text
stringlengths
8
604k
வெளியீட்டு விபரம் பெருந்தொற்று ஷாராஜ் எழுதிய தமிழ்ப் புதினம் ஆம் ஆண்டில் ஸீரோ டிகிரி பப்ளிகேஷனால் வெளியிடப்பட்டது கதைச் சுருக்கம் உலகைப் புரட்டிய பேரதிர்வுகளைத் தந்த இன்னும் தீராத கொடுந்துயர் கொரோனா பெருந்தொற்று இந் நூற்றாண்டின் மகா பேரழிவுகளில் ஒன்றான அது தனி மனித நிலை குடும்பச் சூழல் சமூகம் அரசியல் அன்றாட வாழ்வு பண்பாடு உள்ளிட்ட பல்வேறு தளங்களிலும் கடுமையான தாக்கத்தையும் சீர்குலைவுகளையும் ஏற்படுத்திவிட்டது இந்தப் பெருங்கொள்ளை இந்தியாவில் பெரும் பாதிப்புகளை உண்டாக்கிக்கொண்டிருந்த ஆம் ஆண்டு முற்பகுதியில் அதை மையப்படுத்தி நிகழ்ந்த மத ரீதியான கலவரச் சூழலும் மறக்க முடியாதது கொந்தளிப்பு மிகுந்த அந்த நாட்களில் ஒரு நூற்றாண்டு காலத்திற்கு மேலாக நல்லிணக்கத்திற்கு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்துவந்த தமிழக குக்கிராமம் ஒன்றில் ஏற்பட்ட கொடூரமான விளைவுகளைச் சித்தரிக்கிறது இப் புதினம் மேற்கோள்கள் தொப்புள்கொடி அறுத்தாலும் தாய் புள்ளை உறவு அறுபடும்ங்களா அத்தியாயம் ல் யேவாரி பகவதி செட்டியார் என்னும் பாத்திரத்தின் பேச்சில் இடம்பெறும் வாக்கியம் ஞானிகளும் பாமரர்களும் மட்டுமே அனைத்து மதங்களின் ஆன்மாவும் ஒன்று என்று ஏற்றுக்கொள்வார்கள் இடையில் உள்ளவர்களும் மத வியாபாரிகளுமான மதகுருக்கள் மத அறிஞர்கள் மதப் பிரச்சாரகர்கள் மதவாதிகள் முதலானவர்கள் மதங்களின் ஆன்மாவைத் தவறவிட்டு அவற்றின் உடலை மட்டும் பார்த்து அவை வேறு வேறு என்று வாதிடவும் அவற்றின் விளைவாக தமக்குள் மோதிக்கொள்ளவும் செய்வார்கள் அத்தியாயம் ல் யோகி நிர்விகல்பா என்னும் பாத்திரத்தின் பேச்சில் இடம்பெறும் வாக்கியம் நன்மை தீமை ரெண்டும் கலந்ததுதான் இந்த ப்ரபஞ்சம் மனுசன் மனஸ் எல்லாமே தீமைக்கு எதிரான போராட்டத்துக்காக மனுசன் உருவாக்குனதுதான் கடவுள் மதம் ஆன்மிகம் எல்லாமும் ஆனா பின்னாடி வந்தவங்க ஆன்மிகத்தை விட்டுட்டு கடவுளையும் மதத்தையும் கொரங்குப் புடியாப் புடிச்சுட்டாங்க அதனாலதான் உலகம் முழுக்க மதப் பிரச்சனைகள் காலம் காலமாத் தொடர்ந்துட்டிருக்குது அத்தியாயம் ல் ஏசு நபி புத்தர் என்னும் பாத்திரத்தின் பேச்சில் இடம்பெறும் வாக்கியங்கள் ஆட்டுக்குட்டி அவுரோட கட்டுரைப் பேப்பரைத் தின்னுருச்சுன்னாக் கூட அறிவுஜீவியா ஆயிரும் அத்தியாயம் ல் மூளைக்காரன் என்னும் பாத்திரத்தின் பேச்சில் இடம்பெறும் வாக்கியம் கடவுள்ங்கறது மதங்கள் சொல்ற மாதிரி ஒரு உயிரியோ நம்மளை மாதிரி ஒரு நபரோ அல்ல ப்ரபஞ்ச ஆற்றலுக்கு மதங்களும் ஆன்மிகமும் குடுத்த உருக்கொடுப்பு தான் கடவுள் அத்தியாயம் ல் ஏசு நபி புத்தர் என்னும் பாத்திரத்தின் பேச்சில் இடம்பெறும் வாக்கியங்கள் சொர்க்கமும் நரகமும் தேவர்களும் அசுரர்களும் கடவுளும் சாத்தானும் மனுசனுக்குள்ளதான் அத்தியாயம் ல் ஏசு