classic
stringlengths
19
1.22k
Description
stringlengths
5
2.28k
வேட்கை விடு நெறி வேத அந்தம் ஆதல் ஆல்\nவாழ்க்கை புலன் வழி மாற்றி சித்த அந்தத்து\nவேட்கை விடும் மிக்க வேத அந்தி பாதமே\nதாழ்க்கும் தலையினோன் சற் சீடன் ஆமே
அனைத்து விதமான ஆசைகளையும் விடுகின்ற வழி முறையே வேதத்தின் எல்லையாகிய அனைத்தும் சொல்லுவதால், உலக வாழ்க்கையை ஐந்து புலன்களாகிய கண், காதுகள், மூக்கு, வாய், தொடுதல் ஆகியவற்றின் வழியே சென்று கொண்டு இருப்பதை மாற்றி விட்டு, அனைத்து விதமான எண்ணங்களையும் நீக்கி ஒடுங்குதலை செய்து, அனைத்து விதமான ஆசைகளையும் விட்டு விடுவதில் மிகவும் சிறந்து இருக்கின்றவரும், அனைத்து வேதங்களுக்கும் எல்லையாக இருக்கின்ற இறை நிலையில் இருக்கின்றவரும் ஆகிய குருவின் திருவடிகளை பணிந்து வணங்குவதை மட்டுமே தலையாக கொண்டு வாழ்பவனே உண்மையான சீடன் ஆகும்.
இறை அடி தாழ்ந்து ஐ வணக்கமும் எய்தி\nகுறை அது கூறி குணம் கொண்டு போற்றி\nசிறை உடன் நீ அற காட்டி சிவத்தோடு\nஅறிவுக்கு அறிவிப்போன் சன் மார்க்கி ஆமே
உண்மையான ஞானத்தை அறிந்தவராகிய குருவானவர் இறைவனின் திருவடிகளை பணிந்து வணங்கி இறையருளால் அண்டத்தில் இருக்கின்ற ஐந்து பூதங்களையும் தமக்குள் இருக்கின்ற ஐந்து பூதங்களோடு இணைத்து அவற்றை இறைவனாகவே உணர்ந்து வணங்குகின்ற நிலையை அடைந்தவராகவும், தமக்குள் இருக்கின்ற குறைகள் எது என்பதை இறைவனிடம் எடுத்துக் கூறி அவனருளால் அவற்றை நீக்கி விட்டு இறையருளால் புனிதமான குணத்தை கொண்டு அதற்கு நன்றி கூறி இறைவனை போற்றி வணங்குபவராகவும், மாயை எனும் சிறை உடன் சேர்ந்து தன்னுடன் இருக்கின்ற உடல் பொருள் ஆகிய அனைத்தும் தான் என்று நினைக்கின்ற சீடருக்கு நீ என்பது இந்த உடம்போ உடமைகளோ அல்ல நீ என்பது உனக்குள் இருக்கின்ற ஆன்மா என்பதை மாயையை நீக்கி காட்டி அருளுபவராகவும், இறைவனுடைய அருளோடு சேர்ந்து இருந்து சீடருடைய அறிவுக்கு புரியும் படி உண்மை அறிவை அறிவிக்கின்றவராகவும் இருக்க வேண்டும். இப்படி இருக்கின்ற குருவே அழிவில்லாத சன் மார்க்கத்தில் இருப்பவர் ஆகும்.
உணர்த்தும் அதி பக்குவற்கே உணர்த்தி\nஇணக்கு இல் பரா பரத்து எல்லை உள் இட்டு\nகுணக்கோடு தெற்கு உத்தர பச்சிமம் கொண்டு\nஉணர்த்துமின் ஆவுடையான் தன்னை உன்னியே
பரம்பொருளின் பேருண்மைகளை உணர்த்துகின்ற ஞான குருவானவர் மிகவும் பக்குவம் பெற்ற சீடனுக்கே அவற்றை உணர்த்தி, அனைத்துமாக இருந்தாலும் அதனோடு சேர்ந்து இல்லாமல் விட்டு விலகி நிற்கின்ற அசையா சக்தியாகிய பரம்பொருளின் எல்லைக்கு உள்ளே சீடனை கொண்டு சென்று, கிழக்கோடு தெற்கு வடக்கு மேற்கு ஆகிய நான்கு திசைகளையும் கொண்டு இருக்கின்ற அனைத்து பொருள்களிலும் மறைந்து இருக்கின்ற பேருண்மையாகிய பரம்பொருளை உணர்த்துவார்கள். ஆன்மாக்களுக்கெல்லாம் அதிபதியாகிய ஆண்டவனை தமது மனதிற்குள் தியானித்தே இவை அனைத்தையும் அவர்கள் செய்வார்கள்.
சீர் ஆரும் ஞானத்தின் இச்சை செல செல\nவாராத காதல் குரு பரன் பால் ஆக\nசாராத சாதக நான்கும் தன் பால் உற்றார்\nஆராயும் ஞானத்தன் ஆம் அடி வைக்கவே
குருவின் திருவடியினால் பெற்ற ஞானத்தினால் உண்மை ஞானியாகிய சாதகரிடம் இதுவரை உலக பற்றுக்களின் மேல் இருந்த ஆசைகள் விலகிப் போக விலகிப் போக அவற்றின் மேல் இனி பற்று வராது. அந்த பற்றானது இறைநிலையில் இருக்கின்ற தமது குருநாதரின் மேலேயே அதிகமாக கூடி வரும். அதன் பிறகு இதுவரை அவரது கைக்கு சரிவர கிடைக்காத சாந்தி, தாந்தி, உபாதனை, தீட்சை ஆகிய நான்கு விதமான சாதகங்களும் அவரது கைவசப் படும்படி பேறு பெறுவார். அதன் பிறகு அக (உள்ளுக்குள்ளும்) புற (வெளியிலும்) ஆராய்ச்சியின் மூலம் ஞானத்தின் உச்ச நிலைக்கு சென்று கொண்டே இருப்பார்.
அடி வைத்து அருளுதி ஆசான் நின்று என் ஆய்\nஅடி வைத்த மா முடி மாயா பிறவி\nஅடி வைத்த காய அருள் சத்தி ஆலே\nஅடி பெற்ற ஞானத்தன் ஆசு அற்று உளானே
தங்களின் திருவடியை என் தலை மீது வைத்து அருளுங்கள் குருநாதரே என்று வேண்டி நிற்கின்ற, தனது உடல் பொருள் ஆவியெல்லாம் குருவிற்கே உடமையாக்கிய சீடனின் வேண்டுகோளுக்கு இணங்கி, அதன் படியே திருவடியை வைத்த மாபெரும் தலைவனாகிய இறைவனாகவே இருக்கின்ற குருவின் திருவருளால் மாயையாகிய பிறவி நீங்கப் பெற்று, அவரின் திருவடியை வைத்த சீடனின் உடல் இறைவனது திருவருள் சக்தியின் மூலம் முழுமையடையும் போது, குருவின் திருவடியினால் பெற்ற ஞானத்தினால் உண்மை ஞானியாகி, ஒரு குற்றமும் இல்லாமல் இருப்பவனே உண்மையான சீடன் ஆவான்.
சத்தும் அசத்தும் எவ்வாறு என தான் உன்னி\nசித்தை உருக்கி சிவன் அருள் கை காட்ட\nபத்தியில் ஞானம் பெற பணிந்து ஆனந்த\nசத்தியில் இச்சை தருவோன் சற் சீடனே
நிலையானதும் நிலை இல்லாததும் எவ்வாறு இருக்கின்றது என்பதை தனக்குள்ளேயே ஆராய்ந்து அறிந்து, நிலையான இறைவனை உணர்ந்து அவன் மேல் உண்மையான அன்பினால் உருகும் போது, இறைவன் தனது திருவருளால் ஒரு உண்மையான குருவினை காட்டி அருளுவான். அப்படி இறைவன் காட்டி அருளிய குருவின் மீது கொண்ட பக்தியின் மூலம் உண்மை ஞானத்தை பெறுவதற்கு அவரது திருவடிகளை பணிந்து, அந்த குருவின் அருளால் கிடைக்கின்ற பேரானந்த சக்தியே வேண்டும் என்று தன்னையே முழுவதுமாக குருவிடம் ஒப்படைத்து தருபவனே உண்மையான சீடன் ஆவான்.
சாத்திகன் ஆய் பல தத்துவம் தான் உன்னி\nஆத்திக வேத நெறி தோற்றம் ஆகியே\nஆர்த்த பிறவியின் அஞ்சி அற நெறி\nசாத்த வல்லான் அவனே சற் சீடன் ஆமே
நன்மை தீமை எது நடந்தாலும் அதனால் பாதிக்கப் படாமல் சாத்வீக (சாந்தம் / அமைதி) குணத்தோடு குருநாதர் அருளிய பல தத்துவங்களை தனது மனதிற்குள் வைத்து நினைத்து தியானித்து, இறைவன் உண்டு என்று நம்பி அவனை அடைவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அதற்காக வேதம் சொல்லுகின்ற வழிமுறைக்கான தோற்றமாகிய தவ வேடமாகவே தாம் ஆகி, வினைகளின் பயனால் கிடைக்கப் பெற்ற இந்த பிறவிக்கும் இனி எடுக்கப் போகின்ற பிறவிகளுக்கும் பயந்து இனி பிறவியே எடுக்காமல் இருப்பதற்கு வேண்டிய தர்மத்தின் வழிமுறையை கடை பிடித்து, தமது ஆசைகள் பற்றுக்கள் அனைத்தையும் குருவிடம் சரணடைந்து சமர்ப்பிக்க முடிந்தவன் எவனோ அவனே சிறந்த உண்மையான சீடன் ஆவான்.
தொழில் ஆர மா மணி தூய் ஆன சிந்தை\nஎழில் ஆர் இறைவன் இடம் கொண்ட போதம்\nஅழல் ஆர் விறகு ஆம் வினை அது போக\nகழல் ஆர் திரு அடி கண்டு அருள் ஆமே
இறைவனை அடைவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செய்கின்ற சாதகத்தில் முழுமை பெற வேண்டுமென்றால், மாபெரும் மணியாக இருக்கின்ற இறைவனின் மேல் தமது சிந்தனைகளை வைத்து அவனருளால் தூய்மையாக ஆகி விட்ட சிந்தனையோடு பேரழகு நிறைந்து இருக்கின்ற இறைவன் வீற்றிருக்கின்ற குருவிடமிருந்து தாம் பெற்ற போதனைகளை கடை பிடித்தால், நெருப்பில் மூடிய விறகு கட்டையும் எரிந்து நெருப்பாகவே ஆகி விடுவது போல தம்முடைய வினைகள் அனைத்தும் தம்மை விட்டு விலகி அழிந்து போய் விடும். அதன் பிறகு சிலம்புகளை அணிந்து பேரழகோடு இருக்கும் இறைவனின் திருவடிகளை தரிசித்து அவனது அருளை பெறலாம்.
சோதி விசாகம் தொடர்ந்து இரும் தேள் நண்டு\nஓதிய நாளே உணர்வது தான் என்று\nநீதி உள் நீர்மை நினைந்தவர்க்கு அல்லது\nஆதியும் ஏதும் அறிய கிலானே
பௌர்ணமி அன்று விசாக நட்சத்திரம் வருகின்ற நாளில் இருந்து ஆரம்பித்து அடுத்து வருகின்ற விருச்சிக இராசியிலிருந்து கடக இராசி வரை உள்ள நாள்களில் குருவிடமிருந்து பெற்ற மந்திரத்தை ஓதிக் கொண்டு இருந்தால் ஒரு நாளில் தாமாக இருப்பது இறைவனே என்று உணர்ந்து கொள்ள முடியும். அதன் பிறகு இதுவரை தாம் செய்கின்ற அனைத்து செயல்களுக்கு உள்ளேயும் இறைவனே இருந்து செய்கின்றான் என்பதை உணர்ந்து தான் என்கின்ற தன்மை இல்லாமல் இறைவனை நினைக்க முடிந்தவர்களைத் தவிர வேறு யாருக்கும் இறைவன் முதலாகிய அனைத்து உண்மைகளையும் அறிந்து கொள்ளுவது இயலாது.
கொள்ளினும் நல்ல குருவினை கொள்ளுக\nஉள்ளம் பொருள் உடல் ஆவி உடன் ஈய்க\nஎள் அத் தனையும் இடை விடாதே நின்று\nதெள்ளி அறிய சிவ பதம் தானே
ஏற்றுக் கொண்டாலும் ஒரு நல்ல குருவை தேடி ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய உள்ளம் பொருளாகிய ஆன்மா உடல் ஆவியாகிய உயிர் ஆகிய நான்கும் சேர்ந்து குருவிற்கே உடமையாக கொடுத்து சரணாகதியாகி விடுங்கள். எள்ளின் அளவிற்கு கூட சிறிதளவும் மனம் தவற விடாமல் குருவிடமே சரணாகதியாக நின்று குருவின் அருளால் உண்மை ஞானத்தை தெளிவாக அறிந்து கொண்டால் இறைவனின் திருவடியை நீங்கள் அடையலாம்.
பதைக்கின்ற போதே பரம் என்னும் வித்தை\nவிதைக்கின்ற வித்தினை மேல் நின்று நோக்கி\nசிதைக்கின்ற சிந்தையை செவ்வே நிறுத்தி\nஇசைக்கின்ற அன்பருக்கு ஈயலும் ஆமே
இறைவனை அடைய வேண்டும் என்று துடிதுடிக்கின்ற போதே பரம்பொருள் என்று அறியப்படும் அனைத்திற்கும் மூல விதையான இறைவன் அடியவருக்குள் விதைக்கின்ற மாயை நீங்கி உணரக்கூடிய இறை சக்தியை குருவின் அருளால் தலை உச்சிக்கு மேல் மூச்சுக்காற்றை எடுத்துச் சென்று அங்கே வீற்றிருக்கும் இறை சக்தியை தரிசித்து இறைவனை அடைவதற்கு தடையாக வேறு வழிகளில் சிதைந்து போகின்ற சிந்தனைகளை சீர்படுத்தி அவற்றை இறைவன் மேல் மட்டும் எப்போதும் இருக்கும் படி நிறுத்தி இறைவனோடு எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற பக்குவமுள்ள அன்பர்களுக்கு இறைவன் தமது அருளை கொடுத்து அருளுவான்.
பதைத்து ஒழிந்தேன் பரமா உன்னை நாடி\nஅதைத்து எழுந்து ஏற்றி இனி யாரோடும் கூடேன்\nசிதைத்து அடியேன் வினை சிந்தனை தீர\nஉதைத்து உடையாய் உகந்து ஆண்டு அருளாயே
உன்னை எப்போது அடைவேன் என்ற துடிதுடிப்பில் உன்னை அடைவதற்கு தடையாக இருக்கின்ற ஆசைகளை ஒழித்தேன். பரம்பொருளே உன்னை தேடி அலைந்து திரிந்து நீ எழுந்தருளிய இடத்திற்கெல்லாம் சென்று உன்னை போற்றி வணங்கி அடைந்தேன். இனி வேறு யாரோடும் சேர மாட்டேன். உன்னிடம் மட்டுமே சேருவேன். நீ கருணை கொண்டு அடியேனுடைய நல் வினை தீ வினை ஆகிய இரு வினைகளையும் சிதைத்து அழித்து உன்னைத் தவிர வேறு எதிலும் எனது சிந்தனை போகாத படி மற்ற அனைத்து சிந்தனைகளும் தீர்ந்து போகும் படி உதைத்து அவற்றை உடைந்து போகும் படி செய்ய மாட்டாயா? அடியேனை மனமுவந்து உன் தொண்டனாக ஆட்கொண்டு அருள மாட்டாயா?
