text
stringlengths
8
604k
வலது நான் என்னுடைய ஆன்மாவுக்குள் இறங்கி என்னுடைய கதையைத் தேடிக்கொண்டிருக்கிறேன் ஹருகி முராகாமி பிறப்பு ஜனவரி ஒரு ஜப்பானிய எழுத்தாளர் இவரது புனைவு மற்றும் அபுனைவு படைப்புகள் ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன வாழ்ந்துகொண்டிருக்கும் தலைசிறந்த நாவலாசிரியர்களுள் ஒருவர் என ஹருகி முராகாமியை தி கார்டியன் பத்திரிக்கை புகழ்ந்துள்ளது மேற்கோள்கள் துன்பம் தவிர்க்க முடியாதது வருத்தம் தவிர்க்கக் கூடியது நான் என்னுடைய ஆன்மாவுக்குள் இறங்கி என்னுடைய கதையைத் தேடிக்கொண்டிருக்கிறேன் மரபும் கலாச்சாரமும் கொண்டாடும் ஜப்பானிலிருந்து தப்புவதன் மூலமே ஜப்பானைப் பற்றி எழுதுகிறேன் என்னுடைய புத்தகங்கள் வாசகர்களுக்கு ஒருவிதமான சுதந்திர உணர்வைத்தருகின்றன நிஜ உலகிலிருந்து விடுபட்ட சுதந்திரத்தின் உணர்வை பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு எழுத்தாளர்கள் பகுப்பு பிறப்புக்கள்
உலக இராணுவம் எல்லாம் சேர்ந்தாலும் மதுவைப் போல அதிகமானவரைக் கொல்லமுடியாது பேகன் முட்டாளுடன் நட்பு கொள்வதும் குடித்தவரிடம் விவாதிப்பதும் வீணே கலீல் கிப்ரன் மது உபயோகம் அடியோடு ஒழிக்கபட்டால்தான் மக்கள் மனமகிழ்ச்சியோடு வாழலாம் மில்டன் அறிஞன் கூடமூடர்களுடன் சேர்ந்தால் மது பழகுகிறான் கமிங்வே எதுவும் உன் அனுமதியின்றி உன் உள்ளே புக முடியாது அயன் ரான்ட் மதுவை விட உழைப்பு என்பதே ஒயாத கவலைகளுக்கு நல்ல மருந்து எமர்சன் நல்லதை பழகுவது கடினம் தீயதை மறப்பது கடினம் மொகட்டா முதலில் சிலந்தி நூல் போல பின்னி இறுதியில் தூக்கு கயிறாகும் கோபர்ட் செல்வத்தை விட ஏன் வாழ்வை விட சிலர் தனது மதுவை நேசித்து அழிகிறார் ரஸ்ஸல் இது நாள் வரை நான் மதுவை அருந்தியதே இல்லை ஆனல் என்னைப் பொருத்தவரை பலருக்கு வாங்கிக் கொடுத்து இருக்கிறேன் மது அருந்துவதால் கெடுதி இல்லை அளவுக்கு மேல் போனால்தான் எதுவுமே கெடுதலே தவிர அளவோடு இருந்தால் எந்தவிதக் கெடுதலும் இல்லை பெரியார் கள் குடித்தவனுக்குத் தாய் என்றும் மனைவி என்றுமுள்ள வேற்றுமை தோன்றாது ஆதலால் அறிவைக் கெடுக்கும் கள்ளை அறவே விட்டு விடுங்கள் நாம் உட்கொள்ளும் ஆகாரங்கள் மூவகைப்படும் அவற்றுள் தாமச போஜனத்துடன் சேர்க்கப்பட்டுச் சோம்பல் அறியாமை முதலிய தீய ஒழுக்கத்தை உண்டு பண்ணும் மதுபானத்தை விலக்குங்கள் சுவாமி சகஜானந்தா கழனிவாசல் ஆதி திராவிட பாடசாலையின் முதலாண்டு விழாக் கூட்டத்தில் குறிப்புகள் வெளி இணைப்புக்கள்
பாலை சங்ககாலத் தமிழர் வாழ்வை பற்றி கூறும் ஒரு திரைப்படம் ஆகும் இது ல் வெளிவந்தது இதில் நடித்த சம்மு என்னும் நாயகியை தவிர்த்து மற்ற அனைவரும் இந்த திரைப்படத்திலேயே அறிமுகமாகினர் இயக்குனர் செந்தமிழன் திரைக்கதை செந்தமிழன் முன்கதைச் சுருக்கம் கிமு ஆம் நூற்றாண்டில் படம் தொடங்குகிறது முதலில் ஆயர் என்னும் சங்ககால தமிழ் மக்களில் ஒரு குழுவினர் ஆய்க்குடி என்னும் வளமான ஊரில் வாழ்கின்றனர் வேற்று மொழி பேசும் வந்தேறி கூட்டமொன்று அவ்வூரில் உள்ள ஆயர்களில் பலரைக்கொன்று மீண்டவர்களை ஊரை விட்டு வெளியேற்றுகின்றனர் தப்பித்த ஆயர்கள் தங்களுக்கென முல்லைக்கொடி என்ற ஊரை உருவாக்கி வாழ்கின்றனர் அந்த ஊரில் பாலை என்னும் நில வறட்சிக்காலம் வரப்போவதாக அந்த ஊரைச்சேர்ந்த முதியவரும் கணியருமான பாலை முதுவன் கூறுகிறார் அந்த நில வறட்சிக்காலம் வந்தால் வேட்டையாடுதல் ஆநிரை மேய்த்தல் உழவு செய்தல் மீன் பிடித்தல் என நால்வகை திணைத்தொழில்களையும் செய்யாமல் பாலை நில மக்கள் செய்யும் களவு வேலை செய்தே பிழைக்க வேண்டும் என்று அவ்வூர் மக்களையும் தலைவனையும் எச்சரிக்கிறார் முதுவன் வரட்சி வருமோ என்று பயந்து முல்லைக்கொடி மக்கள் சிலர் ஆயக்குடியில் உள்ள வந்தேறி மக்களின் வணிகச்சாத்தனை கொல்கின்றனர் இது முல்லைக்கொடி தலைவனுக்கு தெரிய வர ஆயக்குடி வந்தேறிகளின் வணிகச்சாத்தனை கொன்றவர்களை கண்டித்ததுடன் வணிகச்சாத்தனின் பிணத்தை ஆயக்குடி வந்தேறிகளின் தலைவனிடம் அனுப்பி மன்னிப்பு கோருகிறார் முல்லைக்கொடித் தலைவன் விருத்திரன் மன்னித்து விட்டதாகக் கூறி நாடகமாடி இணக்கம் பேச வேறொரு இடத்துக்கு வருமாறு அழைத்து வணிகச்சாத்தனின் மீது வேலெறிந்து கொன்றவனை வணிகச்சாத்தனின் இணையாள் மூலமாகவே கொல்கிறான் வந்தேறிகளின் தலைவன் அரிமாவன் அதோடு நில்லாது முல்லைக்கொடியில் முக்கியமானவனான வளன் என்பவனை கடத்திக் கொடுமையும் செய்கிறான் தப்பித்த மற்றவர்கள் முல்லைக்கொடிக்கு செல்கின்றனர் வலனை மீட்பதற்கு விருத்திரன் தம் மக்களிடம் ஆய்க்குடி வந்தேறிகள் மீது போர் தொடுக்குமாறு கூறுகிறார் ஆனால் அவர்களை எதிர்க்க சில சூதான வழிகளை கையாள வேண்டும் என்கிறார் முன்னாள் முல்லைக்கொடி தலைவரும் விருத்திரனின் தந்தையுமான பாலை முதுவன் வலனை அவர்கள் கடத்தியதற்கு விருத்திரனின் கவனக் குறைவு தான் காரணம் என்கிறார் பாலை முதுவன் இதை பொருக்காத விருத்திரனின் துணைவியார் பாலை முதுவனிடம் கேள்வியை கேட்க அப்போது பேசப்படும் வசனம் தான் பின் வருவது உரையாடல் விருத்திரனின் தலைவி புடுங்கி வாழாம உழைத்து வாழ வேண்டும் என என் தலைவர் சொல்றார் அதில் என்ன குத்தத்த கண்டீங்க பாலை முதுவன் என் பெயர் வெறும் முதுவன் அல்ல பாலை முதுவன் பாலை முதுவன் ஏனென்றால் நான் பலையப் பார்த்தவன் நானும் என் தலைவி ஆதிமந்தியும் கூடிச் சிரித்து உடன்போக்கு சென்று கற்பு மணம் பூண்டு பிள்ளையை பெற்ற போது இதே முல்லை நிலத்தில் பாலை வந்தது பாலை வந்தது வெப்பம் சுட்டெறிச்சுது புல் பூண்டுகள் கருகிப் போச்சு ஆநிரைகள் நாவிழந்து மடிஞ்சி போச்சு என்ற புள்ளைங்க பாலுக்கு ஏங்கி அழும் அவ தாய் முலவத்தி சுருண்டு கிடக்கும் என்ற புள்ள அவ தாய் முலய போயி சவச்சுப் பாப்பான் அங்க ஒன்னும் வராது ஒன்னும் வராது குடிக்க நீரில்ல மக்கள் மாண்டு விழுந்துச்சு ஒருநாள் என்ற பிள்ளை வீதிக்கு ஓடி வந்து மண்ணத் தின்னான் நாங்க ஓடிப் போயி பாக்கேயில வயிறு வீங்கி செத்துப் போயிட்டான் என்ற மூத்த புள்ள வயிறு வீங்கி செத்துப் போயிட்டான் மண் தின்னு செத்தான் என் மூத்த பிள்ள அது தான் மக்களே பாலை அதுதான் மக்களே பாலை நானும் துவண்டு போகல ஆநிரை மேய்த்த ஆயன் ஆரலைக் கள்வனானேன் பாலை மறவன் ஆனேன் ஒரு வண்டியும் விடல மறிச்சேன் பறிச்சேன் குடிகளுக்கு கொடுத்தேன் மறு மழை வர ஏழு ஆண்டுகள் ஆச்சு அதுவர பாலை நிலத்துல மறவனா வாழ்ந்தேன் பாலை நிலத்துல மறவனா வாழ்ந்தேன் விருத்திரனும் தான் குறிஞ்சி நிலத்தில் வேட்டையாடனும் முல்லை நிலத்தில் ஆநிரை மேய்க்கனும் மருத நிலத்தில் உழவு செய்யனும் நெய்தல் நிலத்தில் மீன் பிடிக்கனும் பாலை நிலத்தில் கொள்ளை தானய்யா அடிக்கோனும் முன்கதைச் சுருக்கம் மேற்கொடுத்த காட்சிக்கு பிறகு முல்லைக் கொடி மக்களுக்கு பாலை முதுவன் பயிற்சி அளித்து விருத்திரனின் கீழ் மூன்று வீரர்களை அனுப்பி வைக்கிறார் அவர்கள் ஆய்க்குடி வந்தேறிகளின் ஆநிரை அனைத்தையும் கவர்ந்து வந்தேறிகளிடம் நீங்கள் வலனை ஒப்படைத்தால் தான் நாங்கள் ஆநிரைகளை மீண்டும் தருவோம் என்று எச்சரித்து அடித்து விரட்டுகின்றனர் பின்னர் சங்ககால மக்களுக்கு ஊரிய கல்வெறியாட்டத்தை மற்ற மூன்று வீரர்களும் ஆடிக்கொண்டு இருக்கையில் முல்லைக் கொடி தலைவன் விருத்திரன் மட்டும் அமைதியாக எதையோ யோசித்த படி அமர்ந்திருக்கிறான் தன் வீரர்களுக்கு நமது தாய் நிலமான ஆய்க்குடியை எவ்வாறு இழந்தோம் எனவும் வந்தேறிகளை விட அக்காலத்தில் ஆய்க்குடியின் பூர்வ மக்களான முல்லைக்கொடி மக்கள் வீரம் நிறைந்தவர்களாக இருந்த போதும் எவ்வாறு ஆய்க்குடியை வந்தேறிகளிடம் இழந்தோம் என்பதையும் உணர்த்த நினைக்கிறார் விருத்திரன் அப்போது தலைவன் விருத்திரனுக்கும் வீரர்களுக்கும் நடக்கும் உரையாடல் தான் பின் வருவது உரையாடல் விருத்திரன் அரிமாவன் என்றால் என்ன வந்தேரிகளின் தலைவன் அரிமாவன் அவர்களின் கொடி சிங்கம் முதல் வீரன் சிங்க ஏறு போன்றவனோ ஏளனமாகச் சிரிக்கிறான் சரியோ விருத்திரன் அவன் சிங்கம் என்றால் நாம் யார் இரண்டாம் வீரன் நாமெல்லாம் புலி ஆய்க்குடியின் பூர்விக குடிகளும் தற்போதைய முல்லைக் கொடி வாசிகளுமான பூர்விக மக்களின் கொடி புலி விருத்திரன் புலி தான் சிங்கத்தை எதிர்க்கும் சரியோ வீரர்கள் ஆம் சரி விருத்திரன் முடிவில் வெற்றி யாருக்கு கிடைக்கும் சிங்கத்துக்கா புலிக்கா வீரர்கள் புலிக்கு விருத்திரன் சிங்கம் நம் நாட்டு விலங்கல்ல அது எங்கிருந்தோ வந்தது ஆனால் வந்த இடத்த புடிச்சி வைக்குற வெறி அதிகம் புலி இங்க புறந்தது தான் ஆனா அதுக்கு கவனக் குறைவு அதிகம் அதனால இருந்த இடத்த எல்லாத்தயும் விட்டிருச்சி ஆனால் சிங்கம் சுகமா வாழப் பழகுனது கூட்டமா தான் வாழும் நிறைய இறை வேனும் பசி பொறுக்காது புலி துன்பங்கள் தாங்கும் தனியா வேட்டையாடும் பசி பொறுக்கும் ஆகையால போரில் சிங்கம் முதலில் வெல்லும் இறுதிக்கும் இறுதியாக புலி தான் வெல்லும் வீரர்கள் தலைவன் கூற வருவதை உணர்ந்தது போல் சிரிக்கின்றனர் விருத்திரன் நீ புலி என்றால் தனிச்சும் போர் செய்யனும் எதிரி கூட்டமாத்தான் வருவான் நாம தனித்து நிக்கனும் ஆளு இருந்தாலும் அடிக்கனும் இல்லனாலும் அடிக்கனும் எதிரி பலத்தோட வந்தால் பதுங்கு எத்தன காலமானாலும் பதுங்கியே இரு அவன் என்னக்காவது சோர்வடையும் போது ஒரே அடியில வீழ்த்து நான் போர்ல காணாம போயிட்டாலோ செத்துப் போயிட்டாலோ தலைவன் எங்க இருக்கான் தலைவன் எங்க இருக்கான்னு என்னத் தேடாத எதிரி எங்க இருக்கான் எதிரி எங்க இருக்கான்னு அவனத் தேடு இதெல்லாம் செஞ்சா மட்டும் தான் நீ புலி பகுப்பு திரைப்படங்கள் பகுப்பு தமிழ்த் திரைப்படங்கள் பகுப்பு இந்தியத் திரைப்படங்கள்
கோ கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் கோபுர தரிசனம் பாப விநாசம் கோவில் இடிக்கத் துணிந்தவனா குளம் வெட்டப் போகிறான் கோவில் உண்டைச் சோறு குமட்டின தேவடியாள் குத்துமித் தவிட்டுக்குக் கூத்தாடுகிறாள் கோவிலை அடைத்துக் கொள்ளை இடுகிறவனா குருக்களுக்குத் தட்சினை கொடுப்பான் கோவிலைப் பார்த்துக் கும்பிடுகிறதா கொள்ளை பார்த்துக் கும்பிடுகிறதா கோவில் மணியம் என்கிற பேர் இருந்தால் போதும் கோவில் மணியம் போனால் நம்பியான் சுழலும் போச்சுதா கோவில் விளங்கக் குடி விளங்கும் பகுப்பு பழமொழிகள்
வில்லியம் வேலசு ஸ்காட்லாந்தின் விடுதலைக்காக இங்கிலாந்து அரசர் முதலாம் எட்வர்டை எதிர்த்துப் போரிட்ட மாவீரர் ஆவார் ஆம் ஆண்டு பிறந்த இவர் அன்று ஆங்கிலேயர்களால் மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார் மேற்கோள்கள் நான் எட்வர்டுக்கு இராசத்துரோகி அல்லன் ஏனெனில் நான் எட்வர்டின் குடிமகனே அல்லன் வெளியிணைப்புகள் சுருக்கமான வாழ்க்கை வரலாறு பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு பிறப்புக்கள் பகுப்பு இறப்புக்கள்
பெ சுந்தரம் பிள்ளை ஏப்ரல் ஏப்ரல் மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடக நூலைப் படைத்தவர் இதன் பொருட்டு மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை என்றே அழைக்கப்படுகிறார் மேற்கோள்கள் அழுதீர் தொழுதீர் விடுவீர் விடுவீர் வீணான விசனமே அன்பை அறியாது வாதிப்பவர் தன் தாயின் பாலையும் நஞ்சென சோதிப்பார் இம்மையில் தம்மை இயக்க இன்பம் தரும் ஒர் இலக்கு வேண்டும் இரவியைக் காண விளக்கின் உதவி எதற்கு உரிமைமேல் ஆண்மையில்லா சாந்தம் பெருமையில் பிணத்தில் பிறந்த சீதம் உள்ளமது கலங்காத ஊக்கமே ஒருவனது ஆக்கத்து அளவு எண்ணார் எண்ணித் துணிந்த பின் பண்ணார் தாமதம் ஒருவனது ஆசைப்பெருக்கால் வரும் துன்பம் கடலினும் பெரிதெ கருவியும் காலமும் அறிந்தால் அரியதென்னை கள்ள மனம் துள்ளும் தன்னுள்ளம் தனையே தின்னும் கொள்கையில் விலகாத நீதி உன்னிடமிருந்தால் வெற்றி நிச்சயமே சாத்தியம் அசாத்தியம் ஆய்ந்தறிந்து ஆற்றும் திறமுள்ள யாகமே யோகம் சிதைந்த போதும் உரம் உடையோர் பதையார் சிறிதும் தனக்கென வாழ்பவன் தனி மிருகம் அவன் மனம் மாறட்டும் தாய் முலைப்பாலிலும் நஞ்சுண்டு என ஆய்வாரே அற்பர் துறந்தாரும் முற்றும் துறந்தவரல்ல மறந்தார் சிற்சில் தொட்டே உணரும் தோல் பட்டே உணரும் முட்டாள் நம்புதல் என்பதுவே அன்பிள் வலிமை பற்பல அண்டம் வெடித்தடங்கிடும் தடுப்பவர் யார் விடுத்திடு வீன் விசனம் மூட்டிடில் தீயும் மூளூம் மும்மடங்காய் யாதே வரினும் மனவலி குன்றாதே மானமே பெரிது விதியெனப்பாவனை பண்ணிக்கடமையை விலக்குதல் மடமையே விரும்பி யாரும் உண்ணும் கரும்பு கசப்பது உன் வாயின் குற்றமே வெந்த புண் அதிலே வந்திடும் நூறடி புற இணைப்புகள் பகுப்பு நபர்கள்பகுப்பு தமிழறிஞர்கள் பகுப்பு தமிழ் எழுத்தாளர்கள்
கவிஞர் வாலி இயற்பெயர் டி எஸ் ரங்கராஜன் அக்டோபர் சூலை தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார் இவர் எழுதிய பாண்டவர் பூமி கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை ஆனந்த விகடன் இதழில் வாலி தான் பழகிய ஆளுமைகள் பற்றி எழுதிய நினைவு நாடாக்கள் என்ற தொடரும் பெயர் பெற்றது வாலி திரைப்படங்களுக்கு பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார் இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அவர் நடித்த திரைப்படங்களுள் சத்யா ஹேராம் பார்த்தாலே பரவசம் பொய்க்கால் குதிரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை மேலும் கையளவு மனசு என்ற தொலைக்காட்சித் தொடரிலும் வாலி நடித்துள்ளார் ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது மேற்கோள்கள் ஊக்குவிக்க ஆள் இருந்தால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான் இவர்கள் வளர்ப்பதற்கும் வழிப்பதற்கும் தமிழென்ன தாடியா மீசையா எங்கேனும் மகவால் வளர்ந்த தாயுண்டா மலரால் வளர்ந்த தருவுண்டா நகத்தால் வளர்ந்த விரலுண்டா நிழலால் வளர்ந்த உடலுண்டா என தமிழை தாம் வளர்ப்பதாகச் சிலர் தம்பட்டம் தட்டுவதைப்பற்றி கூறினார் நபர் குறித்த மேற்கோள்கள் அவர் எழுதும் அழகு அதில் விளையாடும் தமிழ்நடை தமிழ்த்திரை உள்ளவும் தமிழ்மொழி உள்ளளவும் தமிழ்மண் உள்ளளவும் அவர் பெயரைச் சொல்லிக்கொண்டே இருக்கும் வாலியைப் பற்றி சிவகுமார் கூறியது சான்றுகள் பகுப்பு நபர்கள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு பிறப்புக்கள் பகுப்பு இறப்புக்கள் பகுப்பு பாடலாசிரியர்கள் பகுப்பு கவிஞர்கள்
மாக்சிம் கார்க்கி மார்ச் சூன் உருசியா நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி தாய் போன்ற பெயர் பெற்ற படைப்புகளைத் தந்தவர் மேற்கோள்கள் பிச்சை இடுபவனைக் காட்டிலும் அருவருக்கத்தக்கவன் யாரும் இல்லை பிச்சை எடுப்பவனைக் காட்டிலும் பரிதாபத்துக்கு உரியவன் யாரும் இல்லை எனது பெரும்பாலான கவிதைகள் இறந்தே பிறந்தன கணிதம் பற்றிய விசயத்தில் நான் ஒரு அப்பாவி என்னை அதிலிருந்து விலக்கிவிடுங்கள் நான் கணிதத்தை விரும்பவில்லை காரணம் அவை வெறும் எண்களாகவே எனக்குத் தோன்றுகின்றன அவைகளில் கற்பனையும் அழகும் சேருவதில்லை அடிமைக்கும் அடிமைப்படுத்துபவனுக்கும் இடையே சமரசத்தை உண்டுபண்ணுவது என்பது எதிர்ப்பு உணர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்ற கேவலமான சூழ்ச்சியே ஆகும் அது புரட்சி அல்ல புரட்சி செய்யப் பிறந்ததே இலக்கியம் நான் இயற்கையின் வரப்பிரசாதம் பெற்றவன் என்று இங்கே பாராட்டினார்கள் அப்படி நான் எண்ணவில்லை உங்களில் ஒருவனாகவே நானும் பிறந்தேன் நாம் சொற்களிலும் வண்ணங்களிலும் இசையிலும் கலாசாரத்திலும் போற்றிப் புகழுகிறோமே அந்த இயற்கை என் கனவுகளில் இல்லை நாம் வியந்து போற்றும் அவ்வியற்கை தனது வெப்பத்தாலும் வெள்ளத்தாலும் பூகம்பத்தாலும் வியாதியாலும் நம்மை வதைக்கிறது இயற்கையில் குடி கொண்டிருக்கும் நமது எதிரிகள் அனைத்தையும் எண்ணிப் பாருங்கள் அப்படியானால் நான் இயற்கையின் அருள் பெற்றவன் என்று கூறமாட்டிர்கள் பார்லி பயிரில் கூட அழகிய புல்லுருவிகள் இருப்பதை மறந்து விடாதீர்கள் ல் திமிலிஸி நகரில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில் குறிப்புகள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு எழுத்தாளர்கள் பகுப்பு அரசியல்வாதிகள் பகுப்பு பிறப்புக்கள் பகுப்பு இறப்புக்கள்
பிலிப் ஜேம்ஸ் பெய்லி ஒரு ஆங்கிலக் கவிஞர் ஆவார் மேற்கோள்கள் நாம் வாழ்வது எண்ணங்களில் தாம் மூச்சு விடுவதால் அல்ல வெளி இணைப்புக்கள்
துணிச்சலுடன் செயல்பட எப்போது முடிவு எடுக்கிறோமோ அப்போதே வாழ்க்கையில் பாதி அபாயத்தைக் கடந்துவிட்டோம் என்பது உறுதி கான்பூஷியஸ் ஒரு சீனச் சிந்தனையாளரும் சமூக மெய்யியலாளரும் ஆவார் இவருடைய உபதேசங்களும் மெய்யியலும் சீனா கொரியா ஜப்பான் வியட்நாம் ஆகிய நாடுகளின் வாழ்வியல் சிந்தனைப் போக்குகளில் ஆழமான செல்வாக்குச் செலுத்தின இவருடைய மெய்யியல் சிந்தனைகள் தனிமனித அரச நன்னடத்தை சமூகத் தொடர்புகள் நீதி நேர்மை ஆகியவற்றில் சரியாக இருத்தல் ஆகியவற்றை வலியுறுத்தின சீனாவில் ஹான் மரபினரின் காலப் பகுதியில் கிமு கிபி இச் சிந்தனைகள் தாவோயிசம் முதலிய பிற கொள்கைகளிலும் அதிக முதன்மை பெற்றிருந்தன கான்பூசியசின் சிந்தனைகள் கான்பூசியசியம் என்னும் ஒரு மெய்யியல் முறைமையாக வளர்ச்சி பெற்றது மேற்கோள்கள் துணிச்சலுடன் செயல்பட எப்போது முடிவு எடுக்கிறோமோ அப்போதே வாழ்க்கையில் பாதி அபாயத்தைக் கடந்துவிட்டோம் என்பது உறுதி தன்னம்பிக்கை தெளிவு துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும் மேலான மனிதன் எப்போதும் அறம் பற்றியே சிந்திக்குறான் பாமர மனிதன் சுகம் பற்றியே எண்ணுகிறான் கீழ்த்தரமான சிந்தனைகளை எந்தச் சூழ்நிலையிலும் நினைக்க வேண்டாம் சிந்திக்காமல் படித்தால் அந்தப் படிப்பு வீண் படிக்காமல் சிந்தித்தால் அந்த வாழ்க்கையே வீண் உண்மையான அறிவு நமக்குத் தெரிந்தததை தெரியும் எனவும் தெரியாததை தெரியாது எனவும் ஏற்றுக்கொள்வது ஞானத்தைப் பெறுவதற்கு ஆழமாகவும் அகலமாகவும் படித்தால் போதாது படிக்கிற விஷயத்தில் முழுக் கவனத்துடன் இருக்கவேண்டும் நல்ல ஆட்சிக்கு போதுமான உணவு ராணுவம் மக்களின் நம்பிக்கை ஆகியவை தேவை அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது அறிந்தவர்கள் பேசுவதில்லை பேசுகிறவர்கள் அறிவதில்லை மக்களின் இயற்கையமைப்பு ஒன்று போலவே இருக்கிறது ஆனால் அவர்களுடைய பழக்கங்களே அவர்களை வெகுதூரம் பிரித்து வைத்து விடுகின்றன பயிற்சி இல்லாத மக்கள் கூட்டத்தை போருக்கு அழைத்துச் செல்வது அவர்களைத் தூர எறிந்துவிடுவதற்குச் சமானமே ஆகும் அகங்காரம் இல்லாமல் செல்வராய் வாழ்வதைவிட முணுமுணுக்காமல் ஏழையாய் வாழ்வது கடினம் நற்குணம் தனிமையில் வாழமுடியாது அதைச் சுற்றி அன்பர்கள் தோன்றிக் கூடிவிடுவது திண்ணம் ஓர் உயர்ந்த ஜனசமூகத்தை ஆளுவதில் சிறுமீனைக் சமைப்பதைப் போல் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் சிந்தனையில்லாக படிப்பு பயனற்றது படிப்பிலாத சிந்தனை அபாயகரமானது நீங்கள் எதை விரும்ப மறுக்கிறீர்களோ அதைப் பிறருக்குச் செய்ய நினைக்காதீர்கள் தெரிந்தது இது என்பதை அறிவதும் தெரியாதது இன்னது என்பதை அறிவதும் தான் அறிவாளியின் சிறந்த இயல்பாகும் அன்பு என்பது உதவி செய்வதுதான் அனைவரிடத்தும் எல்லோரும் அன்பு காட்ட வேண்டும் இதனால் நல்லவர்களின் நட்பை நாடுங்கள் அழகு எனும் பொருளின் திட்டங்களுக்கு அடங்காதனவற்றை அறவே கவனிக்காதீர்கள் அழகிற்கு அப்பாற்பட்ட செயல்கள் எதையும் செய்யாதீர்கள் எதைச் செய்தாலும் கவனத்தோடு செய்பவர்கள் அவர்களது வாழ்க்கையில் தவறுகள் செய்யவே மாட்டார்கள் ஒரு மனிதன் என்ன தவறு செய்கிறான் என்பதில் இருந்தே இவன் எப்படிப்பட்டவன் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம் அதுபோலவே நாம் தவறு செய்துவிட்டோமே என்று அச்சமோ வெட்கமோபடாதீர்கள் இவ்வாறு செய்வீர்களேயானால் நீங்கள் மீண்டும் தவறு செய்வீர்கள் உதவியே குறிக்கோளாகக் கருதுபவன் அற்பன் அடுத்தவரை ஆள்காட்டியே வாழ்பவன் அற்பன் குற்றேவல் செய்தே குறைகூறி வாழ்பவன் அற்பன் பிறர் தயவை நம்பியே கையேந்தி பிழைப்பவன் அற்பன் இவன் கெளரவம் உள்ள நேர்மையாளனின் பரம விரோதி உண்மையைக் கடைப்பிடிப்பவர்களுக்கு கவலை இல்லை அறிவுடையவனுக்குத் தயக்கம் இல்லை உள்ளத் துணிவுடையவனுக்கு நெஞ்சில் அச்சம் இருக்கயிடமில்லை அரசன் மிகப் பழைய காலத்தில் மக்களுக்கு அரசர்களே தெரியாது பிறகு நேசித்துப் புகழ்ந்தார்கள் பிறகு பயந்தார்கள் இறுதியில் அரசர்களை எதிர்த்தார்கள் நாட்டை ஆளும் மன்னன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்றால் அவன் தன் நல்ல ஒழுக்கத்தால் ஆட்சி செலுத்தும்போது துருவ நட்சத்திரம் போல் விளங்குகிறான் அந்த விண்மீன் சலனமற்று நடுநிலையிலிருக்க மற்ற நட்சத்திரங்கள் எல்லாம் அதனைச் சுற்றிச் சுற்றி வருகின்றன மன்னனாக இருப்பது கஷ்டம்தான் ஆனால் அமைச்சனாக இருப்பதும் கஷ்டந்தான் ஏன் இந்தக் கஷ்டம் உருவாகின்றது என்றால் அரசன் தானே நீதி ஒழுக்கத்தைப் பின்பற்றுபனாக இருக்க வேண்டும் அப்போதுதான் அவன் கீழ் வாழும் மக்களும் அவன் ஏவுதல் ஏதும் இல்லாமலேயே அவனுடைய கட்டளைக்கு அடங்கி நடப்பார்கள் நேர்மையானவர்களை அரசன் மேனிலைக்குக் கொண்டுவர வேண்டும் மனக்குற்றம் உள்ளவர்களை ஆட்சியை விட்டு அல்லது அவர்களது பதவியை விட்டு அகற்றிவிட வேண்டும் இப்படி ஓர் அரசன் நடவடிக்கை எடுப்பானானால் மக்கள் அந்த ஆட்சிக்கு அன்புடன் பணிந்து நடப்பார்கள் அதே போல அடுத்துள்ளவர்களை மகிழ்விப்பார்கள் தூரத்தில் உள்ளவர்களை ஈர்த்துக் கவர்வதும் வசீகரிப்பதும் நல்ல ஆட்சி நீடிப்பதற்குரிய சிறந்த இலக்கணமாகும் மக்களின் நேர்மையான ஒழுக்க வளர்ச்சிகளுக்கு அரசு எந்தக் காலத்திலும் அலட்சியமாக அக்கரையற்ற விதமாக இருக்கக் கூடாது ஒருவேளை அந்த மன்னன் அலட்சியமாகவும் அக்கரையற்றும் இருந்துவிட்டு சட்டங்கள் மூலமாகவும் தண்டனைகளைத் தருவதன் வாயிலாகவும் மக்களை அடக்க முயன்றால் அவர்கள் அவற்றை மீறுவதில்தான் அதிக அக்கரை காட்டுவார்கள் தண்டனைகளையும் அலட்சியம் செய்வார்கள் அறிவின்மை அறிவின்மை உள்ளத்தின் இரவு ஆனால் அந்த இரவில் மதியுமில்லை தாரகையுமில்லை அறிவுடைமை அறிவைப் பெற்றிருந்தால் அதை உபயோகிக்க வேண்டும் உனது அறியாமையை ஒப்புக்கொள்வது போல அறிவை அடைந்திருந்தால் போதாது இழிந்த மனப்பான்மை மேலான மனிதர்கள் சில சமயங்களில் நேர்மையற்றவராக இருக்கலாம் ஆனால் இழிவான மனப்பான்மையுள்ளவன் அதே சமயத்தில் நேர்மையானவனாகவும் இருப்பதில்லை சிந்தனை சிந்தனை இல்லாத படிப்பு பயனில்லாத உழைப்பு படிப்பில்லாத சிந்தனை ஆபத்தானது நேர்மை நேர்மையும் சத்தியமும் ஒவ்வொரு பண்புக்கும் அடிப்படையாகும் படித்தல் கற்றவற்றையும் கற்க வேண்டியவற்றையும் கருத்தில் வைப்பவனே கல்வியில் விருப்பமுடையவன் கோபம் கோபும் எழும்பொழுது அதன் விளைவுகளை எண்ணிப்பார் தவறுகள் கீழே விழாமல் இருத்தல் நமக்குப் பெரிய பெருமையன்று ஆனால் விழுந்த பொழுதெல்லாம் எழுந்திருத்தலே பெருமை பழமை எதிர்காலத்தை அறிந்துகொள்ள வேண்டுமானால் பழமையை ஆராய்ந்து பார் மனிதர் உன்னதமான மனிதனுடைய வாழ்க்கைமுறை மூன்று பிரிவாயிருக்கும் அவன் ஒழுக்கத்தோடு இருப்பதால் கவலையற்றிருப்பான் அவன் அறிவாளியாயிருப்பதால் அவனுக்குக் குழப்பங்கள் இருக்கமாட்டா அவன் தைரியமாயிருப்பதால் அச்சம் அண்டாது மேலான மனிதன் தேடுவது அவனுள்ளேயே இருக்கின்றது சாதாரண மனிதன் தேடுவது மற்றவர்களிடம் இருக்கிறது முன்யோசனை தூத்திலுள்ளதைப்பற்றிச் சிந்தனை செய்யாத மனிதன் தன் அருகிலேயே சோகம் தங்கியிருப்பதைக் கண்டுகொள்வான் வெளி இணைப்புக்கள் குறிப்புகள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு சீன மெய்யியலாளர்கள் பகுப்பு சீனர்
பகத் சிங் இந்திய விடுதலைப் போராட்டத்தின் வீரஞ்செறிந்த பக்கங்களில் பகத் சிங்கின் பெயர் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டது ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடியாவர் இந்தியாவில் மார்க்சியத்தைப் பேசிய முதல்வருகளில் ஒருவர் இளம் வயதிலேயே ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார் மேற்கோள்கள் நாளை காலை மெழுகுவர்த்தி ஒளி மங்குவது போல் நானும் மறைந்து விடுவேன் ஆனால் நம்முடைய நம்பிக்கைகள் குறிக்கோள்கள் இந்த உலகத்தைப் பிரகாசிக்கச் செய்யும் தனி நபர்களைக் கொல்வது எளிது ஆனால் உங்களால் கருத்துகளைக் கொல்ல முடியாது கேளாத செவிகளைக் கேட்கச் செய்வதற்கு உரத்த குரல் தேவைப்படுகிறது அனைவருக்கும் விடுதலையைக் கொண்டுவரக் கூடியதும் மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமையை சாத்தியமற்றதாக்கக் கூடியதுமான புரட்சியின் பலிபீடத்தில் தனிநபர்களின் உயிர்ப்பலிகள் தவிர்க்க இயலாதவை சரியான கல்வியும் புரிந்து கொள்ளும் திறனும் உள்ளவரால் கூட புரிந்து கொள்ள முடியாத சம்ஸ்கிருத ஸ்லோகங்களும் முதல் தரமான அராபிய இலக்கியங்களின் வரிகளும் எளிய மொழியில் சொல்லப்படும் எளிய வாசகங்கள் தரும் உற்சாகத்தைத் தருவதில்லை புரட்சியாளர்கள் இறக்க வேண்டும் புரட்சியாளர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கைகள் தியாகத்தின் மூலமாகத்தான் வலுவடையும் நீதிமன்றத்தின் மேல் முறையீடுகள் மூலம் அல்ல எனது வாழ்நாளில் நான் கடவுளை வணங்கியதில்லை சொல்லப்போனால் ஏழைகளின் துயரங்களுக்குக் காரணமாக இருக்கிறார் என்று கடவுளைப் பல முறை ஏசியிருக்கிறேன் இப்போது அவரிடம் மன்னிப்புக் கேட்டால் தனது முடிவு நெருங்கிவிட்டதால் மன்னிப்புக் கேட்கிறான் இந்தக் கோழை என்று உங்கள் கடவுள் சொல்வார் அம்மா எனது நாடு ஒரு நாள் சுதந்திரமடைந்துவிடும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை ஆனால் வெள்ளைக்காரத் துரைமார்கள் விட்டுச்சென்ற நாற்காலிகளில் மாநிறத் தோல் துரைமார்கள் வந்து உட்கார்ந்துவிடுவார்கள் என்று பயமாக இருக்கிறது சாத்வீகப் போராட்டத்தின் மூலம் இந்த பிரிட்டிஷ் ஆட்சியை அகற்றிவிடலாம் என்ற உடோப்பிய முறை இத்துடன் முடிவுக்கு வருகிறது இந்த முறையால் எந்தவிதப் பலனும் இல்லை என்று வளர்ந்துவரும் இளைய சமுதாயம் சந்தேகமே இல்லாமல் நன்கு உணர்ந்திருக்கிறது காந்தியைப் பின்பற்றுவதைக் கைவிட்டுவிட்டு லெனின் காட்டும் வன்முறை சார்ந்த புரட்சிகரப் பாதையைத் தேர்ந்தெடுங்கள் நாடாளுமன்றத்தின்மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதற்காக கைதுக்குப் பிறகு விடுத்த அறிக்கையில் சான்றுகள் புற இணைப்புகள் பகுப்பு நபர்கள் பகுப்பு இறை மறுப்பாளர் பகுப்பு பொதுவுடைமைவாதிகள்
சுப்பிரமணிய பாரதியார் சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி திசம்பர் செப்டம்பர் இவர் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார் பாரதி ஒரு கவிஞர் எழுத்தாளர் பத்திரிக்கையாசிரியர் விடுதலை வீரர் சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர் சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர் மேற்கோள்கள் யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர் கவலையும் பயமும் எனக்கு பகைவர் நான் இப்பகைவரை வென்று தீர்த்தேன் அதனால் மரணத்தை வென்றேன் நான் அமரன் ஆழ்ந்த நினைப்பு அசையாத நினைப்பு வலிய நினைப்பு மாறாத நினைப்பு விரைவில் உலகம் அறியத்தக்க வெளியுண்மையாக மாறிவிடும் செய்வதைத் துணிந்து செய் ஜாதி மதங்களைப் பாரோம் உயர் ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின் வேதிய ராயினும் ஒன்றே அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே கவிதை எழுதுபவன் கவியன்று கவிதையே வாழ்க்கையாக உடையோன் வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன் அவனே கவி நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்துவிட்டால் நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல் சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே அதைத் தொழுது படித்தடடி பாப்பா இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்தல் வேண்டும் வெளி இணைப்புக்கள் பகுப்பு இந்தியர்கள் பகுப்பு தமிழர்கள்
வலது உணவு பற்றாக்குறை ஏற்பட்டால் அது இயற்கையின் உற்பத்தி சக்தி பற்றாக்குறையினால் ஏற்பட்டதாக இருக்காது மனிதனின் அபரிமிதமான ஆசையின் விளைவாகவே அது ஏற்பட்டிருக்கும் மசானபு புகோகா ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இயற்கை விஞ்ஞானியும் சுற்றுச்சூழல் வாதியும் ஆவார் இயற்கை வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பல கட்டுரைகள் புத்தகங்கள் சொற்பொழிவுகளைப் படைத்திருக்கிறார் ஒற்றை வைக்கோல் புரட்சி என்ற புத்தகம் மிகப் பிரபலாமனது பூவுலகின் நண்பர்கள் இந்தப் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள் மேற்கோள்கள் மனித அறிவாற்றல் என்பது எவ்வளவு சிறியது என்பதைக் காட்டும் பணியைத்தான் அறிவியல் செய்துள்ளது அறிவியல் புரிந்து வைத்துள்ள இயற்கை என்பது முழுமையாக நாசம் செய்யப்பட்ட இயற்கை அது எலும்புக்கூட்டுடன் உலாவும் பிசாசு அதற்கு ஆத்மா கிடையாது வேளாண்மையின் இறுதி லட்சியம் பயிர்களை வளர்த்து அதிக உற்பத்தி செய்வதல்ல மனிதர்களை முழுமைப் பெறச் செய்வதே இயற்கை வேளாண்மை மென்மையானது எளிமையானது அது வேளாண்மையின் ஆதாரத்தை நோக்கி மீண்டும் செல்வதைக் குறிப்பது ஆதாரத்தை விட்டு ஒரு அடி விலகி நடந்தாலும் அது மயானத்திற்கான நேர்வழிதான் இயற்கை ஒரு போதும் மாறுவதில்லை அதை நோக்கும் நமது பார்வைதான் காலத்திற்குக் காலம் மாறுபடுகிறது காலம் எவ்வளவுதான் மாறினாலும் வேளாண்மையின் பாதுகாவலனாக இயற்கை வேளாண்மை விளங்கும் ஒரு விஞ்ஞானி இரவு பகலாகக் கண்களைக் கெடுத்துக் கொண்டு புத்தகங்களில் மூழ்கியிருப்பான் கடைசியில் கிட்டப்பார்வையும் வந்துவிடும் இதுவரை அவன் என்ன ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான் என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் கடைசியில் பார்த்தால் கிட்டப்பார்வைக்கு மூக்குக் கண்ணாடி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிதான் இயற்கை உணவை அதிக விலைக்கு ஒரு வியாபாரி விற்றால் அவன் கொள்ளை லாபம் அடிக்கிறான் என்று பொருள் மேலும் இயற்கை உணவு அதிக விலையுடையதாக இருந்தால் அவை ஆடம்பர பொருட்களாகி வசதி படைத்தவர்களால் மட்டுமே வாங்கக் கூடியதாக மாறிவிடும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டால் அது இயற்கையின் உற்பத்தி சக்தி பற்றாக்குறையினால் ஏற்பட்டதாக இருக்காது மனிதனின் அபரிமிதமான ஆசையின் விளைவாகவே அது ஏற்பட்டிருக்கும் பகுப்பு நபர்கள் பகுப்பு சூழலியல்
