Dataset Viewer
text
stringlengths 8
604k
|
---|
திருவள்ளுவர் நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு வளர்பிறை சந்திரன் போல வளர்வது பண்பு நிறைந்தவருடன் கொள்ளும் நட்பு தேய்பிறை சந்திரன் போலத் தேய்வது அறியாமையில் உழல்பவருடன் கொள்ளும் நட்பு நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென் றிடித்தற் பொருட்டு நட்பு என்பது நகுதலுக்காக சிரித்தல் பொழுது போக்குதல் அல்ல நண்பர் தவறு செய்ய முற்படும் போது அதை கண்டிப்புடன் சுட்டிக்காட்டுதலே நட்பாகும் புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதா னட்பாங் கிழமை தரும் கூடிப் பழகுதலும் அடிக்கடி சந்தித்தலும் ஒருவரையொருவர் விசாரித்தலும் மட்டுமே நட்பாகிவிடாது கூடிப் பழகாவிட்டாலும் மனதால் உணர்ச்சியால் ஒன்றுபடுவதே உண்மையான நட்பு முகநக நட்பது நட்பன்று நெஞ்சத் தகநக நட்பது நட்பு முகத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டால் மட்டுமே அது நட்பாகிவிடாது நெஞ்சத்தால் உள்ளத்தால் ஒன்றுபடுதலே உண்மையான நட்பு உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு உடல் மேல் உடுத்தியிருக்கும் ஆடை நழுவும் போது உடனே கையானது விரைந்து சென்று நழுவும் ஆடையை சரி செய்யும் அது போல் நண்பர் துன்பப்படும் போது விரைந்து சென்று அவர் துன்பத்தைக் களைவதே உண்மையான நட்பு பிறர் நேர்மையானவர்களிடம் வைக்கும் நட்பு உண்மையானவர்களிடம் கொள்ளும் நட்பு எதையும் பொறுமையாக கூர்ந்து நோக்குபவர்களாக உள்ள சுபாவமுடையோர் நட்பு என்றும் நன்மையையே தரும் கான்பூசியசு தானென்ற அகந்தையுடன் தான்தோன்றியாகத் திரிபவன் நட்பு ஆட்சி செய்யும் அதிகாரத் தோரணையர் நட்பு நா அடக்கம் இல்லாதவரின் நட்பு இந்த சுபாவமுடையோர் நட்பு என்றும் நாசமே தரும் கான்பூசியசு முகநகப் பழகாதே அகநகப் பழகும்போது அந்த நண்பனை அன்புடன் கண்டிக்கத் தயங்காதே உனது கண்டிப்புக்கு அவன் இணங்காவிட்டால் அவனை விட்டு அகன்று விடு அதற்காக நீ பழிபாவங்களுக்கு ஆளாகாதே கான்பூசியசு வகுப்பில் இரண்டு கெட்டிக்காரர்கள் இருந்தால் இரண்டு பேர்களுக்கும் நட்பு ஏற்படுவது இயற்கை பகைமை ஏற்படுவதும் சகஜம் இவை இரண்டும் அற்று இருப்பது விதிக்கு விலக்கு புதுமைப்பித்தன் மூன்று நண்பர்கள் இருந்து அவர்களை இழந்தவனுக்கு நீ நான்காவது நண்பனாகச் சேர வேண்டாம் லவேட்டர் வாழ்க்கைப் பாதையில் சென்றுகொண்டிருக்கையில் ஒரு மனிதன் புதிய நண்பர்களைப் பெறாவிட்டால் அவன் விரைவிலேயே தனியாக விடப்படுவான் ஸான்ஸன் முன் கவனமுள்ள ஒரு நண்பனைப்போல வாழ்க்கையில் வேறு பாக்கியமில்லை யூரிபிடிஸ் ஆடவன் பெண்ணிடம் கொள்ளும் காதல் சாதாரணமானது இயல்பானது ஆரம்பத்தில் அது உணர்ச்சியால் ஏற்படுவது ஒருவன் தானாகத் தேர்ந்து ஏற்படுத்திக்கொள்வதன்று ஆனால் மனிதனுக்கு மனிதன் அமைத்துக்கொள்ளும் உண்மையான நட்பு எல்லையற்றது நித்தியமானது பிளேட்டோ செல்வ நிலையைப் பார்க்கினும் வறுமையிலுள்ள நண்பனிடம் குறித்த நேரம் தவறாமல் நீ செல்லவேண்டும் கிலோ நட்பு மாலை நிழல் அது வாழ்க்கைக் கதிரவன் அஸ்தமிக்கும் பொழுது வலிமையடையும் லாக்பான்டெயின் பரிசுகள் கொடுத்து நண்பர்களைச் சேர்க்காதே நீ கொடுப்பது நின்றால் அவர்கள் அன்பு செலுத்தாமல் நின்றுவிடுவர் ஃபுல்லர் வாழ்க்கை பல நட்புறவுகளாகிய கோட்டைகளால் பாதுகாப்புப் பெற வேண்டும் அன்பு கொள்வதும் அன்பு பெறுவதும் வாழ்க்கையில் முதன்மையான இன்பங்கள் ஸிட்னி ஸ்மித் நம்மைப் பாராட்டி மதிப்பதைவிட நம்மிடம் அதிகமாக அன்பு செலுத்தி நமது பெரிய வேலையில் உதவி செய்பவன் நம் நண்பன் சான்னிங் ஒரு நண்பனை இழத்தல் ஓர் அங்கத்தை இழப்பது போன்றது காலம் புண்ணின் வேதனையைக் குணப்படுத்திவிடும் ஆனால் அந்த நஷ்டத்தை ஈடு செய்ய முடியாது ஸதே நண்பர்கள் பற்றிய பொன்மொழிகள் நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம் புத்தகங்கள்தான் நம்முடன் பேசும் மெளன நண்பர்கள் எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான் ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே வாழ வைப்பவன் இறைவன் வாழத் தெரிந்தவன் மனிதன் விழ வைப்பவன் துரோகி தூக்கி விடுபவன் நண்பன் உரிமை கொண்டாடும் உறவை விட உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது உன் நண்பர்களைக் காட்டு உன்னைப் பற்றிச் சொல்கிறேன் பெருமைக்காரன் கடவுளை இழப்பான் பொறாமைக்காரன் நண்பனை இழப்பான் கோபக்காரன் தன்னையே இழப்பான் நமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்துக்கள் வேறு எதுவும் கிடைக்காவிட்டாலும் நீ எங்கிருந்தாலும் உன் நண்பன் உன்னை அடைவான் ஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற்கதவுகள் சிறந்த நண்பர்களாக நிறைய நாட்கள் பிடிக்கும் உன்னைப் பற்றி முழுதாக அறிந்திருந்தும் உன்னை விரும்புபவனே உன் நண்பன் ஒரு சில சமயம் உன் நண்பர்களை நீ தேர்ந்தெடுக்கிறாய் சில சமயங்களில் அவர்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள் நமது வாழ்க்கையில் பலர் கடந்து செல்கின்றனர் ஆனால் நண்பர்கள்தான் அழியாத சுவடுகளை ஏற்படுத்திவிடுகின்றனர் புதியவர்கள்தான் நண்பர்களாகின்றனர் ஆனால் அந்த காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும் புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள் பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள் புதியவர்கள் வெள்ளி என்றால் பழையவர்கள் தங்கம் சான்றுகள் வெளி இணைப்புக்கள் நட்பு பற்றிய மேற்கோள்கள் நண்பர்கள் தின மேற்கோள்கள் பகுப்பு கருப்பொருட்கள் |