தொழுது அறிவாளர் சுருதி கண் ஆக\nபழுது அறியாத பரம குருவை\nவழி அறிவார் நல் வழி அறிவாளர்\nஅழிவு அறிவார் மற்றை அல்லாத அவரே
இறைவனை பக்தியோடு வணங்கும் முறையை அறிந்தவர்கள் இறைவனை அடைவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இருக்கும் போது, இறையருள் ஒரு குற்றமும் அறியாத புனிதமான இறை நிலையை அடைந்த குருவை அவருக்கு காட்டி அருளும். அந்த குருவின் மூலம் இறைவனை அடையும் வழியை அறிந்து கொண்டவர்களே நல்ல வழியை அறிந்து கொண்ட பக்குவர்கள் ஆவார்கள். நல்லது இல்லாத மற்ற ஆசைகளின் வழியே போகின்றதை மட்டுமே அறிந்து கொண்டவர்கள் மீண்டும் மீண்டும் இறந்து பிறப்பதற்கான வழியையே அறிந்தவர்கள் ஆவார்கள்.
மன்னும் மலம் ஐந்தும் மாற்றும் வகை ஓரான்\nதுன்னிய காம ஆதி தோயும் தொழில் நீங்கான்\nபின்னிய பொய்யன் பிறப்பு இறப்பு அஞ்சாதான்\nஅன்னியன் ஆவான் அசற் சீடன் ஆமே
உலக பற்றுக்களிலேயே நிலை பெற்று இருக்கின்ற மலங்களாகிய ஐந்து புலன்களையும் மாற்றுகின்ற வழி முறையை ஆராய்ந்து அறிந்து கொள்ளாதவன், தன்னைப் பெருந்தி இருக்கின்ற காமம் முதலாகிய ஆசைகளில் தோய்ந்து இருக்கின்ற செயல்களை விட்டு நீங்காமல் இருக்கின்றவன், ஒன்றன் பின் ஒன்றாக பின்னிக் கொண்டே இருக்கின்ற பொய்களை கூறுபவன், மீண்டும் மீண்டும் வருகின்ற பிறவிகளுக்கோ அல்லது மீண்டும் மீண்டும் வருகின்ற இறப்பிற்கோ தன் மூடத்தனத்தால் அச்சப் படமால் இருக்கின்றவன் ஆகிய தன்மைகளைக் கொண்டவன் குருவுக்கு நெருக்கம் இல்லாதவனாகி உண்மையில்லாத சீடனாகவே இருப்பான்.
வைத்த பசு பாச மாற்று நெறி வைகி\nபெத்தம் அற முத்தன் ஆகி பிறழ் உற்று\nதத்துவம் உன்னி தலை படாது அவ்வாறு\nபித்து ஆன சீடனுக்கு ஈய பெறாது ஆனே
பிறக்கும் போதே உடலுக்குள் வைத்த இருளுக்குள் இருக்கின்ற ஆன்மாவையும் அதை கட்டி இருக்கின்ற மலங்களையும் நீக்கி வெளிச்சத்திற்கு மாற்றுவதற்கான வழி முறையையும் வைத்து அருளி இருப்பதை உணர்ந்து, அந்த வழி முறைகளின் மூலம் பாசமாகிய கட்டுக்களை இல்லாமல் செய்து, முக்தி நிலையை பெற்றவன் ஆகி இல்லாமல், தாம் செல்ல வேண்டிய வழி முறையில் இருந்து மாறுதல் அடைந்து, உலக பற்றுக்களுக்கான தத்துவங்களையே நினைத்துக் கொண்டு, இறைவனை அடைவதை மட்டுமே குறிக்கோளாக எடுத்துக் கொள்ளாமல், உலக ஆசைகளுக்கு ஏற்றபடியே நடந்து, உலக ஆசைகளில் மயங்கி இருக்கின்ற பக்குவமில்லாத சீடனுக்கு உண்மையான ஞானத்தை கொடுக்க மாட்டார்கள் குருவானவர்கள்.
விடிவது அறியார் வெளி காண மாட்டார்\nவிடியில் வெளியில் விழிக்கவும் மாட்டார்\nகடியது ஓர் உன்னி மை கட்டுமின் காண்மின்\nவிடியாமைக்கு ஆக்கும் விளக்கு அது ஆமே
மாயையாகிய இருள் நீங்கி ஜோதியாகிய வெளிச்சம் கிடைப்பதை அறிய மாட்டார்கள். அந்த வெளிச்சம் காட்டுகின்ற பரவெளியை பார்க்க மாட்டார்கள். மாயையாகிய இருள் நீங்கி ஜோதியாகிய வெளிச்சத்தில் தம்மை சுற்றி உள்ள அனைத்திலும் மாயையாகிய இருள் நீங்கிய உண்மை ஞானத்தை காணவும் மாட்டார்கள் அபக்குவர்கள். அவர்களைப் போல இல்லாமல் தமக்குள் கிடைப்பதற்கு மிகவும் அரியதாக இருக்கின்ற ஒரு இறை சக்தியில் மனதை வைத்து தியானித்து மாயையை கட்டுங்கள். அப்போது இருள் நீங்கி தெரியும் ஜோதியாகிய இறைவனை காணுங்கள். இனி எப்போதும் மாயையாகிய பிறவியை எடுக்காத நிலைக்கு உங்களை கொண்டு செல்லும் ஜோதி அதுவே ஆகும்.
கன்றல் கருதலும் கருமை சேர்தலும்\nதின்றல் சுவைத்தலும் தீமைகள் செய்தலும்\nபின் தமை என்றலும் பெருமை கூறலும்\nஎன்ற இவை இறை பால் இசைகை அல்லவே
அகங்காரத்தினால் வரும் கோபத்தை எண்ணி இருப்பதும், நான் என்கின்ற எண்ணத்தோடு செயல்களை செய்து கர்மங்களை சேர்த்துக் கொள்வதும், உயிரை வளர்ப்பதற்காக சாப்பிடாமல் வாய் சுவைக்காக ஆசைப் பட்டு சாப்பிடுவதும், தர்மத்திற்கு எதிரான தீய செயல்களை செய்வதும், தமக்கு பின்பு தான் மற்றவர்கள் என்கிற சுய நலத்தோடு இருப்பதும், தற்பெருமை பேசுவதும், ஆகிய இந்த ஆறு விதமான தன்மைகளும் இறைவனோடு சேர்ந்து இருக்கும் நிலைக்கு கொண்டு செல்லாது.
தவத்து இடை நின்றவர் தாம் உண்ணும் கன்மம்\nசிவத்து இடை நின்றது தேவர் அறியார்\nதவத்து இடை நின்று அறியாதவர் எல்லாம்\nபவத்து இடை நின்றது ஓர் பாடு அது ஆமே
இறைவனை மட்டுமே எண்ணிக் கொண்டு தவம் புரிகின்ற வழியில் நிற்கின்ற தவசிகள் தாங்கள் அனுபவிக்க வேண்டியதும் இனி சேருவதும் ஆகிய கர்மங்கள் அனைத்தும் அதை உருவாக்கிய இறைவன் இடத்திலேயே சென்று சேர்ந்து விடுவதை தேவர்களும் அறிய மாட்டார்கள். தவத்தின் வழியில் நின்று இந்த பேருண்மையை அறிந்து கொள்ளாதவர்கள் எல்லாரும் பிறவி எனும் கட்டுக்குள் அகப்பட்டு நின்றது ஒரு முடிவில்லாத வினைகளை அனுபவிக்கும் நிலையிலேயே இருக்கின்றார்கள்.
பஞ்ச துரோகத்து அதி பாதகர் தம்மை\nபஞ்ச சமையத்தோர் வேந்தன் அரும் தெண்டம்\nவிஞ்சு அத் தவப் புவி வேறே விடா விடில்\nபஞ்சத்து உள் ஆகி புவி எங்கும் பாழ்குமே
கொலை களவு கள் (மது) காமம் பொய் கூறல் ஆகிய ஐந்து வகையான மகா பாவங்களையும் ஒரு உண்மையான ஞானியைப் போல பொய்யான வேடம் அணிந்தவர்கள் தம்மை நம்புகிறவர்களை ஏமாற்றி துரோகம் செய்வது அந்த மகா பாவங்களுக்கும் மேலான பாதகர்களாக அவர்களை ஆக்குகின்றது. அப்படி ஐந்து வகையான மகா பாவங்களுக்கும் மேலான பாவங்களை செய்பவர்களை பார்த்து அவர்களைப் போலவே மற்றவர்களும் அந்த பாவங்களை கடை பிடித்து விடாத படி அந்த நாட்டை ஆளுகின்ற அரசன் அந்த பஞ்ச மகா துரோகிகளுக்கு மிகவும் கொடுமையான தண்டனையைக் கொடுத்து தங்களின் புண்ணியமான நாட்டை விட்டு அவர்களை விலக்கி வைத்து வேறு இடத்திற்கு போகும் படி கொண்டு சென்று விடாமல் இருந்தால் அவர்களின் புண்ணிய நாடு பஞ்சத்தில் அகப்பட்டுக் கொண்டு முழுவதும் பாழாக போய் விடும்.
வாய் ஒன்று சொல்ல மனம் ஒன்று சிந்திக்க\nநீ ஒன்று செய்ய உறுதி நடந்து ஆகா\nதீ என்று இங்கு உன்னை தெளிந்தேன் தெளிந்த பின்\nபேய் என்று இங்கு என்னை பிறர் தெளியாரே
வாயின் மூலம் ஒன்று சொல்லவும், அதே நேரம் மனமானது வேறொன்றை சிந்திக்கவும், அப்போது நீங்கள் வேறொன்றை செய்வதாகவும் இருந்தால் உறுதியாக நடப்பது எதுவும் பயன் ஆகாது. எனக்குள்ளேயே இருக்கின்ற பேரொளியான தீயின் உருவம் என்று இந்த உலகத்திலேயே இறைவனாகிய உன்னை யான் தெளிவாக அறிந்து கொண்டேன். அவ்வாறு தெளிவாக அறிந்த பிறகு இறந்து பேயாகின்ற மற்றவர்களைப் போன்றவன் என்று இந்த உலகத்தில் என்னை வேறு யாரும் நினைக்க மாட்டார்கள்.
ஏய் எனில் ஏய் என மாட்டார் பிரசைகள்\nவாய் முலை பெய்ய மதுர நின்று ஊறிடும் மாதர் நின்று ஊட்டிடும்\nதாய் முலை ஆவது அறியார் தமர் உள் தமர் உள்ளோர்\nஒரு ஊன் நிலை செய்யும் உரு இலி தானே
ஏய் என்று அழைத்தால் மறுபடியும் ஏய் என்று சொல்லாமல் தன்னை அழைக்கிறார்கள் என்ன என்று கேட்போம் என்கிற அடிப்படை அறிவு இருக்கின்ற சாதாரண மனிதர்கள் கூட தாம் குழந்தையாக இருந்த பருவத்தில் வாய்க்குள் வைத்த தாயின் மார்பில் இருந்து வருகின்ற இனிமையான பால் ஊறுகின்ற தமது தாயின் மார்பகமாக இருப்பது எது என்பதை அறியாமல் இருக்கின்றார்கள். தமக்கு உள்ளே இருக்கின்ற ஒரு சக்தியாக இருந்து தமது உடலை நிலையாக பிடித்து வைத்து இருக்கின்றது உருவம் இல்லாத இறைவனே என்பதை அவர்கள் அறிவது இல்லை.
மனத்தில் எழுந்தது ஓர் மாய கண்ணாடி\nநினைக்கில் அதனின் நிழலையும் காணார்\nவினை பயன் போக விளக்கியும் கொள்ளார்\nபுழை கடைக்கு இச்சித்து போகின்ற ஆறே
உயிர்கள் தங்களின் மனதினில் எழுகின்ற எண்ணங்களை மாயை மறைத்து இருப்பதால் அது ஒரு பொய்யான கண்ணாடியாக இருக்கின்றது. அந்த மனதில் நினைத்துப் பார்க்கின்ற கற்பனையான எண்ணங்களின் நிழலைக் கூட காண முடியாதவர்களாக இருக்கின்றார்கள். தாங்கள் செய்கின்ற வினையின் பயன் தீர்ந்து போவதற்கான வழிமுறைகளை உபதேசித்தாலும் அதை கடை பிடித்து தங்களின் வினைகளை தீர்த்துக் கொண்டு மேல் நிலைக்குப் போகும் வழியில் செல்லாமல், கீழ் நிலைக்கு செல்லும் தங்களின் ஆசைகளினால் மேலும் மேலும் பிறவிகள் எடுக்கின்ற வழியிலேயே செல்கிறார்கள்.
குருட்டினை நீங்கும் குருவினை கொள்ளார்\nகுருட்டினை நீங்கா குருவினை கொள்வர்\nகுருடும் குருடும் குருட்டு ஆட்டம் ஆடி\nகுருடும் குருடும் குழி விழும் ஆறே
மாயையாகிய இருள் விலகுகின்ற உயர்ந்த தன்மை கொண்ட உண்மை குருவினை தேடி அடையாதவர்கள் மாயையாகிய இருள் தம்மை விட்டு இன்னமும் நீங்காத பொய்யான குருவிடமே சென்று சிக்கிக் கொள்கிறார்கள். இது ஒரு குருடனும் இன்னொரு குருடனும் சேர்ந்து பார்வை இல்லாமல் இருளில் இடம் தெரியாமல் தடுமாறி ஆடுவது போல இறைவனை அடையும் வழி தெரியாமல் ஆடி இந்த குருடனும் அவன் உண்மை என்று நம்பிய பொய்யான குருவாகிய குருடனும் சேர்ந்து பிறவிக் குழியில் மீண்டும் மீண்டும் விழுவதற்கான வழியாகவே இருக்கும்.
ஓடும் குதிரை குசை திண்ணம் பற்றுமின்\nவேடம் கொண்டு என் செய்வீர் வேண்டா மனிதரே\nநாடுமின் நந்தியை நம் பெருமான் தன்னை\nதேடுமின் இன்ப பொருள் சென்று எய்தல் ஆமே
கடிவாளம் கட்டாமல் அங்கும் இங்கும் அலைந்து ஓடுகின்ற குதிரையைப் போல அலைகின்ற மனதை கடிவாளத்தை கட்டி குதிரையை அடக்குவது போல மனதை தியானத்தின் மூலம் உறுதியாக பற்றிக் கொண்டு மனதை அடக்குங்கள். ஞானியைப் போல வெறும் வேடம் மட்டும் போட்டுக் கொண்டு என்ன செய்வீர்கள்? இந்த வீணான வேலை வேண்டாம் மனிதர்களே. உங்களுக்குள் வீற்றிருக்கும் குருநாதனாகிய இறைவன் நமக்கெல்லாம் தலைவனாக இருக்கின்ற அவனை தேடி அடைந்தால் பேரின்ப பொருளாகிய இறைவனை சென்று பேரின்பத்தை அடைய முடியும்.
