நபர் குறித்த மேற்கோள்கள் சான்றுகள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு பிறப்புக்கள் பகுப்பு நடிகர்கள் பகுப்பு பாடகர்கள் பகுப்பு பாடலாசிரியர்கள் |
கௌதம் வாசுதேவ் மேனன் பிறப்பு பெப்ரவரி ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர் திரைப்படத்துறைக்கு வரும் முன்னர் அறியப்பெற்ற விளம்பரப் பட உருவாக்குநராக இருந்தார் மேற்கோள்கள் என்னைப் பற்றி வரும் செய்திகளுக்கு நான் விளக்கமளித்து வருடங்கள் ஆகிறது நான் எதையும் பார்க்காமல் படிக்காமல் இருப்பதால்தான் என்னால் அடுத்தடுத்த படங்களில் சுதந்திரமாக பணியாற்ற முடிகிறது நபர் குறித்த மேற்கோள்கள் வெளியிணைப்புக்கள் சான்றுகள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு பிறப்புக்கள் பகுப்பு இயக்குனர்கள் பகுப்பு தயாரிப்பாளர்கள் |
லட்சுமி ராமகிருஷ்ணன் என்பவர் ஓர் இந்தியத் திரைப்பட நடிகையும் இயக்குனரும் ஆவார் மேற்கோள்கள் என்னமா இப்படி பன்றீங்களே ம்மா சான்றுகள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு நடிகர்கள் பகுப்பு இயக்குனர்கள் |
மயில்சாமி அண்ணாதுரை பிறப்பு ஜூலை கோதவாடி பொள்ளாச்சி கோயம்புத்தூர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியலாளர் தற்போது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இயக்குனராகப் பணிபுரிகிறார் மேற்கோள்கள் சந்திரன் செவ்வாய்க்குச் செயற்கைகோள்களை அனுப்பும்போது ஒவ்வொரு விநாடியிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது உதாரணமாக செவ்வாய்க் கோள் சராசரியாக விநாடிக்கு கி மீ வேகத்தில் நகருகிறது ஆகையால் செவ்வாய்க்கு பயணம் செய்த அந்தச் செயற்கைகோள் தனது பயணத்தை மாதங்களுக்கு முன்னரே தொடங்கியது நேரம் பாதை வேகம் ஆகியவற்றை கணக்கிடுவதில் ஏதேனும் ஒன்றில் தவறு நேர்ந்தாலும் திட்டம் தோல்வியில் முடியும் வாய்ப்புள்ளது இதேபோல் கல்விக்கும் சரியான நேரம் பாதை வேகம் ஆகிய மூன்றும் பொருந்தும் கல்வியில் வெற்றிப் பெற இந்த மூன்றும் மந்திரங்களும் தேவைப்படுகின்றன இன்றையச் சூழலில் வாய்ப்புகள் நிறைந்து காணப்படுகிறது இந்த மூன்று மந்திரங்கள் உறு துணையுடன் வாய்ப்புகளைப் பயன்படுத்தி குறிக்கோள்களை எளிதாக அடைய முடியும் சான்றுகள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு பிறப்புக்கள் பகுப்பு விஞ்ஞானிகள் |
சிவகுமார் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார் மேற்கோள்கள் சினிமாக்காரன் படத்துல நல்லவனா தான் நடிக்கிறான்னு ரசிகனுக்குத் தெரியும் இருந்தாலும் அவனை நம்புவான் ரசிகனோட இந்த அறியாமை இருக்குற வரைக்கும் தான் சினிமாக்காரனோட பொழப்பு ஓடும் அதிர்ஷ்டத்தால் உயர்ந்தவன்தான் அஞ்சி நடுங்க வேண்டும் திறமையால் உயர்ந்தவன் என்றும் திடமாகத்தான் இருப்பான் நபர் குறித்த மேற்கோள்கள் நடிப்புக்கு இலக்கணமும் அகராதியும் சிவாஜி என்றால் ஒரு