paal_en
int64 1
3
| paal
stringclasses 3
values | iyal_en
int64 1
13
| iyal
stringclasses 13
values | athikaaram_en
int64 1
133
| athikaaram
stringclasses 132
values | kural_en
int64 1
1.33k
| kural
stringlengths 43
78
| porul
stringlengths 47
255
| vilakkam
stringlengths 155
457
| division_transliteration
stringclasses 3
values | chapter_transliteration
stringclasses 13
values | section_transliteration
stringclasses 131
values | couplet_transliteration
stringlengths 51
84
| division_number
int64 1
3
| division
stringclasses 3
values | chapter_number
int64 1
13
| chapter
stringclasses 13
values | section_number
int64 1
133
| section
stringclasses 132
values | couplet_number
int64 1
1.33k
| couplet
stringlengths 56
156
| explanation
stringlengths 38
236
|
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | அறத்துப்பால் | 2 | இல்லறவியல் | 21 | தீவினையச்சம் | 201 | தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு. | தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள். | தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.
தீமை என்னும் மயக்கத்தைச் செய்ய, முன்னைத் தீவினை உடையவர் பயப்படமாட்டார்; பெரியவர்களோ பயப்படுவர். | Arattuppal | Illaraviyal | Theevinaiyachcham | theevinaiyaar anjaar vizhumiyaar anjuvar
theevinai ennum serukku | 1 | Virtue | 2 | Domestic Virtue | 21 | Dread of Evil Deeds | 201 | With sinful act men cease to feel the dread of ill within,
The excellent will dread the wanton pride of cherished sin. | Those who have experience of evil deeds will not fear, but the excellent will fear the pride of sin. |
1 | அறத்துப்பால் | 2 | இல்லறவியல் | 21 | தீவினையச்சம் | 202 | தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும். | தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும். | தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.
நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும். | Arattuppal | Illaraviyal | Theevinaiyachcham | theeyavai theeya payaththalaal theeyavai
theeyinum anjap padum | 1 | Virtue | 2 | Domestic Virtue | 21 | Dread of Evil Deeds | 202 | Since evils new from evils ever grow,
Evil than fire works out more dreaded woe. | Because evil produces evil, therefore should evil be feared more than fire. |
1 | அறத்துப்பால் | 2 | இல்லறவியல் | 21 | தீவினையச்சம் | 203 | அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல். | தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச் செய்யாமலிருத்தலை, எல்லா அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர். | தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.
தனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர். | Arattuppal | Illaraviyal | Theevinaiyachcham | aRivinuL ellaanh thalaiyenpa theeya
seRuvaarkkum seyyaa vidal | 1 | Virtue | 2 | Domestic Virtue | 21 | Dread of Evil Deeds | 203 | Even to those that hate make no return of ill;
So shalt thou wisdom's highest law, 'tis said, fulfil. | To do no evil to enemies will be called the chief of all virtues. |
1 | அறத்துப்பால் | 2 | இல்லறவியல் | 21 | தீவினையச்சம் | 204 | மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு. | மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது; அப்படி நினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு விடும். | பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்.
மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும். | Arattuppal | Illaraviyal | Theevinaiyachcham | maRandhum piran-kaetu soozhaRka soozhin
aranjoozham soozhndhavan kaedu | 1 | Virtue | 2 | Domestic Virtue | 21 | Dread of Evil Deeds | 204 | Though good thy soul forget, plot not thy neighbour's fall,
Thy plans shall 'virtue's Power' by ruin to thyself forestall. | Even though forgetfulness meditate not the ruin of another. Virtue will meditate the ruin of him who thus meditates. |
1 | அறத்துப்பால் | 2 | இல்லறவியல் | 21 | தீவினையச்சம் | 205 | இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து. | வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈ.டுபடக்கூடாது; அப்படி ஈ.டுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும். | யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.
தன் ஏழ்மையைப் போக்கப் பிறர்க்குத் தீமை செய்யாதே, செய்தால் மேலும் ஏழை ஆவாய். | Arattuppal | Illaraviyal | Theevinaiyachcham | ilan-endru theeyavai seyyaRka seyyin
ilanaakum matrum peyarththu | 1 | Virtue | 2 | Domestic Virtue | 21 | Dread of Evil Deeds | 205 | Make not thy poverty a plea for ill;
Thy evil deeds will make thee poorer still. | Commit not evil, saying, "I am poor": if you do, you will become poorer still. |
1 | அறத்துப்பால் | 2 | இல்லறவியல் | 21 | தீவினையச்சம் | 206 | தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான். | வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும். | துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும்.
துன்பம் தருவன தன்னைச் சூழ்ந்து வருத்த விரும்பாதவன், பிறர்க்குத் தீமை செய்யக்கூடாது. | Arattuppal | Illaraviyal | Theevinaiyachcham | theeppaala thaanpiRarkaN seyyaRka noaippaala
thannai atalvaeNtaa thaan | 1 | Virtue | 2 | Domestic Virtue | 21 | Dread of Evil Deeds | 206 | What ranks as evil spare to do, if thou would'st shun
Affliction sore through ill to thee by others done. | Let him not do evil to others who desires not that sorrows should pursue him |
1 | அறத்துப்பால் | 2 | இல்லறவியல் | 21 | தீவினையச்சம் | 207 | எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும். | ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும்; ஆனால், அவர் செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்து வருத்திக்கொண்டே இருக்கும். | எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்.
எவ்வளவு பெரிய பகையைப் பெற்றவரும் தப்பித்துக் கொள்வர்; ஆனால் தீமை செய்வதால் வரும் பகையோ, அழியாமல் நம் பின் வந்து, நம்மை அழிக்கும். | Arattuppal | Illaraviyal | Theevinaiyachcham | enaippakai yutraarum uyvar vinaippakai
veeyaadhu pinsendru adum | 1 | Virtue | 2 | Domestic Virtue | 21 | Dread of Evil Deeds | 207 | From every enmity incurred there is to 'scape, a way;
The wrath of evil deeds will dog men's steps, and slay. | However great be the enmity men have incurred they may still live. The enmity of sin will incessantly pursue and kill. |
1 | அறத்துப்பால் | 2 | இல்லறவியல் | 21 | தீவினையச்சம் | 208 | தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று. | ஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல், தீய செயல்களில் ஈ.டுபடுகிறவர்களை விட்டுத் தீமையும் விலகாமல், தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும். | தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.
பிறர்க்குத் தீமை செய்தவர் அழிவது, அவரை அவரது நிழல் விடாது கால்களின் கீழே தங்கியிருப்பது போலாம். | Arattuppal | Illaraviyal | Theevinaiyachcham | theeyavai seydhaar ketudhal nizhaldhannai
veeyaadhu atiuRainh thatru | 1 | Virtue | 2 | Domestic Virtue | 21 | Dread of Evil Deeds | 208 | Man's shadow dogs his steps where'er he wends;
Destruction thus on sinful deeds attends. | Destruction will dwell at the heels of those who commit evil even as their shadow that leaves them not. |
1 | அறத்துப்பால் | 2 | இல்லறவியல் | 21 | தீவினையச்சம் | 209 | தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால். | தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது. | ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.
தன்மீது அன்புள்ளவன், எவ்வளவு சிறிது என்றாலும் சரி, மற்றவர்க்குத் தீமை செயய வேண்டா. | Arattuppal | Illaraviyal | Theevinaiyachcham | thannaiththaan kaadhala naayin enaiththondrum
thunnaRka theevinaip paal | 1 | Virtue | 2 | Domestic Virtue | 21 | Dread of Evil Deeds | 209 | Beware, if to thyself thyself is dear,
Lest thou to aught that ranks as ill draw near!. | If a man love himself, let him not commit any sin however small. |
1 | அறத்துப்பால் | 2 | இல்லறவியல் | 21 | தீவினையச்சம் | 210 | அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின். | வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க. | ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.
தீய வழிகளில் பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்பவனே கேடு இல்லாதவன் என்று அறிக. | Arattuppal | Illaraviyal | Theevinaiyachcham | arungaetan enpadhu aRika marungoatith
theevinai seyyaan enin | 1 | Virtue | 2 | Domestic Virtue | 21 | Dread of Evil Deeds | 210 | The man, to devious way of sin that never turned aside,
From ruin rests secure, whatever ills betide. | Know ye that he is freed from destruction who commits no evil, going to neither side of the right path. |
1 | அறத்துப்பால் | 2 | இல்லறவியல் | 22 | ஒப்புரவறிதல் | 211 | கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு. | கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர். | இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை.
பிறர்க்கு உதவுவது, அவ்வுதவியைப் பெற்றவர் திரும்பச் செய்வதை எதிர்பார்த்து அன்று; ஒருவர் செய்ததற்குத் திரும்பச் செய்துதான் ஆகவேண்டும் என்றால் மழை தரும் மேகங்களுக்கு இந்த உலகம் திரும்ப என்ன செய்துவிட முடியும்?. | Arattuppal | Illaraviyal | Oppuravaridhal | kaimmaaRu vaeNtaa katappaatu maarimaattu
en-aatrung kolloa ulaku | 1 | Virtue | 2 | Domestic Virtue | 22 | Duty to Society | 211 | Duty demands no recompense; to clouds of heaven,
By men on earth, what answering gift is given?. | Benevolence seeks not a return. What does the world give back to the clouds ?. |
1 | அறத்துப்பால் | 2 | இல்லறவியல் | 22 | ஒப்புரவறிதல் | 212 | தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. | தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும். | ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.
முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே. | Arattuppal | Illaraviyal | Oppuravaridhal | thaalaatrith thandha poruLellaam thakkaarkku
vaeLaaNmai seydhaR poruttu | 1 | Virtue | 2 | Domestic Virtue | 22 | Duty to Society | 212 | The worthy say, when wealth rewards their toil-spent hours,
For uses of beneficence alone 'tis ours. | All the wealth acquired with perseverance by the worthy is for the exercise of benevolence. |
1 | அறத்துப்பால் | 2 | இல்லறவியல் | 22 | ஒப்புரவறிதல் | 213 | புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற. | பிறர்க்கு உதவிடும் பண்பாகிய ``ஒப்புரவு'' என்பதைவிடச் சிறந்த பண்பினை இன்றைய உலகிலும், இனிவரும் புதிய உலகிலும் காண்பது அரிது. | பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.
தேவர்கள் உலகத்திலும் இப்பூவுலகிலும், உழைக்க முடியாதவர்க்கு உதவுவது போன்ற வேறு நல்ல செயல்களைப் பெறுவது கடினம். | Arattuppal | Illaraviyal | Oppuravaridhal | puththae Lulakaththum eeNdum peRalaridhae
oppuravin nalla piRa | 1 | Virtue | 2 | Domestic Virtue | 22 | Duty to Society | 213 | To 'due beneficence' no equal good we know,
Amid the happy gods, or in this world below. | It is difficult to obtain another good equal to benevolence either in this world or in that of the gods. |
1 | அறத்துப்பால் | 2 | இல்லறவியல் | 22 | ஒப்புரவறிதல் | 214 | ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். | ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன் இறந்தவனே ஆவான். | ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.
உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவுபவனே உயிரோடு வாழ்பவன். உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான். | Arattuppal | Illaraviyal | Oppuravaridhal | oththa thaRavoan uyirvaazhvaan matraiyaan
seththaaruL vaikkap padum | 1 | Virtue | 2 | Domestic Virtue | 22 | Duty to Society | 214 | Who knows what's human life's befitting grace,
He lives; the rest 'mongst dead men have their place. | He truly lives who knows (and discharges) the proper duties (of benevolence). He who knows them not will be reckoned among the dead. |
1 | அறத்துப்பால் | 2 | இல்லறவியல் | 22 | ஒப்புரவறிதல் | 215 | ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. | பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும். | ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது.
உலகின் வளர்ச்சிப் போக்கை அறிந்து செயற்படும் பேர் அறிவாளனின் செல்வம், நீர் நிறைந்த ஊருணி எல்லார்க்கும் பொதுவாவது போல் பொதுவாகும். | Arattuppal | Illaraviyal | Oppuravaridhal | ooruNi neernhiRainh thatrae ulakavaam
paeraRi vaaLan thiru | 1 | Virtue | 2 | Domestic Virtue | 22 | Duty to Society | 215 | The wealth of men who love the 'fitting way,' the truly wise,
Is as when water fills the lake that village needs supplies. | The wealth of that man of eminent knowledge who desires to exercise the benevolence approved of by the world, is like the full waters of a city-tank. |
1 | அறத்துப்பால் | 2 | இல்லறவியல் | 22 | ஒப்புரவறிதல் | 216 | பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின். | ஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும். | ஒப்புராவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது.
பிறரால் விரும்பப்படுபவனிடம் சேரும் செல்வம், உண்ணத் தகும், கனிதரும் மரம் ஊருக்கு உள்ளே பழுத்திருப்பதைப் போல எல்லார்க்கும் பொதுவாகும். | Arattuppal | Illaraviyal | Oppuravaridhal | payanmaram uLLoorp pazhuththatraal selvam
nayanutai yaan-kaN patin | 1 | Virtue | 2 | Domestic Virtue | 22 | Duty to Society | 216 | A tree that fruits in th' hamlet's central mart,
Is wealth that falls to men of liberal heart. | The wealth of a man (possessed of the virtue) of benevolence is like the ripening of a fruitful tree in the midst of a town. |
1 | அறத்துப்பால் | 2 | இல்லறவியல் | 22 | ஒப்புரவறிதல் | 217 | மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின். | பிறருக்கு உதவிடும் பெருந்தன்மையாம் ஒப்புரவு உடையவனிடம், செல்வம் சேர்ந்தால் அது ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும் மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும். | ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடத்து செல்வம் சேர்ந்தால் அஃது எல்லா உறுப்புகளுக்கும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது.
பெரும் பண்பாளனிடம் சேரும் செல்வம், எல்லா உறுப்புகளாலும் மருந்து ஆகிப் பயன்படுவதிலிருந்து தப்பாத மரம் போலப் பொதுவாகும். | Arattuppal | Illaraviyal | Oppuravaridhal | marundhaakith thappaa maraththatraal selvam
perundhakai yaan-kan patin | 1 | Virtue | 2 | Domestic Virtue | 22 | Duty to Society | 217 | Unfailing tree that healing balm distils from every part,
Is ample wealth that falls to him of large and noble heart. | If wealth be in the possession of a man who has the great excellence (of benevolence), it is like a tree which as a medicine is an infallible cure for disease. |
1 | அறத்துப்பால் | 2 | இல்லறவியல் | 22 | ஒப்புரவறிதல் | 218 | இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர். | தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும், பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர். | ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.
செய்யவேண்டிய கடமையை அறிந்த அறிவாளிகள், தம்மிடம் கொடுக்க இடம் இல்லாக் காலத்திலும், உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவத் தயங்க மாட்டார்கள். | Arattuppal | Illaraviyal | Oppuravaridhal | itanil paruvaththum oppuraviRku olkaar
katanaRi kaatchi yavar | 1 | Virtue | 2 | Domestic Virtue | 22 | Duty to Society | 218 | E'en when resources fall, they weary not of 'kindness due,'-
They to whom Duty's self appears in vision true. | The wise who know what is duty will not scant their benevolence even when they are without wealth. |
1 | அறத்துப்பால் | 2 | இல்லறவியல் | 22 | ஒப்புரவறிதல் | 219 | நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு. | பிறர்க்கு உதவி செய்வதையே கடமையாகக் கொண்ட பெருந்தகையாளன் ஒருவன், வறுமையடைந்து விட்டான் என்பதை உணர்த்துவது அவனால் பிறர்க்கு உதவிட முடியாமல் செயலிழந்து போகும் நிலைமைதான். | ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.
உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவும் உள்ளம் உடையவன் வறியவன் ஆவது, செய்யக்கூடிய உதவிகளைப் பிறர்க்குச் செய்யமுடியாது வருந்தும் போதுதான். | Arattuppal | Illaraviyal | Oppuravaridhal | nayanutaiyaan nalkoorndhaa naadhal seyumnheera
seyyaadhu amaikalaa vaaRu | 1 | Virtue | 2 | Domestic Virtue | 22 | Duty to Society | 219 | The kindly-hearted man is poor in this alone,
When power of doing deeds of goodness he finds none. | The poverty of a benevolent man, is nothing but his inability to exercise the same. |
1 | அறத்துப்பால் | 2 | இல்லறவியல் | 22 | ஒப்புரவறிதல் | 220 | ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து. | பிறருக்கு உதவுகின்ற சிறப்புடைய உலக ஒழுக்கம், கேடு விளைவிக்கக் கூடியதாக இருப்பின், அக்கேடு, ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக் கொள்ளக் கூடிய மதிப்புடையதாகும். | ஒப்புரவால் கேடு வரும் என்றால் அக் கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ளும் தகுதி உடையதாகும்.
இருப்பதைப் பிறர்க்குக் கொடுத்துவிட்டால், நாளை நமக்குத் தீமை வருமே என்று சொன்னால், தன்னையே விலையாகக் கொடுத்து அந்தத் தீமை வாங்கத்தக்கதே. | Arattuppal | Illaraviyal | Oppuravaridhal | oppuravi naalvarum kaetenin aqdhoruvan
vitrukkoaL thakka thudaiththu | 1 | Virtue | 2 | Domestic Virtue | 22 | Duty to Society | 220 | Though by 'beneficence,' the loss of all should come,
'Twere meet man sold himself, and bought it with the sum. | If it be said that loss will result from benevolence, such loss is worth being procured even by the sale of one's self. |
1 | அறத்துப்பால் | 2 | இல்லறவியல் | 23 | ஈகை | 221 | வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து. | இல்லாதவர்க்கு வழங்குவதே ஈ.கைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும். | வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது.
ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதே ஈகை; பிற எல்லாம் கொடுத்ததைத் திரும்பப் பெறும் நோக்கம் உடையதே. | Arattuppal | Illaraviyal | Eekai | vaRiyaarkkondru eevadhae eekaimaR Rellaam
kuRiyedhirppai neera thudaiththu | 1 | Virtue | 2 | Domestic Virtue | 23 | Giving | 221 | Call that a gift to needy men thou dost dispense,
All else is void of good, seeking for recompense. | To give to the destitute is true charity. All other gifts have the nature of (what is done for) a measured return. |
1 | அறத்துப்பால் | 2 | இல்லறவியல் | 23 | ஈகை | 222 | நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று. | பிறரிடமிருந்து நல்வழியில் பொருளைப் பெற்றாலும் அது பெருமையல்ல; சிறுமையே ஆகும். கொடை வழங்குவதால் மேலுலகம் என்று சொல்லப்படுவது கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்குக் கொடுத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும். | பிறரிடம் பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது, மேலுலகம் இல்லை என்றாலும் பிறக்குக் கொடுப்பதே சிறந்தது.
நல்லதுதான் என்று எவரேனும் சொன்னாலும் பிறரிடம் ஒன்றைப் பெறுவது தீமை; ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதால் விண்ணுலகம் கிடைக்காது என்றாலும் கொடுப்பதே நல்லது. | Arattuppal | Illaraviyal | Eekai | nallaaRu eninum koLaldheedhu maelulakam
illeninum eedhalae nandru | 1 | Virtue | 2 | Domestic Virtue | 23 | Giving | 222 | Though men declare it heavenward path, yet to receive is ill;
Though upper heaven were not, to give is virtue still. | To beg is evil, even though it were said that it is a good path (to heaven). To give is good, even though it were said that those who do so cannot obtain heaven. |
1 | அறத்துப்பால் | 2 | இல்லறவியல் | 23 | ஈகை | 223 | இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள. | தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறருக்கு ஈ.வது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும். | யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடி பிறப்பு உடையவனிடம் உண்டு.
ஏழை என்று மற்றவரிடம் சொல்லாதிருப்பதும்,, ஏதும் அற்றவர்க்குத் தருவதும் நல்ல குடும்பத்தில் பிறந்தவனிடம் மட்டுமே உண்டு. | Arattuppal | Illaraviyal | Eekai | ilanennum evvam uraiyaamai eedhal
kulanutaiyaan kaNNae yuLa | 1 | Virtue | 2 | Domestic Virtue | 23 | Giving | 223 | 'I've nought' is ne'er the high-born man's reply;
He gives to those who raise themselves that cry. | (Even in a low state) not to adopt the mean expedient of saying "I have nothing," but to give, is the characteristic of the mad of noble birth. |
1 | அறத்துப்பால் | 2 | இல்லறவியல் | 23 | ஈகை | 224 | இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு. | ஈதல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும். | பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது.
கொடுக்க இருப்பவரின் நிலைகூட தம்மிடம் வந்து யாசித்து நிற்பவரின் மலர்ந்த முகத்தைக் காணும் வரை கொடியதே. | Arattuppal | Illaraviyal | Eekai | innaadhu irakkap patudhal irandhavar
inmukanG kaaNum aLavu | 1 | Virtue | 2 | Domestic Virtue | 23 | Giving | 224 | The suppliants' cry for aid yields scant delight,
Until you see his face with grateful gladness bright. | To see men begging from us in disagreeable, until we see their pleasant countenance. |
1 | அறத்துப்பால் | 2 | இல்லறவியல் | 23 | ஈகை | 225 | ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின். | பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும். | தவ வலிமை உடையவரின் வலிமை பசியை பொறுத்துக் கொள்ளலாகும், அதுவும் அப் பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.