மயல் அற்று இருள் அற்று மா மனம் அற்று\nகயல் உற்ற கண்ணி தன் கை பிணக்கு அற்று\nதயவு அற்ற அவரோடும் தாமே தாம் ஆகி\nசெயல் அற்று இருந்தார் சிவ வேடத்தாரே
மாயையாகிய மயக்கம் இல்லாமல், ஆணவம் கன்மம் ஆகிய மலங்கள் இல்லாமல், வலிமையான எண்ணங்களுடைய மனம் இல்லாமல், எப்போதும் விழிப்போடு இருக்கின்ற கண்களை பெற்று இருந்தாலும் அந்த கண்களில் காணும் காட்சியின் தொடர்போ அந்த காட்சியினால் செயல்படும் ஆற்றலின் தொடர்போ இல்லாமல், எவ்வித குணங்களும் இல்லாத இறைவனோடு சேர்ந்து தாமும் இறைவனைப் போலவே ஆகி எந்தவிதமான செயல்களும் இல்லாமல் இருப்பவர்களே உண்மையான சிவ வேடத்தைக் கொண்ட ஞானிகள் ஆவார்கள்.
உடலில் துலக்கிய வேடம் உயிர்க்கு ஆகா\nஉடல் கழன்றால் வேடம் உடனே கழலும்\nஉடல் உயிர் உள் அமை ஒன்று ஓர்ந்து கொள்ளாதார்\nகடலில் அகப்பட்ட கட்டை ஒத்தாரே
ஞானிகளின் உடலில் இருந்து வெளிப்படுகின்ற வேடமானது அவர்களின் உயிர் நிலையை குறிப்பது ஆகாது. அவர்கள் தங்களின் உடலை நீக்கி விட்டால் அவர்களிடமிருந்து வெளிப்பட்ட வேடமும் அதனுடனே சேர்ந்து நீங்கி விடும். உடலோடு இருக்கும் உயிருக்கு உள்ளே அமைந்து இருக்கின்ற ஒரு பரம்பொருளை ஆராய்ந்து உணர்ந்து கொள்ளாதவர்கள் கடல் அலைகளில் அகப்பட்டுக் கொண்ட கட்டையைப் போலவே பிறவி எனும் சுழற்சியில் சிக்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து துன்பத்தில் உழல்வார்கள்.
அருளா லரனுக கடிமை யதாகிப\nபொருளாந தனதுடல பொறபதி நாடி\nயிருளான தினறி யிருஞசெய லறறொ\nதெருளா மடிமை சிவவெடத தாரெ
அருளால் (இறைவனது திருவருளால்) அரனுக்கு (இறைவனுக்கு) அடிமை (தானாகவே அடிமையாக) அது (தாம்) ஆகி (ஆகி) பொருள் (பொருளாக) ஆம் (இருக்கின்ற) தனது (தமது) உடல் (உடலே) பொன் (பொன்) பதி (அம்பலமாக மாறி) நாடி (அதில் நடனமாடும் இறைவனை தமக்குள் தேடி அடைந்து) இருள் (ஆணவம், கன்மம், மாயை என்று) ஆனது (இருக்கின்ற மும்மலங்கள்) இன்றி (இல்லாமலும்) இரும் (நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான) செயல் (செயல்களும்) அற்றோர் (இல்லாமலும் ஆகி) தெருள் (தாம் பெற்ற ஞானத்தில் தெளிவு) ஆம் (அடைந்த) அடிமை (உண்மையான அடியவர்களே) சிவ (இறைவனது) வேடத்தாரே (வேடத்தை கொண்டவர்கள் ஆகும்).
தான் அறி தன்மையும் தான் அவன் ஆதலும்\nஏனைய அச் சிவம் ஆன இயற்கையும்\nதான் உறு சாதகர் முத்திரை சாத்தலும்\nமோனமும் நந்தி பத முத்தி பெற்ற அதே
தான் யார் என்பதை அறிந்து கொண்ட தன்மையும், தாமே சிவ பரம்பொருளாக ஆகி இருக்கின்ற தன்மையும், தங்களைத் தவிர உலகத்தில் இருக்கின்ற அனைத்தும் மற்றும் நிகழ்கின்ற அனைத்தும் அந்த மூலப் பரம்பொருளாகிய சிவம் ஆகவே இருக்கின்ற தன்மையும், தாம் வீற்றிருக்கின்ற சாதகத்தின் நிலையையே முத்திரையாக இறைவனுக்கு அர்ப்பணிக்கின்ற தன்மையும், மனம் பேச்சு செயல் ஆகிய மூன்றும் அடங்கி இருக்கின்ற மோன நிலையில் வீற்றிருக்கின்ற தன்மையும், ஆகிய இவை அனைத்தும் குரு நாதராக இருக்கின்ற இறைவனின் திருவடிகளை அடைந்து முக்தியை பெற்ற உண்மையான சிவ ஞானிகளுக்கு அடையாளங்கள் ஆகும்.
ஞானத்தின் ஆல் பதம் நண்ணும் சிவ ஞானி\nதானத்தில் வைத்தல் தனி ஆலையத்தன் ஆம்\nமோனத்தன் ஆதலின் முத்தன் ஆம் சித்தன் ஆம்\nஏனை தவசி இவன் எனல் ஆகுமே
உண்மையான ஞானத்தின் மூலம் இறைவனது திருவடிகளை அடைந்து சிவ ஞானத்தை பெற்ற ஞானிகள் தங்களிடமுள்ள அருளை தம்மை நாடி வருகின்ற தகுதியானவர்களுக்கு கொடுக்கின்றதால் அவர்கள் ஒரு தனித்துவம் பெற்ற ஆலயமாகவே இருக்கின்றார்கள். அவர்கள் சொல்லும் செயலும் மனமும் அடங்கிய மோன நிலையிலேயே இருப்பவர்கள் ஆதலால் முக்தி நிலையில் வீற்றிருக்கின்ற முக்தர்களாகவும் சித்தத்தில் எப்போதும் சிவத்தையே நினைத்துக் கொண்டிருப்பதால் சித்தர்களாகவும் இருக்கின்றார்கள். இவர்களைப் போலவே மற்ற தவசிகளும் இறைவனது திருவடிகளை மட்டுமே எண்ணிக்கொண்டு மோன நிலையில் இருந்தால் இவர்களுடைய நிலையை அடைய முடியும் என்பது உண்மையே ஆகும்.
ஞானிக்கு சுந்தர வேடமும் நல்ல ஆம்\nதான் உற்ற வேடமும் தன் சிவ யோகமே\nஞானம் அவ் வேடம் அருள் ஞான சாதனம்\nஆனதும் ஆம் ஒன்றும் ஆகாது அவனுக்கே
உண்மையான ஞானிக்கு எந்த ஒரு அழகிய வேடமும் நல்லதே ஆகும். அவர்களுக்கு தானாகவே அமைந்த வேடமும் அவர்களின் சிவ யோகமாகவே இருக்கின்றது. உண்மையான ஞானமாகவும் அந்த வேடமே இருக்கின்றது. இறைவனின் திருவருள் ஞானத்தை பெறுகின்ற சாதனமாகவும் அதுவே இருக்கின்றது. ஆதலால் உண்மையான ஞானிகளுக்கு அந்த வேடத்தினால் எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படுவது இல்லை.
அடியார் அவரே அடியார் அல்லாதார்\nஅடியாரும் ஆகாது வேடமும் ஆகா\nஅடியார் சிவ ஞானம் ஆனது பெற்றார்\nஅடியார் அல்லாதார் அடியாரும் அன்றே
உண்மையான ஞானத்தைக் கொண்டு இறைவனின் அடியவர்களாக இருக்கின்ற ஞானிகளே அடியவர்கள் ஆவார்கள். அப்படி இல்லாதவர்கள் அடியவர்களாகவும் ஆக மாட்டார்கள் அவர்கள் போடுகின்ற பொய்யான வேடங்களும் உண்மையான அடியாருக்கான வேடமாக இருக்காது. அடியவர் என்பவர்கள் இறைவனது சிவ ஞானமாக இருக்கின்ற உண்மையான ஞானத்தை இறையருளால் பெற்றவர்கள் ஆவார்கள். அவ்வாறு உண்மையான ஞானம் பெறுவதற்கான எந்த தன்மையும் இல்லாதவர்கள் அடியவர்களாக ஆக மாட்டார்கள்.
கத்தி திரிவர் கழு அடி நாய் போல\nகொத்தி திரிவர் குரக்கு அறி ஞானிகள்\nஒத்து பொறியும் உடலும் இருக்கவே\nசெத்து திரிவர் சிவ ஞானியார்களே
தாம் அறிந்த கொண்டவற்றை ஞானம் என்று எண்ணி மற்றவர்களுக்கு அதையே எடுத்து சொல்லி திரிகின்ற பொய்யான ஞானிகள் கழுமரத்தில் ஏற்றி இருக்கும் உடலுக்கு அடியில் எப்போது அந்த உடலின் இறைச்சி கிடைக்கும் என்று குரைத்துக் கொண்டு அலைகின்ற நாயை போலவே ஏமாளிகள் எப்போது கிடைப்பார்கள் என்று இருக்கின்றார்கள். தமது குரலின் பேச்சுத் திறமையே அறிவு என்று எண்ணுகின்ற பொய்யான ஞானிகள் கழு மரத்தில் ஏற்றி இருக்கும் உடலுக்கு மேலே எப்போது இறைச்சியை கொத்தி உண்ணலாம் என்று திரிகின்ற கழுகுகளைப் போலவே ஏமாளிகள் எப்போது கிடைப்பார்கள் அவர்களை ஏமாற்றி அவர்களிடமிருப்பதை பிடுங்கி உண்ணலாம் என்று திரிவார்கள். உண்மையான சிவ ஞானிகள் ஒன்றாக இருக்கின்ற ஐந்து புலன்களும் உடலும் அதனதன் வேலையை செய்து கொண்டு இருந்தாலும் அவற்றை தமது விருப்பத்திற்கு ஏற்றபடி அடக்கும் வல்லமையோடு செத்த பிணத்தைப் போலவே எந்த இடத்திலும் கிடப்பார்கள்.
சிவ ஞானிகளுக்கும் சிவ யோகிகளுக்கும்\nஅவம் ஆன சாதனம் ஆகாது அது ஆகில்\nஅவம் ஆம் அவர்க்கு அது சாதனம் நான்கும்\nஉவமானம் இல் பொருள் உள் உறல் ஆமே
உண்மையான சிவ ஞானிகளுக்கும் சிவ யோகிகளுக்கும் இறைவனை அடைவதற்கான வழி முறைகளான சன் மார்க்கம், சக மார்க்கம், சற்புத்திர மார்க்கம், தாச மார்க்கம் ஆகிய நான்கும் பயனில்லாதது ஆகும். ஏனென்றால் தமக்கு சரிசமமாக எதுவும் இல்லாத பரம் பொருளாகிய இறைவனை அவர்கள் தமக்குள் உணர்ந்து தெளிந்து விட்டதால்.
புன் ஞானத்தோர் வேடம் பூண்டும் பயன் இல்லை\nநல் ஞானத்தோர் வேடம் பூணார் அருள் நண்ணி\nதுன் ஞானத்தோர் சமைய துரியத்து உளோர்\nபின் ஞானத்து உளோர் என்று பேச கிலாரே
இழிவான ஞானத்தை கொண்டவர்கள் உண்மை ஞானம் கொண்டவர்கள் போல பொய்யாக வேடம் அணிந்தாலும் அதனால் அவர்களுக்கு ஒரு பயனும் இல்லை. நன்மையான ஞானத்தை பெற்றவர்கள் வேடம் அணிந்து கொள்வதை விரும்பாமல் இறைவனின் திருவருள் கிடைப்பதையே விரும்பி இருப்பார்கள். தீமையான ஞானத்தை கொண்டவர்கள் தத்தமது சமயங்களின் கொள்கைகளின் மேல் நீங்காத பற்று உள்ளவர்கள் தங்களின் சமயமே பெரியது என்று பேசி தவறான வழியில் செல்வார்கள். அதனால் பிறகு உண்மை ஞானத்தை தாம் கொண்டவர்கள் என்று அவர்களால் பேச முடியாது.
ஞானம் இல்லார் வேடம் பூண்டு நரகத்தர்\nஞானம் உள்ளார் வேடமின்று எனில் நல் முத்தர்\nஞானம் உள ஆக வேண்டுவோர் நக்கன் பால்\nஞானம் உள வேடம் நண்ணி நிற்பாரே
உண்மை ஞானம் இல்லாதவர்கள் பொய்யாக வேடம் அணிந்தால் நரகத்திற்கே செல்வார்கள். உண்மை ஞானத்தை உடையவர்கள் வேடம் அணிந்து இல்லாமல் இருந்தாலும் நன்மையான முக்தியை பெறுவார்கள். உண்மை ஞானம் தமக்குள் உருவாக வேண்டும் என்று விரும்புபவர்கள் மகா நிர்வாண நிலையில் இருக்கின்ற இறைவனின் அருகாமையை விரும்பி உண்மை ஞானத்தை பெறுவதற்கு உள்ள வேடத்தை தங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று வேண்டி நிற்பார்கள்.
அரசு உடன் ஆல் அத்தி ஆகும் அக் காரம்\nவிரவு கனலில் வியன் உரு மாறி\nநிரவிய நின் மலம் தான் பெற்ற நீதர்\nஉருவம் பிரமன் உயர் குலம் ஆமே
அரச மரத்துடன் ஆல மரம் மற்றும் அத்தி மரம் ஆகிய மூன்று மரங்களின் சுள்ளிகளை ஒன்றாக கலந்து யாகத்தின் நெருப்பில் எரிந்து சிறப்பான உருவமாக மாறி வருகின்ற சாம்பலாகிய திரு நீற்றை உடல் முழுவதும் பூசிக் கொண்டு தவமிருந்து எந்தவிதமான குற்றங்களும் இல்லாத நிலையை அடையப் பெற்ற தர்மத்தின் வடிவமாக இருக்கின்ற தவசிகளின் உருவமானது மனித நிலையை விட மேன்மை பெற்ற தேவர்களின் உயர்ந்த பிறப்பாகவே ஆகி விடுகின்றது.
கங்காளன் பூசும் கவச திரு நீற்றை\nமங்காமல் பூசி மகிழ்வரே யாம் ஆகில்\nதங்கா வினைகளும் சாரும் சிவ நெறி\nசிங்காரம் ஆன திருவடி சேர்வரே
உயிர்களின் எலும்பை மாலையாக அணிந்து இருக்கின்ற இறைவன் தனது உடலில் பூசுகின்ற சாம்பல் கவசமாகிய திரு நீற்றை கொஞ்சமும் மங்காமல் பிரகாசமாகத் தெரியும் படி பூசிக் கொண்டு மகிழ்ச்சியை அடைபவர்களாக தாங்கள் இருந்தால் அனைத்து வினைகளும் அவர்களிடம் தங்காமல் விலகி ஓடி விடும். சிவப் பரம்பொருளை அடைகின்ற வழி முறை அவர்களுடன் சேர்ந்தே இருக்கும். அதன் வழியே சென்று பேரழகாக இருக்கின்ற இறைவனின் திருவடியை அவர்கள் அடைவார்கள்.
