எண்
int64
1
109
தமிழ் எழுத்து
stringlengths
1
3
தமிழ் வாக்கியம்
stringlengths
9
25
Tamil Meaning
stringlengths
17
305
English Translation
stringlengths
10
41
Transliteration
stringlengths
11
26
1
அறம் செய்ய விரும்பு
தருமம் செய்ய நீ விரும்புவாயாக நல்ல செயல்களைச் செய்வதற்கு மனம் விருப்பம் கொள்ள வேண்டும். மனம் விருப்பம் கொள்ள அந்த நல்ல செயல்களை மகிழ்வுடன் செய்ய முடியும்.
Intend to do the right deeds.
Aram seyya virumbu
2
ஆறுவது சினம்
கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும். கோபம் வரும் போது நமது சிந்திக்கும் அறிவு குறைந்து உணர்ச்சி வசப்பட்டுத் தவறான முடிவு எடுக்கும் சூழ்நிலை உருவாகும். அஃது எல்லோருக்கும் நல்லது அல்ல.
The nature of anger is to subside.
Aaruvadhu sinam
3
இயல்வது கரவேல்
உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.
Help others as much as you can.
Iyalvadhu karavel
4
ஈவது விலக்கேல்
ஒருவர், மற்றவர்க்குக் கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே
Do not stop or avoid charitable deeds.
Eevadhu vilakkel
5
உடையது விளம்பேல்
உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களைப் பிறர் அறியுமாறு சொல்லாதே. உனக்குள்ள பொருள் மற்றும் சிறப்புகளைப் பலரும் அறியும்படி பெருமையாகப் பேசாதே. உன்னுடைய பலவீனத்தையும் பலரும் அறியும்படி சொல்லாதே. அதனால் நல்ல பயன் எதுவும் இல்லை.
Do not brag about your possessions.
udaiyathu vilambel
6
ஊக்கமது கைவிடேல்
எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.
Never lose hope or motivation.
ookkamathu kaividhel
7
எண் எழுத்து இகழேல்
எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இன்றியமையாதன; ஆகவே, அவற்றை வீணென்று இகழ்ந்து கற்காமல் விட்டு விடாதே.
Do not despise numbers and letters.
enn ezhuthu igazhel
8
ஏற்பது இகழ்ச்சி
இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.
Do not beg.
yerpathu igazhchi
9
ஐயமிட்டு உண்
யாசிப்பவர்கட்குக் கொடுத்துப் பிறகு உண்ண வேண்டும்.
Eat after offering alms.
aiyamittu unn
10
ஒப்புரவு ஒழுகு
உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.
Adapt to your changing world.
oppuravu ozhugu
11
ஓதுவது ஒழியேல்
நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு. கற்றுக்கொள்வதை நிறுத்தாதே.
Never stop learning.
oodhuvadhu ozhiyel
12
ஒள
ஒளவியம் பேசேல்
ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.
Do not speak ill about others.
avviam pesel
13
ஃகஞ் சுருக்கேல்
அதிக இலாபத்துக்காகத் தானியங்களைக் குறைத்து அளந்து விற்காதே.
Do not hamper development or creativity.
aganj surukkel
14
கண்டொன்று சொல்லேல்
கண்ணாற் கண்டதற்கு மாறாக சொல்லாதே
Do not see one and say another.
kandondru sollel
15
ஙப் போல் வளை
மெய் எழுத்தான “ங்” என்ற எழுத்தின் உயிர்மெய் வடிவங்கள் எங்கும் பயன்பாட்டில் இல்லை. எனினும், “ங்” என்ற ஓரெழுத்து அதன் உயிர்மெய் எழுத்துக்களை காலத்தில் புதைந்துவிடாமல் காத்து வருகிறது. இந்த “ங்” எப்படி தன் வரிசையைக் காக்கிறதோ, அவ்வாறே நாமும் நம் உற்றார் உறவினர் அனைவரையும் கனிவுடன் காக்க வேண்டும்.