வல்லவர்க்கு மேலும் வலிமை, தமது பசியைப் பொறுத்துக் கொள்வதே அந்த வலிமையும், பிறர் பசியைப் போக்குபவரின் வலிமைக்கு அடுத்துத்தான் வலிமையாய் அமையும். | Arattuppal | Illaraviyal | Eekai | aatruvaar aatral pasiAtral appasiyai
maatruvaar aatralin pin | 1 | Virtue | 2 | Domestic Virtue | 23 | Giving | 225 | 'Mid devotees they're great who hunger's pangs sustain,
Who hunger's pangs relieve a higher merit gain. | The power of those who perform penance is the power of enduring hunger. It is inferior to the power of those who remove the hunger (of others). |
1 | அறத்துப்பால் | 2 | இல்லறவியல் | 23 | ஈகை | 226 | அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. | பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது. அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும். | வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.
ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே. | Arattuppal | Illaraviyal | Eekai | atraar azhipasi theerththal aqdhoruvan
petraan poruLvaip puzhi | 1 | Virtue | 2 | Domestic Virtue | 23 | Giving | 226 | Let man relieve the wasting hunger men endure;
For treasure gained thus finds he treasure-house secure. | The removal of the killing hunger of the poor is the place for one to lay up his wealth. |
1 | அறத்துப்பால் | 2 | இல்லறவியல் | 23 | ஈகை | 227 | பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது. | பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை. | தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.
பலருடனும் பகிர்ந்து உண்ணப் பழகியவனைப் பசி என்னும் கொடிய நோய் தொடுவதும் அரிது. | Arattuppal | Illaraviyal | Eekai | paaththooN maree-i yavanaip pasiyennum
theeppiNi theeNdal aridhu | 1 | Virtue | 2 | Domestic Virtue | 23 | Giving | 227 | Whose soul delights with hungry men to share his meal,
The hand of hunger's sickness sore shall never feel. | The fiery disease of hunger shall never touch him who habitually distributes his food to others. |
1 | அறத்துப்பால் | 2 | இல்லறவியல் | 23 | ஈகை | 228 | ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர். | ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈ.ட்டிய பொருள் அனைத்தையும் இழந்திடும் ஈ.வு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கி மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ? | தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் வன் கண்மை உடையவர், பிறர்க்கு கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ.
இல்லாதவர்க்குக் கொடுப்பதால் கொடுப்பவரும் பெறுபவரும் முகத்தாலும் மனத்தாலும் மகிழ்ச்சி அடைவர். பிறர்க்குக் கொடுக்காமல் பொருளைச் சேமித்து வைத்துப் பிறகு அதை இழந்துவிடும் கொடியவர்கள் அம்மகிழ்சியை அறியார்களோ?. | Arattuppal | Illaraviyal | Eekai | eeththuvakkum inpam aRiyaarkol thaamudaimai
vaiththizhakkum vankha Navar | 1 | Virtue | 2 | Domestic Virtue | 23 | Giving | 228 | Delight of glad'ning human hearts with gifts do they not know.
Men of unpitying eye, who hoard their wealth and lose it so?. | Do the hard-eyed who lay up and lose their possessions not know the happiness which springs from the pleasure of giving ?. |
1 | அறத்துப்பால் | 2 | இல்லறவியல் | 23 | ஈகை | 229 | இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல். | பிறர்க்கு ஈ.வதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது. | பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது.
பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது. | Arattuppal | Illaraviyal | Eekai | iraththalin innaadhu mandra nirappiya
thaamae thamiyar uNal | 1 | Virtue | 2 | Domestic Virtue | 23 | Giving | 229 | They keep their garners full, for self alone the board they spread;-
'Tis greater pain, be sure, than begging daily bread!. | Solitary and unshared eating for the sake of filling up one's own riches is certainly much more unpleasant than begging. |
1 | அறத்துப்பால் | 2 | இல்லறவியல் | 23 | ஈகை | 230 | சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை. | சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது. | சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.
சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும். | Arattuppal | Illaraviyal | Eekai | saadhalin innaadha thillai inidhadhooum
eedhal iyaiyaak kadai | 1 | Virtue | 2 | Domestic Virtue | 23 | Giving | 230 | 'Tis bitter pain to die, 'Tis worse to live.
For him who nothing finds to give!. | Nothing is more unpleasant than death: yet even that is pleasant where charity cannot be exercised. |
1 | அறத்துப்பால் | 2 | இல்லறவியல் | 24 | புகழ் | 231 | ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு. | கொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை. | வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.
ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை. | Arattuppal | Illaraviyal | Pukazh | eedhal isaipada vaazhdhal adhuvalladhu
oodhiyam illai uyirkku | 1 | Virtue | 2 | Domestic Virtue | 24 | Renown | 231 | See that thy life the praise of generous gifts obtain;
Save this for living man exists no real gain. | Give to the poor and live with praise. There is no greater profit to man than that. |
1 | அறத்துப்பால் | 2 | இல்லறவியல் | 24 | புகழ் | 232 | உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ். | போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் புகழைக் குறித்தே அமையும். | புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.
சொல்வார் சொல்வன எல்லாம், இல்லை என்று வருபவர்க்குத் தருபவர்மேல் சொல்லப்படும் புகழே. | Arattuppal | Illaraviyal | Pukazh | uraippaar uraippavai ellaam irappaarkkondru
eevaarmael niRkum pukazh | 1 | Virtue | 2 | Domestic Virtue | 24 | Renown | 232 | The speech of all that speak agrees to crown
The men that give to those that ask, with fair renown. | Whatsoever is spoken in the world will abide as praise upon that man who gives alms to the poor. |
1 | அறத்துப்பால் | 2 | இல்லறவியல் | 24 | புகழ் | 233 | ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில். | ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை. | உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.
தனக்கு இணையில்லாததாய், உயர்ந்ததாய் விளங்கும் புகழே அன்றி, அழியாமல் நிலைத்து நிற்கும் வேறொன்றும் இவ்வுலகத்தில் இல்லை. | Arattuppal | Illaraviyal | Pukazh | ondraa ulakaththu uyarndha pukazhallaal
pondraadhu niRpadhon Ril | 1 | Virtue | 2 | Domestic Virtue | 24 | Renown | 233 | Save praise alone that soars on high,
Nought lives on earth that shall not die. | There is nothing that stands forth in the world imperishable, except fame, exalted in solitary greatness. |
1 | அறத்துப்பால் | 2 | இல்லறவியல் | 24 | புகழ் | 234 | நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு. | இனிவரும் புதிய உலகம்கூட இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ் ஈ.ட்டிய பெருமக்களை விடுத்து, அறிவாற்றல் உடையவரை மட்டும் போற்றிக் கொண்டிராது. | நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது.
தன்னில் வாழும்அறிஞரைப் போற்றாமல், இந்த நில உலகில்நெடும்புகழ் பெற்று வாழந்தவரையே தேவர் உலகம் பேணும். | Arattuppal | Illaraviyal | Pukazh | nilavarai neeLpukazh aatrin pulavaraip
poatraadhu puththaeL ulagu | 1 | Virtue | 2 | Domestic Virtue | 24 | Renown | 234 | If men do virtuous deeds by world-wide ample glory crowned,
The heavens will cease to laud the sage for other gifts renowned. | If one has acquired extensive fame within the limits of this earth, the world of the Gods will no longer praise those sages who have attained that world. |
1 | அறத்துப்பால் | 2 | இல்லறவியல் | 24 | புகழ் | 235 | நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது. | துன்பங்களுக்கிடையேகூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமது புகழை வளர்த்துக் கொள்வதும், தமது சாவிலும்கூடப் புகழை நிலை நாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும். | புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ் நிலை நிற்பதாகும் சாவும் அறிவில் சிறந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு இல்லை.
பூத உடம்பின் வறுமையைப் புகழுடம்பின் செல்வமாக்குவதும், பூத உடம்பின் அழிவைப் புகழுடம்பின் அழியாத் தன்மை ஆக்குவதும், பிறர்க்கு ஈந்து, தாம் மெய் உணர்ந்து, அவா அறுத்த வித்தகர்க்கு ஆகுமே அன்றி மற்றவர்க்கு ஆவது கடினம். | Arattuppal | Illaraviyal | Pukazh | naththampoal kaedum uLadhaakum saakkaatum
viththakark kallaal aridhu | 1 | Virtue | 2 | Domestic Virtue | 24 | Renown | 235 | Loss that is gain, and death of life's true bliss fulfilled,
Are fruits which only wisdom rare can yield. | Prosperity to the body of fame, resulting in poverty to the body of flesh and the stability to the former arising from the death of the latter, are achievable only by the wise. |
1 | அறத்துப்பால் | 2 | இல்லறவியல் | 24 | புகழ் | 236 | தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று. | எந்தத் துறையில் ஈ.டுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈ.டுபடாமல் இருப்பதே நல்லது. | ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.
பிறர் அறியுமாறு அறிமுகமானால் புகழ் மிக்கவராய் அறிமுகம் ஆகுக; புகழ் இல்லாதவர் உலகு காணக் காட்சி தருவதிலும், தராமல் இருப்பதே நல்லது. | Arattuppal | Illaraviyal | Pukazh | thoandrin pukazhotu thoandruka aqdhilaar
thoandralin thoandraamai nandru | 1 | Virtue | 2 | Domestic Virtue | 24 | Renown | 236 | If man you walk the stage, appear adorned with glory's grace;
Save glorious you can shine, 'twere better hide your face. | If you are born (in this world), be born with qualities conductive to fame. From those who are destitute of them it will be better not to be born. |
1 | அறத்துப்பால் | 2 | இல்லறவியல் | 24 | புகழ் | 237 | புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன். | உண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள், அதற்காகத் தம்மை நொந்து கொள்ள வேண்டுமே தவிரத் தமது செயல்களை இகழ்ந்து பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக? | தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்து கொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்ளக் காரணம் என்ன?.
புகழ் பெருகுமாறு வாழமுடியாதவர் அதற்குக் காரணர் தாமே என்று தம்மீது வருந்தாமல், தம்மை இகழ்வார் மீது வருத்தம் கொள்வது எதற்காக?. | Arattuppal | Illaraviyal | Pukazh | pukazhpata vaazhaadhaar thannhoavaar thammai
ikazhvaarai noavadhu evan | 1 | Virtue | 2 | Domestic Virtue | 24 | Renown | 237 | If you your days will spend devoid of goodly fame,
When men despise, why blame them? You've yourself to blame. | Why do those who cannot live with praise, grieve those who despise them, instead of grieving themselves for their own inability. |
1 | அறத்துப்பால் | 2 | இல்லறவியல் | 24 | புகழ் | 238 | வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின். | தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய புகழைப் பெறாவிட்டால், அது அந்த வாழ்க்கைக்கே வந்த பழியென்று வையம் கூறும். | தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்.