அலெக்சான்டர் போப் பதிணெட்டாம் நூற்றாண்டின் தலை சிறந்த ஆங்கிலக் கவிஞர்களுள் ஒருவர் ஆவார் மேற்கோள்கள் இனிமைகள் கண்ணைக் கவரும் திறமையோ ஆன்மாவை ஈர்க்கும் அன்பு வாழ்க்கையின் வறுமையிலே துன்பப்படுவோர்களுக்காக இரங்குக இன்புறுவோர் துன்புறும் மக்களுக்குக் காட்டும் இரக்கம் மட்டுமல்ல அது கடன் கடமை மனிதநேயம் பிறர் நலம் கண்டு மகிழமாட்டார்கள் யார் பிறர் துன்பங்களைக் கண்டு மனம் வருந்தி இரங்கமாட்டார்கள் யார் அவர்கள்தான் அன்பிலார் அவர்கள் எல்லாரும் இறந்து படுக அறிவு தீயவன் ஒருநாளும் மெய்யறிவு பெற்றதில்லை ஆம் ஒருநாளும் மெய்யறிவு பெற்றதில்லை இது முக்காலும் உண்மை அறிவீனம் தேவர்கள் செல்ல அஞ்சும் இடத்திற்கு மூடர்கள் பாய்ந்து விடுவர் ஆணவம் கர்வம் அதுதான் முட்டாள்களை விட்டு ஒரு பொழுதும் நீங்காத துர்க்குணம் உண்மை கடவுள் சிருஷ்டிகளின் தலைசிறந்தது சத்திய வந்தனே கொள்கை வெறி சமயவெறி கொண்டார் கொள்கை முறைகள் குறித்துச் சண்டையிடட்டும் வாழ்வைச் சரியாக நடத்தினால் கொள்கை தவறாய்விட முடியாது சமயம் அறிவில்லாத சமயவாதிகள் சமயக் கொள்கைகளுக்காகச் சண்டையிடட்டும் ஆனால் தர்ம வழியில் நடப்பவன் ஒருநாளும் தவறியவனாகான் திருப்தி எதிர் பார்ப்பவன் ஏமாந்து போகலாம் அதனால் எதிர் பாராதவனே பாக்கியசாலி முகத்துதி தகுதியில்லாப் புகழுரை மாறுவேஷம் பூண்ட பழியேயாகும் அடிமைமுறை மனிதனை எது அடிமையாக்குகின்றதோ அது அவன் தகுதியில் பாதியை அழித்துவிடுகின்றது அழகு செல்வச் செழிப்புடனுள்ள ஒரு மனிதனை நேசிப்பதிலுள்ள பெருமையே அழகுள்ள ஒரு பெண்ணிடம் அன்பு கொள்வதிலும் இருக்கின்றது இரண்டும் மாறக்கூடியவை உள்ளுணர்வு இயற்கை அறிவுக்கு மேலாகப் பகுத்தறிவை எவ்வளவு வேண்டுமானாலும் உயர்த்திக்கொள்ளுங்கள் முதலாவதில் கடவுள் வழிகாட்டுகிறார் இரண்டாவதில் மனிதன் வழி காட்டுகிறான் கட்சி கட்சி என்பது சிலருடைய நன்மைக்காகப் பலருக்குப் பைத்தியம் பிடிப்பதாகும் கருத்துடன் கற்றல் எந்த ஆராய்ச்சியிலும் நாம் சிறிது ஊன்றிக் கருத்தைச் செலுத்தினால் அது நமக்கு இன்பமளிக்காமல் இராது பொய்மை ஒரு பொய்யைச் சொல்பவன் எவ்வளவு பெரிய வேலையை மேற்கொள்கிறான் என்பதை உணர்வதில்லை அந்தப் பொய்யை நிலை நாட்டுவதற்கு அவன் மேலும் இருபது பொய்களை உண்டாக்க வேண்டும் குறிப்புகள் வெளி இணைப்புக்கள் பகுப்பு நபர்கள்பகுப்பு கவிஞர்கள்
வலது நமது குறிக்கோள் என்பது காலக்கெடு கொண்ட கனவு தான் நெப்போலியன் ஹில் அமெரிக்காவைச் சேர்ந்த ஓர் ஆங்கில எழுத்தாளர் ஆவார் மேற்கோள்கள் மனதில் ஒன்றைத் திட்டமிட்டு அது நடக்கும் கிடைக்கும் என்று நம்பினால் மனித மனம் எப்பாடுபட்டாவது அதை பெற்றுத் தந்துவிடும் காரியங்களையும் செய்து முடித்துவிடும் நல்ல காரியங்களைச் செய்ய ஒரு போதும் பயப்படாதீர்கள் தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள் நமது குறிக்கோள் என்பது காலக்கெடு கொண்ட கனவு தான் சாதனைகளுக்கான முதல் படி தீவிரமான ஆழ்ந்த ஆசைதான் சான்றுகள் பகுப்பு நபர்கள் பகுப்பு எழுத்தாளர்கள்
உலகத்தின் ஞானம் எல்லாம் இரண்டே வாக்கியங்களில் அடங்குகின்றன பொறுத்திருங்கள் நம்பிக்கையுடனிருங்கள்
கண்ணதாசன் ஜூன் அக்டோபர் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள் நவீனங்கள் கட்டுரைகள் பல எழுதியவர் சண்டமாருதம் திருமகள் திரை ஒலி மேதாவி தென்றல் தென்றல்திரை முல்லை கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர் தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர் சாகித்ய அகாதமி விருது பெற்றவர் மேற்கோள்கள் கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நிஜமாகும் ஒரு தினமே நபர் குறித்த மேற்கோள்கள் சினிமாவுக்கு பாடல் எழுதுவதாக இருந்தாலும் சரி பத்திரிக்கைக்கு எழுதுவதாக இருந்தாலும் சரி கவிஞர் சொல்லச் சொல்ல மற்றவர்கள் எழுதுவது வழக்கம் கவிஞர் கண்ணதாசனைப்பற்றி பஞ்சு அருணாசலம் கூறியது வெளியிணைப்புக்கள் சான்றுகள் பகுப்பு நபர்கள்பகுப்பு தமிழர்கள்பகுப்பு கவிஞர்கள் பகுப்பு பிறப்புக்கள் பகுப்பு இறப்புக்கள் பகுப்பு பாடலாசிரியர்கள்
வலது அச்சம் கொள் எனது பசியைக் கண்டு அச்சம் கொள் எனது சினத்தைக் கண்டு மஹ்மூத் தார்விஷ் ஒரு பாலஸ்தீனக் கவிஞர் ஆவார் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் ஆராய்ச்சி நிலைய இயக்குநராக பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார் உலக அளவில் இவரது கவிதைகள் பெரும் புகழ் பெற்றவை தமிழில் தார்விஷ் கவிதைகள் இவருடைய பல கவிதைகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றன பாலஸ்தீனக் கவிதைகள் மண்ணும் சொல்லும் ஆகிய தமிழ்ப் புத்தகங்களில் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன உயிர்மை பதிப்பகத்தினுடைய நான் மடிந்து போவதைக் காணவே அவர்கள் விரும்புவர் என்ற நூலில் தர்வீஷினுடைய கவிதைகள் மட்டுமே மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன மேற்கோள்கள் எதிர்ப்பைப் பற்றிய கவிதை எதிர்ப்பைவிட ஒரு படி மேலோங்கியதாக இருக்க வேண்டும் அச்சம் கொள் எனது பசியைக் கண்டு அச்சம் கொள் எனது சினத்தைக் கண்டு கோபத்தில் சுழலும் இந்த மண்ணில் பொறுமையைக் கடைபிடிப்பவன் நான் நான் பசியால் துடிக்கும் போது எனது மண்ணை அபகரித்தவர்களின் சதையை விழுங்குபவன் நான் மட்டுப்படுத்தவே முடியாத பாடலின் லயமொன்று எம்மிடம் உண்டு அது எமது நம்பிக்கை விடுதலையிலும் சுதந்திரத்திலுமான நம்பிக்கை நாங்கள் வீரர்களாகவோ பலியாட்களாகவே இல்லாத எளிய வாழ்வு குறித்த நம்பிக்கை எமது குழந்தைகள் பாதுகாப்பாகப் பள்ளிக்குச் சென்றுவருவது குறித்த நம்பிக்கை மருத்துவமனையில் கர்ப்பிணப் பெண் தன் உயிருள்ள குழந்தையைப் பிரசிவிப்பாள் ராணுவச் சோதனைச் சாவடி முன்னால் ஒரு இறந்த குழந்தையைப் பிரசவிக்க மாட்டாள் என்ற நம்பிக்கை சிவப்பு வண்ணத்தின் அழகை எமது கவிகள் சிந்திய குருதியிலல்ல ரோஜாவில் காண்பார்கள் எனும் நம்பிக்கை அன்பும் சமாதானமும் என அர்த்தம் தரும் ஆதாரமான பெயரை இந்த நிலம் எடுத்துக்கொள்ளும் எனும் நம்பிக்கை சான்று பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு கவிஞர்கள் பகுப்பு பிறப்புக்கள் பகுப்பு இறப்புக்கள்
வலது நீங்கள் உண்மையையே பேசும் போது எதையும் நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை சாமுவேல் லேங்ஹோர்ன் கிளமென்ஸ் மார்க் ட்வைன் எனும் புனைபெயரால் நன்கு அறியப்படுபவர் இவர் அமெரிக்க நகைச்சுவையாளரும் விரிவுரையாளரும் எழுத்தாளரும் ஆவார் இவர் எழுதிய டாம் சாயரின் சாகசங்கள் ஹக்கிள்பெரி ஃபின்னின் சாகசங்கள் என்பன குறிப்பிடத்தக்கவை இவர் அமெரிக்க இலக்கியத்தின் தந்தை என வில்லியம் ஃபௌக்னரால் கூறப்பட்டார் மேற்கோள்கள் உங்கள் நாட்டை எப்போதும் நேசியுங்கள் ஆனால் உங்கள் அரசை தகுதியோடு இருக்கும் வரை மட்டும் மதியுங்கள் நீங்கள் உண்மையையே பேசும் போது எதையும் நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை பெரும்பாண்மையினரின் பக்கம் நீங்கள் எப்போதெல்லாம் இருப்பதாய் உணர்கிறீர்களோ அதுதான் உங்களைச் சீர்திருத்தம் செய்துகொள்ள உகந்த நேரம் முதலில் உங்கள் செய்திகளைச் சேகரியுங்கள் பிறகு அவைகளை உங்கள் யுக்தம் போலத் திரிக்கலாம் சான்றுகள் வெளி இணைப்புக்கள் பகுப்பு நபர்கள் பகுப்பு எழுத்தாளர்கள் பகுப்பு இலக்கியவாதி
அறிமுகம் வலது பாலியல் நூல்களை மடோனா விற்றிருப்பதைக் காட்டிலும் இயற்பியல் நூல்களை நான் அதிகமாக விற்றுள்ளேன் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் ஒரு கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் வயதிலேயே முதலாவது திருமணத்துக்குச் சற்றுமுன்னர் அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் என்னும் நரம்பு நோயால் தாக்குண்டார் இக் குணப்படுத்த முடியாத நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு கை கால் முதலிய உடலியக்கங்களும் பாதிக்கப்பட்டு பேச்சையும் இழந்தநிலையில் கணினியூடாகப் பேச்சுத் தொகுப்பி மூலம் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் கட்டாயத்துக்குள்ளான இவர் இயற்பியல் ஆராய்ச்சிகளிலும் எழுத்துத்துறையிலும் பொதுவாழ்விலும் மிகவும் ஈடுபாடு உள்ளவராகவேயுள்ளார் காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் பிரம்மாண்ட வடிவமைப்பு மற்றும் கருங்குழிகள் மற்றும் குழந்தைப் பிரபஞ்சங்களும் வேறு கட்டுரைகளும் மேலும் சில புத்தகங்களையும் எழுதியுள்ளார் மேற்கோள்கள் ஒரு மிகச் சாதாரண நட்சத்திரத்தின் மிகச் சிறிய கிரகத்தில் வாழும் சற்றே முன்னேறிய குரங்கினம்தான் நாம் பாலியல் நூல்களை மடோனா விற்றிருப்பதைக் காட்டிலும் இயற்பியல் நூல்களை நான் அதிகமாக விற்றுள்ளேன் தாலமியின் புவிமையக் கோட்பாட்டில் காணப்பட்ட பெரும் நன்மை யாதென்றால் அது நிலையான விண்மீன்களின் கோளத்திற்குப் புறத்தே சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் ஏராளமாய் இடம் விட்டு வைத்திருந்தது அதனால்தான் கிறித்துவ திருச்சபை ஏற்றுக் கொண்டது கடவுள் அண்டத்தைப் படைப்பதற்கு முன் என்ன செய்தார் என்ற கேள்விக்கு இத்தகைய வினாக்களைக் கேட்பவர்களுக்காக அவர் நரகத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தார் பரிசோதனைகளின் முடிவுகள் ஒரு கோட்பாட்டுக்கு எத்தனை முறை ஒத்துப் போனாலும் சரி அடுத்த முறை அம்முடிவு அக்கோட்பாட்டுடன் முரண்படாது என்பதற்கு உறுதியேதுமில்லை கடவுளின் மனதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் பாதுகாப்பு உணர்வு என்பது நாம் என்ன வைத்திருக்கவில்லை என்பதை விட மற்றவர்களிடம் என்ன இருக்கிறது என்பதை வைத்து இப்போது மதிப்பிடப்படுகிறது சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்பு விஞ்ஞானிகள் பகுப்பு நபர்கள் பகுப்பு அறிவியல் பகுப்பு இயற்பியலாளர்கள்
அறிமுகம் பிரடெரிக் எங்கெல்ஸ் ஒரு ஜெர்மானியர் மார்க்சிய மூலவர்களுள் ஒருவர் காரல் மார்க்சின் உயிர்த் தோழன் மார்க்சுடன் இனைந்து கம்யூனிஸ்ட்டுக் கட்சி அறிக்கை தயாரித்தவர் குடும்பம் தனிச்சொத்து அரசுடமை ஆகியவற்றின் தோற்றம் மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம் கம்யூனிசக் கோட்பாடுகள் போன்ற பல புத்தகங்களை எழுதியவர் காரல் மார்க்சின் மூலதனம் நூலை அவரின் மறைவுக்குப் பிறகு வெளிவரச் செய்தவர் மேற்கோள்கள் எங்கெல்லாம் புரட்சிகரக் குமுறல் இருக்கிறதோ அங்கெல்லாம் பின்னணியில் சமுதாயத் தேவை இருந்தே தீரும் சகல செல்வத்தினுடைய தோற்றுவாயும் உழைப்பே உழைப்புதான் மனிதனையே உருவாக்கியது மனிதனைத் தவிர மற்ற விலங்குகள் இயற்கையைத் தனது சுற்றுச் சார்புக்காக மட்டுமே பயன்படுத்துகின்றன ஆனால் மனிதன் மட்டுமே தனது தேவைக்கு ஏற்றவாறு இயற்கையை மாற்றி அமைக்க முயற்சிக்கிறான் மணிதன் இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்தி அதை மாற்றி அமைக்க முயற்சிக்கும் போது மனிதனை இயற்கை திருப்பி அடிக்கிறது கம்யூனிசம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் முன்னேற்றத்திற்கான சூழ்நிலைகள் பற்றிய அறிவாகும் தத்துவார்த்த சிந்தனைத் திறமைகளை வளர்த்துக் கொள்ள முந்தைய தத்துவ இயலைப் படித்து ஆராய்வதைத் தவிர வேறு விதமான வழிகள் இல்லை உயிரினங்களின் வளர்ச்சி விதியையை டார்வின் கண்டறிந்ததைப் போல மனித சமூக வரலாற்றின் வளர்ச்சி விதியை மார்க்ஸ் கண்டறிந்தார் இயங்கியல் இயக்கம் இல்லாத பொருள் எங்குமே ஒருபோதும் இருப்பதில்லை அப்படி இருக்கவும் முடியாது ஒரு பொருள் ஓய்வு நிலையில் உள்ளது சமநிலையில் உள்ளது என்பதெல்லாம் ஒப்பீட்டு அளவில்தான் மனித சிந்தனை வளர்ச்சியின் வரலாறு முழுவதிலும் ஊடுருவிச்செல்வதும் படிப்படியாக மனிதனின் மனத்தில் உணர்வைத் தோற்றுவிப்பதும் இயங்கியல் விதிகள்தாம் முரண் முரண்பாடு எப்போது முடிவுக்கு வருகிறதோ அப்போது உயிர்ப்பு முடிந்து மறைவு நிகழ்கிறது சான்றுகள் பிற இணைப்புகள் பகுப்பு நபர்கள் பகுப்பு இறை மறுப்பாளர்
கி வீரமணி திராவிடர் கழகத்தின் தலைவர் திராவிடர் கழகத்தின் இயக்க இதழான விடுதலையின் ஆண்டுகால ஆசிரியர் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு கல்வி வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டை தமிழகத்தில் கொண்டு வர சி என்ற தனிச்சட்டத்தை உருவாக்கி கொடுத்தவர் மேற்கோள்கள் நம்மால் முடியாதது யாராலும் முடியாது யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் மனிதர்கள் இயந்திரங்கள் அல்ல அறிவின் ஊற்றுக்கள் உணர்ச்சியின் உறைவிடங்கள் உங்கள் மனத்துள் எதையும் பற்பல கோணங்களில் பார்க்கும் ஆழ்ந்த அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் அறிவுரைகளை நாம் பிறருக்கு வழங்குமுன் கொஞ்சம் நமக்குள்ளே சில கேள்விகளைக் கேட்டுக் கொள்வது கட்டாயத் தேவை மனிதர்கள் இயந்திரங்கள் அல்ல அறிவின் ஊற்றுக்கள் உணர்ச்சியின் உறைவிடங்கள் உங்கள் மனத்துள் எதையும் பற்பல கோணங்களில் பார்க்கும் ஆழ்ந்த அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் அறிவுரைகளை நாம் பிறருக்கு வழங்குமுன் கொஞ்சம் நமக்குள்ளே சில கேள்விகளைக் கேட்டுக் கொள்வது கட்டாயத் தேவை மனிதன் அடக்கம் என்ற போர்வையில் தன்னைப் போர்த்திக் கொள்ள வேண்டும் அடக்கத்தின் சிறப்பே நாம் உயர உயரப் பணிவும் அடங்கலும் அதிகமாகிக் கொண்டே வருதலில்தான் இருக்கிறது உரமிடாத பயிரும் படித்து கூர்மையாக்கப்படாத அறிவும் வளர்ச்சி குன்றியவையே எல்லோருக்கும் தேவையானது சிறந்த அறிவும் திறந்த இதயமும் ஆகும் தொண்டால் உயரும் அறிவே உண்மை அறிவு அது கற்பதால் வரும் அறிவு வெறும் படிப்பால் பெறும் அறிவு அல்ல இரண்டும் வெவ்வேறானவை காரணம் கற்பது வேறு படிப்பது வேறு புத்தகங்களைப் படிப்பதை விட மனிதர்களைப் படிப்பதே மிக மிக முக்கியம் வாழ்க்கையில் தவறுகள் என்று ஒன்றுமில்லை எல்லாம் பாடங்கள் அனுபவங்கள் அவைதான் நன்மையைத் தருபவை எதிலும் துணிந்து பங்கேற்று பல்வேறு அனுபவங்களையும் சுவைக்கத் தவறாதீர் தனக்கு நேர்ந்த அனுபவங்களை ஒவ்வொருவரும் மறு ஆய்வு செய்து அசை போட்டு சிந்தித்துப் பார்க்க தவறக் கூடாது சிலருக்கு வாழ்க்கைக் கடலில் லட்சியக் கரை சேர அவரது அனுபவம் என்ற நீச்சல் பயன்படுகிறது அன்றாடம் அனுபவம் என்ற பக்கங்களைக் கொண்டது நமது வாழ்க்கை அதைத் திறந்த புத்தகமாக வைத்துக்கொள்வோம் நோயைக் குணப்படுத்துவது டாக்டர்கள் கடமை நோயாளியின் மனதைச் சரிப்படுத்துவது பார்வையாளரின் பொறுப்பு என்பதை மறவாதீர் பகலும் இரவும் எப்போதும் ஒன்றையொன்று துரத்துவது போலத்தான் மகிழ்ச்சியும் சோகமும் ஒன்றையொன்று முந்தப் பார்க்கும் நாம் மூச்சை இழுத்து வெளியே விடுவதுபோல அன்பையும் இருவழிப்பாதை ஆக்கினால் உலகமே நம் கைக்குள் வரும் மகிழ்ச்சி என்பது நமது சுற்றுச் சூழல் தருகின்ற கொடை அல்ல உள்ளத்திலிருந்து கிளம்ப வேண்டிய ஊற்று உடல் நலம் பெரிதும் மனநலத்தைப் பொறுத்தது உடலை அழகுபடுத்திக் கொள்வதை விட மிகமிக முக்கியம் நம் மனதை உள்ளத்தை அழகுபடுத்திக் கொண்டு பிறர் மனதை மதித்து வாழ்வது உள்ளத்தில் அறிவை நட்டுக் கொண்டு மனத்தை அழகுபடுத்திக் கொள்வது மிகவும் தேவை உணர்ச்சிகள் என்பன நமது புலன்கள் மூலம் நாம் அறிவதையொட்டி நமக்குள் ஏற்படுத்தும் அலைகள் அடிக்கடி உணர்ச்சி வயப்படாதீர்கள் உணர்ச்சிகளை நீங்கள் ஆளுங்கள் உணர்ச்சிகள் உங்களை ஆள விட்டுவிடாதீர்கள் எதையும் பதற்றமின்றிச் சலனமில்லாமல் ஓடும் சிற்றோடை போல வாழ்க்கையைப் பார்க்கப் பழகியவரை துன்ப அலைகள் அலைக்கழிக்கவே முடியாது பிழைபட உணர்தலைப் போக்க வேண்டுமே தவிர காக்கவோ பெருக்கவோ கூடாது எதையும் நயம்பட உரைத்தலில்தான் நம் வாழ்வின் வெற்றி அமைந்துள்ளது உறுதி மொழிகளை எப்போதும் நிதானித்து அளியுங்கள் அவசரப்பட்டுக் கூறி பிறகு அவதிக்குள்ளாகாதீர்கள் நாம் பிறருக்கு உதவும் போது ஏற்படும் இன்பம்தான் நமது மனிதநேயத்தினை அளக்கும் கருவி நல்ல நூல்களை நாள்தோறும் படிப்பவர்களின் மனம் விசாலப் பார்வையால் விரியும் அகண்டமான அந்த அறிவினால் உலகை விழுங்க முடியும் எப்போதும் மவுனம் தேவையில்லை தேவைப்படும்போது மவுனம் சிறந்த ஆயுதம் எளியதைச் செய்ய எவராலும் முடியும் எதிர்கொள்ள பலரும் அஞ்சும் பணியை செய்ய என்னால் முடியும் என்று துணிவு கொள்க காதல் என்பது துள்ளும் இளமைப் பருவத்தில் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் கவர்ச்சியால் ஈர்க்கப்படுதல் நாம் மந்தைகள் அல்ல ஒரே பக்கம் ஓடிச்செல்ல மனிதர்கள் நாட்டுக்கு நாடு மட்டுமல்ல வீட்டுக்கு வீடு மனிதர்களின் எண்ண ஓட்டங்கள் மாறுபடுகின்றன வேறுபடுகின்றன கையில் ஒரு மனிதனுக்குக் காசில்லா நிலை ஏற்பட்டாலும் மனதில் மாசில்லா நிலையிலிருந்து அவன் மாறக்கூடாது நோய்களில் கொடிய நோய் மூடநம்பிக்கை என்ற நோய்தான் கடமை உரிமை இரண்டையும் புரிந்து ஒன்றுக்காக மற்றொன்றை விட்டுக் கொடுக்காத மன உறுதி வேண்டும் ஒருவரது தவறைச் சுட்டுவது தவறல்ல பலர்முன் சுட்டிக் காட்டி மிகக் கேவலமாக மற்றவர் நினைக்கும்படி செய்வது தவறு இளைய பருவத்திலேயே புத்தகம் படிக்கும் பழக்கத்தை விளையாட்டைப் போலவே மிகுந்த ஈடுபாட்டுடன் பெருக்கி கொள்வது மிக நல்லதாகும் நம்முடைய மனம் என்னும் காட்டுக் குதிரையை அடக்கிக் குறிப்பிட்ட சரியான வழியில் அதனை நடைபோட வைப்பதே பகுத்தறிவு செய்த தவறுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்கும் பழக்கத்தை நமது குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் நூலைப் படித்து தகவல்களைப் பெற்று ஆய்வு செய்து அறிவை பெருக்கினால் ஆயுள் வளரும் இயங்கினால்தான் மூளை இன்றேல் அது வெறும் ஈளை எல்லோரிடமிருந்தும் கற்றுக் கொள்பவனே சிறந்த மனிதன் மணிக்கணக்கில் பேசாமல் மணிமணியாக பேசுதல் சிறப்புடைத்து அறிவு ஆள வேண்டிய இடத்தில் உணர்ச்சிப் போதையை ஏற்று வாழ்க்கையை வீணாக்காதீர் மானிடர்களே நாம் இழக்கும் எதையும் திரும்ப பெற முடியும் இரண்டை இழந்தால் மீண்டும் பெறவே முடியாது ஒன்று உயிர் மற்றொன்று காலம் காலத்தைத் தன்கையில் வைத்துள்ள எவருக்கும் ஞாலம் தன் காலடியில் என்ற துணிவும் தன்னம்பிக்கையும் தானே வரும் இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும் புகழ் ஓட்டமும் அதுபோலத்தான் அதுதான் சீரிய உடல் நலத்திற்கு அடையாளம் காலத்தை கருவூலப் பொருளைச் செலவழிப்பதைவிட கவனம் அதிகமாகக் கொண்டு செலவழியுங்கள் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் போதே நன்றி என்பதைச் சொல்லிக் கொடுத்துப் பழக்கப்படுத்திவிட வேண்டும் ஆக்கச் சிந்தனையோடு வாழுங்கள் எதையும் எதிர்மறையாக சிந்தித்து வாழாதீர்கள் ஆக்கச் சிந்தனை ஊக்கத்தை உயர்வை வளர்க்கும் எதிர்மறைச் சிந்தனை நம்மை பள்ளத்தில் தள்ளும் கூட்டுக்குழு மனப்பான்மையை முதல் மூலதானமாகக் கொண்டு முன்னேறுங்கள் நம்மை முன்நிறுத்தி மற்றவர்களைப் பின்னுக்குத் தள்ளுவது முதலீடு அல்ல அதுவும் வரவுக்கு மிஞ்சிய செலவு வாழ்க்கையில் நாம் வெற்றி பெறுவதற்குத் தன்முனைப்பு ஒரு தடைக்கல் ஒருவருக்கு மென்மேலும் தன்னம்பிக்கையை ஊட்டிக் கொண்டே இருந்தால் அவரை திறமைசாலியாக ஆக்கிக் காட்ட முடியும் தன்னம்பிக்கையோடு செயல்படுவோர் சோதிடம் என்ற மூடநம்பிக்கைக்கு ஆட்பட்டால் அது எட்டிப் பழத்தைக் கடித்த கதைதான் எண்ணம் இல்லாத செயல் வரப்பற்ற வயல் செயல் இல்லாத எண்ணம் காட்டில் காய்ந்த நிலா முதலில் திட்டமிட்டுச் செயலாற்றுங்கள் அதில் தோல்வி எதிர்ப்பட்டாலும் கவலைப்படாதீர்கள் மீண்டும் முயலுங்கள் வெல்வீர்கள் திட்டமிட்டுச் செயலாற்றுங்கள் தீர்வுகள் வெற்றியின் உச்சத்திற்கே உங்களை அழைத்துச்செல்லும் இளைஞர்களே உங்கள் இளமைப்பருவம் உழுது விதைத்து உழைத்து அறுவடை செய்ய வேண்டிய அரிய பருவமாகும் எதையும் எதிர்கொண்டு வாழ்வோம் என்ற இன்றைய துணிச்சல் நாளை வரும் துன்பங்களைக் கூட துரத்தியடிக்கும் மறவாதீர் பிறருக்காக துயரப்படுவது என்பது மானிடப்பற்றை மனித நேயத்தை மிகவும் வளர்க்கும் முடிவு எடுக்கத் திணறாதீர் முடிவு எது வந்தாலும் ஏற்கும் ராணுவ வீரர்களைப் போன்ற நெஞ்சுரம் தேவை ஏழைகளால் ஏற்றம் உண்டு கோழைகளால் எந்தப் பயனும் ஏற்படவே ஏற்படாது உங்கள் வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு பேரிடரும் உங்களுக்கு உள்ளத்தில் உறுதி இருந்தால் அது பேரிடராக இருக்காது பெரும் திருப்பத்திற்கு அடிகோலிய ஒரு சம்பவமாக மாற்றமடையலாம் மறவாதீர் தீர்க்கவே முடியாத தீர்வில்லாப் பிரச்சினைகள் என்று உலகில் எங்கும் எப்போதும் கிடையாது நம் வாழ்வில் துன்ப நிகழ்வுகள் இன்பத்தின் அடித்தளம் என்பதை நாம் எண்ணாமல் வேதனையில் வெந்து விரக்தியால் சாகலாமா மகிழ்ச்சியை எப்படி வரவேற்று மகிழ்கிறாயோ அப்படியே உனக்கேற்படும் துன்பத்தையும் ஏற்றுப் பழகுக கடின உழைப்பும் லேசான மனமும் எதையும் எதிர்கொள்ளும் துணிவும் உள்ளவர்களுக்குத் தூக்கம் எட்டாக்கனி அல்ல கிட்டா மருந்தல்ல தூக்கம் நம்மை குளுமைப்படுத்தும் ஒரு மாமருந்து புத்துணர்ச்சியைத் தரும் ஊக்க மருந்து துன்பத்துள்தான் இன்பம் இருக்கிறது எனவே துன்பத்தை எதிர்கொள்ள தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்பவனே சிறந்த மனிதன் இருட்டை நாம் குறை கூறுவதைவிட ஆளுக்கு ஒரு சிமிழ் விளக்கை ஏற்றி ஒளி வீசச் செய்து இருட்டை விரட்டுவோம் வாழ்வில் இல்லறத்தில் நாம் இருந்தாலும் அதிலுள்ள பல்வேறு சுமைகளை மறந்து இன்பத்தில் திளைக்க உதவிடும் ஒரே அறம் தொண்டறம் ஆகும் நாம் நண்பர்களைப் பகைவர்களாக்க அன்றாடம் முயலுவதைத் தவிர்த்துப் பகைவர்களையும் நண்பர்களாக்கிட முயல வேண்டும் நகைச்சுவை உணர்வுடன் இருங்கள் நகைச்சுவை உணர்வுதான் பல நேரங்களில் நம் உள்ளத்தில் பசுமையை வளர்க்கும் ஒருவரின் திறமைக் குறைவை விட நாணயக் குறைவே அதிக பாதிப்பை ஏற்படுத்தும் நாணயம் என்பது நம்மைப்பற்றிய உண்மைகளை நம்மிடம் நம் உள்ளத்துள்ளும் பிறரிடம் ஒளிக்காமல் சொல்வதே நமக்கு நெருக்கடி வீழ்ச்சி தோல்வி வரும் போது யார் நம்முடன் மாறாமல் நிற்கிறார்களோ அவர்களே தலைசிறந்த நண்பர்கள் மூளைக்கும் உணவு தேவைதானே சிந்தனையைக் கூர்மைப்படுத்த சானை தீட்ட அறிவுள்ள நூல்களே தக்க உணவுகள் அதற்கு மதுவும் சூதாட்டமும் மனிதர்களின் மானத்தையும் அறிவையும் பறிக்கும் கேடு கெட்ட நோய்கள் என்பதை உணருங்கள் பணத்தை நமது பணியாளனாக நடத்துங்கள் ஒரு போதும் பணத்தை எஜமான் ஆக விடாதீர் குழந்தைகளிடம் பாசத்தைக் கொட்டுங்கள் அன்பை மழையாகப் பெய்யுங்கள் அரவணைத்து முத்தம் கொடுங்கள் செயல் என்ற காற்று துயரத்தைத் துரத்தி அடித்து விரட்டும் மறவாதீர் பணிகளைப் பகுத்துத் தொகுக்கும் முறையை வகுத்துக் கொள்ளுங்கள் படித்தவர் எண்ணிக்கை பெருகிய அளவுக்குப் பண்பாளர்கள் எண்ணிக்கை பெருகவில்லையே ஒருவரை நாம் அறிவாளியாகக் கருதுவதுகூட உரையாடும் போது அவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதைப் பொறுத்ததே சிக்கலான பிரச்சனை வரும்போது சிங்கம்போல சிலிர்த்து எழுங்கள் நரிகள் வளைகளைத் தேடுவது போல் ஓடாதீர்கள் நம்மைப்பற்றி விமர்சனங்களை மற்றவர் செய்யும் போது அது உண்மையாயிருந்தால் தாராள மனதோடு ஏற்றுத் திருத்திக்கொண்டு வாழ முயற்சியுங்கள் எதையும் ஏற்றுப் பழகி தீர்வு காணுவது எப்படி என்று திட சித்தத்துடன் அப்பிரச்சினையினை அலசி ஆராய்ந்தால் தீர்வு தென்பட்டே தீரும் மனிதன் புகழ் ஆசை என்ற போதை ஏற ஏற மன நிறைவு கொள்ளத் தெரியாதவனாக ஆகிவிடுகிறான் இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும் புகழ் ஓட்டமும் அதுபோலத்தான் அதுதான் சீரிய உடல் நலத்திற்கு அடையாளம் உங்களை ஒருவர் ஆத்திரமூட்டும் போதும் எரிச்சல் ஏற்படுத்தும் போதும் அதனை ஓர் அலட்சியப் புன்னகையோடு எதிர் கொள்ளுங்கள் அதற்குப் பதில் அளிக்காதீர்கள் மதிப்பளிக்காதீர்கள் இன்பத்தினை அடைய சிரிப்பு ஒரு திறவுகோல் அது மட்டுமல்ல நம்மை மனிதம் மலர்ந்தவர்களாக காட்டிக் கொள்வதும் அச்சிரிப்புதான் கடிகாரம் ஓடும் முன் ஓட பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுப்போம் சான்றுகள் பகுப்பு இறை மறுப்பாளர் பகுப்பு நபர்கள்
வலது மனிதர்கள் பிறக்கும்போது ஓநாய்களாக பிறப்பது இல்லை ஆனால் ஓநாய்களாக மாறிவிடுகிறார்கள் வோல்ட்டேர் ஒரு பிரெஞ்சு அறிவொளி இயக்க எழுத்தாளரும் கட்டுரையாளரும் மெய்யியலாளரும் ஆவார் இவர் சிறந்த எழுத்தாளர் இவரது ஆக்கங்கள் நாடகம் கவிதை புதினம் கட்டுரை வரலாற்று ஆக்கங்கள் அறிவியல் ஆக்கங்கள் என்பன உள்ளிட்ட பல விதமான இலக்கிய வடிவங்களிலும் காணப்படுகின்றன மேற்கோள்கள் நடப்பது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் கொடுக்கப்பட்ட வரம் மனிதர்கள் பிறக்கும்போது ஓநாய்களாக பிறப்பது இல்லை ஆனால் ஓநாய்களாக மாறிவிடுகிறார்கள் ஒரு ஆறு மக்கள் வசிக்கும் வழியாக போயே தீரும் ஒருவரின் மனசாட்சிக்கு எதிராக எதுவும் செய்யாமல் இருப்பதே பாதுகாப்பான ஒன்று துயரத்தின் அமைதி மொழியே கண்ணீர் நான் எங்கு செல்கிறேன் என்று எனக்குத் தெரியாது ஆனால் நான் என் வழியில் செல்கிறேன் மென்மையான இதயங்களுக்காக உருவாக்கப்பட்டது சொர்கம் அன்பற்ற இதயங்களுக்காக உருவாக்கப்பட்டது நரகம் மனித இனத்திற்கு முதன்மைவாய்ந்த ஒன்று சகிப்புத்தன்மை அநீதி இறுதியில் சுதந்திரத்தை உருவாக்குகிறது ஒருவரை அவரது பதில்களைவிட அவரது கேள்விகளிலிருந்து மதிப்பீடு செய்யுங்கள் கல்வியறிவை விட இயற்கை எப்போதும் மிகுதியான ஆற்றலைக் கொண்டதாக இருக்கிறது உண்மையை நேசி ஆனால் பிழையை மன்னித்துவிடு வரலாறு என்பது குற்றங்கள் மற்றும் துரதிர்ஷ்டங்களைக் கொண்ட பதிவேடு மட்டுமே மனிதர்கள் வாதிடுகிறார்கள் இயற்கை செயல்படுகிறது மிதமான செயல்பாடுகளின் வழியாகவே பூர்ணத்துவத்தை அடைய முடிகிறது பாராட்டு என்பது ஒரு அற்புதமான விசயம் ஆண்களின் தர்க்கமெல்லாம் பெண்களின் ஒரு உணர்வுக்கு இணையாகாது உணவு மருந்தைவிட உணவு வகை மேலானது ஒவ்வொருவனும் தானே தனக்கு மருத்துவனாயிருக்க வேண்டும் இயற்கைக்கு நாம் உதவியாக இருக்க வேண்டுமேயன்றி அதைக் கட்டாயப்படுத்தக்கூடாது உன் உடலுக்கு எது ஒத்து வருகிறது என்று அனுபவத்தில் தெரிந்துள்ளாயோ அதை அளவோடு உண்ண வேண்டும் நம் உடல் சீரணித்துக் கொள்ளக் கூடியதைத் தவிர வேறு எதுவும் நல்லதன்று ஜீரண சக்தி அளிப்பது எது உடற்பயிற்சி உடலுக்கு வலிமையளிப்பது எது உறக்கம் தீராத தீமைகளையும் குறைப்பது எது பொறுமை உண்மை உண்மையை நேசி ஆனால் பிழையை மன்னித்து விடு உழைப்பு உழைப்பு மூன்று பெருந்தீமைகளை நம்மிடமிருந்து நீக்குகின்றது தொந்தரவு தீயொழுக்கம் தரித்திரம் ஒழுக்கம் சமயக் கட்சிகள் பலதிறப்பட்டவை ஏனெனில் அவை மனிதர்களிடமிருந்து தோன்றியவை ஒழுக்க நெறி எங்கும் ஒரே தன்மையுள்ளது ஏனெனில் அது ஆண்டவனிடமிருந்து வந்தது கடவுள் இறைவன் இருக்கவில்லையானால் அவனை உண்டாக்கிக் கொள்ள வேண்டியது அவசியம் கருத்து மானிட வர்க்கத்தின் அபிப்பிராயம் பற்றிய வரலாறு என்பது மக்களுடைய தவறுகளின் வரலாறேயாகும் கருத்துகள் தாடிகள் வளர்வது போன்றது வளர்ந்து பருவமடையும்வரை மனிதர்களுக்கு அவை முளைக்கமாட்டா குற்றம் குற்றத்தைத் தொடர்ந்து அச்சம் வரும் அதுவே தண்டனையாகும் கொடுங்கோன்மை தன் விருப்பத்தைத் தவிர வேறு சட்டத்தை அறியாத அரசன் கொடுங்கோலன் தத்துவ ஞானம் வாழும் முறையைக் கற்பிக்கும் வித்தையே தத்துவ ஞானத்தின் இரண்டு முக்கிய லட்சியங்கள் ஆகும் ஒருவன் யாரிடம் பேசுகின்றானோ அவனுக்குப் பொருள் விளங்காமலும் பேசுகின்ற தனக்குப் பொருள் விளங்காமலும் இருந்தால் பேசுவது தத்துவ சாஸ்திரமாகும் உண்மையானதைக் கண்டுபிடிப்பதும் நன்மையானதைச் செய்வதும் தத்துவ ஞானத்தின் முக்கியமான இரண்டு நோக்கங்கள் வால்டேர் நலம் முறையான உணவும் பழக்கங்களும் மருந்தைவிட மேலானவை ஒவ்வொருவரும் தமக்குத் தாமே மருத்து வராயிருக்க வேண்டும் நாம் இயற்கைக்கு உதவி செய்ய வேண்டுமே தவிர அதைக் கட்டாயப்படுத்தக்கூடாது உங்கள் உடல்நிலைக்கு ஒத்துவரக்கூடிய உணவுகளை நிதானமாக உண்ணவும் நாம் சீரணித்துக்கொள்ள முடியாதது எதுவும் உடலுக்கு நல்லதன்று ஜீரண சக்தியை அளிக்கக்கூடியது எது உடற்பயிற்சி வலிமையளிப்பது எது உறக்கம் தீர்க்க முடியாத நோய்களையும் குறைக்கக்கூடியது எது பொறுமை நிறைவுடைமை நிறைவுடைமை படிப்படியாக நீண்ட காலத்தில் அமைவது நீதி நீதியைப்பற்றிய உணர்ச்சி உலகில் மனிதசமூகம் முழுமைக்கும் பொதுவாக விளங்கும் அளவுக்கு இயற்கையாக உள்ளது அது எல்லாச் சட்டங்களையும் எல்லாக் கட்சிகளையும் எல்லாச் சமயங்களையும் கடந்து நிற்பதாகத் தோன்றுகின்றது நூலாசிரியர் ஆசிரியர்கள் உயிரோடிருக்கும் பொழுது அவர்களை ஏளனம் செய்து கண்டிப்பார்கள் இறந்த பிறகு புகழ்வார்கள் புகழ் விரைவிலே புகழ் பெற்றுவிட்டவன் தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்வது பெரிய பாரந்தான் பெண் ஆடவர்களின் ஆராய்ச்சி அறிவுகள் எல்லாம் பெண்களின் ஓர் உணர்ச்சிக்கு ஈடாக மாட்டா மொழி நம் கருத்துகளை மறைத்துக்கொள்ளவும் சொற்கள் பயன்படுகின்றன விவகாரம் இரண்டு கட்சிகளிலும் பலவீனம் இருப்பது எல்லாச் சண்டைகளிலும் இயற்கைதான் சான்றுகள் புற இணைப்புகள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு எழுத்தாளர்கள் பகுப்பு மெய்யியலாளர்கள் பகுப்பு பிரான்சியர்கள் பகுப்பு இறப்புக்கள் பகுப்பு பிறப்புக்கள்