நூலும் சிகையும் உணரார் நின் மூடர்கள்\nநூல் அது வேத அந்தம் நுண் சிகை ஞானம் ஆம்\nபால் ஒன்றும் அந்தணர் பாப்பார் பரம் உயிர்\nஓர் ஒன்று இரண்டு எனில் ஓங்காரம் ஓதிலே
பூணூலுக்கும் குடுமிக்கும் உள்ள உட் பொருளை உணராதவர்கள் முழு மூடர்களாக இருக்கின்றார்கள். பூணூல் என்பது வேதத்தை முழுதும் அறிந்து உணர்ந்ததை குறிப்பதாகும். தலை உச்சியில் இருக்கும் குடுமி என்பது உண்மை ஞானத்தை உணர்ந்ததை குறிப்பதாகும். வேதப் பொருளாகிய இறைவனை உணர்ந்து அவனோடு ஒன்றி இருக்கின்ற அந்தணர்களே பரம்பொருளாகிய இறைவனே தமது உயிராகவும் இருப்பதை தமக்குள் பார்க்கின்றார்கள். ஒன்று பட்டு இருக்கின்ற இறைவன் ஆன்மா ஆகிய இரண்டும் ஒரே பொருளே என்பதை ஓங்காரத்தை ஓதியே அவர்கள் உணர்ந்தார்கள்.
காது அணி குண்டலம் கண்டிகை நாகமும்\nஊதின சங்கும் உயர் கட்டி கப்பரை\nஏதம் இல் பாதுகம் யோக அந்தம் ஆதனம்\nஏதம் இல் யோக வட்டம் தண்டம் ஈர் ஐந்தே
.காதுகளில் அணிந்து இருக்கின்ற குண்டலங்கள், . கழுத்தில் அணிந்து இருக்கின்ற நாக மணி மாலை, . இயற்கையாகவே முதுமை பெற்று இறந்து கிடைத்த சங்கு, . உயர்வான திருநீறு வைத்திருக்கும் பாத்திரம், . பிச்சை எடுக்கின்ற பாத்திரம் (திருவோடு), . குற்றம் இல்லாத பாதணிகள், . யோக முத்திரை, . அமர்ந்து இருக்கின்ற ஆசனம், . குற்றம் இல்லாத யோக காப்பு (இரட்சை), . தண்டம் ஆகிய பத்து அடையாளங்களும் உண்மையான தவசிகளுக்கான வேடமாகும்.
யோகிக்கு இடும் அது உள் கட்டுக்கு கஞ்சுளி\nதோகைக்கு பாசத்து சுற்றும் சடை ஒன்று\nஆகத்து நீறு அணி ஆம் அக்கு பாளம்\nசீகத்த மாத்திரை திண் பிரம்பு ஆகுமே
சிவ யோகிகள் அணிகின்ற பொருள்களான தங்களின் இடுப்புக்கு கீழே கட்டுகின்ற கோவணமும், உடலைப் போர்த்தி இருக்கின்ற காவி ஆடையும், மயிலின் தோகையால் திரித்த கயிறு போல சுற்றி இருக்கின்ற திரிந்த சடை முடி ஒன்றும், உடம்பு முழுவதும் திருநீறு அணிந்தும், மார்பில் அணிந்து இருக்கின்ற மாலையாகிய உருத்திராட்ச மணியும், அழகிய கைப் பிடியைக் கொண்ட கமண்டலமும், உறுதியான தண்டமும் அவர்களின் தவ அடையாளங்கள் ஆகும்.
பூதி அணிவது சாதனம் ஆதியில்\nகாது அணி தாம்பிரம் குண்டலம் கண்டிகை\nஓதி அவர்க்கும் உருத்திர சாதனம்\nதீது இல் சிவ யோகி சாதனம் தேரிலே
உண்மையான தவசிகள் விபூதியை அணிந்து கொள்வது மிகவும் உன்னதமான கருவியாக அனைத்திற்கும் முதலானது ஆகும். அது மட்டுமின்றி காதுகளில் அணிகின்ற செப்பினால் செய்த குண்டலங்களும் கழுத்தில் அணிந்திருக்கும் மணியும் அவர்களுக்கு கருவியாகும். மந்திரங்களை ஓதுகின்ற தவசிகளுக்கு உறுவேற்றுகின்ற கையில் இருக்கின்ற உருத்திராட்ச மாலையும் கருவியாக உள்ளது. இந்தக் கருவிகளை பயன்படுத்துகின்ற முறையை முழுவதும் அறிந்து தெளிந்த தீமை இல்லாத உண்மையான சிவ யோகத்தை புரிகின்ற யோகிகளுக்கு மட்டுமே அவை பயனுள்ளதாகும்.
தவம் மிக்கு அவரே தலையான வேடர்\nஅவம் மிக்கு அவரே அதி கொலை வேடர்\nஅவம் மிக்கு அவர் வேடத்து ஆகார் அவ் வேடம்\nதவம் மிக்கு அவர்க்கு அன்றி தாங்க ஒண்ணாதே
உண்மையான தவ வலிமையை அதிகமாக கொண்ட தவசிகளே அனைத்திலும் சிறந்த உண்மையான தவ வேடத்தை அணிந்தவர்கள் ஆவார்கள். பொய்யான தவ வேடம் அணிந்ததால் பெற்ற பாவங்கள் அதிகமாக கொண்ட பொய்யான தவசிகளே உயிர் கொலையை விடவும் கொடுமையான கொலையாகிய தர்மத்தையே கொலை செய்கின்ற பொய்யான வேடதாரிகள் ஆவார்கள். ஆதலால் பாவங்கள் அதிகமாக கொண்ட அவர்கள் உண்மையான தவ வேடத்திற்கு தகுதி உடையவர்கள் ஆக மாட்டார்கள். உண்மையான அந்த தவ வேடத்தை தவ வலிமை அதிகமாக கொண்ட தவசிகளைத் தவிர வேறு யாராலும் தாங்க முடியாது.
பொய் வேடம் பூண்பர் பொசித்தல் பயன் ஆக\nமெய் வேடம் பூண்போர் மிகு பிச்சை கை கொள்வர்\nபொய் வேடம் மெய் வேடம் போதவே பூணினும்\nஉய் வேடம் ஆகும் உணர்ந்து அறிந்தோர்க்கே
உண்மையான தவசிகளைப் போல பொய்யாக வேடம் அணிந்து கொள்பவர்கள் சும்மா இருந்து மற்றவர்கள் தானமாக தருகின்ற உணவை வைத்து தமது பசியை தீர்த்துக் கொள்கின்ற பயனை எண்ணியே அப்படி வேடம் போடுகின்றார்கள். உண்மையான வேடத்தை அணிந்த தவசிகள் உயிர் வாழ்வதற்காக மட்டுமே உணவு யாசிக்கின்ற பிச்சை என்கின்ற மேன்மையான கொள்கையை மேற் கொண்டவர்கள் ஆவார்கள். பொய்யான வேடமாக இருந்தாலும் உண்மையான வேடமாக இருந்தாலும் அவர்களின் ஆசைகளோ கொள்கைகளுக்கோ ஏற்றபடி அணிந்து கொண்டாலும், இறைவனை அடைவதற்கு அந்த வேடம் பயன்படுவது அந்த வேடத்தின் உள்ளே இருக்கின்ற உண்மையான தத்துவத்தை உணர்ந்து அறிந்து கொண்டவர்களுக்கு மட்டுமே ஆகும்.
பொய் தவம் செய்வார் புகுவார் நரகத்து\nபொய் தவம் செய்தவர் புண்ணியர் ஆகார் ஏல்\nபொய் தவம் மெய் தவம் போகத்து உள் போக்கி அம்\nசத்திய ஞானத்தால் தாங்கும் தவங்களே
உண்மையான தவசிகளைப் போல நடிக்கின்ற பொய்யான தவத்தை செய்பவர்கள் இறந்த பிறகு நரகத்திற்கே சென்று அடைவார்கள். பொய்யான தவத்தை செய்தவர்கள் பாவத்தை மட்டுமே சேர்த்துக் கொள்வதால் புண்ணியம் பெற்றவர் ஆக மாட்டார்கள். ஆனால், பொய்யான தவமாக இருந்தாலும் உண்மையான தவமாக இருந்தாலும் உலகத்தில் வினைகளை கொடுக்கின்ற ஆசைகளை தமக்குள்ளிருந்து நீக்கி விட்டு அதன் பயனால் கிடைக்கின்ற உண்மையான ஞானத்தால் உறுதியாக தாங்கப்பட்டு இருப்பதே உண்மையான தவங்கள் ஆகும்.
இழி குலத்தோர் வேடம் பூண்பர் மேல் எய்த\nவழி குலத்தோர் வேடம் பூண்பர் தே ஆகப்\nபழி குலத்து ஆகிய பாழ் சண்டர் ஆனார்\nகழி குலத்தோர்கள் களைய பட்டோரே
ஞான குருவின் வழியை பின்பற்றி வருகின்ற சீடர்கள் கூட்டத்தோடு சேர்ந்தவர்கள் உண்மையான வேடம் அணிவது தேவர்கள் ஆகுவதற்காக ஆகும். ஆனால் இழிவான கூட்டத்தோடு சேர்ந்தவர்கள் பொய்யாக வேடம் அணிவது அனைவருக்கும் மேலானவன் என்ற பொய்யான பதவியை பெறுவதற்கு ஆகும். ஆகவே பொய்யான வேடத்தால் பழியை பெற்ற கூட்டத்தவர் ஆகிய இவர்கள் அடுத்தவர்களின் வாழ்க்கையை பாழாக்கிய கொடுமையான மனிதர்கள் ஆக இருக்கின்றார்கள். எனவே தங்களின் வாழ்க்கையை வீணாக கழித்த கூட்டத்தவர்கள் உண்மை வேடம் அணிந்த நல்லவர்கள் கூட்டத்திலிருந்து நீக்கி களையப் பட்டவர்களாகவே இருக்கின்றார்கள்.
இன்பமும் துன்பமும் நாட்டார் இடத்து உள்ள\nநன் செயல் புன் செயல் ஆல் அந்த நாட்டிற்கு ஆம்\nஎன்ப இறை நாடி நாள் தோறும் நாட்டினில்\nமன் பதை செப்பம் செயில் வையம் வாழுமே
ஒரு நாட்டில் உள்ளவர்கள் அவர்கள் இருக்கின்ற இடத்தில் செய்கின்ற நன்மையான செயல்களாலும் தீமையான செயல்களாலும் தான் அவர்கள் இருக்கின்ற நாட்டிற்கு இன்பம் வருவதும் துன்பம் வருவதும் நிகழ்கின்றது. ஆதலால் அதை தவிர்த்து இறைவனை தேடி தினம் தோறும் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் தங்களின் மனதை கெடுக்கின்ற விஷயங்களை நீக்கி செம்மையாக்குவதை செய்தால் உலகம் இன்பமோடு வாழும்.
ஞானம் இல்லார் வேடம் பூண்டு இந்த நாட்டு இடை\nஈனம் அதே செய்து இரந்து உண்டு இருப்பினும்\nமானம் நலம் கெடும் அப் புவி ஆதலால்\nஈன அவர் வேடம் கழிப்பித்தல் இன்பமே
உண்மையான ஞானம் இல்லாதவர்கள் தவசிகள் போல வேடம் அணிந்து கொண்டு, அவர்கள் இருக்கின்ற நாட்டிற்கு நடுவிலேயே திரிந்து கொண்டு, இழிவான செயல்களே செய்து கொண்டு, மற்றவர்களிடம் பிச்சை எடுத்து உணவு சாப்பிட்டு கொண்டு இருந்தாலும், அவர்களின் செயலால் நாட்டிற்கு அவமானமும், நன்மை கெடுதலும், அவர்கள் இருக்கின்ற நாடு இந்த பூமியில் இருப்பதால் உலகம் அனைத்திற்குமே கெடுதலும் நடக்கும். ஆகவே இழிவான அவர்களின் வேடத்தை நீக்கி அவர்களை உண்மையை உணர செய்து அதன் பயனால் உலகம் இன்பம் அடையும் படி செய்வது உண்மை ஞானிகளின் கடமையாகும்.
ஆடம்பரம் கொண்டு அடிசில் உண்பான் பயன்\nவேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்\nஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்\nதேடியும் காணீர் சிவன் அவன் தாள்களே
ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு மிகவும் இனிப்பான உணவுகளை உண்ணுகின்றவன் அதற்கு தேவையான செல்வம் திரட்டுவதற்கு தவசிகள் போல வேடம் அணிந்து கொண்டு மற்றவர்களை பயமுறுத்தியும் பொய்யான வார்த்தைகளால் மயக்கியும் திரிகின்ற முட்டாள் மனிதர்களாக இருக்கின்றார்கள். இப்படி வாழ்க்கையை வீணாக்காமல் இறைவன் மேல் உண்மையான அன்பு கொண்டு ஆடியும் அவனது திருப் புகழ்களை பாடியும், அழுதும் அவன் காண கிடைக்க மாட்டானா என்று புலம்பியும் அவன் எங்கு இருக்கின்றான் என்று தேடினால் இறைவனது திருவடிகளை காண்பீர்கள்.
நாடும் உறவும் கலந்து எங்கள் நந்தியை\nதேடுவன் தேடி சிவ பெருமான் என்று\nகூடுவன் கூடி குரை கழற்கே செல்ல\nவீடும் அளவும் விடுகின்று இலேனே
எண்ணத்தில் அன்பை கலந்து எங்களின் குருநாதனாகிய இறைவனை தேடிக் கொண்டே இருப்பேன். தேடி அடையும் போது அவனே அனைத்திற்கும் மேலான சிவப் பரம் பொருள் என்று அறிந்து அவனோடு சேர்ந்து கொள்வேன். அப்போது அவனது திருவருளும் என்னோடு சேர்ந்து கொள்ள அவனுடைய பேரழகு வாய்ந்த திருவடிக்கே சென்று விட வேண்டும் என்று உறுதியாகப் பற்றிக் கொண்டு அவனோடு இரண்டறக் கலக்கின்ற காலம் வரும் வரையில் அவனுடைய திருவடிகளை விட்டு விட மாட்டேன்.
கதிர் கொண்ட காந்தம் கனலின் வடிவு ஆம்\nமதி கண்ட காந்தம் மணி நீர் வடிவு ஆம்\nசதி கொண்டு தாக்கி எரியின் வடிவு ஆம்\nஎரி கொண்ட ஈசன் எழில் வடிவு ஆமே
இறையருள் பெற்று பொன் போன்ற பிரகாசமான உடலைக் கொண்டு தங்களை நோக்கி மற்றவர்களையும் ஈர்க்கின்ற ஞானிகள் வெப்பத்தின் வடிவமாக இருக்கின்றார்கள். இறையருளால் உண்மை ஞானத்தை கண்டு கொண்டு தங்களை நோக்கி மற்றவர்களையும் ஈர்க்கின்ற ஞானிகள் இரசமணியின் நீரால் இரும்பையும் தங்கமாக்குவது போல தங்களை நாடி வந்த மற்றவர்களுக்கும் ஞானத்தை தருகின்ற ஞான வடிவமாக இருக்கின்றார்கள். தம்மை சரணடைந்த அடியவர்களின் வினைகளை எப்படி அழிக்க வேண்டும் என்கின்ற சூழ்ச்சியை கொண்டு அவற்றை தாக்கி எரித்து அவற்றை நெருப்பின் வடிவமாக ஆக்கி விடுவதே தமது இடது திருக்கரத்தில் நெருப்புச் சட்டியைக் கொண்டு இருக்கின்ற இறைவனின் பேரழகு வடிவத்தின் தத்துவம் ஆகும்.