புகழ் என்னும் பெரும் செல்வத்தைப் பெறாது போனால், இந்த உலகத்தவர்க்கு அதுவே பழி என்று அறிந்தோர் கூறுவர். | Arattuppal | Illaraviyal | Pukazh | vasaiyenpa vaiyaththaark kellaam isaiyennum
echcham peRaaa vitin | 1 | Virtue | 2 | Domestic Virtue | 24 | Renown | 238 | Fame is virtue's child, they say; if, then,
You childless live, you live the scorn of men. | Not to beget fame will be esteemed a disgrace by the wise in this world. |
1 | அறத்துப்பால் | 2 | இல்லறவியல் | 24 | புகழ் | 239 | வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம். | புகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால், இந்தப்பூமி நல்ல விளைவில்லாத நிலமாகக் கருதப்படும். | புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்.
புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த பூமி, தன் வளம் மிக்க விளைச்சலில் குறைவு படும். | Arattuppal | Illaraviyal | Pukazh | vasaiyilaa vaNnpayan kundrum isaiyilaa
yaakkai poRuththa nilam | 1 | Virtue | 2 | Domestic Virtue | 24 | Renown | 239 | The blameless fruits of fields' increase will dwindle down,
If earth the burthen bear of men without renown. | The ground which supports a body without fame will diminish in its rich produce. |
1 | அறத்துப்பால் | 2 | இல்லறவியல் | 24 | புகழ் | 240 | வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர். | பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும், புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான். | தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர், புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்.
தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிரோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே. | Arattuppal | Illaraviyal | Pukazh | vasaiyozhiya vaazhvaarae vaazhvaar isaiyozhiya
vaazhvaarae vaazhaa thavar | 1 | Virtue | 2 | Domestic Virtue | 24 | Renown | 240 | Who live without reproach, them living men we deem;
Who live without renown, live not, though living men they seem. | Those live who live without disgrace. Those who live without fame live not. |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 25 | அருளுடைமை | 241 | அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள. | கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட் செல்வத்துக்கு ஈ.டாகாது. | பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்.
செல்வங்கள் பலவற்றுள்ளும் சிறந்தது அருள் என்னும் செல்வமே. பொருட்செல்வம் இழிந்த மனிதரிடமும் உண்டு. | Arattuppal | Thuravaraviyal | Aruludaimai | arutchelvam selvaththuL selvam porutchelvam
pooriyaar kaNNum uLa | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 25 | Compassion | 241 | Wealth 'mid wealth is wealth 'kindliness';
Wealth of goods the vilest too possess. | The wealth of kindness is wealth of wealth, in as much as the wealth of property is possessed by the basest of men. |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 25 | அருளுடைமை | 242 | நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை. | பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருள் உடைமையே வாழ்க்கைக்குத் துணையாய் விளங்கும் நல்வழி எனக் கொள்ளல் வேண்டும். | நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும்; பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும்.
நல்லநெறியில் வாழ்ந்து, நமக்கு உதவும் அறம் எது என ஆய்ந்து, அருளுடன் வாழ்க; எல்லாச் சமய நெறிகளால் ஆய்ந்தாலும் அருளே நமக்குத் துணையாகும். | Arattuppal | Thuravaraviyal | Aruludaimai | nallaatraaL naati aruLaaLka pallaatraal
thaerinum aqdhae thuNai | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 25 | Compassion | 242 | The law of 'grace' fulfil, by methods good due trial made,
Though many systems you explore, this is your only aid. | (Stand) in the good path, consider, and be kind. Even considering according to the conflicting tenets of the different sects, kindness will be your best aid, (in the acquisition of heavenly bliss). |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 25 | அருளுடைமை | 243 | அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல். | அருள் நிறைந்த மனம் படைத்தவர் அறியாமை எனும் இருள் சூழ்ந்த துன்ப உலகில் உழலமாட்டார். | அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.
அருள் நிறைந்த நெஞ்சத்தவர்க்கு, இருட்டான, துன்ப உலகமாகிய நரகம் புகும் நெருக்கடி இல்லை. | Arattuppal | Thuravaraviyal | Aruludaimai | aruLsaerndha nenjinaark killai iruLsaerndha
innaa ulakam pukal | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 25 | Compassion | 243 | They in whose breast a 'gracious kindliness' resides,
See not the gruesome world, where darkness drear abides. | They will never enter the world of darkness and wretchedness whose minds are the abode of kindness. |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 25 | அருளுடைமை | 244 | மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை. | எல்லா உயிர்களிடத்தும் கருணைக்கொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக் கொண்ட சான்றோர்கள் தமது உயிரைப் பற்றிக் கவலை அடைய மாட்டார்கள். | தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை.
நிலைத்து வரும் உயிர்களைக் காத்து அவற்றின் மீது அருள் உள்ளவனுக்குத் தன் உயிரைப் பற்றிய பயம் வராது. | Arattuppal | Thuravaraviyal | Aruludaimai | mannuyir Ompi aruLaaLvaarkku illenpa
thannuyir anjum vinai | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 25 | Compassion | 244 | Who for undying souls of men provides with gracious zeal,
In his own soul the dreaded guilt of sin shall never feel. | (The wise) say that the evils, which his soul would dread, will never come upon the man who exercises kindness and protects the life (of other creatures). |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 25 | அருளுடைமை | 245 | அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி. | உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு, காற்றின் இயக்கத்தினால் வலிமையுடன் திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று. | அருளுடையவராக வாழ்கின்றவர்களுக்குத் துன்பம் இல்லை, காற்று இயங்குகின்ற வளம் பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்.
அருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது; இதற்குக் காற்று உலவும், வளம் மிக்க இந்தப் பேருலகமே சான்று. | Arattuppal | Thuravaraviyal | Aruludaimai | allal aruLaaLvaarkku illai vaLivazhangum
mallanmaa GnaalanG kari | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 25 | Compassion | 245 | The The teeming earth's vast realm, round which the wild winds blow,
Is witness, men of 'grace' no woeful want shall know. | This great rich earth over which the wind blows, is a witness that sorrow never comes upon the kind-hearted. |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 25 | அருளுடைமை | 246 | பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார். | அருளற்றவர்களாய்த் தீமைகளைச் செய்து வாழ்பவர்கள், பொருளற்றவர்களாகவும், கடமை மறந்தவர்களாகவும் ஆவர். | அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.
அருள் இல்லாமல் தீமைகளைச் செய்து வாழ்பவரைப் பொருளையும் இழந்து தாம் துன்பம் அடைந்ததையும் மறந்தவர் என்று அறிஞர் கூறுவர். | Arattuppal | Thuravaraviyal | Aruludaimai | poruLnheengip pochchaandhaar enpar arulnheengi
allavai seydhozhuku vaar | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 25 | Compassion | 246 | AGain of true wealth oblivious they eschew,
Who 'grace' forsake, and graceless actions do. | (The wise) say that those who neglect kindness and practise cruelties, neglected virtue (in their former birth), and forgot (the sorrows which they must suffer). |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 25 | அருளுடைமை | 247 | அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. | பொருள் இல்லாதவர்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது. அதுபோலவே கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமையாது. | பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறு போல உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.
பொருள் இல்லாதவர்க்கு இப்பூவுலக இன்பம் இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்க்கு மேல் உலக இன்பம் இல்லை. | Arattuppal | Thuravaraviyal | Aruludaimai | aruLillaarkku avvulakam illai poruLillaarkku
ivvulakam illaaki yaangu | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 25 | Compassion | 247 | As to impoverished men this present world is not;
The 'graceless' in you world have neither part nor lot. | As this world is not for those who are without wealth, so that world is not for those who are without kindness. |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 25 | அருளுடைமை | 248 | பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது. | பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம். அருளை இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது. | பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர், அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயம் அற்றவரே அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை.
பொருள் இல்லாமல் ஏழையாய்ப் போனவர் திரும்பவும் செல்வத்தால் பொலிவு பெறலாம்; அருள் இல்லாமல் போனவரோ, போனவர்தாம்; மீண்டும் அருள் உள்ளவராய் ஆவது கடினம். | Arattuppal | Thuravaraviyal | Aruludaimai | poruLatraar pooppar orukaal aruLatraar
atraarmaR Raadhal aridhu | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 25 | Compassion | 248 | Who lose the flower of wealth, when seasons change, again may bloom;
Who lose 'benevolence', lose all; nothing can change their doom. | Those who are without wealth may, at some future time, become prosperous; those who are destitute of kindness are utterly destitute; for them there is no change. |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 25 | அருளுடைமை | 249 | தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம். | அறிவுத் தெளிவு இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டறிய முடியுமா? அது போலத்தான் அருள் இல்லாதவன் செய்யும் அறச்செயலும் இருக்கும். | அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.
மனத்துள் அருள் இல்லாதவன் செய்யும் அறத்தை ஆராய்ந்து பார்த்தால், ஞானம் இல்லாதவன் மெய்ப்பொருளை உணர்ந்தது போல ஆகும். | Arattuppal | Thuravaraviyal | Aruludaimai | theruLaadhaan meypporuL kaNtatraal thaerin
aruLaadhaan seyyum aRam | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 25 | Compassion | 249 | When souls unwise true wisdom's mystic vision see,
The 'graceless' man may work true works of charity. | If you consider, the virtue of him who is without kindness is like the perception of the true being by him who is without wisdom. |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 25 | அருளுடைமை | 250 | வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து. | தன்னைவிட மெலிந்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும் போது, தன்னைவிட வலியவர் முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு இருப்பதை மறந்துவிடக் கூடாது. | (அருள் இல்லாதவன் ) தன்னை விட மெலிந்தவர் மேல் துன்புறுத்த செல்லும் போது, தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும்.
அருள் இல்லாதவள், தன்னைவிட எளிய மனிதரைத் துன்புறுத்தச் செல்லும்போது, தன்னைவிட பலசாலி தன்னைத் துன்புறுத்த வந்தால் அவருக்கு முன் தான் அஞ்சி நிற்பதாக எண்ணிப் பார்க்க. | Arattuppal | Thuravaraviyal | Aruludaimai | valiyaarmun thannai ninaikkathaan thannin
meliyaarmael sellu midaththu | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 25 | Compassion | 250 | When weaker men you front with threat'ning brow,
Think how you felt in presence of some stronger foe. | When a man is about to rush upon those who are weaker than himself, let him remember how he has stood (trembling) before those who are stronger than himself. |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 26 | புலான்மறுத்தல் | 251 | தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். | தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணையுள்ளம் கொண்டவராக இருக்க முடியும். | தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்?.
