paal_en
int64 1
3
| paal
stringclasses 3
values | iyal_en
int64 1
13
| iyal
stringclasses 13
values | athikaaram_en
int64 1
133
| athikaaram
stringclasses 132
values | kural_en
int64 1
1.33k
| kural
stringlengths 43
78
| porul
stringlengths 47
255
| vilakkam
stringlengths 155
457
| division_transliteration
stringclasses 3
values | chapter_transliteration
stringclasses 13
values | section_transliteration
stringclasses 131
values | couplet_transliteration
stringlengths 51
84
| division_number
int64 1
3
| division
stringclasses 3
values | chapter_number
int64 1
13
| chapter
stringclasses 13
values | section_number
int64 1
133
| section
stringclasses 132
values | couplet_number
int64 1
1.33k
| couplet
stringlengths 56
156
| explanation
stringlengths 38
236
|
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
3 | காமத்துப்பால் | 13 | கற்பியல் | 131 | புலவி | 1,301 | புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது. | ஊடல் கொள்வதால் அவர் துன்ப நோயினால் துடிப்பதைச் சிறிது நேரம் காண்பதற்கு அவரைத் தழுவிடத் தயங்கிப் பிணங்குவாயாக | ( ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக.
நாம் ஊடும்போது அவர் அடையும் காதல் வேதனையை நாமும் கொஞ்சம் பார்க்கலாம்; அதனால் அவரைத் தழுவாதே; ஊடல் செய். | Kamattuppal | Karpiyal | Pulavi | pullaa thiraaap pulaththai avar-urum
allalnoai kaankam siridhu | 3 | Love | 13 | The Post-marital love | 131 | Pouting | 1,301 | Be still reserved, decline his profferred love;
A little while his sore distress we 'll prove. | Let us witness awhile his keen suffering; just feign dislike and embrace him not. |
3 | காமத்துப்பால் | 13 | கற்பியல் | 131 | புலவி | 1,302 | உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல். | ஊடலுக்கும் கூடலுக்கும் இடையில் உள்ள காலம் உணவில் இடும் உப்பு போல் ஓரளவுடன் இருக்க வேண்டும். அந்தக் கால அளவு நீடித்தால் உணவில் உப்பு மிகுதியானதற்கு ஒப்பாக ஆகிவிடும். | உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை அளவு கடந்து நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப் போன்றது.
உணவின் அளவிற்கு ஏற்ப உப்பின் அளவு அமைவதை போல், கலவி இன்பத்திற்கு வேண்டும் அளவிற்கு ஏற்ப ஊடல் அமையட்டும்; அதை அளவு கடந்து கொஞ்சம் நீட்டினாலும், உப்பின் அளவைக் கூட்டுவது போல் ஆகும். | Kamattuppal | Karpiyal | Pulavi | uppamain thatraal pulavi adhusiridhu
mikkatraal neela vidal | 3 | Love | 13 | The Post-marital love | 131 | Pouting | 1,302 | A cool reserve is like the salt that seasons well the mess,
Too long maintained, 'tis like the salt's excess. | A little dislike is like salt in proportion; to prolong it a little is like salt a little too much. |
3 | காமத்துப்பால் | 13 | கற்பியல் | 131 | புலவி | 1,303 | அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல். | ஊடல் கொண்டவரின் ஊடல் நீக்கித் தழுவாமல் விடுதல் என்பது, ஏற்கனவே துன்பத்தால் வருந்துவோரை மேலும் துன்பநோய்க்கு ஆளாக்கி வருத்துவதாகும் | தம்மோடு பிணங்கியவரை ஊடலுணர்த்தித் தழுவாமல் விடுதல், துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்ப நோய் செய்து வரத்தினாற் போன்றது.
தன்னுடன் ஊடல் கொண்ட மனைவியின் ஊடலை நீக்கிக் கூடாமல் போவது, ஏற்கனவே துன்பப்பட்டவர்களுக்கு மேலும் அதிகத் துன்பத்தைக் கொடுத்தது போலாம். | Kamattuppal | Karpiyal | Pulavi | alandhaarai allalnoai seydhatraal thammaip
pulandhaaraip pullaa vidal | 3 | Love | 13 | The Post-marital love | 131 | Pouting | 1,303 | 'Tis heaping griefs on those whose hearts are grieved;
To leave the grieving one without a fond embrace. | For men not to embrace those who have feigned dislike is like torturing those already in agony. |
3 | காமத்துப்பால் | 13 | கற்பியல் | 131 | புலவி | 1,304 | ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று. | ஊடல் புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும். | பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமல் இருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது.