நடிகனுக்கு இலக்கணமும் அகராதியும் சிவகுமார் என்ற சொல்வதிலே இரு கருத்துக்களுக்கு இடமிருக்க முடியாது சிவகுமாரைப் பற்றி கைலாசம் பாலசந்தர் அரக்குவேலியில் படப்பிடிப்பில் இருந்த போது ராத்திரில அவரோட துணைவியைப் பத்தி எழுதின கட்டுரையைப் படிச்சு அழுதேன் பதினாலு வருஷம் கழிச்சு பொண்டாட்டி பிறந்த நாளைக் கண்டுபிடிச்சு புடவை வாங்கிக் குடுத்தாரு இன்னிக்கு பொறந்த நாளு கட்டிக்கன்னு என் பொறந்த நாளு எனக்கே தெரியாது ஏன் பொறந்தோம்னு நினைக்கிற நாளைப்பத்தி நான் என்னிக்குமே நினைக்கறதில்லை இதெல்லாம் கொண்டாடக்கூடிய நாளா புடவையெல்லாம் வேண்டாம் என்று மறுத்தார் இதைப் படித்த போது விக்கி விக்கி அழுதேன் இது ராஜபாட்டை அல்ல புத்தக வெளியீட்டு விழாவில் மனோரமா அவர்கள் கூறியது சான்றுகள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு பிறப்புக்கள் பகுப்பு தமிழ் திரைப்பட நடிகர்கள் |
கைலாசம் பாலசந்தர் கே பாலச்சந்தர் சூலை திசம்பர் தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார் மேற்கோள்கள் நபர் குறித்த மேற்கோள்கள் கே பி அவர்கள் அவர் படங்களில் நடிப்பது சுகானுபவம் காட்சிகளை அவர் கற்பனை செய்வதும் அதற்குக் குறும்பும் புத்திசாலித்தனமும் கலந்து வசனங்களை எழுதுவதும் அவரைத் தனித்துக்காட்டும் பாலசந்தர் அவர்களைப்பற்றி சிவகுமார் கூறியது வெளியிணைப்புக்கள் சான்றுகள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு பிறப்புக்கள் பகுப்பு இறப்புக்கள் பகுப்பு இயக்குனர்கள் பகுப்பு தயாரிப்பாளர்கள் |
சிவாஜி கணேசன் அக்டோபர் ஜூலை புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன் என்பது இவரது இயற்பெயர் இவர் பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் மேற்கோள்கள் அத்தந்த இனத்தவர்களை அந்தந்த இனத்தவர்கள் பாராட்ட வேண்டும் நடிகரை நடிகர் பாராட்ட வேண்டும் இசையமைப்பாளரை இசையமைப்பாளர் பாராட்ட வேண்டும் அதுதான் முறை மனிதன் வளர வளர குனிய வேண்டும் என்பதுபோல் பாராட்டுக்களை எச்சரிக்கைகளாகக் கொள்ள வேண்டும் என்னைப் பொறுத்தவரையில் பாராட்டை எச்சரிக்கையாகவே கருதுகிறேன் நபர் குறித்த மேற்கோள்கள் சிவாஜியின் மிகப்பெரிய சொத்து அவருடைய ஒளிமிக்க உயிர்ப்புள்ள கண்கள்தான் அந்தக் கண்களை வைத்துத்தான் பரிவை பாசத்தை பயத்தை கோபத்தை அழுகையை ஆச்சர்யத்தை அப்பாவித்தனத்தை ஏக்கத்தை ஏமாற்றத்தை வீரத்தை விவேகத்தை அவர் அதிகமாக வெளிப்படுத்தினார் சிவாஜியைப் பற்றி சிவகுமார் கூறியது தமிழை அவரைப்போல் உச்சரித்த நடிகர்கள் இதுவரை பிறக்கவில்லை சிவாஜியைப் பற்றி சிவகுமார் கூறியது ஒரு நடிகன் வேஷம் கட்டுவதிலேயே மார்க் வாங்கிவிட வேண்டும் என்று சொல்வார் விதவிதமான வேடம் அணிந்து பார்ப்பதில் அவருக்கு அடங்காத வெறி உண்டு சிவாஜியைப் பற்றி சிவகுமார் கூறியது கவிதைகளில் ஒரு தாளம் இருப்பதுபோல பேசும் வசனங்ளில் ஒரு ரிதம் நடக்கும் நடையிள் ஒரு தாளம் இருக்கிறது என்பதை அடிக்கடி சொல்வார் சிவாஜியைப் பற்றி சிவகுமார் கூறியது சான்றுகள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு இறப்புக்கள் பகுப்பு பிறப்புக்கள் பகுப்பு தமிழ் திரைப்பட நடிகர்கள் |