தன் உடம்பை வளர்ப்பதற்காக இன்னோர் உடம்பைத் தின்பவன் மனத்துள் இரக்கம் எப்படி இருக்கும்?. | Arattuppal | Thuravaraviyal | Pulaanmaruththal | thannoon perukkaRkuth thaanpiRidhu oonuNpaan
enganam aaLum aruL | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 26 | Abstinence from Flesh | 251 | How can the wont of 'kindly grace' to him be known,
Who other creatures' flesh consumes to feed his own?. | How can he be possessed of kindness, who to increase his own flesh, eats the flesh of other creatures. |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 26 | புலான்மறுத்தல் | 252 | பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. | பொருளைப் பேணிக் காத்திடாதவர்க்குப் பொருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை; புலால் உண்பவர்க்கும் அருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை. | பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை.
பொருளால் பயன் பெறுவது அதைப் பாதுகாக்காதவர்க்கு இல்லை; அது போல, இரக்கத்தால் பயன்பெறுவது இறைச்சி தின்பவர்க்கு இல்லை. | Arattuppal | Thuravaraviyal | Pulaanmaruththal | poruLaatchi poatraadhaarkku illai aruLaatchi
aangillai oonthin pavarkku | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 26 | Abstinence from Flesh | 252 | No use of wealth have they who guard not their estate;
No use of grace have they with flesh who hunger sate. | As those possess no property who do not take care of it, so those possess no kindness who feed on flesh. |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 26 | புலான்மறுத்தல் | 253 | படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம். | படைக் கருவியைப் பயன்படுத்துவோர் நெஞ்சமும், ஓர் உயிரின் உடலைச் சுவைத்து உண்பவர் நெஞ்சமும், அருளுடைமையைப் போற்றக் கூடியவைகள் அல்ல. | ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி அருளைப் போற்றாது.
கத்தியைத் தன் கையில் பிடித்திருப்பவரின் மனம், இரக்கத்தை எண்ணிப் பாராதது போலப் பிறிதொரு உடலைச் சுவைத்து உண்டவரின் மனமும் இரக்கத்தை எணணாது. | Arattuppal | Thuravaraviyal | Pulaanmaruththal | padaikoNtaar nenjampoal nannookkaadhu ondran
udalsuvai uNdaar manam | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 26 | Abstinence from Flesh | 253 | Like heart of them that murderous weapons bear, his mind,
Who eats of savoury meat, no joy in good can find. | Like the (murderous) mind of him who carries a weapon (in his hand), the mind of him who feasts with pleasure on the body of another (creature), has no regard for goodness. |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 26 | புலான்மறுத்தல் | 254 | அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல். | கொல்லாமை அருளுடைமையாகும்; கொல்லுதல் அருளற்ற செயலாகும். எனவே ஊன் அருந்துதல் அறம் ஆகாது. | அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.
இரக்கம் எது என்றால் கொலை செய்யாமல் இருப்பதே; இரக்கம் இல்லாதது எது என்றால் கொலை செய்வதே; பாவம் எது என்றால் இறைச்சியைத் தின்பதே. | Arattuppal | Thuravaraviyal | Pulaanmaruththal | aruLalla thiyaadheniR kollaamai koaRal
poruLalla thavvoon thinal | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 26 | Abstinence from Flesh | 254 | 'What's grace, or lack of grace'? 'To kill' is this, that 'not to kill';
To eat dead flesh can never worthy end fulfil. | If it be asked what is kindness and what its opposite, the answer would be preservation and destruction of life; and therefore it is not right to feed on the flesh (obtained by taking away life). |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 26 | புலான்மறுத்தல் | 255 | உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு. | உயிர்களை உணவாக்கிக் கொள்ளச் சகதிக்குழியும் வாய் திறவாது; புலால் உண்ணாதவர்கள் இருப்பதால், பல உயிர்கள் கொல்லப்படாமல் வாழ்கின்றன. | உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.
இறைச்சியைத் தின்னாது இருத்தல் என்னும் அறத்தின்மேல் உயிர்நிலை இருக்கிறது. இதை மீறித் தின்னும் உயிர்களை நரகம் விழுங்கும்; வெளியே விடவும் செய்யாது. | Arattuppal | Thuravaraviyal | Pulaanmaruththal | uNNaamai uLLadhu uyirnhilai oonuNNa
aNNaaththal seyyaadhu aLaRu | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 26 | Abstinence from Flesh | 255 | If flesh you eat not, life's abodes unharmed remain;
Who eats, hell swallows him, and renders not again. | Not to eat flesh contributes to the continuance of life; therefore if a man eat flesh, hell will not open its mouth (to let him escape out, after he has once fallen in). |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 26 | புலான்மறுத்தல் | 256 | தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில். | புலால் உண்பதற்காக உலகினர் உயிர்களைக் கொல்லாதிருப்பின், புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார். | புலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லா திருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார்.
தின்பதற்காகவே கொலை செய்பவர் இல்லை என்றால், இறைச்சியை விலைக்குத் தருபவரும் உலகில் எங்கும் இருக்கமாட்டார். | Arattuppal | Thuravaraviyal | Pulaanmaruththal | thinarporuttaal kollaadhu ulakenin yaarum
vilaipporuttaal oondraruvaa ril | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 26 | Abstinence from Flesh | 256 | 'We eat the slain,' you say, by us no living creatures die;
Who'd kill and sell, I pray, if none came there the flesh to buy? | If the world does not destroy life for the purpose of eating, then no one would sell flesh for the sake of money. |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 26 | புலான்மறுத்தல் | 257 | உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின். | புலால் என்பது வேறோர் உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர் அதனை உண்ணாமல் இருக்கவேண்டும். | புலால் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம்.
இறைச்சி, இன்னோர் உடம்பின் புண்; அறிந்தவர் அதை உண்ணக்கூடாது. | Arattuppal | Thuravaraviyal | Pulaanmaruththal | uNNaamai vaeNdum pulaaal piRidhondran
puNNadhu uNarvaarp peRin | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 26 | Abstinence from Flesh | 257 | With other beings' ulcerous wounds their hunger they appease;
If this they felt, desire to eat must surely cease. | If men should come to know that flesh is nothing but the unclean ulcer of a body, let them abstain from eating it. |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 26 | புலான்மறுத்தல் | 258 | செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன். | மாசற்ற மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ண மாட்டார்கள். | குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.
பிழையற்ற அறிவினை உடையவர், உயிர் பிரிந்த இறைச்சியை உண்ணமாட்டார். | Arattuppal | Thuravaraviyal | Pulaanmaruththal | seyirin thalaippirindha kaatchiyaar uNNaar
uyirin thalaippirindha oon | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 26 | Abstinence from Flesh | 258 | Whose souls the vision pure and passionless perceive,
Eat not the bodies men of life bereave. | The wise, who have freed themselves from mental delusion, will not eat the flesh which has been severed from an animal. |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 26 | புலான்மறுத்தல் | 259 | அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று. | நெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை நடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லது. | நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.
(மந்திரம் சொல்லித் தேவர்களுக்கு இடும் உணவாகிய) அவிகளைத் தீயில் போட்டு ஆயிரம் வேள்வி செய்வதைக் காட்டிலும் ஓர் உயிரைப் போக்கி அதன் உடம்பை உண்ணாமல் இருப்பது நல்லது. | Arattuppal | Thuravaraviyal | Pulaanmaruththal | avisorinh thaayiram vaettalin ondran
uyirsekuth thuNNaamai nandru | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 26 | Abstinence from Flesh | 259 | Than thousand rich oblations, with libations rare,
Better the flesh of slaughtered beings not to share. | Not to kill and eat (the flesh of) an animal, is better than the pouring forth of ghee etc., in a thousand sacrifices. |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 26 | புலான்மறுத்தல் | 260 | கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும். | புலால் உண்ணாதவர்களையும், அதற்காக உயிர்களைக் கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும். | ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.
எந்த உயிரையும் கொல்லாதவனாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவனாய் வாழ்பவனை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும். | Arattuppal | Thuravaraviyal | Pulaanmaruththal | kollaan pulaalai maRuththaanaik kaikooppi
ellaa uyirunh thozhum | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 26 | Abstinence from Flesh | 260 | Who slays nought,- flesh rejects- his feet before
All living things with clasped hands adore. | All creatures will join their hands together, and worship him who has never taken away life, nor eaten flesh. |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 27 | தவம் | 261 | உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு. | எதையும் தாங்கும் இதயத்தைப் பெற்றிருப்பதும், எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் ``தவம்'' என்று கூறப்படும். | தான் பெற்ற துன்பத்தைப் பொறுத்தலும் மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகியவைகளே தவத்திற்கு வடிவமாகும்.
பிறரால் தனக்குச் செய்யப்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வது, துன்பம் செய்தவர்க்கும் துன்பம் செய்யாதிருப்பது என்னும் இவ்வளவுதான், தவம் என்பதன் இலக்கணம். | Arattuppal | Thuravaraviyal | Thavam | utranhoai noandral uyirkkuRukaN seyyaamai
atrae thavaththiR guru | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 27 | Penance | 261 | To bear due penitential pains, while no offence
He causes others, is the type of 'penitence'. | The nature of religious discipline consists, in the endurance (by the ascetic) of the sufferings which it brings on himself, and in abstaining from giving pain to others. |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 27 | தவம் | 262 | தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது. | உறுதிப்பாடும், மன அடக்கமும் உடையவருக்கே தவத்தின் பெருமை வாய்க்கும். எனவே கட்டுப்பாடான ஒழுக்கம் இல்லாதவர்கள், தவத்தை மேற்கொள்வது வீண் செயலேயாகும். | தவக்கோலமும் தவஒழுக்கமும் உடையவர்க்கே பொருந்துவதாகும்; அக் கோலத்தை தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும்.
முற்பிறப்பில் தவ நோக்கம் பெற்றிருந்தவர்க்கே இப்பிறப்பில் தவம் செய்ய நேரும். அத்தகைய நோக்கம் இல்லாதவர், இப்போது தவத்தை மேற்கொள்வதும் வீண்தான். | Arattuppal | Thuravaraviyal | Thavam | thavamum thavamutaiyaarkku aakum adhanai
aqdhilaar maeRkoL vadhu | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 27 | Penance | 262 | To 'penitents' sincere avails their 'penitence';
Where that is not, 'tis but a vain pretence. | Austerities can only be borne, and their benefits enjoyed, by those who have practised them (in a former birth); it will be useless for those who have not done so, to attempt to practise them (now). |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 27 | தவம் | 263 | துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம். | துறவிகளுக்குத் துணை நிற்க விரும்புகிறோம் என்பதற்காகத் தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய தவ ஒழுக்கத்தை மற்றவர்கள் மறந்து விடக் கூடாது. | துறந்தவர்க்கு உணவு முதலியனக் கொடுத்து உதவவேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்தலை மறந்தார்களோ?.