வீரபாண்டிய கட்டபொம்மன் நீர் தான் ஜாக்சன் துரை என்பவரொ வரி வட்டி திறை கித்தி எங்களோடு வயலுக்கு வந்தாயா ஏற்றமிறைத்தாயா நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா அங்கே கொஞ்சி விளையாடும் எங்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துப் பணிபுரிந்தாயா மாமனா மச்சானா ஹும் மானம் கெட்டவனே யாரைக் கேட்கிறாய் வரி எவரைக் கேட்கிறாய் வட்டி திறை கட்டாமை குறித்து வீரபாண்டியனைக் குற்றம் சுமத்தியஜக்சன் துரையை நோக்கி வீரபாண்டியன் கூறியது பகுப்பு தமிழ்த் திரைப்படங்கள் |
இலக்கியம் பற்றிய பலரது மேற்கோள்கள் இங்கு தொகுக்கப்படுகின்றன மேற்கோள்கள் இலக்கியம் உண்மையும் அழகும் நிரம்பிய சொற்களால் வாழ்க்கையைப் புலப்படுத்துகிறது அது மனிதனது ஆன்மாவையும் அவன் கருத்துக்கள் உணர்ச்சிகள் தலை நோக்கங்கள் முதலியவற்றையும் சொல் வடிவிலே காட்டும் குறிப்பாகும் ஆன்மாவின் உண்மைச் சரித்திரமாக உள்ளது அதுவே அதன் சிறப்பு இயல்புகள் கலையழகும் சிறப்பாற்றலும் நிலைபேற்றுப் பண்புகளும் ஆகும் அதன் அளவு கருவிகள் அதனுடைய அகிலத்துவமும் அதன் தனிப்பட்ட நடையமைப்பும் ஆகும் அதன் பயனாவது நம்மை இன்புறுத்தலே அன்றி மனிதனது உண்மை இயல்பை அறிவுறுத்துதலும் ஆகும் அதாவது மனிதனுடைய செயல்களைக் காட்டிலும் அவனது ஆன்ம இயல்பினை உணர்த்துவதுதான் அதற்குச் சிறந்த பயன் எனக் கொள்ளுதல் வேண்டும் இலக்கிய ஆராச்சியில் கருத்து வேற்றுமைக்கு இடந்தரும் பண்பாடு வேண்டும் ஒரு புலவரின் சிறப்பு என்று ஒருவர் கருதுவதையே புலவரின் குறை என்று மற்றொருவர் கருதுமளவுக்கும் வேறுபாடு காணப்படும் இத்தனைக்கும் ஒரு நாடு இடங்கொடுத்தால்தான் அந்த நாடு இலக்கிய ஆராய்ச்சியில் சிறந்து விளங்க முடியும் நம் கைகள் தாங்கும் புத்தகத்தில் குதிரையின் குளம்படியோசையையும் மரங்கள்மேல் அமர்ந்த பறவைகளின் ஓசையையும் மலர்களின் சுகந்தத்தையும் நாம் உணர்கிறோம் பார்க்கிறோம் வார்த்தைகளால் சொல்லமுடியாத கற்பனைகளில் நாம் சஞ்சரிக்கிறோம் இனம்புரியாத உணர்ச்சியில் நாம் சந்தோஷப்படுறோம் எது உங்களை சந்தோஷப்படுத்துகிறது அந்த உணர்ச்சிதான் இலக்கியமாகக் கருதப்படுகிறது ஒரு பறவையின் சிறகடிப்பையோ கூழாங்கல்லின் மௌனத்தையோ ஒரு புள்ளிமானின் தாவலையோ ஒரு மழைத்துளியின் அழகையோ கடலின் பெருங்கோபத்தையோ இலக்கியம் அல்லாத நூல்களால் சொல்லமுடிவதில்லை அதை இலக்கியம்தான் நமக்குள் சித்திரமாக வரைந்துவிடுகிறது இலக்கியம் என்பது வேறு எதுவுமில்லை அது மனிதகுலத்தின் மனசாட்சி பிரபஞ்சத்தில் தூய்மையை விரும்பும் ஆன்மா நம் மனதின் மேல் விழும் ஓர் அருவி நல்ல இலக்கியமென்றால் எத்தனை நந்திகள் வழிமறித்துப் படுத்துக்கொண்டாலும் இவை உரிய ஸ்தானத்தை அடைந்தே தீரும் பனைமரத்தில் ஊசியைச் சொருகிக் கொண்டு சுமந்து நடந்த பரமார்த்த குருவின் சீடர்கள் போல எத்தனைபேர் சுமந்து வந்தாலும் பரங்கிக்காய் குதிரை முட்டையாகி விடாது புதுமைப்பித்தன் வாழ்க்கையின் அர்த்தத்தைச் சொல்லுவது தத்துவம் வாழ்க்கையைக் சொல்வது அதன் ரசனையைச் சொல்வது இலக்கியம் புதுமைப்பித்தன் ஒரு சமுதாயத்தின் இலக்கியம் அதன் தேசியப் பான்மையிலிருந்து தோன்ற வேண்டும் தேசியப் பான்மை தன்மான உணர்ச்சியில்லாமல் ஏற்பட முடியாது தன்மானம் சுதந்தரமில்லாமல் தோன்ற முடியாது திருமதி ஸ்டோ செய்த வேலையின் நன்மையை அளந்த பார்த்துக் கூலி கொடுக்கப்பெறாத ஒரு தொழில் இலக்கியந்தான் ஃபுளுட் இலக்கியம் வாழ்க்கையின் முழு வேலையாக அமைந்தால் அது ஊழிய வேலையாகவே இருக்கும் குறித்த நேரங்களில் மட்டும் நாம் அதில் ஈடுபட்டால் அது நேர்த்தியான ஓய்வளிப்பதாயிருக்கும் ரோஜர்ஸ் நூல்கள் அவைகளின் ஆசிரியர்களைப்பற்றி ஓரளவுதான் தெரிவிக்கும் ஆசிரியன் எப்பொழுதும் தன் நூலைவிட மேலானவனாகவே இருப்பான் போவீ குடும்பத்தின் இலக்கியத்தைக் கட்டுப்படுத்த எனக்கு அதிகாரமிருந்தால் நான் இராஜ்யத்தின் நன்மையையும் சமயத்தில் நன்மையையும் பாதுகாக்க முடியும் பேக்கன் விஞ்ஞானத்தில் மிகப்புதியனவாக வந்துள்ள நூல்களைப் படியுங்கள் இலக்கியத்தில் பழையவைகளைப் படியுங்கள் உயர்தர இலக்கியம் எப்பொழுதும் நவீனமாகவே இருக்கும் புல்வர் இலக்கியத்தின் நலிவு தேசத்தின் நலிவாகும் வீழ்ச்சியில் இரண்டும் சேர்ந்தேயிருக்கும் கதே இலக்கியம் பயில்வது இளைஞர்களுக்கு வளர்ச்சியளிக்கும் முதுமைப் பருவத்தில் விருந்தாக விளங்கும் செழுமையை அலங்கரிக்கும் வறுமையில் ஆறுதலளிக்கும் வீட்டில் இன்பமளிக்கும் வெளியில் எங்கே செல்லவும் உரிமை அளிக்கும் ஸிஸரோ இன்று இலக்கியத்தில் ஏராளமான கொற்றர்கள் இருக்கின்றனர் ஆனால் கைதேர்ந்த சிற்பிகள்தாம் குறைவாயுள்ளனர் ஜோபெர்ட் நீ படைக்கும் இலக்கியப் படைப்புகளை ஒன்பது ஆண்டுகளாவது மக்களிடம் வெளியிடாமல் மறைத்து வைத்திரு ஹொரேஸ் பேச்சை நித்தியமாக்கி வைப்பது இலக்கியம் ஷிலிகெல் சான்றுகள் வெளி இணைப்புக்கள் பகுப்பு கருப்பொருட்கள் பகுப்பு இலக்கியங்கள் |
ச வையாபுரிப்பிள்ளை எஸ் வையாபுரிப்பிள்ளை அக்டோபர் பெப்ரவரி இருபதாம் நூற்றாண்டின் முதன்மைத் தமிழ் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் தமிழ் நூற்பதிப்புத் துறையில் சிறந்த பதிப்பாசிரியராக விளங்கியவர் தமிழில் சிறந்த புலமை உள்ளவர் ஆய்வுக் கட்டுரையாளர் திறனாய்வாளர் காலமொழி ஆராய்ச்சியாளர் மொழிபெயர்ப்பாளர் சொற்பொழிவாளர் கதை கவிதைகள் புனையும் திறம்படைத்தவர் எனப் பல்முகப் பரிமாணங்களைக் கொண்டவர் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட பேரகராதியின் ஆக்கக் குழுத் தலைவராகச் செயற்பட்டவர் மேற்கோள்கள் இலக்கியம் உண்மையும் அழகும் நிரம்பிய சொற்களால் வாழ்க்கையைப் புலப்படுத்துகிறது அது மனிதனது ஆன்மாவையும் அவன் கருத்துக்கள் உணர்ச்சிகள் தலை நோக்கங்கள் முதலியவற்றையும் சொல் வடிவிலே காட்டும் குறிப்பாகும் ஆன்மாவின் உண்மைச் சரித்திரமாக உள்ளது அதுவே அதன் சிறப்பு இயல்புகள் கலையழகும் சிறப்பாற்றலும் நிலைபேற்றுப் பண்புகளும் ஆகும் அதன் அளவு கருவிகள் அதனுடைய அகிலத்துவமும் அதன் தனிப்பட்ட நடையமைப்பும் ஆகும் அதன் பயனாவது நம்மை இன்புறுத்தலே அன்றி மனிதனது உண்மை இயல்பை அறிவுறுத்துதலும் ஆகும் அதாவது மனிதனுடைய செயல்களைக் காட்டிலும் அவனது ஆன்ம இயல்பினை உணர்த்துவதுதான் அதற்குச் சிறந்த பயன் எனக் கொள்ளுதல் வேண்டும் சான்றுகள் எஸ் வையாபுரிப் பிள்ளை இலக்கியச் சிந்தனைகள் கட்டுரைத் தொகுதி கட்டுரை இலக்கியமாவது யாது நவபாரதி பிரசுராலயம் லிமிடெட் திருநெல்வேலி சென்னை வெளி இணைப்புக்கள் பகுப்பு வரலாற்றாய்வாளர்கள் |