வலது ராகுல சாங்கிருத்யாயன் அறிமுகம் இராகுல் சாங்கிருத்தியாயன் இந்தி பயண இலக்கியத்தின் தந்தை என அறியப்படுபவர் தன் வாழ்நாளில் வருட காலத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணத்தில் செலவழித்தவர் பன்மொழிப்புலவர் பல்துறை வித்தகர் புத்தத் துறவியாகி பின்னர் மார்க்சியவாதியானவர் அதுமட்டுமன்றி ஆங்கிலேயர் ஆட்சிக்கெதிரான கருத்துகளை எழுதியதற்காக மூன்றாண்டு கால சிறைவாசம் அனுபவித்தவர் மேற்கோள்கள் அறிவிலிகளே சோம்பேறிகளே புறப்படுங்கள் பரந்த உலகம் முழுவதும் சுற்றி வாருங்கள் இதற்காக உங்களுக்கு இன்னொரு வாழ்வு கிடைக்கப்போவதில்லை நீங்கள் நெடுநாள் வாழ்ந்தாலும் கூட இந்த இளமை உங்களுக்கு மீண்டும் வரப்போவதில்லை புற இணைப்புகள் பகுப்பு நபர்கள்
இராவண லீலா என்பது வடவரின் இராமலீலாவின் எதிரொலி தவிர்க்க முடியாத விளைவு என்பதையும் அதன் பின்னால் கோடிக்கணக்கான தமிழர்களின் மானமும் மரியாதையும் கவுரமும் உணர்ச்சியும் அடங்கியிருக்கிறது என்பதையும் மிக நல்ல வண்ணம் தந்தையின் தனிச்சிறப்பு வாய்ந்த தனயன் என்ற முறையில் தமக்கே உரித்தான தனித்திறமையோடு சுட்டிக்காட்டி இருக்கிறார் அறிஞர் அண்ணா பாரதியாரின் கவிதைகளில் நாட்டுப்பற்று இனப்பற்று மொழிப்பற்று கலைப்பற்று கடவுள்பற்று பற்றிய பாடல்களில் ஆரியப்பற்றே காணப்படுகிறது தமிழர்களுக்கு மானம் இருந்தால் தமிழ்நாடும் தமிழ்மொழியும் இழிநிலையையும் ஆரியர் ஆதிக்கம் உயர்நிலையையும் அடையுமா இந்து மதத்தில் மட்டும்தான் மனிதனை மனிதன் பிரித்துக் காட்டி கீழ் மேல் உயர்வு தாழ்வு என்ற இழிநிலை உள்ளது இந்து மதத்தில் அன்பு சமத்துவம் சமரசம் இருப்பதாக சொல்வதோடு சரி அவற்றைக் கடைபிடிப்பது இல்லை பஞ்ச பூதங்களையும் கிரகங்களையும் அறியாமையினால் தேவர்கள் என்று எத்தனையோ காலத்துக்கு முன் ஒரு பைத்தியக்காரன் எழுதி வைத்ததையெல்லாம் இந்த இருபதாம் நூற்றாண்டில் நம்பிக்கொண்டும் படித்துக் கொண்டும் இருந்தால் அவரைப்போல் சர்வ முட்டாள் யாரும் இல்லை நம் இழிவைப் போக்க அல்லும் பகலும் அயராது உழைத்து மக்களுக்குப் பகுத்தறிவைப் போதித்து பெரியாரின் கொள்கை பரப்பி தொண்டு செய்வதே நம் வாழ்நாள் லட்சியமாகும் நம்முடைய பொருளாதார இழிவும் நமக்கு நம் நாட்டு உரிமையற்ற தன்மையும் ஒழிந்து நாமெல்லோரும் நலமுற வாழ வேண்டும் என்பதற்காகத்தான் திராவிடர் கழகம் பாடுபட்டு வருகிறது பெண்களே அடுப்பூதும் அணங்குகளாக அடைப்பட்டுக் கிடக்கும் பெண்டிராகவே காலங்கழிக்கக் கூடாது தந்தை பெரியார் தமிழர்களின் பொதுச்சொத்து கூட்டங்களுக்குப் பேசக் கூப்பிட்டால் வந்து விடுவார் சாப்பாடு கொடுத்தால் சாப்பிட்டு விடுவார் இந்த இரண்டிலும் அவர் குழந்தையே நம்மைப் பிறவி இழிவுள்ள மக்களாக ஆக்கி வைத்திருக்கின்ற ஜாதி முறையினை ஒழிப்பதுதான் திராவிடர் கழகத்தின் குறிக்கோளாகும் வீட்டிற்குள் சிறைப் பறவையாய் இருந்த பெண்களை வெளி உலகிற்கு சுதந்திரப் பறவைகளாய்க் கொண்டு வந்தவர்தான் தந்தை பெரியார் மந்திரி வேலையைவிட மணியடிக்கிற வேலைக்கு புத்தி அதிகம் வேண்டியதில்லை அர்ச்சகர் ஆவதற்கு அறிவு தேவையில்லை பிறவிதான் தகுதி பார்ப்பனாத்தி வயிற்றில் பிறந்தவன் எவனாயிருந்தாலும் அர்ச்சகர் ஆகலாம் என்கிறது பார்ப்பன ஆதிக்கம் திராவிடர் கழக கொள்கைகளிலே இருக்கின்ற நியாயங்கள் உண்மைகள் இவைகளால் கவர்ந்து இழுக்கப்பட்ட பலன் கருதாத பின் விளைவினைக் கண்டு பயப்படாத வீரர்களாகிய தொண்டர்களின் அயராத உழைப்பினாலே உருவானதாகும் ஜாதி ஒழிய வேண்டுமென்றால் ஜாதியைக் காக்கும் அரசியல் சட்டப்பகுதி திருத்தப்பட வேண்டியது அவசியம் நமது நாட்டைப் பொறுத்தவரை தொழிலாளர்கள் என்பவர்கள் நாலாஞ் ஜாதி சூத்திர மக்களாகிய தமிழ் மக்கள்தான் மேல் ஜாதிக்காரர்களான பார்ப்பனர்களில் தொழிலாளர்கள் எவரும் இல்லை ஆனால் நம் நாட்டு விசித்திரங்களில் ஒன்று தொழிலாளர் தலைவர்களாகப் பார்ப்பனர்களே இருந்து வருவது திராவிடர் கழகம் பலாத்காரத்திலோ இரகசிய முறைகளிலோ பொதுச் சொத்தை பொது ஒழுக்கத்தை நாசம் செய்யும் கிளர்ச்சி முறைகளிலோ சிறிதும் நம்பிக்கையற்ற மாபெரும் மக்கள் இயக்கம் போலி தேச பக்தி ஒருமைப்பாடு ஜம்பம் நம் இளைஞர்களை வயிற்றுச்சோற்றுக்குத் திண்டாடுபவர்களாக்கி பிறகு வன்முறையாளர்களாகவும் காலிகளாகவும் ஆக்கிவிடக்கூடது பிரச்சாரத்திற்க்காகப் போகிற இடத்தெலெல்லாம் மாணவர்கள் அடக்கமாக நடந்து கொள்ள வேண்டும் போகிற இடங்களிலெல்லேம் சவுகரியங்களை எதிர்பார்க்காமல் ஏற்படக்கூடிய அசவுகரியங்களை லட்சியம் பண்ணாமல் பணியாற்ற வேண்டும் நாம் அணியும் கருஞ்சட்டை நம்மைப் பார்த்தவுடன் இவர்கள் சமுதாயத் தொண்டு செய்பவர்கள் மூட நம்பிகையை ஒழிப்பவர்கள் என்பதை அடையாளப்படுத்துவதோடு பெரியாரின் தொண்டர்கள் என்று பாராட்டுவதாக இருக்கட்டும் பெண்கள் மூடநம்பிக்கை மீதுள்ள பற்றுதலை முதலில் விட்டொழிக்க வேண்டும் தாங்கள் பெற்று வளர்க்கும் பிள்ளைகளையும் மூடநம்பிக்கையற்றவர்களாக வளர்க்க வேண்டும் திராவிடர் கழகம் அரசியல் கட்சி அல்ல அது ஒரு சமுதாய அறிவு இயக்கமாகும் ஜாதியற்ற சமுதாயம் மூட நம்பிக்கையற்ற சமுதாயம் காண்பதைத் தவிர நமக்கு வேறு லட்சியம் இல்லை என்பது நமக்கு துணிவும் தெளிவும் தரும் கொள்கைக் கவசங்கள் இந்த நாட்டுக்குரிய பூர்விக மக்களை பிழைப்பைத் தேடி வந்த ஒரு கூட்டம் தங்களின் இழிபிறவி வைப்பாட்டி மக்கள் என்று நிலை நிறுத்திய கொடுமை உலகத்தில் வேறு எந்தப் பகுதியிலும் காண முடியாத ஒரு பெரும் கொடுமையாகும் எதனையும் இலவசமாகச் சும்மா பெறுவதைவிட விலை கொடுத்துப் பெறுவது மதிப்பும் மரியாதையும் வாய்ந்தது எப்படியும் நம்மை ஒழித்துக் கட்டிவிட எதிரிகள் நம்மீது ஒரு கண் வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் தோழர்களே நீங்கள் தற்காத்துக் கொள்ள உடற்பயிற்சிகளை மேற்கொள்வீர்களாக உலக அரங்கில் திராவிடர் கழகம் ஓர் அதிசயமான இயக்கம் ஆனால் அதே நேரத்தில் அது மிகவும் அவசியமான இயக்கமுமாகும் தந்தை பெரியாரின் தொண்டர்கள் நடத்தும் எந்தக் கிளர்ச்சியும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் அமைதியாகவும் ஆர்ப்பாட்டம் இல்லாமலும் பொதுச் சொத்துக்கு நாசமோ பொது மக்களுக்கு இடையூறோ பொது ஒழுக்கத்திற்குச் சிறிதும் கேடோ இன்றி நடக்கும் என்பது நாடறிந்த உண்மை அரசியல் கட்சிகளுக்கு ஆயுள் அற்பமானது இந்தச் சமுதாய இயக்கமோ மனிதப் புல் பூண்டு உள்ள வரை அதன் நிழலோடு நிழலாக நின்று பணியாற்றிக் கொண்டிருக்கக் கூடியது சர்க்கரைப் பேச்சு பேசி சாதுர்யமாக மக்கள் கையில் உள்ள வாக்குச்சீட்டைப் பறிப்பதுதான் ஜனநாயக அரசியல்வாதிகளின் பொதுத்தொண்டு பெரியார் எதை எடுத்தாலும் சிந்தித்தேதான் முடிவு எடுத்துச் செயல்படுவார்களே தவிர எதையும் அவர்கள் கனவாக நினைப்பதே இல்லை கசப்பான மருந்து தந்து தேவைப்பட்டால் கத்தியை எடுத்து அறுவை சிகிச்சையும் செய்து நோயாளியை எப்படியும் பிழைக்க வைக்கும் எதிர் நீச்சல் தொண்டே எங்கள் இயக்கத் தொண்டு வீட்டார் எதிர்ப்பு தெருவார் எதிப்பு ஊரார் எதிர்ப்பு என்றளவில் எங்களுக்கு இருக்கும் எதிர்ப்பின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும் கடவுளின் பெயராலும் மதத்தின் பெயராலும் சாஸ்திர சம்பிரதாயங்களின் பெயராலும் அறிவு ஆயுள் கைதியாக அடைக்கப்பட்டிருக்கிறது நம்மைப் பற்றி எவ்வளவு கேவலமாக சாஸ்திரங்கள் என்ற பெயரில் கூறப்பட்டு இருக்கின்றன இத்தகைய சாஸ்திரங்களைப் பெண்கள் ஒருபோதும் மதிக்கவே கூடாது ஒழித்துக்கட்ட முன்வரவேண்டும் ஓர் அரசியல் கட்சியை ஆதரிப்பதும் எதிர்ப்பதும் தம் கொள்கையின் அடிப்படையில்தான் ஒரு கட்சியை ஆதரித்துத்தான் தீர வேண்டும் என்கிற அவசியமோ ஆத்திரமோ எதிர்த்தே தீர வேண்டும் என்ற வெறியோ பகைமையோ எங்களுக்கு என்றைக்கும் இருந்தது கிடையாது வீட்டில் இருப்பவர்களை முதன் முதலில் நாம் திருத்தி விட்டால் சுலபமாக நாட்டிலும் நம் காரியத்திலும் வெற்றி பெற்றுவிட முடியும் சுத்த வீரன் எப்பொழுதும் வீரனாக மடிவானே தவிர கோழையாக மடியமாட்டான் அமைச்சர்கள் வருவார்கள் போவார்கள் ஆனால் அரசாங்க ஊழியர்கள் அப்படி அல்லவே ஆட்சியை நடத்திச்செல்லும் இயந்திரம் அரசு ஊழியர்கள்தானே அத்தகைய இயந்திரத்தைப் பழுதுபடுத்த அந்த இயக்குநரே முயன்றால் அதன் விளைவு பயணிகள் மீது கோபப்பட்டு வேண்டுமென்றே பேருந்தை மரத்தின் மீது மோதுவது போன்றது அதனால் வரும் ஆபத்து பயணிகளுக்கு மட்டுமல்லவே ஓட்டுநருக்கும்தானே தந்தை பெரியாரின் இயக்கம் தன்னலமற்றது யாரும் தகர்த்தெறிய முடியாதபடி அசைக்க முடியாதது பார்ப்பனர்கள் எப்போதும் மரத்திற்குப் பின் மறைந்து நின்று செயல்படும் இராமனைப்போல் எதற்கும் பின்னால்தான் இருப்பார்கள் நமது சுக்ரீவர்களும் அனுமார்களும் விபீஷணர்களும் தான் குதியாட்டமும் கும்மாளமும் போடுவார்கள் இது அன்றைய இராமயணக் காலம் தொட்டு இன்றைய இராவண லீலா காலம் வரை பளிங்கு போல் தெரியும் சரித்திர உண்மையாகும் தலைமகனுக்கும் தந்தைக்கும் அண்ணா பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடுவதே தமிழர்களின் திருவிழாக்களாக இருக்கட்டும் ஒருவருக்குச் சிலை எடுக்கிறோம் என்றால் அந்தச் சிலைக்குரிய மனிதரின் தொண்டுகளை உலகிற்குச் சுட்டிக்காட்ட எழுப்பும் வரலாற்று நிகழ்வு கந்தபுராணமும் இராமயணமும் ஒரே தத்துவத்தைக் கொண்டு ஆரியர்களை உயர்த்தியும் திராவிடர்களை இழிவுபடுத்தியும் காட்டுமிராண்டிக் காலத்தில் எழுதப்பட்ட கட்டுக்கதை அருமைத் தந்தையின் நினைவு நாளையொட்டி நமது இயக்கத் தோழர்கள் பகுத்தறிவாளர்கள் இவர்களைக் கூட்ட மாபெரும் இன எழுச்சிப் பெருவிழா இராவணலீலா நடத்தி அதில் நாம் திட்டமிட்டபடி காரியங்களைச் செய்தே தீர வேண்டிய நிலையில் இருக்கிறோம் பகுப்பு தமிழர்கள்
ஈழத்தில் தோன்றிய ஞானிகளில் ஒருவர் யோகசுவாமிகள் ஆகும் இவரது காலம் வரையாகும் மேற்கோள்கள் வடதிசை காட்டும் கருவியைப்போல் இருக்க வேண்டும் நீயே உனக்கு நண்பனும் பகைவனும் வேலையைச் செய்தும் செய்யாதவன் போல் இருக்க வேண்டும் பிராணனை அடக்கி ஆளுதல் வேண்டும் சுகமுந் துக்கமும் இரட்டைப் பிள்ளைகள் இன்பதுன்பமெல்லாம் முகிலைப்போல் வந்து போகட்டும் தன்னை அடக்கியாளுதல் வேண்டும் சமத்துவம் வேண்டும் காஞ்சிரங் கொட்டையும் தேவைக்கு உதவுகின்றது அதுபோல எல்லோரும் நல்லவர்கள் தான் நாய் வாலை நீட்டமுடியாது உலகத்தைத் திருத்துவதிலும் நம்மைத் திருத்துவோமாக செருப்பைப்போல் தேகத்தைப் பாவிக்க வேண்டும் தன்னைத் திருத்தாது யாத்திரைக்குப் போவதனாலாவதென்ன கடவுளால் ஒன்று செய்யமுடியாது ஆன்மாவை விட்டுப் பிரிந்திருக்க முடியாது உள்ளதோடு திருப்தியடையாது அதிக ஆசைப்பட்டுக் கிடந்தலைகிறோம் மனிதன் நெடுக வேலை செய்துகொண்டிருக்கலாம் வேலை செய்து முடிந்தால் அதைப்பற்றிப் பிறகு நினைத்துத் தொந்தரவு படக்கூடாது பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு பிறப்புக்கள் பகுப்பு இறப்புக்கள் பகுப்பு ஆன்மிகவாதிகள் பகுப்பு தமிழர்கள்
வலது மதம் மக்களுக்கு அபினாக விளங்குகிறது கார்ல் மார்க்சு கார்ல் என்ரிச் மார்க்ஸ் மே செருமனி மார்ச் இலண்டன் செருமானிய மெய்யியலாளர்களுள் ஒருவராவார் அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர் மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக தலைசிறந்த ஆய்வறிஞராக எழுத்தாளராக சிந்தனையாளராக புரட்சியாளராக கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார் பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார் என்றாலும் இவரது ஆய்வுகளும் கருத்துகளும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்தது பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலவர்களுள் ஒருவராக கார்ல் மார்க்சு கருதப்படுகிறார் மற்றையவர் பிரெட்ரிக் எங்கெல்ஸ் ஆவார் மேற்கோள்கள் ஐரோப்பாவில் அறுவடை நல்ல அல்லது கெட்ட பருவ நிலையைப் பொறுத்திருப்பதைப் போல ஆசியாவில் அது நல்ல அல்லது கெட்ட அரசாங்கங்களைப் பொறுத்திருக்கிறது நீதிமன்றம் சந்திக்க வேண்டிய இன்னொரு நீதிமன்றம் மக்கள் கருத்து தத்துவ ஞானிகள் உலகத்தை இதுவரை பல்வேறு வழிகளில் விளக்கியுள்ளனர் ஆனால் அதை மாற்ற வேண்டியதுதான் இப்போதுள்ள கடைமை கோட்பாடுகள் ஒன்றை ஒன்று துரத்தி வெளியேற்றின மதம் மக்களுக்கு அபினாக விளங்குகிறது நரகத்திற்கு இட்டுச் செல்லும் பாதை நல்ல நோக்கம் எனும் கற்களால் உருவாக்கப்பட்டது காலம் மனித வளர்ச்சி நடைபெறுவதற்கான வெளி ஒரு மனிதன் தனக்காக மட்டும் உழைத்தால் அவன் ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியாகவோ மாபெரும் ஞானியாகவோ தலைசிறந்த கவிஞனாகவோ ஆகக் கூடும் ஆனால் அவனால் என்றுமே உண்மையிலேயே நிறைவான மகத்தான மனிதனாக ஆக முடியாது சகலவிதமான அடிமைத்தனத்தையும் ஒழிக்காமல் மனித விடுதலை சாத்தியமாகாது இயற்கையின் அழகான பன்முகத் தன்மைகளை வற்றாத வளங்களை வியந்து போற்றுகிறீர்கள் ஒரு ரோஜா மலர் வயலட் பூவைப் போல மணக்க வேண்டும் என்று நீங்கள் கட்டளையிடுவதில்லை ஆனால் எல்லாவற்றையும் விட வளமிக்கதான மனம் மட்டும் ஒற்றைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறதே தொழிலாளர்களின் திறமையான உழைப்பிலேயே தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி இருக்கிறது பொருளாதார அதிகாரத்தில் ஏற்படும் மாற்றமே மனித வரலாற்றின் ஏனைய மாற்றங்களுக்கான அடிப்படை ஒவ்வொரு காலத்திலும் சமுதாயத்தில் தோன்றும் கருத்துகள் மதங்கள் கலை இலக்கியப் படைப்புகள் தத்துவங்கள் அனைத்தும் சமுதாய வளர்ச்சியின் பிரதிபலிப்புகளாகத்தான் தோன்றுகின்றன மறைந்து போய்விட்ட மிருக ராசிகளை நிர்ணயிப்பதற்கு புதைபடிவ எலும்புகள் எவ்வளவு முக்கியத்துவமுள்ளவையோ மறைந்து போய்விட்ட சமூகப் பொருளாதாரக் கருவிகளின் மீதமிச்சங்களும் அதே அளவு முக்கியத்துவமுள்ளவையாகும் உழைப்பு என்பது மனிதனும் இயற்கையும் இணைந்து பங்கேற்கிற ஒரு இயக்கம் மனிதர்களின் வாழ்நிலையை நிர்ணயிப்பது அவர்களின் உணர்வு அல்ல மாறாக அவர்களது சமூக வாழ்நிலையே அவர்களது உணர்வை நிர்ணயிக்கிறது வாழ்வதற்கும் எழுதுவதற்கும் எழுத்தாளன் சம்பாதிக்க வேண்டும் என்பது உண்மையே ஆனால் சம்பாதிப்பதற்காகவே அவன் வாழவோ எழுதவோ கூடாது எழுத்தாளனுக்கு அவனது எழுத்து ஒரு கருவி அல்ல அது தன்னளவிலேயே முடிந்த ஒரு இலக்கு தேவைப்பட்டால் எழுத்து உயிர்பெற்றிருக்க தனது உயிரையும் அவன் தியாகம் செய்வான் பத்திரிகை சுதந்திரம் குறித்து ஒரு அரசியல் விவாதத்திற்கு மார்க்ஸ் எழுதியது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இதுவரையிலான சமுதாயம் அனைத்தின் வரலாறும் வர்க்க போராட்டங்களின் வரலாறாகவே இருந்துள்ளது சமுதாய உற்பத்திப் பொருள்களை தன்வயமாக்கிக் கொள்ளும் ஆற்றலைக் கம்யூனிசயம் எவரிடமிருந்தும் பறிக்கவில்லை உற்பத்திப் பொருள்களை தன்வயமாக்கிக் கொள்வதன் மூலம் பிறரது உழைப்பை அடிமைப்படுத்தும் ஆற்றலைத்தான் அவரிடமிருந்து பறிக்கிறது கூலியுழைப்பும் மூலதனமும் முதலாளித்துவ உற்பத்தி தொழில்நுட்பத்தை வளர்த்தெடுக்கிறது இதனை உற்பத்தியின் மற்ற அம்சங்களுடன் இணைத்து சமூகத்தின் ஒட்டு மொத்த தன்மையை உருவாக்குகிறது ஆனால் இந்த நிகழ்வு போக்கில் செல்வத்தின் ஆதாரங்களாக விளங்குகின்ற மண்ணையும் உழைப்பாளியையும் முதலாளித்துவம் சீரழிக்கிறது முதலாளித்துவ அமைப்பு முறை தானாக நொறுங்கி வீழாது தொழிலாளி வர்க்கத்தின் விடாப்பிடியான போராட்டங்களின் மூலமாகத்தான் அதனை வீழ்த்திட முடியும் கூலியானது தொழிலாளி உற்பத்தி செய்யும் பண்டத்தில் அவருக்குரிய பங்கு அல்ல ஏற்கெனவே இருந்துவரும் பண்டங்களில் எப்பகுதியைக் கொண்டு முதலாளி உற்பத்தித் திறனுள்ள ஒரு குறிப்பிட்ட அளவு உழைப்புச் சக்தியை வாங்குகிறாரோ அப்பகுதியே கூலியாகும் மதம் மதம் என்பது இதயமற்ற உலகின் இதயத்துடிப்பு அத்துடன் ஆன்மா இல்லாத நிலைமையில் ஆன்மாவாக உள்ளது அது மக்களின் ஓப்பியம் அபின் பெண் பெண்களின் எழுச்சியின்றி மாபெரும் சமூக மாற்றங்கள் சாத்தியமே இல்லை அழகான இனம் என்று குறிப்பிடப்படும் பெண்கள் அவர்களில் அழகற்றவர்களும் உட்பட சமூகத்தில் எந்த நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் கொண்டே சமூக முன்னேற்றத்தை நாம் அளவிடமுடியும் சான்றுகள் பிற இணைப்புக்கள் பகுப்பு செர்மனியர்கள் பகுப்பு இறை மறுப்பாளர் பகுப்பு மெய்யியலாளர்கள் பகுப்பு பொதுவுடைமைவாதிகள்
வலது சத்யஜித் ராய் சத்யஜித் ராய் மே ஏப்ரல் இந்தியாவில் உள்ள மேற்கு வங்காளத்தில் பிறந்த ஒரு உலகப் புகழ்பெற்ற திரைப்பட மேதை இவர் ஒரு திரைப்பட இயக்குநர் எழுத்தாளர் இசையமைப்பாளர் திரைப்படத் தயாரிப்பாளர் என்ற பன்முகத் தன்மைக் கொண்டவர் தன்னுடைய திரைப்படப் பணிக்காக ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியர் சத்யஜித் ராய் இவருடைய பதேர் பாஞ்சாலி அபராஜிதோ அபுர் சன்ஸார் ஆகிய மூன்று திரைப்படங்களும் உலகப் புகழ் பெற்றவை மேற்கோள்கள் படைப்பாளியின் சமூகப் பொறுப்பு ஒரு படைப்பாளியும் மனிதனே இன்னும் சொல்லப் போனால் மற்ற மனிதர்களைவிட சற்று முழுமை பெற்ற மனிதன் தன் வாழ்க்கைச் சூழலிலிருந்தும் அதோடு பின்னிப் பிணைந்திருக்கும் அன்றாடக் காரியங்களில் இருந்தும் முழுமையாகத் தன்னைப் பிரித்துக் கொள்வதென்பது அவனால் முடியாத காரியம் எனவே எந்த ஒரு படைப்பிலும் ஏதோ ஒரு வகையில் இந்த சமூகப் பிரக்ஞை என்பது இடம் பெற்றே தீரும் தனது படைப்புகள் மூலம் அந்த சமூகப் பிரச்சனைகள் பற்றிய பிரக்ஞையை மக்களிடையே ஏற்படுத்துவதுதான் படைப்பாளி பிரச்சனைகளைத் தொடுவதன் நோக்கம் பிரக்ஞையடைந்த மக்கள் தமக்கான தீர்வுகளைத் தாமே சிந்தித்து முடிவு செய்வார்கள் புற இணைப்புகள் பகுப்பு எழுத்தாளர்பகுப்பு இசையமைப்பாளர்பகுப்பு திரைப்பட இயக்குநர்பகுப்பு நபர்கள்
உ வே சாமிநாதையர் பெப்ரவரி ஏப்ரல் உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் சுருக்கமாக உ வே சா இவர் சிறப்பாக தமிழ் தாத்தா என அறியப்படுகிறார் ஒரு தமிழறிஞர் பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ வே சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர் தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும் செழுமையையும் அறியச் செய்தவர் உ வே சா க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார் சுயசரிதையில் இருந்து காகிதம் என்பதறியா மக்கள் ஓலைகளில் எழுதி வைத்திருந்ததைப் படிக்கும் போது ஏற்பட்ட சிரமங்களைப் பற்றி இது கொம்பு இது சுழி என்று வேறு பிரித்து அறிய முடியாது மெய்யெழுத்துக்களுக்குப் புள்ளியே இராது ரகரத்துக்கும் துணைக் காலுக்கும் வேற்றுமை தெரியாது சாபம் சரபமாகத் தோன்றும் ஓரிடத்தில் சரடு என வந்திருந்தது அந்த வார்த்தையைப் பலகாலம் சாடு என்று நினைத்தேன் இடையின ரகரத்துக்கும் வல்லின றகரத்துக்கும் பேதம் தெரியாமல் மயங்கின இடங்கள் பல பகுப்பு நபர்கள் பகுப்பு தமிழர்கள்
கோ நம்மாழ்வார் மே டிசம்பர் தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு கிராமத்தில் பிறந்த இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை கற்றவர் பசுமைப் புரட்சி தொழில்மயமாக்கம் சூழல் மாசடைதல் தொடர்பாக காரமான விமர்சனங்களையும் ஆக்கபூர்வமான மாற்றுகளையும் முன்வைத்தவர் தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்தவர் வானகம் குடும்பம் அமைப்பு உட்பட பல அரசு சாரா அமைப்புகளின் அமைப்பாளரும் ஆவார் டிசம்பர் அன்று பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டியில் பிச்சினிக்கோட்டை கிராமத்தில் மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த சென்றிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார் மேற்கோள்கள் உழவுக்கும் உண்டு வரலாறு இனி விதைகளே பேராயுதம் எந்நாடுடையே இயற்கையே போற்றி ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான விஷயங்கள் பசி வந்து சாப்பிட வேண்டும் தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும் சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும் தூக்கம் வந்து தூங்க வேண்டும் புற இணைப்புகள் பகுப்பு நபர்கள்பகுப்பு தமிழர்கள்பகுப்பு சூழலியல்
ரஜினிகாந்த் என்று அனைவராலும் அறியப்படும் சிவாஜி ராவ் கைக்வாட் பிறப்பு டிசம்பர் மராட்டியில் சிவாஜீராவ் காயகவாட் ஒரு புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகராவார் இவருடைய ரசிகர்கள் இவரை தலைவர் என்றும் மக்கள் அனைவரும் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கின்றனர் மேற்கோள்கள் நேர்மையான நாணயமான வாழ்க்கையிலேயே உண்மையான சந்தோஷம் உள்ளது திரைப்படங்களில் எந்திரன் ச்சிட்டி தானியங்கியை அறிமுகப்படுத்துகிறார் ஜென்டில்மேன் இவன் ஒரு ஆள் ஒரு நூறு பேருக்கு சமம் நூறு பேரோட அறிவும் திறமையும் இவனுக்குள்ள ப்ரோக்ராம் செய்யப்பட்டிருக்கு இவனுக்கு எல்லா கலைகளும் தெரியும் உலகின் எல்லா மொழிகளும் தெரியும் வசீகரன் நீங்க ச்சிட்டி கிட்ட ஏதாவது கேக்கறதுனா கேக்கலாம் வசீகரன் ஆமா இருபத்தி இரண்டாவது ஃபிபோனாசி நம்பர் பை தி பை அது மந்தவெளி பி சுப்ரமணித்தோட ஃபோன் நம்பர் சிட்டி என்னை படைச்சவர் டாக்டர் வசீகரன் கடவுள் இருக்காரு சிட்டி சான்றுகள் வெளி இணைப்புக்கள் ஆனந்த விகடனில் மே சூன் மாதங்களில் ரசினிகாந்து பற்றி வெளி வந்த தொடர் ரசினிகாந்து ரசிகர்கள் நடத்தும் வலைத்தளம் ரசினிகாந்து ரசிகர்களின் மற்றோர் வலைத்தளம் பகுப்பு தமிழர்கள் பகுப்பு தமிழ் திரைப்பட நடிகர்கள் பகுப்பு வாழும் நபர்கள் பகுப்பு பிறப்புக்கள்
இது சீனா பயன்படுத்தப்படும் பழமொழிகளின் பட்டியலைக் கொண்ட மேற்கோள் தொகுப்பு அதிருஷ்டமுள்ளவன் ஒரு நண்பனைச் சந்திக்கிறான் அதிருஷ்டம் கெட்டவன் ஓர் அழகியைச் சந்திக்கிறான் அழகில்லாத மனைவியரும் அறிவில்லாத வேலைக்காரிகளும் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்கள் ஆண்பிள்ளையின் சொற்கள் அம்பு போன்றவை பெண் பிள்ளையின் சொற்கள் ஒடிந்த விசிறி போன்றவை இதயத்தில் பெருந்தன்மை இருந்தால் அது நற்பண்புகளை அழகாக பிரகாசிக்கும் இல்லத்தில் இணக்கமுடன் வாழ்ந்தால் அது தாய் நாட்டின் சட்டத்தை மதிக்க தூண்டும் இளமங்கையை வீட்டில் புலிபோல் காத்துவர வேண்டும் உணவுக்காகவும் உடைக்காகவுமே நாம் இரண்டு கால்களாலும் ஓடித் திரிகிறோம் ஒரே மனைவியிருந்தால் வீட்டில் சண்டைஇராது ஒற்றைத் திறவுகோல் கிலுகிலுக்காது கட்டிலிலே கணவனும் மனைவியும் வெளியிலே அவர்கள் விருந்தினர்கள் கணவன் மனைவி சண்டை ஓர் இரவோடு சரி காதலுக்கும் தொழு நோய்க்கும் தப்புவோர் சிலரே சேவலுக்கு வாழ்க்கைப் பட்டால் அதன் பின்னேதான் செல்ல வேண்டும் தந்தைக்கு அடங்கி நடத்தல் கணவனுக்கு அடங்கி நடத்தல் மகனுக்கு அடங்கி நடத்தல் இம்மூன்றுமே ஒரு பெண்ணுக்குரிய மூன்று பண்புகள் தாய் நாட்டின் சட்டத்தை மதிப்பவர்களால் தான் உலகம் முழுவதிற்குமான சமாதானத்தை உருவாக்க முடியும் நற்பண்புகளில் அழகு இருந்தால் அது இல்லத்தில் இணக்கமுடன் வாழத் தூண்டும் பசித்தவனுக்கு மீனை உண்ணக் கொடுப்பதை விட மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது பதினைந்து ரூபாயில் ஒருவன் மனைவியைப் பெறலாம் ஆனால் ஒரு கோவேறு கழுதை வாங்க ஐம்பது ரூபாய் வேண்டும் பணக்காரர்கள் சீதனம் கொடுத்துப் பெண்களுக்கு மணம் செய்கிறார்கள் மத்திய வகுப்பினர் பெண்களைக் கொடுத்துப் பணம் சம்பாதிக்கிறார்கள் பல்லக்கில் இருப்பவன் மனிதன் பல்லக்குத் தூக்குபவனும் மனிதன் தான் பெண்ணின் உரோமத்தால் பெரிய யானையையும் கட்டிப் பிடிக்கலாம் மனிதனின் பெருமையும் சிறுமையும் அவனவன் இதயத்துக்குள் இருக்கின்றன வயதுவந்த பெண் தீர்வை கட்டாமல் கடத்தி வந்த உப்பைப் போன்றவள் சீனா விரைவிலே வெளியேற்ற வேண்டும் பகுப்பு நாடு வாரியாக பழமொழிகள் பகுப்பு மொழி வாரியாக பழமொழிகள்
வலது மௌரியப் பேரரசைத் தோற்றுவித்த சந்திரகுப்த மௌரியனின் முதன்மை அமைச்சராகவும் வழிகாட்டியாகவும் இருந்தவர் சாணக்கியர் மேற்கோள்கள் உனக்கு எது தேவையோ அது தர்மம் மின்மினிப் பூச்சி எவ்வளவு ஒளியுடன் திகழ்ந்தாலும் அது தீ ஆகாது அச்சம் அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பவனால் சிறிய குட்டையைக் கூட கடக்க முடியாது பகுப்பு நபர்கள்
கம்யூனிஸ்ட் அறிக்கை காரல் மார்க்ஸ் பிரெட்ரிக் எங்கெல்ஸ் இருவராலும் கம்யூனிஸ்ட்டுகளின் தத்துவார்த்த நடவடிக்கை வேலைத் திட்டமாக ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை மேற்கோள்கள் இதுவரையிலான மனித குல வரலாறு என்பது வர்க்கப் போராட்டங்களின் வரலாறே உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் ஐரோப்பாவை ஒரு பூதம் ஆட்டிக் கொண்டிருக்கிறது கம்யூனிசம் என்னும் பூதம் எந்த ஆயுதங்களைக் கொண்டு முதலாளித்துவ வர்க்கம் நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தித் தரைமட்டம் ஆக்கியதோ அதே ஆயுதங்கள் இப்போது முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராகத் திருப்பப்படுகின்றன ஆனால் முதலாளித்துவ வர்க்கம் தனக்கே அழிவைத் தரப்போகும் ஆயுதங்களை மட்டும் வார்த்தெடுக்கவில்லை அந்த ஆயுதங்களைக் கையாளப்போகும் மனிதர்களையும் அதாவது நவீனத் தொழிலாளி வர்க்கமாகிய பட்டாளிகளையும் உருவாக்கி உலவவிட்டுள்ளது முதலாளியால் குறிப்பிட்ட மணிநேரம் சுரண்டப்பட்ட தொழிலாளி முடிவில் தன் கூலியைப் பணமாகப் பெற்றுக் கொண்ட மறுகணம் முதலாளித்துவ வர்க்கத்தின் பிற பகுதியினரான வீட்டுச் சொந்தக்காரர் கடைக்காரர் அடகுக்காரர் மற்றும் இன்ன பிறரரிடம் அகப்பட்டுக் கொள்கிறார் முதலாளித்துவ வர்க்கத்துடன் பாட்டாளி வர்க்கம் நடத்தும் போராட்டம் உள்ளடக்கத்தில் இல்லாவிட்டாலும் வடிவத்திலேனும் முதலில் அதுவொரு தேசியப் போராட்டமாகவே இருக்கிறது சொல்லப் போனால் ஒவ்வொரு நாட்டின் பாட்டாளி வர்க்கமும் முதலில் தன் நாட்டின் முதலாளித்துவ வர்க்கத்துடன் கணக்குத் தீர்த்தாக வேண்டும் கம்யூனிஸ்டுகளின் தத்துவ முடிவுகள் யாரோ ஒரு வருங்கால உலகளாவிய சீர்திருத்தவாதி தோற்றுவித்த அல்லது கண்டுபிடித்த கருத்துகளையோ கோட்பாடுகளையோ எந்த வகையிலும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை நடந்துவரும் வர்க்கப் போராட்டத்திலிருந்தும் நம் கண்ணெதிரிலேயே நிகழ்ந்து கொண்டிருக்கும் வரலாற்று இயக்கத்திலிருந்தும் கிளர்ந்தெழும் மெய்யான உறவுகளையே இந்தத் தத்துவ முடிவுகள் பொதுப்படையான வாசகங்களில் எடுத்துரைக்கின்றன கம்யூனிஸ்டுகளின் கொள்கையைத் தனியார் சொத்துடைமை ஒழிப்பு என்னும் ஒரே வாக்கியத்தில் சுருக்கிக் கூறிவிடலாம் தற்போதுள்ள முதலாளித்துவ உற்பத்தி உறவுகளின்கீழ் சுதந்திரம் என்பதற்கு சுதந்திரமான வணிகம் சுதந்திரமான விற்பனையும் வாங்குதலும் என்றே பொருளாகும் கம்யூனிசம் எந்த மனிதனிடமிருந்தும் சமுதாயத்தின் உற்பத்திப் பொருள்களைத் கையகப்படுத்திக் கொள்ளும் அதிகாரத்தைப் பறிக்கவில்லை கம்யூனிசம் செய்வதெல்லாம் அந்தக் கையகப்படுத்தல் மூலமாக மற்றவரின் உழைப்பை அடிமைப்படுத்தும் அதிகாரத்தைத்தான் அவனிடமிருந்து பறிக்கிறது வர்க்கங்களையும் வர்க்கப் பகைமைகளையும் கொண்ட பழைய முதலாளித்துவ சமுதாயத்துக்குப் பதிலாக ஒவ்வொருவரின் சுதந்திரமான வளர்ச்சியையே அனைவரின் சுதந்திரமான வளர்ச்சிக்கு நிபந்தனையாகக் கொண்ட ஒரு கூட்டமைப்பை நாம் நிச்சயம் பெறுவோம் முதலாளித்துவ சமுதாயத்தின் உறுப்பினர்களில் உழைப்போர் சொத்து ஏதும் சேர்ப்பதில்லை சொத்து சேர்ப்போர் உழைப்பதில்லை பாட்டாளி வர்க்கத்தை உருவாக்குகிறது என்பதற்காகக்கூட அல்ல புரட்சிகரமான பாட்டாளி வர்க்கத்தை உருவாக்குகிறது என்பதற்காகவே பிரபு குலத்தோர் முதலாளித்துவ வர்க்கத்தைக் குற்றம் சாட்டுகிறார்கள் கிறிஸ்தவ சோஷலிசம் என்பது சீமான்களின் மனப்புகைச்சலைப் புனிதப்படுத்த மதகுரு தெளிக்கும் புனித நீரன்றி வேறல்ல பகுப்பு புத்தகம்