துறவு மேற்கொண்டவர்களுக்கு உதவ எண்ணி, மற்றவர்கள் தவம் செய்வதை மறந்து இருப்பார்கள் போலும். | Arattuppal | Thuravaraviyal | Thavam | thuRandhaarkkuth thuppuravu vaeNdi maRandhaarkol
matrai yavarkaL thavam | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 27 | Penance | 263 | Have other men forgotten 'penitence' who strive
To earn for penitents the things by which they live?. | It is to provide food etc, for the ascetics who have abandoned (the desire of earthly possessions) that other persons have forgotten (to practise) austerity ?. |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 27 | தவம் | 264 | ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும். | மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்டு தவமென்னும் நோன்பு வலிமையுடையதாக அமைந்தால்தான், எண்ணிய மாத்திரத்தில் பகைவரை வீழ்த்தவும் நண்பரைக் காக்கவும் முடியும். | தீமை செய்யும் பகைவரை அடக்குதலும் நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவத்தின் வலிமையால் உண்டாகும்.
பகைவர்களை மாற்றவும், நண்பர்களைப் பெருக்கவும் எண்ணினால், தவத்தால் அதைச் செய்ய முடியும். | Arattuppal | Thuravaraviyal | Thavam | onnaarth theRalum uvandhaarai aakkalum
eNNin thavaththaan varum | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 27 | Penance | 264 | Destruction to his foes, to friends increase of joy.
The 'penitent' can cause, if this his thoughts employ. | If (the ascetic) desire the destruction of his enemies, or the aggrandizement of his friends, it will be effected by (the power of) his austerities. |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 27 | தவம் | 265 | வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும். | உறுதிமிக்க நோன்பினால் விரும்பியதை விரும்பியவாறு அடைய முடியுமாதலால், அது விரைந்து முயன்று செய்யப்படுவதாகும். | விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்.
விரும்பியவற்றை விரும்பியபடியே அடைய முடியுமாதலால் இப்பூமியில் தவம் முயன்று செய்யப்படும். | Arattuppal | Thuravaraviyal | Thavam | vaeNdiya vaeNtiyaang keydhalaal seydhavam
eeNdu muyalap padum | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 27 | Penance | 265 | That what they wish may, as they wish, be won,
By men on earth are works of painful 'penance' done. | Religious dislipline is practised in this world, because it secures the attainment of whatever one may wish to enjoy (in the world to come). |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 27 | தவம் | 266 | தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு. | அடக்கமும், அன்பு நெறியும், துன்பங்களைத் தாங்கும் பொறுமையும் வாய்ந்த தவம் மேற்கொண்டவர்கள் மட்டுமே தமது கடமையைச் செய்பவர்கள்; அதற்கு மாறானவர்கள், ஆசையால் அலைக்கழிக்கப்பட்டு வீணான செயல்களில் ஈ.டுபடுபவர்கள். | தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர், அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே.
தவத்தைச் செய்பவரே தமக்குரிய செயலைச் செய்தவர்; மற்றவர்களோ ஆசை வலைப்பட்டு வீணானவற்றைச் செய்தவர் ஆவர். | Arattuppal | Thuravaraviyal | Thavam | thavanhjseyvaar thangarumanhj seyvaarmaR Rallaar
avanjeyvaar aasaiyut pattu | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 27 | Penance | 266 | Who works of 'penance' do, their end attain,
Others in passion's net enshared, toil but in vain. | Those discharge their duty who perform austerities; all others accomplish their own destruction, through the entanglement of the desire (of riches and sensual pleasure). |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 27 | தவம் | 267 | சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. | தம்மைத் தாமே வருத்திக் கொண்டு ஒரு குறிக்கோளுக்காக நோன்பு நோற்பவர்களை எந்தத் துன்பங்கள் தாக்கினாலும் அவர்கள் சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப் போல் புகழ் பெற்றே உயர்வார்கள். | புடமிட்டு சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல் தவம் செய்கின்றவரை துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்.
நெருப்பு சுடச்சுடப் பொன்னின் ஒளி பெருகுவது போலத் துன்பம் வருத்த வருத்தத் தவம் செய்பவர்க்கு ஞானம் பெருகும். | Arattuppal | Thuravaraviyal | Thavam | sudachchudarum ponpoal oLivitum thunpanhj
sudachsudaa noaRkiR pavarkku | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 27 | Penance | 267 | The hotter glows the fining fire, the gold the brighter shines;
The pain of penitence, like fire, the soul of man refines. | Just as gold is purified as heated in the fire, will those shine, who have endured the burning of pain (in frequent austerities). |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 27 | தவம் | 268 | தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும். | ``தனது உயிர்'' என்கிற பற்றும், ``தான்'' என்கிற செருக்கும் கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும். | தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்.
தன் உயிர், தான் என்னும் எண்ணம் முற்றும் இல்லாதவனைப் பிற உயிர்கள் எல்லாம் தொழும். | Arattuppal | Thuravaraviyal | Thavam | thannuyir thaan-aRap petraanai Enaiya
mannuyi rellaanh thozhum | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 27 | Penance | 268 | Who gains himself in utter self-control,
Him worships every other living soul. | All other creatures will worship him who has attained the control of his own soul. |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 27 | தவம் | 269 | கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல். | எத்தனை துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாக நிற்கும் ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள். | தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால் ) எமனை வெல்லுதலும் கைகூடும்.
தவத்தால் வரும் வலிமையைப் பெற்றவரால் எமனையும் வெல்ல முடியும். | Arattuppal | Thuravaraviyal | Thavam | kootram kudhiththalum kaikootum noatralin
aatral thalaippat tavarkkul | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 27 | Penance | 269 | The E'en over death the victory he may gain,
If power by penance won his soul obtain. | Those who have attained the power which religious discipline confers, will be able also to pass the limit of Yama, (the God of death). |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 27 | தவம் | 270 | இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர். | ஆற்றலற்றவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம், மன உறுதி கொண்டவர் சிலராக இருப்பதும், உறுதியற்றவர் பலராக இருப்பதும் தான். | ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.
பிறர் செய்யும்தீமைகளைப் பொறுத்துக் கொள்வதும், அவர்க்குத் தீமை செய்யாது இருப்பதும் ஆகிய தவத்தைச் செய்பவர் சிலர்; செய்யாதவர் பலர்; ஏதுமற்ற ஏழைகள் பலராக இருப்பதற்கு இதுவே காரணம். | Arattuppal | Thuravaraviyal | Thavam | ilarpala raakiya kaaraNam noaRpaar
silarpalar noalaa thavar | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 27 | Penance | 270 | The many all things lack! The cause is plain,
The 'penitents' are few. The many shun such pain. | Because there are few who practise austerity and many who do not, there are many destitute and few rich in this world. |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 28 | கூடாவொழுக்கம் | 271 | வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும். | ஒழுக்க சீலரைப் போல உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து அவரது உடலில் கலந்துள்ள நிலம், நீர், தீ, காற்று, வெளி எனப்படும் பஞ்சபூதங்களும் தமக்குள் சிரித்துக் கொள்ளும். | வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.
வஞ்ச மனத்தவனின் திருட்டு நடத்தையைக் கண்டு அவன் உடம்போடு கலந்து இருக்கும் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களும் தமக்குள் சிரிக்கும். | Arattuppal | Thuravaraviyal | Koodaavozhukkam | vanja manaththaan patitrozhukkam poodhangaL
aindhum akaththae nakum | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 28 | Imposture | 271 | Who with deceitful mind in false way walks of covert sin,
The five-fold elements his frame compose, decide within. | The five elements (of his body) will laugh within him at the feigned conduct of the deceitful minded man. |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 28 | கூடாவொழுக்கம் | 272 | வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின். | தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர், துறவுக்கோலம் பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை. | தன் மனம் தான் அறிந்த குற்றத்தில் தங்குமானால் வானத்தைப் போல் உயர்ந்துள்ள தவக்கோலம் ஒருவனுக்கு என்ன பயன் செய்யும்?.
தன் மீது தன் நெஞ்சமே குற்றம் சொல்லுமானால் மேலான நிலையினால் வரும் பலன்தான் என்ன?. | Arattuppal | Thuravaraviyal | Koodaavozhukkam | vaanuyar thoatram evanseyyum thannenjam
thaanaRi kutrap patin | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 28 | Imposture | 272 | What gain, though virtue's semblance high as heaven his fame exalt,
If heart dies down through sense of self-detected fault?. | What avails an appearance (of sanctity) high as heaven, if his mind suffers (the indulgence) of conscious sin. |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 28 | கூடாவொழுக்கம் | 273 | வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. | மனத்தை அடக்க முடியாதவர் துறவுக்கோலம் பூணுவது, பசு ஒன்று புலித்தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும். | மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை பசு மேய்ந்தாற் போன்றது.
கெட்டவன் நல்லவன் போல நடிப்பது, பசு புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு மேய்ந்தது போலாகும். | Arattuppal | Thuravaraviyal | Koodaavozhukkam | valiyil nilaimaiyaan valluruvam petram
puliyinthoal poarththumaeynh thatru | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 28 | Imposture | 273 | As if a steer should graze wrapped round with tiger's skin,
Is show of virtuous might when weakness lurks within. | The assumed appearance of power, by a man who has no power (to restrain his senses and perform austerity), is like a cow feeding on grass covered with a tiger's skin. |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 28 | கூடாவொழுக்கம் | 274 | தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. | புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளைக் கண்ணி வைத்துப் பிடிப்பதற்கும், தவக்கோலத்தில் இருப்பவர்கள் தகாத செயல்களில் ஈ.டுபடுவதற்கும் வேறுபாடு இல்லை. | தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயச்செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.
மேலான நிலையில் இருந்தும் கீழான செயல்களைச் செய்வது, வேட்டை ஆடுபவர் புதருக்குப் பின் மறைந்து நின்று பறவைகளைப் பிடிப்பது போலாம். | Arattuppal | Thuravaraviyal | Koodaavozhukkam | thavamaRaindhu allavai seydhal pudhalmaRaindhu
vaettuvan puLsimizhth thatru | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 28 | Imposture | 274 | 'Tis as a fowler, silly birds to snare, in thicket lurks.
When, clad in stern ascetic garb, one secret evil works. | He who hides himself under the mask of an ascetic and commits sins, like a sportsman who conceals himself in the thicket to catch birds. |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 28 | கூடாவொழுக்கம் | 275 | பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும். | எத்தகைய செயல் புரிந்துவிட்டோம் என்று தமக்குத் தாமே வருந்த வேண்டிய துன்பம், பற்றுகளை விட்டு விட்டதாகப் பொய்கூறி, உலகை ஏமாற்றுவோர்க்கு வந்து சேரும். | பற்றுக்களைத் துறந்தோம் என்று சொல்கின்றவரின் பொய்யொழுக்கம் என்ன செய்தோம் என்ன செய்தோம் என்று வருந்தும் படியான துன்பம் பலவும் தரும்.