சில நூல்கள் கற்போரைத் திருத்த முடியாது எண்ணச் செய்யவும் முடியாது படிக்கும் நேரத்தில் இன்பம் பயக்கும் தொடர்ந்து படித்தால் மிகுதியான பயன் காண முடியாது அதற்கு மாறாகக் கடமையை மறக்கச் செய்து மனச் சான்றையும் அடங்கச் செய்து பொழுதைப் போக்குமாறு தூண்டும் இன்னும் சில நூல்கள் முதல் முறையாகப் படிக்கும்போது தொல்லையாகவும் இருக்கும் தொடர்ந்து படிக்கப் படிக்க இன்பம் பயக்கும் வாழ்நாளில் மறக்க முடியாத துணையாக இருக்கும் வழிகாட்டியாக நிற்கும் மனச் சான்றைப் பண்படுத்தும் வழுக்கி விழும் போதெல்லாம் காப்பாற்ற முன்வரும் நெறி தவறும் போதெல்லாம் இடித்துரைத்துத் திருத்தும் வாழ்நாளில் உயிரின் உணர்வு போல் கலந்து விடும் ஆற்றல் அத்தகைய நூல்களுக்கு உண்டு டாக்டர் மு வரதராசன் இலக்கிய ஆராய்ச்சி கட்டுரைத் தொகுதி கட்டுரை நல்ல நூல் பாரி நிலையம் சென்னை ஏழாம் பதிப்பு பகுப்பு தமிழறிஞர்கள் பகுப்பு இந்தியர்கள் |
சமூகம் என்பது ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவைக் குறிக்கும் ஒரேமாதிரியான புவியியல் நிலப்பகுதியில் வாழ்கின்ற ஒரு பெரிய மக்கள் குழுவையும் சமூகம் எனலாம் அல்லது ஒரே மாதிரியான அரசியல் அதிகாரத்திற்கு உட்பட்ட சமூகப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் குழுவையும் சமூகம் எனலாம் ஒரு சமூக முறைமையின் தொடர்ச்சிக்கு அதன் தனித்துவம் பற்றியும் அத் தனித்துவத்தின் சிறப்புகள் பற்றியும் அதனைப் பின்பற்றுவோரிடத்துக் காணப்படும் பிரக்ஞை முக்கியமானதாகும் அந்தப் பிரக்ஞை அதன் பண்பாடு பற்றிய பிரக்ஞையாகவும் அந்தப் பண்பாட்டினது பெருமைகள் பற்றிய பிரக்ஞையாகவும் தொழிற்படும் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி யாழ்ப்பாணம் சமூகம் பண்பாடு கருத்துநிலை கட்டுரை யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல் குமரன் புத்தக இல்லம் கொழும்பு பெரிய மீன் சின்ன மீனைத் தின்னலாம் ஆனால் சின்ன மீன் அதற்கும் சின்ன மீனைத் தின்றால் பெரிய மீன் குற்றம் செய்கிறாய் என தண்டிக்க வருகிறது இது தான் சமூகம் புதுமைப்பித்தன் வாழ்க்கைப் பாதையில் கணவனும் மனைவியுமாகச் செல்லுகையில் மஞ்சள் பூப் போல் இருந்த சமூகம் பந்துக்கள் அவன் பிரிந்தவுடன் முட்களாகக் குத்துகிறார்கள் புதுமைப்பித்தன் தனிமனிதன் உயிருடன் வாழ முடியாது அதாவது தனியாக இருந்தால் மனிதனால் வாழ முடியாது என்பது மனிதப் பிராணிகள் கஷ்டப்பட்டு அறிந்த உண்மை புதுமைப்பித்தன் அறிவைக்கொண்டு நாம் மனிதர்களுடன் பழகுவதைக்காட்டிலும் இதயத்தைக்கொண்டு பழகுவதில் அதிக நெருக்கமாயுள்ளது புருயெர் கூடி வாழும் இயல்பு இல்லாதவனுக்குச் சமுதாய வாழ்வு சுகமாக இராது ஷேக்ஸ்பியர் மனிதனுடைய குறிப்பிடத்தகுந்த வெற்றிகள் சமுதாயத்திற்குப் பயன் உள்ளவைகளாக இருப்பவையே டாக்டர் ஆல்பிரட் ஆட்லர் சிறுவிஷயங்களில் மாறுபட்டும் பெரிய விஷயங்களில் ஒற்றுமைப்பட்டும் இயங்குவதே சமுதாயம் நான் ஒரு மனிதன் மனித சமூக சம்பந்தமான எந்த விஷயத்திலும் எனக்கு அக்கறை உண்டு டெரன்ஸ் நமக்குள்ளே இயங்கும் தெய்வத்தன்மை இல்லாவிட்டால் மனித சமூகத்திற்கு என்ன மதிப்பு இருக்கும் பேக்கன் மனிதனிடம் அதிக மிருக இயல்பும் சொற்பமான சைத்தானின் இயல்பும் இருப்பது போலவே அவனிடம் கொஞ்சம் தெய்வத் தன்மையும் இருக்கின்றது மிருக இயல்பையும் சைத்தான் இயல்பையும் வெல்ல முடியுமே தவிர இந்தப் பிறவியில் அவைகளை முழுதும் அழித்துவிட முடியாது காலெரிட்ஜ் வெளி இணைப்புக்கள் குறிப்புகள் பகுப்பு சமூகவியல் |
சிறு செயல்களிலும் உண்மையை தீவிரமாக எடுத்துக் கொள்ளாதவர் பெரிய விஷயங்களில் நம்பத் தகுந்தவரில்லை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மார்ச் ஏப்ரல் குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார் இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார் இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டைமுன்வைத்ததுடன் குவாண்டம் பொறிமுறை புள்ளியியற் பொறிமுறை மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார் ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும் கோட்பாட்டு இயற்பியலில் அவர் செய்த சேவைக்காகவும் ல் இவருக்குப் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது மேற்கோள்கள் அனைத்து மதங்களும் கலையும் அறிவியலும் ஒரே மரத்தின் கிளைகள் எந்தவொரு அறிவுள்ள முட்டாளும் விஷயங்களை பெரிதாகவும் சிக்கலானதாகவும் செய்திட இயலும் ஆனால் ஒரு மேதையால் மட்டுமே அவற்றை எளிதாகச் செய்ய முடியும் ஒரு அழகான பெண்ணுக்கு முத்தம் கொடுத்துக்கொண்டு ஒருவன் வாகனத்தை பாதுகாப்பாக ஓட்டிச் செல்கிறான் என்றால் அவன் முழுமையான முத்தம் தரவில்லை என்று அர்த்தம் வெகு அதிகமாகப் படித்து தன் மூளையையும் குறைவாக பயன்படுத்துபவன் சிந்தனை என்ற சோம்பேறித்தனத்துக்கு சென்றிடுவான் சிறு செயல்களிலும் உண்மையைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளாதவர் பெரிய விஷயங்களில் நம்பத் தகுந்தவரில்லை கடவுளின் முன் நாமனைவரும் சம