விளாதிமிர் இலீச் லெனின் ரஷ்ய மொழி ஏப்ரல் யூ நா ஏப்ரல் ஜனவரி ஒரு ரஷ்யப் புரட்சியாளரும் போல்செவிக் கட்சியின் தலைவரும் சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபரும் மற்றும் பின்னாளில் ஜோசஃப் ஸ்டாலினால் மார்க்சியம் லெனினியம் என்று விரிவுபடுத்தப்பட்ட லெனினியம் என்ற கோட்பாட்டின் நிறுவுனரும் ஆவார் மேற்கோள்கள் கட்சி உறுப்பினர் ஆவதற்குதகுதி என்ன வேலை நிறுத்தத் தில் பங்கேற்பது மட்டுமே கட்சி உறுப்பினர் ஆவதற்கு தகுதி அல்ல கீழ்கண்ட தகுதிகளும் இருத்தல் வேண்டும் கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் கட்சியின் கட்டுப்பாடுகளை மதிக்க வேண்டும் கட்சியின் கூட்டு முடிவுகளுக்கு தன்னை உட்படுத்திக்கொள்ள வேண்டும் சமூக மாற்றத்திற்காக இடை விடாது பணியாற்ற வேண்டும் ஸ்தாபனம் தொழிலாளி வர்க்கம் வெல்ல முடியாத சக்தியாக உருவாக வேண்டுமெனில் மார்க்சிய அடிப்படையில் உருவான சித்தாந்த ஒற்றுமை ஸ்தாபன ஒற்றுமை மூலம் செழுமைப்பட வேண்டும் ஏனெனில் மூலதனத்தை எதிர்த்து போராடும் உழைக்கும் மக்களுக்கு உள்ள ஒரே ஆயுதம் ஸ்தாபனம் தான் ஏகாதிபத்தியம் ஏகாதிபத்தியம் முதலாளித் துவத்தின் உச்சக்கட்டம் ஆசை உள்ளத்தின் உறுதியோடு கொள்ளும் நியாயமான ஆசை காலப்போக்கில் நிறைவேறாமல் போகாது காந்தி லெனின் ஒப்பீடு லெனின் வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட பெரிய ஆல்ப்ஸ் மலையாகவே தோன்றுவார் காந்தியோ அட்டையில் செய்யப்பட்ட செயற்கை மலையாகவும் வேகமாக உடைந்து சிதறுகிறவராகவும் இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு மக்களால் அறவே மறக்கப்பட்டு வரலாற்றின் குப்பைக்கூடையில் மட்டுமே இடம்பெற்றவராகவும் தோன்றக்கூடும் விலையுயர்ந்த உலோகங்களையும் அவற்றைப் போலவே தோற்றம் தரும் போலிகளையும் காலமும் சம்பவங்களும்தான் பிரித்துக் காட்டுகின்றன இவான் மெய்ஸ்கி சோவியத் உருசியாவின் பிரித்தானிய தூதராக முதல் வரையில் பதவி வகித்தவர் காங்கிரஸிலிருந்து காந்தி தற்காலிகமாக விலகிவிட்டார் என்ற செய்திக்குப் பிறகு இல் தனது நாட்குறிப்பில் மெய்ஸ்கி பதிவுசெய்தது காந்தி தனிப்பட்ட முறையில் நேர்மையாளராக இருந்தாலும் பிற்போக்கான சிந்தனையாளர் மதத்திலும் தனிமனிதர்களின் மனசாட்சி மீதும் நம்பிக்கை வைப்பவர் லெனினோ பொருளாதார ஒடுக்குமுறைகளுக்குக் கட்டமைப்பிலேயே நிலவும் காரணங்கள் எவையென்று அறிந்தவர் அனைத்து மக்களையும் திரட்டி அந்தச் சுரண்டலுக்கு முடிவுகட்ட முயன்றவர் கடந்துவிட்ட பழைய காலத்தை மீண்டும் உருவாக்க முயல்கிறவர் காந்தி நவீன நாகரிகத்தில் கிடைத்த சாதனைகளை அப்படியே தக்கவைத்துக்கொண்டு சமூகத்தைப் புரட்சிகரமாக மாற்றியமைக்கத் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டுபவர் லெனின் ஸ்ரீபாத அம்ரித் டாங்கே இவர் இல் எழுதிய காந்தியும் லெனினும் என்ற சிறு நூலில் சாத்வீகப் போராட்டத்தின் மூலம் இந்த பிரிட்டிஷ் ஆட்சியை அகற்றிவிடலாம் என்ற உடோப்பிய முறை இத்துடன் முடிவுக்கு வருகிறது இந்த முறையால் எந்தவிதப் பலனும் இல்லை என்று வளர்ந்துவரும் இளைய சமுதாயம் சந்தேகமே இல்லாமல் நன்கு உணர்ந்திருக்கிறது காந்தியைப் பின்பற்றுவதைக் கைவிட்டுவிட்டு லெனின் காட்டும் வன்முறை சார்ந்த புரட்சிகரப் பாதையைத் தேர்ந்தெடுங்கள் பகத் சிங் நாடாளுமன்றத்தின்மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதற்காக கைதுக்குப் பிறகு விடுத்த அறிக்கையில் இருவருமே முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் இரண்டு பெரிய நாடுகளுக்கு இருவருமே புதியதொரு திசையைக் காட்டியுள்ளனர் லெனின் வயதிலேயே இறந்துவிட்டார் அவர் மட்டும் காந்தியைப் போல நீண்ட நாட்களுக்கு வாழ்ந்திருந்தால் ஸ்டாலினும் வந்திருக்க மாட்டார் ஹிட்லர் வரலாற்றில் இடம்பெற்றிருப்பார் என்று நினைக்கிறீர்களா இலக்கிய விமர்சகர் சிரில் கானாலி லண்டனிலிருந்து வெளிவந்த சண்டே டைம்ஸ் இதழில் ஜனவரியில் எழுதிய கட்டுரையில் படித்தவர்கள் பாமரர்கள் என்று அனைவரிடையேயும் இறப்புக்குப் பிறகு காந்தியின் புகழ் லெனினுடைய புகழைவிட அதிகம் தார்மீக அரசியல் முன்னோடி வெவ்வேறு மதங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தியவர் யார் என்றால் அது அகிம்சையைப் போதித்த காந்தியாகத்தான் இருக்க முடியுமே தவிர ஆயுதம் எடுத்துப் போரிடுங்கள் வர்க்கங்களுக்கிடையே போர் நடக்கட்டும் என்று கூறிய லெனின் அல்ல என்பது என்னுடைய கருத்து ராமசந்திர குகா வரலாற்றாளர் காந்தி லெனின் ஒரு வரலாற்று ஒப்பீடு கட்டுரையில் குறிப்புகள் வெளி இணைப்புக்கள் தெரிவுசெய்யப்பட்ட ஆக்கங்கள் பகுப்பு நபர்கள்பகுப்பு அரசியல் தலைவர்கள்பகுப்பு இறை மறுப்பாளர்
வலது திருவள்ளுவர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள்களில் இருந்து இந்த மேற்கோள்கள் உருவாக்கப்பட்டு உள்ளன மேற்கோள்கள் துன்பத்தைச் சிரித்து துரத்திவிடு பேச்சுத் திறமைக்கு எந்த செல்வமும் இணையானது அல்ல பின்பு யோசிக்கும் போது வருத்தம் தரக் கூடிய செயலைச் செய்யாதே நன்கு கற்றவரிடமும் அறியாமை இருக்கும் உழைப்பாளன் வருத்தம் அடைந்தால் உலகம் அழிந்துவிடும் மழையைப் போல பலன் எதிர்பாராமல் உதவி செய்ய வேண்டும் எதற்காகவும் அடுத்த நாட்டை சாராமல் இருக்கும் நாடே சிறந்த நாடு நீரின்றி அமையாது உலகு நபர் பற்றிய மேற்கோள்கள் திருவள்ளுவரைப் பற்றிக் கற்பனைக் கதைகள் நாட்டில் உலாவுகின்றன அந்தக் கட்டுக் கதைகள் சுத்தப் பொய் திருவள்ளுவர் பிறந்தது பாண்டிய நாடு பாண்டிய மன்னரின் அந்தரங்கச் செயலாளராக அவர் பணியாற்றினர் அவருக்குப் பாண்டிய மன்னரால் திருவள்ளுவர் என்ற பட்டம் வழங்கப்பட்டது கி ஆ பெ விசுவநாதம் சான்றுகள் பிற இணைப்புகள் பகுப்பு நபர்கள்
வலது இழப்பதற்கு ஏதும் இல்லை அடிமைச்சங்கிலியைத் தவிர பெறுவதற்கோ உலகமே இருக்கிறது மார்க்சிய மூலவர்கள் என அழைக்கப்படும் காரல் மார்க்சு மற்றும் பிரெட்ரிக் எங்கெல்ஸ் இருவரும் இனைந்து எழுதிய பல கட்டுரைகளில் இருந்து இந்த மேற்கோள்கள் தொகுக்கப்படுகின்றன மேற்கோள்கள் விலங்குகளிடமிருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டிய முதல் வரலாற்று நிகழ்வு அவர்கள் சிந்திக்கிறார்கள் என்பதல்ல அவர்கள் தமது வாழ்க்கைச் சாதனங்களை உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டனர் என்பதே முதலாளித்துவ சமுதாயத்தின் உறுப்பினர்களில் உழைப்போர் சொத்து ஏதும் சேர்ப்பதில்லை சொத்து சேர்ப்போர் உழைப்பதில்லை இழப்பதற்கு ஏதும் இல்லை அடிமைச்சங்கிலியைத் தவிர பெறுவதற்கோ உலகமே இருக்கிறது வெவ்வேறு தேசங்கள் அவை தமக்கு இடையே ஏற்படுத்திக்கொண்ட உறவுகள் ஒவ்வொன்றும் அதன் உற்பத்திச் சக்திகளை உழைப்புப் பிரிவினையை மற்றும் உள்நாட்டு ஒட்டுறவை எந்தளவுக்கு வளர்த்துக் கொண்டுள்ளன என்பதைச் சார்ந்திருக்கிறது சான்றுகள் வெளி இணைப்புக்கள் பகுப்பு மெய்யியல் பகுப்பு அரசியல்
வலது தியோடர் பாஸ்கரன் சுற்றுச்சூழல் சார்ந்தும் திரைப்பட வரலாறு குறித்தும் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர் ஆவார் சுற்றுச்சூழல் பற்றிய அவர் கட்டுரைகளில் இருந்து தொகுக்கப்படும் இந்த மேற்கோள்கள் துவக்க நிலை சூழல் ஆர்வலர்களுக்கு உதவியாக இருக்கும் மேற்கோள்கள் தமிழர்களைப் போல இயற்கையைப் போற்றியவர்களும் இல்லை தமிழர்களைப் போல இயற்கையை மறந்தவர்களும் இல்லை முன்னோர்கள் வளர்த்த தாவரங்களின் பெயர்களைக்கூட மறந்துவிட்டோம் அரணைக்கும் ஓணானுக்கும் வித்தியாசம் தெரியாமல் வளர்கிறார்கள் நம் பிள்ளைகள் பாட்டுப் பாடி தும்பிப் பிடிக்கத் தெரியாமல் வீடியோ கேம்ஸ் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள் நம் குழந்தைகள் ஒரு புதிய உயிரினம் தோன்றுவது தீவுகளில்தான் அதிலும் தீவின் புள்ளினங்களில் தான் இந்தத் தகவமைப்பு அம்சங்கள் நன்கு வெளிப்படுகின்றன புது வீட்டினுள் ஒரு பல்லியின் குரலைக் கேட்டபோது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது பல்லியின் குரல் இல்லாமல் ஒரு வீடா காட்டுயிர் பேணலுக்கு டூரிசம் பெரிய இடராக உருவாகியிருக்கின்றது தமிழ் நாட்டிலுள்ள எல்லா உயிரினங்களுக்கும் ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன் தமிழில் பெயர்கள் இருந்திருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் அந்த மூலப்பெயர்கள் மறக்கப்பட்டு ஆங்கிலேயர்கள் நம் காட்டுயிர்களுக்கு வைத்த ஆங்கிலப் பெயர்களைத் தமிழில் மொழிபெயர்த்து புதிய பொருத்தமில்லாத பெயர்களை நாம் உயிரினங்களுக்குச் சூட்டிவிட்டோம் நாய் பூனை ஆடு என்று எதாவது ஒரு செல்லப்பிராணியை வீட்டில் வளர்ப்பது நமக்கும் விலங்கு உலகிற்கும் ஒரு பாலத்தை அமைத்து போல ஆகும் ஆற்றில் மணலைக் கொள்ளை அடிப்பதற்கும் தாய்ப்பாலைத் திருடி விற்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை தேவைக்கு இயற்கையைப் பயன்படுத்தாமல் பேராசைக்கு இயற்கையைச் சுரண்ட ஆரம்பித்த பிறகுதான் மனிதன் உணவைக் கொஞ்சமாகவும் மாத்திரைகளை அதிகமாகவும் எடுத்துக்கொள்ள வேண்டியதாகிவிட்டது மரம் என்பது மனிதனைப் போல பூமிக்குப் பாரமான உயிர் அல்ல தன் ஒவ்வொரு உறுப்பாலும் இந்த பூமியை உயிர்ப்போடு வைத்திருக்கும் கருப்பொருள் இயற்கை வளம் என்பது வங்கியில் இருக்கும் பணம் போன்றது அதன் வட்டியை மட்டும் எடுத்துக்கொள்வது தான் நியாயம் பேராசையில் முதலிலேயே கை வைத்தால் மழைக்காலத்தில் கூட நூறு டிகிரி வெயிலைத் தவிர்க்க முடியாது பெரிய ஏரிகளிலும் குளங்களிலும் பறவைகள் தென்படாமல் போனால் அந்த நீர் அருந்துவதற்குத் தகுதியற்றது என்று பொருள் இயற்கை ஒரு சிலந்தி வலையைப் போன்றது ஒரு இழையைத் தட்டினாலும் மொத்த இடத்திலும் அதிர்வுகள் எதிரொலிக்கும் அடுத்த தலைமுறைக்கு உயிரினங்களை நேசிக்கக் கற்றுத்தராவிட்டாலும் பரவாயில்லை குறைந்த பட்சம் உயிரினங்களை வெறுக்காமல் இருக்கக் கற்றுக் கொடுத்தால் போதும் மதிய சத்துணவுக் கூடங்கள் ஆரம்பிக்கும் முன்பு தமிழகப் பல்லிகளுக்கு விஷம் இருந்தது இல்லை பல்லிகளுக்கு விஷமில்லை என்பது அறிவியல் பூர்வமான உண்மை போதைப்பொருள்கள் சந்தைக்கு அடுத்தபடியாக பெருமளவில் பணம் கைமாறப்படும் இடம் காட்டுயிர் சந்தைதான் புலி பல்லூழிக் காலப் பரிணாமத்தின் உச்சம் நமது பாரம்பரிய செல்வம் கர்நாடக இசை தாஜ்மகால் போல புலி மற்றும் யானை பற்றிய விவரங்களை இந்த இரு உயிரினங்களுமே இல்லாத ஒரு நாட்டின் மொழி மூலமாகவே நம் மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய நிலை வேதனை அளிக்கக் கூடியது இன்று உணவுக்காக நாம் சாகுபடி செய்யும் எல்லாத் தாவரங்களும் நம்முடன் வாழும் செல்லப்பிராணிகள் கால்நடைகள் எல்லாமே காட்டுயிரிலிருந்து வந்தவைதான் சோலைக்காடுகள் இயற்கை நமக்களித்த ஓர் உண்ணதக் காப்பீட்டுத் திட்டம் இதை நாம் காலாவதியாக விட்டுவிட்டோம் நாடு என்பது மக்களால் மட்டுமே ஆனது அல்ல அதில் ஓடும் ஆறுகள் மலைகள் காடுகள் அங்கு வளரும் செடிகொடிகள் மரங்கள் காட்டுயிர்கள் இவையாவுமே ஒரு நாட்டின் முழுப் பரிமாணத்தை உண்டாக்குகின்றன இந்தியச் சுற்றுச்சூழலின் சிதைவின் முக்கியப் பொறுப்பு வசதி படைத்தவர்களுடையதுதான் ஒரு பறவையின் தமிழ்ப்பெயர் அதன் இயல்பைப் பற்றி நமக்குத் தகவல் தரக்கூடும் ஒரு பறவையின் நடத்தையை விவரிக்கக் கூடும் உயிரினங்களுக்கான பாரம்பரியத் தமிழ்ப்பெயர்கள் பொருள் பொதிந்த காரணப்பெயர்கள் ஒரு இடத்தின் இயற்கை எழிலைக் குலைக்க வேண்டும் என்றால் அங்கு ஒரு சாலை போட்டுவிட்டால் போதும் இயற்கை ரீதியில் ஒவ்வொரு செயலுக்கும் நாம் ஒரு விலை கொடுத்திருக்க வேண்டும் மனிதர்கள் உணவுக்காக மட்டுமே வேட்டையாடிய போது தீமை ஏதும் ஏற்படவில்லை அவர்களும் ஒரு இரைக் கொல்லியாக காட்டுப்பூனை புலி போன்று இயங்கினார்கள் வேட்டை இலக்கியம் சுவரசியமானதாக இருக்கலாம் அவை ஜேம்ஸ்பாண்ட் நாவல்களைப் போலத்தான் மதிப்பிடப்பட வேண்டும் எந்தச் செடியில் எந்த நோய்க்கு மருந்து ஒளிந்து கொண்டிருக்கிறது என்பது நமக்குத் தெரியாது அதனால்தான் தாவரப் பல்லுயிரியம் பாதுகாக்கப்பட வேண்டும் சான்றுகள் பகுப்பு நபர்கள் பகுப்பு தமிழர்கள் பகுப்பு சூழலியல் ஆர்வலர்கள் பகுப்பு தமிழ் எழுத்தாளர்கள்
சுற்றுச்சூழல் தொடர்பான பல சூழலியல் அறிஞர்களின் கருத்துகள் இங்கு மேற்கோளாகத் தொகுக்கப்பட்டுள்ளன மேற்கோள்கள் இருபதாம் நூற்றாண்டு இசம் களிலேயே சுற்றுச்சூழலுக்கு தீமை பயப்பது டூரிசம் தான் ஆகா கான் மனிதர்கள் இல்லாமல் பறவைகளால் வாழ்ந்துவிட முடியும் பறவைகள் இல்லாமல் மனிதர்களால் வாழவே முடியாது சலீம் அலி இயற்கையைப் பராமரிக்க மனிதருக்கு கற்றுக்கொடுக்க ஒரே வழி அவர்கள் குழந்தையாக இருக்கும் போதே இயற்கையைப் புரிய வைப்பதுதான் கான்ராட் லாரன்ஸ் இந்த உலகம் பூச்சிகளின் உலகம் தான் அதில் மனிதரும் வசிக்கின்றனர் சிற்றுயிர்களைப் புறக்கணிப்பவன் சிறிது சிறிதாக வீழ்வான் சாலமோன் ராஜா மக்களது நல்லெண்ணமும் ஒத்துழைப்பும் இல்லாமல் வனத்தையோ அல்லது அதில் வாழும் காட்டுயிர்களையோ பாதுகாக்க முடியாது ஒரு சந்ததி போகிறது மறு சந்ததி வருகிறது பூமியோ என்றென்றைக்குமாக நிலைத்திருக்கிறது நம்மில் பலர் புற உலகு என்று ஒன்று இல்லாதது போலவே வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள் கார்ல் சேகன் தாவரவியலைச் செடி கொடிகள் மூலம்தான் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் புத்தகங்கள் மூலம் அல்ல சிவில் இஞ்சினியர்களின் கையில் இந்தியாவின் நீர் மேலாண்மையைக் கொடுப்பது சில தச்சர்களை விட்டு இதய அறுவை சிகிச்சை செய்ய சொல்வதற்கு ஒப்பாகும் பிட்டு செகல் வறுமை தான் உலகை மாசுபடுத்துகிறது இந்திராகாந்தி சாலைகள் ஆக்டோபசின் தும்பிக்கைகள் போல நம் காடுகளுக்குள் நீண்டிருப்பதை நான் வருத்தத்துடன் காண்கிறேன் உல்லாஸ் கரந்த் பருவநிலை மாறுதல்களின் விளைவை உணர்ந்ததில் நாம்தான் முதல் தலைமுறையாக இருக்கிறோம் அதைச் சரிசெய்யக்கூடிய கடைசித் தலைமுறையாகவும் நாம்தான் இருக்கிறோம் வாஷிங்டன் மாநில கவர்னர் ஜே இன்ஸ்லீ சுற்றுச்சூழல் மீது நாம் அக்கறை கொள்வது நமக்காக மட்டுமல்ல வருங்கால சந்ததிக்காகவும் தான் வெளி இணைப்புக்கள் பகுப்பு சூழலியல்
மெக்காலே ஆம் ஆண்டு இந்தியாவின் கல்வித்துறையின் தலைவராக நியமிக்கப்பட்டவர் கல்விமுறையை வடிவமைக்கும் அறிக்கையைத் தயார் செய்தவர் மேற்கோள்கள் ஐரோப்பிய நூலகம் ஒன்றின் அலமாரியின் ஒரே ஒரு அடுக்கு இந்திய அரேபிய இலக்கியத்தின் ஒட்டுமொத்த சாரத்தைவிட மேன்மையானது கல்வியில் பிராந்திய மொழிகளில் புத்தகங்கள் அச்சிடுவதைக் கூட உடனடியாக நிறுத்திவிட வேண்டும் புத்தகம் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் ஆங்கில இலக்கியமும் அறிவியலும் கற்பது இந்தியர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் படிப்பில் பிரியமில்லாத அரசனா யிருப்பதைவிட ஏராளமான நூல்களுடைய ஏழையாயிருப்பதையே விரும்புவேன் வீடு வீடாகச் சென்று ஓட் சேகரிப்பது பெருந்தவறான காரியம் பொது மக்கள் தங்கள் பொறுப்பைக் கடமையை உணர்ந்து நடந்துகொண்டால் ஓட் சேகரிக்கும் வீண் வேலை ஏன் பயனற்ற உயரிய குண நலன் அற்ற திறனற்ற ஒருவரை மக்கட் பிரதிநிதி என்று கூறி அந்த மனிதருக்கு ஓட் போடுமாறு போய்க் கேட்பது வாக்காளரை அவமானப் படுத்துவதாகும் உலகத்திலுள்ள மில்டனின் புத்தகங்களையெல்லாம் எரித்து விட்டால் கூட என் ஞாபக சக்தியைக் கொண்டு மீணடும் அவைகளை அப்படியே எழுதிவிடுவேன் குறிப்புகள் பகுப்பு நபர்கள் பகுப்பு கல்வியியல் பகுப்பு பிறப்புக்கள் பகுப்பு இறப்புக்கள்
பிளேட்டோ கிமு கிமு பெரும் செல்வாக்குள்ள கிரேக்கத் தத்துவஞானியாவார் இவர் சாக்கிரட்டீசின் சீடர் அரிஸ்டாட்டிலின் குரு மேற்கோள்கள் நேர்மை பெரும்பாலான நேரங்களில் நேர்மையின்மையை விட குறைவான லாபம் உள்ளதாகவே இருக்கின்றது துவக்கமே ஒரு வேலையின் மிக முக்கியமான பகுதியாக இருக்கின்றது நாம் உறுதியான நம்பிக்கையுடன் போராடினால் நம்மிடம் இருமடங்கு ஆயுதம் இருப்பதைப் போன்றது ஆசை உணர்ச்சி அறிவு ஆகிய மூன்று முக்கிய ஆதாரங்களிலிருந்தே மனிதனின் நடத்தை வழிந்தோடுகிறது இன்றைய கற்பவர் நாளைய தலைவர் பரிசோதனை இல்லாத வாழ்க்கை மதிப்புடைய வாழ்க்கை அல்ல தேவையே கண்டுபிடிப்பின் தாய் ஒரு மனிதன் தன்னை வெற்றிகொள்வதே அனைத்து வெற்றிகளுக்கும் முதலாவதும் உன்னதமானதும் ஆகும நல்ல விஷயத்தைத் திரும்பச் செய்வதில் எந்த தீங்கும் இருக்கப் போவதில்லை எந்த வழியில் ஒரு மனிதனுக்கு கல்வி தொடங்குகின்றது என்பதே வாழ்க்கையில் அவனது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் எதற்கெல்லாம் பயப்படக் கூடாது என்பதை அறிந்திருக்கும் செயலே தைரியம் நல்ல வேலைக்காரனாக இல்லாத ஒருவன் நல்ல எஜமானனாக இருக்க மாட்டான் அடிமைமுறை அடிமைகளை வைத்துக்கொள்ளல் முற்றிலும் அநீதியான முறையாகும் அநீதி அநீதியிழைப்பவன் அநீதிக்கு உட்பட்டவனைவிட அதிகத் துயரடைவான் அரசாங்கம் அரசாங்கம் என்பது வெறும் ஆலோசனை கூறுவது மட்டுமன்று அதற்கு அதிகாரம் உண்டு தன் சட்டங்களை அமல் நடத்தும் ஆற்றலும் உண்டு அழகு அழகு இயற்கை அளித்துள்ள பேறு அறம் அற வாழ்வில் ஆசையுள்ளவன் சத்தியத்தைச் சார்ந்து நிற்கும் பொழுதுதான் அவன் துக்கம் தொலைகிறது அதற்கு முன்னால் அன்று அறிவின்மை கல்லாமையைவிடப் பிறவாமலிருத்தல் மேலாகும் ஏனெனில் அறிவின்மைதான் எல்லாத் துயரங்களுக்கும் வேர் அற்ப விஷயம் அற்பமான பயனற்ற விஷயங்களில் அவைகளுக்கு உரிய நேரத்திற்குக் கூடுதலாகச் செலவழிப்பதைவிட ஓர் அறிவாளிக்குத் தகுதியில்லாததும் வருத்தப்படத்தக்கதும் வேறு எதுவுமில்லை இறைமறுப்பு நெருக்கடியான ஆபத்துக் காலத்திலும் ஒரு தெய்விக சக்தியை ஏற்றுக்கொள்ளாத பிடிவாதமுள்ளவர் சிலரே இருப்பர் உணர்ச்சி உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் அவர்களுக்கு எல்லாம் தலைகீழாகவே தெரியும் சமத்துவம் இயற்கையில் எல்லா மனிதர்களும் சமத்துவமாக உள்ளவர்கள் எல்லோரும் ஒரே மண்ணால் ஒரே கடவுளால் படைக்கப் பெற்றவர்கள் நாம் நம்மை எவ்வளவுதான் ஏமாற்றிக் கொண்டாலும் கடவுளுக்கு வல்லமையுள்ள அரசன் எவ்வளவு வேண்டியவனோ அவ்வளவு வேண்டியவன் ஏழைக் குடியானவனும் சிந்தனை ஆன்மா தானே தன்னுடன் பேசிக்கொள்வது சிந்தனை தண்டனை தீயவன் ஒருவன் தண்டிக்கப்பெறுவது நோயாளிக்கு மருந்து கொடுப்பது போலாகும் எல்லா வகைத் தண்டனையும் ஒரு வகை மருந்துதான் தன்னம்பிக்கை தன்னுடைய இன்பத்திற்குத் தேவையான ஒவ்வொன்றையும் மற்றவர்கள் சார்பில்லாமல் தானே அமைத்துக்கொள்ளும் மனிதன் இன்பமாக வாழ்வதற்குத் தலைசிறந்த வழியைக் கடைப் பிடிக்கிறான் இவனே நிதானமான தேவையுள்ளவன் ஆண்மையும் அறிவும் உள்ளவன் நட்பு ஆடவன் பெண்ணிடம் கொள்ளும் காதல் சாதாரணமானது இயல்பானது ஆரம்பத்தில் அது உணர்ச்சியால் ஏற்படுவது ஒருவன் தானாகத் தேர்ந்து ஏற்படுத்திக்கொள்வதன்று ஆனால் மனிதனுக்கு மனிதன் அமைத்துக்கொள்ளும் உண்மையான நட்பு எல்லையற்றது நித்தியமானது பாவம் கடவுள் என்னை மன்னிப்பாரென்றும் மனிதர்கள் என் பாவத்தைத் தெரிந்துகொள்ளமாட்டார்கள் என்றும் எனக்கு உண்மையாகத் தெரிந்தால்கூட நான் பாவம் செய்ய வெட்கப்படுவேன் ஏனெனில் அதில் அவ்வளவு இழிவு ஒட்டியுள்ளது குறிப்புகள் வெளி இணைப்புக்கள் பகுப்பு மெய்யியலாளர்கள் பகுப்பு கிரேக்கர்கள்
ஜான் கால்டுவெல் ஹோல்ட் ஒரு அமெரிக்க கல்வியியலாளர் எழுத்தாளர் குழந்தைகளின் உரிமைகள் பற்றிய கருத்தாக்கத்தைத் துவக்கியவர்களுள் முக்கியமானவர் மேற்கோள்கள் குழந்தைப் பருவத்திலிருந்து தப்புதல் எனும் இவரது நூலில் இருந்து எடுக்கப்பட்டவை இந்த மேற்கோள்கள் இன்றைய குழந்தை வளர்ப்பு முறை மத்தைய தர வர்க்கத்தின் பணம் ஈட்டும் வெறி யை மையமாகக் கொண்டு இயங்குகிறது தனது வருங்காலத்திற்கான முதலீடாக மூலதனமாக எதிர்கால வருமானமாக தனது குழந்தையைப் பெற்றோர்கள் பார்க்கிறார்கள் இன்றைய பெற்றோர் தங்களது குழந்தையை ஒரு அசாதாரண வளர்ப்புச் செல்லப் பிராணியாகக் கருதுகின்றனர் வெளி இணைப்புக்கள் பகுப்பு நபர்கள் பகுப்பு கல்வியாளர்கள்
ரிச்சர்ட் மாத்யூ ஸ்டால்மன் ரிச்சர்ட் மாத்யூ ஸ்டால்மன் என்பவர் கட்டற்ற மென்பொருள் இயக்கம் க்னூ திட்டம் கட்டற்ற மென்பொருள் இயக்கம் நிரலாக்க தளையறுப்பு லீக் போன்றவற்றின் தோற்றுவிப்பாளராவார் மேற்கோள்கள் நம்மைப் பொருத்த வரை ஒரு நிரலை பயன்படுத்தவதில் ஏற்புடையக் கட்டுப்பாடென்பது அதன் மீது மற்றவர் கட்டுப்பாடு எதையும் விதித்துவிடக் கூடாது என்பதே வெளி இணைப்புக்கள் பகுப்பு நபர்கள் பகுப்பு அமெரிக்கர்கள்
விளையாட்டு என்பது பொழுதுபோக்குக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் சில வேளைகளில் கற்பித்தல் நோக்கத்துக்காகவும் நடத்தப்படும் கட்டமைப்புக் கொண்ட ஒரு செயற்பாடு ஆகும் விளையாட்டு சில சமயங்களில் வேலை என்பதுடன் தொடர்புடையது போல் காணப்படுகிறது மேற்கோள்கள் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபடுவது மனித உரிமையாகும் எந்த வகையான பாகுபாடும் இல்லாமல் விளையாட்டுப் பயிற்சிக்கான சாத்தியம் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இருக்க வேண்டும் ஒலிம்பிக் சாசனம் வெளி இணைப்புக்கள்
புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ விருத்தாசலம் ஏப்ரல் மே மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர் நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார் கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும் முற்போக்குச் சிந்தனையும் இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள் இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன மேற்கோள்கள் இலக்கியத்தில் சுவையம்சம் என்பது ஜீவத்துடிப்பில்தான் இருக்கிறது பேயும் பிசாசும் இல்லை என்றுதான் நம்புகிறேன் ஆனால் பயமாக இருக்கிறது வார்த்தைகளை வைத்துக்கொண்டு ஜனங்களைப் பயங்காட்டுவது ரொம்ப லேசு பொதுவாக என்னுடைய கதைகள் உலகத்துக்கு உபதேசம் செய்யும் ஸ்தாபனம் அல்ல பிற்கால நல்வாழ்வுக்கு சௌகரியம் பண்ணி வைக்கும் இன்ஷ்யூரன்ஸ் ஏற்பாடும் அல்ல எனக்குப் பிடிக்கிறவர்களையும் பிடிக்காதவர்களையும் கிண்டல் செய்து கொண்டிருக்கிறேன் சிலர் என்னோடு சேர்ந்துகொண்டு சிரிக்கிறார்கள் இன்னும் சிலர் கோபிக்கிறார்கள் வேதாந்திகள் கைக்குள் சிக்காத கடவுள் மாதிரிதான் நான் பிறப்பித்துவிட்டவைகளும் அவை உங்கள் அளவுகோல்களுக்குள் அடைபடாதிருந்தால் நானும் பொறுப்பாளியல்ல நான் பிறப்பித்து விளையாடவிட்ட ஜீவராசிகளும் பொறுப்பாளிகளல்ல உங்கள் அளவுகோல்களைத்தான் என் கதைகளின் அருகில் வைத்து அளந்து பார்த்துக்கொள்கிறீர்கள் என்று உங்களுக்குச் சொல்லிவிட விரும்புகிறேன் உண்மையே இலக்கியத்தின் ரகசியம் வாழ்க்கையில் ஒருவெறி ஏற்பட்டால்தான் பிடிப்புடன் முன்னேறி வாழமுடியும் அதைச் சமயம் கொடுக்கிறது அது சொல்லுகிற மோட்சத்தைக் கொடுக்காவிட்டாலும் இது போதும் அந்த மோட்சத்தைவிட இது மேலானது கவிதையைப் போதனைக்குரிய கருவிசாக உபயோகப்படுத்தும் வரை அது கவிதையாக இருக் காது அதன் ரசனை கெட்டு விடுகிறது நல்ல இலக்கியமென்றால் எத்தனை நந்திகள் வழிமறித்துப் படுத்துக்கொண்டாலும் இவை உரிய ஸ்தானத்தை அடைந்தே தீரும் பனைமரத்தில் ஊசியைச் சொருகிக் கொண்டு சுமந்து நடந்த பரமார்த்த குருவின் சீடர்கள் போல எத்தனைபேர் சுமந்து வந்தாலும் பரங்கிக்காய் குதிரை முட்டையாகி விடாது உணர்ச்சி விஷயங்களில் இனிமேல் என்ற பிரச்சினையைப் பெண்களே சீக்கிரத்தில் கவனிக்கக் கூடியவர்கள் தன்னை ஒப்பு க்கொடுப்பது தன்னுடைய வாழ்க்கையை ஓர் ஆண்மகனிடம் பணயமாக வைப்பது எவ்வளவு சீக்கிரத்தில் நடக்கிறதோ அவ்வளவு விரைவிலேயே வருங் காலத்தைப் பற்றித் திட்டம் போடும் திறனும் படைத்து விடுகிறார்கள் அப் பெண்கள் வகுப்பில் இரண்டு கெட்டிக்காரர்கள் இருந்தால் இரண்டு பேர்களுக்கும் நட்பு ஏற்படுவது இயற்கை பகைமை ஏற்படுவதும் சகஜம் இவை இரண்டும் அற்று இருப்பது விதிக்கு விலக்கு பெரிய மீன் சின்ன மீனைத் தின்னலாம் ஆனால் சின்ன மீன் அதற்கும் சின்ன மீனைத் தின்றால் பெரிய மீன் குற்றம் செய்கிறாய் என தண்டிக்க வருகிறது இது தான் சமூகம் ஒழுக்கமும் தர்மமும் மோட்சமும் கவிஞனது உள்ளத்தில் ஊறி இருதயத்தின் கனிவாக வெளிப்படும் இசைதான் கவிதையாகும் உடற்கூறு நூல் படியாவிட்டால் உயிர் வாழ முடியாதென்று சொல்ல முடியாது அதைப் போல் இலக்கணம் இல்லாவிட்டால் கவிதை இருக்க முடியாதென்று கூற முடியாது ஆனால் கவிதையை ரஸிப்பதற்குக் கவிதை என்றால் என்ன வென்று தெரிந்திருக்க வேண்டும் தற்காலத்தில் பண்டிதர்கள் இலக்கியம் எது என்று கவனிக்க முடியாமல் எல்லாவற்றையும் புகழ்ந்து கொண்டு இடர்ப்படுவதற்குக் காரணம் அவர்கள் இலக்கியம் என்றால் என்னவென்று அறியாததுதான் வாழ்க்கையின் அர்த்தத்தைச் சொல்லுவது தத்துவம் வாழ்க்கையைக் சொல்வது அதன் ரசனையைச் சொல்வது இலக்கியம் சிறுகதை வாழ்க்கையின் சாளரங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியை அல்லது ஒருவரின் தனி உணர்ச்சியை அல்லது ஒரு குண சம்பவத்தை எடுத்துச் சித்திரிப்பது கலை தர்ம சாஸ்திரம் கற்பிக்க வரவில்லை ஒழுக்க நூலை இயற்ற வரவில்லை உடற்கூறு நூலை எடுத்துக் காட்ட வரவில்லை பத்துத் தலை ராவணனும் ஆறுதலை சுப்ரமணியனும் உடற்கூறு நூலுக்குப் புறம்பான அபத்தமாக இருக்கலாம் ஆனால் ஒரு கொள்கையை இலட்சியத்தை உணர்த்தக்கூடியது அது தான் கலையின் இலட்சியம் வாழ்க்கைப் பாதையில் கணவனும் மனைவியுமாகச் செல்லுகையில் மஞ்சள் பூப் போல் இருந்த சமூகம் பந்துக்கள் அவன் பிரிந்தவுடன் முட்களாகக் குத்துகிறார்கள் தெரிந்ததைச் சொல்லுவதற்குப் புஸ்தகமா தெரியாததை அறிவதற்குப் புஸ்தகமா இரண்டிற்கும்தான் கவிஞன் உலகத்தின் உண்மைகளை வாழ்க்கையின் ரகஸியங்களை வேறு விதமாகப் பார்க்கிறான் அவன் கண்கள் உணர்ச்சிக் கண்கள் கனவுக் கண்கள் கவிதையில் சரியான வார்த்தைகள் சரியான இடத்தில் அடைய வேண்டும் கவிஞன் வார்த்தைகளை எடுத்து கோர்ப்பதில்லை உணர்ச்சியின் பெருக்கு சரியான வார்த்தைகளைச் சரியான இடத்தில் கொண்டு கொட்டுகிறது புதுமைப்பித்தன் கத்தி விழுங்குபவனும் கவிராயனும் ஒன்றல்ல கவிராயன் நாம் செய்யக் கூடிய காரியத்தைத்தான் நாம் எப்படிச் செய்ய விரும்புகிறோமோ அந்த அளவு ஆணித்தரமான அழுத்தத்துடன் செய்கிறான் என்பவை தவிர நாம் செய்ய முடியாத காரியத்தை அவன் செய்கிறான் என்பதல்ல புதுமைப்பித்தன் நமது இலக்கியமானது நெடு நாள் பட்ட வளர்ச்சி கண்டது அதன் வார்த்தை அமைதிகளே கவிதைப் பண்பு கொண்டு நடைபயிலும் சிறு குழந்தைக்கு நடைவண்டி போல அமைந்து கிடப்பதால் பேரிகை கொட்டி பிழைப்பதைவிட கவிதை கட்டிப் பிழைப்பது இலகுவான காரியமாகி விட்டது புதுமைப்பித்தன் மோகனமான பகற் கனவுகள் காண்பதில் கவிஞனுக்கு இணையாகக் காதலர்களைத்தான் ஒருவாறு கூறலாம் புதுமைப்பித்தன் கவிஞன் எப்பொழுதும் ஒரு இலட்சிய உலகில் வசிப்பவன் அவனது உள் மனத்தின் உணர்ச்சி ஊற்றுக்களிலிருந்து ஜீவசக்தி பெற்று வரும் வார்த்தைகள் தாம் கவிதைகள் புதுமைப்பித்தன் கடவுள் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன ஒரு கூட்டத்தின் பாதுகாப்பிற்கு அது அவசியமானால் ஒரு பொய்யைச் சொல்லித்தான் கடவுள் என்ற பிரமையைச் சிருஷ்டித்தால் என்ன இந்தக் கடவுள் விஷயம் ரொம்ப ஸ்வாராஸ்யமானது அது தனிமனிதனுக்கு ஒரு தைரியத்தைக் கொடுக்கிறது சமூகத்திற்கு ஒரு சக்தியைக் கொடுப்பது போல் நாஸ்திகம் தர்க்கத்தில் நிஜமகே இருக்கலாம் அது சுவாரஸ்யமற்றது வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ஏற்படுத்த முடியாதது சிறுகதைகளில் இருந்து மேற்கோள்கள் நான் ஓடினால் காலம் ஓடும் நான் அற்றால் காலம் அற்றுப்போகும் இருட்டுக்கும் பயத்துக்கும் ஒளிவிடம் இல்லாத பகலிலே எல்லாம் வேறு மாதிரியாகத் தான் தோன்றுகிறது மதுரைக்கு வழி வாயிலே சிக்கிரிப் பவுடர் காப்பி மாதிரிதான் இருக்கும் ஆனால் காப்பி அல்ல சில பேர் தெய்வத்தின் பேரைச் சொல்லிக்கொண்டு ஊரை ஏமாற்றி வருகிற மாதிரி மனிதன் கடவுளைப் படைத்தான் அப்புறம் கடவுள் மனிதனை சிருஷ்டிக்க ஆரம்பித்தான் மனிதன் தன் திறமையை அறிந்து கொள்ளாமல் செய்த பிசகுக்கு கடவுள் என்று பெயர் மனிதனுக்கு உண்டாக்கத்தான் தெரியும் அழிக்கத் தெரியாது அழியும் வரை காத்திருப்பதுதான் அவன் செய்யக்கூடியது சென்னையிலே தர்ம சிந்தனை ஒரு போக வஸ்து அந்த சிங்கிகுளத்துப் பெண் மூவாயிரம் ரூபாயைப் பணயமாக வைத்து அவனுடன் வாழ்க்கையைப் பிணைத்துக் கொள்ள சம்மதிக்கும் பொழுது ஐந்து ரூபாய்க்கு இரண்டு மணிநேரம் சரி தானே பிற இணைப்புகள் சான்றுகள் பகுப்பு எழுத்தாளர்கள் பகுப்பு தமிழர்கள் பகுப்பு தமிழ் எழுத்தாளர்கள் பகுப்பு பிறப்புக்கள் பகுப்பு இறப்புக்கள்
வலது நான் மாபெரும் மனிதர்களின் தோள்களின் மேல் நின்றதாலேயே என்னால் நெடுந்தொலைவு காண இயன்றது ஐசக் நியூட்டன் டிசம்பர் மார்ச் ஒரு கணிதவியலாளரும் அறிவியலாளரும் தத்துவஞானியும் ஆவார் அறிவியல் கணிதம் இயந்திரவியல் துறைகளிலும் ஈர்ப்பு விசை பற்றியும் பெரிதும் ஆய்வுகள் மேற்கொண்டவர் நியூட்டன் மேற்கோள்கள் இந்த உலகிற்கு நான் எவ்வாறு தோன்றுகின்றேன் என்று எனக்குத் தெரியாது ஆனால் விரிந்து பரந்துள்ள உண்மையெனும் மிகப்பெருங்கடலை எல்லாம் கண்டுணராமல் அவ்வப்போது வழுவழுப்பான கூழாங்கல்லையோ மற்றவற்றைக் காட்டிலும் அழகான சிப்பியையோ தேடிக்கொண்டு கடற்கரையில் விளையாடிக்கொண்டு இருக்கும் ஒரு சிறுவன் என்றே என்னைக் கருதுகின்றேன் ஒப்புக கரையில் கூழாங்கற்கள் பொறுக்கும் குழந்தைகள் போல ஜான் மில்டன் சொர்க்க மீட்பு நூல் வரி ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு இயக்க விதிகள் நான் மாபெரும் மனிதர்களின் தோள்களின் மேல் நின்றதாலேயே என்னால் நெடுந்தொலைவுகளைக் காண இயன்றது ராபர்ட் ஹூக்கிற்கு எழுதிய மடலில் பெப்ரவரி யூலியன் நாட்காட்டிப்படி பெப்ரவரி நாளிட்டது கிரெகொரியின் நாட்காட்டிப்படி பெப்ரவரி ஆனது மடலின் பிரதி இணையத்தில் உள்ளது பிளாட்டோவும் என் நண்பர்தான் அரிஸ்டாட்டிலும் என் நண்பர்தான் ஆனால் உண்மைதான் என்னுடைய மிகச்சிறந்த நண்பன் நியூட்டன் சில மெய்யியல் கேள்விகள் என்ற தலைப்பில் இலத்தீனில் தனக்குத் தானே எழுதிக்கொண்ட குறிப்பு ரோஜர் பேகன் அரிஸ்டாடில் கூறியதாக உரைத்த கூற்றின் திரிபு உண்மை எப்போதும் எளிமையிலிருந்தே கண்டறியப்பட வேண்டும் குழப்பத்தில் இருந்து அல்ல கடவுள் அனைத்தையும் எண் எடை அளவுகளைக் கொண்டே உருவாக்கினார் காண்க சாலமனின் மதிநுட்பம் ஆங்கிலத்தில் இன்று உன்னால் கூடியமட்டும் நன்றாய்ச் செய் நாளை அதனினும் நன்றாய்ச் செய்யும் ஆற்றல் நீ பெறக் கூடும் நான் மதிப்புயர்ந்த விஷயங்கள் எவைகளையாவது கண்டுபிடித்துள்ளேன் என்றால் அது என்னுடைய பொறுமையுள்ள கவனத்தினால்தான் வேறு பிரமாதமான சக்தியால் அன்று பிற இணைப்புகள் பகுப்பு அறிவியலாளர்கள்பகுப்பு விஞ்ஞானிகள்பகுப்பு இயற்பியலாளர்கள்
வலது அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் ஜான் லெனன் ஒரு பாடல் ஆசிரியர் இசையமைப்பாளர் த பீட்டில்ஸ் இசைக்குழுவை உருவாக்கியவர்களில் ஒருவர் மேற்கோள்கள் கிறிஸ்துவையும் மிஞ்சும் எங்களுடைய புகழ் நான் உலகம் அமைதியால் நிறையும் என்கிறேன் நான் கனவுக்காரன் என்கிறார்கள் நான் தனியனில்லை நீங்களும் என்னோடு சேருவீர்கள் உலகம் அந்த நாளில் ஒன்றாகும் நான் கடவுளை நம்புகிறேன் அவன் ஒரு பொருளில்லை அவன் வானில் உள்ள கிழவனில்லை யாரை நேசிக்கிறாய் கவலையில்லை எங்கே நேசிக்கிறாய் தேவையில்லை எதை நேசிக்கிறாய் கேள்வியில்லை எப்படி நேசிக்கிறாய் பொருட்டில்லை ஏன் நேசிக்கிறாய் அவசியமில்லை நேசிக்கிறாயா அது போதும் இயேசு நபிகள் புத்தர் எல்லார் சொன்னவையும் சரியே மொழி பெயர்த்தவர்கள் தவறிப்போனார்கள் வெளி இணைப்புக்கள் பகுப்பு நபர்கள்