எத்தகைய பற்றுகளும் இல்லாதவர் என்று வாயால் சொல்லிச் செயலால் தவறாக வாழ்பவரின் வாழ்க்கை, பிறகு ஏன் அப்படிச் செய்தோம் ஏன் அப்படிச் செய்தோம் என்று வருந்தும்படி பல துன்பங்களையும் தரும். | Arattuppal | Thuravaraviyal | Koodaavozhukkam | patratraem enpaar patitrozhukkam etretrendru
Edham palavunh tharum | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 28 | Imposture | 275 | 'Our souls are free,' who say, yet practise evil secretly,
'What folly have we wrought!' by many shames o'er-whelmed, shall cry. | The false conduct of those who say they have renounced all desire will one day bring them sorrows that will make them cry out, "Oh! what have we done, what have we done". |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 28 | கூடாவொழுக்கம் | 276 | நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல். | உண்மையிலேயே மனதாரப் பற்றுகளைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வாழ்கின்ற வஞ்சகர்களைவிட இரக்கமற்றவர் யாருமில்லை. | மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வஞ்சனைச் செய்து வாழ்கின்றவரைப் போல் இரக்கமற்றவர் எவரும் இல்லை.
மனத்துள் எதையும் வெறுக்காமல், வெளியே வெறுத்தவர் போல் ஏமாற்றி வாழும் மனிதரைக் காட்டிலும் கொடியவர், இவ்வுலகத்தில் இல்லை. | Arattuppal | Thuravaraviyal | Koodaavozhukkam | nenjin thuRavaar thuRandhaarpoal vanjiththu
vaazhvaarin van-kaNaar il | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 28 | Imposture | 276 | In mind renouncing nought, in speech renouncing every tie,
Who guileful live,- no men are found than these of 'harder eye'. | Amongst living men there are none so hard-hearted as those who without to saking (desire) in their heart, falsely take the appearance of those who have forsaken (it). |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 28 | கூடாவொழுக்கம் | 277 | புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
முக்கிற் கரியார் உடைத்து. | வெளித்தோற்றத்துக்குக் குன்றிமணி போல் சிவப்பாக இருந்தாலும், குன்றிமணியின் முனைபோலக் கறுத்த மனம் படைத்தவர்களும் உலகில் உண்டு. | புறத்தில் குன்றிமணிப்போல் செம்மையானவராய் காணப்பட்டாராயினும் அகத்தில் குன்றிமணியின் மூக்குப்போல் கருத்திருப்பவர் உலகில் உணடு.
குன்றிமணியின் மேனியைப் போல் வெளித் தோற்றத்தில் நல்லவராயும், குன்றிமணியின் மூக்கு கறுத்து இருப்பதுபோல் மனத்தால் கரியவராகவும் வாழ்வோர் இவ்வுலகில் இருக்கவே செய்கின்றனர். | Arattuppal | Thuravaraviyal | Koodaavozhukkam | puRangundri kaNdanaiya raenum agangundri
mukkiR kariyaar udaiththu | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 28 | Imposture | 277 | Outward, they shine as 'kunri' berry's scarlet bright;
Inward, like tip of 'kunri' bead, as black as night. | (The world) contains persons whose outside appears (as fair) as the (red) berry of the Abrus, but whose inside is as black as the nose of that berry. |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 28 | கூடாவொழுக்கம் | 278 | மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர். | நீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போல, மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர் உலவுகின்றனர். | மனத்தில் மாசு இருக்க, தவத்தால் மாண்பு பெற்றவரைப்போல், நீரில் மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர்.
மனம் முழுக்க இருட்டு; வெளியே தூய நீரில் குளித்து வருபவர்போல் போலி வெளிச்சம் - இப்படி வாழும் மனிதர் பலர் இருக்கின்றனர். | Arattuppal | Thuravaraviyal | Koodaavozhukkam | manaththadhu maasaaka maaNdaar neeraadi
maRaindhozhuku maandhar palar | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 28 | Imposture | 278 | Many wash in hollowed waters, living lives of hidden shame;
Foul in heart, yet high upraised of men in virtuous fame. | There are many men of masked conduct, who perform their ablutions, and (make a show) of greatness, while their mind is defiled (with guilt). |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 28 | கூடாவொழுக்கம் | 279 | கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல். | நேராகத் தோன்றும் அம்பு, கொலைச் செயல் புரியும். வளைந்து தோன்றும் யாழ், இசை, இன்பம் பயக்கும். அது போலவே மக்களின் பண்புகளையும் அவர்களது செயலால் மட்டுமே உணர்ந்து கொள்ள வேண்டும். | நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது. மக்களின் பண்புகளையும் செயல்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும்.
வடிவால் நேரானது என்றாலும் செயலால் அம்பு கொடியது. கழுத்தால் வளைந்தது ஆயினும் செயலால் யாழ் இனிது. அதனால் தோற்றத்தால் அன்றிச் செயலால் மனிதரை எடை போடுக. | Arattuppal | Thuravaraviyal | Koodaavozhukkam | kaNaikotidhu yaazhkoadu sevvidhuaanG kanna
vinaipatu paalaal koLal | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 28 | Imposture | 279 | Cruel is the arrow straight, the crooked lute is sweet,
Judge by their deeds the many forms of men you meet. | As, in its use, the arrow is crooked, and the curved lute is straight, so by their deeds, (and not by their appearance) let (the uprightness or crookedness of) men be estimated. |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 28 | கூடாவொழுக்கம் | 280 | மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின். | உலகத்தாரின் பழிப்புக்கு உள்ளாகும் செயல்களைத் துறக்காமல் ஒரு துறவி, தனது தலையை மொட்டையடித்துக் கொண்டோ, சடாமுடி வளர்த்துக் கொண்டோ கோலத்தை மட்டும் மாற்றிக் கொள்வது ஒரு ஏமாற்று வித்தையே ஆகும். | உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டா.
உயர்ந்தோர் வெறுத்தவற்றை மனத்தால் ஒதுக்கிவிட்ட பின் தலைமுடியைச் சிரைத்தல், நீள வளர்த்தல் என்பன பற்றி எண்ண வேண்டா. | Arattuppal | Thuravaraviyal | Koodaavozhukkam | mazhiththalum neettalum vaeNdaa ulagam
pazhiththadhu ozhiththu vitin | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 28 | Imposture | 280 | What's the worth of shaven head or tresses long,
If you shun what all the world condemns as wrong?. | There is no need of a shaven crown, nor of tangled hair, if a man abstain from those deeds which the wise have condemned. |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 29 | கள்ளாமை | 281 | எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு. | எந்தப் பொருளையும் களவாடும் நினைவு தன் நெஞ்சை அணுகாமல் பார்த்துக் (காத்துக்) கொள்பவனே இகழ்ச்சிக்கு ஆட்படாமல் வாழ முடியும். | பிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும்.
அடுத்தவர் நம்மை இகழக்கூடாது என்று எண்ணுபவன், அடுத்தவர்க்குரிய எந்தப் பொருளையும் மனத்தால்கூடத் திருட நினைக்கக்கூடாது. | Arattuppal | Thuravaraviyal | Kallaamai | eLLaamai vaeNtuvaan enpaan enaiththondrum
kaLLaamai kaakkadhan nenju | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 29 | The Absence of Fraud | 281 | Who seeks heaven's joys, from impious levity secure,
Let him from every fraud preserve his spirit pure. | Let him, who desires not to be despised, keep his mind from (the desire of) defrauding another of the smallest thing. |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 29 | கள்ளாமை | 282 | உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல். | பிறருக்குரிய பொருளைச் சூழ்ச்சியினால் கவர்ந்து கொள்ளலாமா என்று ஒருவன் நினைப்பதேகூடக் குற்றமாகும். | குற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே, அதானால் பிறன் பொருளை அவன் அறியாதப் வகையால் வஞ்சித்துக்கொள்வோம் என்று எண்ணாதிருக்க வேண்டும்.
அடுத்தவர் பொருளை அவருக்குத் தெரியாமல் திருடுவோம் என்று மனத்தால் நினைப்பதும் தீமையானது. | Arattuppal | Thuravaraviyal | Kallaamai | uLLaththaal uLLalum theedhae piRanporuLaik
kaLLaththaal kaLvaem enal | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 29 | The Absence of Fraud | 282 | 'Tis sin if in the mind man but thought conceive;
'By fraud I will my neighbour of his wealth bereave'. | Even the thought (of sin) is sin; think not then of crafiily stealing the property of another. |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 29 | கள்ளாமை | 283 | களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும். | கொள்ளயடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்து கொண்டு போய்விடும். | களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.
திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும். | Arattuppal | Thuravaraviyal | Kallaamai | kaLavinaal aakiya aakkam aLaviRandhu
aavadhu poalak kedum | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 29 | The Absence of Fraud | 283 | The gain that comes by fraud, although it seems to grow
With limitless increase, to ruin swift shall go. | The property, which is acquired by fraud, will entirely perish, even while it seems to increase. |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 29 | கள்ளாமை | 284 | களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும். | களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும். | களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.
அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும். | Arattuppal | Thuravaraviyal | Kallaamai | kaLavin-kaN kandriya kaadhal viLaivin-kaN
veeyaa vizhumam tharum | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 29 | The Absence of Fraud | 284 | The lust inveterate of fraudful gain,
Yields as its fruit undying pain. | The eager desire of defrauding others will, when it brings forth its fruit, produce undying sorrow. |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 29 | கள்ளாமை | 285 | அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். | மறந்திருக்கும் நேரம் பார்த்துப் பிறர் பொருளைக் களவாட எண்ணுபவரிடத்தில், அருள் கருதி அன்பாக நடக்கும் பண்பு இருக்காது. | அருளைப் பெரிதாகக்கருதி அன்பு உடையவராய் நடத்தல், பிறருடைய பொருளைக்கவர எண்ணி அவர் சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை.
அடுத்தவர் பொருளைத் திருட எண்ணி, அவர் தளரும் நேரத்தை எதிர்பார்த்து இருப்போர், அருள் மீது பற்று உள்ளவராய் வாழ முடியாது. | Arattuppal | Thuravaraviyal | Kallaamai | aruLkarudhi anputaiya raadhal poruLkarudhip
pochchaappup paarppaarkaN il | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 29 | The Absence of Fraud | 285 | 'Grace' is not in their thoughts, nor know they kind affection's power,
Who neighbour's goods desire, and watch for his unguarded hour. | The study of kindness and the exercise of benevolence is not with those who watch for another's forgetfulness, though desire of his property. |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 29 | கள்ளாமை | 286 | அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர். | ஓர் எல்லைக்குட்பட்டு வாழ்வைச் செம்மையாக அமைத்துக் கொள்ளாதவர்கள், களவு செய்து பிறர் பொருளைக் கொள்வதில் நாட்டமுடையவராவார்கள். | களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்.