அவ் உலகத்தே பிறக்கில் உடலோடு\nஅவ் உலகத்தே அரும் தவம் நாடுவர்\nஅவ் உலகத்தே அரன் அடி கூடுவர்\nஅவ் உலகத்தே அருள் பெறுவாரே
இறைவனை அடைய வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு எந்த உலகத்தில் பிறவி எடுத்தாலும் அந்த உலகத்துக்கு ஏற்ற உடம்போடு பிறந்து, அவர்கள் இருக்கின்ற உலகத்திலேயே செய்வதற்கு மிகவும் அரியதான தவங்களை தேடி அடைந்து செய்கின்ற தவசிகள், அவர்கள் இருக்கின்ற உலகத்திலேயே இறைவனின் திருவடியை சேர்ந்து இருப்பார்கள். அவர்கள் இருக்கின்ற உலகத்திலேயே இறைவனது திருவருளையும் பெற்று விடுவார்கள்.
காயம் தேர் ஏறி மன பாகன் கை கூட்ட\nமாயம் தேர் ஏறி மயங்கும் அவை உணர்\nநேயம் தேர் ஏறி நிமலன் அருள் பெற்றால்\nஆயம் தேர் ஏறி அவன் இவன் ஆமே
உயிர்கள் நிலையில்லாத தமது உடலை இறப்பு இல்லாத நிலை பெற்றதாகிய உயர்ந்த தேராக மாற்றி அதில் ஏறி செல்வதற்கு மனமாகிய பாகனின் கையில் ஐம் புலன்களும் அவன் வசப்படும் படி செய்தால் மாயையின் மயக்கத்திலிருந்து நீங்கி உண்மை அறிவாகிய தேரில் ஏறி மாயையினால் மயங்குகின்ற மனதை மாற்றி உண்மையை உணர வைக்கலாம். அதன் பிறகு அன்பு என்கின்ற நிலையிலிருந்து பேரன்பாகவே மாறுகின்ற தேரில் ஏறினால் ஒரு குற்றமும் இல்லாத இறைவனின் திருவருளை பெற்று விடலாம். அப்போது பொன்னாகவே மாறிவிட்ட தங்களின் உடலாகிய பிரகாசமான தேரில் ஏறினால் இறைவனே தாம் எனும் நிலையை அடையலாம்.
புண்ணியன் எந்தை புனிதன் இணை அடி\nநண்ணி விளக்கு என்ன ஞானம் விளைந்தது\nமண்ணவர் ஆவதும் வானவர் ஆவதும்\nஅண்ணல் இறைவன் அருள் பெற்ற போதே
புண்ணியமே வடிவாகிய எமது தந்தையும் புனிதனுமாகிய இறைவனின் இணையில்லாத திருவடிகளை தேடி அடைந்து உண்மை ஞானத்தை எமக்கு விளக்குங்கள் தந்தையே என்று கேட்டுக் கொள்ள அவரது திருவருளால் ஞானம் எமக்குள் விளைந்தது. அப்படி அனைத்திற்கும் தலைவனாகிய இறைவனின் திருவருளால் ஞானம் விளைந்த போதே தெய்வங்களுக்கு சரிசமமாக உலகத்திலேயே இருக்கின்ற அமரர்கள் ஆவதும் வானுலகத்திற்கு சென்று தேவர்கள் ஆவதும் முடியும்.
சிவன் அருளால் சிலர் தேவரும் ஆவர்\nசிவன் அருளால் சிலர் தெய்வத்தோடு ஒப்பர்\nசிவன் அருளால் வினை சேர்கிலார் தமை\nசிவன் அருள் கூறில் சிவ லோகம் ஆமே
இறைவனது திருவருளை சரியாக பயன்படுத்தி மேன்மையடைந்த சிலர் வானுலகத்து தேவர்களாகவும் ஆவார்கள். இறைவனது திருவருளை சரியாக பயன்படுத்தி மேன்மையடைந்த சிலர் தெய்வங்களுக்கு சரிசமமாக விளங்குவார்கள். இறைவனது திருவருளினால் இனி எந்த விதமான வினையும் வந்து சேர்ந்து விடாத தன்மை அடைந்தவர்கள் தாம் பெற்ற இறைவனது திருவருளை எடுத்துக் கூறினால் அதுவே சிவ லோகமாகவும் இருக்கின்றது.
முன் நின்று அருளும் முடிக்கின்ற காலத்து\nநல் நின்று உலகில் நடு உயிர் ஆய் நிற்கும்\nபின் நின்று அருளும் பிறவியை நீக்கிடும்\nஉள் நின்று எனக்கு ஒரு முத்தி தந்தானே
ஆதியிலிருந்தே நின்று அருளுகின்ற இறைவன் ஒருவருக்கு வினை முடிகின்ற காலத்தில் நன்மையாக நின்று அருளுகின்றான். உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கு உள்ளே உயிருக்கு உயிராக நிற்கின்றவனாகிய அவனே தமது அருளை வழங்கிய பின்பும் அடியவருடனே நின்று அவர் எப்போதும் அருள் நிலையிலிருந்து விலகி விடாமல் பாதுகாத்து அருளுகின்றான். அந்த அருளினால் இனி வரக்கூடிய பிறவிகளையும் நீக்கி விடுகின்றான். அத்தகைய இறைவன் எமக்கு உள்ளே நின்று எமக்கு ஒரு பேரின்பமான முக்தியை தந்து அருளினானே.
புண்ணியம் பாவம் இரண்டு உள பூமியில்\nநண்ணும் பொழுது அறிவார் சில ஞானிகள்\nஎண்ணி இரண்டையும் வேர் அறுத்து அப்புறத்து\nஅண்ணல் இரும் இடம் ஆய்ந்து கொள்ளீரே
புண்ணியம் பாவம் என்று இரண்டு விதமான வினைகளும் அவற்றின் பயன்களுமே இருக்கின்றன இந்த உலகத்தில். இறைவனின் திருவருள் கிடைக்கும் பொழுது அவற்றை அறிந்து கொள்வார்கள் சில ஞானிகள். அவ்வாறு அறிந்த பிறகு அவற்றை நினைத்து பார்த்து புண்ணியம் பாவம் ஆகிய இரண்டு வினைகளையுமே வேரோடு அறுத்து எடுத்து தம்மை விட்டு அப்புறப் படுத்தி விட்டால், அனைத்திற்கும் தலைவனாகிய இறைவன் இருக்கின்ற இடம் தமக்குள்ளேயே இருப்பதை ஆராய்ந்து அறிந்து கொள்வார்கள்.
தமிழ் மண்டலம் ஐந்தும் தவ்விய ஞானம்\nஉழவு அது போல உலகர் திரிவர்\nஅவிழும் மனமும் எம் ஆதி அறிவும்\nதமிழ் மண்டலம் ஐந்தும் தத்துவம் ஆமே
ஆதி மொழியாகிய தமிழிலிருந்து உருவாகி இருக்கின்ற அனைத்து விதமான மொழிகளின் மூலமும் உலகத்தில் ஐந்து விதமான பூதங்களால் ஆகிய அனைத்து பொருள்களின் மூலமும் அறிந்து கொள்ள வேண்டிய ஞானத்தை எல்லாம் அறிந்து கொள்ள வேண்டும் என்று நிலத்தை உழுது பண்படுத்தி பயிர் வளர்ப்பது போலவே உலகத்தில் உள்ளவர்கள் அலைந்து திரிந்து முயற்சி செய்கிறார்கள். ஆனால் உலகத்தில் உள்ள ஆசைகளும் பற்றுக்களும் வேண்டாம் என்று அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற மனமானது எமது ஆதி முதல்வனாகிய இறைவனின் அறிவு வடிவத்தை பெற்று அவனது திருவருளால் அனைத்து மொழிகளினாலும் உலகத்தில் உள்ள அனைத்து பொருள்களினாலும் அறியக் கூடிய அனைத்து விதமான ஞானத்தையும் ஒருவருக்கு கொடுத்து விடும்.
பிரான் அருள் உண்டு எனில் உண்டு நல் செல்வம்\nபிரான் அருள் உண்டு எனில் உண்டு நல் ஞானம்\nபிரான் அருளில் பெரும் தன்மையும் உண்டு\nபிரான் அருளால் பெரும் தெய்வமும் ஆமே
அனைத்திற்கும் தலைவனாகிய இறைவனின் திருவருள் ஒருவருக்கு இருக்கின்றது என்றால் அவருக்கு தருமத்தினால் வருகின்ற அனைத்து விதமான செல்வங்களும், உண்மை அறிவாகிய பேரறிவு ஞானமும் கிடைக்கும். இறைவனின் திருவருளில் ஞானம் கிடைக்கப் பெற்ற அவருக்கு இந்த பிறவியிலேயே மாபெரும் இறை தன்மையை கிடைக்கப் பெற்று அதன் பிறகு பிறவி இல்லாத நிலையில் மாபெரும் இறைவனாகவே அவரும் ஆகிவிடுவார்.
சித்தம் சிவம் ஆக செய் தவம் வேண்டா ஆல்\nசித்தம் சிவ ஆனந்தம் சேர்ந்தோர் அற உண்டால்\nசித்தம் சிவம் ஆகவே சித்தி முத்தி ஆம்\nசித்தம் சிவம் ஆதல் செய் தவ பேறே
அறிவு சிவமாகவே ஆகுவதற்கு உடலால் செய்கின்ற தவ வழி முறைகள் எதுவும் வேண்டாம் ஆதலால் அறிவினால் இறைவனை எண்ணிக்கொண்டு இருந்தாலே போதும். இது போல இறைவனை எண்ணிக் கொண்டு இருப்பதனால் அறிவு சிவமாகி பேரின்பத்தை அடைந்தவர்கள் அனைத்தையும் விட்டு விலகி இருப்பதனாலேயே அடைந்தார்கள். அதன் விளைவாக அறிவு சிவமாகவே ஆகி விடும் போது அதனால் கிடைக்கின்ற இறை அருளே முக்தியாகவும் இருக்கின்றது. இவ்வாறு அறிவு சிவமாகவே ஆகுவது இறைவனை பற்றி மட்டுமே எண்ணிக் கொண்டே இருக்கின்ற தவத்தின் பலனால் ஆகும்.
பழுக்கின்ற ஆறும் பழம் உண்ணும் ஆறும்\nகுழ கன்று துள்ளி அக் கோணியை புக்கு ஆல்\nகுழ கன்று கொட்டிலில் கட்ட வல்லார்க்கு உள்\nஇழுக்காது நெஞ்சத்து இட ஒன்றும் ஆமே
தவத்தில் மேன்மை நிலையை அடைகின்ற வழி முறையும் அந்த தவத்தின் பலன்களை அனுபவிக்கின்ற வழி முறையும் இளங் கன்று போல ஆசைகளின் வழியே துள்ளி குதிக்கின்ற மனதை உடலாகிய கோணிப் பைக்குள் உள்ளே புகுந்து இருக்கும் படி வைத்து ஆசைகள் இல்லாமல் இறைவனை மட்டுமே நினைக்கும் படி கட்டி வைக்க முடிந்தவர்களுக்கு, தமக்கு உள்ளே அடங்கி இருக்கின்ற மனது மறுபடியும் ஆசைகள் பற்றுக்களின் வழியே இழுத்துக் கொண்டு போகாமல், தமது நெஞ்சத்திற்குள் இறைவன் இருக்கின்ற இடத்திலேயே அவனோடு சேர்ந்து இருக்கும்.
படர் சடை மா தவம் பற்றிய பத்தர்க்கு\nஇடர் அடையா வண்ணம் ஈசன் அருளும்\nவிடர் அடை செய்தவர் மெய் தவம் நோக்கில்\nஉடர் அடை செய்வது ஒரு உன்மத்தம் ஆமே
படர்ந்து விரிந்த சடையைக் கொண்டு மாபெரும் தவத்தைக் கொண்டவனாக இருக்கின்ற இறைவனை உறுதியாக பற்றிக் கொண்ட பக்தர்களுக்கு அவர்களது வாழ்வில் எந்த விதமான துன்பங்களும் வந்து சேராத படி இறைவன் அருளுவான். அப்படி இல்லாமல் தாம் செய்ய வேண்டிய கடமைகளைத் துறந்து தவம் செய்கின்றோம் என்று காட்டிற்குள் வீற்றிருந்து முயற்சி செய்கின்றவர்களின் உண்மையான தவத் தன்மை என்னவென்று பார்த்தால் அவர்கள் தவத்திற்கான உடல் அடையாளங்களை மட்டுமே கடை பிடித்துக் கொண்டு செய்வதால் அது தவம் ஆகாது. அது ஒரு விதமான பித்துத் (புத்தி கெட்ட) தன்மையே ஆகும்.
இலை தொட்டு பூ பறித்து எந்தைக்கு என்று எண்ணி\nமலர் தொட்டு கண்டேன் வரும் பலன் காண் என்று\nதலை கெட்ட நூல் கண்டு தாழ்ந்தேன் என் உள்ளம்\nதலை தொட்டு கண்டேன் தவம் கண்ட ஆறே
பூச்செடிகளில் உள்ள இலைகளை தொட்டு அதில் மலர்ந்து இருக்கின்ற பூக்களை பறித்து எடுத்து எமது தந்தையாகிய இறைவனுக்கு சாற்ற வேண்டும் என்று எண்ணிக் கொண்டு மலர்களை கோர்த்து மாலையாக்கி சாற்றி அதனால் கிடைக்கின்ற பலனை பார்க்கலாம் என்று எதிர் பார்த்துக் கொண்டு இருந்தேன். எந்த பலனும் கிடைக்காத போது ஏன் என்று ஆராய்ந்து பார்த்தால் உண்மை இல்லாத தவறான கருத்துக்களை சொல்லுகின்ற நூல்களில் உள்ளதை கண்டு அதன் படி செய்து இப்படி தாழ்ந்து விட்டேன் என்று உணர்ந்து கொண்டேன். அப்போது எனது உள்ளத்திற்குள்ளே வீற்றிருக்கின்ற இறைவனின் அருளால் தலை உச்சியில் இருக்கின்ற பேரொளியாகிய இறை சக்தியை தொட்டு அடைந்து தவத்தை காணுக்கின்ற வழி முறை இதுவே என்று கண்டு உணர்ந்து கொண்டேன்.
ஒத்து மிகவும் நின்றானை உரைப்பது\nபத்தி கொடுக்கும் பணிந்து அடியார் தொழ\nமுத்தி கொடுக்கும் முனிவன் எனும் பதம்\nசத்து ஆன செய்வது தான் தவம் தானே
தம்முடைய பக்குவத்திற்கு இணையாக கூடவே இருந்தாலும் பேரான்மாவாக மிகுந்து தம்மோடு சேர்ந்தே நிற்கின்றவனாகிய இறைவனின் புகழ்களை தாம் போற்றி உரைப்பது பக்தியை கொடுக்கும். அதனுடன் பணிவும் சேர்ந்து அடியவர்கள் இறைவனை தொழும் போது முனிவன் என்கின்ற பக்குவத்தில் தாம் செய்கின்ற சாதகத்தை இறை சக்தியோடு சிறப்பாக செய்வது முக்தியை கொடுப்பதற்கு காரணமாகிய தவத்தை தானாகவே கொடுக்கும்.