வலது ரிச்சர்ட் டாக்கின்சு கிளின்டன் ரிச்சார்ட் டாக்கின்சு கிளின்டன் ரிச்சர்ட் டாக்கின்ஸ் பிறப்பு மார்ச் பரவலாக அறியப்பட்ட ஒரு படிவளர்ச்சி உயிரியலாளர் இவர் உயிரியல் துறையிலும் முக்கிய பங்களிப்பு செய்துள்ளார் மேற்கோள்கள் வானவில் எப்படி உண்டாகிறது என நாம் புரிந்து கொள்ளத் தொடங்கிய பின்பும் அந்நிகழ்வைப் பற்றிய நம் வியப்பு குறைவதில்லை இல்லாத பெண்ணுக்கும் இல்லாத ஆணுக்கும் இடையில் என்ன வேற்றுமை இருக்கப் போகிறது இந்த உலகில் உண்மையான கவிதைகள் இருக்கின்றன ஆனால் அறிவியலோ உண்மைகளின் கவிதைகள் அறிவியல் நமக்கு அளிக்கின்ற பிரமிப்பூட்டும் ஆச்சரிய உணர்ச்சி என்பது மனித மனம் எட்டிப் பிடிக்கக் கூடிய மிக உன்னதமான உணர்ச்சிகளில் ஒன்று அற்புதமானதொரு இசையும் கவிதையும் அளிக்கின்ற ஆழ்ந்த அழகியல் உணர்ச்சிக்கு இணையானது அது இந்த உலகமும் பிரபஞ்சமும் அழகானவை அற்புதமானவை அவற்றை எந்த அளவுக்கு நாம் புரிந்து கொள்கிறோமோ அந்த அளவுக்கு அறிவியல் என்பது எதார்த்தத்தின் கவிதை சான்றுகள் பகுப்பு நபர்கள் பகுப்பு இறை மறுப்பாளர் பகுப்பு அறிவியல்
வலது அலெக்சாண்டர் இவானொவிச் குப்ரின் புகழ்பெற்ற உருசியா எழுத்தாளர் ஆவார் உருசிய சிறுகதைகளில் சாதனைகள் புரிந்தவர் மேற்கோள்கள் பிரித்தானியர் ஒருபோதும் ஒருபோதும் ஒருபோதும் அடிமைகளாவது இல்லை நாங்கள் ஏன் போர் வீரர்கள் ஆனோம் தூரக் கிழக்கிற்கு அனுப்பப்பட்டோம் எங்கள் தவறா இது வளர்ந்து பெரியவன் ஆனது காயங்களில் மூன்று வகை உண்டு துளைப்பது குத்துவது வெட்டுவது மேலும் உள்ளத்தைப் புண்படுத்துகிற காயங்களும் உண்டு நானோ வெற்றியுடன் வீடு திரும்புகிறேன் நீயோ ஓர் கையின்றி உங்களால் ஒரு மனிதனை நீங்கள் நொண்டியாக்கவே முடியும் ஆனால் கலை உயிர் பிழைத்திருக்கவும் மற்ற எதையும் வெற்றிகொள்ளவும் செய்கிறது என் நரம்புகள் உருசிய மண்ணுக்காக ஏங்குகின்றன என் பிரியத்துக்குரிய அனைத்தும் நொறுங்குகின்றன சான்றுகள் பகுப்பு பிறப்புகள் பகுப்பு இறப்புகள் பகுப்பு எழுத்தாளர்கள்
பின் நவீனத்துவம் என்பது குறிப்பாக மேற்கு நாடுகளில் கலை இலக்கிய உலகில் நிலவும் ஒரு பொதுச்சிந்தனைப்போக்கு நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தால் உருவான புதியசிந்தனைப்போக்கு நவீனத்துவம் மாடர்னிசம் என்று சொல்லப்படுகிறது அந்தப்போக்கு காலாவதியாகிவிட்டது என்று மறுக்கும் போக்குக்கு பின்நவீனத்துவம் என்று பெயர் மேற்கோள்கள் நவீனத்துவம் உலகை பார்த்தது பின்நவீனத்துவம் உலகை நாம் எப்படி பார்க்கிறோம் எப்படி நம் பார்வை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று பார்க்கிறது ஜெயமோகன் பின்நவீனத்துவம் என்பது ஒரு சித்தாந்தமோ அல்லது வரையறுக்கப்பட்ட கோட்பாடோ அல்ல வரையறைகளையும் சேர்த்து மறுப்பதால் இன்னும் வரையறுக்கப்படாத நிலையே உள்ளது ஜமாலன் பின் நவீனத்துவக் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு ஒரு நாவல் எழுதுவதற்கு உங்களின் வாழ்க்கையையே நீங்கள் விலையாகக் கொடுக்க வேண்டும் சாரு நிவேதிதா பின் நவீனத்துவப் பார்வை கொண்ட இலக்கியம் என்பது ஒருவிதத்தில் பல இடங்களிலிருந்தும் கிடைப்பதில் தேவையானவற்றைப் பொறுக்கி எடுத்து ஒன்று சேர்த்து நிறுத்தும் ஒன்றாகும் இந்த விதத்தில் நவீனத்துவத்திலிருந்து அது மாறுபடுகிறது சான்றுகள் வெளி இணைப்புக்கள் பின்நவீனத்துவம் ஜெயமோகன் விளக்கம் பின்நவீனத்துவம் ஜெயமோகன் கேள்விபதில் பின்நவீனத்துவம் எனும் பேரண்டபட்சி ஜமாலன் பின்நவீனத்துவம் எனும் பேரண்டபட்சி பகுதி ஜமாலன் பின்நவீனத்துவம் எனும் பேரண்டபட்சி பகுதி ஜமாலன் பகுப்பு கருப்பொருட்கள்
மாதவையா கிருட்டிணன் மா கிருஷ்ணன் சூன் பெப்ருவரி ஒரு முன்னோடி வனவுயிரிப் புகைப்படக் கலைஞராகவும் இயற்கை ஆர்வலராகவும் எழுத்தாளராகவும் விளங்கியவர் மேற்கோள்கள் காட்டுயிர்கள் மனிதரின் பொழுதுபோக்கிற்க்கானவை அல்ல ஒலியின் வேகத்தை மிஞ்சி பறக்கும் ஜெட் விமானம் எனக்கு மலைப்பைத் தருவது இல்லை ஆனால் கிளைகளின் மீது துள்ளி ஓடும் அணிலும் பரந்த நிலத்தில் பஞ்சாய்ப் பறக்கும் வெளிமானையும் நான் வியந்து பார்ப்பது உண்டு ஒரு வேட்டைக்காரனைப் பற்றிக் கூறியது அவரும் காட்டுயிர் பாதுகாப்பில் ஆர்வம் கொண்டவர் அதனால்தான் விலங்குகளின் தலையைப் பாடம் செய்து சுவற்றில் மாட்டிப் பாதுகாக்கிறார் ஒரு நாட்டின் அடையாளம் மாறுதலுக்கு உட்பட்ட மனிதப் பண்பாட்டைச் சார்ந்திருத்தலை விடவும் அதன் புவிப் புற உருவியலையும் தாவர விலங்கினங்களையும் அதன் இயற்கை அடிப்படையினையுமே சார்ந்துள்ளது இரவில் இவற்றின் குரல் அச்சமும் வெறுப்பும் தருகின்றதென எண்ணுவதாலும் அறியாமையாலும் தான் நாம் ஆந்தைகளை அபசகுனச் சின்னங்களாகக் கருதுகிறோம் பிற இணைப்புகள் பகுப்பு நபர்கள் பகுப்பு சூழலியல் பகுப்பு இந்தியர்
வலது பிரபஞ்சம் என்பது ஒரு நூலகம் ஜார்ஜ் பிரான்சிஸ்கோ இசிடோரோ லூயிஸ் போர்கஸ் ஆகஸ்ட் ஜூன் ஒரு ஆர்ஜெண்டீன எழுத்தாளர் இவர் சிறுகதைகள் கட்டுரைகள் கவிதை இலக்கியத் திறனாய்வு மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார் மேற்கோள்கள் வலது கதைகள் என்பன முடிவற்ற சாத்தியங்களுக்கான துவக்கப் புள்ளி உலகின் புரிந்து கொள்ள முடியாத உண்மைக்கு எதிராக மனிதன் செய்ய முயலும் முயற்சிகள் அனைத்தும் ஒரு கதைதான் கதைகள் என்பன முடிவற்ற சாத்தியங்களுக்கான துவக்கப் புள்ளி இதுவரை உருவாக்கப்பட்ட கற்பனைப் பாத்திரங்களில் எது மிகச்சிறந்தது என்று நினைக்கிறீர்கள் என போர்கெஸிடம் கேட்கப்பட்டபோது அவர் அளித்த பதில் வாசகன் நான் காலம் எனும் பொருளால் உருவாக்கப்பட்டவன் காலம் என்னும் ஆறு என்னை அடித்துச் செல்கிறது ஆனால் நான்தான் அந்த ஆறு ஒரு புலி என்னை அடித்து விழுங்குகிறது அந்தப் புலியும் நான்தான் ஒரு நெருப்பு என்னை எரிக்கிறது அந்த நெருப்பும் நான்தான் காலம் என்பது சப்தமற்ற என்னுடைய நிழலைப் போல என் கூடவே இருக்கிறது உலகில் உள்ள உயிரினங்களை விடவும் மனிதன் தன் கற்பனையில் உருவாக்கிய உயிரினங்களின் எண்ணிக்கை அதிகமானது வினோத உயிரினங்களுக்கு என ஒரு மிருகக் காட்சி சாலையை அமைத்தால் அதன் பரப்பு நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு பிரம்மாண்டமாய் இருக்கும் நான் மதவாதியோ சிந்தனாவாதியோ நீதிபோதகரோ அல்ல என்னிடம் மக்களுக்கு எடுத்துச் சொல்ல என்று தனியாக எதுவும் இல்லை வாழ்நாள் முழுதும் ஒரே புத்தகத்தை மாற்றி மாற்றி எழுதுவதுதான் நடந்தது பார்வையற்றவனுக்கு உலகம் இருண்டுவிடுவது இல்லை அதற்குப் பதிலாக அவனால் நிறங்களைப் பாகுபாடு செய்ய மட்டுமே முடிவதில்லை ஞாபகங்களே கதையின் மூலப்பொருள் நான் மிகவும் தனியாக இருக்கிறேன் மரணமடையும் தருவாயில் கூறியது ஒரு மனிதன் இதர மனிதர்களுக்கு வேண்டுமானால் எதிரியாக இருக்கலாம் சில நிமிடங்களுக்கு வேண்டுமானால் எதிரியாக இருக்கலாம் ஆனால் தேசத்திற்கோ மின்மினிப் பூச்சிகளுக்கோ தோட்டங்களுக்கோ நதிச்சுழல்களுக்கோ சூரிய அஸ்தமனங்களுக்கோ அவன் எதிரியாக இருக்க முடியாது இன்னமும் காண வேண்டிய கனவு மீதமிருக்கிறது தன்னுடைய கடைசி கதையில் எழுதியது புத்தகங்கள் பற்றி பிரபஞ்சம் என்பது ஒரு நூலகம் புத்தகங்கள் தனித்த பிரபஞ்சம் முடிவற்ற புத்தகம் ஒன்றின் வாசகனாக எழுத்தாளனாக ஏன் ஒரு கதாபாத்திரமாகத்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் சொர்க்கம் என்பது நூலகமாகத்தான் இருக்கும் கவிதைகள் பற்றி உலகின் ஆதி சங்கேதமே கவிதைதான் கவிதை ஒரு சமூகத்தின் ரகசிய செயல்பாடு கவிதையின் வழியாக வெளிப்படும் உருவகங்கள் அந்தக் கலாச்சாரத்தின் ரகசிய அடையாளங்கள் மயிலிறகுதான் கவிதையின் ஸ்தூல வடிவம் புலிகள் பற்றி ஒரு புலி என்னை அடித்து விழுங்குகிறது அந்தப் புலி நான்தான் மனதின் புதருக்குள் ஒரு புலி எப்போதும் சுருண்டு படுத்துக் கொண்டுதான் இருக்கிறது குழந்தை ஒரு போதும் புலியைப் பார்த்துத் தானே பயப்படுவதில்லை ஒருவேளை குழந்தை தானும் ஒரு புலிதான் என்று நினைத்திருக்கக்கூடும் புலியின் உடலில் உள்ள மஞ்சளும் கருப்புமான நிறவரிசை நாம் வாசித்து அர்த்தம் காணமுடியாத அதிசயம் பிற இணைப்புகள் பகுப்பு எழுத்தாளர்கள்
குள்ளச்சித்தன் சரித்திரம் யுவன் சந்திரசேகர் எழுதிய தமிழ்ப் புதினம் இப்புதினம் பின் நவீனத்துவ பாணியில் எழுதப்பட்டது மையமற்ற கதை ஓட்டம் கொண்டது பல்வேறு தனித்தனிக் கதைகள் வழியாக ஒரு விஷயத்தை பல்வேறு கோணங்களில் சொல்லக்கூடிய அமைப்பு உடையது மேற்கோள்கள் இந்த மணல் பரப்பின் ஒவ்வொரு துகளுக்கும் ஒரு பிரத்தியேக சரித்திரம் உண்டு தெருவில் தேங்கிய சாக்கடைக் குட்டையில் இருந்தும் சரி இந்த மகா சமுத்திரத்தின் பரப்பிலிருந்தும் சரி மேகமாகி உயர்ந்து தாரையாகிப் பொழியும் ஒவ்வொரு துளி நீருக்கும் ஒரு தனி சரித்திரம் இருக்கிறது மயிலே மயிலேன்னாப் போடாது ரெண்டு தட்டு தட்டினாத்தான் சரிப்படும் மயிலோட இறகு உனக்கெதுக்கு அப்பனே அது தன்னோடு சம்சாரத்தை மயக்குறத்துக்கு வச்சிருக்கு உயிருக்குத் தப்பி ஓடுற நாய்கள்லே உசந்த நாய் தாழ்ந்த நாய் வேற குடை பிடித்துப் பார்க்கலாம் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்கலாம் மழையை நிறுத்த முடியுமா பறவைகள் அரசாள வந்திருந்தால் மனிதர்கள் காட்சிப் பொருட்களாயிருப்பார்கள் மனிதர்களின் சம்போகம் பற்றி மயில்கள் குறிப்பெடுத்திருக்கும் நிஜம் எப்போதுமே பயங்கரமான ஒன்றாகவும் கனவு ஒரு சரணாலயம் போலவும் தென்பட்டன நமது ஜனங்களைக் கேட்கவா வேண்டும் ஈரைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்கிவிடக் கூடியவர்கள் இவர்கள் ஒன்றுக்குப் பத்தாகச் சொல்லப் போய்த்தான் இந்த மண்ணில் நாஸ்திகம் தலையெடுக்க ஏதுவாகிவிட்டது கனவில் நடக்கிற எல்லாமே நிஜம்தான் ஆனால் எதையும் கையாள முடியாது கைது நீட்டித்து தொட்டுவிடலாம் கையைத்தான் நீட்ட முடியாது சாரைப்பாம்பின் பாசையில் உயரம் என்ற பதமே கிடையாது காரணம் அதன் தரிசனத்தில் நீளமும் அகலமும்தான் உண்டு மனிதர்களுக்குப் பொழுது விடிவதே நிகழ்ந்துவிட்ட துக்கங்களை நினைவுபடுத்தத்தான் மரணம் அடர்த்தியான ஊடுருவிப் பார்க்க முடியாத பின் திரையாக இருக்கிறது தனித்தனிச் சொட்டுகள் ஒன்று கூடித் தாரையாவது போல பல்லாயிரம் உதிரிச் சம்பவங்களின் தொகுப்புதான் வாழ்க்கை பகுப்பு புத்தகங்கள் பகுப்பு இலக்கியங்கள் பகுப்பு புதினங்கள்
படைப்பாளிகளின் தனிப்பட்ட வாழ்க்கையை வெளிப்படையாக எழுதுவது வரலாறாக ஆக்குவது தன் வரலாற்று நூல்கள் படைப்பது போன்ற நிகழ்வுகள் பற்றிப் பலர் தெரிவித்த கருத்துக்கள் இங்கு மேற்கோள்களாகத் தொகுக்கப்படுகின்றன மேற்கோள்கள் ஒரு படைப்பாளியின் தனிப்பட்ட வாழ்க்கை வெளி உலகால் அறியப்பட எவ்வித அவசியமும் இல்லாதது வருங்கால சந்ததியினர் அப்படி ஒருவன் வாழ்ந்ததே இல்லை என்று நம்பும் படியாக ஒரு கலைஞன் இருக்க வேண்டும் பிலாபெர்ட் என்னுடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி உண்மையான ஒரு வார்த்தையைக் கூட எவரும் பெற்றுவிட முடியாது இதாலா கால்வினோ ஒரு தனிப்பட்ட தனிமனிதனாக வரலாற்றிலிருந்து எவ்வித தடயமும் இன்றி இல்லாமல் போய்விட வேண்டும் வில்லியம் பாக்னர் ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கையும் அவனுடைய முகமும் பொதுமக்களுக்குச் சொந்தமானதல்ல மாப்பசான் எந்த ஒரு வாழ்க்கை வரலாற்றாசிரியனாலும் என் தனிப்பட்ட வாழ்ககையின் சிறு தருணத்தைக் கூடக் கைப்பற்ற முடியாது விளாடிமிர் நபக்கோவ் ஒரு நாவலாசிரியன் தன் வாழ்க்கையெனும் வீட்டை இடித்துவிட்டு வேறொரு வீட்டைக் கட்டுவதற்காக அதன் செங்கற்களைப் பயன்படுத்துகிறான் மிலன் குந்தேரா சான்றுகள்
அரபு மொழி பழமொழிகள் இந்தப் பக்கத்தில் தொகுக்கப்படுகின்றன அடுத்தவருக்கு அறிவுரை கூறுவதை விட முன்னுதாரணமாக இருந்து காட்டுவதே சிறந்தது அநாதைக் குழந்தைக்கு அழுவதற்குச் சொல்லிக் கொடுக்காதே அல்லாவை நம்பு ஆனால் ஒட்டகத்தைக் கட்டிப் போட மறக்காதீர்கள் ஆடவர்கள் இதயங்களால் சிரிப்பார்கள் பெண்கள் உதடுகளால் மட்டும் சிரிப்பார்கள் இரத்தம் எப்போதும் நீராக மாறாது இரு திருடர்களின் சண்டையில் களவாடப்பட்ட பொருள் வெளியே வருகிறது இல்வாழ்வு முற்றுகைக்கு உட்பட்ட கோட்டை போன்றது வெளியே யிருப்பவர்கள் உள்ளே செல்ல விரும்புகின்றனர் உள்ளே யிருப்பவர்கள் வெளியேற விரும்புகின்றனர் உங்கள் உணவை அடுத்தவர் மேசை மீது வைத்து உண்ணாதீர்கள் உன் காதலுக்கு ஒரு மணி நேரம் உன் இறைவனுக்கு ஒரு மணி நேரம் செலவிடு ஒரு பெண் பிறந்த வீட்டில் குடியிருப்பதைவிட மரக்ட்டையையாவது மணந்து கொள்ளல் நலம் உன் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் உன் சரித்திரத்தில் ஓர் ஏடாகும் ஒரு கொசுவால் சிங்கத்தின் கண்களைக் கூட பழுதாக்க முடியும் ஒவ்வொரு சொத்திற்குப் பின்னும் ஒரு குற்றம் ஒளிந்திருக்கிறது கழுகு தீமையுடையதாய் இருந்தால் அதன் இறக்கைகளை வெட்டியெறி காதலையும் கர்ப்பத்தையும் மறைத்து வைக்க முடியாது காதல் ஏழு விநாடி துக்கம் வாழ்க்கை முழுதும் குரைக்காத நாயும் கனைக்காத குதிரையும் கருத்தைச் சொல்லாத மனிதனும் உள்ள நாட்டில் வாழாதே கூழாங்கற்கள் மலையிருந்தே உருவாகின்றன சிங்கத்தின் கோரைப் பற்களைக் காண நேர்ந்தால் அது சிரிப்பதாக நினைக்க வேண்டும் சுவர்க்கத்திற்குச் செல்வோரின் பயிற்சி நிலையமே வாழ்க்கை தன் மனைவியை மதிக்காதவன் தன்னையே அவமதித்துக் கொள்கிறான் தாயின் காலடியில்தான் சொர்க்கம் இருக்கிறது தீமையை விட்டு விலகுங்கள் தீமை உங்களை விட்டு விலகிவிடும் பெண்பிள்ளை பயணம் போகிறாள் என்றால் ஓர் ஆண்பிள்ளை அவளுக்குக் கதவைத் திறப்பது தான் காரணம் பேச்சு வெள்ளியென்றால் அமைதி தங்கமாகும் பொய்யனை விட்டு விலகியிருங்கள் அப்படி விலகியிருக்க முடியாவிட்டால் அவனை நம்ப வேண்டாம் பொய்யுரைப்பது நோய் உண்மையைப் பேசுவது அதற்கான சிகிச்சை பொறாமைக்காரனின் பார்வையை விட சிங்கத்தினால் உண்டான காயம் மேலானது மலை இடம் பெயர்ந்து விட்டது என்று நீ கேள்விப்பட்டால் நம்பலாம் ஆனால் ஒரு மனிதன் குணம் திருந்திவிட்டான் என்று கேட்டால் அதை நம்ப வேண்டாம் மனிதரைத் தவிர மற்ற விலங்குகள் அனைத்திலும் பெண் இனமே மேலானது மனிதனும் விலங்குகளும் ஒன்றுபோலத்தான் இருக்கிறார்கள் மனைவியால் அவதிப்படுவோன் அந்தோ பரிதாபம் முட்டாள் நண்பனை விட எதிரியே தேவலம் வாழ்க்கை இரு பகுதிகளுள்ளது ஒன்று கழிந்தகாலம் என்ற கனவு மற்றது வருங்காலம் என்ற விருப்பம் பகுப்பு மொழி வாரியாக பழமொழிகள்
மேற்கோள்கள் அறிவியலால் எதையும் தீர்க்கமுடியாது என்பவர்கள் மூடர்கள்தான் டார்வின் அறிவியல் இயற்கையை நகலெடுப்பதில்லை மாறாக மறு உருவாக்கம் செய்கிறது ஜேக்கப் புரோனோவ்ஸ்கி இந்த உலகில் உண்மையான கவிதைகள் இருக்கின்றன ஆனால் அறிவியலோ உண்மைகளின் கவிதைகள் ரிச்சர்ட் டாக்கின்சு சமய நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளும் போது அறிவியல் தற்கொலை செய்துகொள்கிறது தாமஸ் ஹென்றி ஹக்ஸ்லி அறிவியலாவது மனிதனிடம் உள்ள மனித நேயத்தை மனிதாபிமானத்தை மனிதத் தன்மையை நாளுக்கு நாள் விரிவுபடுத்தி அவனுக்கு மென்மேலும் ஆன்ம விடுதலை தருவதாகவும் அவனுடைய அறிவானது இயற்கையோடு ஒன்றி ஒருங்கிணைந்து விரிவுபடுத்தி வியனுலகை ஆட்சி செய்யும் ஆற்றலை வழங்குவதாகவும் இந்த உலகில் பிறந்த மனிதன் தனது உற்றார் உறவோடும் சுற்றத்தோடும் எவ்வாறு மகிழ்ச்சியாக வாழ்வது என்பதைப்போதிக்கும் அறிவாகவும் திகழ வேண்டும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விஞ்ஞான உலகில் பெரிய நோக்கங்களுக்காக சுயநல ஆசையின்றிச் சிரத்தையுடன் வேலை செய்ததை நான் காண்கிறேன் இந்த முறை மனிதர்களின் மற்ற முயற்சிகள் அனைத்திலும் பரவும் என்று நான் நம்புகிறேன் எச் ஜி வெல்ஸ் விஞ்ஞானம் முறைப்படுத்தித் தொகுக்கப்பெற்ற அறிவாகும் ஹெர்மர்ட் ஸ்டென்லர் விஞ்ஞானம் பழைய புராணக் கதைகளிலுள்ள அற்புதங்களையும் மிஞ்சிவிடுகின்றது எமர்சன் மனிதர்கள் விஞ்ஞான முன்னேற்றம் மனித சமூகத்திற்கு ஒரு வரப்பிரசாதமாகவே இருக்குமென்று சில சமயங்களில் பேககின்றனர் இது பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்டிருந்த மயக்கங்களுள் ஒன்று அறிவு பெருகியுள்ள இந்தக் காலத்தில் இந்தக் கருத்து தள்ளப்பெற வேண்டும் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் சான்றுகள் வெளி இணைப்புக்கள் பகுப்பு கருப்பொருட்கள் பகுப்பு அறிவியல்
வலது கற்பனைத் திறன் தூங்கிவிடும் போது வார்த்தைகள் தமது பொருளை இழந்து விடுகின்றன ஆல்பெர் காம்யு நவம்பர் ஜனவரி நோபல் பரிசு பெற்ற பிரஞ்சு எழுத்தாளர் இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார் இல் கார் விபத்தில் காலமானார் நாவல்கள் சிறுகதைகள் நாடகங்கள் எழுதியுள்ளார் மேற்கோள்கள் சமூகம் தான் என்ன சொல்கிறதோ அதைச் சமூகமே நம்புவதில்லை மனிதன் இயல்பாகவே ஒரு சமூக விலங்கு என்று நான் எணணுவதில்லை உண்மையைச் சொன்னால் இதற்கு நேரெதிராகவே எண்ணுகிறேன் வார்த்தைகள் கற்பனைத் திறன் தூங்கிவிடும் போது வார்த்தைகள் தமது பொருளை இழந்து விடுகின்றன சீர்திருத்தப்பட வேண்டிய ஒரு தவறான வழக்கம் அல்லது தணிக்கப்படவேண்டிய ஒரு துயரம் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருப்பதற்கு மௌனம் அல்லது மொழிகளின் சூழ்ச்சி பங்களிக்குமானால் வார்த்தைப் போர்வையின் கீழ் மூடிமறைக்கப்பட்ட அந்த அசிங்கத்தை உரக்கப் பேசி வெளிப்படுத்திக் காட்டுவதைத் தவிர வேறு வழி எதுவுமில்லை மரண தண்டனை குற்றதை விட தண்டனை இன்னும் வெறுக்கத்தக்கதாகவே இருக்கிறது தனிநபரின் உடலுக்கு புற்றுநோய் எப்படிப்பட்டதோ அப்படிப்பட்டதுதான் அரசியல் சமூகத்திற்கு மரண தண்டனையும் மரண தண்டனை பயனற்றது மட்டுமல்ல அது நிச்சயம் தீங்கு விளைவிக்கக் கூடியதாகவும் இருக்கிறது மரண தண்டனையைப் பொறுத்தவரையில் அது கற்பனைத் திறத்தால் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு தண்டனை எனது பகுத்தறிவால் கண்டனம் செய்யப்படும் அலட்சியம் சார்ந்த ஒரு பிழை என்பதைத் தவிர வேறு எதையும் காண முடியாதவனாகவே பல ஆண்டு காலம் நான் இருந்திருக்கிறேன் மரண தண்டனை முன்னுதாரணமாக விளங்குகிறது என்பதை நான் மறுக்கிறேன் அந்தத் தண்டனை மேன்மையானது எதையும் விட்டு வைக்காத நிலைமைகளின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற கொடூரமான ஓர் அறுவை சிகிச்சையாக இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது சான்றுகள் வெளி இணைப்புக்கள் பகுப்பு எழுத்தாளர்கள் பகுப்பு இலக்கியங்கள் பகுப்பு நோபல் பரிசு வென்றவர்கள்
வலது மகாத்மா ஜோதிராவ் புலே மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலே ஏப்ரல் நவம்பர் ஒரு சமூக சீர்திருத்தவாதி சமூக அவலங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்ததோடு அவற்றைக் களையும் முயற்சிகளிலும் இறங்கியவர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பெண்களுக்கென்று பள்ளிகளை நடத்தியவர் மேற்கோள்கள் அறிவில்லாதபோது புத்திசாலித்தனம் இழக்கப்படுகிறது புத்தியில்லாதபோது ஒழுக்கம் இழக்கப்படுகிறது ஒழுக்கம் இல்லாதபோது ஆற்றல் முழுதும் இழக்கப்படுகிறது செயல்படும் ஆற்றல் இல்லாதபோது பணம் இழக்கப்படுகிறது பணம் இல்லாததால் சூத்திரர்கள் வீழ்ந்தனர் கல்வியறிவு இல்லாததால் இவ்வளவு கஷ்டங்களும் ஏற்பட்டன சான்றுகள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு பிறப்புக்கள் பகுப்பு இறப்புக்கள் பகுப்பு இந்தியர்கள்
வலது கில்லட்டின் கருவியால் தலை துண்டிக்கப்படும் முறை மரண தண்டனை என்பது ஒரு அதிகார நிறுவனம் அல்லது அரசு தனது நடவடிக்கைகளின் ஊடாக மனிதர் ஒருவரின் உயிர்வாழ்வைப் பறிக்கும் தண்டனை ஆகும் மேற்கோள்கள் முதலில் மரண தண்டனைக்குரிய குற்றங்கள் என்பவை நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன ஆனால் எந்த வித முறையிலாவது விதிக்கப்படும் மரணதண்டனையில் பறிக்கப்படும் உயிர் நாட்டுக்கு நாடு வேறுபடுவதில்லை உயிருக்கு வெவ்வேறு அளவு கோல்கள் வெவ்வேறு நாடுகளில் இருக்க முடியாது மரண தண்டனைக்கு எதிரானவை வாழ்க்கை புனிதமானது அதை பறிப்பது அரக்கத்தனமானது வி ஆர் கிருஷ்ண ஐயர் ஓய்வு பெற்ற இந்திய நீதிபதி மரண தண்டனை விதிப்பதில் நிலையான வரைமுறையை உச்ச நீதிமன்றம் கடைப்பிடித்ததே இல்லை அஜீத்ஷா ஓய்வு பெற்ற இந்திய நீதிபதி மரண தண்டனையால் கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளனவா அதிகரிக்கின்றனவா அல்லது எந்த விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லையா என்று கணிக்கவே முடிவதில்லை தேசிய அறிவியல் கழகம் அமெரிக்க ஐக்கிய நாடுகள் பரவலாக மக்களிடையே பெருக்கெடுக்கும் உணர்வுகளுக்கும் அபிப்ராயத்துக்கும் உரிய மதிப்பு அளித்துத் தண்டனைக் குறைப்பைத் தருவதில் தவறு இல்லை குற்றம் சாட்டப்பட்டவர் மீது அனுதாபத்தையும் சட்டத்தின் மீது எதிர்ப்பு உணர்வையும் எழச் செய்யும் தண்டனையால் சமுதாயத்துக்கு நன்மையைவிட தீமையே வந்து சேரும் சட்டக் கமிஷன் இந்தியா ஆல்பெர் காம்யு குற்றதை விட தண்டனை இன்னும் வெறுக்கத்தக்கதாகவே இருக்கிறது தனிநபரின் உடலுக்கு புற்றுநோய் எப்படிப்பட்டதோ அப்படிப்பட்டதுதான் அரசியல் சமூகத்திற்கு மரண தண்டனையும் மரண தண்டனை பயனற்றது மட்டுமல்ல அது நிச்சயம் தீங்கு விளைவிக்கக் கூடியதாகவும் இருக்கிறது மரண தண்டனையைப் பொறுத்தவரையில் அது கற்பனைத் திறத்தால் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு தண்டனை எனது பகுத்தறிவால் கண்டனம் செய்யப்படும் அலட்சியம் சார்ந்த ஒரு பிழை என்பதைத் தவிர வேறு எதையும் காண முடியாதவனாகவே பல ஆண்டு காலம் நான் இருந்திருக்கிறேன் மரண தண்டனை முன்னுதாரணமாக விளங்குகிறது என்பதை நான் மறுக்கிறேன் அந்தத் தண்டனை மேன்மையானது எதையும் விட்டு வைக்காத நிலைமைகளின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற கொடூரமான ஓர் அறுவை சிகிச்சையாக இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது கு அழகர்சாமி மரண தண்டனை என்பது நீதியினுடைய கருநிழல் மரண தண்டனையின் தூக்கு போன்றதின் குரூரம் அது நிறைவேற்றப்படும் முறையில் மட்டுமல்ல குற்றவயப்பட்ட தனி மனிதனின் மீட்சிக்கான வாய்ப்பினை அது முற்றிலும் நிராகரிப்பதில் தான் மரண தண்டனையில் ஒரு வேளை நீதிப் பிறழ்வு ஏற்பட்டால் அது பொறுப்பேற்காதது தான் பொறுப்பேற்க தயாராயிருந்தாலும் அதில் எந்தப் பின்விளைவும் இல்லை என்பது தான் தூக்குக் கயிற்றை இறுக்காதே அவிழ்த்து விடு மனிதம் மூச்சு விடட்டும் மரண தண்டனை தடை செய்யப்படாது சட்டச் செயல்பாட்டில் இருக்கும் வரை நீதியின் கரு நிழல் நீங்காது தொடரும் மரண தண்டனைக்கு ஆதரவானவை ஒரு மனிதன் சமூகத்துக்கு ஆபத்தானவனாக இருக்கிறான் பாவத்தைச் செய்கிறான் என்றால் சமூகத்தின் நன்மையைக் கருதி அவனைக் கொன்றுவிட வேண்டும் தாமஸ் அக்வினாஸ் சான்றுகள் வெளி இணைப்புக்கள் பகுப்பு சட்டம் பகுப்பு மரணம்
வலது பலிபீடத்தில் வெட்டப்படுபவை ஆடுகள்தான் சிங்கங்களல்ல சிங்கங்களாக இருங்கள் அம்பேத்கர் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் ஏப்ரல் திசம்பர் சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக காலம் முழுதும் போராடியவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தந்ததோடு அவற்றுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பையும் ஏற்படுத்தியவர் இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் வரைவுக்குழுவுக்குத் தலைமை தாங்கி இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவர் சமூக சீர்திருத்தவாதி மேற்கோள்கள் முதன்மையான மற்றும் மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதி கவுதம புத்தர் அவரோடு தான் சமூக சீர்திருத்த வரலாறு துவங்குகிறது அவரின் அளப்பரிய சாதனைகளை விலக்கிவிட்டு சமூக சீர்திருத்த வரலாறு எழுதப்படும் என்றால் அது முழுமையானது இல்லை எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள் ஆனால் நான் மீண்டும் கூற விரும்புகிறேன் எனக்கு அது இல்லை நாய்கள் பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால் குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான் இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும் யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது ஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து பிறகு அவன் தானாகவே கிளர்ந்து எழுவான் பலிபீடத்தில் வெட்டப்படுபவை ஆடுகள்தான் சிங்கங்களல்ல சிங்கங்களாக இருங்கள் பார்ப்பனர்கள் படிப்பாளிகளாக இருக்கலாம் ஒருபோதும் அறிவாளிகளாக முடியாது எவனொருவன் தானே சரணடையாமல் மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல் எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை உள்ளடக்கியதாக இந்திய தேசியம் இல்லை எனவே தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளை தேசியத்துக்காகத் தியாகம் செய்ய முடியாது மற்றவர்களுக்கெல்லாம் எதிரி ஏகாதிபத்தியம் ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களைச் சுற்றிப் பல்வேறு எதிரிகளால் சூழப்பட்டுள்ளதால் எல்லோரையும் ஒரே நேரத்தில் எதிர்க்க முடியாது எனவே ஆண்டுகளாக உயர் சாதி இந்துக்களால் இழைக்கப்படும் கொடுமைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகப் போரிடுவது என முடிவெடுத்தேன் பிறப்பால் மக்களை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என பிராமணீயம் பிரித்தது மாறாக பல்வேறு பிரிவினரையும் உள்ளடக்கியதோர் சமுதாயத்தைக் கட்டுவதற்காக வாழ்நாள் முழுவதும் அயராது பாடுபட்டவர் புத்தர் எனவே புத்தரை எனது வாழ்நாள் வழிகாட்டியாகத் தேர்ந்தெடுத்தேன் ஆங்கிலேயர் வருவதற்கு முன்னர் எப்படி இருந்தார்களோ அப்படியேதான் ஒடுக்கப்பட்டவர்கள் இருக்கின்றனர் அவர்களும் குடிமக்கள்தான் ஆனால் குடிமக்களுக்குரிய உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை அவர்கள் கட்டிய வரியிலிருந்து பள்ளிகள் நடத்தப்பட்டன ஆனால் அவர்களுடைய குழந்தைகளை அந்தப் பள்ளியில் அனுமதிக்க முடியவில்லை அவர்கள் கட்டிய வரிப் பணத்திலிருந்து கிணறுகள் வெட்டப்பட்டன ஆனால் அவர்கள் அந்தக் கிணற்றிலிருந்து குடிதண்ணீர் எடுக்க முடியாது கற்பி அணிசேர் கிளர்ச்சிசெய் இந்தியப் புரட்சியின் இரு பெரும் தடைகள் பார்ப்பனீயமும் முதலாளியமும்தான் சாதி பற்றி இந்து சமூகம் என்பது ஒரு கோபுரம் போன்றது அதன் ஒவ்வொரு தளமும் ஒவ்வொரு சாதிக்கென்று ஒதுக்கப்பட்டது இதில் குறிப்பிடத் தகுந்த விஷயம் என்னவென்றால் இந்தக் கோபுரத்துக்குப் படிக்கட்டுகள் கிடையாது ஆகவே ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்துக்கு ஏறவோ இறங்கவோ முடியாது ஒருவர் எந்தத் தளத்தில் பிறந்தாரோ அந்தத் தளத்திலேயே மடிகிறார் கீழே உள்ள தளத்தைச் சேர்ந்தவருக்கு எவ்வளவு திறமையும் தகுதியும் இருந்தாலும் அவர் மேலே உள்ள தளத்துக்குச் செல்வதற்கு எந்த வழியும் இல்லை அதேபோல் மேலே உள்ள தளத்தைச் சேர்ந்தவர் எந்தத் தகுதியும் திறமையும் இல்லையென்றாலும் அவரைக் கீழே உள்ள தளத்துக்கு இறக்குவதற்கு எந்த வழிவகையும் இல்லை இந்து மதம் பற்றி நான் இந்துக்களை விமர்ச்சித்து இருக்கிறேன் அவர்கள் போற்றிடும் மகாத்மாவுக்கு இந்துக்கள் பேரால் பேசுவதற்கு என்ன அதிகார உரிமை உள்ளது எனக் கேட்டிருக்கிறேன் அவர்கள் என்னை வெறுக்கிறார்கள் அவர்கள் தோட்டத்தில் என்னை ஒரு நச்சுப்பாம்பாகவே பார்க்கின்றனர் அனைத்தையும் அறிந்துள்ள அறிவாளன் என்பதற்காவே எவரை வேண்டுமானாலும் ஓர் இந்து தன் குருவாக ஏற்றுக் கொள்வதைச் சாஸ்திரங்கள் அனுமதிப்பதில்லை காந்தி காந்தியம் பற்றி காந்தியம் என்று ஒன்றில்லை எனக் காந்தி அறிவித்திருந்தபோதும் அதே தலைப்பில் அவருடைய சம்மதத்துடனேயே ஏராளமான புத்தகங்கள் வெளியாயின இந்திய வானில் புதிதாக உதித்த கோட்பாடே காந்தியம் என்பதற்கான ஆதாரம் இது என்னுடைய அபிப்பிராயத்தில் காந்தியம் அவ்வளவு எளிமையானதோ களங்கமற்றதோ அல்ல பிராந்தியவாதத்தை விடவும் வலுவானது அதன் உள்ளடக்கம் பிராந்தியவாதம் அதன் ஒரு அம்சம் மட்டுமே அதற்கு ஒரு சமூகப் பார்வையும் பொருளாதாரப் பார்வையும் உண்டு அவை இரண்டையும் விட்டுவிட்டு காந்தியத்தைப் புரிந்துகொள்வது அதைப் பற்றிப் பிழையான சித்திரத்தை முன்வைப்பதாகும் சொத்துடைமை வர்க்கத்துக்குக் கீறல் ஏற்பட்டுவிடக் கூடாது என்றே மிஸ்டர் காந்தி விரும்புகிறார் அவர்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதையும் அவர் எதிர்க்கிறார் பொருளாதாரச் சமத்துவம் என்னும் உணர்வு அவருக்கில்லை பொன்முட்டையிடும் வாத்தைக் கொல்லத் தான் விரும்பவில்லை என்று பணக்கார வர்க்கத்தை முன்னிறுத்தி அண்மையில் அவர் குறிப்பிட்டுள்ளார் உடைமையாளருக்கும் தொழிலாளருக்கும் பணக்காரர்களுக்கும் தரித்திரர்களுக்கும் நிலவுடமையாளர்களுக்கும் குடியானவர்களுக்கும் இடையில் உள்ள பிரச்சினைகளுக்குக் காந்தியின் தீர்வு எளிமையானது சொத்துகளைத் துறக்க வேண்டாம் தாங்கள் சொத்துகளின் அறங்காவலர்கள் மட்டுமே என்று அறிவித்தால் போதும் அதுவுங்கூடத் தங்கள் விருப்பப்படி நிறைவேற்ற வேண்டிய ஓர் ஆன்மீகக் கடமை கோவில்களில் ஆடுகளைத்தான் பலியிடுகிறார்கள் சிங்கங்களை அல்ல ஆதலால் சிங்கமாய் எழுந்துநிற்போம் சாதியை ஒழிக்கும் வழி சாதியை ஒழிக்கும் வழி புத்தகத்திலிருந்து மேற்கோள்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்பு அரசியல் தலைவர்கள் பகுப்பு இந்தியர்கள் பகுப்பு பிறப்புக்கள் பகுப்பு இறப்புக்கள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு சாதி எதிர்ப்பாளர்கள்