அளவில் புத்திசாலிகள் முட்டாள்கள் கடவுள் அண்டத்தைப் படைத்த போது அதை எவ்வாறு படைப்பது என்று விரும்பித் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அவருக்கு இருந்ததா ஆழமான மதம் சார்ந்த கடவுள் நம்பிக்கை இல்லாதவன் நான் இது ஒரு வகையான புதிய மதம் இயற்கையிடம் நான் ஓர் அற்புதமான கட்டமைப்பைக் காண்கிறேன் அதை மிகக்குறைந்த அளவிலேயே நம்மால் புரிந்து கொள்ள முடியும் அந்தப் புரிதல் சிந்திக்கக்கூடிய ஒவ்வொரு நபரின் உள்ளத்திலும் ஓர் உணர்வை உண்டாக்குகிறது இது ஓர் உண்மையான மத உணர்வாகும் இதற்கும் மதவாதிகள் கூறும் மர்மமான மதப் புரிதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை தனி நபராகக் கருதப்படும் ஒரு கடவுளில் எனக்கு நம்பிக்கையில்லை இந்த நம்பிக்கையின்மையை நான் என்றும் மறுத்ததும் கிடையாது அதற்கு மாறாக அதைத் தெளிவாகவே கூறியிருக்கிறேன் மனித இனத்தை அழிவிலிருந்து காப்பாற்றுவதே விஞ்ஞானிகளின் முழு முதற் கடமை அந்த வேலைதான் எல்லாவற்றையும் விட இப்போது தலையானது வெற்றி பெற்ற மனிதராக முயற்சிப்பதை விட மதிப்பு மிக்க மனிதராக முயற்சி செய்யுங்கள் அமைதியை வலுவாக கட்டுப்படுத்திக் கொண்டு வர முடியாது அது புரிந்துணர்விலேயே நீடிக்கும் எண்ணக்கூடியனவெல்லாம் எண்ணத்தகுந்தனவல்ல எண்ணத்தகுந்தனவெல்லாம் எண்ணக்கூடியனவல்ல உண்மைகள் தேற்றங்களுடன் பொருந்தவில்லை என்றால் உண்மைகளை மாற்றுங்கள் நான் எதிர்காலத்தைப் பற்றி யோசிப்பதில்லை ஏனெனில் அது தேவையானபோது வந்தே தீரும் அறிவியலோடு கலக்காத மதம் குருட்டுத்தனமானது வாழ்க்கையில் தவறே செய்யாதவர்கள் வாழ்க்கையில் புதிதாக எதையும் முயற்சிக்காதவர்களாகதான் இருக்கமுடியும் ஒருவர் தான் எப்போதுமே எந்தத் தவறும் செய்ததில்லை என்று கூறுவாரேயானால் அவர் எப்போதும் புதிய ஒன்றை முயற்சித்ததில்லை என்று பொருளாகும் எவனும் எளிமையாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் எளிய வாழ்க்கையே சிறப்பானது எளிமையான இல்லத்திலே எல்லாரும் விரும்பும் எளிமை விரும்பியாக வாழ கற்றுக்கொண்டால் மக்களும் அப்படி வாழ்பவரைப் பின்பற்றத் தயங்க மாட்டார்கள் நன்றி என்னுடைய அகவாழ்வும் புறவாழ்வும் என்னுடைய இனத்தாரின் இறந்தவரும் இருப்பவரும் உழைப்பினலேயே ஆக்கப்பட்டிருக்கின்றன என்பதை நான் நாள்தோறும் உணர்கிறேன் பிறர் உழைப்பால் நான் எவ்வளவு நன்மையைப் பெற்றாேனோ அத்துணை நன்மையை நான் பிறருக்குச் செய்ய எவ்வளவு உழைக்க வேண்டும் மூன்றாம் உலகப்போர் ஒரு முறை ஐன்சுடைனிடம் மூன்றாம் உலகப்போரில் எவ்விதமான ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்று கேட்கப்பட்டது அதற்கு அவர் கூறினார் மூன்றாம் உலகப்போரைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள் ஆனால் நான்காம் உலகப்போர் எவ்விதமான ஆயுதங்களால் இடப்படும் தெரியுமா கற்களாலும் குச்சிகளாலும் அல்பேர்ட் ஐன்ஸ்டீன் இடம் கம்பி இல்லா தந்தியை பற்றி விளக்கக் கோரிய போது அவர் சொன்னார் பாருங்கள் தந்தி என்பது மிக மிக நீளமான பூனையைப் போன்றது நீங்கள் அதன் வாலை நியு யார்க் நகரில் இழுத்தால் அதன் தலை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உருமும் உங்களுக்கு புரிகிறதா மற்றும் கம்பி இல்லா தந்தி அதே முறையில் செயல்படுகிறது நீங்கள் இங்கே இருந்து சமிக்ஞையை அனுப்புங்கள் அவர்கள் பெற்றுக்கொள்வார்கள் ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால் இதில் பூனை கிடையாது தேர்வு மரம் ஏறுவதுதான் தேர்வுமுறை என்றாகிவிட்டால் மீன்கள் அதில் தோற்றுப்போகும் வாழ்நாள் முழுவதும் தாம் முட்டாள் என்ற என்னத்துடனேயே அவை வாழ்ந்து மடியும் பிற பொன்மொழிகள் அரசியலை விட எனக்கு சமன்பாடுகளில் விருப்பம் ஏனெனில் அரசியல் தற்காலத்திற்கு மட்டுமே ஒரு சமன்பாடோ என்றென்றும் சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்பு செர்மனியர்கள் பகுப்பு விஞ்ஞானிகள் பகுப்பு இயற்பியலாளர்கள் பகுப்பு நோபல் பரிசு வென்றவர்கள் |
அறிஞர் அண்ணா எனவும் பேரறிஞர் அண்ணா அறியப்படும் கா ந அண்ணாத்துரை தமிழக அரசியல்வாதியும் அறிஞரும் ஆவார் குண்டுக்குறியிட்ட வரிசையின் உறுப்பினர் ஒன்றே குலம் ஒருவனே தேவன் நான் எப்போழுதுமே கடவுளிடம் உண்மையான நம்பிக்கையுடன் வாதாடுபவன் கடவுள் ஒன்று மனித நேயமும் ஒன்று தான் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் எதிரிகள் தாக்கித் தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும் நீங்கள் தாங்கித் தாங்கி வலுவைப் பெற்றுக்கொள்ளுங்கள் வன்முறை இருபுறம் கூர்மையான ஆயுதம் பழமை புதுமை என்ற இரு சத்திகளுக்கும் போர் நடக்கிறது எழுத்தாளர்களின் பேனா முனைகளே அப்போரிலே உபயோகமாகும் போர்க் கருவிகள் ஒரே குடும்பத்தின் மணிகளிலே ஒன்று மாணிக்கமாக்கப்பட்டு மற்றொன்று மண்ணாங்கட்டியாக்கப்படுகிறது சொத்து சுதந்திரம் ஆணுக்கு சமயற்கட்டிலே வேகவும் சயனக்கிரகத்தில் சாயவும் பெண் ஒரு சனநாயக சமுதாயத்தில் கருத்துக்களைச் சொல்வதற்கு தடையோ சுதந்திர உணர்வுகளுக்கு அழிவு தரும் நடைமுறைகளோ கண்டிப்பாக இருக்கக் கூடாது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களுக்குத் தாங்களே நம்பிக்கை உள்ளவர்களாக நடந்து கொண்டால் மட்டும் போதாது தேர்ந்தெடுத்த மக்களுக்கும் நம்பிக்கை உள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும் பாடத்திட்டத்தில் பகுத்தறிவைப் புகுத்தினால்தான் மக்களுக்கு பழமையிடத்திலுள்ள பாசம் குறையும் மனத்திலுள்ள மாசு நீங்கும் காலத்திற்குத் தக்கதுபோல கருத்து வளரும் பகுத்தறிவை பயன்படுத்துவதில்லை என்று முடிவு செய்துவிட்ட புறகு மனிதனிடம் வாதிடுவது செத்துப்போன மனிதனுக்கு மருந்து ஊட்டுவதற்கு நிகராகும் நல்ல