தன்னுடன் ஊடல் கொண்ட மனைவிக்கு அவள் ஊடலைத் தெளிவுபடுத்தி, அவளுடன் கூடாமல் போவது, முன்பே நீர் இல்லாமல் வாடிய கொடியை அடியோடு அறுத்தது போலாம். | Kamattuppal | Karpiyal | Pulavi | ooti yavarai unaraamai vaatiya
valli mudhalarin thatru | 3 | Love | 13 | The Post-marital love | 131 | Pouting | 1,304 | To use no kind conciliating art when lover grieves,
Is cutting out the root of tender winding plant that droops. | Not to reconcile those who have feigned dislike is like cutting a faded creeper at its root. |
3 | காமத்துப்பால் | 13 | கற்பியல் | 131 | புலவி | 1,305 | நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து. | மலர் விழி மகளிர் நெஞ்சில் விளையும் ஊடலே பண்பார்ந்த நல்ல காதலர்க்கு அழகு சேர்க்கும். | நல்ல பண்புகள் அமைந்த நல்ல ஆடவர்க்கு அழகு, மலர் போன்ற கண்களை உடைய மகளிரின் நெஞ்சம் விளையும் ஊடலின் சிறப்பே ஆகும்.
நல்ல குணங்களால் உயர்ந்தவருக்கு அழகு தருவது, பூப்போன்ற கண்ணை உடைய மனைவியின் மனத்தே நடக்கும் ஊடலின் மிகுதியே. | Kamattuppal | Karpiyal | Pulavi | nalaththakai nallavarkku aeer pulaththakai
pooanna kannaar akaththu | 3 | Love | 13 | The Post-marital love | 131 | Pouting | 1,305 | The Even to men of good and worthy mind, the petulance
Of wives with flowery eyes lacks not a lovely grace. | An increased shyness in those whose eyes are like flowers is beautiful even to good and virtuous husbands. |
3 | காமத்துப்பால் | 13 | கற்பியல் | 131 | புலவி | 1,306 | துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று. | பெரும்பிணக்கும், சிறுபிணக்கும் ஏற்பட்டு இன்பம் தரும் காதல் வாழ்க்கை அமையாவிட்டால் அது முற்றிப் பழுத்து அழுகிய பழம் போலவும், முற்றாத இளம் பிஞ்சைப் போலவும் பயனற்றதாகவே இருக்கும். | பெரும் பிணக்கும் சிறு பிணக்கும் இல்லாவிட்டால், காமம் மிகப் பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போல் பயன்படாததாகும்.
வளர்ந்த ஊடலாகிய துனியும், இளம் ஊடலாகிய புலவியும் இல்லாது போய்விட்டால், காதல் நிறைந்த இல்லறம், முதிர்ந்த பழமும் இளங்காயும் போல் ஆகிவிடும். | Kamattuppal | Karpiyal | Pulavi | thuniyum pulaviyum illaayin kaamam
kaniyum karukkaayum atru | 3 | Love | 13 | The Post-marital love | 131 | Pouting | 1,306 | Love without hatred is ripened fruit;
Without some lesser strife, fruit immature. | Sexual pleasure, without prolonged and short-lived dislike, is like too ripe, and unripe fruit. |
3 | காமத்துப்பால் | 13 | கற்பியல் | 131 | புலவி | 1,307 | ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று. | கூடி மயங்கிக் களித்திருக்கும் இன்பமான காலத்தின் அளவு குறைந்து விடுமோ என எண்ணுவதால் ஊடலிலும் ஒருவகைத் துன்பம் காதலர்க்கு உண்டு. | கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால் ஊடியிருத்தலினும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் இருக்கின்றது.
இனிக் கலவி நீளுமோ நீளாதோ என்று எண்ணுவதால், இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலிலும் ஒரு துன்பம் உண்டு. | Kamattuppal | Karpiyal | Pulavi | oodalin untaangoar thunpam punarvadhu
needuva thandrukol endru | 3 | Love | 13 | The Post-marital love | 131 | Pouting | 1,307 | A lovers' quarrel brings its pain, when mind afraid
Asks doubtful, 'Will reunion sweet be long delayed?'. | The doubt as to whether intercourse would take place soon or not, creates a sorrow (even) in feigned dislike. |
3 | காமத்துப்பால் | 13 | கற்பியல் | 131 | புலவி | 1,308 | நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி. | நம்மை நினைத்தல்லவோ வருந்துகிறார் என்பதை உணர்ந்திடும் காதலர் இல்லாத போது வருந்துவதால் என்ன பயன்? | நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன?.