மனோரமா மே அக்டோபர் தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் தனது திறனை வெளிப்படுத்திய இவர் திரைப்படங்களுக்கு மேல் நடித்தார் மேற்கோள்கள் நபர் குறித்த மேற்கோள்கள் நகைச்சுவை கலைஞர்களில் அதுவும் ஒரு பெண்மணி பத்மஸ்ரீ பட்டம் பெற்றது உண்மையிலேயே பெரிய சாதனை மனோரமா ஒரு ஆல்ரவுண்டர் பெண் சிவாஜி அடிப்படையில் நகைச்சுவை நடிகையாக இருக்கிறாரே தவிர அவர் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் ஏற்காத வேடங்களே இல்லை என்று சொல்லலாம் மனோரமாவைப் பற்றி சிவகுமார் கூறியது சான்றுகள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு இறப்புக்கள் பகுப்பு பிறப்புக்கள் பகுப்பு தமிழ் திரைப்பட நடிகர்கள் |
சோ ராமசாமி பிறப்பு அக்டோபர் பத்திரிக்கை ஆசிரியர் நாடக ஆசிரியர் நடிகர் வக்கீல் போன்ற பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர் மேற்கோள்கள் நபர் குறித்த மேற்கோள்கள் உலக அரசியல் அறிவும் உயர்படிப்பும் சிந்திக்கும் ஆற்றலும் பேச்சாற்றலும் மிக்க சீரியஸான ஒரு மனிதர் என் போன்ற ஹீரோக்களுடன் கோமாளியாக முட்டளாக நடித்தது கொடுமையாக இருந்தது சோவைப் பற்றி சிவகுமார் கூறியது திருவல்லிக்கேணி என் கே டி கலா மண்டபம் திறந்தவெளி அரங்கம் சிமெண்ட் படிக்கட்டுகள் அமைந்த காலரியில் ஒரு கோடியில் அமர்ந்து சரஸ்வதியின் சபதம் நாடகம் பார்த்தேன் சுழலும் மேடையில் ஒவ்வொரு காட்சிகளையும் அவர் அமைத்த விதமும் அவரது நையாண்டி வசனமும் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தி ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை கரவொலி எழச் செய்தன சோவைப் பற்றி சிவகுமார் கூறியது சான்றுகள் பகுப்பு பிறப்புக்கள் பகுப்பு தமிழ் திரைப்பட நடிகர்கள் |
மணிவண்ணன் சூலை சூன் தமிழ்த் திரைப்பட நடிகரும் இயக்குநரும் தமிழுணர்வாளரும் ஆவார் இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தும் திரைப்படங்களை இயக்கியும் உள்ளார் மேற்கோள்கள் நபர் குறித்த மேற்கோள்கள் நாவல் எழுதுவது போல் திரைப்படமாக்கப் போகும் கதையை முதலில் மொத்தமாக எழுதி விடுவார் சந்தேகம் வரும்போது மட்டும் அதைச் சரிபார்த்துக் கொள்வார் மற்றபடி வசனம் இவரைப் பொறுத்தமட்டில் குற்றால அருவிபோல வந்து விழுந்துகொண்டே இருக்கும் மணிவண்ணனைப் பற்றி சிவகுமார் கூறியது ஒரு லொகேஷனைப் பார்க்கும்போதே மனத்திலுள்ள காட்சியை இங்கு எப்படிப் படமாக்கலாம் என்பது பற்றி பளிச்சென்று முடிவு செய்துவிடுவார் ஒரு ஸ்பாட்டில் நின்றுகொண்டு காமிராவை எங்கு வைக்கலாம் எப்படி ஷாட்டை எடுக்கலாம் என்ற விஷயங்களில் மணிவண்ணன் திணறி நான் பார்த்ததே இல்லை மணிவண்ணனைப் பற்றி சிவகுமார் கூறியது சான்றுகள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு பிறப்புக்கள் பகுப்பு இறப்புக்கள் பகுப்பு தமிழ் திரைப்பட நடிகர்கள் பகுப்பு இயக்குனர்கள் |