Bend like the letter ங.
ngab pol valai
16
சனி நீராடு
“சனி” என்றால் “குளிர்ந்த” என்பது பொருள். ஔவையார் இந்த பாடல் மூலமாக நம்மை குளிர்ந்த நீரில் நீராட சொல்கிறார்.
Ablute on Saturdays.
sani neeradu
17
ஞயம்பட உரை
பிறர் மகிழும்படி பேசு
Sweeten your speech.
nyampada urai
18
இடம்பட வீடு எடேல்
ஆடம்பர ஆசைகளுக்கு இடந் தராதே. தேவைகளை சுருக்கி வாழப் பழகுக.
Judiciously space your home.
idampada veedu edael
19
இணக்கம் அறிந்து இணங்கு
நற்குண நற்செய்கை உடையவர் என்பது தெரிந்து கொண்டு ஒருவரோடு நட்பு செய்
Befriend the best.
inakkam arindhu inangu
20
தந்தை தாய்ப் பேண்
உன் தாய் தந்தையரை அன்புடன் போற்றி காப்பாற்று
Protect your parents.
thanthai thaai pen
21
நன்றி மறவேல்
ஒருவர் உனக்கு செய்த உதவியை மறவாதே
Don't forget gratitude.
nandri maravel
22
பருவத்தே பயிர் செய்
எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்
Sow during the season.
paruvatthae payir sey
23
மண் பறித்து உண்ணேல்
பிறர் நிலத்தை திருடி அதன் மூலம் வாழாதே
Don't grab land.
Man parithu unnael
24
இயல்பு அலாதன செய்யேல்
நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே
Desist demeaning deeds.
iyalbu aladhana seyyel
25
அரவம் ஆட்டேல்
பாம்புகளை பிடித்து விளையாடாதே
Don't play with snakes.
aravam aattel
26
இலவம் பஞ்சில் துயில்
இலவம் பஞ்சினாற் செய்த மெத்தையிலே உறங்கு
Sleep on a silk cotton bed.
ilavam panjil thuyil
27
வஞ்சகம் பேசேல்
கபடச் சொற்களை பேசாதே
Don't wile.
vanjakam pesel
28
அழகு அலாதன செய்யேல்
இழிவான செயல்களை செய்யாதே
Do not do ugly deeds.
azhagu aladhana seyyel
29
இளமையில் கல்
இளமைப் பருவத்திலேயே படிக்கத் தொடங்கி கல்வியைக் கற்று கொள்
Learn when young.
ilamaiyil kal
30
அறனை மறவேல்
தருமத்தை எப்போதும் மறவாமல் செய்
Never forget your moral duty.
aranai maravel
31
அனந்தல் ஆடேல்
மிகுதியாக தூங்காதே
Oversleeping is obnoxious.
anandhal aattel
32
கடிவது மற
யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே.
Forget scolding others.
kadivadhu mar
33
கா
காப்பது விரதம்
தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும் (அல்லது) பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் அவற்றைக் காப்பாற்றுவதே தவம் ஆகும்.
Preservation is equal to fasting.
kaappathu viratham
34
கி
கிழமைப்பட வாழ்
உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ்
Live according to days.
kizhamaippada vaal
35
கீ
கீழ்மை அகற்று
இழிவான குணஞ் செயல்களை நீக்கு
Remove poverty.
keezhmai akatru
36
கு
குணமது கைவிடேல்
நன்மை தரக்கூடிய நல்ல குணங்களைப் பின்பற்றுவதை நிறுத்திவிடாதே(கைவிடேல்).
Don't lose character.
kunamadhu kaividhel
37
கூ
கூடிப் பிரியேல்
நல்லவரோடு நட்பு செய்து பின் அவரைப் பிரியாதே
Don't forsake friends.
koodip piriyel
38
கெ
கெடுப்பது ஒழி
பிறருக்குக் கேடு விளைவிக்கும் செயல்களைச் செய்யாதே.