இவர் நமக்காக வருந்தினார் என்று அவ் வருத்தத்தை அறியும் அன்பரைப் பெறாதபோது, ஒருவர் வருந்துவதால் என்ன பயன்?. | Kamattuppal | Karpiyal | Pulavi | noadhal evanmatru nondhaarendru aqdhariyum
kaadhalar illaa vazhi | 3 | Love | 13 | The Post-marital love | 131 | Pouting | 1,308 | What good can grieving do, when none who love
Are there to know the grief thy soul endures?. | What avails sorrow when I am without a wife who can understand the cause of my sorrow?. |
3 | காமத்துப்பால் | 13 | கற்பியல் | 131 | புலவி | 1,309 | நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது. | நிழலுக்கு அருகில் உள்ள நீர்தான் குளிர்ந்து இனிமையாக இருக்கும்; அதுபோல அன்புள்ளவர்களிடம் கொள்ளும் ஊடல்தான் இன்பமானதாக இருக்கும். | நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது.
நீரும்கூட வெயிலுக்குக் கீழ் இராமல் நிழலுக்குக் கீழ் இருப்பது இனிமை; ஊடலும் அன்புள்ளவரிடம் மட்டுமே இனிமை ஆனது. | Kamattuppal | Karpiyal | Pulavi | neerum nizhaladhu inidhae pulaviyum
veezhunar kannae inidhu | 3 | Love | 13 | The Post-marital love | 131 | Pouting | 1,309 | Water is pleasant in the cooling shade;
So coolness for a time with those we love. | Like water in the shade, dislike is delicious only in those who love. |
3 | காமத்துப்பால் | 13 | கற்பியல் | 131 | புலவி | 1,310 | ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா. | ஊடலைத் தணிக்காமல் வாடவிட்டு வேடிக்கை பார்ப்பவருடன் கூடியிருப்போம் என்று என் நெஞ்சம் துடிப்பதற்கு அதன் அடங்காத ஆசையே காரணம். | ஊடல் கொண்டபோது உணர்த்தி மகிழ்விக்காமல் வாட விடுகின்றவரோடு என் நெஞ்சம் கூடியிருப்போம் என்று முயல்வதற்குக் காரணம் அதன் ஆசையே.
ஊடி, என் நெஞ்சை வாட விட்டிருப்பவனோடும் கூடுவோம் என்று என் நெஞ்சம் முயல்வதற்குக் காரணம் ஆசையே. | Kamattuppal | Karpiyal | Pulavi | oodal unanga viduvaaroadu en-nenjam
kooduvaem enpadhu avaa | 3 | Love | 13 | The Post-marital love | 131 | Pouting | 1,310 | Of her who leaves me thus in variance languishing,
To think within my heart with love is fond desire. | It is nothing but strong desire that makes her mind unite with me who can leave her to her own dislike. |
3 | காமத்துப்பால் | 13 | கற்பியல் | 132 | புலவி நுணுக்கம் | 1,311 | பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு. | பெண்ணாக இருப்போர் எல்லோருமே, பொதுவாக நினைத்துக் கண்களால் உண்பதால் கற்பு நெறிகெட்ட உன் பரந்த மார்பைப் பாவை நான் தழுவ மாட்டேன். | பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன்.
பெண் விரும்பியே! நீ வீதி வழி வரும் குணங்கெட்ட பெண்கள் எல்லாரும் உன் மார்பைத் தம் கண்ணால் பொதுவாக உண்பர்; அதனால் அவர்களின் எச்சிலாகிய உன் மார்பை நான் இனிச் சேரேன். | Kamattuppal | Karpiyal | Pulavi Nunukkam | penniyalaar ellaarum kannin podhu-unpar
nannen paraththa-nin maarpu | 3 | Love | 13 | The Post-marital love | 132 | Feigned Anger | 1,311 | From thy regard all womankind Enjoys an equal grace;
O thou of wandering fickle mind, I shrink from thine embrace. | You are given to prostitution; all those who are born as womankind enjoy you with their eyes in an ordinary way. I will not embrace you. |
3 | காமத்துப்பால் | 13 | கற்பியல் | 132 | புலவி நுணுக்கம் | 1,312 | ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து. | ஊடல் கொண்டிருந்தபோது அவர் தும்மினார்; ஊடலை விடுத்து அவரை ``நீடுவாழ்க'' என வாழ்த்துவேன் என்று நினைத்து. | காதலரோடு ஊடல் கொண்டிருந்தோமாக, யாம் தம்மை நெடுங்காலம் வாழ்க என்று வாய் திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார்.