மணிரத்னம் பிறப்பு ஜூன் இந்திய அளவில் அறியப்படும் தமிழ் இயக்குனர்களுள் ஒருவர் காதல் தீவிரவாதம் ஆகியவற்றை நகர் வாழ் நடுத்தர மக்களை பின்னணியாக கொண்டு சொல்வது இவருடைய பாணி மேற்கோள்கள் நபர் குறித்த மேற்கோள்கள் களிலிருந்து வரையிலும் பேசும் படமாய் அத்தனை உணர்ச்சிகளையும் பக்கம் பக்கமாய் பேசியே விளக்கி வந்த தமிழ் சினிமாவில் இந்த மீடியம் பார்த்து ரசிப்பதற்கான மீடியம் பாவங்களில் காட்சிகளில் விளக்கமுடியாத இடத்தில் மட்டும் வார்த்தைகளைப் பயன்படுத்தினால் போதும் என்ற தியரி யைத் தன் படங்களின் மூலம் ரசிகனுக்கு விளங்க வைத்தவர்களில் மணிரத்னம் குறிப்பிட்டுப் பாராட்ட வேண்டியவர் மணிரத்னத்தைப் பற்றி சிவகுமார் கூறியது சான்றுகள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு பிறப்புக்கள் பகுப்பு இயக்குனர்கள் பகுப்பு தயாரிப்பாளர்கள் |
பாலா ஜூலை ஒரு குறிப்பிடத்தகுந்த தமிழ்த் திரைப்பட இயக்குநர் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் திரைப்படக்கலை பயின்றவர் மேற்கோள்கள் நபர் குறித்த மேற்கோள்கள் உச்சரிப்பில் ஏற்ற இரக்கங்களுடன் மாடுலேட் செய்து பேசுவது அவருக்குப் பிடிக்காது அசல் வாழ்க்கையில் பேசுவதுபோல ஆகப் பேசச் சொல்வார் நினைத்ததுபோல் படமாக்காமல் விடமாட்டார் பாலாவின் படமாக்கும் விதத்தைப் பற்றி சிவகுமார் கூறியது வீடியோக்கள் பார்த்தோ நாவல் படித்தோ அந்தத் தாக்கத்தில் கதை எழுதமாட்டார் வாழ்க்கையிலிருந்துதான் காரக்டர்கள் பிடிப்பார் பாலாவின் படமாக்கும் விதத்தைப் பற்றி சிவகுமார் கூறியது சான்றுகள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு பிறப்புக்கள் பகுப்பு இயக்குனர்கள் |
பாரதிராஜா பிறப்பு சூலை ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர் தேனி அல்லிநகரம் எனும் ஊரைச் சேர்ந்த இவர் அரங்கத்திற்குள் எடுக்கப்பட்டு வந்த தமிழ் திரைப்படங்களை வெளிப்புற படப்பிடிப்புப் பகுதிகளுக்கு கொண்டு சென்றவர் என்ற பெருமைக்கு உரியவர் மேற்கோள்கள் நபர் குறித்த மேற்கோள்கள் வயசு தடுக்குது இல்லேன்னா இவர் திறமைக்கு அவர் காலில் விழுந்திருப்பேன் புதிய வார்ப்புகள் படத்தின் வெற்றி விழாவில் கைலாசம் பாலசந்தர் கூறியது இந்த பாரதிராஜா வித்யாசமானவன்பா கையை வீசி நடங்கறான் வெறுங்கால்ல வேட்டியை மடிச்சுக் கட்டிட்டு போங்கறான் என்ன பேசன்னு கேட்டா எதுவுமே பேச வேண்டாங்குறான் என்னடா பண்றான் இவன்னு குழம்பிப்போய் படம் பாத்தா மெரட்டிருக்காம்பா அச்சடிக்கப்பட்ட பக்கங்களின் நீளமான வசனங்களை பேசி நடித்து பழகிய சிவாஜி கணேசன் பாரதிராஜா அவர்களின் படபிடிப்பு