நபி புத்தர் என்னும் பாத்திரத்தின் பேச்சில் இடம்பெறும் வாக்கியம் அன்பே கடவுள் அறிவே கடவுள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை ஆனால் கடவுள்கள் அன்பானவர்களாக இருக்கிறார்களா என்பதுதான் கேள்விக்குறி கடவுளின் பெயரால் மதத்தின் பெயரால் ஜாதியின் பெயரால் மனிதர்கள் செய்கிற கொடுங்கோன்மைகள் பஞ்சமா பாதகங்கள் வேறு விஷயம் அந்தக் கடவுள்களே அவற்றை உண்டாக்கி செயல்படுத்துவது பெரும் கொடுமையல்லவா அத்தியாயம் ல் குறிஞ்சிநாதன் என்னும் பாத்திரத்தின் எண்ண ஓட்டமாக இடம்பெறும் வாக்கியங்கள்
கா சு பிள்ளை என அழைக்கப்படும் காந்திமதிநாதபிள்ளை சுப்பிரமணிய பிள்ளை நவம்பர் ஏப்ரல் தமிழ் இலக்கிய வரலாற்றை முதன் முதலில் எழுதிய தமிழறிஞர் சைவசித்தாந்த வல்லுநர் வழக்குரைஞர் தமிழ்ப் பேராசிரியர் சட்ட வல்லுநர் மொழிபெயர்ப்பாளர் உரையாசிரியர் சொற்பொழிவாளர் தமிழ் ஆங்கிலம் வடமொழி மலையாளம் ஆகிய மொழிகளை நன்கு அறிந்த பன்மொழிப் புலவர் இவரது மேற்கோள்கள் பல்வேறு வகையாக பிரிந்து நிற்கும் தமிழர் யாவரையும் ஒற்றுமைப்படுத்தற்குரிய சிறந்த கருவி தமிழ்மொழிப் பற்று ஓன்றையாகும் தமிழர் என்பவர் எவர் என்றால் தமிழைத் தாய்மொழியாக உடையவர் தமிழ்நாட்டில் பிறந்தும் தமிழைத் தாய்மொழி என கருதாதவர் தமிழர் ஆகார் தமிழ்நாட்டில் பிறவாதிருந்தும் தமிழைத் தாய்மொழிபோல் போற்றுபவரைத் தமிழர் என்பது இழுக்காகாது தமிழ் நாகரீகத்தை உயர்ந்தது எனக் கருதுபவரும் தமிழர்
இப்பக்கத்தில் பெல்ஜியப் பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன இருபது வருடம் வளர்ச்சி இருபது வருடம் மலர்ச்சி இருபது வருடம் ஒரே நிலை இருபது வருடம் வாடுதல் பகுப்பு நாடு வாரியாக பழமொழிகள்
இப்பக்கத்தில் உருமேனியப் பழமொழிகள் தொகுக்கப்பட்டுள்ளன ஊர் முழுவதும் தெரிந்த விஷயம் கணவனுக்கு மட்டும் தெரியாது மனிதனின் வாழ்க்கை ஒரு குழந்தையின் கையிலுள்ள முட்டை போன்றது மனைவியில்லாத கூடாரம் தந்தியில்லாத வீணை பகுப்பு மொழி வாரியாக பழமொழிகள்
அன்புக்கரங்கள் என்பது ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும் பாலமுருகன் எழுத்தில் கே சங்கர் இயக்கினார் இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன் தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர் சிவராமன் சிவாஜிகணேசன் திருப்பதியைப் நாகேஷ் பார்த்து டேய் திருப்பதி நிமிர்ந்து நில்றா முடியலியே சார் திருப்பதி கடமையிலிருந்து தவறிய யாராக இருந்தாலும் சரி நிமிர்ந்து நிக்க முடியாது சிவராமன் தங்கையின் திருமணத்தைப் பற்றி சோதிடரிடம் பேசும்போது சிவராமன் கடல்ல இருக்கிற முத்து இடம் மாறினாதானே கடலுக்கும் பெருமை முத்துக்கும் பெருமை