உயிர்களை நேசிக்கும் ஆசை இல்லாதவரே அடுத்தவர் பொருளைத் திருடும் பேராசை உடையவர் ஆவர். | Arattuppal | Thuravaraviyal | Kallaamai | aLavin-kaN nindrozhukal aatraar kaLavin-kaN
kandriya kaadha lavar | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 29 | The Absence of Fraud | 286 | They cannot walk restrained in wisdom's measured bound,
In whom inveterate lust of fraudful gain is found. | They cannot walk steadfastly, according to rule, who eagerly desire to defraud others. |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 29 | கள்ளாமை | 287 | களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல். | அளவறிந்து வாழ்க்கை நடத்துகிற ஆற்றலுடையவர்களிடம், களவாடுதல் எனும் சூதுமதி கிடையாது. | களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.
உயிர்களை நேசிக்கும் ஆசை கொண்டவரிடம், அடுத்தவர் பொருளைத் திருடும் இருண்ட அறிவு இராது. | Arattuppal | Thuravaraviyal | Kallaamai | kaLavennum kaaraRi vaaNmai aLavennum
aatral purindhaarkaNda il | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 29 | The Absence of Fraud | 287 | Practice of fraud's dark cunning arts they shun,
Who long for power by 'measured wisdom' won. | That black-knowledge which is called fraud, is not in those who desire that greatness which is called rectitude. |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 29 | கள்ளாமை | 288 | அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு. | நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும்; கொள்ளையடிப்போர் நெஞ்சமோ குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும். | அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும் அறம் போல் களவு செய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சம் நிற்கும்.
உயிர்களை நேசிக்கும் உள்ளத்துள் அறம் நிலைத்து இருப்பது போல, அடுத்தவர் பொருளைத் திருட எண்ணுபவன் உள்ளத்துள் வஞ்சகம் இருக்கும். | Arattuppal | Thuravaraviyal | Kallaamai | aLavaRindhaar nenjath thaRampoala niRkum
kaLavaRindhaar nenjil karavu | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 29 | The Absence of Fraud | 288 | As virtue dwells in heart that 'measured wisdom' gains;
Deceit in hearts of fraudful men established reigns. | Deceit dwells in the mind of those who are conversant with fraud, even as virtue in the minds of those who are conversant with rectitude. |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 29 | கள்ளாமை | 289 | அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர். | அளவு என்பதைத் தவிர வேறு நல்வழிகளை நாடாதவர்கள், வரம்பு கடந்த செயல்களால் வாழ்விழந்து வீழ்வார்கள். | களவு செய்தலைத் தவிர மற்ற நல்லவழிகளைத் நம்பித் தெளியாதவர் அளவு அல்லாத செயல்களைச் செய்து அப்போதே கெட்டழிவர்.
அடுத்தவர் பொருளைத் திருடுவதைத் தவிர வேறொன்றும் தெரியாதவர் தகுதி அற்ற அந்தச் செயல்களாலேயே அழிந்து போவார். | Arattuppal | Thuravaraviyal | Kallaamai | aLavalla seydhaangae Veevar KaLavalla
matraiya thaetraa thavar | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 29 | The Absence of Fraud | 289 | Who have no lore save that which fraudful arts supply,
Acts of unmeasured vice committing straightway die. | Those, who are acquainted with nothing but fraud, will perish in the very commission of transgression. |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 29 | கள்ளாமை | 290 | கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
தள்ளாது புத்தே ளுளகு. | களவாடுபவர்க்கு உயிர் வாழ்வதேகூடத் தவறிப்போகும்; களவை நினைத்தும் பார்க்காதவர்க்கோ, புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது. | களவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும், களவு செய்யாமல் வாழ்வோர்க்கு தேவருலகும் வாய்க்கத் தவறாது.
திருடுபவரை அவரது உயிரும் வெறுக்கும்; திருடாதவரையோ தேவர் உலகமும் வெறுக்காது. | Arattuppal | Thuravaraviyal | Kallaamai | kaLvaarkkuth thaLLum uyirnhilai kaLvaarkkuth
thaLLaadhu puththae LuLagu | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 29 | The Absence of Fraud | 290 | The fraudful forfeit life and being here below;
Who fraud eschew the bliss of heavenly beings know. | Even their body will fail the fraudulent; but even the world of the gods will not fail those who are free from fraud. |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 30 | வாய்மை | 291 | வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல். | பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும். | வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.
உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும். | Arattuppal | Thuravaraviyal | Vaaimai | vaaimai enappaduvadhu yaadhenin yaadhondrum
theemai ilaadha solal | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 30 | Veracity | 291 | You ask, in lips of men what 'truth' may be;
'Tis speech from every taint of evil free. | Truth is the speaking of such words as are free from the least degree of evil (to others). |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 30 | வாய்மை | 292 | பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின். | குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும். | குற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால் பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க இடத்தைப் பெறும்.
குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம். | Arattuppal | Thuravaraviyal | Vaaimai | poimaiyum vaaimai yitaththa puraidheerndha
nanmai payakkum enin | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 30 | Veracity | 292 | Falsehood may take the place of truthful word,
If blessing, free from fault, it can afford. | Even falsehood has the nature of truth, if it confer a benefit that is free from fault. |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 30 | வாய்மை | 293 | தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும். | மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும். | ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.
பொய் என்று உள்ளம் உணர்த்துவதைச் சொல்ல வேண்டா. சொன்னால், அதைப் பொய் என்று உலகு அறிய நேரும்போது தன் மனமே தன்னைச் சுடும். | Arattuppal | Thuravaraviyal | Vaaimai | thannenhj saRivadhu poiyaRka poiththapin
thannhenjae thannaich sudum | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 30 | Veracity | 293 | Speak not a word which false thy own heart knows
Self-kindled fire within the false one's spirit glows. | Let not a man knowingly tell a lie; for after he has told the lie, his mind will burn him (with the memory of his guilt). |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 30 | வாய்மை | 294 | உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன். | மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள். | ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.
உள்ளம் அறியப் பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அவன் உயர்ந்தவர் உள்ளத்துள் எல்லாம் குடி இருப்பான். | Arattuppal | Thuravaraviyal | Vaaimai | uLLaththaaR poiyaa thozhukin ulakaththaar
uLLaththu Lellaam uLan | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 30 | Veracity | 294 | True to his inmost soul who lives,- enshrined
He lives in souls of all mankind. | He who, in his conduct, preserves a mind free from deceit, will dwell in the minds of all men. |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 30 | வாய்மை | 295 | மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை. | உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும், தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள். | ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்.
உள்ளம் அறிய உண்மை பேசுபவன், தவமும் தானமும் செய்பவரைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆவான். | Arattuppal | Thuravaraviyal | Vaaimai | manaththotu vaaimai mozhiyin thavaththotu
thaananjey vaarin thalai | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 30 | Veracity | 295 | Greater is he who speaks the truth with full consenting mind.
Than men whose lives have penitence and charity combined. | He, who speaks truth with all his heart, is superior to those who make gifts and practise austerities. |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 30 | வாய்மை | 296 | பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும். | பொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை; என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்த வாழ்வேயாகும். | ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.
பொய் சொல்லாமல் இருப்பது போலப் புகழ் தருவது இல்லை. அது அவன் அறியாமலேயே அவனுக்கு எல்லாப் புண்ணியங்களையும் தரும். | Arattuppal | Thuravaraviyal | Vaaimai | poiyaamai anna pukazhillai eyyaamai
ellaa aRamunh tharum | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 30 | Veracity | 296 | No praise like that of words from falsehood free;
This every virtue yields spontaneously. | There is no praise like the praise of never uttering a falsehood: without causing any suffering, it will lead to every virtue. |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 30 | வாய்மை | 297 | பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று. | செய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை தருவதாகும். | பொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும் நல்லது ஆகும்.
பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் பிற அறங்களைச் செய்யாமல் இருப்பதுகூட, அவனுக்கு நல்லதாகிவிடும். | Arattuppal | Thuravaraviyal | Vaaimai | poiyaamai poiyaamai aatrin aRampiRa
seyyaamai seyyaamai nandru | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 30 | Veracity | 297 | If all your life be utter truth, the truth alone,
'Tis well, though other virtuous acts be left undone. | If a man has the power to abstain from falsehood, it will be well with him, even though he practise no other virtue. |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 30 | வாய்மை | 298 | புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும். | நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும். | புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.
உடம்பு தண்ணீரால் சுத்தமாகும்; உள்ளம் உண்மையால் சுத்தமாகும். | Arattuppal | Thuravaraviyal | Vaaimai | puRaLthooimai neeraan amaiyum aganthooimai
vaaimaiyaal kaaNap padum | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 30 | Veracity | 298 | Outward purity the water will bestow;
Inward purity from truth alone will flow. | Purity of body is produced by water and purity of mind by truthfulness. |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 30 | வாய்மை | 299 | எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு. | புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும். | (புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.
உலகத்து இருட்டைப் போக்கும் விளக்குகள், விளக்கு ஆகா; பொய் சொல்லாமை என்னும் விளக்கே சான்றோர்க்கு விளக்கு ஆகும். | Arattuppal | Thuravaraviyal | Vaaimai | ellaa viLakkum viLlakkalla saandroarkkup
poiyaa viLakkae viLakku | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 30 | Veracity | 299 | Every lamp is not a lamp in wise men's sight;
That's the lamp with truth's pure radiance bright. | All lamps of nature are not lamps; the lamp of truth is the lamp of the wise. |
1 | அறத்துப்பால் | 3 | துறவறவியல் | 30 | வாய்மை | 300 | யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற. | வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும். | யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிடத் எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை.
சிறந்தவை என்று நான் கண்டு அறிந்த நூல்களுள் சொல்லப்பட்டவற்றுள், உண்மையைவிட, நல்லதாகச் சொல்லப்பட்ட அறம் வேறு ஒன்றும் இல்லை. | Arattuppal | Thuravaraviyal | Vaaimai | yaameyyaak kaNtavatruL illai enaiththondrum
vaaimaiyin nalla piRa | 1 | Virtue | 3 | Ascetic Virtue | 30 | Veracity | 300 | Of all good things we've scanned with studious care,
There's nought that can with truthfulness compare. | Amidst all that we have seen (described) as real (excellence), there is nothing so good as truthfulness. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.