வரலாறுகளைப் படித்தால்தான் இளம் உள்ளத்தில் புது முறுக்கு ஏற்படும் விதியை நம்பி மதியைப் பறிகொடுத்து பகுத்தறிவற்ற மனிதர்களாய் வாழ்வது மிகமிகக் கேடு தீங்கு பழைய காலத்தைப் போல நாம் நடக்க முடியாது நடக்கத் தேவையுமில்லை புதிய கருத்துக்களைத் தைரியத்துடன் கவனித்து ஏற்று புதுவாழ்வு நடத்த நம்மை நாம் தயாராக்கிக்கொள்ளவேண்டும் தீர்ப்பு என்றாலே அது நியாயமானது என்று பலர் நினைக்கிறார்கள் தீர்ப்பு நியாயமானது முடிவானது என்றால் மீண்டும் நாம் அதற்கு மேலுள்ள நீதி மன்றங்களுக்கு ஏன் செல்ல வேண்டும் நாள் கோள் நட்சத்திரம் சகுனம் சாத்திரம் அத்தனையும் மனித முயற்சிக்கு போடப்படுகிற தடை கற்கள் மோரை கடைந்து வெண்ணெய் எடுப்பதுபோல அறிவை வளர்த்துக்கொண்டு பலன் பெறவேண்டும் சலிப்பு வருகிற நேரத்தில் வள்ளுவரின் உருவத்தை ஒரு முறை பார்த்தால் வந்த சலிப்பு பறந்துபோகும் சந்தேகம் வரும்போது திருக்குறளில் காணப்படும் கருத்துக்களை எண்ணிப்பார்த்தால் வந்த ஐயப்பாடுகள் நீங்கிவிடும் எவ்வளவு கட்டிடங்கள் கட்டினாலும் விஞ்ஞான கூடங்கள் அமைத்தாலும் புது பூங்கா அமைத்தாலும் கல்விச் செல்வம் இல்லாவிடில் அவை பயன் தரமாட்டா சட்டம் ஓர் இருட்டறை அதில் வக்கீலின் வாதம் ஓர் விளக்கு அந்தப் பிரகாசமான விளக்கு ஏழைகளுக்குக் கிடைப்பதில்லை வேலைக்காரி நாடகம் பொதுவாழ்விலே எரிமலை அலைகடல் பூகம்பம் தீ எல்லாம் உண்டு அவைகளிலே வெந்தும் சாம்பலாகாத சித்தம் இருக்க வேண்டுமே அதற்கான சக்தியைப் பெற வழிதேடு ஓடாதே எதிர்த்துச் செல் அமெரிக்காவிலே ஹரிசன் முதலியார் என காணமுடியுமா லண்டனிலே கிரிப்ஸ் செட்டியார் உண்டா விஞ்ஞானத் தோடு போட்டியிட்டு நாள்தோறும் பலவித அற்புதங்களைக் கண்டுபிடித்து வரும் மேல்நாட்டவர்க்கு ஜாதி வித்தியாசமும் ஜாதிபட்டங்களும் அவசிய மானதென்று தெரிந்தால் அவர்கள் நம்மைவிட அதிக ஜாதிகளை உண்டாக்கியிருக்கமாட்டார்களா பயபக்தியுடன் நீங்கள் கும்பிட்டு வணங்கும் விநாயகர் யார் மூவறான முதல்வர் என்று சைவர்கள்மார்தட்டிக் கூறிக்கொள்ளும் முக்கண்ணனாரின் மைந்தன் கடவுன் என்றாலே எல்லாவற்றையும் கடந்தவர் என்று பொருள் ஆனால் இங்கோ கடவுளுக்குக் குடும்பம் பிள்ளைக் குட்டி பரத்தை முதலிய எந்தப் பாசமும் இல்லாமலில்லை தூற்றலைக் கண்டு தழும்பேறிவிட்ட கழகம் தி மு கழகம் நம் கொள்கைகள் நியாயமானவை நாம காட்டுகின்ற பூகோளம் புள்ளி விபரங்களும் சரித்திரச் சான்றுகளும் நாமே தீட்டிக் கொண்டதல்ல கல்வெட்டுக்களிலிருந்து எடுத்துக் காட்டியிருக்கிறோம் குருடர் பலர் யானையைக் கண்டனர் தடவிப்பார்ப்பதன் மூலமே ஒரு குருடனுக்கு யானை உரலாக இருந்தது அவன் காலைத் தொட்டுப் பார்த்தான் இன்னொருவனுக்கு யானை துடைப்பம் போல் இருந்தது அவன் வாலைத் தொட்டான் இப்படிக் கதை உண்டல்லவா அதுபோல நமது திட்டத்தின் முழு உருவையும் பொருளையும் தெரிந்து கொள்ளாதவர்கள் தத்தமது பார்வைக்குட்பட்ட பகுதி மட்டுமே நமது திட்டம் என்று கருதிக் கொண்டு பேசுவர் ஏசுவர் மதமெனும் முள்ளில் கலையெனும் ஊன் அமைக்கப்பட்டிருப்பதறியாது உணவெனக் கருதிச் சுவைத்திடச்சென்று அவ்வழி ஆரியத்தூண்டிலிற் சிக்கி வாழ்வினைப் பறிகொடுக்கின்றனர் தமிழர் மலையுச்சியிலிருந்து விரைந்து வரும் பேராறுகள் போல கட்டுரைகள் ஜோலாவின் பேனா முனையிலிருந்து கிளம்பின கைகூப்பி காலில் விழுந்தாகிலும் காலித்தனம் செய்வோரை இந்தச் சிறுசெயலில் ஈடுபடாதீர்கள் செம்மையாக வளர்ந்து வரும் தி மு கழகத்துக்கு இழுக்குத் தேடாதீர்கள் என்று வேண்டிக் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன் கழகத்துக்கு எத்தனை புதிய உறுப்பினர்களைச் சேர்த்தோம் புதிய கிளைகள் அமைத்தோம் என்ற கணக்குத்தான் நீங்கள் பெற்றளித்துப் பெருமையும் பெருமகிழ்ச்சியும் பெறவேண்டியதாகுமேயன்றி வீசிய கற்கள் செருப்புகள் என்று மாற்றார் காட்டும் கணக்கு நமக்குத் தலை இறக்கத்தைத்தான் தரத்தக்கதாகம் என்பதை உணர வேண்டும் கோபத்தால் கொந்தளிப்பது கசப்புணர்ச்சியால் கல் வீசுவது என்பவைகளில் எவர் ஈடுபடினும் அவர்கள் தம்மையும் அறியாமல் தாம் வளர்த்த கழகத்துக்குத் தாமே இழிவையும் பழியையும் தேடித் தருகிறார்கள் என்பது தான் பொருள் கலகம் விளைவித்தல் கல்வீசுதல் கூட்டத்தில் குழப்பம் காலணி வீசுதல் போன்ற காட்டுமிராண்டித்தனம் நாம் துவக்க முதற்கொண்டுள்ள தூய்மையான கடமை கண்ணியம் கட்டுப்பாடு ஆகியவைகளைக் கேலிக்கூத்து ஆக்கிவிடும் சிறுமைச் செயலாகும் அமைய வேண்டியது தனி அரசு பெறவேண்டியது முழு உரிமை ஒழிக்கப்படவேண்டியது வடநாட்டு ஏகாதியத்தியம் விலக வேண்டியது டில்லி பேரரசின் பிடியில் இருந்து தமிழ்நாடா திராவிட நாடா என்று கேட்பவர்க்குச் சொல்வேன் ஓரணாவில் காலணா தமிழ்நாடு என்று சோப்பு விளம்பரக் கடையிலே சொகுசான சுந்தரியின் படத்தை எடுப்பாகத் தொங்கவிட்டிருப்பது எதற்காக அந்த ஆரணங்கின் அழகுக்கு மதிப்ளிபத்தா அல்ல அல்ல அந்தப் பாவை தமது சரக்கு மிக நல்லதென்று கூறுவது காரணம் குழவியின் மழலையும் யாழின் இனிமையும் பொருளின் மயக்கமும் வாழ்வின் சுவையும் தூயவர்களின் பணியினை மாய்த்திட இயலவில்லை காற்றினிலே கலந்தோர் இசையைக் கேட்டுக் களிப்புற்று மெய்மறந்து கிளம்பும் திசை நோக்கிச் சொல்வார் போல இன்பத்திராவிடம் காண நடக்கின்றார் வீரரெல்லாம் அவர் தமக்கு துந்துபியாய் சங்கொலியாய் இருந்த பேர்கள் இன்று வேறு ஒலி எழுப்பி நின்றால் கைகொட்டிச் சிரிப்பதன்றி கடமையையும் மறப்பரோ கழகத்தோழர் நம் நாட்டைப் பொறுத்தவரையில் கேட்க வேண்டியவர்கள் கேட்க வேண்டிய முறையில் கேட்டால் ஏழை எளியவர்கள்கூட இயன்ற அளவு தருவார்கள் ஒன்றுக்குக் கேட்டு வாங்கி அதை வேரறொன்றுக்குப் பயன்படுத்தி யாரேனும் அதுபற்றிக் கேட்டால் நீ யார் கேட்பதற்கு என்று