Abandon animosity.
keduppudhu ozi
39
கே
கேள்வி முயல்
கற்றவர் சொல்லும் நூற் பொருளைக் கேட்பதற்கு முயற்சி செய்
Learn by asking questions.
kelvi muyal
40
கை
கைவினை கரவேல்
உங்களுக்குத் தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும்.
Learn handicraft.
kaivinai karavel
41
கொ
கொள்ளை விரும்பேல்
பிறர் பொருளைத் திருடுவதற்கு ஆசைப்படாதே.
Don't swindle.
kollai virumbel
42
கோ
கோதாட்டு ஒழி
குற்றமான விளையாட்டை விட்டு விடு (நீக்கு)
Ban hurtful games.
kodhaattu ozhi
43
கெள
கெளவை அகற்று
வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு
Avoid gossiping.
Kavvai akatru
44
சக்கர நெறி நில்
தர்மசக்கர நெறிப்படி வாழ வேண்டும். ( அரசன் = ஆள்பவர், தலைவர் )
Obey the laws of the land.
sakkara neri nil
45
சா
சான்றோர் இனத்து இரு
அறிவொழுக்கங்களில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு.
Associate with the noble.
saandroar inathu iru
46
சி
சித்திரம் பேசேல்
பொய்யான வார்த்தைகளை மெய் போலப் பேசாதே
Stop exaggeration.
chitthiram pesel
47
சீ
சீர்மை மறவேல்
புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே.
Remember to be righteous.
seermai maravel
48
சு
சுளிக்கச் சொல்லேல்
கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும்படி பேசாதீர்
Don't hurt others feelings.
sulikka sollel
49
சூ
சூது விரும்பேல்
ஒருபொதும் சூதாட்டத்தை விரும்பாதே.
Don't gamble.
soodhu virumbel
50
செ
செய்வன திருந்தச் செய்
செய்யும் செயல்களைத் தவறோ குறையோ ஏதும் இல்லாமல் செய்யவும்
Act your best.
seyvan thirundha sei
51
சே
சேரிடம் அறிந்து சேர்
நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடையவர்களா என நன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு.
Seek out good friends.
seridam arindhu ser
52
சை
சையெனத் திரியேல்
பெரியோர் 'சீ' என வெறுக்கும்படி வீணாய்த் திரியாதே
Avoid being insulted.
saiyenath thiriyael
53
சொ
சொற் சோர்வு படேல்
பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே
Don't show fatigue in conversation.
sor sorvu padel
54
சோ
சோம்பித் திரியேல்
முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.
Don't be lazy.
sombith thiriyel
55
தக்கோன் எனத் திரி
பெரியோர்கள் உன்னைத் தக்கவன்(யோக்கியன்,நல்லவன்) என்று புகழும்படி நடந்துக்கொள்
Be trustworthy.
thakkoan enath thiri
56
தா
தானமது விரும்பு
யாசிப்பவர்களுக்குத் தானம் செய்.
Be kind to the unfortunate.
thaanamadhu virumbu
57
தி
திருமாலுக்கு அடிமை செய்
நாராயணமூர்த்திக்குத் தொண்டு செய்
Serve Tirumal.[1]
thirumalukku adimai sei
58
தீ
தீவினை அகற்று
பாவச் செயல்களைச் செய்யாமல் இரு.
Don't sin.
theevinai akatru
59
து
துன்பத்திற்கு இடம் கொடேல்
முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே.
Don't attract suffering.
thunpaththirku idam kodael
60
தூ
தூக்கி வினை செய்
ஒரு வேளையை முடிப்பதற்கான வழிமுறைகளை நன்கு ஆராய்ந்து அறிந்த பின்பு அச்செயலைச் செய்யத் தொடங்கவும்
Deliberate every action.
thookki vinai sei
61
தெ
தெய்வம் இகழேல்
கடவுளைப் பழிக்காதே.