முறைப்பற்றி முதல் மரியாதை படத்தின் அனுபவத்திலிருந்து குறிப்பிட்டது அதுவரை ஸ்டுடியோக்களுக்குள் இருந்த தமிழ் சினிமாவை உண்மையான கிராமங்களை நோக்கி திசைதிருப்பியவர் இயக்குநர் பாரதிராஜா இன்றுவரை தமிழில் வெளியாகியுள்ள கிராமிய அழகு சார்ந்த திரைப்படங்களுக்கு அவரே பிதாமகர் பாரதிராஜா என்ற பெருங்கலைஞனின் மூலம் தமிழ் சினிமா தனக்கான தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்டது எஸ் ராமகிருஷ்ணன் சான்றுகள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு பிறப்புக்கள் பகுப்பு இயக்குனர்கள் |
ஜெமினி கணேசன் நவம்பர் மார்ச் தமிழ்த் திரையுலகில் புகழ் வாய்ந்த நடிகர்களுள் ஒருவராவார் மேற்கோள்கள் தொழில்களிலே ஒன்று ஒஸ்தி மற்றாென்று மட்டம் என்று நான் என்றும் நினைத்ததில்லை மேல் நாட்டினர்போல் தொழில் என்றால் எல்லாமே கெளரவமான தொழில்தான் என்றுதான் நினைத்தேன் சிகை அலங்காரத் தொழில் சலவைத் தொழில் ரோடு பெருக்குகல் கூலி வேலைசெய்தல் ரிக் ஷா இழுத்தல் இப்படி எத்தனையோ தொழில்களிருக்கின்றன திருட்டுத் தொழில்கூட இருக்கிறது ஆனால் நம் நாட்டிலே படித்தவன் இவற்றையெல்லாம் துணிந்து செய்ய முடியுமா முடியாதே ஆனால் சினிமாவில் நடிகனாக ஆனால் இத்தனை தொழில்களையும் செய்பவனாக நடிப்பிலாவது ஆகலாம் அல்லவா நபர் குறித்த மேற்கோள்கள் பந்தா இல்லாத தன்மையும் எல்லோரிடமும் இனிமையாகப் பழகும் குணமும் இத்தனை திறமைசாலிகளின் படங்களில் நடிக்க அவருக்குத் துணை நின்றன ஜெமினி கணேசனைப் பற்றி சிவகுமார் கூறியது சான்றுகள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு பிறப்புக்கள் பகுப்பு இறப்புக்கள் பகுப்பு தமிழ் திரைப்பட நடிகர்கள் |
ஆர் முத்துராமன் காலஞ்சென்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார் இவர் களில் முன்னணி நடிகராக இருந்தார் நவரச திலகம் எனவும் அழைக்கப்பட்டார் மேற்கோள்கள் நபர் குறித்த மேற்கோள்கள் செட்டுக்குள் அவருக்கு வெடிச்சிரிப்பு வேந்தன் என்று பெயர் எந்த ஜோக் சொன்னாலும் குழந்தை மாதிரி படாரென்று சிரித்து விடுவார் முத்துராமனைப் பற்றி சிவகுமார் கூறியது சான்றுகள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு பிறப்புக்கள் பகுப்பு இறப்புக்கள் பகுப்பு தமிழ் திரைப்பட நடிகர்கள் |
இல் நாகேஷ் அவர்கள் நாகேஷ் செப்டம்பர் ஜனவரி த மிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிக ரவார் நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பல சாதனைகள் படைத்தவர் திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெருமைக்குரியவர் மேற்கோள்கள் என்னிடம் இப்போது ஏறத்தாழ ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் இருக்கின்றன என்னிடம் இருப்பது போன்ற ஒரு லைப்ரரி வேறு யாரிடமும் நட்சத்திரங்களுக்குள் நிச்சயமாக இல்லை எனக்கு அடுத்தபடியாக நடிகர் நாகேஸ்வரராவிடம் பெரிய