சிலர் கூறுவதால்தான் மக்களுக்குக் குழப்பம் ஏற்படுகிறது நான் சில காரியங்களைச் செய்யாமல் விடுவேனே தவிர செய்கிற பலகாரியங்களை நிறைவாகச் செய்பவன் நம் கையிலே ஐந்து விரல்கள் இருக்கின்றன கட்டை விரல் மோதிர விரல் சுண்டு விரல் என்று ஐந்து விரல்களும் தனித்தனியே தான் இயங்குகின்றன ஆனால் பொதுவான ஒரு வேலை என்று வரும்போது ஐந்து விரல்களும் ஒன்று சேர்ந்து கொள்ளுகின்றன மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இத்தகைய உறவுதான் இருக்கவேண்டும் அண்ணா ஏன் கவிதை எழுதவில்லை என்று கேட்டுவிட்டு அண்ணா கவிதை எழுதினால் தமிழ் நாட்டில் வேறு யாரும் கவிதை எழுதமாட்டார்கள் அந்த அளவுக்கு அண்ணாவின் கவிதை இருக்கும் என்று சிலர் என்னைப் புகழ்ந்து பேசுகிறார்கள் ஆனால் உண்மை அப்படியல்ல உண்மையில் கவிஞர்களுக்குள்ள உளப்பாங்கு எனக்கில்லை புகைப்படம் எடுக்கும் கருவியில் உள்ள லென்ஸ் போல காணுபவற்றை அப்படியே பதிய வைத்துக்கொள்ளும் மனப்பாங்கு கவிஞர்களுக்கு உண்டு ஆனால் அது எனக்கில்லை வெளி இணைப்புகள் அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள் உசாத்துணை அறிஞர் அண்ணா பகுப்பு இந்தியர்கள் பகுப்பு தமிழர்கள் பகுப்பு அரசியல் தலைவர்கள் பகுப்பு இறை மறுப்பாளர் பகுப்பு தமிழ் நாட்டு முதலமைச்சர்கள் பகுப்பு பிறப்புக்கள் பகுப்பு இறப்புக்கள் பகுப்பு கதாசிரியர்கள் |
சுவாமி விவேகானந்தர் சனவரி சூலை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார் இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார் ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது மேற்கோள்கள் பலமே வாழ்வு பலவீனமே மரணம் உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய் எழுமின் விழிமின் குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின் நன்று பாசாங்கு செய்வதைவிட நாத்திகனாக இருப்பதே மேல் உலகின் குறைகளை பற்றி பேசாதே குறைகளை நோக்கி வருத்தப்படு எங்கும் நீ குறைகளை காண்பாய் ஆனால் நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே குறை சொல்லாதே குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே உலகின் குறைகள் குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா செயல் நன்று சிந்தித்து செயலாற்றுவதே நன்று உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும் சிந்தனைகளாலும் நிரப்பு அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து அதிலிருந்து நல் செயல்கள் விளையும் வாழ்வும் சாவும் நன்மையும் தீமையும் அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு இந்த மாயத்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம் ஆனால் நீ தீமையையும் காண்பாய் தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைதனம் எவன் ஒருவனுக்கு தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன் பண்டைய மதங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று குறிப்பிட்டன புதிய மதம் தன்னம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று சொல்லுகிறது தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரமாகும் அத்தகைய நம்பிக்கை உள்ளே இருக்கும் தெய்விகத்தை வெளியே வரவழைக்கிறது நீ எதையும் சாதிக்க முடியும் அளவு கடந்த ஆற்றலை வெளிப்படுத்தப் போதுமான அளவிற்கு உண்மையாக நீ முயற்சி செய்யாத போது தான் தோல்வி அடைகிறாய் ஒரு மனிதனோ ஒரு நாடோ தன்னம்பிக்கை இழந்த உடனே அழிவு வருகிறது நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுவாய் நீ உன்னை வலிமையுடயவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆகிவிடுவாய் பலவீனத்திற்கான பரிகாரம் ஓயாது பலவீனத்தைக் குறித்து சிந்திப்பதல்ல மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான் மக்களுக்கு ஏற்கனவே அவர்களுக்குள் இருந்து வரும் வலிமையைப்பற்றிப் போதிப்பாயாக மிகப்பெரிய உண்மை இது வலிமை தான் வாழ்வு பலவீனமே மரணம் இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள் ஆனால் நான் சொல்கிறேன் முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை அது தான் வழி உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை எல்லா ஆற்றல்களும் உன்னுள்ளேயே உள்ளன அதை உணர்ந்து அந்த ஆற்றலை வெளிப்படுத்து நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல் நீ உறுதியுடன் விஷத்தை பொருட்படுத்தாதிருந்தால் பாம்பின் விஷமும் உன் முன் சக்தியற்றதே ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர அதிக அளவில் அறிவைப் பெறலாம் இந்த வழி தான் அறிவைப் பெறுவதற்குரிய ஒரே வழி செருப்பை செப்பனிடுவதைத் தொழிலாகக் கொண்டவன் மனதை ஒருமுகப்படுத்தி தன் பணியைச் செய்தால் மேலும் சிறப்பாக செருப்புகளை செப்பனிடுவான் மனதை ஒருமுகப்படுத்தி சமையல் செய்யும் சமையற்காரன் மேலும் சிறந்த முறையில் சமைப்பான் பணம் சேர்ப்பதோ கடவுள் வழிபாடோ அல்லது வேறு எந்த ஒரு வேலையானாலும் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர மேலும் சிறப்பாக அந்தக் காரியத்தை செய்து முடிக்கலாம் இந்த ஒரு குரல் ஒரே தட்டுதல் இயற்கையின் கதவுகளைத் திறந்து ஒளி வெள்ளங்களை வெளியே பாய்ந்தோடச் செய்கிறது ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவடிகளில் அமர்வதன் மூலமே இந்தியா முன்னேற முடியும் அவரது வாழ்வையும் உபதேசங்களையும் எங்கும் பரப்ப வேண்டும் இந்து சமுதாயத்தின் ஒவ்வொரு மயிர்க்காலினூடேயும் அவற்றை ஊடுருவச் செய்ய வேண்டும் எந்த ஒரு சக்தியையும் புதிதாக உண்டாக்க முடியாது ஏற்கனவே உள்ள சக்தியைத்தான் வேறு திசைக்கு நாம் திருப்பிவிட முடியும் எனவே நமது கைகளில் ஏற்கனவே