Don't defame the divine.
theivam ikazhel
62
தே
தேசத்தோடு ஒட்டி வாழ்
உன் நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகை இல்லாமல் வாழ்
Live in unison with your countrymen.
thaesathodu otti vaazh
63
தை
தையல் சொல் கேளேல்
மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.
Don't listen to malicious speech.[2]
thaiyal sol kelael
64
தொ
தொன்மை மறவேல்
பழைமையை மறவாதிருக்க வேண்டும் (பழங்கால மற்றும் பண்டைய முறையிலான நம் தமிழ் கலாச்சாரத்தை  விட்டுக் கொடுக்காமல் இயற்கையோடு ஒத்து வாழ வேண்டும்)
Don't forget the past.
thonmai maravel
65
தோ
தோற்பன தொடரேல்
ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்தே அதைத் தொடங்காதே.
Don't compete if defeat is certain.
thorpana thodarel
66
நன்மை கடைப்பிடி
நல்வினை செய்தலை எவ்வளவு இடையுறு வந்தாலும் உறுதியாகத் தொடரவும்
Adhere to the beneficial.
nanmai kadaipadi
67
நா
நாடு ஒப்பன செய்
நாட்டில் உள்ள பலரும் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களைச் செய்
Do what is acceptable to the nation.
naadu oppan sei
68
நி
நிலையில் பிரியேல்
உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே.
Don't depart from good standing.
nilaiyil piriyel
69
நீ
நீர் விளையாடேல்
வெள்ளபெருக்கில்  நீந்தி விளையாடாதே
Don't jump into a watery grave.
neer vilaiyadel
70
நு
நுண்மை நுகரேல்
நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே
Don't oversnack.
nunmai nugaral
71
நூ
நூல் பல கல்
அறிவை வளர்க்கும் பல நூல்களைப் படி
Read lot of books.
nool pala kal
72
நெ
நெற்பயிர் விளைவு செய்
நெற்பயிரை விளையச் செய்வதை உன் வாழ்க்கை தொழிலாகக் கொண்டு வாழ்.
Engage in agriculture.
nerpayir vilaivu sei
73
நே
நேர்பட ஒழுகு
ஒழுக்கந் தவறாமல் நேர்வழியில் நட
Exhibit good manners always.
nerpada ozhugu
74
நை
நைவினை நணுகேல்
பிறர் வருந்தத் தகுந்த தீ வினைகளைச் செய்யாதே
Don't involve in destruction.
naivinai nanugel
75
நொ
நொய்ய உரையேல்
பயன் இல்லாத அற்ப வார்த்தைகளைப் பேசாதே.
Avoid the profane.
noyya uraiyel
76
நோ
நோய்க்கு இடம் கொடேல்
மிகுந்த உணவு உறக்கம் முதலியவற்றால் நோய்க்கு வழிவகை செய்யாதே.
Avoid unhealthy lifestyles.
noikku idam kodael
77
பழிப்பன பகரேல்
பெரியோர்களால் பழிக்கப்படும் இழிவான சொற்களான பொய்,கடுஞ்சொல் ஆகியவற்றைப் பேசாதே.
Speak no vulgarity.
pazhippana pagarel
78
பா
பாம்பொடு பழகேல்
பாம்புபோலக் கொடிய குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.
Keep away from the vicious.
paambodu pazhagel
79
பி
பிழைபடச் சொல்லேல்
குற்றம் உண்டாகும்படி எதையும் பேசாதே.