புத்தகசாலை ஒன்று இருக்கிறது எனது லைப்ரரியிலிருந்து அநேகர் படிப்பதற்குப் புத்தகங்கள் வாங்கிப் போவதுண்டு ஆனால் யாருக்குப் புத்தகம் இரவல் கொடுக்கலாம் யாருக்குக் கொடுக்கக்கூடாதென்பது எனக்கு நன்றாகத் தெரியும் நபர் குறித்த மேற்கோள்கள் குண்டும் குழியுமாக இண்டும் இடுகுமாக உள்ள மிகச் சாதாரண முகத்தை வைத்துக்கொண்டு பெரிய ஹீரோக்கள் செய்தற்கரிய சாதனைகளைச் செய்துக்காட்டியவர் அன்பிற்குரிய நாகோஷ் நாகேஷ் பற்றி சிவகுமார் கூறியது படத்தில் அறிமுகக் காட்சியிலேயே ஏதாவது குறும்பு செய்து கைதட்டல் வாங்கிவிடுவார் வெளியூர் படப்படிப்புகளுக்குப் போனால் வேடிக்கை பார்க்க வரும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை இயற்கையாக தான் அடிக்கும் ஜோக்குகள் மூலம் கவர்ந்து தன் பக்கம் இழுத்துக் கொள்வார் நாகேஷ் பற்றி சிவகுமார் கூறியது சான்றுகள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு பிறப்புக்கள் பகுப்பு இறப்புக்கள் பகுப்பு தமிழ் திரைப்பட நடிகர்கள் |
எம் ஜி ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் எம் ஜி இராமச்சந்திரன் சனவரி திசம்பர் தமிழ்த் திரைப்பட நடிகராகவும் முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர் மேற்கோள்கள் இலக்கியத்தை நான் கற்றேன் இல்லை நான் நினைத்ததைப் பிறர் புரிந்துகொள்ள வேண்டும் அதற்கு எனது மொழி எனக்கு உதவவேண்டும் அதுவரையில் எனது மொழியறிவு எனக்கு உதவுகிறது என்று நம்புகிறேன் என் வாழ்நாளில் இரண்டு தலைவர்களைப் பெற்றேன் ஒருவர் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் அவர் என்னுடைய கலைத்துறைத் தலைவர் இன்னொருவர் அறிஞர் அண்ணா இவர் என்னுடைய அரசியல் தலைவர் இந்த இரண்டு தலைவர்களையும் எனக்குத் தந்தவர் பெரியார் கலை மழையைப் போன்றது வானத்தில் இருந்து நிலத்தில் விழும்வரை அதில் பேதம் இல்லை ஆனால் அது எந்த நிலத்தில் விழுகிறதோ அதைப் பொறுத்து அதன் தன்மை மாறுகிறது அது போலத்தான் கலையும் நபர் குறித்த மேற்கோள்கள் பொதுவாக தாய் வடிவத்தைத் தெய்வமாகப் போற்றும் பண்புடையவர் எம் ஜி ஆர் எம் ஜி ஆரைப் பற்றி சிவகுமார் கூறியது சான்றுகள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு பிறப்புக்கள் பகுப்பு இறப்புக்கள் பகுப்பு தமிழ் திரைப்பட நடிகர்கள் பகுப்பு தமிழ் நாட்டு முதலமைச்சர்கள் |
ஜெய்சங்கர் ஜூன் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகரான இவர் சங்கர் என்ற இயற்பெயர் காெண்டவர் இவரது முதல் திரைப்படத்தின் இயக்குனர் ஜோசப் தளியத் ஜெய் என்ற பெயர்ச் சேர்க்கையை அளித்தார் மேற்கோள்கள் வியாபாரிகள் தொழிலதிபர்கள் அரசியலில் ஈடுபடும் போது கலைஞர்கள் ஈடுபடுவதில் தவறு இல்லை என்பது என் கருத்து ஆனால் அதே நேரத்தில் நடிகர்களை நம்பி மட்டுமே அரசியல் இருந்துவிடக் கூடாது என்று நினைக்கிறேன் நபர் குறித்த மேற்கோள்கள் ஜெய் என்றால் கலகலப்பு