மனத்து இடை நின்ற மதி வாள் உருவி\nஇனத்து இடை நீக்கி இரண்டு அற ஈர்ந்து\nபுனத்து இடை நஞ்சையும் போக மறித்தால்\nதவத்து இடை ஆறு ஒளி தன் ஒளி ஆமே
மனதிற்கு நடுவில் நிற்கின்ற அறிவு வடிவான இறைவனின் ஞானமாகிய வாளினை தமது தவத்தின் வழியாக உருவி எடுத்து தம்மை சூழ்ந்து இருக்கின்ற பந்த பாசங்களாகிய தளைகளையெல்லாம் அறுத்து நீக்கி, தாமும் இறைவனும் வேறு வேறு என்கின்ற இருமைத் தத்துவத்தை அறுத்து, இறைவனோடு ஒன்றாக சேர்ந்து, எவ்வளவு நீர் இருந்தாலும் அதற்கு நடுவில் ஒரு துளி நஞ்சை விட்டாலும் மொத்த நீரும் விஷமாகி விடுவது போல ஆசைகள் இல்லாத மனதில் ஒரு சிறு ஆசையும் இனி சேர்ந்து விடாமல் போகும் படி தடுத்து நிறுத்தினால், தாம் செய்து வருகின்ற தவத்தின் மேன்மை பெற்ற நிலையில் தமக்குள் இருக்கும் ஆறு ஆதாரங்களாகிய ஒளிகளின் மூலம் ஏறிச் சென்று, ஏழாவது சக்கரமாகிய சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் பேரொளியாகிய இறைவனாகவே தமது ஒளியும் ஆகி விடும்.
மனத்து உறை மா கடல் ஏழும் கை நீங்கி\nதவத்து இடை ஆளர் தம் சர்வத்து வந்தார்\nபவத்து இடை ஆளர் அவர் பணி கேட்கில்\nமுகத்து இடை நந்தியை முந்தலும் ஆமே
மனதில் வீற்றிருக்கின்ற மாபெரும் கடலாகிய மாயை, காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன் ஆகிய ஏழு விதமான மாயைகளாகிய குற்றங்களும் நீங்கி போகும் படி தாம் செய்கின்ற தவத்தில் தகுதி பெற்றவர்கள் தமது தவத்தில் முழுமை பெற்று வந்தார்கள். அவ்வாறு வந்தவர்களிடம் வாழ்க்கையின் நடுவில் சிக்கிக் கொண்டு தவம் செய்ய முயற்சி செய்கின்றவர்கள் அவர்கள் செய்த தொண்டு என்ன விதம் என்பதை கேட்டுத் தெளிந்து அதை கடை பிடித்து தாமும் தவம் புரிந்தால் தங்களின் முகத்தின் நடுவில் குருநாதராகிய இறைவனை தரிசிக்கும் நிலையை பெறுவார்கள்.
கூடி தவம் செய்து கண்டேன் குரை கழல்\nதேடி தவம் செய்து கண்டேன் சிவ கதி\nவாடி தவம் செய்வது ஏதம் இவை களைந்து\nஊடில் பல உலகோர் எத் தவம் ஆமே
மனம் ஒன்று கூடி தவம் செய்து இறைவனின் பேரழகு வாய்ந்த திருவடிகளை தரிசித்தேன். அவரை அடைய வேண்டும் என்று எமக்குள்ளே தேடி தவம் செய்து கண்டு சிவனின் திருவடியே சரணாகதியாக அடைந்தேன். இவ்வாறு மனம் ஒன்று படாமலும் இறைவனை அடைய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலும் உடலை வருத்திக் கொண்டும் வெறும் உலக ஆசைகளுக்காகவும் தவம் செய்வது குற்றமாகும். இவைகளை எல்லாம் நீக்கி விட்டு தவம் செய்யாமல் தமக்குள்ளே ஒன்றுக்கொன்று மாறுபட்ட சிந்தனைகளால் குழப்பிக் கொண்டு பல உலகத்தவர்கள் செய்கின்றதெல்லாம் எந்த தவம் ஆகும்? ஆகாது.
விளைவு அறிவார் பண்டை மெய் தவம் செய்வார்\nவிளைவு அறிவார் பண்டை மெய் உரை செய்வார்\nவிளைவு அறிவார் பண்டை மெய் அறம் செய்வார்\nவிளைவு அறிவார் விண்ணின் மண்ணின் மிக்காரே
தவத்தினால் கிடைக்கும் பயன் இது என்பதை அறிந்து உணர்ந்தவர்களே ஆதிகாலத்தில் இருந்து உண்மையான தவத்தை செய்கின்றார்கள். தவத்தினால் கிடைக்கும் பயனை அறிந்து உணர்ந்து கொண்டவர்கள் அந்த பயனை மற்றவர்களும் பெறுவதற்காக தாம் அறிந்து கொண்ட தவத்தை செய்யும் வழிமுறைகளை தகுதியானவர்களும் அறிந்து கொள்ளும் படி காட்டிக் கொடுக்கின்றார்கள். இப்படி மற்றவர்களும் பயன் பெற வழி வகுத்துக் கொடுத்ததினால் உண்மையான தர்மத்தை செய்தவர்கள் ஆகின்றார்கள். ஆகவே இவர்களே விண்ணுலகில் இருக்கும் தேவர்களுக்கும் மண்ணுலகில் இருக்கின்ற உயிர்களுக்கும் உயர்ந்தவர்களாக இருக்கின்றார்கள்.
கத்தவும் வேண்டாம் கருத்து அறிந்து ஆறினால்\nசத்தமும் வேண்டாம் சமாதியை கூடினால்\nசுத்தமும் வேண்டாம் துடக்கு அற்று நிற்றல் ஆல்\nசித்தமும் வேண்டாம் செயல் அற்று இருக்கிலே
மாயை நீங்கிய உண்மையை அறிந்து மனம் அமைதி அடைந்து விட்டால் மந்திரங்களை அசபையாகவோ உரக்கவோ சொல்லி செபிக்க வேண்டியது இல்லை. சமாதி நிலையை அடைந்து விட்டால் எந்த விதமான எண்ணங்களும் இருக்காது. உள்ளுக்குள் எந்த விதமான அழுக்குகளும் இல்லாமல் நிற்கின்ற நிலையை அடைந்து விட்டால் வெளிப்புற சுத்தங்கள் எதுவும் தேவை இல்லை. சிந்தனை செய்வதற்கு எதுவுமே தேவை இருக்காது செயலே இல்லாமல் இருக்கின்ற நிலையை அடைந்து விட்டதால்.
ஓதலும் வேண்டாம் உயிர்க்கு உயிர் உள் உற்றால்\nகாதலும் வேண்டாம் மெய் காயம் இடம் கண்டால்\nசாதலும் வேண்டாம் சமாதியை கூடினால்\nபோதலும் வேண்டாம் புலன் வழி போகார்க்கே
தங்களின் உயிருக்கு உயிராக உள்ளுக்குள் இருக்கின்ற இறைவனை உணர்ந்து அடைந்து விட்டால் மந்திரங்களை ஓத வேண்டியது இல்லை. அரியதான பேருண்மையாகிய சிவப் பரம்பொருள் தங்களின் உடலையே கோயிலாக ஏற்றுக் கொண்டு வீற்றிருந்தால் எந்த விதமான தேவைகளும் இல்லை. சமாதி நிலையை கைவரப் பெற்று விட்டால் உடலுக்கு அழிவு என்பதே இருக்காது. ஐந்து புலன்களும் காட்டுகின்ற வழிகளில் போகாமல் அவற்றை தன் இஷ்டத்திற்கு மாற்றி இருப்பவர்களுக்கு இறைவனை தேடி எங்கும் போக வேண்டியது இல்லை.
தவம் வேண்டும் ஞானம் தலை பட வேண்டில்\nதவம் வேண்டாம் ஞான சாமாதி கை கூடில்\nதவம் வேண்டாம் அச் சக சன் மார்க்கத்தோர்க்கு\nதவம் வேண்டாம் மாற்றம் தனை அறியாரே
உண்மை ஞானம் என்பது சித்தியாக வேண்டும் என்றால் அதற்கு தவம் செய்ய வேண்டும். உண்மை ஞானமும் சமாதி நிலையும் கை கூடப் பெற்றவர்களுக்கும் சன் மார்க்கம் சக மார்க்கம் ஆகிய மார்க்கங்களை கடை பிடிப்பவர்களுக்கும் மாற்றமே இல்லாத மேன்மையான சமாதி நிலையை அடைந்து விட்டவர்களுக்கும் எந்த விதமான தவ நிலையும் வேண்டாம்.
சாத்திரம் ஒதும் சதிர்களை விட்டு நீர்\nமாத்திரை போது மறித்து உள்ளே நோக்குமின்\nபார்த்த தவ பார்வை பசு மரத்து ஆணி போல்\nஆர்த்த பிறவி அகல விட்டு ஓடுமே
சாத்திரங்களை படித்து விட்டு அதன் பெருமைகளையே பேசித் திரிகின்றதை விட்டு விடுங்கள் நீங்கள். ஒரு கண நேரமாவது மூச்சுக்காற்றை தடுத்து நிறுத்தி தமக்குள்ளே உற்றுப் பாருங்கள். அப்படி பார்த்த அந்த தவ பார்வையானது பசுமையான மரத்தில் அடித்த ஆணி போல உறுதியாக நினைவில் நின்று போராடுகின்ற கடினமான பிறவிகள் அனைத்தையும் தம்மை விட்டு விலகி ஓடி விடும்.
அமைச்சரும் ஆனை குழாமும் அரசும்\nபகைத்து எழு பூசல் உள் பட்டு அந் நடுவே\nஅமைத்தது ஓர் ஞானமும் ஆக்கமும் நோக்கி\nஇமைத்து அழியாது இருப்பார் அவர் தாமே
நுண்ணறிவு மிக்க அமைச்சர்களைக் கொண்டு வலிமை மிக்க யானைப் படைகளுடன் உயர்ந்த பேரரசர்களாக இருந்தாலும் ஒரு பகை நாட்டு அரசன் அவர்கள் மேல் கொண்ட விரோதத்தால் எழுகின்ற போருக்கு உள்ளே அகப் பட்டுக் கொண்டு அழிந்து போகின்றார்கள். அப்படி அழிகின்றவர்களுக்கு நடுவில் இறைவன் தமது மாபெரும் கருணையினால் வைத்து அருளிய ஒரு உண்மை ஞானத்தையும் அதனால் கிடைக்கின்ற முக்தி பேறையும் குறிக்கோளாகக் கொண்டு ஒரு கணப் பொழுதும் இறைவனை மறக்காமல் தவ நிலையில் இருந்து எப்போதும் அழிந்து போகாத நிலையில் இருப்பவர்களே தவசிகள் ஆவார்கள்.
பின் எய்த வைத்தது ஓர் இன்ப பிறப்பினை\nமுன் எய்த வைத்த முதல் அவன் எம் இறை\nதன் எய்தும் காலத்து தானே வெளிப்படும்\nமன் எய்த வைத்த மனம் அது தானே
தவ நிலையை அடைந்த பிறகு அதில் மேன்மை நிலையை அடைய வைத்தது ஒரு பேரின்பத்தைக் கொண்ட பிறவியாகும். இந்த பிறவியை எடுப்பதற்கு முன்பு இருந்தே ஒவ்வொரு பிறவியிலும் இந்த நிலையை அடைவதற்கான வழி முறைகளை வைத்து அருளியது ஆதி முதல்வனாகிய எமது இறைவனாகும். தாம் இறைவனாகவே இருக்கின்றோம் என்பதை எமது ஆன்மா உணருகின்ற காலத்தில் அவன் தானாகவே உள்ளிருந்து வெளிப்பட்டு அருள்வான். அவ்வாறு இறைவன் வெளிப்படும் நிலையை அடைய வைத்தது தவ நிலையில் உறுதியாக இருக்கின்ற மனமாகும்.
கரந்தும் கரந்து இலன் கண் அகத்து ஒன்றான்\nபரந்த சடையன் பசும் பொன் நிறத்தன்\nஅரும் தவர்க்கு அல்லால் அணுகலும் ஆகான்\nவிரைந்து தொழப்படும் வெண் மதியானே
மாயையினால் மறைந்து இருந்தாலும் மாயையை வென்ற தவத்தோர்களுக்கு மறைந்து இல்லாமல் இருப்பவன் அவன் கண்ணிற்கு உள்ளே ஒன்றி இல்லாமல் மனதோடு ஒன்றி இருக்கின்ற இறைவன். அவன் அருமையான தவத்தை செய்தவர்களுக்கு அல்லாமல் வேறு யாராலும் நெருங்கி வருவதற்கு முடியாதவனாக இருக்கின்றான். அப்படி அருமையான தவத்தை செய்து மனதோடு ஒன்றி இருக்கின்ற இறைவனை தரிசித்தால் அவன் பரந்து விரிந்த சடையை அணிந்து இருப்பவனாகவும் பசுமையான பொன்னைப் போன்ற பிரகாசமான நிறத்தை உடையவனாகவும் கண்டவுடன் போற்றி வணங்கப்படும் பெருமைக்கு உரியவனாகவும் வெண்ணிற நிலவை தலையில் சூடி இருக்கின்றவனாகவும் இருக்கின்றான்.
இருந்து வருந்தி எழில் தவம் செய்யும்\nபெரும் தன்மை ஆளரை பேதிக்க என்றே\nஇருந்து இந்திரனே எவரே வரினும்\nதிருந்தும் தன் சிந்தை சிவன் அவன் பாலே
தியானத்தில் வீற்றிருந்து தமது உடலை வருத்திக் கொண்டு அருமையான தவத்தை செய்கின்ற தவசிகள் பெருமை மிக்க தன்மையை கொண்டவர்கள் ஆவார்கள். அவர்களின் தவ நிலையை கலைக்க வேண்டும் என்று அவர்கள் இருக்கின்ற இடத்திற்கு தேவர்களின் தலைவனாகிய இந்திரனே ஆனாலும் அல்லது அவரை விட வலிமை பெற்ற யார் வந்து முயற்சி செய்தாலும் எதனாலும் மாறாத பண்பட்ட மேன்மையான அவர்களின் சிந்தையானது சிவப் பரம்பொருளாகிய இறைவனின் மேல் மட்டுமே இருக்கும்.
பிறப்பு அறியார் பல பிச்சை செய் மாந்தர்\nசிறப்போடு வேண்டிய செல்வம் பெறுவர்\nமறப்பு இலர் ஆகிய மா தவத்தோர்கள்\nபிறப்பினை நீக்கும் பெருமை பெற்றாரே
பிறவி எதற்காக எடுத்து வந்தோம் என்பதை அறியாமல் இந்த உலகத்தில் உயிர் வாழ்வதற்கு தேவையான பலவற்றை பிச்சையாகவே பெற்று வாழ்கின்ற மனிதர்கள் மாயையில் இருப்பதால் தங்களின் உலக வாழ்க்கைக்கு சிறப்பானது என்று ஆசைப்பட்டு வேண்டிய செல்வத்தையே இறைவனிடம் கேட்டு பெறுகின்றார்கள். ஆனால் இறைவனின் திருவருளால் மாயை இல்லாதவராகிய மாபெரும் தவத்தை செய்தவர்கள் இனி பிறவி எடுக்கின்ற நிலையையே நீக்கி விடுகின்ற பெருமையை பெற்றவர்கள் ஆவார்கள்.