உள்ள மாபெரும் ஆற்றல்களை அடக்கி ஆள நாம் கற்றுக்கொள்ள வேண்டும் அவற்றை மனதின் வலிமையைக் கொண்டு வெறும் மிருக சக்தியாக இருப்பதற்கு பதிலாக ஆன்மிகச் சக்தியாக இருக்கச் செய் பிரம்மச்சரியம் தான் எல்லா ஒழுக்கங்களுக்கும் எல்லா மதங்களுக்கும் அடித்தளமாக விளங்குகிறது என்பது இதனின்று தெளிவாகிறது நமது சொந்த மனப்பான்மை தான் நமக்கு ஏற்றாற்போல் உலகத்தைத் தோன்றும்படி செய்கிறது நமது எண்ணங்களே பொருள்களை அழகு பொருந்தியவை ஆக்குகின்றன நமது எண்ணங்களே பொருள்களை அவலட்சணமாக்குகின்றன இந்த உலகம் முழுவதும் நமது சொந்த மனதிலேயே அடங்கியிருக்கிறது எல்லாவற்றையும் சரியான முறையில் புரிந்துகொள்ளக் கற்றுக்கொள் நாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள் நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படி நம்மை அமைத்துக்கொள்ளும் ஆற்றல் நம்மிடமே இருக்கிறது நாம் இப்போது இருக்கும் நிலை நம்முடைய முன்வினைகளின் பலன் என்றால் எதிர்காலத்தில் நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அதைம் நாம் நமது தற்போதைய செயல்களால் உண்டாக்கிக் கொள்ள முடியும் என்பது வெளிப்படை இந்த உலகம் மிகப்பெரிய ஓர் உடற்பயிற்சிக் கூடம் இங்கு நாம் நம்மை வலிமையுடவர்களாக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறோம் மக்கள் பொதுவாக வாழ்க்கையிலுள்ள குறைபாடுகளையெல்லாம் தங்களுடன் வாழ்பவர்கள் மீதோ அல்லது அது தவறினால் தெய்வத்தின் மீதோ சுமத்துகிறார்கள் அல்லது புதிதாக அவர்கள் ஏதோ பேய் பிசாசு என்று கற்பித்துக்கொண்டு அதைத் தலைவிதி என்று சொல்கிறார்கள் விதி என்றால் என்ன அது எங்கே இருக்கிறது எதை விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்கிறோம் நமது விதியை நாமே வகுத்துக்கொள்கிறோம் எனவே அதன்பொருட்டுத் தூற்றுவதற்கும் ஒருவருமில்லை பாராட்டுவதற்கும் ஒருவருமில்லை காற்று வீசியபடி இருக்கிறது பாய்மரங்களை விரித்துக் காற்றை பயன்படுத்திக்கொள்ளம் கப்பல்கள் தங்கள் வழியே முன்னேறிச் செல்கின்றன ஆனால் பாய்களை சுருட்டி வைத்துள்ள கப்பல்கள் காற்றை ஏற்றுப் பயன் பெறுவதில்லை இது காற்றினுடைய குற்றமாகுமா நான் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்தத் துன்பம் என்னுடைய சொந்தச் செயல்களாலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த ஒரு நிலையே என் ஒருவனால் மட்டுமே அது நீக்கப்பட வேண்டும் என்பதைக் காட்டுகிறது என்று சொல் நான் எதைப் படைத்தேனோ அதை என்னால் அழிக்கவும் முடியும் பிறரால் படைக்கப்பட்ட ஒன்றை ஒருபோதும் என்னால் அழிக்க முடியாது எனவே எழுந்து நில் தைரியமாக இரு வலிமையுடன் இரு பொறுப்பு முழுவதும் உன் தோள் மீதே சுமந்துகொள் உனது விதியைப் படைப்பவன் நீயே என்பதைப் புரிந்துகொள் உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன நாம் நினைக்கும் ஒவ்வோர் எண்ணமும் நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் குறிப்பிட்ட ஒரு காலத்திற்குப் பிறகு சூட்சுமத் தன்மையை அடைகிறது பின்பு அது வித்து வடிவத்தைப் பெற்று மறைந்திருக்கும் நிலையில் நமது சூட்சும சரீரத்தில் வாழ்கிறது மீண்டும் சிறிது காலத்திற்குப் பிறகு அது வெளிப்பட்டு வந்து தனக்கு உரிய பலன்களைத் தருகிறது இந்தப் பலன்களே நம்முடைய வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன இவ்விதம் மனிதன் தனது வாழ்க்கையைத் தானே உருவாக்கிக் கொள்கிறான் தனக்குத் தானே அமைத்துக் கொள்ளும் விதிகளைத் தவிர வேறு எதற்கும் மனிதன் கட்டுப்பட்டவன் அல்ல பிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்யவேண்டிய காரியம் தட்டிக்கொடுப்பது மட்டும்தான் எல்லா நாகரிகங்களுக்குள் அடிப்படை சுயநல தியாகமே உலகம் எவ்வாறு நடக்கின்றதோ உலகத்தோடு பொறுந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும் வாழ்வில் வேகம் மட்டும் இருந்தால் போதாது விவேகம் இருக்க வேண்டும் ஏழைச் சிறுவன் கல்வியை நாடி வர முடியாவிட்டால் கல்விதான் அவனை நாடிப் போக வேண்டும் தொண்ணூறு சதவிகித சிந்தனையின் ஆற்றல் சாதாரண மனிதனால் வீணாக்கப்படுகிறது எனவே தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்துக் கொண்டே இருக்கிறான் சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ மனமோ ஒருபோதும் தவறு செய்வதில்லை என்னைப் புகழாதே இந்த உலகில் புகழுக்கும் இகழுக்கும் மதிப்புக் கிடையாது ஊஞ்சலை ஆட்டுவது போல ஒரு மனிதனை புகழின் புறமாகவும் இகழின் புறமாகவும் இங்கும் அங்கும் ஆட்டுகின்றார்கள் தமிழர் பற்றி விவேகானந்தர் சென்னை மாகாணத்திலிருந்தே தமிழர் இனத்தவர் இயூபிரட்டீசு நதி சென்று சுமேரியா நாகரிகத்தை உருவாக்கி அதன் பிறகு அசிரியா பாபிலோனியா போன்ற நாகரிகங்களை உருவாக்கினர் அவர்கள் கண்ட வானியல் போன்றவை தொன்மங்களாகி அத்தொன்மங்களே பைபிள் உருவாக மூலமானது மலபார் பகுதியில் இருந்த ஒரு தமிழ்ப் பிரிவினர் எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர் அடிக்குறிப்புகள் வெளி இணைப்புக்கள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு இந்தியர்கள் பகுப்பு இந்து குருக்கள் பகுப்பு இறப்புக்கள் பகுப்பு பிறப்புக்கள் |