நான் அவரோடு ஊடிப் பேசாமல் இருந்தேன்; நீடு வாழ்க, என்று சொல்லி அவரோடு பேசுவேன். என்று எண்ணி, வேண்டும் என்றே தும்மினார்! நானா பேசுவேன்? (ஆனாலும் வாழ்த்தினாள்). | Kamattuppal | Karpiyal | Pulavi Nunukkam | ooti irundhaemaath thumminaar yaamdhammai
neetuvaazh kenpaak karindhu | 3 | Love | 13 | The Post-marital love | 132 | Feigned Anger | 1,312 | One day we silent sulked; he sneezed: The reason well I knew;
He thought that I, to speak well pleased, Would say, 'Long life to you!'. | When I continued to be sulky he sneezed and thought I would (then) wish him a long life. |
3 | காமத்துப்பால் | 13 | கற்பியல் | 132 | புலவி நுணுக்கம் | 1,313 | கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று. | கிளையில் மலர்ந்த பூக்களைக் கட்டி நான் அணிந்து கொண்டிருந்தாலும், வேறொருத்திக்குக் காட்டுவதற்காகவே அணிந்திருக்கிறீர் எனக்கூறி சினம் கொள்வாள். | கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள்.
ஒரு மாற்றம் கருதி, ஒருமுறை, மரத்திலே மலர்ந்த பூவை மாலையாக்கிச் சூடினேன். அதற்கு அவள், நீர் விரும்பும் எவளுக்கோ அடையாளம் காட்டிச் சூடினீர் என்று சினந்து நின்றாள். | Kamattuppal | Karpiyal | Pulavi Nunukkam | koattup-pooch chootinum kaayum oruththiyaik
kaattiya sootineer endru | 3 | Love | 13 | The Post-marital love | 132 | Feigned Anger | 1,313 | I wreathed with flowers one day my brow, The angry tempest lowers;
She cries, 'Pray, for what woman now Do you put on your flowers?'. | Even if I were adorned with a garland of branch-flowers, she would say I did so to show it to another woman. |
3 | காமத்துப்பால் | 13 | கற்பியல் | 132 | புலவி நுணுக்கம் | 1,314 | யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று. | `யாரைக் காட்டிலும் உன்னிடம் நான் காதல் மிகுதியாகக் கொண்டுள்ளேன்'' என்று இயல்பாகச் சொன்னதைக் கூடக் காதலி தவறாக எடுத்துக் கொண்டு ``யாரைக்காட்டிலும் யாரைக் காட்டிலும்'' எனக் கேட்டு ஊடல் புரியத் தொடங்கி விட்டாள். | யாரையும் விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேனாக; யாரை விட...? யாரை விட..? என்று கேட்டு ஊடல் கொண்டாள்.
காதலர் எவரைக் காட்டிலும் நாம் மிகுந்த காதல் உடையவர்கள் என்றேன்; அதற்கு அவள் நான் பலரையும் காதலிப்பதாகவும், அவர்களுள் இவள்மீது அதிகக் காதல் உடையவன் என்று சொன்னதாகவும் எண்ணி, எவளைக் காட்டிலும் எவளைக் காட்டிலும் என் மீது காதல் உடையீர் என்று ஊடினாள். | Kamattuppal | Karpiyal | Pulavi Nunukkam | yaarinum kaadhalam endraenaa ootinaal
yaarinum yaarinum endru | 3 | Love | 13 | The Post-marital love | 132 | Feigned Anger | 1,314 | 'I love you more than all beside,' 'T was thus I gently spoke;
'What all, what all?' she instant cried; And all her anger woke. | When I said I loved her more than any other woman, she said "more than others, yes, more than others," and remained sulky. |
3 | காமத்துப்பால் | 13 | கற்பியல் | 132 | புலவி நுணுக்கம் | 1,315 | இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள். | இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம்'' என்று நான் சொன்னவுடன் ``அப்படியானால் மறு பிறப்பு என ஒன்று உண்டோ? அப்போது நம்மிடையே பிரிவு ஏற்படுமெனக் கூறுகிறாயா?'' எனக் கேட்டு கண்கலங்கினாள் காதலி. | இப்பிறப்பில் யாம் பிரிய மாட்டோம் என்று காதலியிடம் சொன்னேனாக, இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள்.
காதல் மிகுதியில் இந்தப் பிறவியில் நான் உன்னைப் பிரியேன் என்று சொன்னேன்; அப்படி என்றால் அடுத்த பிறவியில் பிரியப்போவதாக எண்ணிக் கண் நிறைய நீரினைக் கொண்டாள். | Kamattuppal | Karpiyal | Pulavi Nunukkam | immaip pirappil piriyalam endraenaak
kannirai neerkon danal | 3 | Love | 13 | The Post-marital love | 132 | Feigned Anger | 1,315 | 'While here I live, I leave you not,' I said to calm her fears.