கல்வியே உலகை மாற்றக்கூடிய சக்தி மிக்க ஆயுதம் நெல்சன் மண்டேலா ஜுலை டிசம்பர் தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார் அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார் மேற்கோள்கள் கல்வியே உலகை மாற்றக்கூடிய சக்தி மிக்க ஆயுதம் செய்து முடிக்கும் வரை செய்ய முடியாதது போலத்தான் இருக்கும் கோபம் விசம் குடிப்பதைப் போன்றது ஆனால் நம்பிக்கை உங்கள் எதிரிகளையும் அழிக்கும் வல்லமை மிக்கது நல்ல தலையும் நல்ல இதயமும் எப்பொழுதும் வல்லமை மிக்க சேர்க்கையாகும் எமது நாட்டில் முதலில் சிறைச்சாலைக்குச் சென்ற பின்னரே சனாதிபதியாகின்றோம் இறந்தகாலத்தை மறந்துவிடுங்கள் மக்களை ஒருங்கிணைக்கும் சக்தி விளையாட்டுக்கு உண்டு இளைஞர்கள் புரிந்துகொள்ளும் மொழியில் அது பேசுகிறது இன வேறுபாடுகளை ஒழிப்பதில் அரசாங்கத்தை விடவும் மிகவும் சக்திமிக்கது சான்றுகள் வெளி இணைப்புக்கள் பகுப்பு அரசியல் தலைவர்கள் பகுப்பு பிறப்புக்கள் பகுப்பு இறப்புக்கள்
ஹியூகோ சாவேஸ் ஜூலை மார்ச் வெனிசுவேலாவின் முன்னாள் அதிபர் இவர் ஒரு இடதுசாரித் தலைவர் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு எதிராகவும் வலுவான எதிர்வாதங்களை முன்வைத்த சமகாலத் தலைவர் க்யூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் நெருங்கிய நண்பர் மேற்கோள்கள் புதிய ஒன்றைக் கண்டுபிடிப்போம் அல்லது தவறிழைப்போம் ஐக்கிய நாடுகள் சபையின் இன்றைய வடிவம் பயனற்றதாகிவிட்டது உலக எண்ணெய் விலை பல்வேறு நோய்கள் புவி வெப்பமடைதல் ஓசோன் படிமத்தில் ஓட்டை ஆகிய அனைத்தும் உள்நாட்டுப் பிரச்சினைகள் அல்ல உலகமயமாக்கலின் விளைவுகள் பற்றிப் பேசும் போது இவ்வாறு குறிப்பிடுகிறார் பாய்ச்சல் வேக அழிவுத் தன்மையைக் கொண்ட ஒரு சமூகப் பொருளாதார மாதிரியை இன்னமும் பொருத்தமானது என்று முட்டாள்தனமாக வலியுறுத்தி மனித இனத்தையே காவு கொடுப்பதானது நடைமுறை சாத்தியமற்றது மட்டுமல்ல நெறிமுறை மீறிய செயலுமாகும் தற்கொலைக்கு ஒப்பானது வலது அடங்கிப்போகும் தன்மையும் அழுது புலம்பும் போக்கும் பயனற்றவை சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராக திறமையான முறையில் போராடுவது இன்றைய அவசரத் தேவையாகும் ஆனால் அதற்காக சர்வதேசச் சட்டங்களை மீறிய நியாயமற்ற இராணுவ ஆக்கிரமிப்புக்களைத் தொடுப்பதற்கான சாக்காக அதை நாம் பயன்படுத்தக் கூடாது செப்டம்பர் தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கண்டிக்கிறார் மனித சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வரை நமது கைகள் ஓயக்கூடாது நமது ஆன்மா தூங்கக் கூடாது அதற்கான காலம் இதுவேயாகும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்தலை உலகமயம் கொண்டுவரவில்லை ஆனால் சார்ந்து நிற்பதையே அதிகரித்துள்ளது செல்வத்தை உலகமயமாக்குவதற்குப் பதிலாக வறுமைதான் விரிவான முறையில் பரவியிருக்கிறது சிலர் மட்டுமே செல்வச் செழுமையைத் தொடர்ந்து அனுபவிப்பதையும் பொருட்கள் வீணடிக்கப்படுவதையும் நியாயப்படுத்தும் சில மனிதர்களின் குருட்டுத்தனமும் தெளிவாய்த் தெரிகிறது உலகமயக் கொள்கையானது அநீதியையும் சமத்துவம் இன்மையையும் அடிப்படையாகக் கொண்ட கொள்கை அடங்கிப்போகும் தன்மையும் அழுது புலம்பும் போக்கும் பயனற்றவை பத்தொன்பதாவது மற்றும் இருபதாவது நூற்றாண்டு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் நூற்றாண்டுகளாக இருந்தன ஆனால் இந்த நூற்றாண்டு ஆசியா ஆப்பிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவுக்கு சொந்தமானதாக இருக்கும் நாம் ஒன்றுபட்டால் பொருளாதாரம் மட்டுமின்றி அனைத்து தளங்களிலும் உலகிலேயே வலிமை மிகுந்தவர்களாக ஆகிவிடுவோம் சான்றுகள் புற இணைப்புகள் பகுப்பு நபர்கள் பகுப்பு அரசியல் தலைவர்கள் பகுப்பு சமூகவியலாளர்கள்
நம்பிக்கை வாதி ஒவ்வொரு சிக்கலிலும் ஒரு வழியைக் கண்டுபிடிப்பான் அவநம்பிக்கை வாதி ஒவ்வொரு வழியிலும் ஒரு சிக்கலைக் கண்டுபிடிப்பான் சர் வின்ஸ்டன் லியோநார்ட் ஸ்பென்சர் சர்ச்சில் நவம்பர் ஜனவரி என்ற முழுப்பெயர் கொண்ட இவர் சிறப்புப் பட்டயப் பதவிப் பெயர்களான ஆங்கில அரசின் உயர்தளிச் சிறப்பு சின்னம் காமன்வெல்த் சிறப்புத் தகை பட்டயம் காமன்வெல்த் மக்கள் அதிகாரம் செலுத்தும் அரசமைப்பு பிரித்தானிய காமன்வெல்த் தனித்துவப் பட்டயம் இலண்டன் அரசனுக்குகந்த சமூகப் பட்டயம் கனடா அரசியாரின் ஆலோசகர் ஆகிய பட்டயங்களையும் கொண்டுள்ளார் இவர் பிரித்தானிய அரசியல்வாதிகளில் மிக முக்கியமானவராவார் ஐக்கிய இராச்சியத்தில் முதல் வரை மீண்டும் முதல் வரை பிரதமராக பதவி வகித்த சர்ச்சில் இரண்டாம் உலகப்போரில் ஐக்கிய இராச்சியத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவராகக் கருதப்படுகின்றார் மேற்கோள்கள் நம்பிக்கை வாதி ஒவ்வொரு சிக்கலிலும் ஒரு வழியைக் கண்டுபிடிப்பான் அவநம்பிக்கை வாதி ஒவ்வொரு வழியிலும் ஒரு சிக்கலைக் கண்டுபிடிப்பான் நல்ல அமைதியை உருவாக்குபவர்களால் போரில் வெல்ல முடியாது போரை வெல்பவர்கள் நல்ல அமைதியை உருவாக்க முடியாது கடலில் போரிடுவோம் விண்ணில் போரிடுவோம் மலைகளிலும் குன்றுகளிலும் போரிடுவோம் பள்ளத்தாக்குகளிலும் அகழிகளிலும் போரிடுவோம் தெருக்களில் போரிடுவோம் சந்துக்குச் சந்து வீட்டுக்கு வீடு போரிடுவோம் ஆனால் ஒரு போதும் சரணாகதி அடையமாட்டோம் மலேசிய தோட்டத்தில் இரப்பர் பால் உறிஞ்சும் தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உறைந்து உள்ளது எப்போதும் விட்டுக்கொடுக்கதீர்கள் பட்டங்கள் காற்றை எதிர்த்தே எழுகின்றன காற்றுடன் இணைந்து எழுவதில்லை மேன்மையின் விலை கடமையாகும் நான் குறுக்கிடும் போது என்னைக் குறுக்கிடாதீர்கள் வெற்றி என்பது இறுதியானதல்ல தோல்வி என்பது மரணத்திற்குரியதல்ல அதுவே வெற்றிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான ஊக்குவிப்பாகும் உங்களுக்கு எதிரிகள் இருக்கின்றார்களா நல்லது அப்படியானால் நீங்கள் எப்போதாவது உங்களது வாழ்க்கையில் ஏதோ ஒன்றுக்கெதிராகக் கிளர்ந்தெழுந்திருக்கின்றீர்கள் முயற்சியே உங்களை எழுந்துநின்று பேசச்செய்யும் அதுவே உங்களை உட்கார்ந்து செவிமடுக்கவும் செய்யும் நீங்கள் நரகத்தின் வழியாகப் போகிறீர்கள் என்றால் போய்க்கொண்டேயிருங்கள் இலக்கு என்பது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய பொருள் எப்பொழுதும் அவசரம் அதிகமானால் வேகம் குறையும் இந்தியா இந்தியர்களைப் பற்றி இந்தியா விரைவாகப் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட காட்டுமிராண்டித் தனத்துக்குச் சென்று விடும் சான்றுகள் வெளி இணைப்புக்கள் பகுப்பு அரசியல் தலைவர்கள் பகுப்பு நோபல் பரிசு வென்றவர்கள் பகுப்பு ஆங்கில மக்கள் பகுப்பு பிரித்தானியப் பிரதமர்கள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு பிறப்புக்கள் பகுப்பு இறப்புக்கள்
வலது நான் ஹாலிவுடில் இருக்க மிகப்பெரிய காரணமெல்லாம் இல்லை எனக்கு இங்கே தரப்படும் பணம் தான் என்னை இங்கே இருக்க வைக்கிறது வேறொன்றும் இல்லை மார்லன் பிராண்டோ பிறப்பு ஏப்ரல் மறைவு ஜூலை த காட்ஃபாதர் அப்போகலிப்ஸ் நவ் ஆன் த வாட்டர் பிரண்ட் உட்பட பல படங்களில் நடித்த திரைப்பட நடிகர் இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த நடிகர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார் இரு தடவை ஆஸ்கார் விருது வென்றார் மேற்கோள்கள் கிழக்கு நாடுகள் இப்படி வாடுவதற்கு நம்மைப்போன்ற மேற்குலக நாடுகளின் சுரண்டல் தான் காரணம் அதற்கு உகந்த அரசாங்கங்கள் அங்கே செயல் படுகின்றன அமெரிக்க மனம் இதர மக்களின் கண்ணீர் பற்றி கவலைப்படுவதே இல்லை நான் ஹாலிவுடில் இருக்க மிகப்பெரிய காரணமெல்லாம் இல்லை எனக்கு இங்கே தரப்படும் பணம் தான் என்னை இங்கே இருக்க வைக்கிறது வேறொன்றும் இல்லை மக்கள் ஏதோ சில காரணங்களுக்காக ஒவ்வொரு கால கட்டத்திலும் யாரோ ஒருவரை கொண்டாடுகிறார்கள் உங்களை சந்திக்காமலே நீங்கள் அற்புதமானவர்கள் என்று நம்புவார்கள் அதே மக்கள் உங்களின் நிஜ வாழ்க்கையோடு சம்பந்தமே இல்லாத காரணங்களுக்காக உங்களை வெறுப்பார்கள் மக்கள் தங்களுக்கான எதிரிகளை இழக்க விரும்புவதில்லை அவர்களுக்கு பிடித்த வில்லன்கள் தேவைப்படுகிறார்கள் வெறுப்பதை காதலிக்கவும் காதலிப்பதை வெறுக்கவும் மக்கள் விரும்புகிறார்கள் அவர்களுக்கு திட்டவும் கொண்டாடவும் ஒரு நாயகன் எப்பொழுதும் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறான் நம் சகோதரனுக்கு நாம் தோள் கொடுப்பவனாக இல்லாமல் போனாலும் குறைந்தபட்சம் அவன் தலை எடுப்பவனாக இல்லாமல் இருக்க வேண்டும் சான்றுகள் வெளி இணைப்புக்கள் பகுப்பு நபர்கள் பகுப்பு அமெரிக்க நடிகர்கள் பகுப்பு திரைப்படக் கலைஞர்
சில்வியா பிளாத் அக்டோபர் பிப்ரவரி ஒரு அமெரிக்கப் பெண் கவிஞரும் புதின சிறுகதை எழுத்தாளரும் ஆவார் குறிப்பாக அவரது கவிதைகளுக்காக அறியப்படுகின்றார் மேற்கோள்கள் மரணித்தல் ஒரு கலை மற்ற அனைத்தையும் போலவே நான் அதை மிகச் சிறப்பாக செய்கிறேன் அன்பால் அல்லது வெறுப்பால் மறைக்கப் படாமல் நான் பார்க்கும் எல்லாவற்றையும் அப்படியே உடனே விழுங்குகிறேன் ஓய்வெடுத்தால் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினால் நான் பைத்தியம் ஆகிவிடுகிறேன் தன்னை அழிப்பதன் மூலமாக இந்த உலகத்தை அழிக்க நினைக்கும் அதீத அகங்காரத்தினால் என்னை நானே ஏமாற்றிக்கொண்டிருந்தேன் உண்மையில் என்னுடைய பொறுப்பிலிருந்து தப்பித்து மீண்டும் கர்ப்பப்பையினுள் சென்று ஒளிந்துகொள்ளவே தற்கொலை செய்துகொள்ள விரும்பினேன் அவர் தந்தையின் மரண செய்தியைச் சொன்னபோது இனி நான் ஒருபோதும் கடவுளோடு பேசமாட்டேன் எந்த மகத்துவமும் இறங்கி அருளவில்லை சான்றுகள் பகுப்பு நபர்கள் பகுப்பு கவிஞர்கள்
வேர்ஜில் எனப்படும் பப்ளியஸ் வேர்ஜிலஸ் மாரோ அக்டோபர் கிமு செப்டெம்பர் கிமு ஒரு செந்நெறிக்கால ரோமக் கவிஞர் ஆவார் இவர் எழுதிய முக்கியமான ஆக்கங்கள் புகோலிக்ஸ் ஜோர்ஜிக்ஸ் ஏனீட் என்பன அவை தவிரப் பல சிறு கவிதை ஆக்கங்களையும் இவர் எழுதியுள்ளதாகச் சொல்லப்படுகிறது ஒரு விவசாயின் மகனான வேர்ஜில் ரோமின் மிகப் பெரிய கவிஞர்களுள் ஒருவர் என்ற நிலையை எட்டியதுடன் இவரது ஏனீட் என்னும் ஆக்கம் ரோமின் தேசிய இதிகாசமாகவும் போற்றப்பட்டது மேற்கோள்கள் காதல் அனைத்தையும் ஜெயிக்கும் ஆயுதம் அதற்கு நாம் அடிபணிய வேண்டும் நேரம் எல்லாவற்றையும் தாங்கியிருக்கின்றது எமது மனதையும் கூட நேரம் ஓடிக்கொண்டேயிருக்கறது அதை யாரும் திரும்பியழைக்க முடியாது வெளியிணைப்புக்கள் பகுப்பு கவிஞர்கள்பகுப்பு நபர்கள்
வலது கெட்ட மனிதர்கள் எவரும் இல்லாவிடின் நல்ல வழக்கறிஞர்கள் எவரும் இருக்கமாட்டார்கள் சார்லஸ் ஜான் ஹஃபாம் டிக்கென்ஸ் பெப்ரவரி ஜூன் விக்டோரியா காலத்தைச் சேர்ந்த மிகவும் புகழ் பெற்ற ஆங்கிலப் புதின எழுத்தாளர்களில் ஒருவரும் தீவிரமான சமூகப் பரப்புரையாளரும் ஆவார் இவரது டேவிட் காப்பர்ஃபீல்டு ஆலிவர் டுவிஸ்ட் போன்ற புதினங்கள் நாவல்கள் உலகப் புகழ் பெற்றவை ஆகும் மேற்கோள்கள் கெட்ட மனிதர்கள் எவரும் இல்லாவிடின் நல்ல வழக்கறிஞர்கள் எவரும் இருக்கமாட்டார்கள் பார்த்த மாத்திரத்திலேயே அனைத்தையும் எடுத்துவிடாதீர்கள் அனைவற்றையும் ஆதாரத்துடன் எடுத்துக்கொள்ளுங்கள் தலைக்கென்று ஒரு ஞானம் உள்ளது இதயத்தின் ஞானம் எனவும் ஒன்று உள்ளது குதுகலமும் திருப்தியும் சிறந்த அழகுண்டாக்கும் மருந்துகள் இளமைத் தோற்றத்தைப் பாதுகாப்பதில் கீர்த்தி பெற்றவை வித்தையில் விருப்பமுடையவன் தன்னை முழுவதும் அதற்குத் தத்தம் செய்யவும் அதிலேயே தன் வெகுமதியைக் காணவும் திருப்தியுடையவனாயிருக்க வேண்டும் தீயவர் நம்மை நேருக்கு நேராக நின்று பார்க்கக் கூகவர் என்றெல்லாம் அறிவில்லாமல் பேசப்படுகின்றது அந்தக் கருத்தை நம்ப வேண்டாம் ஆதாயம் ஏதேனும் கிடைக்குமானால் வாரத்தில் எந்த நாளிலும் அயோக்கியதை நம்மை ஏறிட்டுப் பார்த்து நேர்மையைக்கூட விரட்டிவிடும் தாயின் நற்குணங்களும் தந்தையின் பாவங்களும் குழந்தைக்கு வந்து சேரும் என்று எங்காவது எழுதி வைத்தல் நலம் உலகைப்பற்றிய அறிவு என்பதன் பொருள் மனிதர்களின் குறைபாடுகளை அறிதல் என்பதுதான் குறிப்புகள் வெளியிணைப்புகள் பகுப்பு எழுத்தாளர்கள் பகுப்பு இறந்த நபர்கள்
வலது மற்றவர்களை அடக்கி ஆளும் தன்மை உன்னுடைய திறமை உன்னை நீயே அடக்கி ஆள்வது உனது உண்மையான வல்லமை லாவோ சீ மற்றும் என்றும் எழுதப்படும் சீனாவின் முக்கியமான மெய்யியலாளர்களில் ஒருவர் டாவோ டெ சின்ங் என்ற நூலின் ஆசிரியரும் இவராவார் இவரின் டாவோயிசம் என்ற தத்துவக் கோட்பாடு சீனாவில் மிகவும் புகழ் பெற்றது டாவோசியம் என்ற கோட்பாட்டின் முதன்மையான கடவுளாகவும் லாவோ சீ பொது மக்களால் இனங் காணப்படுகின்றார் லாவோ சீ என்ற சீனப் பெயரின் தமிழ் அர்த்தமாக முதிர்ந்த ஆசான் என்பதைச் சொல்லலாம் மேற்கோள்கள் மற்றவர்களைப் பற்றி அறிந்திருப்பது புத்திசாலித்தனம் உன்னைப் பற்றி அறிந்திருப்பது உண்மையான ஞானம் மற்றவர்களை அடக்கி ஆளும் தன்மை உன்னுடைய திறமை உன்னை நீயே அடக்கி ஆள்வது உனது உண்மையான வல்லமை வெளியிணைப்புக்கள் சீனப் பதிப்புக்கள் பகுப்பு சீனர் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு எழுத்தாளர்கள்
அகரவரிசையில் மலையாளப் பழமொழிகள் தரப்பட்டுள்ளன அ அகத்தினழகு முகத்தில் தெரியும் அகப்பட்டால் பன்றி சுரைக்காயும் தின்னும் அக்காவின் உடமை அரிசி தங்கை உடமை தவிடு அக்கிரகாரத்தில் பிறந்தாலும் நாய் வேதம் ஓதாது அஞ்சு பெண் கட்டியவன் ஆண்டி அஞ்சு வயசில் அண்ணன் தம்பி பத்து வயசில் பங்காளி அஞ்சு விரலும் ஒன்று போல் ஆகுமா அடக்கம் இருந்தால் ஆயுள் முழுமையடையும் அடைமழை விட்டாலும் செடிமழை விடாது அடியாத மாடு பணியாது அடிக்கின்ற கை அணைக்கும் அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள் அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் அடி நாக்கில் நஞ்சும் நுனிநாக்கில் தேனும் அட்டையைப்பிடித்து மெத்தையில் கிடத்தினால் கிடக்குமோ அண்டத்திலுள்ளதே பிண்டத்திலும் காணும் அதற்கொரு காலம் இதற்கொரு காலம் அதிவேகம் ஆபத்து மிக்கது அத்தைக்கு மீசை முளைத்தால் சிற்றப்பா என்று அழைக்க முடியுமா அத்திபூத்தாற்போல் அத்திப்பூவையும் ஆந்தைக்குஞ்சையும்ம் யாரும் கண்டதில்லை அந்தியில் வரும் மழை நீளும் அம்பட்டன் செம்பட்டு உடுத்தாலும் அம்பட்டன் தான் அம்பட்டனின் குழந்தைக்கு மயிருக்கு குறைச்சலோ அம்பினால் வராததும் வம்பினால் வரும் அம்மா வயிற்றில் எல்லாவற்றையும் படித்துவந்தவர் யாரும் இல்லை அம்மாயின் சாபம் அம்மா இறந்தாலும் அழியாது அம்மாவின் பாசத்திற்கு அளவில்லை அரைக் குடம் கூத்தாடும் அரசன் அன்று கேட்கும் தெய்வம் நின்று கேட்கும் அரசனில்லா நாடு நரகம் அரசன் வீழ்ந்தால் படையில்லை அரைச்சாண் கடித்தால் ஒருசாண் வளரும் அரணை கடிச்சால் உடனே மரணம் அரையடிமண்ணில் ஆயிரம் பாம்பு அற்ப லாபம் பெருஞ்சேதம் அல்லல் ஒரு காலம் செல்வம் ஒரு காலம் அவலினை நினைத்து உரலை இடி அளக்கின்ற நாழி அரிசியின் விலை அறியுமோ அழகுள்ள பலாப் பழத்தில் சுளையில்லை அறிந்தவனுடன் பேசு அறியாதவனுடன் பேசாதே ஆ அந்தக் காட்டிற்கு அந்த குரங்கு எனில் இந்த காட்டிற்கு இந்த குரங்கு ஆகாயம் வீழுமென்ற நிலை வந்தாலும் யாரேனும் முட்டுகொடுக்க முடியுமா ஆடு அங்காடி வாணிபம் அறியுமோ ஆடிக்காற்றில் யானையும் பறக்கும் ஆட்டை நாயென சொல்லுக ஆடிய காலும் பாடிய வாயும் அடங்கி இருக்காது ஆடு கால் பணம் பிடுக்கு முக்கால் பணம் ஆடு பிடிக்கச் சென்றால் கரடி அகப்படுகிறது ஆடு மேய்ந்த காடு போல் ஆட்டின் தோல் போர்த்திய நாயைப் போலே ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு அய்யங்கார் சாமிக்கு மூன்று கொம்பு ஆட்டைப் பிடித்து மாட்டைப் பிடித்து மனிதனைப் பிடிக்கிறாயே ஆணாகப் பிறந்தவனுக்கு பெண் வேண்டும் ஆணிற்கு அடங்காத பெண்ணில்லை ஆணை அடித்து வளர்க்க வேண்டும் பெண்ணை போற்றி வளர்க்க வேண்டும் ஆணுக்கு ஒரு வீடு பெண்ணுக்கு இரண்டு வீடுகள் ஆணும் பெண்ணும் நெய்யும் தீயும் ஆண்டிச்சி பெற்றதஞ்சும் குரங்கு ஆபத்தில் பாவமில்ல ஆபத்துகாலத்தில் அரைஞாண் சரடும் பாம்பாகும் ஆனது ஆகட்டும் போனது போகட்டும் ஆயிரம் அம்பட்டக்கத்தியைச் சேர்த்தாலும் ஒரு மரத்தை வெட்ட முடியாது ஆயிரம் உள்ளவர் அமந்திருப்பார் அரைப் பணம் உள்ளவர் ஆடித்துள்ளுவார் ஆயிரம் கண்களை பொட்டையாக்குபவனே அரை வைத்தியன் ஆயிரம் வந்தாலும் ஆயிரம் போனாலும் எனக்கொன்றும் இல்லை ஆயிரம் குதிரையை வேட்டையாடினாலும் வீரன் மரப்பட்டியோடு புதைக்கப்படுவான் ஆயிரம் பணம் போனாலும் போகட்டும் மன அமைதியே முக்கியம் ஆயிரம் பாடல்கள் படித்தவன் அரைக்கவி ஆயுள் உள்ளவர்க்கு ஆசை உண்டு ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் ஆள் பாதி ஆடை பாதி ஆள் மாறி கலப்பப் பிடித்தாலும் காளை உழும் ஆளுக்கு ஆள் போல் மரத்திற்கு வேர் ஆழத்தில் உழுது அகலத்தில் நடுக ஆழம் அறியாமல் ஆற்றில் இறங்காதே ஆழமுள்ள கிணற்றிற்கு நீளமுள்ள கயறு ஆறிய கஞ்சி பழங்கஞ்சி ஆறிலும் மரணம் நூறிலும் மரணம் ஆறு நாட்டில் நூறு மொழிகள் ஆறும் அறுபதும் ஒரு போலெ ஆட்கள் கூடினால் பாம்பிற்கு சாவில்லை பலர் கூடி உடிவெடுக்கும் போது பல்வேறு எண்ணங்கள் இருக்கும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் வரும் ஒரே முடிவை எடுப்பது கடினம் என்பது இதன் பொருள் இ இக்கஞ்சிக்கு இச்சம்மந்தி இக்கரையில் நின்றால் அக்கரைப் பச்சை இங்கிதம் அறியாதவர்க்கு சங்கீதம் அறிந்து ஆகப் போவது ஒன்றுமில்லை இஞ்சி தின்ற குரங்கினைப் போல் இடது கைக்கு துணை வலது கை இடங்கொடுத்தால் மடம் பிடுங்கும் இடிவெட்டிய மரம் போல் இட்டது சட்டம் இணங்கிய பறவை கூட்டில் இணங்காத பறவை காட்டில் இனம் இனத்தோடு குலம் குலத்தோடு இன்று சிரிப்பவன் நாளை அழுவான் இன்று நான் நாளை நீ இன்று எனக்கு நாளை உனக்கு இரையிட்டால் மீன் சிக்கும் இரவல் புடவையைக் காட்டிலும் பழந்துணியே மேல் இருதோணியில் கால் வைத்தால் ஆற்றின் நடுவில் விழும் நிலை வரும் இருமுலைக்கு இடையில் பெரும் லோகம் இரும்பு பழுத்திருக்கும் போது அடிக்க வேண்டும் இருள் ஒருகாலம் வெளிச்சம் ஒருகாலம் இல்லம் நிரை வல்லம் நிறை பத்தாயம் நிறை வயறு நிறை இல்லாமையும் வல்லாமையும் எல்லார்க்கும் வரும் இள நாய் கடி அறியுமோ இளம்போத்து வெட்டு றியுமோ ஈ ஈர் எடுத்ததின் கூலி பேன் உ உடுதுணிக்கு மறுதுணியில்லை உடுத்தியிருக்கும் துணிக்கு வேறு துணியில்லாதவர் ஏழை உண்ட சோற்றிற்கு நன்றியுடன் இருக்க வேண்டும் உண்ணியை கண்டால் ஊரையே அறியலாம் ஒராளைக் கண்டாலே அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களைப் பற்றி அறியலாம் ஏ ஏட்டில் உள்ள புல்லை பசு தின்னாது நூலறிவால் விளைவது எதுவுமில்லை உலக அறிவே முதன்மையானது க கஞ்சி தராமல் கொன்றுவிட்டு இறந்தபின்னர் பால்பாயசம் படைத்தல் வாழும் வரை மதிக்காமல் இருந்துவிட்டு இறந்தபின்னர் படையல் இட்டு வழிபடுதல் கரைகின்ற குஞ்சே பால் குடிக்கும் தேவை இருக்கும் போது கேட்டுப் பெறுபவனே அறிவாளி காற்றுள்ளப்போதே தூற்றிக் கொள்ள வேண்டும் குருடர்கள் யானையைக் கண்டதைப் போல் ஒன்றைப் பற்றி அறியாமலேயே பல கருத்துகளைக் கூறுவதைக் குறிக்கிறது த தாழ்ந்த நிலத்தில் நீரோடும் பணிவுடன் இருப்பவர்க்கே உயர்வும் நன்மையும் வரும் தொடருக தொட்டால் விடாதே ஏதாவது ஒரு செயலை தொடங்கினால் முடியும் வரை கவனம் இருக்க வேண்டும் தானம் கிட்டிய பசுவின் வாயைப் பார்க்காதே ந நாயின் வால் பன்னிராண்டு காலம் நிமிர்த்தினாலும் வளைந்தே இருக்கும் ப பெண்புத்தி பின்புத்தி பொன்முட்டையிடும் வாத்தைக் கொல்லாதே வ வந்த வழியை மறக்காதே செல்வ வளம் பெருகிய பின்னர் பழைய கால வாழ்க்கையை மறக்கக் கூடாது வேலி தாண்டிய பசுவிற்கு கோலால் மரணம் தவறான வழியில் சென்றால் ஆபத்து நேரிடும் சான்றுகள் பகுப்பு பழமொழிகள்
மிருகங்கள் எனது நண்பர்கள் நான் எனது நண்பர்களை உண்பதில்லை ஜார்ஜ் பெர்னாட் ஷா ஆம் ஆண்டு ஜூலை ஆம் ஆண்டு நவம்பர் ஒரு அயர்லாந்து நாடக ஆசிரியராவார் இசை மற்றும் இலக்கிய விமர்சனமே அவரது முதல் இலாபத் தன்மை கொண்ட எழுத்துப் படைப்புகள் ஆகும் அதில் தனது திறனைக் கொண்டு மிக நேர்த்தியான பத்திரிக்கைப் படைப்புகள் பலவற்றை எழுதினார் அவரது பிரதான திறமை நாடகமே ஆகும் மேலும் அவர் க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார் கிட்டத்தட்ட அவரது அனைத்து எழுத்துப் படைப்புகளும் சமூகத்தில் பெருவாரியாக நிலவிவரும் சிக்கல்களைப் பற்றியதாகவே இருக்கும் ஆனால் அவற்றின் மிக முக்கிய கருப்பொருள்களை மிகவும் மனதால் ஏற்றுக்கொள்ளும்படி மாற்றுவதற்கு அவற்றில் ஒரு நகைச்சுவை அம்சமும் இழையோடியபடி இருக்கும் கல்வி திருமணம் மதம் அரசாங்கம் உடல்நலம் மற்றும் சாதிப்பாகுபாடு ஆகிய அனைத்தையும் பெர்னாட் ஷா ஆராய்ந்தார் மேற்கோள்கள் வாழ்க்கை என்பது உங்களைக் கண்டுபிடிப்பதல்ல வாழ்க்கை என்பது உங்களை உருவாக்குவதே மிருகங்கள் எனது நண்பர்கள் நான் எனது நண்பர்களை உண்பதில்லை ஒரு செயலைச் செய்ய முடியாது என்பவர்கள் அச்செயலைச் செய்பவர்களுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது பலரும் தங்களது சூழ்நிலை சரியில்லை என்றே குறைப்பட்டுக் கொள்கிறார்கள் வெற்றியாளர்களோ எழுந்து தங்களுக்கான சூழ்நிலையைத் தேடுகிறார்கள் அத்தகைய சூழ்நிலை கிடைக்கவில்லையெனில் அவர்களே உருவாக்குகிறார்கள் ஜோர்ஜ் பெர்னாட் ஷா நான் எந்த ஏணியையும் உதவியாகக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறவில்லே வெறும் உழைப்பின் சக்தி ஒன்றினாலேயே முன்னுக்கு வந்தேன் எல்லா இளைஞர்களும் என்னேயே பின்பற்ற முயன்று வீண்மோசம் போக வேண்டாம் நான் பல காலத்தைப்பற்றி எழுதுகிறேன் ஆனால் நிகழ்காலம் தவிர வேறு எந்தக் காலத்தைப் பற்றியும் நான் கற்பதில்லை அந்த நிகழ்காலத்தையே இன்னும் நன்றாகக் கற்றுத் தேரவில்லை அதுவே என் வாழ்நாளில் கற்றுத் தேற முடியாததாக உள்ளது வெற்றி என்னைத் தேடிவரவில்லை நான் என் இடையறா முயற்சியால் வெற்றியைத் தேடிப் பிடித்துக் கொண்டேன் முதலில் சிறு பாவங்களாகச் செய்யத் தொடங்குவோம் என்று தீர்மானித்துக் கொண்டு நான் எனது நாடகங்களை எழுதத் தொடங்கினேன் ஷேக்ஸ்பியர் என்னைவிட அதிக உயரமுள்ளவரே எனினும் நான் அவரைவிட அதிகத் தூரம் பார்க்க முடியும் நான் அவருடைய தோள்களின் மேல் அல்லவோ நிற்கின்றேன் செல்வத்தை உண்டாக்காமல் நுகர உரிமை கிடையாது அது போலவே இன்பத்தையும் உண்டாக்காமல் நுகர உரிமை கிடையாது வறுமையே தீமையிற் தீமையும் குற்றத்திற் கொடியதுமாகும் பண்டிதர் என்பவர் படித்துப் படித்துக் காலத்தைக் கொல்லும் சோம்பேறிகளாவர் நூறு விதமாய்க் கூறினாலும் மதம் ஒன்று தான் உண்டு ஆங்கிலேயர் ஒருபோதும் அடிமைகளாய் இருக்க மாட்டார்கள் அரசாங்கமும் பொது மக்கள் அபிப்பிராயமும் அனுமதிக்கும் எதையும் செய்வதற்கு அவர்களுக்கு சுதந்தரம் இருக்கின்றது ஒரே ஒரு நல்ல பண்புதான் உளது அதுதான் போர் வெறி ஒரே ஒரு கெட்ட பண்புதான் உளது அதுதான் சாந்தியை விரும்புதல் இந்த நிலைதான் போருக்குத் தேவையானது சான்றுகள் வெளி இணைப்புக்கள் பகுப்பு அயர்லாந்தின் நாடகாசிரியர்கள் பகுப்பு நோபல் பரிசு வென்றவர்கள் பகுப்பு நாத்திகர்கள் பகுப்பு இறப்புக்கள் பகுப்பு பிறப்புக்கள் பகுப்பு இறந்த நபர்கள்
பாட்ஷா ல் வெளிவந்த ரஜினிகாந்த் நக்மா ரகுவரன் மற்றும் பலரும் நடித்துள்ள தமிழ்த் திரைப்படம் ஆகும் இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் மாணிக்கம் என்ற முன்னாள் மும்பையில் தாதாவாக இருந்த ஆட்டோ காரனாக நடித்தார் மாணிக் பாட்ஷா மாணிக்கம் நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்னா மாதிரி நான் இத கேட்டு வேலை செய்யல தலையை தட்டிக்கொள்கிறார் இத இத இத கேட்டு வேலை செய்றேன் மார்பை தட்டிக்கொள்கிறார் நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் ஆனா கைவிடமாட்டான் கெட்டவங்களுக்கு ஆண்டவன் நெறைய கொடுப்பான் ஆனா கை விட்ருவான் வசனங்கள் மார்க் ஆண்டனி என்ன மாணிக் நல்ல இருக்கியா மாணிக் பாட்ஷா பாட்ஷா மாணிக் பாட்ஷா மார்க் ஆண்டனி ஆ எஸ் எஸ் எஸ் மாணிக் பாட்ஷா என்ன விஷயம் தம்பி என் கிட்ட எதோ பேசணும்னு சொன்னியாமே ஏதாவது உதவி தேவையா சொல்லு என்னவேனா செய்றேன் நீ நம்ம ரங்கசாமி புள்ளையாச்சே சொல்லு மாணிக் பாட்ஷா ஹே ஹே ஹே ஹே இத பாரு எனக்கும் உனக்கும் தான் சண்ட இந்த பாட்ஷாக்கும் ஆண்டனிக்கும் தான் சண்ட இதுல நீ சாகனும் இல்ல நான் சாகனும் உன்னுடைய ஆளுங்க சாகனும் இல்ல என்னுடைய ஆளுங்க சாகனும் பொதுமக்கள் இல்ல அப்பாவி மக்கள் இல்ல இப்போ தெரிஞ்சுப்போச்சு நீ ஒரு கோழை ஒரு கோழை கூட சண்டப் போடறது எனக்கு பிடிக்காது இந்த பாட்ஷா மாணிக் பாட்ஷாக்கு பிடிக்காது முடிச்சுடறேன் முடிச்சிடறேன் எண்ணி ஏழே நாளுக்குள்ள உன் கதையே முடிச்சிடறேன் ரங்கசாமி டேய் யாருக்கிட்ட என்ன பேசிகிட்டு இருக்கனு தெரியுமா மாணிக் பாட்ஷா தெரியும்ப்பா ஒரு அயோக்கியன் கிட்ட உண்மையே பேசிகிட்டு இருக்கேன் ரங்கசாமி டேய் மார்க் ஆண்டனி ஆ ஆ ஆ ஆ சின்ன புள்ள அப்பா மாணிக் பாட்ஷா நீ இந்த தொழிலுக்கு புதுசு குழந்தை என்ன சொன்ன ஏழு நாள்ல என்ன முடிக்கிறியா எண்ணி ஏழே செகண்டுக்குள்ள உன்ன நான் முடிக்கிறேன் புரியலையா கொஞ்சம் பாரு ஒரு பக்கம் பாட்ஷாவை கொல்ல துப்பாக்கி ஏந்திய ஆண்டனியின் ஆட்கள் நிற்கின்றனர் மாணிக் பாட்ஷா கொஞ்சம் அங்கே பாரு கண்ணா மற்றொரு பக்கத்தில் ஆண்டனியை கொல்ல துப்பாக்கி ஏந்திய பாட்ஷாவின் ஆட்கள் நிற்கின்றனர் மாணிக் பாட்ஷா ஹா ஹா ஹா ஹா பாட்ஷா மாணிக் பாட்ஷா ஹே ஹே ஹே ஒன்னு சொல்றேன் நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் ஆனா கைவிடமாட்டான் கெட்டவங்களுக்கு ஆண்டவன் நெறைய கொடுப்பான் ஆனா கை விட்ருவான் பகுப்பு தமிழ்த் திரைப்படங்கள் பகுப்பு ரஜினிகாந்த் நடித்த தமிழ் திரைப்படங்கள்
எந்திரன் ல் வெளியான ஒரு அறிபுனை தமிழ்த் திரைப்படமாகும் சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கின்றார்கள் இப்படத்துக்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கின்றார் வசீகரன் ச்சிட்டி தானியங்கியை அறிமுகப்படுத்துகிறார் ஜென்டில்மேன் இவன் ஒரு ஆள் ஒரு நூறு பேருக்கு சமம் நூறு பேரோட அறிவும் திறமையும் இவனுக்குள்ள ப்ரோக்ராம் செய்யப்பட்டிருக்கு இவனுக்கு எல்லா கலைகளும் தெரியும் உலகின் எல்லா மொழிகளும் தெரியும் வசனங்கள் வசீகரன் நீங்க ச்சிட்டி கிட்ட ஏதாவது கேக்கறதுனா கேக்கலாம் பார்வையாளர் சிம்பிளா கேக்கறேன் ஃபிபோனாசி நம்பரா ச்சிட்டி ஆமா இருபத்தி இரண்டாவது ஃபிபோனாசி நம்பர் பை தி பை அது மந்தவெளி பி சுப்ரமணித்தோட ஃபோன் நம்பர் பார்வையாளர் உனக்கு தெரிஞ்ச மிகப்பெரிய ப்ரைம் நம்பர் என்ன ச்சிட்டி மடிகணினியில் எண்களை அழுத்துகிறது எம் இது சரியானு பார்க்க உங்களுக்கு சில வருஷங்கள் ஆகும் கரகோஷம் பார்வையாளர் குட் வெளிநாட்டு பார்வையாளர் அமேசிங் இட்ஸ் கிரேட் பார்வையாளர் எழுந்து ஆலாபனை செய்கிறார் என்ன ராகம் ச்சிட்டி நாட்டகுறிஞ்சி பாடறேன்னு சொல்லிடு ஹுசைனி போயிட்டீங்க நடுவுல அதே ஆலாபனையை திருத்தி பாடுகிறது இந்த இடத்துல சுருதி விலகிருச்சு கரகோஷம் வசீகரன் எனி மோர் கொஸ்டின்ஸ் பார்வையாளர் கடவுள் இருக்காறா இல்லையா ச்சிட்டி கடவுள்ன்னா யாரு பார்வையாளர் நம்மளையெல்லாம் படைச்சவர் ச்சிட்டி என்னை படைச்சவர் டாக்டர் வசீகரன் கடவுள் இருக்காரு கரகோஷம் பகுப்பு தமிழ்த் திரைப்படங்கள் பகுப்பு ரஜினிகாந்த் நடித்த தமிழ் திரைப்படங்கள் பகுப்பு இந்தியத் திரைப்படங்கள் பகுப்பு திரைப்படங்கள் பகுப்பு சங்கரின் திரைப்படங்கள்