என்று அர்த்தம் கொள்ளலாம் துறுதுறு என்றிருப்பார் யார் தோள் மீதும் கை போட்டுப் பழகுவார் ஜெய்சங்கரைப் பற்றி சிவகுமார் கூறியது அசல் வாழ்க்கையில் ஜாலியாக இருப்பது போலவே நடிப்புத் தொழிலையும் ஜாலியாக அவர் கருதினார் கண்ணீர் சிந்துவது கனல் தெறிக்க வசனம் பேசுவது என்று ஏதாவது காட்சிகள் இருந்தால் டைரக்டரை அழைத்து சார் இந்த மாதிரி சமாச்சாரத்துக்கெல்லாம் நம்ம சிவா இருக்கான் அவனை யூஸ் பண்ணிக்குங்க நம்ம ஏரியாவே தனி என்று விட்டுக் கொடுத்து விடுவார் ஜெய்சங்கரைப் பற்றி சிவகுமார் கூறியது சான்றுகள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு பிறப்புக்கள் பகுப்பு இறப்புக்கள் பகுப்பு தமிழ் திரைப்பட நடிகர்கள் |
ரவிச்சந்திரன் இறப்பு சூலை தமிழ்த் திரைப்பட நடிகர் கள் களில் கதாநாயகனாகவும் பின்னர் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர் திரைப்பட இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார் மேற்கோள்கள் நபர் குறித்த மேற்கோள்கள் கர்வமில்லாத மனிதர் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர் அடுத்தவர் பற்றி புறம் பேசமாட்டார் ரவிச்சந்திரனைப் பற்றி சிவகுமார் கூறியது சான்றுகள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு இறப்புக்கள் பகுப்பு தமிழ் திரைப்பட நடிகர்கள் |
ஜெ ஜெயலலிதா பிப்ரவரி டிசம்பர் பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் மறைந்த தமிழக முதல்வரும் ஆவார் மேற்கோள்கள் நபர் குறித்த மேற்கோள்கள் சிவந்த மேனி தெளிவான முகம் அழகிய கண்கள் ஆங்கிலத்தில் புலமை நடனத்தில் தேர்ச்சி நடையில் கம்பீரம் நினைவாற்றலில் புலி ஆரம்ப காலத்தில் படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் பொழுது ஜெயலலிதாவைப் பற்றி சிவகுமார் கூறியது நான்கு பக்க வசனமானாலும் ஒரு தடவை தெளிவாகப் படிக்கச் சொல்லிக் கேட்டு மனத்தில் அப்படியே பதியவைத்து பதற்றமில்லாமல் தெளிவாக உச்சரித்து நடிப்பார் நடனக் காட்சிகளில் எவ்வளவு பெரிய அடவு ஆனாலும் சரி டான்ஸ் மாஸ்டர் ஆடிக்காட்டுவதை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு உடனே ஆடிவிடுவார் ஆரம்ப காலத்தில் படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் பொழுது ஜெயலலிதாவைப் பற்றி சிவகுமார் கூறியது அவரது தனிச் சிறப்பாக நான் கருதுவது அவரது அசாத்தியத் துணிச்சல் உடனுக்குடன் தன்னிச்சையாக முடிவெடுக்கும் திறன் அந்த முடிவு தனக்குச் சாதகமாக அமைந்தாலும் பாதகமாக அமைந்தாலும் இரண்டுக்கும் தானே பொறுப்பு என்று சொல்லும் தைரியம் ஜெயலலிதாவைப் பற்றி சிவகுமார் கூறியது சான்றுகள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு பிறப்புக்கள் பகுப்பு தமிழ் திரைப்பட நடிகர்கள் பகுப்பு தமிழ் நாட்டு முதலமைச்சர்கள் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.