She cried, 'There, then, I read your thought'; And straight dissolved in tears. | When I said I would never part from her in this life her eyes were filled with tears. |
3 | காமத்துப்பால் | 13 | கற்பியல் | 132 | புலவி நுணுக்கம் | 1,316 | உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள். | ``உன்னை நினைத்தேன்'' என்று காதலியிடம் சொன்னதுதான் தாமதம்;'' அப்படியானால் நீர் என்னை மறந்திருந்தால்தானே நினைத்திருக்க முடியும்?'' எனக்கேட்டு ``ஏன் மறந்தீர்?'' என்று அவள் ஊடல் கொண்டாள். | நினைத்தேன் என்று கூறினேன்; நினைப்புக்கு முன் மறப்பு உண்டு அன்றோ? ஏன் மறந்தீர் என்று என்னைத் தழுவாமல் ஊடினாள்.
எப்போதும் உன்னைத்தான் எண்ணினேன் என்றேன். சில சமயம் மறந்து ஒரு சமயம் நினைத்ததாக எண்ணி அப்படியானால் என்னை இடையில் மறந்திருக்கிறீர் என்று சொல்லித் தழுவத் தொடங்கியவள், விட்டுவிட்டு ஊடத் தொடங்கினாள். | Kamattuppal | Karpiyal | Pulavi Nunukkam | ullinaen endraen-mat ren-marandheer endrennaip
pullaal pulaththak kanal | 3 | Love | 13 | The Post-marital love | 132 | Feigned Anger | 1,316 | 'Each day I called to mind your charms,' 'O, then, you had forgot,'
She cried, and then her opened arms, Forthwith embraced me not. | When I said I had remembered her, she said I had forgotten her and relaxing her embrace, began to feign dislike. |
3 | காமத்துப்பால் | 13 | கற்பியல் | 132 | புலவி நுணுக்கம் | 1,317 | வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று | தும்மினேன்; வழக்கப்படி அவள் என்னை வாழ்த்தினாள். உடனே என்ன சந்தேகமோ ``யார் உம்மை நினைத்ததால் தும்மினீர்'' என்று கேட்டு, முதலில் அளித்த வாழ்த்துக்கு மாறாக அழத் தொடங்கிவிட்டாள். | யான் தும்மினேனாக; அவள் நூறாண்டு என வாழ்த்தினாள்; உடனே அதை விட்டு யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்?.
நான் தும்ம, அவள் இயல்பாகவே வாழ்த்தினாள்; அப்படி வாழ்த்தியவளே மறுபடியும் நீர் இப்போது எவள் உம்மை நினைத்ததால் தும்மினீர், என்று கேட்டு ஊடி அழுதாள். | Kamattuppal | Karpiyal | Pulavi Nunukkam | vazhuththinaal thumminen aaka azhiththazhudhaal
yaarullith thummineer endru | 3 | Love | 13 | The Post-marital love | 132 | Feigned Anger | 1,317 | She hailed me when I sneezed one day; But straight with anger seized,
She cried; 'Who was the woman, pray, Thinking of whom you sneezed?'. | When I sneezed she blessed me, but at once changed (her mind) and wept, asking, "At the thought of whom did you sneeze?". |
3 | காமத்துப்பால் | 13 | கற்பியல் | 132 | புலவி நுணுக்கம் | 1,318 | தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று. | ஊடல் கொள்வாளோ எனப் பயந்து நான் தும்மலை அடக்கிக் கொள்வதைப் பார்த்த அவள் ``ஓ'' உமக்கு நெருங்கியவர் உம்மை நினைப்பதை நான் அறியாதபடி மறைக்கிறீரோ?'' எனக் கேட்டு அழுதாள் | அவளுடைய ஊடலுக்கு அஞ்சி யான் தும்மலை அடக்கிக் கொள்ள உம்மவர் உம்மை நினைப்பதை எமக்குத் தெரியாமல் மறைக்கின்றீரோ என்று அழுதாள்.
அடுத்தமுறை தும்மல் வர அதனை வெளிப்படுத்தாமல் நான் அடக்கினேன்; அதைப் பார்த்து யாரோ உமக்கு வேண்டியவர்கள் உம்மை நினைப்பதை நான் அறிந்துவிடக்கூடாது என்று எனக்கு மறைக்கிறீரோ, என்று ஊடி அழுதாள். | Kamattuppal | Karpiyal | Pulavi Nunukkam | thummuch cheruppa azhudhaal numar-ullal
emmai maraiththiroa endru | 3 | Love | 13 | The Post-marital love | 132 | Feigned Anger | 1,318 | And so next time I checked my sneeze; She forthwith wept and cried,
(That woman difficult to please), 'Your thoughts from me you hide'. | When I suppressed my sneezing, she wept saying, "I suppose you (did so) to hide from me your own people's remembrance of you". |
3 | காமத்துப்பால் | 13 | கற்பியல் | 132 | புலவி நுணுக்கம் | 1,319 | தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று. | நான் பணிந்து போய் அவள் ஊடலை நீக்கி மகிழ்வித்தாலும், உடனே அவள் ``ஓ! நீர் இப்படித்தான் மற்ற பெண்களிடமும் நடந்து கொள்வீரோ?'' என்று சினந்தெழுவாள். | ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும், நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று சொல்லிச் சினம் கொள்வாள்.
ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும். நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று சொல்லி சினம் கொள்வாள். | Kamattuppal | Karpiyal | Pulavi Nunukkam | thannai unarththinum kaayum pirarkkum-neer
inneerar aakudhir endru | 3 | Love | 13 | The Post-marital love | 132 | Feigned Anger | 1,319 | I then began to soothe and coax, To calm her jealous mind;
'I see', quoth she, 'to other folks How you are wondrous kind' . | Even when I try to remove her dislike, she is displeased and says, "This is the way you behave towards (other women)." |
3 | காமத்துப்பால் | 13 | கற்பியல் | 132 | புலவி நுணுக்கம் | 1,320 | நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று. | ஒப்பற்ற அவளுடைய அழகை நினைத்து அவளையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாலும், யாருடன் என்னை ஒப்பிட்டு உற்றுப் பார்க்கிறீர் என்று கோபம் கொள்வாள். | அவளுடைய அழகை நினைத்து அமைதியாக இருந்து நோக்கினாலும், நீர் யாரை நினைத்து ஒப்புமையாக எல்லாம் பார்க்கின்றீர்? என்று சினம் கொள்வாள்.
என் பேச்சிலும், செயலிலும் அவள் கோபம் கொள்வதால், பேசாமல், அவள் உறுப்புகளின் அழகை எண்ணி அவற்றையே பார்த்திருப்பேன். அதற்கு எவள் உறுப்புப் போல் இருக்கிறதென்று என் மேனியைப் பார்க்கிறீர். என்று சொல்லிச் சினப்பாள். | Kamattuppal | Karpiyal | Pulavi Nunukkam | ninaiththirundhu noakkinum kaayum anaiththu-neer
yaarulli noakkineer endru | 3 | Love | 13 | The Post-marital love | 132 | Feigned Anger | 1,320 | I silent sat, but thought the more, And gazed on her. Then she
Cried out, 'While thus you eye me o'er, Tell me whose form you see'. | Even when I look on her contemplating (her beauty), she is displeased and says, "With whose thought have you (thus) looked on my person?". |
3 | காமத்துப்பால் | 13 | கற்பியல் | 133 | ஊடலுவகை | 1,321 | இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு. | எந்த தவறும் இல்லாத நிலையிலும்கூட காதலர்க்கிடையே தோன்றும் ஊடல், அவர்களின் அன்பை மிகுதியாக வளர்க்கக் கூடியது. | அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது.
அவரிடம் தவறே இல்லை என்றாலும், அவர் என்னிடம் மிகுந்த அன்பைச் செலுத்தும்படி செய்யவல்லது ஊடல். | Kamattuppal | Karpiyal | Oodaluvakai | illai thavaravarkku aayinum ootudhal
valladhu avaralikku maaru | 3 | Love | 13 | The Post-marital love | 133 | The Pleasures of Temporary Variance | 1,321 | Although there be no fault in him, the sweetness of his love
Hath power in me a fretful jealousy to move. | Although my husband is free from defects, the way in which he embraces me is such as to make me feign dislike. |
3 | காமத்துப்பால் | 13 | கற்பியல் | 133 | ஊடலுவகை | 1,322 | ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும். | காதலரிடையே மலர்நதுள்ள நல்லன்பு சற்று வாடுவதற்கு, ஊடுதல் காரணமாக இருந்தாலும் அதனால் விளைகிற சிறிய துன்பம் பெருமையுடையதேயாகும். | ஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் பெருமை பெறும்.