சிவராமன் தன் தங்கையிடம் அம்மா ஒரு குடும்பம் பெருமையடையரதும் சிறுமையடையரதும் வீட்டுப் பெண்கள் கைலதான் இருக்கு மருத்துவர் செவிலியரின் செயலைக் கண்டிக்கும்பொது மற்றவங்க புண்படும்படி இப்படி பேசலாமா நாம கொடுக்குற மருந்த விட நோயாளிங்ககிட்ட நாம காட்டுற அன்புலதான் சீக்கிறம் குணமாகும் மனோரமாவின் கையைப் பிடித்ததற்காக பஞ்சாயத்தில் நிறுத்தப்படும் நாகேஷ் சொல்லும் பழமொழி பஞ்சாயித்துக்கு வந்தா பாதி பொண்டாட்டி அபராம் கட்டினா அரை பொண்டாட்டி ஆக மொத்தம் ஒரு பொண்டாட்டி சிவாஜி கணைசனிடம் பொன்னம்மா குஷ்டரோகிகூட ஒரு பெண் வாழ்திடலாம் ஆனால் குற்றவாளிகூட ஒரு பெண் வாழமுடியாது சான்றுகள் பகுப்பு திரைப்படங்கள் பகுப்பு தமிழ்த் திரைப்படங்கள்
மேற்கோள்
இதில் மொண்டெனேகுரோ நாட்டுப் பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன அம்மா விவாகம் என்பது என்ன மாவரைத்தல் நூல் நூற்றல் குழந்தைகள் பெறுதல் அழுதல் பகுப்பு நாடு வாரியாக பழமொழிகள்
இந்தப் பக்கத்தில் மலாய் பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன தோட்டத்தின் நன்மை வேலி வீட்டின் நன்மை குடியிருப்பு பெண்ணின் நன்மை கணவன் பகுப்பு மொழி வாரியாக பழமொழிகள்
வழிமாற்று மலாய் பழமொழிகள்
இப்பகத்தில் போசுனியா பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன உண்மையான வீட்டுக்காரி அடிமையாகவும் இருப்பாள் வீட்டு அதிகாரியாகவும் இருப்பாள் பகுப்பு நாடு வாரியாக பழமொழிகள்
கிருஷ்ணர் என்பவர் ஒரு இந்து கடவுள் திருமாலின் எட்டாவது அவதாரம் என்று இந்துக்கள் கருதுகின்றனர் இவரது கருத்தை பகவத் கீதை என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார் இந்துக்கள் புனித நூல் என்று நம்புகின்றனர் மேற்கோள்கள் துயர்ப்படத் தகாதார் பொருட்டுத் துயர்ப்படுகின்றாய் ஞான வுரைகளு முரைக்கின்றாய் இறந்தார்க் கேனும் இருந்தார்க் கேனுந் துயர் கொளார் அறிஞர் பகவத் கீதை குந்தியின் மகனே குளிரையும் வெப்பத்தையும் இன்பத்தையும் துன்பத்தையும் தரும் இயற்கையின் தீண்டுதல்கள் தோன்றி மறையும் இயல்புடையன என்றுமிருப்பனவல்ல பாரதா அவற்றைப் பொறுத்துக்கொள் பகவத் கீதை நைந்த துணிகளைக் கழற்றியெறிந்துவிட்டு மனிதன் புதிய துணிகள் கொள்ளுமாறு போல ஆத்மா நைந்த உடல்களைக் களைந்து புதியனவற்றை எய்துகிறது பகவத் கீதை இவனை ஆயுதங்கள் வெட்டமாட்டா தீ எரிக்காது நீர் இவனை நனைக்காது காற்று உலர்த்தாது பிளத்தற்கரியவன் எரித்தற்கும் நனைத்தற்கும் உலர்த்துதற்கும் அரியவன் நித்தியன் எங்கும் நிறைந்தவன் உறுதிய்டையான் அசையாதான் என்றுமிருப்பான் தெளிதற் கரியான் சிந்தனைக் கரியான் மாறுத லில்லாதா னென்ப ஆதலால் இவனை இங்ஙனம் அறிந்துநீ துயர்ப் படாதிருக்கக் கடவாய் பகவத் கீதை சான்றுகள் பகுப்பு மகாபாரதம்