வலது நான் புரட்சியாளன் இல்லை மக்களை ஆனந்தப்படுத்துகிற கலைஞன் அவ்வளவே சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் ஏப்ரல் டிசம்பர் என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின் ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர் இவருக்கு நடிகர் இயக்குநர் இசையமைப்பாளர் திரைக்கதை எழுத்தாளர் திரைப்படத் தொகுப்பாளர் திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன மேற்கோள்கள் நான் மழையில் தான் நடக்கிறேன் நான் அழுவது உலகுக்கு அப்பொழுது தான் தெரியாது நான் புரட்சியாளன் இல்லை மக்களை ஆனந்தப்படுத்துகிற கலைஞன் அவ்வளவே சுதந்திரத்தில் நம்பிக்கைக் கொண்ட தனிமனிதன் நான் இது மட்டும்தான் என் அரசியல் ஓர் அழகான பெண் ஒரு காவல்காரன் போலீஸ் ஒரு பூங்கா இந்த மூன்றும் எனக்குப் போதும் நகைச்சுவையை உருவாக்க ஹைட்ரஜன் குண்டுகளும் அணு குண்டுகளும் நம்மை அழிப்பதற்கு முன்னால் அவற்றை நம்மால் அழித்து விட முடியும் என்று நான் நம்புகிறேன் அருகிலிருந்து பார்க்கும்போது வாழ்க்கை சோகமானது ஆனால் தொலைவிலிருந்து பார்க்கும்போது நகைச்சுவையானது கண்ணாடி என்னுடைய சிறந்த நண்பன் ஏனென்றால் நான் அழும்போது அது ஒருபோதும் சிரிப்பதில்லை நீங்கள் கீழ்நோக்கி பார்த்துக் கொண்டிருந்தால் உங்களால் ஒருபோதும் வானவில்லை காணமுடியாது எனது உதடுகளுக்கு என்னுடைய பிரச்சினைகள் ஒருபோதும் தெரியாது அவை எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் எனது வலி யாரோ ஒருவருடைய சிரிப்பிற்குக் காரணமாக இருக்கலாம் ஆனால் எனது சிரிப்பு யாரோ ஒருவருடைய வலிக்கு காரணமாக இருக்கக்கூடாது இந்த பொல்லாத உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை நமது துன்பங்களும்தான் நாம் மிக அதிகமாக யோசிக்கிறோம் மிக குறைவாகவே உணர்கிறோம் வாழ்க்கை அற்புதமானதாக இருக்க முடியும் நீங்கள் அதைப்பற்றி பயப்படவில்லை என்றால் சிரிப்பு இல்லாத நாள் வீணடிக்கப்பட்ட நாள் எளிமை என்பது ஒரு சாதாரணமான விஷயம் அல்ல புத்திசாலித்தனத்தை விட அதிகமாக நமக்கு கருணை வேண்டும் த கிரேட் டிக்டேட்டர் த கிரேட் டிக்டேட்டர் படத்தில் ஹிட்லரைப் பகடி செய்து சாப்ளின் ஆற்றும் உரை வலது நான் பேரரசனாக ஆக விரும்பவில்லை அது என்னுடைய வேலை அல்ல நாமெல்லோரும் ஒருவொருக்கொருவர் உதவிசெய்துகொள்ளத்தான் வேண்டும் மனிதர்கள் அப்படித்தான் நாம் ஒவ்வொருவரும் அடுத்தவர்களின் மகிழ்ச்சியை ஆதாரமாகக் கொண்டுதான் வாழ வேண்டும் அடுத்தவர்களின் துன்பத்தை ஆதாரமாகக் கொண்டல்ல நாமெல்லோரும் ஒருவருக்கொருவர் வெறுக்கவும் துவேஷம் கொள்ளவும் வேண்டியதில்லை நான் பேரரசனாக ஆக விரும்பவில்லை அது என்னுடைய வேலை அல்ல சர்வாதிகாரிகள் தங்களை விடுவித்துக்கொள்வார்கள் ஆனால் மக்களை அடிமைப்படுத்திவிடுவார்கள் சிந்தனை நமது அறிவு யார் மீதும் நம்மை நம்பிக்கையற்றவர்களாக ஆக்கிவிட்டது நமது புத்திசாலித்தனம் கடின மனம் கொண்டவர்களாகவும் இரக்கமற்றவர்களாகவும் நம்மை மாற்றிவிட்டது நாம் மிக அதிகளவு சிந்திக்கிறோம் ஆனால் மிகமிகக் குறைவான அளவுக்கே அக்கறைகொள்கிறோம் அறிவுக்கூர்மையை விட நமக்கு அதிகம் தேவை இரக்க உணர்வும் கண்ணியமுமே மனிதம் ஏராளமாக உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் நம்மிடம் இருந்தும் என்ன பயன் நாம் வறுமையில்தான் உழன்றுகொண்டிருக்கிறோம் இயந்திரங்களை விட நமக்கு அதிகம் தேவை மனிதமே நேசிக்கப்படாதவர்கள்தான் வெறுப்பார்கள் பேராசை மனிதர்களின் ஆன்மாக்களில் பேராசையானது நஞ்சைக் கலந்துவிட்டது அந்தப் பேராசை வெறுப்பினால் இந்த உலகத்துக்கே முட்டுக்கட்டை போட்டுவிட்டது துன்பத்திலும் துயரத்திலும் மக்களைத் தள்ளிவிட்டது நம்பிக்கை இழக்காதீர்கள் நம்மை ஆட்கொண்ட துன்பம் என்பது வேறொன்றுமில்லை பேராசையின் விளைவுதான் அது நம்மை ஆட்கொண்ட துன்பம் என்பது பேராசையின் விளைவுதான் போர் வீரர்களுக்கு வலது சர்வாதிகாரிகள் தங்களை விடுவித்துக்கொள்வார்கள் ஆனால் மக்களை அடிமைப்படுத்திவிடுவார்கள் உங்களைப் பீரங்கிக் குண்டுகளுக்கு இரையாக்குவார்கள் மனித இயல்பற்ற அவர்களுக்கு அடிபணிந்துவிடாதீர்கள் இயந்திர மனங்களையும் இயந்திர இதயங்களையும் கொண்ட இயந்திர மனிதர்கள் தான் அவர்கள் நீங்களெல்லாம் இயந்திரங்கள் அல்ல நீங்களெல்லாம் கால்நடைகள் அல்ல நீங்கள் மனிதர் கள் மனிதம் மீதான அன்பு உங்கள் இதயத்தில் இருக்கிறது நீங்கள் யாரையும் வெறுப்பதில்லை நேசிக்கப்படாதவர்கள்தான் வெறுப்பார்கள் நேசிக்கப் படாத மனித இயல்பற்ற மனிதர்கள்தான் அவர்கள் போர்வீரர்களே அடிமைத்தனத்துக்காகப் போரிடாதீர்கள் சுதந்திரத்துக்காகப் போராடுங்கள் சாப்ளின் கனவு கண்ட உலகம் மேகங்கள் விலகி சூரியன் இருட்டை விரட்டும் பேரொளியோடு உதிக்கும் அந்த புத்துலகு வெறுப்பு பேராசை மிருகத்தனங்களை கடந்து மனிதர் எழப்போகும் கருணை உலகம் அது ஒவ்வொரு ஆன்மாவுக்கு சிறகு முளைக்கட்டும் அவன் பறக்கட்டும் அவன் வானவில்லை நோக்கிச் செல்வான் அந்தப் பயணம் அவனை நம்பிக்கையின் வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்லும் ஒளிமயமான மாட்சிமை மிகுந்த எதிர்காலம் உனக்கும் எனக்கும் நமக்கும் உரியதாகும் இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் இடம் இருக்கிறது நம்முடைய பூமி எல்லோருடைய தேவைகளையும் நிறைவேற்றக் கூடிய அளவுக்கு வளம் மிக்கது அரசியலில் எனக்கு எந்தவிதமான ஆர்வமும் கிடையாது மக்கள் குடியிருக்க வசதியான வீடுகளைப் பெற வேண்டும் மூன்று வேளைகளுக்கும் தேவையான அளவு உணவு அவர்களுக்குக் கிட்ட வேண்டும் நேர்த்தியான முறையில் அவர்கள் தங்கள் குழந்தைகளை வளர்க்கக்கூடிய நிலைமை அடைய வேண்டும் இவற்றையே நான் பெரிதும் விரும்புகிறேன் நகைச்சுவைக்கென்றே நான் படங்களைத் தயாரிக்கின்றேன் நகைச்சுவை மக்களைத் தொல்லைகளிலிருந்து விடுபட உதவுகிறது சுதந்திரம் மனிதர்களின் வெறுப்பு கடந்துபோகும் சர்வாதிகாரிகள் இறந்துவிடுவார்கள் மக்களிடமிருந்து அவர்கள் எடுத்துக்கொண்ட அதிகாரம் மக்களிடமே திரும்பும் மனிதர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்வது நீடிக்கும்வரை சுதந்திரம் என்பது ஒருபோதும் அழியாது சுதந்திரத்துக்காகப் போராடுங்கள் புதிய உலகம் இளைஞர்களுக்கு எதிர்காலத்தையும் முதியவர்களுக்கு அரவணைப்பையும் தரக்கூடிய கண்ணியமான புதிய உலகத்துக்காகப் போராடுவோம் புதிய உலகைப் படைப்பதற்க்காக நாடுகளுக்கு இடையிலான பாகுபாடுகளைத் தகர்க்கவும் பேராசையையும் வெறுப்பையும் சகிப்பின்மையையும் குழிதோண்டிப் புதைக்கவும் அனைவரும் ஒன்றுசேர்ந்து போராடுவோம் நபர் குறித்த தேற்கோள்கள் என்னைச் சில சமயங்களில் தமிழ்நாட்டுச் சார்லி சாப்ளின் என்று சிலர் அழைக்கிறார்கள் அது அவ்வளவு பொருத்தமல்ல சார்லி சாப்ளினே ஆயிரம் துண்டுகளாக்கினால் கிடைக்கிற ஒரு துண்டுக்குக்கூட நான் ஈடாக மாட்டேன் என் எஸ் கிருஷ்ணன் சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்பு ஆங்கில மக்கள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு திரைப்படக் கலைஞர் பகுப்பு பிரித்தானிய நடிகர்கள் பகுப்பு மனிதாபிமானிகள் பகுப்பு பிறப்புக்கள் பகுப்பு இறப்புக்கள்
வலது கனவுகள் பிரபஞ்ச மனதை அறிந்து கொள்ள உதவும் ராஜபாட்டை சிக்மண்ட் பிராய்ட் மே செப்டெம்பர் ஒரு ஆஸ்திரிய உளநோய் மருத்துவர் ஆவார் சிகிமண்ட் ஸ்லோமோ பிராய்ட் என்னும் இயற்பெயர் கொண்ட இவர் உளவியலின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனை முறையை நிறுவியவர் உள்மன ஆசைகளின் வெளிப்பாடாகக் கனவுகளை விளக்குதல் போன்றவை தொடர்பிலும் பிராய்ட் பெரிதும் அறியப்பட்டவர் மேற்கோள்கள் மனிதன் பிறக்கும் போது வெற்றுத்தாள் போல் தான் பிறக்கின்றான் இவ்வுலகில் அவன் கண்டு கேட்டு உற்று அறியும் சம்பவங்கள் மூலம் மெல்ல மெல்ல அவன் நல்லது கெட்டது பகுத்தறியும் திறன் பெறுகிறான் முனைப்பால் உந்தப்படும் இயல்புக்கும் உணர்வால் உந்தப்படும் இயல்புக்கும் உள்ள உறவு ஒரு தேரின் ஓட்டுநருக்கும் அதன் குதிரைக்கும் உள்ளான உறவைப் போன்றது கனவு கனவுகள் பிரபஞ்ச மனதை அறிந்து கொள்ள உதவும் ராஜபாட்டை சின்ன விசயங்களை கண் காது மூக்கு வைத்து ஒன்றுக்கு ஒன்பதாக்கும் பழக்கத்தை மனிதர்கள் கனவுகளிடம் இருந்துதான் கற்க வேண்டும் ஏனெனில் உணர்வுகளை கனவுகள் மிகைப்படுத்திக் காட்டும் கனவுகள் தெய்வீகச் செயல்பாடாகக் கருதப்பட்டதால் கனவுகளை உண்டாக்கும் காரணிகளைப் பற்றி விஞ்ஞானப்பூர்வமாக அறியும் அவசியம் ஏற்படவில்லை கனவுகள் ஒரு சுருக்க நிகழ்வு கனவுகள் அபத்தமாகத் தோன்றலாம் ஆனால் எப்போதும் அப்படி இருப்பதில்லை கனவு எண்ணங்கள் அபத்தமானவை அல்ல நாம் மனநோயாளியாக இல்லாத வரை கனவில் யானையக் கண்டால் வயிற்று வலி பூனையைக் கண்டால் இடுப்பு வலி என்று முடிந்த முடிவாக கனவு அகராதி போடுவது சிறுபிள்ளைத் தனமானது கனவுகள் வேறொரு உலகிலிருந்து வருகின்றன என்று சொல்ல முடியாவிட்டாலும் அவை வேறொரு உலகத்துக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன கனவுகள் எந்த ஒழுங்குமற்றவை இலக்கணம் மீறியதல்ல இலக்கணமே இல்லாதவை அல்லது அதற்கென்று ஒரு தனி இலக்கணத்தை வகுத்துக் கொள்வது எனவே அவை மறந்து போவதற்கு ஏதுவாக உள்ளன சான்றுகள் வெளி இணைப்புகள் பகுப்பு நபர்கள் பகுப்பு உளவியல் அறிஞர்கள் பகுப்பு உளவியல் மருத்துவர்கள்
கனவு என்பது ஒருவர் தூங்கும் பொழுது அவரது மனத்தில் எழும் மனப் படிமங்கள் காட்சிகள் ஓசைகள் உணர்வுகள் நிகழ்வுகளைக் குறிக்கிறது ஒருவர் கனவு காணும் பொழுது அவரது கண்களின் அசைவுகள் காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது கனவு என்றால் என்ன என்பது தொடர்பாக ஒரு முழுமையான அறிவியல் புரிதல் இன்னும் இல்லை மூளையில் உள்ள நினைவுக்குறிப்புகளை ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தும் செயல்பாட்டின் விளைவாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது இது அனைத்து பாலூட்டிகளிலும் ஏற்படக்கூடிய விளைவாகும் மேற்கோள்கள் வலது நிஜம் எப்போதுமே பயங்கரமான ஒன்றாகவும் கனவு ஒரு சரணாலயம் போலவும் தென்பட்டன கனவு காண்பது முற்றிலும் கற்பனையானது அதன் மூலம் எல்லா மனிதர்களும் சிருஷ்டிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் என்று தெரிகின்றது விழித்திருக்கும் பொழுது அந்த ஆற்றல் இருந்தால் ஒவ்வொரு மனிதனும் ஒரு தாந்தேயாகவோ ஷேக்ஸ்பியராகவோ விளங்குவான் ஹெட்ஜ் மானிட உள்ளம் எல்லையற்றது என்பதற்குக் கனவு காண்பதை உதாரணமாய்க் கொள்ளலாம் குளுலோ இலக்கியங்களில் கனவுகள் பற்றி இன்னமும் காண வேண்டிய கனவு மீதமிருக்கிறது ஹோர்ஹே லூயிஸ் போர்கெஸ் நிஜம் எப்போதுமே பயங்கரமான ஒன்றாகவும் கனவு ஒரு சரணாலயம் போலவும் தென்பட்டன குள்ளச் சித்தன் சரித்திரம் உளவியல் அறிஞர்களின் பார்வையில் கனவுகள் நமது மனமும் சிந்தனையும் ஒரு பிரச்சினையில் மூழ்கி உள்ளபோது அதைக் குறியீடுகள் மூலம் பிரதிபலிப்பதாகக் கனவு உள்ளது பர்டாக் நாம் சொன்னது செய்தது செய்ய நினைத்ததும் தான் கனவில் வருகின்றன மோரி கனவு காண்பவரின் வயது வாழ்முறை அனுபவம் அவர் ஆனா பெண்ணா போன்றவை தான் கனவின் உள் விஷயங்களைத் தீர்மானிக்கின்றன ஜென்ஸன் கனவானது நனவு வாழ்வோடு சம்பந்தப்பட்டிருந்தாலும் நனவு வாழ்வுக்குக் கொஞ்சம் கூட சம்பந்தமில்லாத விஷயங்களையும் காட்ட வல்லது ஹில்டெப்ரான் சிக்மண்ட் பிராய்ட் கனவுகள் பிரபஞ்ச மனதை அறிந்து கொள்ள உதவும் ராஜபாட்டை சின்ன விசயங்களை கண் காது மூக்கு வைத்து ஒன்றுக்கு ஒன்பதாக்கும் பழக்கத்தை மனிதர்கள் கனவுகளிடம் இருந்துதான் கற்க வேண்டும் ஏனெனில் உணர்வுகளை கனவுகள் மிகைப்படுத்திக் காட்டும் கனவுகள் தெய்வீகச் செயல்பாடாகக் கருதப்பட்டதால் கனவுகளை உண்டாக்கும் காரணிகளைப் பற்றி விஞ்ஞானப்பூர்வமாக அறியும் அவசியம் ஏற்படவில்லை பழமொழிகளில் கனவுகள் விளக்கப்படாத கனவு திறக்கப்படாத கடிதம் போன்றது பழமொழி அஜீரணக் கோளாறின் காரணமாகவே கனவு ஏற்படுகிறது பழமொழி குறிப்புகள் பகுப்பு மனம்
வலது இலக்கியம் என்பது தச்சு வேலையன்றி வேறில்லை கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் என அறியப்படும் கபிரியேல் ஜோஸ் டி லா கான்கோர்டியா கார்சியா மார்க்கேஸ் பிறப்பு மார்ச் இறப்பு ஏப்ரல் கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு புதின எழுத்தாளரும் சிறுகதை எழுத்தாளரும் திரைக்கதை எழுத்தாளரும் பத்திரிகையாளரும் ஆவார் தனது சொந்த நாட்டில் கபோ என அழைக்கப்படும் இவர் ஆம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவராகக் கணிக்கப்படுகிறார் ல் இவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு தனிமையின் நூற்றாண்டுகள் நாவலுக்காக வழங்கப்பட்டது மேற்கோள்கள் பிடல் ஒரு பண்புள்ள மனிதர் நாங்கள் சந்திக்கும் போது இலக்கியம் பற்றியே விவாதிப்போம் வானத்தில் ஒரு யானை பறக்கிறது என்று நீங்கள் சொன்னால் மக்கள் உங்களை நம்பமாட்டார்கள் ஆனால் வானத்தில் நானூற்று முப்பத்து ஐந்து யானைகள் பறக்கின்றன என சொன்னால் உங்களை நம்புவார்கள் இலக்கியம் என்பது தச்சு வேலையன்றி வேறில்லை நமக்கும் முன்னால் இருக்கும் பத்தாயிரம் ஆண்டு கால இலக்கியங்களைப் பற்றிய பிரக்ஞை சிறு அளவில்கூட இல்லாமல் ஒரு நாவல் எழுத யாராவது உத்தேசிக்க முடியுமா என்று என்னால் கற்பனை செய்துபார்க்க முடியவில்லை நான் வியந்து போற்றிய படைப்பாளிகளைப் போலவே எழுத நான் ஒருபோதும் முயன்றதில்லை மாறாக அவர்களை என் எழுத்தில் பிரதிபலிக்காமல் இருக்க என்னால் முடிந்ததையெல்லாம் செய்திருக்கிறேன் சாதாரண மக்களின் தொன்மங்களும் யதார்த்தத்தைச் சேர்ந்தவையே காவல் துறையினர் மக்களைக் கொல்கிறார்கள் என்பது மட்டுமல்ல யதார்த்தம் சாதாரண மக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் யதார்த்தமன்றி வேறென்ன மது விடுதி ஒன்றில் பியானோக்காரனாக இருந்திருப்பேன் காதலர்கள் இன்னும் அதிகமாக நேசிக்க அந்த வழியில் என் பங்களிப்பு இருந்திருக்கும் எழுத்தாளராக ஆகாவிட்டால் என்னவாகியிருப்பீர்கள் எனக் கேட்ட போது மார்க்கேஸ் கூறியது எனது பத்திரிக்கை எழுத்துக்கள் இல்லையெனில் எனது நாவல்கள் இல்லை நான் அடிப்படையில் கருத்தியல் கொண்டவன் என்பதால் இயல்பாக எனது நாவுலுக்குள் அது இருக்கும் பிரச்சாரத்தைப் படைப்பில் நான் வெறுக்கிறேன் லத்தீன் அமெரிக்காவின் யதார்த்தம் நீங்கள் கற்பனையில்கூடத் தரிசிக்க முடியாத குரூரங்களையும் விநோதங்களையும் கொண்டது அந்த யதார்த்தங்களை விவரிக்க மரபுரீதியான உத்திகள்கூட இல்லையென்பதுதான் எங்கள் தனிமையின் சாரம் சான்றுகள் புற இணைப்புகள் பகுப்பு நபர்கள் பகுப்பு எழுத்தாளர்கள்
வலது ஜேரட் டயமண்ட் ஜேரட் டயமண்ட் அல்லது ஜாரெட் டயமண்ட் பி செப்டம்பர் ஒரு அமெரிக்க அறிவியலாளர் மற்றும் எழுத்தாளர் தனது அறிவியல் அபுனைவு படைப்புகளில் பல அறிவியல் துறைகளைப் பற்றி எழுதியுள்ளர் தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் யுசிஎலஏ புவியியல் மற்றும் உடற்செயலியல் பேராசிரியராக உள்ளார் தி தர்ட் சிம்பான்சி கன்ஸ் ஜெர்ம்ஸ் அண்ட் ஸ்டீல் கொலாப்ஸ் போன்ற இவரது வெகுஜன அறிவியல் புத்தகங்கள் உலகப்புகழ் பெற்றவை புலிட்சர் பரிசு அமெரிக்காவின் தேசிய அறிவியல் பதக்கம் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார் மேற்கோள்கள் கி மு த்தில் எழுதுகிற முறை தோன்றுவதற்கு முந்தைய வரலாறு குறைந்த அளவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது எனினும் அதுதான் ஐம்பது லட்சம் ஆண்டுகள் கொண்ட மனித இன வரலாற்றின் சதவீதத்தை உள்ளடக்கியிருக்கிறது வெவ்வேறு மக்களுக்கு வரலாறு வெவ்வேறாகப் பின் தொடர்ந்தது இதற்கு மக்களின் சூழ்நிலைமகளில் இருந்த வேறுபாடுகள் தான் காரணமே தவிர மக்களுக்குள்ளேயே இருந்த உயிரியல் வேறுபாடுகள் காரணமல்ல சான்றுகள் புற இணைப்புகள் பகுப்பு நபர்கள் பகுப்பு அமெரிக்கர்கள் பகுப்பு அறிவியலாளர்கள் பகுப்பு எழுத்தாளர்கள் பகுப்பு புவியியல் அறிஞர்கள்
வலது டி டி கோசாம்பி டி டி கோசாம்பி எனப் பரவலாக அறியப்பட்ட தாமோதர் தர்மானந்தா கோசாம்பி ஜூலை ஜூன் ஒரு இந்திய மார்க்சியப் புலமையாளர் கணிதவியலாளர் புள்ளியியலாளர் மற்றும் பல்துறை அறிஞர் இந்திய மார்க்சிய வரலாறு எழுதுதலில் அடிப்படைகளை இட்டவர் மேற்கோள்கள் பாரதநாட்டின் பழமையில் நாம் பெருமை கொள்ளும் அளவுக்கு ஏதும் புலப்படாவிட்டாலும் கூட இப்புதிய அறிவுஜீவிகள் ஒரு புகழ்வாய்ந்த சரித்திரத்தைக் கடந்த காலத்திலிருந்து துருவித் துருவிக் கண்டுபிடித்தார்கள் அறிவியல் என்பது அறிவியலின் வரலாறாகவும் இருக்கிறது கிராம தெய்வங்களில் மிகப் பெரும்பாலானவை இன்னமும் ஒரு சிவப்பு நாமத்தை அப்பியபடி உள்ளன நீண்ட காலத்துக்கு முன்னமே மறைந்து போன மறைந்து போன ரத்த பலிகளை அப்படியே உணரவைக்கும் பதிலி அது உணவு உற்பத்தியாளரின் தேவைக்கு மேல் கிடைக்கக் கூடிய உபரி உணவுப் பொருட்கள்தான் சம்பிரதாயமான எந்தப் பண்பாட்டிற்கும் அடிப்படையாகும் இந்தியப் பண்பாட்டு சாதனைகளின் உச்சம் ஒவ்வொன்றும் ஆரியர்களுடையதாகவே இருக்க வேண்டும் என்ற தப்பெண்ணத்தின் அடிப்படையில் இன்னமும் சில ஆசிரியர்கள் சிந்து மக்கள் ஆரியர்களே என்று சாதிக்கின்றனர் நிலைத்த உற்பத்தி கொண்ட சமுதாயத்தில் புரோகித வர்க்கத்தின் ஆதாயமே சடங்குகளின் உடனடி நோக்கம் சுரண்டல் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அந்தளவுக்கு ஒடுக்கும் கருவிக்கானத் தேவை இருக்கிறது கீதையின் தலையான பன்பு யாருக்கும் எந்த விளக்கத்திற்கும் வளைந்து கொடுக்கும் அதன் முதுகெலும்பற்ற தன்மைதான் இந்தியர்கள் பற்றி இந்திய இனம் என்ற ஒரு பொது இனம் இல்லை கருவிழியும் கருநிறமும் உள்ளவன் இந்தியனே அது போலவே நீலவிழியும் வெண்ணிறமும் உள்ளவனும் இந்தியனே பொதுவாக தலைமயிர் எல்லோருக்கும் கருமையாக இருந்தாலும் இடையிடையே வேறு பல நிறங்களும் உண்டு நாவின் சுவைக்காக இல்லாமல் மதத்தின் அடிப்படையில் இந்திய உணவுப் பழக்கங்கள் நிலவுகின்றன மார்கிசியம் பற்றி மார்க்சியம் சிந்தனைக்கு மாற்று அல்ல அது பகுப்பாய்வுக்கானதொரு சாதனமே மார்க்சியத்தை ஒரு தானியங்கி இயந்திரத்தின் உபயோகிப்புக் குறிப்புகளாகவோ அல்லது ஒரு பொன்மொழிகளின் கஜானாவாகவோ மாற்றிவிடக் கூடாது மதம் பற்றி தொழிலாளர் வர்க்கம் தம் உபரியை விட்டுக்கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் இயற்கையைக் கடந்த ஆற்றல்கள் மருமமான காரணிகள் மூலம் அவர்களை அழித்து விடும் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ளும்படிச் செய்வதற்காக ஆளும் வர்க்கம் மதத்தைக் கையாள்கிறது சமஸ்கிருதம் குறித்து சமஸ்கிருத இலக்கியத்தின் வர்க்கச் சார்பு குறித்த எனது விமர்சனம் கடுமையானது பார்ப்பனர்கள் படைத்தவையோ அவர்கள் வசத்தில் இருந்தவையோ அல்லது ஏதோ ஒரு விதத்தில் பார்ப்பனியம் என முத்திரை பெற்றவையோதான் சமஸ்கிருத இலக்கியத்தில் நீடித்து நிலைத்து நிற்பவையாய் உள்ளன வரலாறு வரலாறு பொதுச்சமூகத்தில் பழங்குடிக் கூறுகள் இணைக்கப்படிருப்பதைத் தான் இந்திய வரலாற்றின் மொத்தப் போக்கும் காட்டுகிறது வரலாற்றை மாற்றுவது அதனை எழுதுவதைக் காட்டிலும் முக்கியமானது வரலாறு என்பது எது வரலாறானது உற்பத்திக் கருவியிலும் உற்பத்தி உறவுகளிலும் காலவரிசைப்படி அடுத்தடுத்து நிகழும் முன்னேற்றங்களின் முன்வைப்பாக வரையறுக்கப்படுகிறது அடுத்தடுத்து வரும் ஆதிக்க வெறி தலைக்கேறிய பித்தர்களின் பெயர்களும் பெரும் போர்களுமே வரலாறு என்றால் அப்படிப்பட்ட இந்திய வரலாற்றை எழுதுவது கடினமாகும் ஒரு மன்னனின் பெயரை அறிவதைவிடவும் விவசாயம் செய்வதற்கு மக்களிடம் ஏர் இருந்ததா இல்லையா என்பதே சரித்திரம் என்றால் அப்படிப்பட்ட சரித்திரம் இந்தியாவுக்கு உண்டு இந்திய வரலாற்றை எழுதுதல் இந்திய வரலாறு போன்ற சிக்கலான சங்கதியை எழுத முனைவர்கள் குறைந்தபட்ச பயிற்சியும் திறமையும் கைவரப் பெற்றிருக்க வேண்டும் அதனைக் கொண்டு தரவுகள் புள்ளி விவரங்களின் அடிப்படையில் வரலாற்றை விவரிக்கவும் விளக்கவும் வேண்டும் முன்னரே முடிவு செய்து விட்ட தத்துவ சித்தாந்த சட்டகத்திற்குள் அனைத்தையும் அடக்க முயலாதவர்களாகவும் இருக்க வேண்டும் இந்திய வரலாற்றை எழுதுவதில் உள்ள சிக்கல் பைபிள் ஒரு மதநூல்தான் என்றாலும் அதற்கு ஈடான எந்த இந்திய நூலைவிடவும் எவ்வளவோ அதிகமாக அந்நிகழ்விடத்தின் வரலாற்றியல் தொல் பொருளியல் மதிப்பை தன்னகத்தே கொண்டுள்ளது இந்தியர்களில் ஒரு சிலரைத் தவிர மற்ற எல்லாரிடையிலும் வரலாற்று உணர்வானது குறிப்பிடத்தக்க அலவில் குறைவுபடுவது இந்தியச் சமுதாயத்துக்கும் இந்திய வரலாற்றுக்குமான தனிச்சிறப்பு புராணங்கள் கட்டுக்கதைகள் ஆகியவற்றைத் தவிர வேறு உயர்வான வரலாற்றுச் சான்றுகள் கிடையாது முழுமையாக மன்னர்களின் பட்டியல் ஒன்றைக் கூடத் தயாரிக்க இயலாத நிலையில் உள்ளோம் சில சமயங்களில் முழு அரச வம்சங்கள் கூட நமக்குத் தெரியவில்லை முகமதியர்கள் ஆட்சிக்காலம் வரையில் இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற பெரியோர் எவரைப் பற்றியும் உறுதியாகக் காலத்தைக் கூற முடியாது மதம் மூடநம்பிக்கை சடங்கு ஆகியவற்றை ஆராய்வதன் மேல் கவனம் குவிப்பது வரலாற்றில் இருந்து நம்மை வெகு தொலைவுக்கு விலக்கிச் சென்று விடும் வேதங்கள் எடுத்துரைக்கும் புனைகதைகளிலிருந்து வரலாற்று உண்மைகளை பிரித்தெடுப்பது எப்போதுமே கடினமாகும் வேதத்தில் உள்ள பதிவுகள் எதுவும் ஒரு காலவியலை வழங்குவதில்லை பழங்கதை பற்றிய ஆய்வும் சிக்கவிழ்ப்பும் எவ்வளவு கவர்ச்சியானதாக இருக்கலாமாயினும் அது நம் வரலாற்று குறிக்கோளில் இருந்து நம்மை மிகவும் தள்ளிக் கொண்டு சென்றுவிடுகிறது டி டி கோசாம்பி பற்றிய பிறரது மேற்கோள்கள் நான் ஒரு வரலாற்று ஆய்வாளன் அல்ல ஆனால் ஓர் அரசியல் செயற்பாட்டாளன் என்ற வகையில் எனது இந்திய வரலாறு பற்றிய புரிதலுக்கு நான் கோசாம்பியையே பெரிதும் நாடினேன் ஈ எம் எஸ் ஆசான்களின் ஆசான் டி டி கோசாம்பி ப கு இராஜன் ரூமிலா தாப்பர் டி டி கோசாம்பியின் சிந்தனைகள் ஆய்வு முடிவுகள் கருத்து உருவாக்கங்கள் எல்லாம் அறிவுத்தளத்தில் வைக்கப்பட்ட காலத்திலேயே மிகுந்த கவனத்தைப் பெற்றவை டி டி கோசாம்பி இந்திய வரலாற்று ஆய்வின் ஒரு புதிய பெரு நோக்கை உருவாக்கியவர் சான்றுகள் புற இனைப்புகள் பகுப்பு நபர்கள் பகுப்பு இறை மறுப்பாளர் பகுப்பு வரலாற்றாய்வாளர்கள் பகுப்பு கணிதவியலாளர்கள் பகுப்பு மார்க்சியர்கள்
சாரா அபூபக்கர் கர்நாடகத்தைச் சேர்ந்த இசுலாமிய பெண் எழுத்தாளர் இசுலாமியச் சமூகப் பெண்களின் நடைமுறைச் சிக்கல்கள் சமூகம் மீதான விமர்சனங்களைத் தன் படைப்புகளில் முன்வைத்து வருகிறார் மேற்கோள்கள் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தானே வலி தெரியும் அவர்களால் தானே உண்மையை ஒப்பனையின்றி வெளிப்படுத்த முடியும் நவீன கல்வி முறை எந்த விதத்திலும் இசுலாமியச் சமூகத்தை முன்னேற்றவில்லை பதிலாக பர்தா அணிவது போன்ற பிற்போக்கான நடவடிக்கைகளை நம் சமூகத்தில் படித்த பெண்களே தொடர்வதற்குத்தான் அது வழி செய்திருக்கிறது எழுத்து என்பது சமூகத்தின் கண்ணாடியாக அதன் சாதக பாதக அம்சங்களைப் பிரதிபலிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் சராசரி இலக்கிய அளவுகோல் சட்டகங்களில் என்னுடைய எழுத்து அடைபடுவதை நான் விரும்பவில்லை இத்தனை ஆண்டுகள் ஆகியும் இந்த நிலை பெருமளவில் மாறிவிடவில்லை உலகம் இத்தனை முன்னேறியும் இன்னமும் எங்கள் இசுலாமிய சமூகத்துப் பெண்கள் பல நூற்றாண்டுகள் பினதங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவர்களது பிரச்னைகளை பேசாமல் வேறு எதை நான் பேசுவது பகுப்பு நபர்கள்பகுப்பு எழுத்தாளர்கள்
தி ஸ்மர்ஃப்ஸ் ம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு அனிமேஷன் திரைப்படம் படத்தை பற்றி முழுக்க முழுக்க அனிமேஷனிலேயே உருவாக்காமல் நிஜ மனிதர்களையும் அனிமேஷன் கேரக்டர்களையும் இணைத்து படமாக்கியிருப்பதால் பார்வையாளர்களுக்கு இப்படம் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கலாம் பஃபூன் போன்ற ஸ்மர்ஃப்ஸ் செய்யும் சின்னச் சின்ன சேட்டைகள் படம் முழுவதும் ஆங்காங்கே நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கின்றன மந்திராவதியால் பாட்ரிக்கின் தாத்தா மனித உருவத்திலிருந்து பறவையாக மாறியதும் படும் அவஸ்தைகள் பெரியவர்களையும் சிரிக்க வைக்கிறது அப்பா ஸ்மர்ஃப்ஸ் எனக்கு வயது ஆகின்றது ஒரு ஸ்மர்ஃப்ஸ் பின்புறம் நீலம் பகுப்பு திரைப்படங்கள் பகுப்பு அமெரிக்கத் திரைப்படங்கள்
வலது எட்வர்டு எஸ்டிலின் கம்மிங்ஸ் எட்வர்டு எஸ்டிலின் கம்மிங்ஸ் அமெரிக்காவில் மிகவும் பிரபலமான கவிஞர் மற்றும் ஓவியராக இருந்தவர் ஆவார் மேற்கோள்கள் மிகவும் பயனில்லாத நாள் என்பது சிரிக்காமல் செலவிடப்பட்ட நாள் தான் பகுப்பு நபர்கள்பகுப்பு கவிஞர்கள்பகுப்பு ஓவியர்கள்
ஐந்து விரலும் ஒன்று போலிருக்குமா பசு கருத்தாலும் பால் கருக்காது கையில் காசு வாயில் தோசை ஆட்டுக்கு அங்காடி வாணிபம் தெரியாது ஆடு மேய்ந்த காடு போலே ஆபத்திற்கு பாவமில்லை மோதிரமிட்ட கையால் வாங்கும் அடி வலிக்காது சிரட்டையில் வெள்ளம் எறும்பிற்கு பெருங்கடல் மன நோய்க்கு மருந்தில்லை பகுப்பு மொழி வாரியாக பழமொழிகள் பகுப்பு பழமொழிகள்
இது இந்தியாவின் மொழிகளுள் ஒன்றான தெலுங்கு மொழியில் காணப்படும் பழமொழிகளின் தொகுப்பாகும் மேற்கோள்கள் தமிழல்லா மேற்கோள்கள் மொழிபெயர்ப்பு தெலுங்கிலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பு நோயை விடக் கொடிய மருந்தாக உள்ளதே எலியை அழிக்க வீட்டை எரிக்காதே நாளை என்பது நமக்கில்லை பகுப்பு மொழி வாரியாக பழமொழிகள் பகுப்பு பழமொழிகள்
மிசோரத்தின் ஆட்சி மொழியான மிசோ மொழியில் உள்ள பழமொழிகள் கீழே தரப்பட்டுள்ளன பழமொழிகள் கிடைக்க வேண்டியவை எளிதில் கிடைக்காது எளிதில் கிடைத்தவைக்கு மதிப்பு இருக்காது பழத்தின் ஓடு நல்லாயிருந்தால் விதையும் நன்றாக இருக்கும் சிறு கற்களின் உதவியின்றி பெரும்பாறையை நிலை நிறுத்த முடியாது ஒருவனுக்கு எதிரி அவனே மாடு தப்பித்த பின்னர் கதவை மூடுவது முட்டாள் தனம் இன்றைய வேலைகளை நாளைக்கு தள்ளிப் போடாதே பகுப்பு மொழி வாரியாக பழமொழிகள் பகுப்பு பழமொழிகள்
இப்பக்கத்தில் ஆப்பிரிக்கப் பழமொழிகள் தொகுக்கப்பட்டுள்ளன அத்தை மகளை விட்டுவிட்டு வெளியில் பெண்ணெடுப்பவன் மூடன் உணவு இல்லாத இடத்தில் நீரே அமிழ்தம் உன் மனைவியிடம் ஆலோசனை கேள் ஆனால் அவள் சொல்வதற்கு மாறாகச் செய் காதல் கட்டுப்பாடற்ற கழுதை குட்டையான பெண்ணை மணந்து கொண்டால் துணி அதிகம் தேவையிராது தவழப் பழகிய குழந்தையே நடக்கப் பழகும் திருமணத்திற்கு முன்னால் கண்களைத் திறந்து வைத்துக்கொள் பின்னால் பாதிக் கண்ணை மூடிக்கொள் தொங்கும் கயிற்றைப் பிடித்திருந்தால் வாழ்வு விட்டால் சாவு நாயைப் போன்றவள் பெண் எலும்பைக் காட்டினால் நாய் ஏமாந்து பின்னால் வரும் பஞ்சை நேசிப்பது போல் என்னை நேசி நூல் அதிக மென்மையாகும் பொழுது அதிகப் பஞ்சை விட்டும் நூல் அறுந்தவுடன் ஒட்டியும் ஆதரவு காட்டுவது போல என்னை வைத்துக் கொள்ளவும் பெண்டாட்டி யென்றால் புடவை துணிமணிகள் என்று பொருள் பெண்ணுக்குப் பணிவது நரகத்திற்குப் பாதை பெரிய இடத்துப் பெண்ணை விவாகம் செய்து கொண்டு பாயில் படுத்துறங்கு மனைவிக்குச் சீலைகள் வாங்கிக் கொடுத்தால் கணவனுக்கு அமைதி கிடைக்கும் மெலிந்தவனை அரை ஆள் என்றும் பருத்தவனை இரண்டு ஆள் என்றும் கணக்கிடுவதில்லை வீட்டுத் தலைவன்மீது தான் வீட்டிலுள்ள எல்லோருடைய குப்பைகளும் கொட்டப்படும் பகுப்பு நாடு வாரியாக பழமொழிகள்
அகபடும் வரை திருடன் அரசனைப் போல் சுற்றித் திரிவான் இரண்டு பெண்களும் ஒரு வாத்தும் இருந்தால் போதும் அது ஒரு சந்தையாகிவிடும் ஒரு செந்நாய்க்கு மற்றொரு செந்நாயைத் தெரியும் அது போல் ஒரு திருடனுக்கு மற்றொரு திருடனின் குணம் தெரியும் ஒரே வீட்டில் இரண்டு சக்களத்திகள் இருப்பதைவிட இரண்டு பெண் புலிகள் இருப்பது நலம் குடியானவனுக்கு வேண்டியது நிலம் பிரபுவுக்குக் கௌரவங்கள் சிப்பாய்க்கு யுத்தம் வியாபாரிக்குப் பணம் விவசாயிக்கு அமைதி தொழிலாளிக்கு வேலை சித்திரக்காரனுக்கு அழகு பெண்ணுக்கு உலகம் முழுவதும் தேவை பெண்ணால் துயரமே வரும் ஆயினும் பெண் இல்லாத வீடே இருக்க முடியாது பெண்பிள்ளைக்கு இருமுறை பயித்தியம் பிடிக்கும் அவள் காதல் கொண்ட சமயம் தலை நரைக்கத் தொடங்கும் சமயம் மனிதன் தன்மனைவியைத் தவிர மற்ற எதைப்பற்றிப் பேசினாலும் பொறுத்துக் கொண்டிருப்பான் மன்னன் மாது குதிரை மூன்றையும் நம்பவேண்டாம் மூச்சு வருவதும் போவதும் தொட்டிலின் ஆட்டம் முடிவான தூக்கம் வருமுன் எச்சரிக்கையாயிரு வாழ்க்கை என்பது இடைவிடாத குடிவெறி மகிழ்ச்சி மறைந்த பின்பும் தலைவலி இருந்துகொண்டேயிருக்கும் ரோசாப் பூவை எடுப்பவன் முள்ளினால் அவதிப்பட வேண்டியிருக்கும் கெட்ட நேரமாய் இருந்தால் பாயசம் குடித்தாலும் பல் ஒடிந்து போகும் நெருங்கிய நண்பர்களுக்கும் ஒரு நாள் பிரிவு உண்டு பகுப்பு மொழி வாரியாக பழமொழிகள்
வலது ஒவ்வொரு வோட்டும் ஒவ்வொரு துப்பாக்கி தோட்டாவுக்கு சமம் மல்கம் எக்ஸ் மே பெப்ரவரி ஒரு குறிப்பிடத்தக்க ஆப்பிரிக்க அமெரிக்கர் இவர் ஓர் அமெரிக்க முஸ்லிம் அமைச்சரும் இஸ்லாம் தேசத்தின் பேச்சாளராக இருந்தவருமாவார் இல் இஸ்லாம் தேசத்திலிருந்து விலகியபின் மக்காவுக்கு ஹச்சுப் பயணம் சென்று ஒரு சுணி முஸ்லிம் ஆனார் இல் படுகொலை செய்யப்பட்டார் மேற்கோள்கள் மாண்போடு வாழ அனுமதிக்காத சமூகம் மாண்போடு சாகவும் விடாது தன்னுடைய கடந்த கால வரலாற்றை மறந்த சமூகம் வரலாறு படைக்கவே முடியாது ஒவ்வொரு வோட்டும் ஒவ்வொரு துப்பாக்கி தோட்டாவுக்கு சமம் யாரும் விடுதலை சமத்துவம் நீதி ஆகியவற்றை உனக்கு தரமுடியாது நீ மனிதன் என்றால் நீயாகவே அதை எடுத்துக்கொள்ள வேண்டும் புற இனைப்புகள் பகுப்பு நபர்கள்பகுப்பு ஆப்பிரிக்க அமெரிக்கர்கள்
வலது மாற்றத்தைக் கொண்டுவரும் புரட்சிகரக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்தைப் பிடிக்கும் முன் மக்கள் சமூகத்தில் முழுமையான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் அண்டோனியோ கிராம்ஷி ஜனவரி ஏப்ரல் ஒரு இத்தாலிய எழுத்தாளர் அரசியல்வாதி அரசியல் நிபுணர் தத்துவவாதி சமூகவியல் மற்றும் மொழியியலாளர் அவர் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன உறுப்பினர் மற்றும் அக்கட்சியின் தலைவராக ஒரு முறை பதவிவகித்தார் பெனிட்டோ முசோலினியால் சிறையில் அடைக்கப்பட்டார் கிராம்ஷி ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய மார்க்சிய சிந்தனையாளர்கள் ஒருவராவார் கலாச்சார மற்றும் அரசியல் தலைமையை பகுப்பாய்வு செய்துள்ள அவரது எழுத்துக்களில் பண்பாட்டு மேலாதிக்க கோட்பாடுகளுகளை முன் வைக்கின்றார் முதலாளித்துவ சமூகத்தில் பண்பாட்டு மேலாதிக்கத்தின் மூலம் அரசுகள் அதிகாரத்தை எவ்வாறு தக்க வைத்துக் கொள்கின்றன என்பதை விளக்குகிறார் மேற்கோள்கள் மாற்றத்தைக் கொண்டுவரும் புரட்சிகரக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்தைப் பிடிக்கும் முன் மக்கள் சமூகத்தில் முழுமையான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் அதிகாரக் கட்டமைப்பின் ஒரு அங்கம்தான் குடிமைச் சமூகம் சான்றுகள் புற இணைப்புகள் பகுப்பு நபர்கள் பகுப்பு இடதுசாரிகள் பகுப்பு மார்க்சியர்கள்