ஊடல் காரணமாக என்னிடம் தோன்றும் சிறு துன்பத்தினால் அவர் என்மீது காட்டும் பேரன்பு வாடினாலும் பெருமை பெறும். | Kamattuppal | Karpiyal | Oodaluvakai | oodalin thoandrum sirudhuni nallali
vaatinum paadu perum | 3 | Love | 13 | The Post-marital love | 133 | The Pleasures of Temporary Variance | 1,322 | My 'anger feigned' gives but a little pain;
And when affection droops, it makes it bloom again. | His love will increase though it may (at first seem to) fade through the short-lived distress caused by (my) dislike. |
3 | காமத்துப்பால் | 13 | கற்பியல் | 133 | ஊடலுவகை | 1,323 | புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து. | நிலத்தோடு நீர் கலந்தது போல அன்புடன் கூடியிருக்கும் காதலரிடத்தில் ஊடல் கொள்வதை விடப் புதிய உலகம் வேறொன்று இருக்க முடியுமா? | நிலத்தோடு நீர் பொருந்தி கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலம் இருக்கின்றதோ?.
நிலத்தோடு நீர் கலந்தாற்போன்ற ஒற்றுமையை உடைய என்னவரோடு ஊடிப் பெறும் இன்பத்தைப் போலத் தேவர்கள் நாட்டு இன்பம் இருக்குமோ?. | Kamattuppal | Karpiyal | Oodaluvakai | pulaththalin puththelnaadu undoa nilaththodu
neeriyainh thannaar akaththu | 3 | Love | 13 | The Post-marital love | 133 | The Pleasures of Temporary Variance | 1,323 | Is there a bliss in any world more utterly divine,
Than 'coyness' gives, when hearts as earth and water join?. | Is there a celestial land that can please like the feigned dislike of those whose union resembles that of earth and water?. |
3 | காமத்துப்பால் | 13 | கற்பியல் | 133 | ஊடலுவகை | 1,324 | புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை. | இறுகத் தழுவி இணை பிரியாமல் இருப்பதற்குக் காரணமாக ஊடல் அமைகிறது. அந்த ஊடலில்தான் என் உள்ளத்து உறுதியைக் குலைக்கும் படைக்கலனும் இருக்கிறது. | காதலரைத் தழுவிக்கொண்டு விடாமலிருப்பதற்கு காரணமான ஊடலுள், என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை தோன்றுகிறது.
என்னவரைத் தழுவிக் கொண்டு, விடாமல் இருப்பதற்குக் காரணமாகிய ஊடலில் அதற்குமேலே சென்று என் உறுதியையும் உடைக்கும் ஆயுதம் இருக்கிறது. | Kamattuppal | Karpiyal | Oodaluvakai | pulli vidaaap pulaviyul thondrumen
ullam udaikkum padai | 3 | Love | 13 | The Post-marital love | 133 | The Pleasures of Temporary Variance | 1,324 | 'Within the anger feigned' that close love's tie doth bind,
A weapon lurks, which quite breaks down my mind. | In prolonged dislike after an embrace there is a weapon that can break my heart. |
3 | காமத்துப்பால் | 13 | கற்பியல் | 133 | ஊடலுவகை | 1,325 | தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து. | தவறே செய்யாத நிலையிலும்கூட தன்னுள்ளம் கொள்ளை கொண்டவளின் ஊடலுக்கு ஆளாகி அவளது மெல்லிய தோள்களைப் பிரிந்திருப்பதில் ஓர் இன்பம் இருக்கிறது. | தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது.
ஆண்கள் மீது தவறு இல்லை என்றாலும் தவறு செய்தவராகவே நின்று, மனைவியால் ஊடப்பட்டு தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோள்களைக் கூடப் பெறாதபோது, அந்த ஊடலிலும் ஓர் இன்பம் இருக்கிறது. | Kamattuppal | Karpiyal | Oodaluvakai | thavarilar aayinum thaamveezhvaar mendroal
akaralin aangon rudaiththu | 3 | Love | 13 | The Post-marital love | 133 | The Pleasures of Temporary Variance | 1,325 | Though free from fault, from loved one's tender arms
To be estranged a while hath its own special charms. | Though free from defects, men feel pleased when they cannot embrace the delicate shoulders of those whom they love. |
3 | காமத்துப்பால் | 13 | கற்பியல் | 133 | ஊடலுவகை | 1,326 | உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது. | உணவு அருந்துவதைவிட, அருந்திய உணவு செரிப்பதிலே ஒரு சுகம். அதைப்போல் உடலுறவைவிட ஊடல் கொள்வதிலேயே காதலர்க்கு ஒரு சுகம். | உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது இன்பமானது, அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது.