மலைப்பிரசங்கம் மலைப்பிரசங்கத்தின் போது இயேசு கூறிய வார்த்தைகள் ஏழையின் உள்ளத்தோர் பேறுபெற்றோர் ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது துயருறுவோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர் கனிவுடையோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர் நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் நிறைவுபெறுவர் இரக்கமுடையோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர் தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர் அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர் நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர் ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து துன்புறுத்தி உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள் ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும் இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள் தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர் விலக்கப்பட்டோ ரை மணப்போரும் விபசாரம் செய்கின்றனர் உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள் ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக் கொள்ள விட்டு விடுங்கள் எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள் உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள் உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள் உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள் கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள் ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள் உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள் உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது தியாகம் உங்களில் தலைவனாக இருக்க விரும்புபவன் உங்களுக்கு ஊழியனாக இருக்கக் கடவன் இயேசுவைப் பற்றி பிறர் கிறிஸ்து மதநூல் எதுவும் எழுதவில்லை நன்மையான காரியங்களைச் செய்வதிலேயே கருத்தாயிருந்தார் ஹொரேஸ் மான் கிறிஸ்து தர்க்க சாஸ்திரம் எதுவும் தந்து போகவில்லை அவர் தந்திருப்பது சில எளிய உண்மைகளே ஹெடன் குறிப்புகள் பகுப்பு நபர்கள் பகுப்பு கிறிஸ்தவம் |
பாரதிதாசன் ஏப்ரல் ஏப்ரல் பாண்டிச்சேரியில் புதுச்சேரியில் பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர் இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம் தமிழாசிரியராக பணியாற்றிய இவர் சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார் பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர் மேற்கோள்கள் தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் தமிழுக்கு நிலவென்று பேர் இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நேர் தமிழுக்கு மணமென்று பேர் இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் தமிழுக்கு மதுவென்று பேர் இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர் தமிழ் எங்கள் இளமைக்கு பால் இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல் தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன் தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ என்னுடைய சிந்தனை நான் செய்யவேண்டியது என்னவென்பதுதான் என்னுடைய சிந்தனையே தவிரப் பிறர் என்ன எண்ணுவார்கள் என்பதல்ல பொதுவுடமை ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓர்நொடிக்குள் ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பாநீ குறிப்பு உலகப்பன் பாட்டு பாரதிதாசன் கவிதைகள் ஆம் பதிப்பு இராமச்சந்திரபுரம் செந்தமிழ் நிலையம் ப மனிதம் அறிவை விரிவுசெய் அகண்டமாக்கு விசாலப்பார்வையால் விழுங்கு மக்களை மேலது ப பாட்டு நன்றாக அமைந்த பாடல் தன் கருத்துப்படி மனிதனைத் திருப்புகிறது இதுதான் பாட்டினிடத்தில் உள்ள குறிப்பிடத்தக்க மேன்மை மேற்கோள் உடலைக் கசக்கி உதிர்த்த வியர்வையின் ஒவ்வொரு துளியிலும் கண்டேன் இவ்வுல குழைப்பவர்க் குரிய தென்பதையே மேலது ப மேற்கோள் புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகை வேரொடு சாய்ப்போம் மேலது ப மேற்கோள் பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டாம்என்கின்றீரோ மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ பெண்ணிணத்தை மேலது ப மேற்கோள் பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே மேலது ப மேற்கோள் ஊமை என்று பெண்ணை உரைக்குமட்டும் உள்ளடங்கும் ஆமை நிலைமைதான் ஆடவர்க்கும் உண்டு மேலது ப மேற்கோள் கடைக்கண் பார்வைதனை கன்னியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம் மேலது ப மேற்கோள் வாழ்கின்றார் முப்பத்து முக்கோடி மக்கள் என்றால் சூழ்கின்ற பேதமும் அந்தத் தொகையிருக்கும் மேலது ப மேற்கோள் உள்ள பகுத்தறிவுக் கொவ்வாத ஏடுகளால் எள்ளை அசைக்க இயலாது மேலது ப மேற்கோள் சாதலெனில் இருவருமே சாதல் வேண்டும் தவிர்வதெனில் இருவருமே தவிர்தல் வேண்டும் மேலது ப மேற்கோள் ஒருமனிதன் தேவைக்கே இந்தத் தேசம் உண்டென்றால் அத்தேசம் ஒழிதல் நன்றாம் மேலது ப மேற்கோள் சிரம்அறுத்தல் வேந்தனுக்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை நமக்கெல்லாம் உயிரின்வாதை மேலது ப மேற்கோள் எளிமையினால் ஒருதமிழன் படிப்பில்லை யென்றால் இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும் மேலது ப மேற்கோள் எங்கள்தமிழ் உயர்வென்று நாம்சொல்லிச் சொல்லித் தலைமுறைகள் பலகழித்தோம் குறைகளைந்தோ மில்லை மேலது ப மேற்கோள் வெள்ளம்போல் தமிழர்கூட்டம் வீரங்கொள் கூட்டம் அன்னார் உள்ளத்தால் ஒருவரே மற்றுஉடலினால் பலராய்க் காண்பார் மேலது ப சான்றடைவு பகுப்பு கவிஞர்கள் பகுப்பு இறை மறுப்பாளர் பகுப்பு பிறப்புக்கள் பகுப்பு இறப்புக்கள் |
இஸ்லாம் பற்றிய அறிஞர்களின் கூற்றுக்கள் ஏ எம் எல் ஸ்டோர்டட் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா சேர் சி பி இராமசாமி ஐயர் டிசம்பர் சரோஜினி நாயுடு சுவாமி விவேகானந்தர் மகாத்மா காந்தி வெளி இணைப்புக்கள் பகுப்பு இசுலாம் |
End of preview. Expand
in Data Studio
- Downloads last month
- 36