எம் ஆருயிரும் இரு நில தோற்றமும்\nசெம் மா தவத்தின் செயலின் பெருமையும்\nஅம் மாயவன் அருள் பெற்ற தவற்கு அல்லாது\nஇம் மா தவத்தின் இயல்பு அறியாரே
எமது உடல் உயிரோடு சேர்ந்து இருக்கின்ற ஆன்மா மற்றும் யாம் இருக்கின்ற உலகம் ஆகிய இரண்டு இடத்தின் மூலத்தையும் செம்மையாகிய மாபெரும் தவத்தினை செய்கின்ற செயலின் பெருமையையும் அந்த மாயவனாக இருக்கின்ற இறைவனின் திருவருளை பெற்று தவ நிலையில் இருப்பவர்களைத் தவிர இந்த மாபெரும் தவத்தின் இயல்பை வேறு எவரும் அறிய மாட்டார்கள்.
ஒடுங்கி நிலை பெற்ற உத்தமர் உள்ளம்\nநடுங்குவது இல்லை நமனும் அங்கு இல்லை\nஇடும்பையும் இல்லை இரா பகல் இல்லை\nகடும் பசி இல்லை கற்று விட்டோர்க்கே
ஆசைகளும் புலன்களும் ஒன்பது வாயில்களின் வழி நடக்கின்ற கர்மங்களும் ஒடுங்கி இறைவனை பற்றிய நினைவிலேயே இருக்கின்ற நிலையை பெற்ற உத்தமர்களான தவசிகளின் உள்ளமானது எதற்காகவும் அச்சப் படுவது இல்லை. இறப்பு என்பது அவருக்கு இல்லை. துன்பம் என்பது அவருக்கு இல்லை. இரவு பகல் எனும் கால வேறுபாடுகள் அவருக்கு இல்லை. கடுமையான பசி தாகம் ஆகிய உணர்வுகள் அவருக்கு இல்லை. இவை எல்லாம் உலக அறிவை கற்று அதை விட்டு விட்டு உண்மை அறிவை பற்றி இருக்கின்ற தவசிகளின் நிலையாகும்.
தூம்பு துறந்தன ஒன்பது வாய்தலும்\nஆம்பல் குழியில் அகம் சுழி பட்டது\nவேம்பு ஏறி நோக்கின் என் மீகாமன் கூறையில்\nகூம்பு ஏறி கோயில் பழுக்கின்ற ஆறே
இதுவரை துன்பக் குழியில் ஆன்மாவனது தனது கர்மங்களை அனுபவிக்கின்ற வாழ்க்கை சுழலிலேயே அகப் பட்டுக் கொண்டு இருந்தது. அனைத்தையும் விட்டு விலகி துறவு எனும் தவ நிலையில் மேன்மை நிலையை அடையும் போது தமது உடலில் உள்ள இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு நாசிகள், வாய், கருவாய், எருவாய் ஆகிய ஒன்பது துளைகளாகிய கர்மங்களின் செயல்களை துறந்து விடுகின்றது. அதன் பிறகு பிறகு சுழுமுனை நாடியின் வழியே குண்டலினி சக்தியானது மேல் நோக்கி ஏறி பார்க்கும் போது அங்கே அவரது ஆன்மாவை காக்கின்றவனாகிய இறைவனை அவரது ஆன்மாவை மூடியிருந்த திரையை விலக்கிப் பார்த்து சுழுமுனையின் உச்சித் துளைக்கு மேலே இருக்கின்ற சகஸ்ரதளத்தில் ஏறி அங்கே கோயில் கொண்டு வீற்றிருந்து முக்தியை அளிக்கின்ற பேரோளியாகிய இறைவனை அடைகின்ற வழி அவருக்கு கிடைத்தது.
அகன்றார் வழி முதல் ஆதி பிரானும்\nஇவன் தான் என நின்று எளியனும் அல்லன்\nசிவன் தான் பல பல சீவனும் ஆகும்\nநயன்று தான் வரும் வழி நாம் அறியோமே
அனைத்தையும் விட்டு விலகி நிற்கின்ற துறவிகள் தாம் செல்லுகின்ற வழியில் மேன்மை நிலையை அடைந்த அந்த கணம் முதலே ஆதியிலிருந்தே அனைத்திற்கும் தலைவனாக இருக்கின்ற இறைவன் இந்த துறவியே தாம் தான் என்று துறவியாகவே நின்றாலும் ஜீவாத்மா போன்ற எளியவன் இல்லை. பரமாத்மாவாகவே இருக்கின்றான். அந்த பரமாத்மாவாகிய சிவனே தான் பல பல விதமான ஜீவாத்மாக்களாகவும் இருக்கின்றான். ஆனாலும் அவன் துறவிகளிடத்தில் விரும்பி தாமே வருகின்ற வழி முறையை நாம் அறிவது இல்லை.
நாகமும் ஒன்று படம் ஐந்தின் ஆல் அது\nபோகம் ஆழ் புற்றில் பொருந்தி நிறைந்தது\nஆகம் இரண்டும் படம் விரித்து ஆட்டு ஒழிந்து\nஏக படம் செய்து உடம்பு இடல் ஆமே
உயிர்களின் உடல் ஒன்று அதன் உணர்வுகள் பார்த்தல் கேட்டல் சுவைத்தல் மணத்தல் உணர்தல் ஆகிய ஐந்து விதமான புலன்களால் கட்டி இழுக்கப்பட்டு அதன் மூலம் உடல் அனுபவிக்கின்ற இன்பத்திலேயே ஆழ்ந்து ஆசைகளாகிய புற்றில் பொருந்தி அதிலேயே வாழ்க்கை முழுவதும் நிறைந்து இருக்கின்றது. அதனால் தூல உடல் சூட்சும மனம் ஆகிய இரண்டும் தமது ஆசைகளின் வழியே படம் விரித்து ஆடுகின்ற பாம்பைப் போல ஆடி வாழ்க்கை ஒழிந்து போகின்றது. இதை மாற்ற ஐந்து புலன்களையும் ஒரே உடலாகிய மனம் அடக்கி ஆளும் படி செய்து அதை தமது உடலின் கட்டுப் பாட்டில் வைத்து தியானத்தில் வீற்றிருக்கலாம். இந்த நிலையே துறவு ஆகும்.
மேல் துறந்து அண்ணல் விளங்கு ஒளி கூறுவன்\nநாள் துறந்தார்க்கு அவன் நண்பன் அவா வலி\nகார் துறந்தார்க்கு அவன் கண் நுதல் ஆய் நிற்கும்\nபார் துறந்தார்க்கே பதம் செய்யல் ஆமே
துறவின் சமாதியாகிய மேலான நிலையில் தான் எனும் உணர்வை விட்டு விலகி இருக்கின்ற துறவிகளுக்கு அனைத்தையும் காத்து அருளுபவனாகிய இறைவன் உண்மையை காண்பித்து உணர வைக்கின்ற ஒளியாக உள்ளுக்குள் இருந்து சொல்லிக் கொடுத்து வழி நடத்துவான். அதன் படியே கடை பிடித்து தமது வாழ்நாளை விட்டு விலகி இருக்கின்ற துறவிகளுக்கு அந்த இறைவனே உற்ற நண்பனாக இருப்பான். ஆசைகள் எனும் வலிமை மிக்க மாய இருளை விட்டு விலகி இருக்கின்ற துறவிகளுக்கு அந்த இறைவன் ஞானமாகிய நெற்றிக் கண்ணாகவே நின்று அருளுவான். அவன் காட்டிய ஞான வழியில் உலகத்தையும் உலக பற்றுக்களையும் விட்டு விலகி இருக்கின்ற துறவிகளுக்கே இறை நிலையை அடையும் பக்குவத்தை செய்து கொடுத்து அருளுவான் இறைவன்.
உழவன் உழ உழ வானம் வழங்க\nஉழவன் உழவினில் பூத்த குவளை\nஉழவன் உழத்தியர் கண் ஒக்கும் என்று இட்டு\nஉழவன் அதனை உழவு ஒழிந்தானே
இறைவன் அருளிய துறவு முறை கொள்கையை கடைபிடிக்கின்ற உழவனாகிய துறவி தாம் கடைபிடிக்கின்ற கொள்கையில் சாதகம் செய்ய செய்ய ஆகாயத்திலிருந்து இறைவனின் அருளானது மழை போல் அவருக்கு கிடைக்கின்றது. அப்போது உழவனாகிய துறவி செய்த உழவாகிய சாதனையில் இறைவனது அருளால் கிடைத்த பக்குவத்தில் மேல் நிலைக்கு செல்ல செல்ல அவரது குண்டலினி சக்தியானது சகஸ்ரதளத்திற்கு ஏறிச் சென்று அங்கே உள்ள ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரை மலரச் செய்கின்றது. அதன் பிறகு உழவனாகிய துறவி தமது சகஸ்ரதளத்தில் தரிசித்த இறை சக்திக்கு ஒப்பாக தமது பக்குவம் இருக்கின்றது என்று அதை தமது சமாதி நிலைக்கு தொடக்கமாக கொண்டு தொடங்கி அந்த சக்தியைக் கொண்டே தான் செய்கின்ற கொள்கையை விட்டு தான் என்கின்ற உணர்வே இல்லாமல் அனைத்தையும் விட்டு விலகி சமாதி நிலையிலேயே வீற்றிருப்பார்.
கேடும் கடமையும் கேட்டு வந்த ஐவரும்\nநாடி வளைந்த அது நான் கடைவேன் அலன்\nஆடல் விடை உடை அண்ணல் திரு அடி\nகூடும் தவம் செய்த கொள்கை தந்தானே
பிறவிக்கு காரணமாக இருக்கின்ற வினைகளையும் அந்த வினைகளை தீர்ப்பதற்கு செய்ய வேண்டிய கடமைகளையும் இறைவனிடம் பிறவி எடுப்பதற்கு முன்பே கேட்டுக் கொண்டு பிறவியோடு கூட வந்த ஐந்து புலன்களும் அதனதன் கடமையை செய்வதற்கு ஏற்றபடி ஆசைகளின் வழியே வளைந்து என்னை நடக்க வைக்கின்றதை யான் கடைபிடிப்பது இல்லை. தில்லையில் ஆடுகின்ற விடை வாகனமாகிய நந்தியை உடையவனாகிய இறைவனின் மதிப்பிற்குரிய திருவடிகளை சென்று அடைகின்ற தவமுறையான இந்த செயலை செய்கின்ற கொள்கையை இறைவன் எமக்குத் தந்து அருளினான்.
நெறியை படைத்தான் நெருஞ்சில் படைத்தான்\nநெறியில் வழுவில் நெருஞ்சில் முள் பாயும்\nநெறியில் வழுவாது இயங்க வல்லார்க்கு\nநெறியில் நெருஞ்சில் முள் பாய இல்லாவே
அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற துறவறத்தை மேற்கொள்ளுபவர்கள் கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகளை படைத்த இறைவனே அந்த வழிமுறைகளை சரியாக கடைபிடிக்காத போது அதை உணர்த்துவதற்கு கடினமான முள்ளை போன்ற துன்பங்களையும் படைத்தான். கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகளில் இருந்து சிறிது விலகி நடந்தாலும் அந்த கடினமான முள் போன்ற துன்பங்களும் பாய்ந்து சாதகருக்கு அவர்கள் வழி தவறி செல்வதை நினைவூட்டும். சிறுதளவும் கூட தாம் கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகளில் இருந்து விலகி விடாமல் செயல் பட முடிந்தவர்களுக்கு அவர்கள் கடை படிக்கின்ற வழிமுறைகளில் ஒரு பொழுதும் கடினமான முள்கள் போன்ற துன்பங்கள் பாய்வது இருக்காது.
அறவன் பிறப்பு இலி யாரும் இல்லாதான்\nஉறைவது காட்ட அகம் உண்பது பிச்சை\nதுறவனும் கண்டீர் துறந்தவர் தம்மை\nபிறவி அறுத்திடும் பித்தன் கண்டீரே
அனைத்தையும் விட்டு விலகி இருப்பவனும், பிறப்பு என்பதே இல்லாதவனும், தனக்கு சொந்தமானவர்கள் என்று எவரும் இல்லாதவனும் ஆகிய இறைவன் தமக்குள்ளே வீற்றிருக்கின்ற இடத்தை உணர்வதற்கு உள்ளுக்குள்ளே இருக்கின்ற பொருளாகிய ஆன்மாவானது தமக்குள் ஆராய்ந்து அறிந்து உணர்ந்து கொள்ளுகின்ற ஞானத்தினால் தமக்குள் அனைத்தையும் துறந்து வீற்றிருக்கின்ற மாபெரும் துறவியாகிய இறைவனையும் பார்த்தீர்கள். அவனைப் போலவே அனைத்தையும் துறந்து இருக்கின்ற அடியவர்கள் தம்முடைய பிறவிகளை அறுத்து நீக்கிவிடும் இறைவனும் அவனே என்பதையும் துறவிகள் காண்பார்கள்.
பிறந்தும் இறந்தும் பல் பேதைமை ஆலே\nமறந்து மல இருள் நீங்க மறைந்து\nசிறந்த சிவன் அருள் சேர் பருவத்து\nதுறந்த உயிர்க்கு சுடர் ஒளி ஆமே
பல முறைகள் பிறவி எடுத்து எடுத்து இறக்கின்ற பிறவிச் சுழலில் இருந்து விடுதலை பெறுகின்ற அறிவு இல்லாததால் தனக்குள் இறைவன் இருப்பதையே மறந்து மாயையாகிய மலத்தின் இருளில் இருக்கின்றார்கள். அப்போது அவர்களை விட்டு அந்த இருளானது நீங்கி மறைந்து போகும் படி சிறப்பான இறைவனின் பேரருளை அவர்கள் அடைகின்ற காலத்தில் அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற துறவாகிய தவ நிலையில் இருக்கின்ற உயிர்களுக்கு இறைவனுடைய பேரருளானது பிரகாசமாக திகழ்கின்ற சுடர் ஒளியாக விளங்கும்.
இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கி\nதுறக்கும் தவம் கண்ட சோதி பிரானை\nமறப்பு இலர் ஆய் நித்தம் வாய் மொழிவார்களுக்கு\nஅற பதி காட்டும் அமரர் பிரானே
இறைவனின் திருவருளால் பெற்ற ஞானத்தின் மூலம் இறைவனை உணர்ந்து மும்மலங்களையும் அறுத்து இறப்பு பிறப்பு ஆகிய இரண்டு விதமான தன்மைகளும் நீங்கி விட அனைத்தையும் விட்டு விலகி நிற்கின்ற துறவாகிய தவ நிலையில் சாதகர் கண்ட ஜோதி மயமாகிய இறைவனை எப்போதும் மறந்து விடாமல் தமது வாயால் சொல்லுவதெல்லாம் இறைவனின் சொல்லாகவே சொல்லுபவர்களுக்கு தர்மம் இருக்கின்ற இடமாகிய சிவலோகத்தை காட்டி அருளுவான் அமரர்களின் தலைவனாகிய இறைவன்.