உண்பதைவிட உண்டது செரிப்பது இனியது; அதுபோலக், கூடிக் கலப்பதை விட ஊடுவது காதலுக்கு இனியது. | Kamattuppal | Karpiyal | Oodaluvakai | unalinum undadhu aral-inidhu kaamam
punardhalin oodal inidhu | 3 | Love | 13 | The Post-marital love | 133 | The Pleasures of Temporary Variance | 1,326 | 'Tis sweeter to digest your food than 'tis to eat;
In love, than union's self is anger feigned more sweet. | To digest what has been eaten is more delightful than to eat more; likewise love is more delightful in dislike than intercourse. |
3 | காமத்துப்பால் | 13 | கற்பியல் | 133 | ஊடலுவகை | 1,327 | ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும். | ஊடல் என்கிற இனிய போரில் தோற்றவர்தான் வெற்றி பெற்றவராவார். இந்த உண்மை ஊடல் முடிந்து கூடிமகிழும் போது உணரப்படும். | ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த உண்மை,ஊடல் முடிந்த பின் கூடிமகிழும் நிலையில் காணப்படும்.
ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவார்; அந்த வெற்றியைக் கூடிப் பெறும் இன்பத்தில் அறியலாம். | Kamattuppal | Karpiyal | Oodaluvakai | oodalil thotravar vendraar adhumannum
kootalir kaanap padum | 3 | Love | 13 | The Post-marital love | 133 | The Pleasures of Temporary Variance | 1,327 | In lovers' quarrels, 'tis the one that first gives way,
That in re-union's joy is seen to win the day. | Those are conquerors whose dislike has been defeated and that is proved by the love (which follows). |
3 | காமத்துப்பால் | 13 | கற்பியல் | 133 | ஊடலுவகை | 1,328 | ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு. | நெற்றியில் வியர்வை அரும்பிடக் கூடுவதால் ஏற்படும் இன்பத்தை, மீண்டும் ஒருமுறை ஊடல் தோன்றினால், அதன் வாயிலாகப் பெற முடியுமல்லவா? | நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமாக?.
நெற்றி வியர்க்கும்படி கலவியில் தோன்றும் சுகத்தை இன்னுமொரு முறை இவளுடன் ஊடிப் பெறுவோமா?. | Kamattuppal | Karpiyal | Oodaluvakai | ootip perukuvam kolloa nudhalveyarppak
koodalil thoandriya uppu | 3 | Love | 13 | The Post-marital love | 133 | The Pleasures of Temporary Variance | 1,328 | And shall we ever more the sweetness know of that embrace
With dewy brow; to which 'feigned anger' lent its piquant grace. | Will I enjoy once more through her dislike, the pleasure of that love that makes her forehead perspire?. |
3 | காமத்துப்பால் | 13 | கற்பியல் | 133 | ஊடலுவகை | 1,329 | ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா. | ஒளி முகத்தழகி ஊடல் புரிவாளாக; அந்த ஊடலைத் தீர்க்கும் பொருட்டு நான் அவளிடம் இரந்து நிற்கும் இன்பத்தைப் பெறுவதற்கும் இராப்பொழுது இன்னும் நீடிப்பதாக. | காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக.
ஒளிமிகும் அணிகளை அணிந்த இவள் இன்னும் என்னோடு ஊடட்டும், அப்போது அதிக நேரம் இருக்கும்படி நான் வேண்டிக்கொள்ள, இந்த இரவு விடியாது நீளட்டும். | Kamattuppal | Karpiyal | Oodaluvakai | ootuka mannoa oliyizhai yaamirappa
needuka mannoa iraa | 3 | Love | 13 | The Post-marital love | 133 | The Pleasures of Temporary Variance | 1,329 | Let her, whose jewels brightly shine, aversion feign!
That I may still plead on, O night, prolong thy reign!. | May the bright-jewelled one feign dislike, and may the night be prolonged for me to implore her!. |
3 | காமத்துப்பால் | 13 | கற்பியல் | 133 | ஊடலுவகை | 1,330 | ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின். | ஒருவருக்கொருவர் செல்லமாகச் சினங்கொண்டு பிரிந்திருப்பது எனப்படும் ஊடல், இருவரும் சேர்ந்த பிறகு காதல் இன்பத்தை அதிகமாகப் பருகிட உதவும். எனவே ஊடல் கொள்வதே ஒரு இன்பமான செயல்தான். | காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப் பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்.
காதல் நுகர்ச்சிக்கு இன்பம் ஊடுதலே அவ்வூடலுக்கும் இன்பம், அளவு அறிந்து ஊடலை நீக்கிக் கூடித் தழுவுதலே. | Kamattuppal | Karpiyal | Oodaluvakai | oodudhal kaamaththirku inpam adharkinpam
kooti muyangap perin | 3 | Love | 13 | The Post-marital love | 133 | The Pleasures of Temporary Variance | 1,330 | A 'feigned aversion' coy to pleasure gives a zest;
The pleasure's crowned when breast is clasped to breast. | Dislike adds delight to love; and a hearty embrace (thereafter) will add delight to dislike. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.