Watch out for self-incrimination.
pizhaipadach sollel
80
பீ
பீடு பெற நில்
பெருமையை அடையும் படியான நல்ல நிலையிலே நில்
Follow the path of honour.
peedu pera nil
81
பு
புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
உன்னையே நம்பியவர்களைக் காப்பாற்றி வாழ்
Protect your benefactor.
pugalnadharai potri vaazh
82
பூ
பூமி திருத்தி உண்
விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண்.(அ)விவசாயத்தை வாழ்க்கைத் தொழிலாகக் கொள்
Cultivate the land and feed.
poomi thiruthi unn
83
பெ
பெரியாரைத் துணைக் கொள்
அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் பேணிக்கொள்
Seek help from the old and wise.
periyarai thunai kol
84
பே
பேதைமை அகற்று
அறியாமையைப் போக்கு
Eradicate ignorance.
paedhaimai akatru
85
பை
பையலோடு இணங்கேல்
அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே.
Avoid friendships with idiots.
paiyalodu inangel
86
பொ
பொருள்தனைப் போற்றி வாழ்
பொருள்களை(செல்வம் உட்பட)வீண் செலவு செய்யாமற் பாதுகாத்து வாழ்.
Protect and enhance your wealth.
porulthanai potri vaazh
87
போ
போர்த் தொழில் புரியேல்
யாருடனும் தேவையில்லாமல் சண்டை பொடுவதை ஒரு வேலையாகச் செய்யாதே
Don't engage in fruitless fights.
poar thozhil puriyel
88
மனம் தடுமாறேல்
எதனாலும் மனக்கலக்கம் அடையாதே
Don't vacillate.
manam thadumaarel
89
மா
மாற்றானுக்கு இடம் கொடேல்
பகைவன் உன்னைத் துன்புறுத்தி உன்னை வெல்வதற்கு இடம் கொடுக்காதே.
Don't accommodate your enemy.
maattraanukku idam kodael
90
மி
மிகைபடச் சொல்லேல்
சாதாரணமான விஷயத்தை மாயாஜால வார்தைகளால் பெரிதாகக் கூறாதே.
Don't overdramatize.
maikaipadach sollel
91
மீ
மீதூண் விரும்பேல்
மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே.
Don't be a glutton.
meedhoon virumpeal
92
மு
முனைமுகத்து நில்லேல்
எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காகப் போர் முனையிலே நிற்காதே
Don't join an unjust fight.
munaimukathu nillael
93
மூ
மூர்க்கரோடு இணங்கேல்
மூர்க்க குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே
Don't agree with the stubborn.
moorkkarodu inangel
94
மெ
மெல்லி நல்லாள் தோள்சேர்
பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்.
Stick with your exemplary wife.
melli nallaal tholser
95
மே
மேன்மக்கள் சொல் கேள்
நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட.
Listen to the great legends.
maenmakal sol kel
96
மை
மை விழியார் மனை அகல்
விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில்
Dissociate from the jealous.
mai vizhiyaar manai akal
97
மொ
மொழிவது அற மொழி
சொல்லப்படும் பொருளைச் சந்தேகம் நீங்கும்படி சொல் பேசுவதைத் தெளிவாகப் பேசு சொல்வதற்கு முன், இதைச் சொல்ல வேண்டுமா? என்று ஆராய்ந்து, பின் சொல்க எதைச் சொல்ல/பேச வேண்டும்? எப்பொழுது சொல்ல/பேச வேண்டும்? எதைச் சொல்லக்/பேசக் கூடாது? எப்பொழுது சொல்லக்/பேசக் கூடாது? எப்படிச் சொல்ல வேண்டும்? எப்படிச் சொல்லக் கூடாது?
Speak with clarity.
mozivadhu ara mozhi
98
மோ
மோகத்தை முனி
நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்திடு
Hate any desire for lust.
mogathai muni
99
வல்லமை பேசேல்
உன்னுடைய வலிமையை நீயே புகழ்ந்து பேசாதே
Don't self-praise.
vallamai pesel
100
வா
வாது முற்கூறேல்
முந்திக்கொண்டு வாதிடாதே
Don't gossip or spread rumours.
vaadhu murkoorel