அயோத்தி தாசர் மே தமிழ்நாடு தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி சமூக சேவகர் தமிழ் அறிஞர் மற்றும் சித்த மருத்துவர் ஆவார் தலித் இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் இவர் ஒருவர் தலித் பின்புலத்தில் இருந்து வந்த இவர் ஆம் நூற்றாண்டின் இறுதியில் தலித் மக்களின் முன்னேற்றத்துக்காக அரசியல் சமயம் இலக்கியம் ஆகிய களங்களில் தீவரமாகச் செயற்பட்டார் அவரது இயற்பெயர் காத்தவராயன் ஆகும் மேற்கோள்கள் சாதி மத சாரம் பார்த்த அந்தப் பெரிய சாதியோர் என்போர் காலங்காலமாக மதவித்தைகளையும் விருத்தி செய்கிறார்களேயன்றி பூமியை உழும் நவீனக் கலப்பையையோ விரைவாக நீர் பாய்ச்சும் ஏற்றத்தையோ நெல்லையும் அரிசியையும் பிரிக்கின்ற எந்திரத்தையோ போட்டோகிராப் டெலிகிராப் போனோ கிராப் மோனோ கிராப் ஸ்டீம் ரயில்வே டிராட்மவே போன்ற நவீன அறிவியல் சாதனங்களையோ கண்டுபிடிக்கவில்லை ஆனால் அவர்கள் பராமரித்து வரும் பழைய சாதி மத ஆதிக்க நிலையால் மட்டுமே இப்புதிய வசதி வாய்ப்புக்களை அபகரிக்க முடிகிறது தமிழக தாழ்த்தப்பட்ட குலத்தினவர் அனைவரும் முன்பு பெளத்த சமயத்தினர் ஆக இருந்தவர்கள் பெளத்த சமயம் சைவ வைணவத்திடம் வீழ்ந்துவிட்ட பிறகு தாழ்த்தப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்டு சேரிக்கு துறத்தப்பட்டனர் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு தமிழர்கள் பகுப்பு சாதி எதிர்ப்பாளர்கள்
வலது சர்வாதிகாரம் வாழ்வின் அங்கமானால் புரட்சி எங்களின் தார்மீக உரிமை விக்டர் மாரீ ஹியூகோ பெப்ரவரி மே ஒரு பிரெஞ்சு எழுத்தாளரும் நாடகாசிரியரும் புதின எழுத்தாளரும் கட்டுரையாளரும் காட்சிக் கலைஞரும் அரசியலாளரும் மனித உரிமைகள் ஆர்வலரும் ஆவார் இவரே பிரான்சின் புனைவிய இயக்கத்தின் மிகச் செல்வாக்குள்ள பேச்சாளர் ஆவார் மேற்கோள்கள் எழுத்து எளிய மக்களை பற்றி சிந்திப்பதாக இருக்க வேண்டும் அவர்களின் வலிகளை வாழ்க்கையை குறித்து பேச வேண்டும் உன் பார்வைகளை புதுப்பித்துக்கொள் உன் சித்தாந்தத்திற்கு உண்மையாக இரு உன் இலைகளை உதிர்த்துக்கொண்டே இரு ஆனால் உன் வேர்களை என்றைக்கும் இழந்து விடாதே தனக்கான தருணம் வாய்க்கப்பெற்று விட்ட சிந்தனையை உலகின் அத்தனை சக்திகள் சேர்ந்தாலும் தடுக்க முடியாது கடலினும் பெரிய காட்சி வானுடையது வானினும் பெரிது மனித ஆன்மாவின் உள் வெளிச்சம் சர்வாதிகாரம் வாழ்வின் அங்கமானால் புரட்சி எங்களின் தார்மீக உரிமை களையென்று எதுவும் இல்லை பயனற்ற மனிதர்கள் என்று யாருமில்லை மோசமான விவசாயிகள் மட்டுமே உள்ளனர் கல்வி ஒரு கல்விச்சாலையின் கதவுகளை திறக்கிறவன் சிறைச்சாலைகளின் கதவை மூடுகிறான் நாகரிகம் ஒருவனை நாகரிகமாக்க விரும்பினால் அவனுடைய பாட்டியை நாகரிகமாக்க ஆரம்பிக்கவேண்டும் பெண் நயமாகவும் ஆழமாகவும் இருக்கும்படி பேசுவதில் ஒரு பெண்ணைப் போல் வேறு எவருமில்லை மனிதர்கள் பெண்களின் விளையாட்டுக் கருவிகள் பெண் சைத்தானின் விளையாட்டுக் கருவி மனிதர்கள் பார்வையைப் பெற்றிருக்கின்றனர் பெண்கள் உள்ளுணர்வைப் பெற்றிருக்கின்றனர் விக்டர் ஹியூகோ பிரார்த்தனை சில சிந்தனைகளே பிரார்த்தனைகளாகிவிடும் உடல் எந்த நிலையில் இருந்தாலும் ஆன்மா முழங்கால் பணிந்து வணங்கும் நேரமும் உண்டு மேற்கோள்கள் புற இணைப்புகள் பகுப்பு நபர்கள்பகுப்பு எழுத்தாளர்கள்பகுப்பு பேச்சாளர்கள்பகுப்பு இடதுசாரிகள்
ச முகமது அலி தமிழகத்தைச் சேர்ந்த ஒரு காட்டுயிர் ஆர்வலரும் எழுத்தாளரும் ஆவார் இவர் முதல் சுற்றுச்சூழல் தொடர்பாகப் பேசியும் எழுதியும் வருகிறார் காட்டுயிர் என்னும் திங்களிதழைத் தொடங்கி நடத்தி வருகிறார் மற்றும் ஆறு நூல்களைப் படைத்துள்ளார் மேற்கோள்கள் இயற்கையைப் போற்றி அதனுடனே பின்னிப் பிணைந்திருந்த பாரம்பரியம் தமிழர்களுடையது ஆனால் தமிழ்ப் பாரம்பரியம் என்கிற பெயரில் எதை எதையோ பேசிக் கொண்டிருக்கிறோம் ஆண்டு காலமாக அந்த பாரம்பரியத்தை நாம் தொலைத்துவிட்டு நிற்கிறோம் நம்முடைய எழுத்தாள மேதாவிகளுக்கு உயிரினங்கள் பற்றிய எந்த அறிவும் கிடையாது பெயர் தெரியாது வகையும் தெரியாது பொதுமக்கள் மத்தியில் வனஉயிரினங்களைப் பற்றிய தவறான கருத்துக்களைப் பரப்புவதில் இவர்களுக்கு முக்கியமான இடம் உண்டு பயங்கரமான காடு சூழ்ச்சி செய்யும் நரி என்று எவ்வளவோ தவறான உதாரணங்களைத் தந்துகொண்டு இருக்கிறார்கள் நமக்கு பயன்படக்கூடிய உயிரினங்கள் மட்டும் இந்த உலகத்துல இருந்தால் போதாதா என்கிற கேள்வி பலருக்கு வருவதுண்டு உண்மையில் இயற்கையோடு ஒவ்வொன்றும் பிணைந்துதான் இருக்கிறது உதாரணத்துக்கு நீலகிரி மலையில் வசிக்கிற இருவாசிப் பறவை அழிந்தால் அதோடு தொடர்புடைய பத்து வகையான மரங்களும் அழிந்துவிடும் காரணம் இருவாசிப் பறவை சாப்பிட்டு வெளியேற்றுகிற விதைகளுக்குத்தான் முளைக்கும் திறன் இருக்கிறது அதனாலதான் மரங்கள் செழித்து வளர்கிறது இப்படி நம்மைச் சுற்றியிருக்கிற பல்லுயிர்களும் செழிப்பாக இருந்தால்தான் நாமும் செழிப்பாக இருக்கமுடியும் புற இணைப்புகள் பகுப்பு நபர்கள்பகுப்பு சூழலியல்பகுப்பு சூழலியல் ஆர்வலர்கள்
வலது உங்களுடைய வெறுப்பினால் நீங்கள் என்னை கொன்று புதைக்கலாம் ஆனால் காற்றைப் போல நான் மீண்டும் எழுந்து வருவேன் மாயா ஏஞ்சலோ ஏப்ரல் மே ஓர் ஆப்பிரிக்க அமெரிக்க எழுத்தாளர் கவிஞர் கல்வியாளர் திரைப்படத் தயாரிப்பாளர் நாடக நடிகர் குடிமை உரிமைப் போராளி மேற்கோள்கள் உங்களுடைய வெறுப்பினால் நீங்கள் என்னை கொன்று புதைக்கலாம் ஆனால் காற்றைப் போல நான் மீண்டும் எழுந்து வருவேன் ஒரு பறவை பாடுவது அதனிடம் பதில் இருக்கிறது என்பதற்காக அல்ல அதனிடம் பாடல் இருக்கிறது என்பதற்காகவே எனது பணி முழுக்க எனது வாழ்வு முழுக்க அனைத்தும் இருத்தல் தொடர்பானவை எனது எழுத்து முழுக்க வெற்றி என்பது உங்களை நீங்கள் விரும்புவது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதனை விரும்புவது நீங்கள் எப்படி அதனை செய்கிறீர்களோ அதனை விரும்புவது புன்னகைக்காத எவர் மீதும் நான் நம்பிக்கைக் கொண்டதில்லை மக்கள் நீங்கள் என்ன கூறினீர்கள் என்பதை மறந்துவிடுவர் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதையும் மறந்துவிடுவர் ஆனால் அவர்களுக்கு நீங்கள் எத்தகைய உணர்வை அளித்தீர்கள் என்பதை என்றும் மறக்கமாட்டார்கள் மற்ற அனைத்து குணங்களைவிடவும் மிக முக்கியமானது துணிவு ஏனெனில் துணிவு இல்லாமல் மற்ற எந்த குணங்களையும் தொடர்ந்து பின்பற்ற இயலாது உங்களுக்கு ஏதாவது பிடிக்கவில்லையெனில் அதனை மாற்றுங்கள் அப்படி மாற்ற இயலவில்லையெனில் உங்கள் மனோபாவத்தை மாற்றிக்கொள்ளுங்கள் நீங்கள் கற்றுக்கொள்ளும்போது கற்பியுங்கள் நீங்கள் அடையும்போது கொடுத்தளியுங்கள் நாம் பலமுறை தோல்வி அடையலாம் ஆனால் நாம் தோற்கடிக்கப்படக் கூடாது உங்களிடம் ஒரே ஒரு புன்னகை இருப்பின் அதனை நீங்கள் விரும்பும் மனிதர்களுக்கு அளிக்கவும் உங்களுக்கு நீங்கள் மட்டும் போதும் நீங்கள் மற்றவர்களிடம் நிரூபிப்பதற்கு எதுவுமில்லை எனக்கு நானே நன்மை செய்யாத பட்சத்தில் மற்றவர்கள் எனக்கு நன்மை செய்யவேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க இயலும் சான்றுகள் பகுப்பு நபர்கள் பகுப்பு எழுத்தாளர்கள் பகுப்பு கவிஞர்கள்
ராமசந்திர குகா பிறப்பு சுற்றுச்சூழல் சமூகம் அரசியல் மற்றும் மட்டைப்பந்து சார்ந்த வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றைப் பற்றி எழுதும் ஓர் இந்திய எழுத்தாளர் மேற்கோள்கள் ஒரே தேசிய மொழி என்ற தவறான நம்பிக்கையை வலியுறுத்தியதால் பாகிஸ்தான் பிரிந்ததையும் இலங்கை உள்நாட்டு போரில் மூழ்கி இன்னமும் அதன் பாதிப்புகளில் இருந்தும் விளைவுகளிலிருந்தும் வெளிவராமல் தவித்துக்கொண்டிருப்பதையும் மறந்துவிடக்கூடாது இந்திய அரசியல் பாரம்பரியத்தின் ஆழம் மற்றும் பன்முகத் தன்மை பற்றி இன்றைய இந்திய அரசியல்வாதிகள் அறியாதவர்களாக இருப்பது நேரு அம்பேத்கர் பெரியார் போன்ற சுய சிந்தனையாளர்கள் அரசியல்வாதிகள் இந்திய நாட்டில் இன்று உருவாகாமல் இருப்பது ஆகியவையே மிகுந்த கவலை அளிப்பவையாக இருக்கிறது இந்தியாவின் எதிர்காலம் கடவுளின் கையில் இல்லை சாதாரண மனிதர்களின் கையில் உள்ளது என்றே சொல்லவேண்டும் காந்தி பற்றி பொது விவாதங்களில் அமெரிக்காவிற்கு தாமஸ் ஜெபார்சனின் பங்கு எவ்வண்ணமோ இஸ்லாமிய நாடுகளுக்கு குர்ரானின் பங்கு எவ்வண்ணமோ அவ்வண்ணம் பல இந்தியர்களுக்கு காந்தியின் வாழ்வும் அவரது சொற்களும் அற விழுமியங்களின் உச்சபட்ச எல்லைகோடுகள் எனலாம் படித்தவர்கள் பாமரர்கள் என்று அனைவரிடையேயும் இறப்புக்குப் பிறகு காந்தியின் புகழ் லெனினுடைய புகழைவிட அதிகம் தார்மீக அரசியல் முன்னோடி வெவ்வேறு மதங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தியவர் யார் என்றால் அது அகிம்சையைப் போதித்த காந்தியாகத்தான் இருக்க முடியுமே தவிர ஆயுதம் எடுத்துப் போரிடுங்கள் வர்க்கங்களுக்கிடையே போர் நடக்கட்டும் என்று கூறிய லெனின் அல்ல என்பது என்னுடைய கருத்து காந்தி லெனின் ஒரு வரலாற்று ஒப்பீடு கட்டுரையில் நேரு பற்றி ஜவாஹர்லால் நேரு அளவுக்கு வாழும்போது போற்றப்பட்டவர்களும் மரணத்துக்குப் பிறகு தூற்றப்பட்டவர்களும் இல்லை தூற்றுதலுக்குப் பெரும்பாலும் உள்நோக்கம் கொண்டவர்களால் பரப்பப்பட்ட கட்டுக்கதைகளே காரணம் இந்தக் கட்டுக் கதைகளைதான் அப்பாவி மக்கள் நம்பினார்கள் சான்றுகள் பகுப்பு நபர்கள் பகுப்பு எழுத்தாளர்கள் பகுப்பு இந்தியர்கள்
சுவாமி ராமகிருஷ்ணானந்தர் சுவாமி விவேகானந்தரின் சகோதரச் சீடரும் குருதேவர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடிச் சீடரும் ஆவார் இவர் சசி மகராஜ் என்று அழைக்கப்படுகிறார் சுவாமி விவேகானந்தரால் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர் சிந்தனைத் துளிகள் ஒருவேளை பேனாவிற்கு உயிர் இருப்பதாக வைத்துக் கொள்வோம் அப்போது அது நான் நூற்றுக்கணக்கான கடிதங்களை எழுதியிருக்கிறேன் என்று கூறக்கூடும் உண்மையில் அது எதுவும் செய்ததில்லை அதனை யார் கையில் வைத்திருந்தார்களோ அவரே கடிதங்களை எழுதினார் அதுபோல் நமக்கு உயிரும் உணர்வும் இருப்பதால் எல்லாவற்றையும் நாம் செய்வதாக நினக்கிறோம் உண்மையில் எப்படி நமது கையில் பேனா ஒரு கருவியாக இருக்கிறதோ அதுபோலவே எல்லாம் வல்ல எம்பெருமானின் கைகளில் நாம் வெறும் கருவி மட்டுமே அவரே அனைத்தையும் செய்கிறார் உன்னிடமே நீ அதிருப்தி அடையாதே நீ கடவுளின் பிள்ளை எனவே உன்னிடம் நீ அதிருப்தி கொண்டால் கடவுளின் குழந்தையிடம் அதிருப்தி கொள்வதாகும் அது கடவுளிடமே அதிருப்தி கொள்வதாகும் அது நல்லதா உன்னை மாற்றிக்கொள்ள எந்தக் கணமும் தயாராக இருக்க வேண்டும் இல்லாவிடில் உண்மையை அடைய முடியாது ஆனால் உண்மையை அடைய வேண்டும் என்ற முயற்சியில் உறுதியாக இருக்க வேண்டும் பகுப்பு நபர்கள்பகுப்பு துறவிகள்
விஸ்வநாத் பிரதாப் சிங் ஜூன் நவம்பர் இந்திய குடியரசின் வது பிரதமர் ஆவார் உத்திர பிரதேசத்தின் முதல்வராகவும் நிதித்துறை பாதுகாப்புத்துறை ஆகியவற்றின் அமைச்சராகவும் பதவி வகித்தவர் மண்டல் கமிசன் அமைத்து பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியதால் சமூக நீதிக் காவலர் என்றும் அழைக்கப்படுகிறார் மேற்கோள்கள் நான் ரத்தமும் சதையுமாக உங்கள் முன் நிற்கிறேன் என்னை தாக்க வேண்டுமென்றால் என்னை மட்டும் தாக்குங்கள் நான் சமூக நீதிக்காக சமூகத்தின் சமத்துவத்துக்காக செயல்பட்டேன் என்கிற உறுதி எனக்கு உள்ளது இந்த அரசியலின் நோக்கம் நூற்றாண்டுகளாக அரசியல் சமூக மற்றும் பொருளாதார அதிகாரம் உரிமைகள் சலுகைகள் மறுக்கப்பட்ட சமூகங்களுக்கு அவற்றை வழங்குவதே ஆகும் அவர்கள் எதை கேட்கிறார்களோ எதை பெறுகிறார்களோ அது அவர்களுக்கு நியாயமாக உரியது ஆகவே அந்த சமூகங்களில் இருந்து தலைவர்கள் எழுந்து அதிகாரம் பெற்று அதை சிறப்பாக பயன்படுத்துகிற பொழுது என் வரலாற்று பங்களிப்பு முழுமை பெறுகிறது பதவி என்பது இங்கே முக்கியமில்லை மீண்டும் பிரதமர் பதவி தன்னை நோக்கி வந்தபோது அதை மறுத்து அவர் பேசியது ஒரு துளி வானம் ஒரு துளி கடல் வி பி சிங்கின் கவிதைத் தொகுப்பின் தலைப்பு பகுப்பு நபர்கள்
முகம்மது அலி இயற்பெயர் காஸ்சியுஸ் மர்செல்லஸ் கிளே இளையவர் பிறப்பு ஜனவரி இறப்பு சூன் ஓய்வுபெற்ற தலைசிறந்த அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மற்றும் மூன்று முறை மிகு எடை உலக வெற்றி வீரர் ஆவார் உலகிலயே தலைசிறந்த மிகு எடை குத்துச்சண்டை வெற்றி வீரராக கருதபடுபவர் முகம்மது அலி மேற்கோள்கள் வீரர்கள் வெறும் உடற்பயிற்சி கூடங்களில் உருவாவதில்லை அவர்களுக்கு ஆழ்மனதில் ஒரு கனவு ஒரு தொலைநோக்கு ஒரு விருப்பம் இருக்க வேண்டும் அவர்களுக்கு திறமையும் முக்கியம் மனோதிடமும் முக்கியம் ஆனால் திறமையைவிட மனோ திடம்தான் அதிமுக்கியம் பட்டாம்பூச்சியைப் போல மிதந்து தேனீயைப்போல கொட்டுங்கள் எனக்கு வியட்நாமியர்களோடு எந்த சண்டையும் இல்லை அவர்கள் யாரும் என்னை கருப்பன் என்று அழைத்தது இல்லை பத்தாயிரம் மைல்களை கடந்து வெள்ளையின முதலாளிகள் கருப்பு நிறம் கொண்ட மக்களை உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்த கொலை அப்பாவிகளை கொல்லுதல் அவர்களை எரித்தல் ஆகியவற்றை என்னால் செய்ய முடியாது ஏன் நான் இவர்களை சொல்வதை கேட்டுச் சீருடை அணிந்து வியட்நாமின் அப்பாவி மக்கள் மீது குண்டுகள் மற்றும் தோட்டாக்களை ஏன் செலுத்த வேண்டும் இங்கே என் ஊரில் நீக்ரோ மக்கள் நாய்களை போல நடத்தப்பட்டு மனித உரிமைகள் மறுக்கப்படுகிற பொழுது நான் ஏன் அங்கே போகவேண்டும் இதுவே இந்த தீய அநியாயம் முடிவுக்கு வரவேண்டிய தருணம் மற்றும் காலம் வியட்நாம் போரில் கட்டாய ராணுவ சேவைக்குப் பணித்தபோது மறுத்துப் பேசியது பிறப்பால் பிரிவினை ஏற்படுத்தும் இந்நாட்டிற்காக நான் வாங்கி வந்த பதக்கத்தை அணிய விரும்பவில்லை அமெரிக்காவில் கருப்பர்களுக்கு எதிரான பிரிவினைவாத்ததால் தனது ஒலிம்பிக் தங்கப் பதகத்தை நதியில் வீசி எரிந்ததைப் பற்றி கூறியது மனிதர்களை குத்துவதை உதைப்பதை விட மகிழ்ச்சிகரமான காரியங்கள் அதிகம் இருப்பதால் நான் குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறுகிறேன் ஒரு மனிதன் இருபது வயதில் இந்த உலகத்தை எப்படிப் பார்த்தானோ அதே போலவே ஐம்பது வயதிலும் பார்த்தால் அவன் முப்பது வருடங்களை வீணாகக் கழித்திருக்கிறான் என்று பொருள் இது வெறும் வேலை அவ்வளவுதான் புற்கள் வளர்கின்றன பறவைகள் பறக்கின்றன நான் மனிதர்களை அடிக்கிறேன் வாழ்க்கை மிகவும் குறுகியது விரைவில் முதுமை அடைந்து விடுவோம் மற்றவர்களை வெறுப்பதிலேயே நேரத்தை வீணடிக்காதீர்கள் நான் இறந்த பிறகு ஒரு கறுப்பர் இன மனிதனாக நான் வென்ற சாம்பியன் பட்டங்களாலும் எந்நேரமும் மக்களை மகிழ்வித்த ஒரு சக உயிராகவும் தன் மக்களுடைய சுதந்திரத்துக்காக சமூக நீதிக்காக அவர்களுடைய சம உரிமைக்காப் போராடிய மனிதனாகவும்தான் நினைவுகூரப்பட வேண்டும் என்னைப் போலவே என்மகனும் குத்துச்சண்டை வீரனாவதை நான் விரும்பவில்லை ஆனல் அவன் விருப்பம் இதில் இருக்குமானல் நான் ஒன்றும் செய்ய முடியாது கல்வியாளனாக அவன் விளங்க வேண்டும் என்பது என் ஆசை நான் முறையான கல்வியைப் பெறவில்லை அதற்காக இப்பொழுது நான் கவலைப்படவில்லை உலகிற்கு நான் படித்த மனிதனுகவே தோன்றுகிறேன் இப்பொழுது எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமானல் பள்ளிக்கூடத்திற்குப் போவதை விரும்பி ஏற்றுக் கொள்வேன் நபர் பற்றிய மேற்கோள்கள் தன்னிகரற்ற வெற்றியாளனாக குத்துச்சண்டை உலகில் கோலோச்சிய முகமது அலி தனது ஆக்ரோஷமான குத்துக்களால் எதிராளியை நிலைகுலைய வைக்கும் அசாத்திய திறமைக்கு சொந்தக்காரராக விளங்கியவர் அவரது தொழிற்குணத்திற்கு நேர் எதிராக அமைதியை நாடியவர் சமாதானத்தை விரும்பிய அற்புத மனிதர் சான்றுகள் பகுப்பு நபர்கள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு பிறப்புக்கள் பகுப்பு இறப்புக்கள் பகுப்பு விளையாட்டு வீரர்கள்
ம பொ சிவஞானம் சூன் அக்டோபர் இந்தியாவைச் சேர்ந்த விடுதலைப் போராட்டக்காரரும் சிறந்த தமிழறிஞரும் ஆவார் இவர் ம பொ சி என அறியப்படுபவர் சிலப்பதிகாரத்தின் மீது இவர் கொண்டிருந்த ஆளுமையின் காரணமாக இவர் சிலம்புச் செல்வர் என அழைக்கப்பட்டார் ஆம் ஆண்டில் இவரது நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமையாக்கிச் சிறப்பித்தது மேற்கோள்கள் ஆங்கிலம் குறித்து சுமார் கோடி மக்களைக் கொண்ட உலகத்தில் ஆங்கில மொழியைத் தாய்மொழியாகக் கொண்டோர் கோடி பேர்தான் ஆங்கிலமல்லாத மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்டோர் கோடியாவர் இந்தக் கணக்கைப் பார்த்த பிறகும் ஆங்கிலத்தை உலக மொழி என்று சொல்வது அறிவுடைமை ஆகுமா உலகம் என்பது ஒரு திசை மட்டும் தானா எட்டுத்திசையையும் நான் பார்க்க வேண்டுமானால் ஆங்கில மொழிச்சாளரம் ஒன்று மட்டும் போதுமா ஒரு வீட்டுக்கு ஒரே ஜன்னல் இருப்பது வழக்கமில்லையே தமிழும் சமஸ்கிருதமும் தமிழ் மொழியை எனது தாய்மொழியாகக் கருதுகிறேன் அது என் வாழ்க்கை மொழியாக அமைந்துவிட்டதால் இந்தியன் என்ற முறையிலே இந்து என்ற வகையிலே சமஸ்கிருதம் எனது கலாச்சார மொழியாக இருந்து வருகி றது மந்திரங்களைக் கொண்ட மொழியாதலால் அதனைத் தேவமொழி என்று சொல்வது வழக்கமாகி விட்டது இதை தெய்வபக்தியும் மதப்பற்றும் உடைய இந்துக்கள் மறுத்து வாதிடத் தேவையில்லை தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மதத்தால் இந்துக்களாக இருப்பார்களானால் அவர்கள் தங்கள் வேத மொழியான சமஸ்கிருதத்தை வெறுப்பது முறையோ நெறியோ ஆகாது இந்தி குறித்து இந்தி எதிர்ப்புக்கு எதிர்ப்புக் காட்டும் அரசியல் பிரச்சாரத்திலே நான் எல்லை கடந்து உற்சாகம் காட்டினேன் இந்திய தேசிய ஒருமைப்பாட்டை உண்மையிலேயே விரும்பும் தமிழர் எவரும் இந்தி மொழியில் ஞானம் பெற வேண்டியதின் அவசியத்தை மறுப்பதற்கில்லை மொழி வேறுபாடுடைய பல்வேறு மாநிலங்களின் மக்கள் பரஸ்பரம் கலந்து பழகி ஒருமைப்பாடு எய்துவதற்கு இந்தி ஒன்றுதான் சிறந்தமொழி என்பதனை என்றுமே நான் மறுத்தது இல்லை பெரியாருடனான உறவு குறித்து சமயத்துறையில் நானும் பெரியாரும் சந்திக்க முடியாத இருவேறு துருவங்களாக இருந்தோம் அது காரணமாகவே அவருடைய வாழ்நாள் முழுவதிலும் அவரோடு எந்த நேரத்திலும் எந்த ஒரு பிரச்சினையிலும் நான் ஒன்றூபட்டுச் செயலாற்ற முடியாதவனாக இருந்து வந்தேன் பாரதி காந்தி குறித்து என்னைச் சிலப்பதிகாரத்துக்கு இழுத்தவர் பாரதியார் அதுபோலவே என்னைக் கீதைக்கு இழுத்தது காந்தியின் அனாசக்தி யோகம என்ற புத்தகம் உரையாடல் ஒரு முறை நான் சென்னை பச்சையப்பன் கல்லூரி ஆண்டு இறுதி விழாவில் உரையாற்றினேன் இந்தச் செய்தியைத் தினமணி பேப்பரில் ம பொ சி இறுதி உரையாற்றினர் என்று போட்டிருந்தார்கள் இது நடந்து ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது ஆனால் நான் இன்னும் உரையாற்றிக் கொண்டுதான் இருக்கிறேன் கல்வி பள்ளிக்கூடம் ஒரு சிறைச்சாலை பயங்கரமான இடம் என்ற நினைப்பு பிள்ளைகளுக்கு ஏற்படக் கூடாது நமது தமிழகத்தில் மறுபடி ஒரு அவ்வையார் ஒரு ஆண்டாள் பிறக்காததற்குக் காரணம் கடந்த ஆண்டுகளாக உள்ள கல்விமுறைதான் தாய்மொழி குழந்தைக்குப் பால் கொடுப்பதில் இருவகை தாய்மார்கள் உண்டு நினைத்து பால் ஊட்டும் தாய் ஒருவகை அழுத பிள்ளைக்குப் பால் கொடுக்கும் தாய் இன்னொருவகை தாய்மொழி விஷயத்தில் அழுதப் பிள்ளைக்குப் பால் கிடைக்கும் நிலை இருக்கிறது அழுதால்தான் பால் கிடைக்கும் சான்றுகள் பகுப்பு நபர்கள் பகுப்பு தமிழறிஞர்கள் பகுப்பு பிறப்புக்கள் பகுப்பு இறப்புக்கள் பகுப்பு தமிழ் எழுத்தாளர்கள் பகுப்பு தமிழக அரசியல்வாதிகள்
சுப வீரபாண்டியன் தமிழ்ப் பேராசிரியர் சொற்பொழிவாளர் இதழாளர் திராவிடத் தமிழ்தேசியர் இறைமறுப்பாளர் பெரியாரியலாளர் அம்பேத்கர் பற்றாளர் தமிழீழ ஆதாரவாளர் சுபவீ என சுருக்கமாக அழைக்கப்படும் இவர் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவராகத் தற்பொழுது பொறுப்பு வகிக்கின்றார் மேற்கோள்கள் கருப்பும் சிவப்பும் நீலமும் வெறும் வண்ணங்கள் அல்ல அவைதான் தமிழ்த் தேசிய மேம்பாட்டிற்கான உயர் எண்ணங்கள் நிலவுடைமைச் சமூகத்திலிருந்து மேலை நாடுகள் முதலாளியச் சமூகத்திற்கு மாறத் தொடங்கிய காலமே தேசிய இனம் குறித்த கருத்துருவாக்கம் தொடங்கிய காலம் நாம் ஆரியத்தால் வீழ்ந்தோம் திராவிடத்தால் எழுந்தோம் தமிழியத்தால் வெல்வோம் திராவிட இயக்கம் எதற்காவது தடையாக இருந்தது என்றால் இந்தியத் தேசியத்திற்குத்தான் அது தடையாக இருந்தது மிகப்பெரும் தடையாக இருந்தது ஏடறிந்த வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களது வரலாறே என்று பொதுவுடைமைக் கட்சி அறிக்கை கூறுவது போல இன்றைய போராட்டமே சாதியைக் காப்பாற்றுவது என்பதும் சாதியை ஒழிப்பது என்பதும்தான் என்று பெரியார் திட்டவட்டமாகக் கூறுகிறார் ஒரு தேசிய இனத்தின் அடிப்படையாக இரண்டு செய்திகளைப் பார்க்க முடியும் தன்னுடைய அடையாளத்திற்கான போராட்டம் இன்னொன்று சமத்துவத்திற்கான ஜனநாயகப் போராட்டம் பொதுவாக தேசிய இனப்போராட்டம் என்பது வர்க்கப் போராட்டம் அல்ல அது ஒரு ஜனநாயகப் போராட்டம்தான் அந்த அடிப்படையில் தமிழுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன தமிழ் தமிழர்கள் அடையாள அடிப்படையிலும் ஜனநாயக அடிப்படைகளிலும் நம் நாட்டில் உருவாக வேண்டிய தேசியம் தமிழ்த் தேசியம்தான் சான்றுகள் பகுப்பு நபர்கள் பகுப்பு தமிழர்கள்
சாதியை ஒழிக்கும் வழி என்ற நூல் ஆம் ஆண்டு லாகூரில் நடக்க இருந்த ஜாத் பட் தோடக் மண்டல் மாநாட்டுக்காக அம்பேத்கரால் எழுதப்பட்டது உரையின் கருத்துக்களோடு மண்டலுக்கு சில முரண்பாடுகள் இருந்ததால் இந்த மாநாடு நடத்தப்படவில்லை அந்த உரையை பின்னர் புத்தகமாக அம்பேத்கர் வெளியிட்டார் அடுத்த ஆண்டே இப்புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு பெரியாரின் முயற்சியால் குடி அரசு இதழில் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டது தலித் முரசு இதழில் சில ஆண்டுகளுக்கு முன்பு முழு உரையும் வெளியிடப்பட்டது மத்திய அரசின் நலவாழ்வு அமைச்சகத்திற்காக செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின் புத்தக வெளியீட்டுப் பிரிவால் வெளியிடப்பட்ட பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பின் முதல் தொகுதியில் இந்த உரை உள்ளது இந்நூலுக்கு மகாத்மா காந்தி ஆற்றிய எதிர்வினையும் அதற்கு அம்பேத்கரின் மறுப்பும் இணைந்தே உள்ளது அம்பேத்கரது பிற மேற்கோள்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன மேற்கோள்கள் நான் இந்துக்களை விமர்சித்து இருக்கின்றேன் அவர்கள் போற்றிடும் மகாத்மாவுக்கு இந்துக்கள் பெயரால் பேசுவதற்கு என்ன அதிகார உரிமை உள்ளது எனக் கேட்டிருக்கின்றேன் அவர்கள் என்னை வெறுக்கின்றனர் அவர்களுடையத் தோட்டத்தில் என்னையொரு நச்சுப் பாம்பாகவே அவர்கள் பார்க்கின்றனர் அனைத்தையும் அறிந்துள்ள அறிவாளன் என்பதற்காகவே எவரை வேண்டுமானாலும் ஓர் இந்து தன் குருவாகவே ஏற்றுக்கொள்வதை சாஸ்திரங்கள் அனுமதிப்பதில்லை இந்தியாவில் சமுதாயச் சீர்திருத்தம் என்பது சொர்க்கத்துக்குச் செல்லும் பாதையைப் போலவே கரடுமுரடானது துன்பம் நிறைந்தது எளிமையானது அல்ல எந்த ஒரு நாட்டுக்கும் பிற நாடுகளை ஆதிக்கம் செய்ய உரிமை இல்லை என்ற மில் அவர்களின் கோட்பாட்டை திரும்பத் திரும்பக் கூறுகிற ஒவ்வொரு காங்கிரஸ் காரரும் எந்த ஒரு சாதிக்கும் பிற சாதிகளை ஆதிக்கம் செய்ய உரிமை இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் சமூகச் சீர்திருத்தத்தை அலட்சியப்படுத்தியதன் விளைவே வகுப்புவாரித் தீர்ப்பு எனலாம் மதம் என்பது அதிகாரத்திற்கு ஆதாரம் என்பதை இந்திய வரலாறு புலனாக்குகிறது வெறும் வார்த்தை அலங்காரங்களில் மனநிறைவு அடைந்துவிடாமல் சோசலிஷ இலட்சியத்தை ஒரு நடைமுறைக்குரியதாக ஆக்குவதற்குச் சோசலிஸ்டுகள் விரும்புவதானால் சமூகச் சீர்திருத்தப் பிரச்சினையே அடிப்படையானது என்பதையும் அதிலிருந்து அவர்களால் தப்பிக் கொள்ள முடியாது என்பதையும் அவர்கள் ஒப்புக் கொண்டாக வேண்டும் தங்களின் சமூக உயர்வை நிலைநாட்டும் வல்லமை பெற்றவர்களும் தங்களை விடத் தாழ்ந்த நிலையில் இருந்தவர்கள் மீது அதனைத் திணிக்கும் ஆற்றலைப் பெற்றவர்களுமான கொடுமை படைத்த இந்துக்களின் ஆணவத்தையும் சுயநலத்தையுமே சாதிமுறை அடிப்படையாகக் கொண்டுள்ளது இந்த நாட்டு மக்களிடமிருந்து தங்களைத் தனித்துக் காட்டுவதற்கு முகம்மதியர் வைத்த பெயர்தான் இந்து என்பது முகம்மதியரின் படையெடுப்புக்கு முந்தைய எந்த சமஸ்கிருத நூலிலும் இந்து என்ற சொல் காணப்படவில்லை இந்துக்களுக்குப் பொதுவானதொரு சமூகம் என்ற சிந்தனை இல்லாதிருந்த காரணத்தால் தங்களுக்குப் பொதுவானதொரு பெயர் தேவை என்பதை அவர்கள் உணரவில்லை ஒவ்வொரு சாதியினரும் உடுத்த வேண்டிய உடை என்பதைக் கூட அந்தந்த சாதியினரே தெளிவாக வரையறுத்திக் கொண்டுள்ளனர் இந்திய நாட்டின் ஆண்களும் பெண்களும் எண்ணற்ற விதங்களில் உடையணிந்து சுற்றுலாப் பயணிகள் வேடிக்கையாகப் பார்க்கத்தக்க அளவுக்குக் காட்சிப்பொருளாக நிற்பதற்கு வேறென்ன விளக்கம் தரமுடியும் ஒருவேளை கிறித்துவ மிசனரிகள் பழங்குடியினருக்காகச் செய்யும் ஊழியங்களை இந்து ஒருவன் செய்ய விரும்புவதாக வைத்துக் கொள்வோம் அவனால் அதைச் செய்ய முடியாதா முடியாது என்றே பனிவுடன் கூறுவேன் காரணம் இந்தப் பழங்குடி மக்களை நாகரிக மக்களாக ஆக்குவது என்றால் அவர்களோடு இணைந்து அவர்களை உறவினராக நடத்த வேண்டும் அவர்களுள் ஒருவராக வாழ வேண்டும் சுருக்கமாகச் சொல்வதென்றால் அவர்களை நேசிக்க வேண்டும் ஓர் இந்து இவற்றை எல்லாம் செய்வது சாத்தியப்படுமா தன் சாதியைப் பேணிக்காப்பதே ஓர் இந்துவின் வாழ்க்கை இலட்சியம் தன் சாதி என்பது ஒவ்வொரு இந்துவுக்கும் விலைமதிக்கவொண்ணாத பெரும் சொத்து எப்பாடு பட்டாவது ஒவ்வொரு இந்துவும் அதைக் காப்பாற்றியேத் தீர வேண்டும் வேதகாலத்து ஆரியரல்லாதவர்களின் வழிவந்த பழங்குடிமக்களோடு தொடர்பு கொள்வதன் மூலம் சாதி என்னும் உடைமையை இழக்க எந்த இந்துவாலும் முடியாது தாழ்ந்து கிடக்கும் மனிதருக்குத் தான் செய்யவேன்டிய கடமைப் பற்றிய உணர்வை ஒரு இந்துவுக்கு எவராலும் கற்பிக்க முடியாது என்று நான் கூறமாட்டேன் வேறு எந்தக் கடைமை உணர்வும் ஓர் இந்துவைத் தன் சாதியைக் காப்பாற்றுவது என்ற கடைமையை மீறும்படி செய்யமுடியாது என்பதுதான் இங்குள்ள சங்கடமான நிலைமை மனிதர்கள் எல்லோரும் சமமானவர்கள் இல்லை என்பதில் சந்தேகம் இல்லை ஆனால் அவர்கள் இவ்வாறு சமமாக இல்லை என்பதால் நாம் அவர்களைச் சமம் இல்லாத முறையில் நடத்த வேண்டுமா சமத்துவத்தை எதிர்ப்பவர்கள் இந்தக் கேள்விக்குப் பதில் கூற வேண்டும் மனிதர்களின் முயற்சியில் சமம் இல்லாத அளவுக்கு அவர்களை நடத்துவதில் சமம் இல்லாமலிருப்பது நியாயமாயிருக்கலாம் ஒவ்வொருவரின் திறன்களும் முழு வளர்ச்சி பெற உதவுவதற்கு முடிந்தளவுக்கு ஊக்குவிப்பு அளிக்க வேண்டியிருக்கலாம் ஆனால் முதல் இரண்டு விசயங்களில் சமமாக இல்லாதவர்களை சமம் இல்லாமலே நடத்தினால் என்ன ஆகும் பிறப்பு கல்வி குடும்பப் பெயர் தொழில் வணிகத் தொடர்புகள் பரம்பரைச் சொத்து ஆகியவை சாதகமாக உள்ளவர்களே வாழ்க்கைப் போட்டியில் தேர்வு பெறுவார்கள் ஆனால் இது திறமை உள்ளவர்களைத் தெரிந்தெடுக்கும் தேர்வு ஆகாது விசேச உரிமைகள் பெற்றவர்களைத் தெரிந்தெடுக்கும் தேர்வாகவே இருக்கும் சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரிடமிருந்தும் மிக உயர்ந்த பலனைப் பெறுவது சமூகத்துக்கு நல்லது என்றால் ஆரம்பத்திலேயே எல்லோரும் முடிந்த அளவு சமமாக இருக்கச் செய்வதுதான் அவ்வாறு உயர்ந்த பலனைப் பெறுவதற்கு வழியாகும் சாதியை உடைப்பதற்கு உண்மையானத் தீர்வு கலப்பு மணமே வேறு எதுவும் சாதியைக் கரைக்க முடியாது அரசியல் கொடுமையை விடச் சமூகக் கொடுமை பயங்கரமானது எனவே சமூகத்தை எதிர்த்து நிற்கும் சீர்திருத்தவாதி அரசாங்கத்தை எதிர்த்து நிற்கும் அரசியல்வாதியை விட தீரம் மிகுந்தவன் இந்நூலைப் பற்றி பிறரது மேற்கோள்கள் தந்தைப் பெரியார் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அந்த மாநாட்டுத் தலைமைச் சொற்பொழிவுக்கு எழுதிய சொற்பொழிவுத் தொகுதியை நமக்கு அனுப்பியதில் அதைத் தமிழில் மொழிபெயர்த்து ஜாதியை ஒழிக்கும் வழி என்னும் பெயரால் புத்தகம் ஒன்றுக்கு வுக்கு விற்று வருகிறோம் அதைப் பார்த்தால் இந்து மதம் ஒழியாமல் ஜாதியும் ஒழியாது சுயராஜ்ஜியமும் வராது பொது உடைமையும் ஏற்படாது என்பதெல்லாம் மடையனுக்கும் விளங்கும் மகாத்மா காந்தி எந்தச் சீர்திருத்தவாதியும் அவரது உரையைப் புறக்கணிக்க முடியாது பழமை மரபுள்ளவர்கள் அதைப் படிப்பதால் பயனுறலாம் இப்படிச் சொல்வதால் அவருடைய உரை மறுப்புக்குரியது அல்ல என்று பொருளாகாது மிகவும் தீவிரமான மறுப்புக்குரியது என்பதற்காகவே அதைப் படிக்க வேன்டும் சான்றுகள் பகுப்பு புத்தகங்கள்
ராம் மனோகர் லோகியா மார்ச்சு அக்டோபர் அரசியல் தத்துவங்களில் ஒன்றான பொதுவுடைமைத் தத்துவத்தை இந்தியருக்கேற்ற வகையில் மாற்றி அமைத்தவர் வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட இந்திய விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்றவர் இந்தியப் பொதுவுடைமை அரசியல்வாதிகளின் ஆசானாக மதிக்கப்படுபவர் புரட்சிகரமான சிந்தனையாளர் பிரஜா சோஷலிஸ்ட் கட்சி யின் பொதுச்செயலாளராகப் பணியாற்றியவர் உலக அரசு குறித்த சிந்தனைகளை வெளிப்படுத்தியவர் பெர்லின் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற லோகியா பொது வாழ்க்கைக்காகத் திருமணமே செய்து கொள்ளாமல் கடைசிவரை மக்கள் பணிக்காகத் தன்னை ஒப்படைத்துக்கொண்டவர் மேற்கோள்கள் சாதியே வாய்ப்புகளை மறுக்கிறது மறுக்கப்பட்ட வாய்ப்புக்கள் திறமையை குறுக்குகின்றன குறுக்கப்பட்ட திறமை மேலும் வாய்ப்புகளை குறுக்குகிறது சாதி வேற்றுமைகள் உள்ளவரை மக்களின் வாய்ப்புகளும் திறமைகளும் குறுக்கப்படும் என்றார் ராம் மனோகர் லோகியா மேல்தட்டிலுள்ள சாதிகளைச் சேர்ந்தவர்கள் கீழ்த்தட்டிலுள்ள சாதிகளைச் சேர்ந்தவர்களை மேம்படுத்த முயன்றால் இந்தப் பிரச்னை தீரும் உணவில் மட்டுமலாது திருமணத்திலும் கலப்பு ரொட்டி அவுர் பேட்டி இருப்பதே சாதியை ஒழிக்கும் பகுப்பு நபர்கள்பகுப்பு அரசியல் தலைவர்கள்பகுப்பு பொதுவுடைமைவாதிகள்