மேலை சொரூபங்கள் மூன்று மிகு சத்தி\nபாலித்த முத்திரை பற்றும் பர ஞானம்\nஆலித்த நாட்டமே ஞேயம் பகுத்து அற்ற\nமூல சொரூபன் மொழி ஞாதுருவனே
அனைத்திற்கும் மேலே இருக்கின்ற இறைவனின் சொரூபங்கள் ஆக இருக்கின்ற பார்க்கின்றவன், பார்க்கும் ஞானம், பார்க்கப்படும் பொருள் ஆகிய மூன்று விதமான தத்துவங்களுக்கும் மேலான சக்தியாகிய இறைவன் தம்முடைய திருவருளால் அருளிய இந்த மூன்று திரைகளையும் தெரிந்து கொள்ளும் பரம் பொருளின் பேரறிவு ஞானம் கிடைக்கப் பெறுவார். அந்த ஞானத்தின் மூலம் தமக்குள் ஆனந்த வடிவாக இருக்கின்ற சிவப் பரம்பொருளை பார்த்து உணர்ந்து அதுவே ஞானத்தால் பார்க்கப் படுகின்ற பொருள் பார்க்கின்றவன் என்று தனித்தனியாக பிரிந்து இருக்கின்ற நிலை இல்லாமல் போய் அனைத்திற்கும் மூலமாகிய இறைவனின் சொரூபமாக இருக்கின்ற பொருள் பார்க்கின்றவனாக இருக்கின்ற தாமே என்பதை உணர்ந்து கொள்ளுவார்கள்.
முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றின் பால்\nவைத்த கலை காலை நான் மடங்கால் மாற்றி\nஉய்த்த தவத்து அந்தத்து ஒண் குரு பாதத்தே\nபெத்தம் அறுத்தோர் பிறந்து இறவாரே
மூன்று திரைகளாகிய மாயையால் மூடியிருக்கின்ற பார்க்கின்றவன், பார்க்கும் ஞானம், பார்க்கப்படும் பொருள் ஆகிய மூன்றையும் மூடியிருக்கின்ற மாயை முடிந்து விடுவதற்கு இடகலை பிங்கலை சுழுமுனை ஆகிய மூன்று நாடிகளின் மூலம் இறைவன் பிறக்கும் போதே இயல்பாக வைத்து அருளிய மூச்சுக்காற்றின் போக்குவரத்தை இயல்பான கீழ் நிலையில் இருந்து நான்கு விரற்கடை அளவிற்கு மேல் நோக்கி மாற்றி உச்சியிலிருக்கும் சகஸ்ரரதளத்திற்கு கொண்டு சென்று சேர்த்து செய்கின்ற தவத்தில் முழுமை பெற்ற நிலையில் சாதகரோடு ஒன்றி இருக்கின்ற குருநாதராகிய இறைவனின் திருவடிகளைப் பெற்று பிறவிக்கு காரணமாகிய மூன்று மலங்களையும் அதை சார்ந்த அனைத்து பற்றுக்களையும் அறுத்து விட்டவர்கள் இனி பிறக்கவோ இறக்கவோ மாட்டார்கள்.
மோனம் கை வந்தோர்க்கு முத்தியும் கை கூடும்\nமோனம் கை வந்தோர்க்கு சித்தியும் உன் நிற்கும்\nமோனம் கை வந்து ஊமையாம் மொழி முற்றும் காண்\nமோனம் கை வந்து ஐங் கருமமும் உன்னுமே
பேச்சுகளும் எண்ணங்களும் அற்ற மோன நிலை கைகூடும் படி அடைந்தவர்களுக்கு முக்தி நிலையும் கை கூடும். அனைத்து விதமான சித்திகளும் அவர்களுக்குள் நிலைத்து நிற்கும். உடல் அசைவுகளால் பேசுகின்ற மொழி கூட அவர்களை விட்டு முழுவதும் நீங்கி விடுவதை அவர்கள் காணலாம். உலகத்தில் இறைவன் செய்கின்ற படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் ஆகிய ஐந்து விதமான தொழில்களையும் தமக்குள்ளேயே அவர்களால் உணர முடியும்.
காணாத கண் உடன் கேளாத கேள்வியும்\nகோணாத போதமும் கூடாத கூட்டமும்\nநாணாத நாணமும் நாத அந்த போதமும்\nகாண் ஆய் என வந்து காட்டினன் நந்தியே
இதுவரை இறைவனை கண்டு அறியாத ஊனக் கண்ணை மாற்றி காண வைக்கின்ற ஞானக் கண்ணையும் அதனுடன் இறைவன் என்று ஒருவர் இருப்பதையே அறியாமல் இருக்கின்ற நிலையை மாற்றுகின்ற அறிவையும் தன்னுடைய நிலையிலிருந்து எப்போதும் மாறாத ஞானத்தையும் இறைவனோடு தாம் சேர்ந்து இருக்கின்றோம் என்பதையே அறியாமல் இருந்த எண்ணத்தை மாற்றி அவனோடு சேர்ந்து இருப்பதையும் இறைவனைப் பற்றிக் கொள்ளாமல் உலகப் பற்றுக்களிலேயே இருந்த மனதை மாற்றி இறைவனை பற்றிக் கொள்வதையும் நாதத்தின் எல்லையாக இருக்கின்ற ஞானத்தையும் இதுவரை அறியாமல் இருக்கின்றாய் என்று கருணையோடு வந்து என்னை தடுத்து ஆட்கொண்டு காட்டி அறிய வைத்தான் குருநாதனாக வந்த இறைவன்.
முன்னை அறிவு அறியாத அம் மூடர் போல்\nபின்னை அறிவு அறியாமையை பேதித்தான்\nதன்னை அறிய பரன் ஆக்கி தன் சிவத்து\nஎன்னை அறிவித்து இருந்தனன் நந்தியே
இறைவனே குருவாக வருவதற்கு முன்பு அவனை அறிகின்ற அறிவை அறியாமல் பந்த பாசங்களில் சிக்கிக் கொண்டு மாயையிலேயே உழன்று கொண்டு இருக்கின்ற இந்த உலகத்து முட்டாள்களைப் போலவே யானும் இருந்தேன். என்னை தடுத்து ஆட்கொள்வதற்காக இறைவனே குருவாக வந்த பிறகு அவனை அறிந்து இருக்கின்ற ஞானத்தையும் அவனை அறியாமல் இருக்கின்ற அறியாமையையும் பிரித்து காட்டி அருளினான். அதன் பிறகு எனக்குள் இருக்கும் இறைவனை அறிந்து கொள்ளும் படி செய்து அவரைப் போலவே என்னையும் பரம்பொருளாக ஆக்கி தமது சிவத் தன்மையை யானும் அறிந்து கொள்ளும் படி செய்து என்னுடன் வீற்றிருந்தார் குருநாதராக வந்த இறைவன்.
வைச்சன ஆறு ஆறும் அகற்றியே வைத்து\nமெச்ச பரமன் தன் வியாத்தும் மேல் இட்டு\nநிச்சயம் ஆக சிவம் ஆக்கி நேயத்தால்\nஅச்சம் கெடுத்து என்னை ஆண்டனன் நந்தியே
பிறவி எடுக்கும் போது உடலில் இறைவன் வைத்து அருளிய முப்பத்து ஆறு தத்துவங்களையும் உடலிலிருந்து நீக்கி வைத்து அனைத்திற்கும் மேலான பொருள் என்று வியக்கத் தகுந்த பரம்பொருளாகிய இறைவன் தன்னை போலவே அனைத்திலும் வியாபித்து இருக்கின்ற மேலான நிலைக்கு என்னை கொண்டு வந்து உறுதியாக என்னை சிவப் பரம்பொருளாகவே ஆக்கி அளவில்லாத தம்முடைய அன்பினால் இனி பிறவி எடுத்து விடுவோமோ என்கின்ற எனது பயத்தை நீக்கி என்னை தமது அடிமையாக ஆக்கி ஆட்கொண்டு அருளினார் குருநாதராக வந்த இறைவன்.
தான் என்று அவன் என்று இரண்டு ஆகும் தத்துவம்\nதான் என்ற அவன் என்ற இரண்டும் தனில் கண்டு\nதான் என்ற பூவை அவன் அடி சாத்தினால்\nநான் என்று அவன் என்கை நல்லது ஒன்று அன்றே
தான் என்று தனியாகவும் இறைவன் என்று தனியாகவும் இரண்டு விதமாக பிரித்து வைத்து பார்க்கின்ற தத்துவமானது, தான் என்று எண்ணப்படுகின்ற பொருள் இறைவன் என்று எண்ணப்படுகின்ற பொருள் ஆகிய இரண்டையும் தமக்குள்ளேயே கண்டு உணர்ந்து, தான் என்று எண்ணப்படுகின்ற பொருளாகிய ஆன்மாவை ஒரு பூவாக பாவித்து தமக்குள் இருக்கின்ற இறைவனின் திருவடிகளில் அதை சாத்தி வணங்கித் தொழுதால், அடியவர் நான் என்று எதை எண்ணுகின்றாரோ அதை இறைவன் என்று உணர்வதே நல்லதான ஒன்றாக அன்றிலிருந்தே உணர்ந்து கொள்ளுவார்.
ஞேயத்தே நின்றோர்க்கு ஞான ஆதி நீங்கிடும்\nஞேயத்தில் ஞாது உரு ஞேயத்தில் வீடு ஆகும்\nஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை உற்றவர்\nஆயத்தின் நின்ற அறிவு அறிவோரே
ஞானத்தினால் பார்க்கப் படுகின்ற ஆன்மாவை சிவப் பரம்பொருளாக உணர்ந்து நின்றவர்களுக்கு தாமே சிவம் என்பதை உணர்கின்ற ஞானத்தை ஆராய்கின்ற அறிவு நீங்கி விடும். ஞானத்தினால் பார்க்கப் படுகின்ற ஆன்மாவில் சிவப் பரம்பொருளை பார்க்கின்ற உருவமே பார்க்கப்படுகின்ற பரம்பொருளில் முக்தி நிலை ஆகும். ஞானத்தினால் பார்க்கப் படுகின்ற ஆன்மாவாக உள்ள சிவப் பரம்பொருளில் பரம்பொருளாக இருக்கின்ற பரமாத்மாவோடு சேர்ந்து இருக்கின்ற அடியவர் கூட்டத்துடன் தாமும் சேர்ந்து நிற்கின்ற அறிவை அவர்கள் அறிந்து கொள்ளுவார்கள்.
நீஙகார சிவானநத நெயததெ நினறிடப\nபாஙகான பாசம படராப படரினு\nமாஙகார நீஙகி யதனிலை நிறகவெ\nநீஙகா வமுத நிலைபெற லாமெ
நீங்கார் (நீங்காமல்) சிவ (சிவப் பரம்பொருளின்) ஆனந்த (பேரானந்தத்தில்) நேயத்தே (தூய்மையான அன்பிலே) நின்றிட (நின்று இருப்பார்கள்) பாங்கு (அப்படி நிற்கின்ற பாவனை) ஆன (விட்டுவிடாமல் இருக்கும் போது) பாசம் (பாசத் தளைகள்) படரா (மூடி விடாமல் இருக்கும்) படரினும் (பிறகு உலக நன்மைக்காக செயல்கள் செய்யும் போது பாசம் வந்தால் கூட) ஆங்காரம் (நான் என்கின்ற அகங்காரம்) நீங்கி (நீங்கி விட்டதால்) அதன் (பாசத் தளைகளால் மறுபடியும் மாயையில் மூழ்கிவிடாத) நிலை (நிலையிலேயே) நிற்கவே (நிலைத்து நிற்பார்கள்) நீங்கா (அப்போது எப்போதும் நீங்காத) அமுத (சமாதி நிலையில் அமிழ்தத்தை பருகிக் கொண்டே பேரின்பத்தில் திளைத்து நிற்கின்ற) நிலை (நிலையை) பெறல் (அவர்களால் பெற) ஆமே (முடியும்).
மந்திரம் ஆவதும் மா மருந்து ஆவதும்\nதந்திரம் ஆவதும் தானங்கள் ஆவதும்\nசுந்தரம் ஆவதும் தூய் நெறி ஆவதும்\nஎந்தை பிரான் தன் இணை அடி தானே
அனைத்து விதமான மந்திரங்களாக இருப்பதும் அனைத்து விதமான நோய்களையும் தீர்க்கின்ற மாபெரும் மருந்தாக இருப்பதும் தாந்திரீகம் எனும் இறைவனை அடைவதற்கான வித்தைகளாக இருப்பதும் உலகத்தில் உள்ள அனைத்து விதமான தான தர்மங்களாக இருப்பதும் அழுக்கை நீக்கிய பேரழகாக இருப்பதும் இறைவனை அடைவதற்கு தூய்மையான வழி முறைகளாக இருப்பதும் எமது தந்தையும் அனைத்திற்கும் தலைவனும் ஆகிய இறைவனின் ஒன்றாக சேர்ந்தே இருக்கின்ற திருவடிகளே ஆகும்.
அடி சாரல் ஆம் அண்ணல் பாதம் இரண்டும்\nமுடி சார வைத்தனர் முன்னே முனிவர்\nபடி சார்ந்த இன்ப பழ அடி வெள்ளம்\nகுடி சார் நெறி கூடி நிற்பவர் கொள்கையே
இறைவனின் பாதங்கள் இரண்டையும் தமது தலையின் மேல் சேர்ந்து இருக்கும்படி வைத்து இறைவனின் திருவடிகளையே சார்ந்து இருக்கின்றார்கள் ஆதிகாலத்தில் முற்றும் துறந்த முனிவர்கள். பழம் பெரும் இறைவனின் அந்த திருவடிகளில் இருந்து அவர்கள் வெள்ளம் போல் பெற்ற அருளை உலக உயிர்களின் பக்குவத்துக்கு ஏற்றபடி படிப் படியாக அவர்களின் அனுபவிக்கும் படி படி கொடுக்கின்றார்கள் அவர்கள். இறைவனின் திருவடிகளை தங்களின் தலையில் குடி வைத்து அதையே சார்ந்து இருக்கின்ற வழிமுறையில் ஒன்றாக கூடி நிற்கின்ற அனைத்து முனிவர்களின் கொள்கையும் இதுவே ஆகும்.
வைத்தேன் அடி கண் மனத்தின் உள்ளே நான்\nபொய்த்தே எரியும் புலன் வழி போகாமல்\nஎய்த்தேன் உழலும் இரு வினை மாற்றிடும்\nமெய் தேன் அறிந்தேன் அவ் வேதத்தின் அந்தமே
இறைவனை திருவடிகளை எனது கண்களிலும் மனதிற்கு உள்ளேயும் யான் வைத்துக் கொண்டேன். அதனால் உண்மையை மறைத்து பொய்யான ஆசைகளையே அதிகமாக்குகின்ற ஐந்து புலன்களின் வழியே மனம் போய் விடாமல் ஆசைகளற்ற மேல் நிலைக்கு எடுத்து செல்லும். அதனால் பிறவிச் சுழலில் சுழன்று கொண்டே இருப்பதற்கு காரணமாகிய நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான வினைகளையும் மாற்றிடும் உண்மையான பேரின்பத்தைக் கொடுக்கின்ற தேனாக வேதங்களின் எல்லையாக இருக்கின்ற பரம் பொருளாகிய இறைவனை யான் அறிந்து கொண்டேன்.