classic
stringlengths 19
1.22k
| Description
stringlengths 5
2.28k
|
---|---|
முருகியல் கானல் அகன்கரை யாங்கண்\nகுருதினம் ஆர்க்கும் கொடுங்கழிச் சேர்ப்ப\nமருவி வரலுற வேண்டும்என் தோழி\nஉருவழி உன்நோய் கெட | நறுவிரை யுளதாகிய கானலையுடைய அகன்ற கரையின்கட் குருகினம் ஆராநின்ற கொடுங்கழிச் சேர்ப்பனே! பயின்று வருதலைச் செய்யவேண்டும்; என்றோழி மாமை நிறம் அழியாநின்ற உள்ளத்தின்கண் நோயொழிய. |
அணிபூங் கழிக்கானல் அற்றைநாள் போலான\nமணியெழில் மேனி மலர்பசப்பு ஊரத்\nதுணிகடல் சேர்ப்பன் துறந்தான்கொல் தோழி\nதணியும்எள் மென்தோள் வளை | அணிந்த பூக்களையுடைய கழிக்கானலின்கண் கண்ட அற்றைநாட் போலான்; மணியெழின் மேனியின்கண் மிக்க பசப்பேறும் வகை துணிகடற் சேர்ப்பன் எம்மை மிகவே துறந்தான் கொல்லோ! என் மென்தோள் வளைகள் நீங்கா நின்றன |
கறங்கு மணிநெடுந்தேர் கண்வாள் அறுப்பப்\nபிறங்கு மணல்மேல் அலவன் பரப்ப\nவறங்கூர் கடுங்கதிர் வல்விரைந்து நீங்க\nநிறங்கூரும் மாலை வரும் | ஒலிக்கு மணியையுடைய நெடுந்தேர் கண்டார் கண்ணினொளியை யறுப்ப, உயர்ந்த மணன்மேல் அலவன் பரப்ப, வெம்மை மிக்க கடிய வெயில் கடிதாக நீங்க, செக்கர் நிறமாக நிறமிக்க மாலைப்பொழுதின்கண் நங் காதலன் வரும். |
மயில்கொல் மடவாள்கொல் மாநீர்த் திரையுள்\nபயில்வதோர் தெய்வம்கொல் கேளீர் குயில்பயிரும்\nகன்னி இளஞாழல் பூம்பொழில் நோக்கிய\nகண்ணின் வருந்தும்என் நெஞ்சு | மயிலோ? மடவாளோ? மாநீர்த் திரையின்கண் பயின் றுறைவதோர் தெய்வங் கொல்லோ? கேளீரே! குயில்கள் கூவாநின்ற கன்னியிளஞாழற் பூம்பொழிலின்கண் அவரை நோக்கிய என் கண்ணினு மிக வருந்தாநின்ற தென் னெஞ்சு. |
பவளமும் முத்தும் பளிங்கும் விரைஇப்\nபுகழக் கொணர்ந்து புறவு அடுக்கும் முன்றில்\nதவழ்திரைச் சேர்ப்பன் வருவான்கொல் தோழி\nதிகழும் திருஅமர் மார்பு | பவளத்தினையும் முத்தினையும் பளிங்கினையும் கலந்து, பிறர் புகழக் கொண்டுவந்து, மனைசூழ்ந்த படப்பையையணைந்த முற்றத்தின்கண் வந்து வழங்குகின்ற திரையையுடைய சேர்ப்பன் விரைந்து வருவான் கொல்லோ? தோழி! முன்பு போலப் பொலிவழிந்திரா நின்ற அழகமைந்த மார்பும் பொலிவுடைத்தாய் இருந்ததாதலான், எம்பெருமான் விரைந்து வருமென்று முற்கொண்டு நமக்கு அறிவிக்கின்றது போலும். |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.